Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

ஜோதிட சூட்சுமங்கள் : இந்து லக்கினம் ( ஜோதிட பாடம் : 015 )

| Mar 26, 2011
நமது வாசக அன்பர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம். இன்று நாம் இந்து லக்கினம் பற்றி பார்க்க விருக்கிறோம்.

விக்கிரமாதித்தன் காலத்தில் வாழ்ந்த  அம்பிகையின் அனுக்கிரகம் பூரணமாகப் பெற்ற ,  மகா கவி காளி தாசரின் மூலம் இந்த உலகுக்கு கிடைத்த , பல அரும்பெரும் பொக்கிஷங்களில் ஜோதிடமும் ஒன்று. . அவரால் கிடைக்கப் பெற்றதே இந்த இந்து லக்கினம் பற்றிய குறிப்பு.


அவரது "உத்தர காலமிர்தம் " - நிஜமாகவே ஒரு அமுதம் தான். சமஸ்கிருதத்தில் உத்தர் என்றால் பதில் . KBC நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன் சொல்வாரே ஞாபகம் இருக்கிறதா?   " சஹி உத்தர். " அப்படினா சரியான பதில்.

உத்தர காலமிர்தம் என்றால் - காலா காலத்திற்கும் பொருந்தும் , அமுதம் போன்ற - கேள்வி  பதில்  தொகுப்பு என்ற பொருள் கொள்ளுங்கள்,

சரி, இந்து லக்கினம் பற்றிய தகவல்களுக்கு வருவோம்..
இதைப் பற்றி , நிறைய ஜோதிடர்களுக்கு தெரியாது என்பது என் அனுபவக் கருத்து. அது போன்ற , ஒரு அரிய விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி.

உங்கள் ஜாதகத்தில் - எதுவும் உச்ச கிரகம், ஆட்சி கிரகம் இல்லை என்ற போது , இந்து லக்கினத்தில் நின்ற கிரகத்தின் தசை வருகிறதா என்று பாருங்கள்... நீங்கள் கோடீஸ்வரராவது 100 % உறுதி.
உங்களுக்கு கிடைக்கும் , பண வரவு பற்றி தெரிந்து கொள்ள - இரண்டாம் இடம், குரு பகவான் நிலைமை  தவிர இந்து லக்கினமும் தெரிந்தால் நல்லது.

சரி, இதை எப்படி பார்ப்பது என்று பார்ப்போம்..


உங்கள் ஜாதக கட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள் :

லக்கினம், ராசி --- என்ன என்று பாருங்கள் :


ஒவ்வொரு கிரகத்திற்கும் - இந்து இலக்கின விதிப்படி - கலை எண்கள்  என்று உண்டு. "ஒளி எண்கள் " என்றும் வைத்துக் கொள்ளலாம்.

சூரியனுக்கு       - 30
சந்திரனுக்கு      - 16
செவ்வாய்க்கு   - 6
புதனுக்கு             - 8
சுக்கிரனுக்கு     - 10
 குருவுக்கு          - 12
சனிக்கு                - 1

ராகு, கேதுக்கு - கலைகள் கிடையாது.

உங்கள் லக்கினத்தில் இருந்து - ஒன்பதாம் வீடு என்ன என்று பாருங்கள் . அந்த வீட்டின் அதிபதி யார் ? அவருக்கு எத்தனை கலை என்று பாருங்கள்.

அதேபோலே - உங்கள் ராசிக்கு - ஒன்பதாம் வீட்டின் அதிபர் , அவருக்கு எத்தனை கலை எண் என்று பாருங்கள் .

இரண்டு கலை எண்களையும் கூட்டி , வரும் கூட்டுத்தொகையை - 12 ஆல் வகுக்க வேண்டும்.   வகுத்த பிறகு வரும் எண்ணை, சந்திரன் நின்ற வீட்டில் இருந்து 1 ...2 ...3 ... என்று எண்ணி வாருங்கள். எந்த வீட்டில் மீதி தொகை முடிகிறதோ .. அந்த வீடு .. இந்து லக்கினம் என்று பெயர்...

