Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

ஜோதிட சூட்சுமங்கள் : பஞ்சாங்கம் (ஜோதிட பாடம் : 012 )

| Mar 25, 2011
அன்பு வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்னைக்கு நாம பார்க்க விருக்கிறது - பஞ்சாங்கங்கள் பற்றி மேலும் சில விஷயங்களை.

 நம்மோட - ஐந்தாவது பாடத்திலே சில அடிப்படை தகவல்கள் ஏற்கனவே கொடுத்து இருந்தோம். ஆனால், மேலும் சில தகவல்கள் ஒரு ஜோதிடரா நீங்க தெரிஞ்சு வைச்சுக்கிறது நல்லது.

===========================================================
பழைய ஐந்தாம் பாடம் படிக்காதவங்க  / திரும்ப ஒரு தடவை பார்க்க நினைக்கிறவங்க -  டக்குனு , ஒரு பார்வை பார்த்துட்டு  வந்திடுங்க..
=============================================================

 ஒரு ஜோதிடரா உங்க கிட்டே மக்கள் என்ன எதிர் பார்ப்பாங்க....  ஒன்னு , ஜாதகம் பார்த்து , பலன் தெரிஞ்சுக்கிடுறது.. அப்புறம்.. எதாவது நல்லது , கேட்டது நடக்கிறப்போ - நாள், நேரம் பார்த்து , குறிச்சுக் கொடுக்க சொல்லுவாங்க இல்லையா?  அதுக்கு தான் , நீங்க பஞ்சாங்கம் தெளிவா பார்க்க தெரியணும்.. சரி, பஞ்சாங்கப்படி , நீங்க இன்னும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் பற்றி .. கொஞ்சம் பார்க்கலாம். பஞ்சாங்கம் சொல்றது தவிர, நம்ம கருத்துக்களும் இடையிலே போடுறதாலே , இந்த பதிவு - ரொம்பவே நீண்டு  விட்டதாலே ... இரண்டு  / மூன்று பதிவா போடுறேன்... ஓகே வா..?
============================================
*எந்த மாசத்தில் பூர்ணிமை, அமாவாஸ்யை இல்லையோ அந்த மாஸத்துக்கு விஷமாசம் என்று பெயர்.
* எந்த மாசத்தில் இரண்டு பூர்ணிமையோ, இரண்டு அமாவாஸ்யையோ வருகிறதோ அதற்கு மலமாசம் என்று பெயர்.
* விஷ மாசத்திலும், மல மாசத்திலும் சுபகார்யங்களை விலக்க வேண்டும்.
* ஆனால் சித்திரை, வைகாசி, மாதத்தில் இவை நிகழுமானால் அந்த இரு மாதங்களுக்கும் இந்த தோஷம் கிடையாது.
===========================================================
அயனங்கள்
ஒரு வருடம் இரண்டு அயனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சூரியன்  மகர ராசியில் பிரவேசிக்கும்போது உத்தராயனம் தொடங்குகிறது. கடக ராசியில் பிரவேசிக்கும் போது தக்ஷிணாயனம் தொடங்குகிறது.
 
தைமாதம் தொடங்கி ஆனி முடிய  6 மாதங்கள் உத்தராயன காலமாகும். இக்காலகட்டத்தில் எல்லா நல்ல காரியங்களும் செய்யலாம். கும்பாபிஷேகம், க்ரஹப்பிரவேசம் போன்றவை இக்காலகட்டத்தில் நிகழ்வது உத்தமம்.
ஆடி மாதம் தொடங்கி மார்கழி ஈறாக 6 மாதங்கள் தக்ஷிணாயனம் ஆகும். இக்காலகட்டத்தில் நல்ல காரியங்களைத் தொடங்குவதை தவிர்க்க முடியுமானால் தவிர்ப்பது நல்லது.
 =========================================================
ருதுக்கள் - 6
ஒரு வருடம் 6 ருதுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
சித்திரை, வைகாசி - வஸந்த ருது
ஆனி, ஆடி, - க்ரீஷ்ம ருது
ஆவணி, புரட்டாசி - வர்ஷ ருது
ஐப்பசி, கார்த்திகை - சரத் ருது
மார்கழி, தை - ஹேமந்த ருது
மாசி, பங்குனி - சிசிர ருது

