Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

ஜோதிட சூட்சுமங்கள் : ( ஜோதிட பாடம் : 016 )

| Mar 29, 2011
நமது ஜோதிட பாடம் பயிலும்  வாசக அன்பர்களுக்கு வணக்கம்.

இந்து லக்கினம் பற்றி நாம் சென்ற பாடத்தில் , கூறியிருந்ததற்கு - வந்திருக்கும் மின்னஞ்சல்கள் ஏராளம்.. அவர்களில் நிறைய பேருக்கு சந்தேகங்கள். அதைப் பற்றிய சந்தேகங்கள் அடங்கிய கேள்விகளுக்கு - தனியாக ஒரு பதிவே எழுதி விடலாம் என்று நினைக்கிறேன். அனைவருக்கும், உபயோகமாக இருக்கும் என்பதால். ... (ஆனால் , அது அடுத்த பதிவில்)...  உங்களுக்கு , ஏதாவது இந்து லக்கினம் பற்றி சந்தேகம் இருந்தால், இந்த பாடத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் , அல்லது இதுவரை உள்ள பாடங்களில் ஏதாவது சந்தேகம் இருந்தால்...  .. உங்கள் கேள்விகளை அனுப்பலாம்..  

இதுவரை நடத்தப்பட்ட பாடங்களில் - உள்ள சந்தேகங்களுக்கு - அடுத்த அடுத்த பதிவுகளில்  , முடிந்த அளவுக்கு - தீர்த்து வைக்க முயற்சி செய்கிறேன்...

அனேகமாக இந்த பாட முடிவிலும், அடுத்த நமது பாடங்களின் - கேள்வி - பதில்களிலும் - நாம் ஓரளவுக்கு விஷயங்களை தெரிந்து கொண்டு இருப்போம்... இனி வர விருக்கும் பாடங்களில் , நாம் ஜாதகம் பார்த்து பலன் சொல்வது எப்படி என்று பார்க்க விருக்கிறோம்.. நான் இல்லை, நீங்கதான் சொல்லப் போறீங்க... 

நாம பாடம் நடத்துற முறையே அப்படித் தான்.. முடியும் ... உங்களால் முடியும் என நம்புகிறேன்...

சரி, இந்த வார பாடம் பார்க்கலாம்.

=========================================


சில விஷயங்களுக்கு - காரண காரியம் தெரிவது இல்லை. அந்த கால ரிஷிகளால் ,  வகுத்து வைக்கப் பட்டுள்ள ஜோதிட சாஸ்திர விதிகள் அதைப் போலே தான். நிறைய விதிகளுக்கு - கொஞ்சம் போலவாவது காரணம் புரியும். ஒரு சில விதிகளுக்கு,.... !? சுத்தம்.. ஏன் ? எதுக்குனே புரிபடாது... அந்த மாதிரி - இரண்டு விஷயங்களை , பலரது ஜாதகங்களை ஆராய்ந்து பார்த்ததில்  , தெளிவாக அவை பொருந்தி இருப்பதால் , ஆச்சரியப்பட்டு , அந்த விஷயங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.


காரகோ பாவ நாஸ்தி

நாம் ஏற்கனவே - பன்னிரண்டு வீடுகளைப் பற்றி , பாடம் பார்த்தோமே, ...அந்த ,   அந்த வீடுகளுக்கு காரகத்துவம் பெரும் கிரகங்களைப் பற்றி கூறி இருந்தேன்... ஞாபகம் இருக்கிறதா?

உதாரணத்திற்கு - ஏழாம் வீடு - களத்திர ஸ்தானம் - காரகம் பெறுவது - சுக்கிரன். ஐந்தாம் வீடு - குழந்தைகள் ஸ்தானம் - காரகம் பெறுவது  - குரு .

கரெக்டா ?  இந்த ஏழு கிரகங்களுமே, தனது  காரகம்   பெறும் இடங்களில் நின்றால் - சொதப்பி விடுகிறார்கள். அவர்கள் வேலை பார்ப்பதே இல்லை. 
தனியாக நின்றால் , வெகு நிச்சயமாக சொதப்பல். மற்ற கிரகங்களுடன் இணைந்து இருப்பது - பரவா இல்லை.

அதாவது - எந்த லக்கினமாக இருந்தாலும், ஏழில் - சுக்கிரன் தனித்து இருந்தால் , அவர்களுக்கு திருமண விஷயம் , அவ்வளவு எளிதாக இருப்பது இல்லை. நிறைய பேருக்கு திருமணமே நடப்பது இல்லை. அல்லது வெகு தாமத திருமணம்... முறைப்படி திருமணம் செய்து குடித்தனம் நடத்த முடியாத நிலை இப்படி..தவறி, விதி விலக்காய்  நடந்தாலும் - கல்யாணம் பண்ணியும் பிரயோஜனம் இல்லாத நிலைமை.  இப்படி....

அதைப் போலவே ,  ஐந்தாம் வீட்டில் - குரு தனித்து நின்றால் - அவர்களுக்கு - குழந்தை பாக்கியம் இருப்பது இல்லை. ஆகா , பிரமாதம், ஐந்தில் குரு - நல்லா பக்காவா - திரிகோண ஸ்தானத்தில் இருக்கிறார் என அவசரப் பட்டு விடாதீர்கள்.. 

இதற்க்கு பெயர் தான் காரகோ பாவ நாஸ்தி .... 

இதைக் கூட நிறைய ஜோதிடர்கள் தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.. ஆனால் , நாம் அடுத்து பார்க்க விருக்கும் விஷயம் - நிறைய பேருக்கு தெரிஞ்சு இருக்க வாய்ப்பு இல்லை என்பது என் அனுபவம்...

எந்த ஒரு விஷயமும் தெரிஞ்சுக்கிட ரெண்டு வகை இருக்கு. -- ஒன்னு உங்களுக்கு சொல்லிக் கொடுக்கிற குரு - பக்காவா , வெளிப்படையா சொல்லிக் கொடுக்கிறவரா இருக்கணும். ... இல்லையா , உங்களுக்கு இயல்பா இருக்கிற ஆர்வம் , உங்க தேடுதல் ... உங்களுக்கு நிறைய விஷய ஞானத்தைக்  கொடுக்கும்.

சரி, இப்போ நாம பார்க்க விருப்பது  - கேந்திராதிபத்திய தோஷம்  பற்றி :

சுப கிரகங்கள் - கேந்திர அதிபதிகளாக இருந்து  , கேந்திரங்களிலேயே நிற்க - அவராலும் ஒன்றும் பிரயோஜனம் இல்லை என்கிறது விதி.. இது எல்லா கிரகங்களுக்கும் இல்லை. முழுக்க , முழுக்க சுப கிரகங்களுக்கு மட்டுமே.

இயல்பிலேயே - அசுப கிரகங்களான - செவ்வாய் , சனி, சூரியன் , தேய்பிறை சந்திரன், தீய கிரகங்களுடன் சேர்ந்தால் அசுப கிரகமான புதன் , ராகு , கேது  - ஆகியோர் கேந்திரங்களில் நின்றால் - தோஷமில்லை.

எனவே , கேந்திராதிபத்திய தோஷம் பெறும் கிரகங்கள் - குரு, சுக்கிரன் , வளர்பிறை சந்திரன், தனியாக நிற்கும் புதன்.
இவர்கள் , வேறு கிரகங்களுடன் இணைந்து - கேந்திரத்தில் இருந்தால் , பரவா இல்லை. தனியே நிற்க கூடாது.

-------- வெறுமனே ஜாதகம் பார்த்து விட்டு - ஆஹா , நல்ல சுப கிரகம்  - முழு  பலத்துடன் கேந்திர ஸ்தானத்தில் நிற்கிறது.. அமோகமாக இருக்கும் என்று எண்ணி விடாதீர்கள்.. சரியா ?

தெளிவாக புரிய வில்லை என்றால்  ஒரு உதாரணத்துடன் பார்ப்போம்..

கடக லக்கினம் என்று வைத்துக் கொள்ளுங்கள் :

கேந்திர வீடுகள் :  1 ,4 ,7 ,10  ===  கடகத்திற்கு என்னென்ன வீடுகள்  கேந்திரமாகிறது  ?

கடகம், துலாம், மகரம் , மேஷம் .... கரெக்டா ...?

சந்திரன், சுக்கிரன், சனி , செவ்வாய் - இந்த வீடுகளுக்கு அதிபதிகள். சனியும் , செவ்வாயும் -  கேந்திரத்தில் நிற்பது நல்லது.

ஆனால், வளர்பிறை , சந்திரனோ, இல்லை 4 ஆம் வீட்டுக்கு அதிபதியாக வரும் சுக்கிரனோ  - தனியாக கேந்திரத்தில் நிற்க அவரால்  , முழுவதும்  பலன்கள்  இல்லை. இதைத்தான், கேந்திராதிபத்திய தோஷம் என்று சாஸ்திரம் கூறுகிறது..

இந்த நுணுக்கமான விதிகளை ஏன் கூறுகிறேன் என்றால், முதலில் உங்கள் ஜாதகத்தை முழுக்க ஆராய்ந்து பாருங்கள்.. இது வரை நடத்திய பாடங்களுடன் - உங்கள் ஜாதகம் ஆராய்ந்து எப்படி, எவ்வளவு தூரம் - உங்களுக்கு,  நீங்கள் பலன் சொல்ல முடிகிறது என்று பாருங்கள்.., அது மற்றவர்களுக்கு பலன் சொல்வதற்கு உங்களால் முடியும் என்ற நம்பிக்கை தரும்.

