Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

நெஞ்சை வருடிய ராகங்கள் ( 03)

| Mar 8, 2011


இசைக்கு  மயங்காத மனம் இல்லை. இயற்கையில் ஒளிந்து கிடக்கும் இசை ஏராளம். நமக்கு தான் நேரமே கிடைக்கிறதில்லையே..  இறைவனே இசையில் மயங்குகிறார் என்றால், நாம் எம் மாத்திரம்? 

 Instrumental இசையில், நான் கொஞ்சம் ஓவரா மயங்குறது - வீணை, கிடார், புல்லாங்குழல் . அந்த கால பாட்டு , இந்த கால பாட்டு னு எல்லாம் வித்தியாசம் பாக்கிறது இல்லை.....  இது இந்த ராகம்,  அந்த ராகம் அப்படின்னு எல்லாம் சொல்லத் தெரியாது..  ஆனா, ஒரு சில நல்ல பாட்டு கேட்கிறப்போ , நிறைய தடவை கண்ணிலே தண்ணி கட்டி இருக்கு, மனசு கொஞ்சம் இறுக்கமாகி அப்படியே ரிலாக்ஸ் ஆகியிருக்கு.    ....

நம்ம வாசகர் வட்டத்திலும், அதே மாதிரி நிறைய பேர் இருக்கக் கூடும்.

கிடார் - நரசிம்மன் , புல்லாங்குழல் - நவீன் .. பத்தி எதாவது தகவல்கள் கிடைக்குமான்னு ,நெட் பக்கம் தேடி பார்த்தேன்.     வெளி உலகத்திலே , நிறைய தெரியாத மேதைகள் இவங்களை மாதிரி நிறையவே இருக்கிறாங்க. .. அதாவது அவங்க திறமை இருக்கிற அளவுக்கு, வெளி உலகத்திலே பேமஸ் ஆகலை. நம்மளை மாதிரி சில பைத்தியங்களுக்கு ... நல்லாவே தெரியும்  .. ச்சே.. மனுஷன் என்னமா பின்னி இருக்கிறான்னு.. 

கதிரி  கோபால்நாத் எடுத்துக்கோங்க. டூயட் படம் வர்றதுக்கு முன்னாலே எத்தனை பேருக்கு தெரியும்..?  அந்த படத்திலே மனுஷன் சாக்ஸ் லே விளையாண்ட ஆட்டத்திலே, மெய் மறந்து இருந்தவங்க எவ்வளவோ பேர் இல்லையா..?

நவீன்  பத்தி ரொம்ப சுவாரஸ்யமான ஒரு பக்கம் மாட்டிச்சு.
இளையராஜா , AR ரெஹ்மான் - ரெண்டு பேருக்கிட்டேயும் நிறைய படங்களுக்கு புல்லாங்குழல் வாசிச்சவர் - திரு . நவீன். அவரோட இணைய பக்கம் இது போலே.  இந்த பக்கம் திறந்தாலே , அவரோட புல்லாங்குழல் மாஸ்டர் பீஸ் - 33 track , ஓடுது...  சிஸ்டம் லே - ஸ்பீக்கர் ஆன்  பண்ணிட்டு , வேலை பாருங்க... ஆனா என்ன , கொஞ்ச நேரத்திலே , கண்ணை மூடி லயிக்க ஆரம்பிச்சுடுவீங்க ... .. 


சமீபத்துலே, ஒரு சின்ன கெட் டுகெதர். நம்ம பழைய நண்பர் ஒருத்தரை பார்த்தேன்.. ரெண்டு  பெரும்  , ஒரு காலத்திலே   விடிய விடிய .. பாட்டு பாடிக்கிட்டு இருப்போம்... கிட்டத் தட்ட எல்லா காலத்துப்  பாட்டும் ஓடும்.. ரொம்ப அபூர்வமான பாட்டுக்களும் ஓடும்..  ஒரு இருநூறு பாட்டையாவது டச் பண்ணாமே தூங்க மாட்டோம்... அப்போதான் இந்த ஐடியா வந்துச்சு.. இருக்கிற பாட்டை எல்லாம் , மனசுக்கு உள்ளே வந்து கும்மி யடிச்ச பாட்டை எல்லாம் , நம்ம இணைய தளத்திலேயும் பகிர்ந்துக் கிடலாமே னு....இது வரைக்கும் ஒரு ரெண்டு பாட்டு மட்டும் தானே போட்டு இருந்தோம்.. .. இன்னைக்கு ஒரு 10 பாட்டு ....




கீழே  சில பாடல்கள் , யு டியூப் லிங்க் - கேட்டுப்பாருங்க. ... கண்டிப்பா உங்களுக்கும் பிடிக்கும் னு நினைக்கிறேன்...
சில பாடல்கள் கேட்டாத்தான் பிடிக்கும்.. இந்த பாடல்களை நினைச்சாலே  எனக்கு கொஞ்சம் மனசு ரிலாக்ஸ் ஆகிடும்...



ஜனனி ஜனனி , ஜகம் நீ ---- உருக்கமான இளைய ராஜா குரலுக்கு,  அருமையான கம்போசிங்...




என் இனிய பொன் நிலாவே.... கூடவே துள்ளி வரும், கிடார் ... மனசை பறிகொடுத்திடுவீங்க.....





ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ..






தாலாட்டுதே வானம்.. தள்ளாடுதே மேகம்.. 







செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்  ....






பூங்கதவே ..தாள் திறவாய்...







ஆனந்த ராகம் .. கேட்கும் காலம்..






ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்..





சின்ன பொண்ணு சேலை ... செண்பகப்பூ





ஒரு குங்கும செங்கமலம்... இது கொஞ்சம் rare சாங். கேட்டுப் பாருங்க....




பாட்டு உங்களுக்குப் பிடிச்சிருக்கா??


இந்த பதிவு தொடரும் ங்க.  இன்னும்  ரொம்ப காலத்துக்கு...

2 comments:

Pathman said...

பாட்டுக்கள் நன்றாகத் தான் இருக்கின்றன ...இது வித்தியாசமனது ஒன்று கேட்டுப் பாருங்கள் ...ஆங்கிலக் கலாச்சாராத்தில் வளர்ந்த ஒரு பெண் தமிழை தேடி வந்து சுந்தராம்பாளின் வாரிசு கோவை கமலாவிடம் படித்து உலகையே கலக்கிறா வெள்ளைகரர்களை அரோகராப் போட வைக்கிறா அவர் யாரும் இல்ல சுசிலா ராமன் என்ர ஒரு சிறந்த பாடகிதான்...

http://www.youtube.com/watch?v=n0sTmxAYZhI&feature=related

Pathman said...

பாட்டுக்கள் நன்றாகத் தான் இருக்கின்றன ...இது வித்தியாசமனது ஒன்று கேட்டுப் பாருங்கள் ...ஆங்கிலக் கலாச்சாராத்தில் வளர்ந்த ஒரு பெண் தமிழை தேடி வந்து சுந்தராம்பாளின் வாரிசு கோவை கமலாவிடம் படித்து உலகையே கலக்கிறா வெள்ளைகரர்களை அரோகராப் போட வைக்கிறா அவர் யாரும் இல்ல சுசிலா ராமன் என்ர ஒரு சிறந்த பாடகிதான்...

http://www.youtube.com/watch?v=n0sTmxAYZhI&feature=related

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com