கிழமைகள் - 7
ஒரு நாள் என்பது 60 நாழிகைகள் கொண்டது. ஸூர்ய உதயத்திலிருந்து மறுநாள் ஸூர்யோதயம் வரை ஒரு நாளாகும்.
சாயா க்ரஹங்கள் இரண்டு நீங்கலாக மீதமுள்ள ஏழு க்ரஹங்களுக்குரியதாக ஏழு நாட்கள் கொண்ட கால அளவு ஒரு வாரம் என்று தமிழில் அறியப்படுகிறது.
ஒரு நாளைக்குரிய பெயராக வாஸரம் என்ற சொல் ஸங்கல்பத்தில் பயன்படுத்தப்படுகிறது.
நடைமுறைப் பெயர் ஸங்கல்பத்தில் கூற வேண்டியது

ஞாயிறு - பானு வாஸரம்
திங்கள் - இந்து வாஸரம்
செவ்வாய் - பௌம வாஸரம்
புதன் - ஸௌம்ய வாஸரம்
வியாழன் - குரு வாஸரம்
வெள்ளி - ப்ருகு வாஸரம்
சனி - ஸ்திர வாஸரம்
=============================================================

ருதுக்கள் , நாட்கள் எல்லாம் ஒரு பெரிய விஷயமானு கேட்கலாம் . நீங்க ஒரு ஜாதகம் பார்க்கிறீங்க.. அதுலே ஜனனம் - ப்ருகு வாஸரம் , னு போட்டிருந்தா , முழிக்க கூடாது இல்லையா?
=======================================================
இராகு காலம் :

கிழமை = இராகு காலம்
ஞாயிறு = 04.30 - 06.00
திங்கள் = 7.30 - 9.00
செவ்வாய் = 03.00 - 04.30
புதன் = 12.00 - 01.30
வியாழன் = 01.30 - 03.00
வெள்ளி = 10.30 - 12.00
சனி = 09.00 - 10.30
=======================
"சார், ஒவ்வொரு நாளும் காலண்டரைப் பார்த்துதான் - ராகு காலம் தெரிஞ்சுக்கனுமா? ஈசியா எப்படி ஞாபகம் வைச்சுக்கிறது?"
உங்களுக்கு சொல்லலைனா எப்படி?
கீழே சொல்லி இருக்கிற மாதிரி, ஒரு வரிப் பாட்டு ஞாபகத்திலே வைச்சுக்கோங்க. ..... ஒவ்வொரு வார்த்தையிலும் வரும் முதல் எழுத்து ---- அந்த கிழமை -- வரிசைலே ஒரு ஆர்டரா வரும்.  ......  

திருவிழா ந்தையில் வெளியில் புகுந்து விளையாட செல்வது ஞாயமா?

புரிஞ்சுக்க முடியுதா ? 
=====================================================
 நம்ம வாசகர்கள் கிட்டே திரும்ப , திரும்ப சொல்ற விஷயம் இதுதான். உங்களுக்கு வர்ற கஷ்டங்கள் மறைஞ்சு , நீங்க ஒரு நல்ல நிலைக்கு வரணும்னு விரும்பினால் - ராகு கால நேரத்தில் , அம்மன் வழிபாடு செய்யுங்க. லலிதா சகஸ்ரநாமம், அல்லது மகிஷாசுர மர்த்தனி ஸ்தோத்ரம் சொல்லுங்க. சொந்த தொழில், வியாபாரம் பண்றவங்க தினம் கூட பண்ணலாம். முழுசா  ஒண்ணரை மணி நேரம் முடியாட்டாக் கூட , கடைசி அரை மணி நேரம் பண்ணுங்க.. உங்க வீடு, அலுவலகம்  - இப்படி உங்களுக்கு தோதான இடங்களிலே பண்ணலாம் .  அம்மன் படத்திற்கு மாலை போட்டு, தீபம் ஏற்றி பண்ணுங்க..
 நீங்க இருக்கும் இடத்து கிட்டே , இருக்கிற அம்மன் ஆலயம் நீங்க போய் வழிபட முடிஞ்சா  இன்னும் நல்லது.. அந்த ஆலயம் ஒரு 200 / 300 வருடம் ௦௦ பழமையான ஆலயமா  இருந்தால் ரொம்ப விசேஷம்.. 