சரி, இன்னைக்கு - பஞ்சாங்க  கிரக நிலவரப்படி  - கன்னி லக்கினத்தில் , ஒரு ஆண் குழந்தை பிறந்தால் - அந்த குழந்தைக்கு - என்ன ராசி ?  பிறந்ததும் என்ன தசை நடக்கும் ?  மொத்த கிரக அமைப்பு , ஆட்சி, உச்சம், திரி கோணம், கேந்திரம் , இந்து லக்கினம் - ஆதிபத்திய தோஷம் , பாப கர்த்தரி, காரகோ பாவ நாஸ்தி -  என்று நாம் இதுவரை , பல பாடங்களிலும் நடத்திய குறிப்புகளை வைத்து - ஒரு அலசல் அலசி , கொஞ்சம்  கமெண்ட்ஸ் அல்லது மெயில் பண்ணுங்க.. பார்க்கலாம்...

எத்தனை பேர் - சின்சியரா படிக்கிறது ..... பார்ப்போம்..

=========================

ஓகே, இனி மற்ற விஷயங்களை அடுத்த பாடங்களில் பார்க்கலாம்.. அடுத்த படம் - உங்கள் Feed back - வைச்சு தான் , உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் பொறுத்துதான்.. 

யாருமே ஒன்னும் எழுதலைனா, எல்லாருக்கும் புரிஞ்சு இருக்குதுன்னு எடுத்துக்க மாட்டேன்..  கமெண்ட்ஸ் / மெயில் எழுதுறதுக்கு சோம்பேறித்தனம் / கூச்சம்னு தான் எடுத்துக்குவேன்.. ரெண்டு பக்கமும் , interaction இருந்தாதான் இன்னும் சுவாரஸ்யமா இருக்கும்...

நீச்சல் பழகனும்னா , TV லே எப்படி நீச்சல் அடிக்கிறது னு பார்த்துக் கத்துக்க முடியாது.. நீங்களே தண்ணிக்குள்ளே இறங்கினாத்தான் முடியும்... அதனாலே ,  வாங்க.. ஜோதிடம் கத்துக்கலாம்... ஏதோ ஒரு நேரத்துலே - உங்களுக்கு ரொம்ப கை கொடுக்கும்..

ஜப்பான் - உலகுக்கு வழங்கிய இன்னொரு CONCEPT - இயற்கை சீற்றத்தை எப்படி எதிர்கொவது ?

|
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.

ஜப்பானை உலுக்கிய சுனாமி - வேறு எந்த தேசத்திலும் நடந்து இருந்தால், இந்த அளவுக்கு , அந்த தேசம் தாங்கி இருக்க முடியுமா? உலகத்துக்கே அவர்கள் - பாடம் வழங்கி இருக்கிறார்கள். பழுத்த ஞானம் என்று சொல்வார்களே ... நண்பர் . திரு இளங்கோ - அவர்கள் இந்த மின்னஞ்சலை அனுப்பி இருந்தார். ... அவருக்கு என்  மனமார்ந்த நன்றிகள்.

மார்ச் மாத கடைசி, ISO Audit , சொந்த தொழிலுக்கான - கணக்கு , வழக்கு - tax submission  என்று கொஞ்சம் - பணி நிமித்தம் , அலுவல்கள் அதிகமாக இருப்பதால் , இதை ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்க்காமல் , அப்படியே கொடுத்துள்ளேன்..
இந்த வாரம் முழுவதும், வழக்கமாக வருவது போல், நமது பதிவுகள் வராது .. கொஞ்சம் தாமதமாகும் - வாசகர்கள் , கொஞ்சம் பொறுத்துக் கொள்ளவும்..

ஆங்கிலத்திலேயே இருந்தாலும், படிக்கும்போது - மனசுக்குள் , ஒரு வீணையின் தந்தி அதிர்வை உணர முடிகிறது.......... ஒரு வேளை , இதைப் போலே - நூற்றில் ஒரு பங்கு - இயற்கை சீற்றம் நடந்தாலும், நம் ஊரில் நடக்கும் - அராஜகங்களை எண்ணிப் பாருங்கள்...  


ஜப்பான் - ஏராளமான QUALITY CONCEPT பற்றிய பாடங்கள் , உலகுக்கே வழங்கி இருந்தாலும் -  அவர்களது இந்த பாடம், இந்த ஒட்டு மொத்த மனித சமுதாயத்திற்கே தேவையானது....

நாம் வல்லரசு ஆக வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தால் போதாது... தனி மனித ஒழுக்கம் ரொம்ப அவசியம்... படித்துப் பாருங்கள்...  மனதளவில் நாம் நிறைய மாற வேண்டி இருக்கிறது...

http://mmabadass.com/wp-content/uploads/2011/03/japan-flag.gif

LESSONS TO THE WORLD - BY JAPAN

1. THE CALM
Not a single visual of chest-beating or wild grief. Sorrow itself has been elevated.

2. THE DIGNITY
Disciplined queues for water and groceries. Not a rough word or a crude gesture.
 
3. THE ABILITY
The incredible architects, for instance. Buildings swayed but didn’t fall.
 
4. THE GRACE
People bought only what they needed for the present, so everybody could get something.
 
5. THE ORDER
No looting in shops. No honking and no overtaking on the roads. Just understanding.
 
6. THE SACRIFICE
Fifty workers stayed back to pump sea water in the N-reactors. How will they ever be repaid?
 
7. THE TENDERNESS
Restaurants cut prices. An unguarded ATM is left alone. The strong cared for the weak.
 
8. THE TRAINING
The old and the children, everyone knew exactly what to do. And they did just that.
 
9. THE MEDIA
They showed magnificent restraint in the bulletins. No sensationalizing. Only calm reportage.
 
&
 
THE LAST AND BEST

10. THE CONSCIENCE
When the power went off in a store,
people put things back on the shelves and left quietly

சிரிப்பு வருது , சிரிப்பு வருது .... சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது...... ( தமிழ் ஜோக்ஸ் )

| Mar 27, 2011

A NATURAL Chandrababu



ஒரு பிளாட்டில் ஒருவர் பையனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தார். வேறு ஒருவர் வந்து தடுத்தார். "ஏன் சார் அடிக்கீறிங்க?"
" நான் எத்தனை செலவு செய்து படிக்க வைக்கிறேன்...கேள்வி கேட்டால் இவனுக்கு 'சந்திரனுக்கும். சூரியனுக்கும்' வித்தியாசம் தெரியலை " என்றார்.
" யோவ்.. அவனுக்காவது சூரியனுக்கும். சந்திரனுக்கும் வித்தியாசம் தெரியலை. உனக்கு உன் பையனுக்கும். என் பையனுக்குமே வித்தியாசம் தெரியலையே?" என்றாராம்  டென்ஷனாக.



ஒரு ஓவியக் கண்காட்சியில் ஒரு அழகான ஜமீந்தாரை ஒவியம் வரைந்து வைத்திருந்தார்கள்.
ஒருவன் சென்று விலை கேட்டான். 5000 ரூபாய் என்றார்கள். இவனிடம் 200 ரூபாய் குறைவாக இருந்தது.
எவ்வளவோ பேரம் பேசியும் விலையைக் குறைக்க மறுத்துவிட்டார்கள். அடுத்தநாள் 200 ரூபாயைச் சேர்த்து முழுத்தொகையை எடுத்துக் கொண்டு போனான்.
ஆனால் அதற்குள் ஒவியம் விற்றுப் போயிருந்தது. இவன் சோகமாக வீட்டுக்கு வந்தான்.
அடுத்த வாரம் ஒரு நண்பன் வீட்டுக்குப் போனான் , அங்கே அந்த ஒவியம் மாட்டியிருந்தது!
"இது யாருடைய படம்?" என்று இவன் கேட்டான்.
"என் தாத்தா...அந்த காலத்துலே பெரிய ஜமீன்தாராய் இருந்தவர்" என்றான் நண்பன்.
" ம்...அன்னைக்கு என் கையில் மட்டும் 200 ரூபாய் கூடுதலா  இருந்திருந்தால் இவர் என் தாத்தாவாகி இருப்பார்" என்றான் இவன்.



ஒரு கல்லூரியில் புரொபஸர், மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்ட இவ்வாறு பேசினார்."மாணவர்களே... இந்த கல்லுரியில் படித்து... பாஸ் செய்து... இந்த கல்லுரியிலேயே ஆசிரியராகச் சேர்ந்திருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்"
ஒரு மாணவன் கேட்டான்."இங்கே படிச்சா வேற எங்கேயும் வேலை கிடைக்காதா சார்?"

_______________________________________________________________________

சர்தார்ஜி டூ வீலரில்  ஒரு லாரியை  பின்தொடர்ந்து கொண்டிருந்தார். திருப்பங்களில் எல்லாம் அவர் மிகவும் அபாயகரமான முறையில் கைகள் இரண்டையும் தூக்கி, ஒரு கையில் இரண்டு விரல்களையும், இன்னொரு கையில் ஒரு விரலையும் காட்டி, ஏதோ சைகை செய்துகொண்டே போனார்.

அவரின்  வினோதமான ஆக்சனைப்  பார்த்த டிராபிக் போலீஸார் அவரை நிறுத்தி, “ஏன்... இப்படி செய்கிறீர்கள்?” என்று கேட்க, லாரியின்  பின்புறம் எழுதப் பட்டிருப்பதை சுட்டிக் காட்டினார் சர்தார்ஜி. அதில், “பெண்ணின் திருமண வயது 21 திரும்புமுன் சைகை செய்யவும்” என்று எழுதியிருந்தது!



 சர்தார்ஜி முதல் நாள் இரவில் தான் கண்ட கனவைப் பற்றி மறுநாள் காலையில் தன் மனைவியிடம் விளக்கிக் கொண்டிருந்தார்.

