Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

ஈவது விலக்கேல்.....

| Mar 15, 2011
ஒன்னாங் கிளாஸ்லே  - ஆத்தி சூடி படிக்கிறப்போ , கேட்ட வார்த்தை இது. இதைப் பத்தி , எப்போவாது , பின்னாலே யோசிச்சுப் பார்த்து இருக்கிறீங்களா? ஒருவர் பொருளோ பணமோ எதுவாக இருந்தாலும்,  பிறருக்கு கொடுக்கின்ற காலத்தில்  அதை நடுவில் நின்று தடுக்காதே என்பது இதன் பொருள்.
ஒருவருக்கு அவர் விரும்பின பொருளை மற்றொருவர் மனமுவந்து  கொடுக்கின்ற காலத்தில் வேறொருவர் குறுக்கிட்டுத் த‌டுத்தால் அப்படி செய்தவர் இரண்டு மடங்கு பாவங்களை செய்தவராகிறார்.
தருமம் செய்தவருக்கு வரவேண்டிய புண்ணியத்தை வரவொட்டாமல் தடுப்பது முதல் பாவம், இரண்டாவது பாவம் ஒருவர் விரும்பின பொருளை அடையப் போகும் காலத்தில் அவருக்கு அது கிடைக்கவிடாமல் தடுத்தது.
இப்படி தடுப்பவர் செய்த பாவம் அவரைச் சேர்வதோடு அவரது சுற்றத்தாருக்கும் அது சேரும்.கொடுப்பதை தடுக்கும் கொடியவரோடு அவரின் உறவுகளும் உண்ண உணவில்லாமல்  உடுக்க உடையில்லாமல்  தவிப்பார்கள் என்றும், அந்த பாவத்தால் உண்டாகும் தீமைகள்
பற்றியும் அக்காலத்தில் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். நம்ம எல்லோரும் கேள்விப் பட்ட , மகாபலி சக்கரவர்த்தி கதை ஞாபகம் இருக்கா?  இவர் ஞாபகமா தான் , ஓணம் பண்டிகை கொண்டாடுறோம்.. சரி, அந்த கதையை பார்ப்போம்.
மகாபலி என்ற சக்ரவர்த்தி சுவர்க்கம்,மத்தியம்,பாதாளம் எனமூன்று உலகங்களை ஆண்டு வந்தான்


நரசிம்ம அவதாரம் எடுத்து, தன் பக்தன் பிரகலாதனுக்காக தூணிலிருந்து வெளிப்பட்டு, இரணியகசிபுவைப் பிளந்து கொன்று, ஆட்சியை பிரகலாதனுக்கு அளிக்கிறார் விஷ்ணு. பிரகலாதனின் பேரன் மகாபலி.
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடலைக் கடைந்து அமுதம் எடுக்க, அது தேவர்களுக்கு மட்டும் போய்ச் சேருமாறு செய்கிறார் மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணு. இதனால் தேவர்களின் கை ஓங்கியுள்ளது.


பிரகலாதனனின் மகன் விரோசனனின் மகன் மகாபலி. அசுரர்களின் தலைவனாக இருக்கும் மகாபலி தேவர்களுடனான போரில் கொல்லப்படுகிறான். ஆனால் அசுர குரு சுக்கிராச்சாரியாரின் தவ வலிமையால் மகாபலி மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகிறான். கடும் போரில் தேவர்களையும் இந்திரனையும் அடித்து விரட்டி தேவலோகத்தைக் கைப்பற்றுகிறான்.


தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று முறையிட, அவர்கள் இழந்த தேவலோகத்தை மீட்டுத்தர வாமனராக அவதாரம் எடுக்க முடிவெடுக்கிறார் விஷ்ணு. இந்திரனின் தாய் அதிதிக்கும் தந்தை காஸ்யபருக்கும் மகனாகப் பிறக்கிறார். இயல்பிலேயே குள்ள உருவம். உபநயனம் முடிந்து, தலையில் அரைக்குடுமி, மார்பில் பூணூல், கையில் சிறு குடை, ஒரு கமண்டலம் ஆகியவற்றுடன் கிளம்புகிறார்.


எங்கே கிளம்புகிறார்?