இந்த இந்து லக்கினத்தில் இருந்து வரும் ஒரு கிரகத்தின் தசை நடக்கிறது என்றால்... உங்களுக்கு , பொன்னும்  பொருளும், புகழும் குவியும்...

ஒரு உதாரணத்திற்கு  - விருச்சிக லக்கினம் , சிம்ம ராசி என்று வைத்துக் கொள்வோம்.

விருச்சிகத்திற்கு  - ஒன்பதாம் வீடு - கடகம் . அதிபதி - சந்திரன் . அவரது கலை எண் : 16 .

சிம்ம ராசிக்கு - ஒன்பதாம் வீடு - மேஷம் . அதிபதி - செவ்வாய். கலை எண் : 6.


இரண்டையும்  கூட்டினால் - வருவது : 16 + 6 = 22 .

12 ஆல் வகுக்க மீதி வருவது  ::: 10 . இதை சந்திரன் நின்ற சிம்ம ராசியில் இருந்து என்ன , 10 ஆம் வீடாக வருவது ரிஷபம். இந்த ஜாதகருக்கு - ரிஷபமே இந்து லக்கினம் ஆகும்.

ரிஷபத்தில் இவருக்கு நிற்கும் கிரகத்தின் தசை நடந்தால் - அவருக்கு , அந்த தசை காலம் - அற்புதமான ஒரு காலமாக இருக்கும். அது அசுப / தீய கிரகமாகவே இருந்தாலும் , இது பொருந்தும்.

அவரது பலன் அளவு வேறுபட வாய்ப்பு இருக்கிறது.  உதாரணத்திற்கு நடை முறையில் - ஆளும் கட்சி கவுன்சிலரும்  அதிகாரம் படைத்தவர்தான், MLA , MP , மினிஸ்டர் இப்படி ஆளுக்கு தகுந்த மாதிரி வேறுபடும்  இல்லையா? அதே மாதிரி ...

இயல்பில் இந்து லக்கினம் - ஜென்ம லக்கினத்திற்கு பகை வீடு , இல்லை பகை கிரகம், நீச கிரகம் அங்கே இருந்தால் - பலன் கொஞ்சம் குறையும். ஆனால் , அபரிமித பலன்கள் கண்டிப்பாக ஏற்படும்.

அதே வேளையில் , இந்த இந்து லக்கினம் - ஜென்ம லக்கினத்திற்கு , மறைவு ஸ்தானமாக இல்லாமல் ( 3 ,6 ,8 ,12 ) - இந்து லக்கினத்தில் - ஒரு சுப கிரகம் இருந்து , அல்லது சுப கிரகங்களின் பார்வை பெற்று தசை நடந்தால் - அவர் உலக புகழ் பெரும் கோடீஸ்வரராவார். 

 இதைத் தவிர சில நுணுக்கமான விதிகளும், விதி விலக்குகளும் உண்டு. அதை எல்லாம் நீங்கள் - தனியே , உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது - ஆராய்ச்சி
செய்து கொள்ளுங்கள்.

பாடம் புரியவில்லை என்றால் , சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.. வழக்கம் போல் - உங்கள் கருத்துக்களும், விமர்சனங்களும் வரவேற்கப் படுகின்றன.

=======================================================


அப்புறமா , இன்னொரு முக்கியமான விஷயம்.  வரவிருக்கும் பிரதோஷம் -
 பற்றிய தினங்கள் பற்றிய குறிப்பு கொடுத்துள்ளேன். ஒவ்வொரு பிரதோசமும் - நீங்கள் சிவ ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது  மனக் கவலைகளை நீக்கி , வாழ்வில் வளம் பெற செய்யும்.