“அடியே... நானும், நீயும் அமெரிக்காவுக்குப்   போய், நிறைய இடங்களைப் பார்த்து பரவசம் அடைந்த மாதிரி  ஒரு கனவு வந்தது” என்றார் சர்தார்ஜி.

அதைக் கேட்ட அவரது மனைவி, “அப்படியா... எங்கெங்கே போனோம்? என்னென்ன பார்த்தோம்னு சொல்லுங்களேன்...” என்றாள்.

அதற்கு சர்தார்ஜி, “என்னடி தெரியாத  மாதிரி கேட்குறே..? நீயும்தானே என்கூட வந்தே?” என்றார் கோபமாக!
===========================================================

 ஒருவன் பழைய கட்டிடத்தினூடே சென்று கொண்டிருந்தான்..
அப்போது " அப்படியே நில்.. அசையாதே.." என்று ஒரு சத்தம். ஆனால் எங்கிருந்து
வந்தது எனத் தெரியவில்லை.. என்றாலும் அசையாமல் நிற்க, அவன் போகவிருந்த வழியில்
ஒரு சுவர் இடிந்து விழுந்தது. இவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்..

மற்றொரு நாள்.. பேர்ந்தில் ஏறப் போனபோது மீண்டும் அதே குரல்.. " இந்த பேருந்து
வேண்டாம்..". அவனும் அதைத் தவிர்த்து அடுத்த பேருந்தில் செல்லும்போது இவன்
சென்றிருக்கவேண்டிய பேருந்து கவிழ்ந்திருப்பதைப் பார்த்தான்..

மிகவும் ஆச்சரியத்துக்குள்ளானவனாய், யார் என்னை ஒவ்வொருமுறையும்
காப்பாற்றுவது..?" என நினைத்தான்.. அதற்கும் உடனடியாக பதில் வந்தது.." நான் உன்
காவல் தெய்வம்".

இவன் அடுத்தபடியாக கேட்டான்,,

"ஓ காவல் தெய்வமே... என் கல்யாணத்தப்ப எங்கே போய்த் தொலைஞ்சே..?"*

===============================================================

நயாகரா நீர்வீழ்ச்சி அருகே சுற்றுலா பயணிகளிடம்..ஒரு வழிகாட்டி சொல்கிறார்...
"இதுவே உலகின் மிகப்பெரிய அருவி.. இதன் ஓசை அளவிட முடியாதது.. ஒரே நேரத்தில் 20
அதிவேக விமானங்கள் எழுப்பும் ஒலியைவிட அதிகமானது.. அம்மணிகளே.. சற்று அமைதியாக
இருங்கள்.. அருவியின் ஓசையை நன்கு கேட்கலாம்...!!!"


===============================================================

நம் ஆட்கள் ஆங்கிலத்தில் விடுமுறை கடிதம் எழுதி இருப்பதை பாருங்கள். ஆங்கிலத்தை எவ்வளவு  முடியுமோ அவ்வ்வளவு கொலை செய்து எழுதி இருப்பதை படித்து ரசியுங்கள்!!

1) “Since I have to go to my village to sell my land along with my wife , please sanction me one-week leave.”

இவரு நிலத்தோட மனைவியையும் சேர்த்து விக்கனும்னு நினைக்குறாரு!

2) “as I want to shave my son’s head , please leave me for two days..”

பையனுக்கு மொட்டை அடிக்கப் போறதைத்தான் இவர் இப்படி சொல்றார்!

3) “as I am marrying my daughter , please grant a week’s leave..”

மகளுக்கு கல்யாணம் பண்ணப் போறதைதான் இவர் இப்படி விபரீதமாக எழுதி இருக்காரு!

4) “Since I’ve to go to the cremation ground at 10 o-clock and I may not return , please grant me half day casual leave”

மயானத்துக்கு போயிட்டு அலுவலகத்திற்கு இன்றே திரும்ப முடியாதுன்னு சொல்ல வராரு!

5) “I am suffering from fever , please declare one-day holiday.”
இவருக்கு உடம்பு சரி இல்லாம போனதுக்கு எல்லாத்துக்கும் சேர்த்து விடுமுறைன்னு அறிவிக்கனுமாம்!

6) “As I am studying in this school I am suffering from headache. I request you to leave me today”
இந்த ஸ்கூல்ல படிக்கிறதுனாலதான் தலைவலி வந்துடுச்சின்னு சொல்றாரு!

7) “As my headache is paining , please grant me leave for the day.”
தலைவலியே வலித்துக்கொண்டு இருக்கிறதாம்!

 
“My wife is suffering from sickness and as I am her only husband at home I may be granted leave”.
அவரோட வீட்ல, அவர் மனைவிக்கு இவர் ஒரே ஒரு கணவனாம்!

இப்ப சில பொதுவான கடிதங்கள் பார்ப்போம்

1) “I am enclosed herewith…”
அவரயே சேர்த்து அனுப்பறாராம்!

2) “Dear Sir: with reference to the above , please refer to my below…”
மேல உள்ளத ரெபெர் செய்து, என்னோட கீழ உள்ளத ரெபெர் பண்ணுங்கன்னு சொல்றாரு!

3) “I am well here and hope you are also in the same well.”
இவரு இங்க நல்லா இருக்குற மாதிரியே அவரும் அங்க நல்லா இருக்குறாருன்னு சொல்ல வராரு!

4) “This has reference to your advertisement calling for a ‘ Typist and an Accountant – Male or Female’… As I am both(!! )for the past several years and I can handle both with good experience , I am applying for the post.
 
கடந்த பல வருடங்களாக டைப்பிஸ்டாவும், அக்கவுண்டண்டாகவும் இருக்குறேன்னு சொல்றதுக்கு பதிலா, கடந்த பல வருடங்களாக தான் ஆணாகவும், பெண்ணாகவும் இருக்குறேன்னு சொல்றாரு!




ஜோதிட சூட்சுமங்கள் : இந்து லக்கினம் ( ஜோதிட பாடம் : 015 )

| Mar 26, 2011
நமது வாசக அன்பர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம். இன்று நாம் இந்து லக்கினம் பற்றி பார்க்க விருக்கிறோம்.

விக்கிரமாதித்தன் காலத்தில் வாழ்ந்த  அம்பிகையின் அனுக்கிரகம் பூரணமாகப் பெற்ற ,  மகா கவி காளி தாசரின் மூலம் இந்த உலகுக்கு கிடைத்த , பல அரும்பெரும் பொக்கிஷங்களில் ஜோதிடமும் ஒன்று. . அவரால் கிடைக்கப் பெற்றதே இந்த இந்து லக்கினம் பற்றிய குறிப்பு.


அவரது "உத்தர காலமிர்தம் " - நிஜமாகவே ஒரு அமுதம் தான். சமஸ்கிருதத்தில் உத்தர் என்றால் பதில் . KBC நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன் சொல்வாரே ஞாபகம் இருக்கிறதா?   " சஹி உத்தர். " அப்படினா சரியான பதில்.

உத்தர காலமிர்தம் என்றால் - காலா காலத்திற்கும் பொருந்தும் , அமுதம் போன்ற - கேள்வி  பதில்  தொகுப்பு என்ற பொருள் கொள்ளுங்கள்,

சரி, இந்து லக்கினம் பற்றிய தகவல்களுக்கு வருவோம்..
இதைப் பற்றி , நிறைய ஜோதிடர்களுக்கு தெரியாது என்பது என் அனுபவக் கருத்து. அது போன்ற , ஒரு அரிய விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி.

உங்கள் ஜாதகத்தில் - எதுவும் உச்ச கிரகம், ஆட்சி கிரகம் இல்லை என்ற போது , இந்து லக்கினத்தில் நின்ற கிரகத்தின் தசை வருகிறதா என்று பாருங்கள்... நீங்கள் கோடீஸ்வரராவது 100 % உறுதி.
உங்களுக்கு கிடைக்கும் , பண வரவு பற்றி தெரிந்து கொள்ள - இரண்டாம் இடம், குரு பகவான் நிலைமை  தவிர இந்து லக்கினமும் தெரிந்தால் நல்லது.

சரி, இதை எப்படி பார்ப்பது என்று பார்ப்போம்..


உங்கள் ஜாதக கட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள் :

லக்கினம், ராசி --- என்ன என்று பாருங்கள் :


ஒவ்வொரு கிரகத்திற்கும் - இந்து இலக்கின விதிப்படி - கலை எண்கள்  என்று உண்டு. "ஒளி எண்கள் " என்றும் வைத்துக் கொள்ளலாம்.

சூரியனுக்கு       - 30
சந்திரனுக்கு      - 16
செவ்வாய்க்கு   - 6
புதனுக்கு             - 8
சுக்கிரனுக்கு     - 10
 குருவுக்கு          - 12
சனிக்கு                - 1

ராகு, கேதுக்கு - கலைகள் கிடையாது.

உங்கள் லக்கினத்தில் இருந்து - ஒன்பதாம் வீடு என்ன என்று பாருங்கள் . அந்த வீட்டின் அதிபதி யார் ? அவருக்கு எத்தனை கலை என்று பாருங்கள்.

அதேபோலே - உங்கள் ராசிக்கு - ஒன்பதாம் வீட்டின் அதிபர் , அவருக்கு எத்தனை கலை எண் என்று பாருங்கள் .