மகாபலி ஒரு மாபெரும் யாகத்தைச் செய்துகொண்டிருக்கிறான். வாமனர் நேராக அங்கே போகிறார். யாகம் நடக்கும் இடத்தில் பிராமணனுக்கு மரியாதை செய்வது வழக்கம். அந்த முறைப்படி, மகாபலி, வாமனரை அழைத்து, கால் கழுவி, மரியாதை செய்வித்து, என்ன வேண்டுமோ அதை அவருக்குத் தருவதாகச் சொல்கிறான். மூன்றடி மண் போதும் என்கிறார் வாமனர்.


அந்தக் கட்டத்தில் சுக்கிராச்சாரியாருக்குப் புரிந்துவிடுகிறது, வந்திருப்பது சாதாரண ஆள் இல்லை என்பது. என்ன கபட நாடகம் என்பது புரியவில்லை. எனவே மகாபலியைத் தனியே அழைத்து, எதையும் கொடுக்காதே என்று எச்சரிக்கிறார். ஆனால் ஏற்க மறுக்கிறான் மகாபலி. தன் கையில் உள்ள கமண்டலத்திலிருந்து நீரை வார்த்து, தருவதாகச் சத்தியம் செய்ய மகாபலி முனையும்போது சுக்கிராச்சாரியர் வண்டாக மாறி கமண்டல ஓட்டையை அடைத்துக்கொள்கிறார். வாமனர் தன் குடையிலிருந்து ஒரு கம்பியை எடுத்து, ஓட்டையைக் குத்த நீர் வருகிறது. சுக்கிராச்சாரியாருக்கு ஒரு கண்ணில் பார்வையும் போய்விடுகிறது.


மூன்றடி மண் தருகிறேன் என்று மகாபலி வாக்குக் கொடுத்ததும், வாமனர் விசுவரூபம் எடுக்கிறார். ஓங்கி உயர்கிறார். மகாபலிக்கும் சுற்றி உள்ள அசுரர்களுக்கும் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை; திகைத்து நிற்கிறார்கள்.


ஓரடியால் பூமியை அளந்து, இரண்டாவது அடியால் ஆகாயத்தை அளந்து, மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்கிறார், திரிவிக்கிரமனாக உலகளந்த விஷ்ணு. அன்று ஞாலம் அளந்த பிரானின் மூன்றாவது அடியைத் தன் தலைமேல் வைத்துக்கொள்ளச் சொல்லி, கொடுத்த வாக்கைக் காக்கிறான் மகாபலி. மூவுலகும் ஈரடியால் அளந்த திரிவிக்கிரமன், தன் மூன்றாவது அடியால் மகாபலியை அழுத்த, பாதாள லோகத்துக்கு அனுப்பப்படுகிறான் மகாபலி.
Trivikrama Panel, Varaha Mandapam, Mamallapuram
தானம் பண்றதை தடுத்ததுக்கு , நவ கிரகங்களில் ஒருவரான , சுக்கிர ஆச்சார்யருக்கே , அந்த நிலைமை. நாம அப்படி பண்ணினா? 

அதனாலே, தானம் செய்யனும்  னு முடிவு எடுத்த பிறகு , யார் தடுத்தாலும் மனசை மாத்தாதீங்க.. நமக்கு வேண்டியவங்க , தானம் பண்ணினால் , அதை தடுக்காதீங்க .. ..பாத்திரமறிந்து பிச்சையிடு னு - பெரியவங்க சொல்லி இருக்காங்க. அதையும் மனசிலே வைச்சு செயல்படுங்க.. ஈவது விலக்கேல் :-   அடுத்தவர் கொடுப்பதை தடுக்காதே..!

 

1 comments:

சாகம்பரி said...

ஈவது விலக்கேல் என்றால் ஒரு போதும் தருமம் செய்வதை விட்டு விலகாதே என்பது நான் படித்த பாடம். ஈதல் இசை படவாழ்தல் தமிழர் பண்பாடு அல்லவா? தட்டிவிடுவது தமிழ் மரபன்று. எனக்குத் தெரிந்த விளக்கத்தை தந்துள்ளேன். மற்றபடி இந்து தர்மத்திற்கு உங்கள் பதிவு சரியானதாக அமைந்துள்ளது. நன்றி.

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com