Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

லாஜிக் எல்லாம் பார்க்காமே .. சிரிங்க பாஸூ... (தமிழ் ஜோக்ஸ் )

| Mar 9, 2011

மூன்று பேர் இறந்து போய் மேல் உலக  வாசலில் அனுமதி எடுக்கும் இடத்தில் போய் ஒரே நேரத்தில் நின்றனர் . அன்றைய தினம் மேல் உகம் ஹவுஸ் புல் . அதனால் ஒருவரை தான் எடுக்க முடியும் எனவும் யார் கொடூரமாக  கொலை செய்யப்பட்டாரோ அவருக்கே இடம் உண்டு எனவும் கடவுள் கூறிவிட்டார் .

முதல் மனிதன் :- எனது  மனைவிக்கும் இன்னொருவனுக்கும் நிறைய நாள் தொடர்பு இருக்கும்னு  எனக்கு நிறைய காலமாக சந்தேகம் அதனால திடீரெண்டு ஒரு நாள் என்னோட  அபார்ட்மென்ட்டுக்கு (25 ஆவது மாடி )  போய் , வீட்டுக்குள்ள நுழைந்தேன் . மனைவி தனியாக இருந்தாள் . இருந்தாலும் ஒருத்தன் ஒளிஞ்சிருக்கலாமோ என்ற சந்தேகத்திலே  போய் பால்கனியை எட்டி பார்த்தா அங்க ஒருத்தன் தொங்கிக்கொண்டு இருந்தான் . கோபத்தில்  அவனை அடித்தேன் உதைத்தேன். அசையல. 

ஓடி வந்து சுத்தியலால கைக்கு அடிச்சன் அப்ப முடியாம 25 ஆவது மாடீல இருந்து கீழ விழுந்திட்டான். இருந்தாலும் பயபுள்ள எஸ்கேப். குப்பைக்கு மேல விழுந்திட்டான் . விட்டேனா !!  ஓடி போய் கிச்சென்ல இருக்கிற பிரிட்ஜ் ஐ தூக்கி கொண்டு வந்து அவன் மேல போட்டு கொன்னுட்டேன். அந்த ஆத்திரமும் கோபமும்  எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஸ்பாட்லயே அவுட் .

இராண்டவதா ஒருத்தன் வந்தான் :-  கடவுளே நான் இவர் இருக்கும் வீட்டின் இருபத்தியாறாவது மாடியில் குடியிருப்பவன் . நான் தினமும் காலையில் பால்கனியில் உடல் பயிற்சி செய்வேன். அப்படி செய்யும்போது  தவறி  மாடீல இருந்து கீழ விழுந்திட்டேன். இருந்தாலும் அதிர்ஷ்ட வசமா 25 ஆவது மாடிய கெட்டியா பிடிச்சிட்டன்.  இருந்தாலும் நீண்ட நேரம்  நிக்க முடியாது எப்படியும் கீழே  விழுவேன்னு  தெரியும் . அப்ப தான் இந்த மனுஷன் வந்தார் . சரி நம்மளை காப்பாத்த தான் வர்றானோ னு நம்பி இருந்தா , என்னை அடிச்சு தள்ளப் பாத்தான் . அதுவும் முடியலை ன்னு சுத்தியலால கைக்கு அடிச்சு
தள்ளப்  பாத்தான் . அப்போ வலி தாங்கமா கீழ விழுந்து எஸ்கேப்  ஆகிட்டேன். சரின்னு இருந்தா மேல இருந்து திடீர்ன்னு ஒரு பிரிட்ஜ் என் தலை மேல வந்து விழுந்து நான் அவுட் .



மூன்றாவதா வந்தவன் இதே விஷயத்தை சொல்லி . அந்த பிரிட்ஜுக்குள்ள டிரெஸ் இல்லாம ஒழிஞ்சு இருந்தது நான் தான்யா !!!! .