இரண்டு கலை எண்களையும் கூட்டி , வரும் கூட்டுத்தொகையை - 12 ஆல் வகுக்க வேண்டும்.   வகுத்த பிறகு வரும் எண்ணை, சந்திரன் நின்ற வீட்டில் இருந்து 1 ...2 ...3 ... என்று எண்ணி வாருங்கள். எந்த வீட்டில் மீதி தொகை முடிகிறதோ .. அந்த வீடு .. இந்து லக்கினம் என்று பெயர்...

இந்த இந்து லக்கினத்தில் இருந்து வரும் ஒரு கிரகத்தின் தசை நடக்கிறது என்றால்... உங்களுக்கு , பொன்னும்  பொருளும், புகழும் குவியும்...

ஒரு உதாரணத்திற்கு  - விருச்சிக லக்கினம் , சிம்ம ராசி என்று வைத்துக் கொள்வோம்.

விருச்சிகத்திற்கு  - ஒன்பதாம் வீடு - கடகம் . அதிபதி - சந்திரன் . அவரது கலை எண் : 16 .

சிம்ம ராசிக்கு - ஒன்பதாம் வீடு - மேஷம் . அதிபதி - செவ்வாய். கலை எண் : 6.


இரண்டையும்  கூட்டினால் - வருவது : 16 + 6 = 22 .

12 ஆல் வகுக்க மீதி வருவது  ::: 10 . இதை சந்திரன் நின்ற சிம்ம ராசியில் இருந்து என்ன , 10 ஆம் வீடாக வருவது ரிஷபம். இந்த ஜாதகருக்கு - ரிஷபமே இந்து லக்கினம் ஆகும்.

ரிஷபத்தில் இவருக்கு நிற்கும் கிரகத்தின் தசை நடந்தால் - அவருக்கு , அந்த தசை காலம் - அற்புதமான ஒரு காலமாக இருக்கும். அது அசுப / தீய கிரகமாகவே இருந்தாலும் , இது பொருந்தும்.

அவரது பலன் அளவு வேறுபட வாய்ப்பு இருக்கிறது.  உதாரணத்திற்கு நடை முறையில் - ஆளும் கட்சி கவுன்சிலரும்  அதிகாரம் படைத்தவர்தான், MLA , MP , மினிஸ்டர் இப்படி ஆளுக்கு தகுந்த மாதிரி வேறுபடும்  இல்லையா? அதே மாதிரி ...

இயல்பில் இந்து லக்கினம் - ஜென்ம லக்கினத்திற்கு பகை வீடு , இல்லை பகை கிரகம், நீச கிரகம் அங்கே இருந்தால் - பலன் கொஞ்சம் குறையும். ஆனால் , அபரிமித பலன்கள் கண்டிப்பாக ஏற்படும்.

அதே வேளையில் , இந்த இந்து லக்கினம் - ஜென்ம லக்கினத்திற்கு , மறைவு ஸ்தானமாக இல்லாமல் ( 3 ,6 ,8 ,12 ) - இந்து லக்கினத்தில் - ஒரு சுப கிரகம் இருந்து , அல்லது சுப கிரகங்களின் பார்வை பெற்று தசை நடந்தால் - அவர் உலக புகழ் பெரும் கோடீஸ்வரராவார். 

 இதைத் தவிர சில நுணுக்கமான விதிகளும், விதி விலக்குகளும் உண்டு. அதை எல்லாம் நீங்கள் - தனியே , உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது - ஆராய்ச்சி
செய்து கொள்ளுங்கள்.

பாடம் புரியவில்லை என்றால் , சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.. வழக்கம் போல் - உங்கள் கருத்துக்களும், விமர்சனங்களும் வரவேற்கப் படுகின்றன.

=======================================================


அப்புறமா , இன்னொரு முக்கியமான விஷயம்.  வரவிருக்கும் பிரதோஷம் -
 பற்றிய தினங்கள் பற்றிய குறிப்பு கொடுத்துள்ளேன். ஒவ்வொரு பிரதோசமும் - நீங்கள் சிவ ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது  மனக் கவலைகளை நீக்கி , வாழ்வில் வளம் பெற செய்யும்.

இந்த வருடம் மட்டும், மூன்று பிரதோஷம் ஞாயிற்றுக் கிழமை வரவிருக்கிறது. ஞாயிறு ராகு காலமும், பிரதோசமும் கூடி வரும் வேளை - நீங்கள் சரபேச வழிபாடு செய்தால் , உங்களுக்கு அதன் மூலம் கிடைக்கவிருக்கும் பலன்கள் - கோடானு கோடி. அதை நீங்கள் அனுபவப் பூர்வமாக உணர முடியும்.


இந்த மூன்று தினங்களையும் நான் ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன். உடல் ஆரோக்கியம் இருக்கும் அன்பர்கள் - விரதம் இருந்து , சரபேஸ்வரரை  வேண்டி, ஆத்ம சுத்தியுடன்  வேண்டினால்  , உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும்... 



வாழ்த்துக்கள்..!


திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் அன்பர்களுக்கு - கிரிவலம் செல்லும் நாட்கள் பற்றிய காலண்டர்  கீழே கொடுத்துள்ளேன். உபயோகித்துக் கொள்ளுங்கள் 



மீண்டும் சிந்திப்போம்!

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்....!!

| Mar 25, 2011

என் மனைவி கலங்கடிக்கும் வண்ணம் உடுத்துவாள். அவள் சமைப்பதும் ஏறக்குறைய அப்படித் தான் இருக்கும்!
--- ஹென்னி யங்மேன்

என் மனைவியும் நானும் 20 ஆண்டுகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். பின்னர் சந்தித்தோம்!
--- ராட்னி டேஞ்சர்·பீல்ட்

ஒரு நல்ல மனைவி தன் கணவனை நிச்சயம் மன்னித்து விடுகிறாள், அவள் தவறு செய்யும்போது!
--- மில்டன் பெர்ல்

ஒரு நீதிபதி முன்னிலையில் என் திருமணம் நடந்தது. அச்சமயம் நான் உணரவில்லை ஒரு ஜூரியை அழைத்திருக்க வேண்டும் என்பதை!
--- ஜார்ஜ் பர்ன்ஸ்
Anushka spicy stills
ஒரு மகிழ்ச்சிகரமான திருமண வாழ்வின் ரகசியம், ரகசியமாகவே இன்று வரை இருந்து வருகிறது!

நான் என் மனைவிக்கு ஒரு புதிய காரை பரிசாக வழங்கினேன். சற்று நேரத்தில் என்னை தொலைபேசியில் அழைத்த அவள், கார்பரேட்டரில் தண்ணீர் இருப்பதாகக் கூறினாள். நான் கார் எங்கே என வினவியதற்கு, அவள் அது ஏரியில் இருப்பதாக பதிலுரைத்தாள்!!!

--- ஹென்னி யங்மேன்

மனதில் கோபத்தோடு, உறங்கச் செல்லாதீர்கள்! விழித்திருந்து சண்டை போடுவது எவ்வளவோ மேல்!!!
--- ·பில்லிஸ் டில்லர்

X: என் மனைவி ஒரு தேவதை!
Y: நீ அதிர்ஷ்டக்காரன்! என் மனைவி இன்னும் உயிருடன் இருக்கிறாள்!

ஒருவர் தனது மனைவியின் பிறந்த நாளை எந்த சூழ்நிலையிலும் மறக்காமல் இருக்க ஒரே சிறந்த வழி, அதை ஒரே ஒரு முறை மறந்து விடுவது தான்!!!

திருமணத்தால் ஏற்படும் சிறந்த விஷயங்களில் ஒன்று என நான் கருதுவது, ஒரு கணவனாகவும், தந்தையாகவும் சொல்ல நினைப்பவற்றை நான், என் வீட்டில், வெளிப்படையாகவும், தைரியமாகவும் சொல்ல முடிகிறது. என்ன, யாரும் அவற்றுக்கு துளியும் காது கொடுப்பது கிடையாது!!!

திருமணம் என்பது புத்திசாலித்தனத்தின் மீதான கற்பனையின் வெற்றி!
இரண்டாவது திருமணம் என்பது அனுபவத்தின் மீதான நம்பிக்கையின் (!) வெற்றி!!

அமெரிக்காவில், திருமணமானவர்களில் 80 சதவிகிதம் பேர், தத்தம் மனைவிகளை ஏமாற்றுகின்றனர். மீதமுள்ளோர், ஐரோப்பா சென்று ஏமாற்றுகின்றனர்!!!

திருமணம் ஆகும் வரை உண்மையான மகிழ்ச்சி என்றால் என்னவென்பதை நான் உணரவில்லை! ஆன பின், காலம் கடந்து விட்டது!!!

கடந்த 18 மாதங்களாக நான் என் மனைவியுடன் பேசவில்லை! அவள் பேசும்போது குறுக்கிட எனக்கு விருப்பமில்லை என்பதால்!!!

குடி குடியைக் கெடுக்காது! - (தமிழ் ஜோக்ஸ் )

|

ஒரு கணவர் கூறுகிறார்:

முந்தைய நாள் அதிகம் குடித்ததால், பயங்கரத் தலைவலியுடன் ஒரு நாள் காலை கண் விழித்தேன். படுக்கைக்கு அருகே, 2 ஆஸ்பிரின் மாத்திரைகளும், குளிர்ந்த நீரும் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன்! அத்துடன், சலவை செய்யப்பட்ட எனது மாற்றுத் துணிகள் டேபிளில் இருப்பதையும் கண்டேன்! எனது அறையும் ஒழுங்காக்கப்பட்டு மிக சுத்தமாக இருந்தது! மொத்த வீடுமே படு சுத்தமாக இருந்தது!
Kovaisaralaமாத்திரைகளை விழுங்கும்போது, டேபிளில் ஒரு குறிப்பைப் பார்த்தேன்: "டார்லிங், உங்கள் காலை உணவு அடுப்பின் மேல் சூடாகவே இருக்கும், சாப்பிடுங்கள், நான் ஷாப்பிங் செல்கிறேன், ஐ லவ் யூ"

சமையலறைக்குச் சென்றால், என் மனைவியின் குறிப்பு சொன்னது போலவே, சூடான காலை உணவோடு, பத்திரிகையும் தயாராகவே இருந்தது.