சொந்த தொழில் இல்லாதவங்க தினம் கோவிலுக்கு போக முடியாது . நீங்க , ஞாயித்துக் கிழமை சாயங்காலம் , மிஸ் பண்ணாமல் செய்யுங்க. மற்ற நாட்களில் உங்க வீட்டுலே இருக்கிறவங்க , போக முடிஞ்சா போய்ட்டு வரட்டும்.
 உங்களுக்கு ஒரு கஷ்டம் வந்தா  முதல் ஆளா , துடிக்கிறது உங்க அம்மா தான்.. அப்பா , நீங்க ரொம்ப , ரொம்ப கஷ்டப்பட்ட பிறகு தான் , நீங்க கெஞ்சுனா தான், உங்களுக்கு உதவி செய்வார். இல்லையா? அம்மா, நீங்க கேட்கிறது, அவங்களாலே கொடுக்க முடிஞ்சா , உடனே கொடுத்திடுவாங்க இல்ல? உங்க விதிப்பயன்படி, உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல விஷயங்கள் உடனடியா கிடைக்க , ராகு கால அம்மன் வழிபாடு - ரொம்ப சுலபமான முறை.
 நான் கோவிலுக்கு போய் சாமி கும்பிடுறேன்லேன்னு, பெத்த தாயை  நீங்க கவனிக்காம போட்டால்... அந்த லோக மாதா கூட மனசு கல்லாகிடுவா.. அதையும் ஞாபகம் வைச்சுக்கோங்க பாஸூ..!!
 ===================================================
எமகண்டம்
இதேபோல எமகண்ட காலம் எப்போது என்பதனை அறிய ஒரு வரிப்பாட்டு உண்டு.
விழாவுக்கு புதிதாக சென்று திரும்பும் ஞாபகம் சற்றும் வெறுக்காதே
கிழமை : எமகண்டம் :: பகல் பொழுதில்
ஞாயிறு : 12.00 - 01.30
திங்கள் : 10.30 - 12.00
செவ்வாய் : 09.00 - 10.30
புதன் : 07.30 - 09.00
வியாழன் : 06.00 - 07.30
வெள்ளி : 03.00 - 04.30
சனி : 01.30 - 03.00
கிழமை : எமகண்டம் :: இரவுப் பொழுதில்
ஞாயிறு : 06.00 - 07.30
திங்கள் : 03.00 - 04.30
செவ்வாய் : 1.30 - 03.00
புதன் : 12.00 - 01.30
வியாழன் : 10.30 - 12.00
வெள்ளி : 09.00 - 10.30
சனி : 07.30 - 09.00
இராகு காலம், எமகண்டம் ஆகிய நேரங்களில் சுபச் செயல்களை நீக்க வேண்டும். குளிகை காலத்தில் அசுபச் செயல்களை நீக்க வேண்டும்.
குளிகை
கிழமை = குளிகை நேரம் :: பகல் பொழுதில்
ஞாயிறு = 03.00 - 04.30
திங்கள் = 01.30 - 03.00
செவ்வாய் = 12.00 - 01.30
புதன் = 10.30 - 12.00
வியாழன் = 09.00 - 10.30
வெள்ளி = 07.30 - 09.00
சனி = 06.00 - 07.30
கிழமை = குளிகை நேரம் :: இரவுப் பொழுதில்
ஞாயிறு = 09.00 - 10.30
திங்கள் = 07.30 - 09.00
செவ்வாய் = 06.00 - 07.30
புதன் = 03.00 - 04.30
வியாழன் = 01.30 - 03.00
வெள்ளி = 12.00 - 01.30
சனி = 10.30 - 12.00
(தொடரும் ) 

2 comments:

lakshmi said...

hello sir,i am in singapore.the time difference between india n singapore is 2 and half hr more than india.so if i want to know the ragukaalam or horai n so on how can i calculate the time.which one i follow ?indian ragukalam or singapore time,or i have to convert the singapore time to india time;'pls answer my question.

Sathish said...

Gud explanation

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com