================================================

வயது முதிர்ந்த தாத்தா ஒருவர் , மருத்துவரிடம் உடலை மாதமொரு முறை தொடர்ந்து போய் பரிசோதித்து இருக்கிறார் .

அவரை பரிசோத்தித்த மருத்துவர்: - " உங்களுக்கு உடலில் ஒரு குறையும் இல்லையே , நீங்க மனதளவில் நன்றாக சந்தோஷமாக  இருக்கிறீர்கள் போல ? "
அதற்க்கு பதில் அளித்த தாத்தா  :-  "ஆம் கடவுளும் நானும் மிகவும் நெருக்கம் . கதவுக்கும் எனக்கும் இடையில் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு . நிறைய ஆச்சரியங்கள் எனது வாழ்வில் . நான் இரவு வேளையில் எழுந்து  கதவை திறந்து பாத்ரூம் போகும்  போது  தானாவே லைட் வருது . அப்புறம் தானாவே ஆப் ஆகுது ." 


வாவ் என்று மருத்துவர் கூறிவிட்டு அனுப்பிவிட்டார் .
 
ஒரு நாள் மருத்துவர் ஆர்வம் பொறுக்க முடியாமால் அந்த பெரியவரின்  வீட்டுக்கு வந்து அவர் மனைவியிடம் " உங்கள் கணவர் கடவுளுடன்  நெருங்கிய தொடர்புடையவர். இரவில் பாத்ரூம் செல்லும் போது தானாகவே லைட் ஆன் ஆகுதாம் அப்புறம் ஆப் ஆகுதாம் . நான் அவருடன் பழகி ஆன்மீக வழியில் செல்ல வேண்டும் . அவர் இருக்கிறாரா ? "

அதற்கு அவர் மனைவி " ஏன் டாக்டர் உங்களுக்குமா அறிவில்லை . அந்த மனுஷன் ராத்திரிலே பிரிட்ஜ்  ஐ திறந்து ஒவ்வொரு நாளும் பாத்ரூம்  மாதிரி நாசம் பண்ணி வைக்கிறாரேனு நானே கவலைலே இருக்கேன்."

===========================================

படம் பூரா வில்லன் பபிள்கம் மென்னுக்கிட்டே இருக்காரு,ஒரு வசனம் கூட பேசலையே?

அட நீங்க வேற,அவர் பேசுன எல்லா வசனத்தையும் சென்சார்ல கட் பண்ணிட்டாங்க.
===============================================
படம் ஓடிட்டு இருக்கறப்ப கதைக்கு சம்பந்தமே இல்லாம ஒரு ஆள் அடிக்கடி வந்து ஹீரோயினை டச் பண்ணிட்டு போறாரே,எதுக்கு?

அது வேற யாருமில்லை,படத்தோட டைரக்டர்தான்,டைரக்‌ஷன் டச் இல்லைனு யாரும் விமர்சனம் எழுதிடக்கூடாதே,அதுக்குதான்.
===================================================================
நான் விழுந்து விழுந்து ரசிச்ச வடிவேலு காமெடி இது. பொறுமையா , ஒவ்வொருத்தர் பேசுறதையும் கவனமா கேளுங்க.. ஒரு சின்ன அசைவு கூட மிஸ் பண்ணாதீங்க. .... நீங்க எத்தனையோ தடவை பார்த்து இருந்தாலும்... எப்பவும் உற்சாகம் வர வைக்கக் கூடிய காமெடி...

சங்கிலி முருகன் ஆரம்பிக்கிரதைப் பாருங்க. முதல்லே எவ்வளவு கெத்தா , ஆரம்பிக்கிறார், அப்புறம் பவ்யமா.. கெஞ்சலா,  தூள்.. தூள்...!!


  பொண்ணை கையை பிடிச்சு இழுத்தியா ?

1 comments:

சமுத்ரா said...

எல்லா ஜோக்கும் அருமை..

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com