என் மகன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். என் மகனைப் பார்த்து, "நேற்று இரவு என்ன தான் நடந்தது?" என்று வினவினேன்.

என் மகன், "அப்பா, நீங்கள் அதிகாலை 3 மணிக்கு மிக அதிகமான போதையில் வீட்டுக்கு வந்தீர்கள், நாற்காலியை உடைத்தீர்கள், கூடத்திலேயே வாந்தி எடுத்தீர்கள், தடுமாறி கதவின் மீது மோதி நெற்றியில் அடிபட்டுக் கொண்டீர்கள்!" என்றான்.

குழப்பத்தின் உச்சத்துக்குச் சென்ற நான், "பின் எப்படி வீடே அலம்பி விட்டது போல சுத்தமாகவும், என் காலை உணவு தயாராகவும் உள்ளது ? நியாயமாக, என்னுடன் பெரிய சச்சரவுக்கு அல்லவா உன் அம்மா தயாராக இருந்திருக்க வேண்டும் ?" என்றேன்.

என் மகன் அமைதியாக, "அப்பா, நேற்றிரவு அம்மா உங்களை தரதரவென்று படுக்கையறைக்கு அழைத்துச் சென்று, உங்கள் உடைகளையும், காலணிகளையும் களைந்தபோது, நீங்கள், 'விடு என்னை, நான் திருமணமானவன், என் மனைவியை மிகவும் நேசிப்பவன்' என்றீர்கள்" என்றான் !!!!!!!!
=====================================================

இதே மாதிரி உங்க வீட்டுலேயும் , செஞ்சு பார்க்காதீங்க... இதெல்லாம் ரொம்ப ஓல்ட் டெக்கிநிக்காம் லே...
==================================================

குடிகாரர்களின் பொன்மொழிகள்... ( நல்ல போதை லே யோசிச்சு இருப்பாங்க போலே.. அம்புட்டு தெளிவா இருக்கு..!! )

நான் இதுவரை குடித்த பீர்களை எண்ணி சில சமயம் வெட்கம் அடைகிறேன். ஆனால், பீர் அருந்தும் குடுவையை (pitcher) பார்க்கும்போது, இந்த பீரை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்களும், அவர்களுடைய நம்பிக்கைகளும், கனவுகளும் நினைவுக்கு வந்து, நான் இந்த் பீரை அருந்தாவிடில், அவர்கள் வேலையை இழந்து விடுவார்களே என்ற கவலை ஏற்பட்டு விடுகிறது! "அத்தொழிலாளர்களின் கனவுகள் நனவுகளாக இந்த பீரை அருந்துவதை விடுத்து எனது கல்லீரலைப் பற்றி மட்டும் சுயநலமாக சிந்திப்பது தவறவல்லவா?" என்று என்னை சமாதானப்படுத்திக் கொண்டு விடுகிறேன்!
--- Jack Handy


நான் குடிக்காதவர்களை கண்டு வருத்தமடைகிறேன்! அவர்கள் காலையில் விழிக்கும்போது எவ்விதம் உணருகிறார்களோ, அவ்விதமே நாள் முழுதும் உணரவிருப்பதைக் கண்டு!
--- Frank Sinatra


முட்டாள்களுடன் நேரம் செலவிடுவதற்காக ஒரு புத்திசாலி, சில சமயங்களில், அதிகம் குடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறான்!
--- Ernest Hemingway


குடிப்பதினால் உண்டாகும் கெடுதல்களைப் பற்றி படித்தவுடன், நான் படிப்பதையே நிறுத்தி விட்டேன்!
--- Henry Youngman


கடவுள் நம்மை விரும்புகிறார் என்பதற்கும், அவர் நாம் மகிழ்ச்சியாக இருக்க விழைகிறார் என்பதற்கும், மதுவே சிறந்த சாட்சி!
--- Benjamin Franklin

=============================================================

கேள்வி மட்டும் கேக்க தெரிஞ்சா போதாதுப்பா... (தமிழ் ஜோக்ஸ் )

|



வழக்காடு மன்றத்தில் ஒரு வழக்கு நீதிபதி முன் வந்தது. ஒரு மூதாட்டி, சாட்சி கூண்டுக்கு அழைக்கப்பட்டார்.

வழக்கறிஞர், மூதாட்டியை நோக்கி, "திருமதி.மரகதம், என்னை உங்களுக்குத் தெரியும் தானே?"

மூதாட்டி, "உன்னைத் தெரியாமல் என்ன, பிரகாஷ் ? சின்ன வயதிலிருந்தே உன்னைத் தெரியும், ஆனால் சிலாக்கியமாக ஒன்றுமில்லை! நீ பொய் சொல்கிறாய், மனைவியை ஏமாற்றுகிறாய், பிறரை உபயோகப்படுத்திக் கொண்ட பின் அவர்களை தூற்றுகிறாய், உன்னை பெரிய மேதாவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்! ஆகவே, உன்னை எனக்கு மிக நன்றாகவேத் தெரியும்!" என்றார்.

மூதாட்டியின் பதிலில் வழக்கறிஞர் ஆடிப்போய் விட்டார்! எப்படி வழக்கைத் தொடர்வது என்று புரியாத குழப்பத்தில், அவர் எதிர்தரப்பு வக்கீலை சுட்டிக் காட்டி, "திருமதி.மரகதம், இவரை உங்களுக்குத் தெரியுமா?" என்று வினவினார்!

அதற்கு அம்மூதாட்டி,"ஏன், ரமேஷை பல வருடங்களாக எனக்குத் தெரியும்! அவன் ஒரு சோம்பேறி, நல்லது சொன்னால் கேட்க மாட்டான், நிறைய குடிப்பான். அவனுக்கு யாரிடமும் நல்லுறவு கிடையாது. சட்டத்தை பற்றி ஒரு எழவும் தெரியாமல், வக்கீலாகி விட்டவன்! அவனுக்கு மூன்று பெண்களிடம் தொடர்பு இருக்கிறது. அதில் ஒருத்தி உன் மனைவி!?!" என்று கூறியதில் ரமேஷ் என்ற அந்த எதிர்தரப்பு வக்கீல் மூர்ச்சையாகும் நிலைக்கு போய் விட்டார்!

அவசர அவசரமாக, இரண்டு வழக்கறிஞர்களையும் தன்னருகே வருமாறு அழைத்த நீதிபதி, மெல்லிய குரலில், "உங்கள் இருவரில் எந்த ராஸ்கலாவது அந்த கிழவியிடம் 'என்னைத் தெரியுமா' என்று கேட்டால் நிச்சயம் அந்த ஆளை தூக்கு மேடைக்கே அனுப்பி விடுவேன்!" என்றார் 

=========================================
ப்ரியா  என்ற மிக அழகிய பெண் கார்த்திக்  என்ற வாலிபனைக் காதலித்தாள். அவனை மணமுடிக்க விரும்பி தன் தந்தையிடம் அச்செய்தியை  தெரிவித்தாள். அவரோ, "நீ அவனை மணக்க இயலாது. கார்த்திக் உனக்கு அண்ணன் முறை! ஆனால், உன் அம்மாவுக்கு இவ்விஷயம் தெரியாது. அவளிடம் இது குறித்து மூச்சு விடாதே!" என்றார்.

ப்ரியாவும் ஒரு நல்ல மகளாக, கார்த்திக்கை  மறந்து விட்டு, ரகு  என்ற வாலிபனை மணக்க முடிவு செய்து, தந்தையிடம் கூறியபோது, அவர் மறுபடியும், "ஐயோ, நீ ரகுவையும்  மணமுடிக்க இயலாது. அவனும் உனக்குச் சகோதரன் முறை தான். தயவு செய்து இதை உன் அம்மாவிடம் சொல்லி விடாதே!" என்று தடை விதித்தார்.

தன் தாயிடம் சென்று ஆலோசனை கேட்பதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை என்றுணர்ந்த ப்ரியா , அவரிடம் சென்றாள். மகளின் பிரச்சினையை ஏற்கனவே அறிந்திருந்த மரியாவின் தாய், "என் கண்ணே! கார்த்திக் அல்லது ரகு , இவர்களில் யாரை மணந்தால் நீ மகிழ்ச்சி அடைவாயோ, அவனை மணந்து கொள்ளலாம்! ஏனெனில், உன் அப்பா, எனக்குத் தான் கணவர், நான் அறிந்தவரை உன்னுடன் அவருக்கு உறவுமுறை கிடையாது!!!" என்றார்.