இந்த வருடம் மட்டும், மூன்று பிரதோஷம் ஞாயிற்றுக் கிழமை வரவிருக்கிறது. ஞாயிறு ராகு காலமும், பிரதோசமும் கூடி வரும் வேளை - நீங்கள் சரபேச வழிபாடு செய்தால் , உங்களுக்கு அதன் மூலம் கிடைக்கவிருக்கும் பலன்கள் - கோடானு கோடி. அதை நீங்கள் அனுபவப் பூர்வமாக உணர முடியும்.


இந்த மூன்று தினங்களையும் நான் ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன். உடல் ஆரோக்கியம் இருக்கும் அன்பர்கள் - விரதம் இருந்து , சரபேஸ்வரரை  வேண்டி, ஆத்ம சுத்தியுடன்  வேண்டினால்  , உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும்... 



வாழ்த்துக்கள்..!


திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் அன்பர்களுக்கு - கிரிவலம் செல்லும் நாட்கள் பற்றிய காலண்டர்  கீழே கொடுத்துள்ளேன். உபயோகித்துக் கொள்ளுங்கள் 



மீண்டும் சிந்திப்போம்!

22 comments:

ஆகமக்கடல் said...

இந்து லக்னம் நான் கேள்விப்படாத விஷயம்.உண்மையிலேயே இதுபோன்ற பதிவுகள் தங்களிடம் இருக்க,ஏன் தேவையில்லாத பல விஷயங்கள்?அருமை அருமை keep it up

என்னுள்ளே said...

மிச்சம் 0 என்று வந்தால்? எப்படி கணக்கு பண்ணுவது அய்யா

Rams said...

hi,
எனக்கு ஒரு டவுட் ,
ஜென்ம லக்னத்தில் இருந்து 8 - ஆம் ஸ்தானம் மறைவு ஸ்தானம் தானே? பிறகு ஏன் ஜென்ம லக்னத்தில் இருந்து 8 - ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் என்கிறார்கள்?

Rams said...

hi,
எனக்கு ஒரு டவுட் ,
ஜென்ம லக்னத்தில் இருந்து 8 - ஆம் ஸ்தானம் மறைவு ஸ்தானம் தானே? பிறகு ஏன் ஜென்ம லக்னத்தில் இருந்து 8 - ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் என்கிறார்கள்?

Balasubramanian Pulicat said...

Lesson Indulagna is good. what if indulagna, and normal lagna both being gemini and guru sits there and how will be the gurudasa gurubukthi and gurudasa sani bukthi. Await your comments.

vijay said...

sir,
22/12 is 1.8333333 so how the 10 numeral value come pls explain

LOGANATHAN said...

Dear sir my Hindu Lagnam calculation comes 24/12= 2 balance 0 so how to see?too much confused expecting mater's explanation

LOGANATHAN said...

My rasi aries Lagnam cancer so what is my Hindu laganam I calculated as per your explanation the balance is 0.Please tell me what is my Hindu Lagnam

Murari said...

இணைய தளத்தில் யாரும் எழுத முன்வராத இந்துலக்னம் பற்றி எழுதுவதற்கு நன்றி. ஓர் அன்பர் கேட்டது போல 12ஆல் வகுக்க மீதி வராவிட்டால் சந்திரன் நின்ற இராசியே இந்து லக்னமாகலாம் எனக் கருதுகின்றேன். அடுத்து இந்து லக்கினத்தில் கோள்கள் இல்லையாயின் இந்துலக்கின ரீதியான பலன் கண்டு கொள்ளமுடியாது எனக் கொள்ளலாமா?முடிந்தவரையில் சில எழுத்து பிழைகளைத் தவிர்க்க முயலவும்.

Shiva said...