==============================================

 

ஜோதிட சூட்சுமங்கள் : பஞ்சாங்கம் (ஜோதிட பாடம் : 014 )

|


பஞ்சாங்கம் சொல்லும் சில பொதுவான குறிப்புக்கள் : 
1. விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது. (விநாயக சதுர்த்தியன்று மட்டும் ஒரு தளம் போடலாம்)
2. பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது. தும்பை, பில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியனவற்றாலும் அர்ச்சிக்கலாம்.
3. விஷ்ணுவை அக்ஷதையால் அர்ச்சிக்கக் கூடாது.
4. அம்பிகைக்கு அருகம்புல் உகந்ததல்ல.
5. லட்சுமிக்குத் தும்பை கூடாது.
6. பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது.
7. விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல, சிவ சம்பந்தமுடைய தெய்வங்களுக்கே பில்வார்ச்சனை செய்யலாம்.
8. துலுக்க சாமந்திப்பூவை கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது.
9. மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாக கிள்ளி அர்ச்சனை செய்யலாகாது.
10. வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை உபயோகிக்கக் கூடாது.
11. அன்றலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும்.
12. ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. பில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடியும் உபயோகிக்கலாம்.
13. தாமரை, நீலோத்பலம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை தடாகத்திலிருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்ற விதி இல்லை.
14. வாசனை இல்லாதது: முடி, புழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது. வாடியது: தகாதவர்களால் தொடப்பட்டது; நுகரப்பட்டது: ஈரத்துணி உடுத்திக் கொண்டு வரப்பட்டது. காய்ந்தது. பழையது. தரையில் விழுந்தது ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாது.
15. சம்பக மொக்குத் தவிர, வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.
16. மலர்களை கிள்ளி பூஜிக்கக் கூடாது. வில்வம். துளசியைத் தளமாகவே அர்ச்சிக்க வேண்டும்.
17. முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா - இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு உரியவை.
18. துளசி, முகிழ் (மகிழம்) செண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, தர்பம், அருகு, நாயுரவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் (இலை) பத்ரங்கள் பூஜைக்கு உகந்தவை.
19. பூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, புலியம்பழம், கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம்.
20. திருவிழாக் காலத்திலும், வீதிவலம் வரும் போதும், பரிவார தேவதைகளின் அலங்காரத்திலும், மற்றைய நாட்களில் உபயோகிக்கத் தகாதென விலக்கப்பட்ட மலர்களை உபயோகிக்கலாம்.
21. அபிஷேகம், ஆடை அணிவிப்பது, சந்தன அலங்காரம், நைவேத்யம் முதலிய முக்கிய வழிபாட்டுக் காலங்களில் கட்டாயமாகத் திரை போட வேண்டும். திரை போட்டிருக்கும் காலத்தில் இறை உருவைக் காணலாகாது.
22. குடுமியுள்ள தேங்காயைச் சமமாக உடைத்து, குடுமியை நீக்கிவிட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.
23. பெருவிரலும் மோதிரவிரலும் சேர்த்துத் திருநீறு அளிக்க வேண்டும். மற்ற விரல்களைச் சேர்க்கக் கூடாது.
24. கோயில்களில், பூஜகர்களிடமிருந்துதான் திருநீறு போன்ற பிரசாதங்களைப் பெற வேண்டும். தானாக எடுத்துக் கொள்ள கூடாது.
25. பூஜையின் துவக்கத்திலும், கணபதி பூஜையின் போதும்; தூப தீபம் முடியும் வரையிலும் பலிபோடும் போதும் கை மணியை அடிக்க வேண்டும். மணியின் சப்தமில்லாவிடில் அச்செயல்கள் பயனைத் தரமாட்டா
26. ஒன்று, மூன்று, ஐந்து, ஒன்பது, பதினொன்று அடுக்குகள் கொண்ட தீபத்துக்கு மஹாதீபம் அல்லது மஹாநீராஜனம் என்ற பெயர்.
பொதுவான கடமைகள்
1. வாரத்துக்கு ஒரு நாளேனும், குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.
2. தியானம் பழக வேண்டும்.
3. பஜனை, சத்சங்கம், கதாகாலட்சேபம், சமயப் பேருரை நிகச்சிகளுக்குச் செல்ல வேண்டும்.
4. துறவிகள், ஞானிகள், மாடாதிபதிகளைத் தரிசனம் செய்ய வேண்டும்.
5. வீட்டில், நாம சங்கீர்த்தனம், சிறப்பு வழிபாடு போன்றவற்றை, அண்டை அயலார்களின் ஒத்துழைப்புடன் நிகழ்த்த வேண்டும்.
6. வீட்டில் ஓம் படம் மாட்டி வைக்கவும்.
7. இந்து தர்ம பிரசார இயக்கங்கள் பத்திரிகைகளுக்கு ஆதரவு அளிக்கவும்.
8. புராண, இதிஹாஸ, தேவார, திவ்யபிரபந்த நூல்கள் கட்டாயமாக ஒவ்வொரு இந்துவின் வீட்டிலும் இருக்க வேண்டும்.
9. இந்து பண்டிகைகளை, வெறும் விழாக்களாகக் கருதாமல் தெய்வங்களோடு ஒட்டுறவு கொள்ளும் தருணங்களாக மதித்துக் கொண்டாட வேண்டும்.
10. அருகிலுள்ள அனாதை இல்லம், முதியோர் இல்லம், கண் பார்வையற்றோர், செவிகேளாதோர் சேவை இல்லங்களுடன் தொடர்பு கொண்டு, இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.
11. பெற்றோர்களைத் தெய்வமாகப் போற்றிப் பணிந்து பணிவிடை செய்தல் வேண்டும்.
12. வீட்டில், தரக்குறைவான சினிமாப் பாடல்கள் ஒலிக்க அனுமதிக்கக் கூடாது. பாலுணர்வு, வன்முறை, பழிக்குப்பழி, பேராசை ஆகிய தீய உணர்வுகளைப் பாராட்டும் புதினங்கள் - புத்தகங்களை வாங்கக் கூடாது.
இந்துக்களின் தினசரிக் கடமைகள்:
1. தினமும் சூரியன் உதிப்பதற்கு முன் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவும்.
2. காலையில் எழுந்தவுடனும், நீராடிய பின்னும், உணவு கொள்ளும் போதும் இஷ்ட தெய்வத்தைச் சிந்திக்கவும்.
3. நெற்றியில் இந்து சமயச் சின்னம் (திருநீறு, குங்குமம், சந்தனம், திருநாமம் - ஏதேனும்) அணியாமல் இருக்கக் கூடாது.
4. இறைவழிபாட்டுக்கு என, தனியே இடம் ஒதுக்கித் தவறாது வழிபாடு செய்யவும். காலை - மாலையில் விளக்கேற்றி நறுமணப் புகை பரவச் செய்யும்.
5. சமய நூல்களை படித்தல் வேண்டும்.
6. படுக்கும்போது தெய்வத்தின் நினைவோடு படுக்க வேண்டும். 

உலகங்களை உற்பத்தி செய்து பரிபாலித்து வரும் பகவானுடைய அரசாங்கம்தான் மிகப்பெரிய அரசு ஆகும். முப்பத்து முக்கோடி தேவர்களும் பித்ருக்களும் ஈசுவரனுடைய அரசாங்கத்தின் அதிகாரிகள் ஆவர். வடக்கில் உள்ள தேவலோகமும் தெற்கில் உள்ள பித்ரு லோகமும் அவர்களுடைய இருப்பிடம் என்று மறைகள் கூறுகின்றன.
இந்த இறைவனது அரசுக்கு நாம் செலுத்தும் வரிகள் - தேவர்கடனும்  பிதுர் கடனும்.
நம்மையெல்லாம் காக்கின்ற அவ்வதிகாரிகளின் ஜீவனத்துக்கு என்ன வழி-வகை செய்துள்ளார், ஸர்வேசுவரன்?
நாம் செய்யும் தேவ யக்ஞங்களும் பித்ரு யக்ஞங்களுமே அவர்களை காப்பாற்றுகின்றன

ஜோதிட சூட்சுமங்கள் : பஞ்சாங்கம் (ஜோதிட பாடம் : 013 )

|
ஏர் உழ
அனுஷம், ஹஸ்தம், சித்திரை, ஸ்வாதி, ரோகிணி, அவிட்டம், மகம், அசுவனி, உத்திரம், உத்திராடம், உத்திராட்டாதி, ரேவதி, மூலம், ஆகிய நக்ஷத்திரங்கள்.
ஞாயிறு, செவ்வாய், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் பூமியில் ஏர் உழுவதற்கு ஆரம்பம் செய்ய உத்தமம்.
திங்கள் மத்யமம்.
ப்ரதமை, அமாவாஸ்யை, வைத்ருதி, வ்யாகாதம், வ்யதீவாதம் ஆகிய யோகங்கள், பத்ர கரணம் ஆகியவற்றைத் தவிர்த்து மற்றைய சுபதினங்களில் ஏர் உழ ஆரம்பித்தல் நலம்.
பயிர் செய்ய
விசாகம், ஹஸ்தம், ம்ருகசீர்ஷம், மகம், புனர்வசு, ரோஹிணி, அசுவனி, திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, மூலம், ரேவதி, சுவாதி, அனுஷம், பூரம் ஆகிய 18 நக்ஷத்திரங்களில் - செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய கிழமைகளில் ரிஷபம், மீனம், மிதுனம்.

குழந்தையைத் தொட்டிலில் விடுதல்
உடல் வளர்ச்சிக்கு ஓய்வு அவசியம். குழந்தைகளுக்கு இறைவனாலேயே ஏற்படுத்தப்பட்ட உடற்பயிற்சிதான் கை-கால்களை அசைத்துக் கொள்ளுவது. அவ்வுடற்பயிற்சிக்குப் பின்னர் ஓய்வு கொள்ள கண் வளர வேண்டும். குழந்தைப் பிறந்த 10, 12, 16 மற்றும் 22-ம் நாளில் தொட்டிலில் இடுவது வழக்கம். இதற்கு ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, த்விதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி சுபகோள்கள் பார்த்த லக்னமும் எட்டாமிடம் சுத்தியும் ஏற்றது.
அரைஞாண் அணிவிப்பது
வெள்ளி அல்லது பொன் அரை ஞாண் - புண்ணியாஹ வசனம் செய்யும் நாளன்று அல்லது ஐந்தாவது மாதத்தில் கட்டலாம். அவ்வரைஞாணுடன் கருகமணி, செப்புக்காசு, (தொப்புள் கொடி விழுந்ததும் அதனை தாயத்து போன்றும் ஒரு சிலர் அணிவிக்கின்றனர்.) கட்டினால் தோஷங்கள் நீங்கும் எனப் பெரியவர்கள் கூறுவார்கள். சுபதிதிகள், சுபநட்சத்திரங்கள், அஷ்டம் சுத்தியுள்ள சுபலக்னத்தில் அரைஞாண் அணிவித்தால் குழந்தை ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடன் இருக்கும். எருக்கங்செடியின் நாரினால் அரைஞாண் கட்டினால் குழந்தை அடிக்கடிப் பாலைக்கக்குவது நிற்கும் என பாட்டி வைத்தியமும் கூறுகிறது.
அன்னப்ராஸனம் - அமுதூட்டல்
தாயமுதால் வளரும் குழந்தைக்கு சிறந்த உணவுப் பழக்கத்தை ஏற்படுத்தச் சிறந்த நாளைத் தேர்ந்தெடுப்பது மரபு. இது 6, 8, 9 அல்லது 12-வது மாதத்தில் அஸ்வினி, மிருகசீர்ஷம், புனர்வசு, பூசம், உத்திராடம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் த்விதியை, திருதியை பஞ்சமி, ஸப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகளில் திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகர, கும்பமாகிய லக்னங்களில் செய்வது உத்தமம். இதற்கும் எட்டாமிடம் சுத்தமாக இருக்க வேண்டும். லக்னம் பலம் வாய்ந்ததாக இருந்தல் அவசியம்.
கேச கண்டமென்னும் முடியிறக்குதல்:
நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ, இச்சடங்கு மேற்கொள்ளப்படுகிறது. 3 அல்லது 5-ம் ஆண்டு செய்வது வழக்கம். வளர்பிறை மிகவும் ஏற்றது. த்விதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி ஆகிய திதிகள் அஸ்வினி, ரோகிணி, மிருகசீர்ஷம், புனர்வசு, பூசம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, உத்திராடம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள். திங்கள், புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகள். ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், மீனம் ஆகிய லக்னங்கள் ஏற்றது. எட்டாமிடம் சுத்தமாக இருத்தல் அவசியம். எழில் சூரியன், செவ்வாய் இருக்கக் கூடாது.
கர்ண பூஷணம் - காது குத்துதல்:
ஆக்யூபங்க்சர் என்னும் முறை இன்று மிகவும் பிரபலமாகியுள்ளது. உடல் நலத்துக்கும், வளர்ச்சிக்கும், நோய் நிவாரணத்துக்கும் இம்முறை சிறந்ததாகக் கருதப்படுகிறது. எல்லாவற்றிலும் மிகவும் உயர்ந்த நிலையை எட்டிய நமது முன்னோர்கள் இதனைக் கருத்தில் கொண்டே காது குத்தும் நிகழ்ச்சியைக் குழந்தைப் பருவத்திலேயே செய்வித்தனர். 6, 7 அல்லது 8-வது மாதத்தில் பகலில் செய்ய வேண்டும். இரண்டு திதிகள், இரண்டு நட்சத்திரங்கள் கொண்ட நாட்களைத் தவிர்க்க வேண்டும். மிருகசீர்ஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, உத்திராடம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் த்விதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி ஆகிய திதிகள். ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய லக்னங்கள் ஏற்றது. எட்டாமிடம் சுத்தமாக இருந்தல் அவசியம்.
அக்ஷராப்யாஸம் - கல்வி புகட்டுதல்:
கல்வியின் சிறப்பைக் கூறுமிடத்து எண்ணும் எழுத்தும் கன்ணெனத் தகும் என்பார். ஐந்தாவது வருடத்தில் ஐந்தாவது மாதத்தில் ஐந்தாவது நாளில் செய்வது உத்தமம் எனப் பெரியோர்கள் கூறுவார்கள். அஸ்வினி, ரோகினி, திருவாதிரை-புனர்வசு, பூசம் உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகியனவும். துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, மிதுனம், கடகம், மகரம், மீனம் ஆகியனவும் ஏற்றது. நான்கு, எட்டு ஆகிய இடங்களில் கிரகங்கள் இருக்கக் கூடாது. லக்னத்தையும் நான்காமிடத்தையும் சுபகோள்கள் பார்த்தல் உத்தமம்.
நிஸ்சயதார்த்தம் அல்லது நிச்சயதாம்பூலம்:
த்விதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி. ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி, அஸ்வினி, ரோகினி, மிருகசீர்ஷம், புனர்வசு, பூசம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி, ரேவதி ஆகியன ஏற்றாது. கேந்திரகோணங்களில் பாவக்கோள்கள் இல்லாத லக்னமாக அமைய வேண்டும்.
திருமாங்கல்யம் செய்ய:
அஸ்வினி, ரோகினி, மிருகசீர்ஷம், புனர்வசு, பூசம், மகம், உத்திராடம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி, த்விதியை, திருதியை. பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி மற்றும் திரயோதசி, ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனம், இரண்டாமிடம் சுத்தமான லக்னமும் ஏற்றது.
கர்ப்பமான பெண்ணை தாய் வீட்டுக்கு அழைத்து வரல்:
த்விதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, திரயோதசி, திங்கள், புதன், வியாழன், சனிக்கிழமைகளிலும் பொதுவான சுப நட்சத்திரங்களில் பெண்ணுக்கு தாராபலமுள்ள நாளில், பிரயாணத்துக்கு உகந்த நாட்களில் வாரசூலை, சுக்கிரன், எதிரில் இல்லாத நாளில் அழைத்து வரல் வேண்டும். ஏழாவது அல்லது எட்டாவது மாதத்தில் அழைத்து வர வேண்டும்.
குழந்தை பெற்ற பின்னர் மாமியார் வீட்டுக்கு அனுப்புதல்:
குழந்தைக்கு 3, 5, 7, 9, அல்லது 11-வது மாதத்தில் அனுப்பலாம். மூன்றாவது அல்லது ஐந்தாவது மாதம் அனுப்புதல் சிறந்தது. துவிதியை, திருதியை, சதுர்த்தி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி, திதிகள், அஸ்வினி, ரோகினி, மிருகசீர்ஷம், புனர்வசு, பூசம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி, குழந்தை-தாய் இருவருக்கும் தாராபலமுள்ள நாட்கள் ஏற்றன. ஆனந்தாதி யோகப்படி நல்ல நாள் ஆகியவற்றை பார்க்க வேண்டும்.
கிணறு வெட்டும் திசையின் பலன்:
வீடுக்கு கிழக்கு - விபத்து, தென்கிழக்கு - புத்திர நாசம், தெற்கு - மனைவிக்குப் பீடை, கெண்டம். தென்மேற்கு - எஜமானனுக்கு ஆபத்து, மேற்கு - உடல் ஆரோக்கியம், வடமேற்கு - ஆயுத பயம், வடக்கு - செல்வம் சேரும். வடகிழக்கு - சுபீட்சமான வாழ்வு. நல்ல நாட்கள்

ஜோதிட சூட்சுமங்கள் : பஞ்சாங்கம் (ஜோதிட பாடம் : 012 )

|
அன்பு வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்னைக்கு நாம பார்க்க விருக்கிறது - பஞ்சாங்கங்கள் பற்றி மேலும் சில விஷயங்களை.

 நம்மோட - ஐந்தாவது பாடத்திலே சில அடிப்படை தகவல்கள் ஏற்கனவே கொடுத்து இருந்தோம். ஆனால், மேலும் சில தகவல்கள் ஒரு ஜோதிடரா நீங்க தெரிஞ்சு வைச்சுக்கிறது நல்லது.

===========================================================
பழைய ஐந்தாம் பாடம் படிக்காதவங்க  / திரும்ப ஒரு தடவை பார்க்க நினைக்கிறவங்க -  டக்குனு , ஒரு பார்வை பார்த்துட்டு  வந்திடுங்க..
=============================================================

 ஒரு ஜோதிடரா உங்க கிட்டே மக்கள் என்ன எதிர் பார்ப்பாங்க....  ஒன்னு , ஜாதகம் பார்த்து , பலன் தெரிஞ்சுக்கிடுறது.. அப்புறம்.. எதாவது நல்லது , கேட்டது நடக்கிறப்போ - நாள், நேரம் பார்த்து , குறிச்சுக் கொடுக்க சொல்லுவாங்க இல்லையா?  அதுக்கு தான் , நீங்க பஞ்சாங்கம் தெளிவா பார்க்க தெரியணும்.. சரி, பஞ்சாங்கப்படி , நீங்க இன்னும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் பற்றி .. கொஞ்சம் பார்க்கலாம். பஞ்சாங்கம் சொல்றது தவிர, நம்ம கருத்துக்களும் இடையிலே போடுறதாலே , இந்த பதிவு - ரொம்பவே நீண்டு  விட்டதாலே ... இரண்டு  / மூன்று பதிவா போடுறேன்... ஓகே வா..?
============================================
*எந்த மாசத்தில் பூர்ணிமை, அமாவாஸ்யை இல்லையோ அந்த மாஸத்துக்கு விஷமாசம் என்று பெயர்.
* எந்த மாசத்தில் இரண்டு பூர்ணிமையோ, இரண்டு அமாவாஸ்யையோ வருகிறதோ அதற்கு மலமாசம் என்று பெயர்.
* விஷ மாசத்திலும், மல மாசத்திலும் சுபகார்யங்களை விலக்க வேண்டும்.
* ஆனால் சித்திரை, வைகாசி, மாதத்தில் இவை நிகழுமானால் அந்த இரு மாதங்களுக்கும் இந்த தோஷம் கிடையாது.
===========================================================
அயனங்கள்
ஒரு வருடம் இரண்டு அயனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சூரியன்  மகர ராசியில் பிரவேசிக்கும்போது உத்தராயனம் தொடங்குகிறது. கடக ராசியில் பிரவேசிக்கும் போது தக்ஷிணாயனம் தொடங்குகிறது.
 