இந்து லக்ன பதிவு நன்றாக உள்ளது. பிரதோஷ நாட்கள் மற்றும் கிரி வல நாட்கள் அட்டவணை ஒரு உபயோகமான செயல். நன்றி. இந்து லக்னத்தில் எனக்கு உள்ள சந்தேகம்
1) இறுதியில் இந்து லக்னத்தில் கிரகம் இல்லை என்றால் எந்த திசையில் பணம் அதிகமாக கிடைக்கும் என்று
தெரிந்து கொள்வது.
2) அதே போல் ஒரு கிரகம் இருந்து , அதன் திசை முடிந்து விட்டால் , வேறு திசையில் அந்த புத்தி வரும்போது எல்லாம் பணம் கிடைக்கும் என்று கொள்ளலாமா.
( உ - ம் ) மேஷ லக்னம், மீன ராசி (12+6=18 -12 = 6 =சிம்மம்) சிம்மத்தில் சுக்ரன். இப்போது வேறு திசை. அப்படியானால் சுக்ர புத்தி நடைபெறும் போது பணம் கிடைக்கும் என்று சொல்லலாமா. (சுக்ர திசை முடிந்துவிட்டது ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லையே)

shivadaasan said...

ஒவ்வொரு கிரகத்திற்கும் - இந்து இலக்கின விதிப்படி - கலை எங்கள் என்று உண்டு.

சிம்ம ராசிக்கு - ஒன்பதாம் வீடு - மேஷம் . அதிபதி - செவ்வாய். கலை எண் : ௬.

இப்பாடத்தில் மேற்கூறிய இரு வாக்கியங்களில் சிறு திருத்தம் வேண்டும் என் கருதுகிறேன்.


சொற்கள் திருத்தம்


1. எங்கள் எண்கள்

2. கூ 6

karthic said...

இந்து லக்கினம் பூஜ்யம் என்றால் எப்படி
பார்ப்பது என்று சொல்லுங்கள் அய்யா

Achyut Babu said...

Dear sir my Hindu Lagnam calculation comes 24/12= 2 balance 0 so how to see?too much confused expecting mater's explanation

Anonymous said...

Gr8 sharings...Thanks sir..
--
@Vijay..

Division is simplest form of subtraction. When you are notsure about simplest form better you go with subtraction. i.e.) 22-12=10
---
Dear all,

If reminder is “0” then consider it as “12”.


@Rams..
நீங்களே சொல்லுங்க Rams..உங்கள் மறைவிடத்தில் "நெருப்பு" இருப்பது குற்றமா இல்லையா?

~Senthil

Anonymous said...

மிச்சம் 0 என்று வந்தால்? எப்படி கணக்கு பண்ணுவது அய்யா
சந்திரனுக்கு - 16
புதனுக்கு - 8

16+8=24
24/12,0

நண்பன் said...

இந்து லக்கினம் 0 என்று வந்தால் அது 12 என எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணம் : 24 என்று வந்தால் 24/12 = ஈவு =2, மீதி=0 என்பதற்கு பதில் ஈவு =1 மீதி=12 என்று எடுத்துக்கொண்டு சந்திரனில் இருந்து 12ம் இடத்தில் இருக்கும் கிரக தசையை எடுத்துக் கொள்ளவும்

Chitra Krishnan said...

sir, if the lagna is Simma, Rasi is mithuna, then it is not possible to divide this number by 12, so How to calculate this Indu lagna, I am very much confused and worried

raj mohan said...

How to calculate for Mithuna lagna & simma Raasi. It comes 7. How to divide 7 by 12 or how to calculate.
Please explain.

raj mohan said...

How to calculate for Mithuna lagna & simma Raasi. It comes 7. How to divide 7 by 12 or how to calculate.
Please explain.

vageesh mohan said...

Dear sir,
Namaskaram. I read about Indu lagna lesson. It is very useful lesson sir. But, I have some doubts. kindly clarify. I am expecting your reply.
1. If the remainder comes as zero, how to predict dasa?
2. No planet is found in Indu lagna, how to predict good dasa?

Mano said...

Sir after calculating indhu lagnam. suppose if i get 4 , from chandran 4th house is hindu lagnam. assume if there are no planets placed in indhu lagnam? what it means?

vijaya ragavan said...

இந்து லக்னத்தில் கலை எண்கள் - சுக்கிரன் -12 , குரு-10 , தயவு செய்து பிழைத்திருத்தம் செய்யுங்கள்

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com