தைமாதம் தொடங்கி ஆனி முடிய  6 மாதங்கள் உத்தராயன காலமாகும். இக்காலகட்டத்தில் எல்லா நல்ல காரியங்களும் செய்யலாம். கும்பாபிஷேகம், க்ரஹப்பிரவேசம் போன்றவை இக்காலகட்டத்தில் நிகழ்வது உத்தமம்.
ஆடி மாதம் தொடங்கி மார்கழி ஈறாக 6 மாதங்கள் தக்ஷிணாயனம் ஆகும். இக்காலகட்டத்தில் நல்ல காரியங்களைத் தொடங்குவதை தவிர்க்க முடியுமானால் தவிர்ப்பது நல்லது.
 =========================================================
ருதுக்கள் - 6
ஒரு வருடம் 6 ருதுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
சித்திரை, வைகாசி - வஸந்த ருது
ஆனி, ஆடி, - க்ரீஷ்ம ருது
ஆவணி, புரட்டாசி - வர்ஷ ருது
ஐப்பசி, கார்த்திகை - சரத் ருது
மார்கழி, தை - ஹேமந்த ருது
மாசி, பங்குனி - சிசிர ருது

கிழமைகள் - 7
ஒரு நாள் என்பது 60 நாழிகைகள் கொண்டது. ஸூர்ய உதயத்திலிருந்து மறுநாள் ஸூர்யோதயம் வரை ஒரு நாளாகும்.
சாயா க்ரஹங்கள் இரண்டு நீங்கலாக மீதமுள்ள ஏழு க்ரஹங்களுக்குரியதாக ஏழு நாட்கள் கொண்ட கால அளவு ஒரு வாரம் என்று தமிழில் அறியப்படுகிறது.
ஒரு நாளைக்குரிய பெயராக வாஸரம் என்ற சொல் ஸங்கல்பத்தில் பயன்படுத்தப்படுகிறது.
நடைமுறைப் பெயர் ஸங்கல்பத்தில் கூற வேண்டியது

ஞாயிறு - பானு வாஸரம்
திங்கள் - இந்து வாஸரம்
செவ்வாய் - பௌம வாஸரம்
புதன் - ஸௌம்ய வாஸரம்
வியாழன் - குரு வாஸரம்
வெள்ளி - ப்ருகு வாஸரம்
சனி - ஸ்திர வாஸரம்
=============================================================

ருதுக்கள் , நாட்கள் எல்லாம் ஒரு பெரிய விஷயமானு கேட்கலாம் . நீங்க ஒரு ஜாதகம் பார்க்கிறீங்க.. அதுலே ஜனனம் - ப்ருகு வாஸரம் , னு போட்டிருந்தா , முழிக்க கூடாது இல்லையா?
=======================================================
இராகு காலம் :

கிழமை = இராகு காலம்
ஞாயிறு = 04.30 - 06.00
திங்கள் = 7.30 - 9.00
செவ்வாய் = 03.00 - 04.30
புதன் = 12.00 - 01.30
வியாழன் = 01.30 - 03.00
வெள்ளி = 10.30 - 12.00
சனி = 09.00 - 10.30
=======================
"சார், ஒவ்வொரு நாளும் காலண்டரைப் பார்த்துதான் - ராகு காலம் தெரிஞ்சுக்கனுமா? ஈசியா எப்படி ஞாபகம் வைச்சுக்கிறது?"
உங்களுக்கு சொல்லலைனா எப்படி?
கீழே சொல்லி இருக்கிற மாதிரி, ஒரு வரிப் பாட்டு ஞாபகத்திலே வைச்சுக்கோங்க. ..... ஒவ்வொரு வார்த்தையிலும் வரும் முதல் எழுத்து ---- அந்த கிழமை -- வரிசைலே ஒரு ஆர்டரா வரும்.  ......  

திருவிழா ந்தையில் வெளியில் புகுந்து விளையாட செல்வது ஞாயமா?

புரிஞ்சுக்க முடியுதா ? 
=====================================================
 நம்ம வாசகர்கள் கிட்டே திரும்ப , திரும்ப சொல்ற விஷயம் இதுதான். உங்களுக்கு வர்ற கஷ்டங்கள் மறைஞ்சு , நீங்க ஒரு நல்ல நிலைக்கு வரணும்னு விரும்பினால் - ராகு கால நேரத்தில் , அம்மன் வழிபாடு செய்யுங்க. லலிதா சகஸ்ரநாமம், அல்லது மகிஷாசுர மர்த்தனி ஸ்தோத்ரம் சொல்லுங்க. சொந்த தொழில், வியாபாரம் பண்றவங்க தினம் கூட பண்ணலாம். முழுசா  ஒண்ணரை மணி நேரம் முடியாட்டாக் கூட , கடைசி அரை மணி நேரம் பண்ணுங்க.. உங்க வீடு, அலுவலகம்  - இப்படி உங்களுக்கு தோதான இடங்களிலே பண்ணலாம் .  அம்மன் படத்திற்கு மாலை போட்டு, தீபம் ஏற்றி பண்ணுங்க..
 நீங்க இருக்கும் இடத்து கிட்டே , இருக்கிற அம்மன் ஆலயம் நீங்க போய் வழிபட முடிஞ்சா  இன்னும் நல்லது.. அந்த ஆலயம் ஒரு 200 / 300 வருடம் ௦௦ பழமையான ஆலயமா  இருந்தால் ரொம்ப விசேஷம்.. 


சொந்த தொழில் இல்லாதவங்க தினம் கோவிலுக்கு போக முடியாது . நீங்க , ஞாயித்துக் கிழமை சாயங்காலம் , மிஸ் பண்ணாமல் செய்யுங்க. மற்ற நாட்களில் உங்க வீட்டுலே இருக்கிறவங்க , போக முடிஞ்சா போய்ட்டு வரட்டும்.
 உங்களுக்கு ஒரு கஷ்டம் வந்தா  முதல் ஆளா , துடிக்கிறது உங்க அம்மா தான்.. அப்பா , நீங்க ரொம்ப , ரொம்ப கஷ்டப்பட்ட பிறகு தான் , நீங்க கெஞ்சுனா தான், உங்களுக்கு உதவி செய்வார். இல்லையா? அம்மா, நீங்க கேட்கிறது, அவங்களாலே கொடுக்க முடிஞ்சா , உடனே கொடுத்திடுவாங்க இல்ல? உங்க விதிப்பயன்படி, உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல விஷயங்கள் உடனடியா கிடைக்க , ராகு கால அம்மன் வழிபாடு - ரொம்ப சுலபமான முறை.
 நான் கோவிலுக்கு போய் சாமி கும்பிடுறேன்லேன்னு, பெத்த தாயை  நீங்க கவனிக்காம போட்டால்... அந்த லோக மாதா கூட மனசு கல்லாகிடுவா.. அதையும் ஞாபகம் வைச்சுக்கோங்க பாஸூ..!!
 ===================================================
எமகண்டம்
இதேபோல எமகண்ட காலம் எப்போது என்பதனை அறிய ஒரு வரிப்பாட்டு உண்டு.
விழாவுக்கு புதிதாக சென்று திரும்பும் ஞாபகம் சற்றும் வெறுக்காதே
கிழமை : எமகண்டம் :: பகல் பொழுதில்
ஞாயிறு : 12.00 - 01.30
திங்கள் : 10.30 - 12.00
செவ்வாய் : 09.00 - 10.30
புதன் : 07.30 - 09.00
வியாழன் : 06.00 - 07.30
வெள்ளி : 03.00 - 04.30
சனி : 01.30 - 03.00
கிழமை : எமகண்டம் :: இரவுப் பொழுதில்
ஞாயிறு : 06.00 - 07.30
திங்கள் : 03.00 - 04.30
செவ்வாய் : 1.30 - 03.00
புதன் : 12.00 - 01.30
வியாழன் : 10.30 - 12.00
வெள்ளி : 09.00 - 10.30
சனி : 07.30 - 09.00
இராகு காலம், எமகண்டம் ஆகிய நேரங்களில் சுபச் செயல்களை நீக்க வேண்டும். குளிகை காலத்தில் அசுபச் செயல்களை நீக்க வேண்டும்.
குளிகை
கிழமை = குளிகை நேரம் :: பகல் பொழுதில்
ஞாயிறு = 03.00 - 04.30
திங்கள் = 01.30 - 03.00
செவ்வாய் = 12.00 - 01.30
புதன் = 10.30 - 12.00
வியாழன் = 09.00 - 10.30
வெள்ளி = 07.30 - 09.00
சனி = 06.00 - 07.30
கிழமை = குளிகை நேரம் :: இரவுப் பொழுதில்
ஞாயிறு = 09.00 - 10.30
திங்கள் = 07.30 - 09.00
செவ்வாய் = 06.00 - 07.30
புதன் = 03.00 - 04.30
வியாழன் = 01.30 - 03.00
வெள்ளி = 12.00 - 01.30
சனி = 10.30 - 12.00
(தொடரும் ) 

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com