Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

நமது (Living Extra .com ) வாசகர்களுக்கு மட்டும்.... !!

| Feb 21, 2011

நமது (Living Extra .com )  வாசகர்களுக்கு மட்டும்.... !!

நாம் ஜோதிட பாடங்கள் ஆரம்பித்து ஏழு பாடங்கள் , பதிப்பித்து விட்டோம்... ஏழாவது பாடத்தின் முடிவில்... நான் நமது வாசர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்து இருந்தேன்... யார் , யார் எல்லாம் ஜோதிட பாடங்களை , ஆரம்பத்தில் இருந்து , முறையாக படித்து வருகிறார்களோ, அவர்கள் தமது கருத்துக்களை - எனது E -மெயில்  முகவரியிலோ, அல்லது (Comments ) பின்னூட்டத்திலோ , பதிவு செய்யுங்கள் என்று .

 ஒரு சிலரை தவிர யாரும் அதைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை . ஒன்று நமது பதிவை , சரியாக படிக்காமல் இருந்து இருக்கலாம். .. இல்லை மேம் போக்காக படித்து இருக்கலாம்... கவனிக்காமலே விட்டு இருந்திருக்கலாம்.  
(ஒருவேளை மேலும் தொடர வேண்டாம் என்பதே , பெரும்பாலோர் விருப்பமோ? )

ஜோதிட பாடம் என்பது , ஏனோ தானோ என்று - ஒரு ஆர்வம் இல்லாமல் படித்தால் , வசப் படாது...  மிக சரியாக புரிந்து கொள்ள வேண்டும். சந்தேகங்களை , உடனுக்குடன் தெளிவு படுத்த வேண்டும்.... எனது தரப்பிலும், உங்கள் தரப்பிலும் இருந்து... 2 way communication - இருத்தல் வேண்டும்.. நான் மட்டும் .... சொல்லிக் கொண்டே போவதால் பயன் இல்லை... 

கிட்டத்தட்ட ஒரு குருகுலம் போல  - நமது ஆசிரியர் குழுவுக்கும், வாசகர்கள் வட்டத்திற்கும் - ஒரு புரிந்து உணர்தல் வேண்டும்...  நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு - E -மெயில் , அனுப்புகிறீர்களோ - அவ்வளவுக்கு , உங்களை பற்றி , நாங்களும் அறிந்து கொள்ள முடியும்... 

பத்திரிக்கைகளில், நாம் எத்தனையோ நல்ல விஷயங்களை , கதைகளைப் படித்தாலும் - கடிதம் போடுவது என்பதே இல்லை ... கூச்சம், சோம்பேறித்தனம். .. ஆனால் இணையத்தில்  உங்களுக்கு - கமெண்ட்ஸ் போடுவது - ஒரு நிமிட வேலை... மின்னஞ்சல் அனுப்ப - 5 நிமிடங்கள் ஆகலாம்.

ஒரு பதிப்பாளராக, உங்கள் கருத்துக்கள் மட்டுமே - எங்களுக்கு வினையூக்கி... நாங்கள் இன்னும் மெருகேற , அது மட்டுமே நாங்கள் உங்களிடம் இருந்து எதிர் பார்ப்பது... 

நீங்கள் தமிழிலோ, ஆங்கிலத்திலோ - தாராளமாக  எழுதி அனுப்பலாம்.. 

நீங்கள் எத்தனை பேர், ஜோதிட பாடங்களை - ரெகுலராக படிக்கிறீர்கள் , என்ற எண்ணிக்கை தெரிந்தது கொள்வதற்காக மட்டுமே.  .... நம் இருவருக்கும் உள்ள தகவல் மரிமாற்றம் , ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும்.. 

ஜோதிட ஆலோசனை கேட்டு வரும் கடிதங்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, எனது அலை பேசி எண்ணை தருவது , எனது privacy க்கு  நல்ல தல்ல என்றே தோன்றுகிறது.ஒரு சில அன்பர்கள் , எடுத்த எடுப்பிலேயே - cell no . கேட்கிறார்கள்.. தயவு செய்து , தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்..   ஆதலால் " மின்னஞ்சலிலேயே " நமது தகவல் பரிமாற்றம் தொடரலாம் என்று எண்ணுகிறேன்... 


நம்மிடம்,  E - மெயிலில் ரெகுலர் தொடர்பில் இருக்கும் நபர்களுக்கு, ஒய்வு வேளைகளில் மட்டும் தொடர்பு கொள்ளும் , உரிமையும் , பாசமும், இங்கிதமும்  தெரிந்த நண்பர்களுக்கு  - ஏற்கனவே எனது மொபைல் எண்ணைக் கொடுத்துள்ளேன்..   உங்கள் பாசத்திற்கும் , அன்பிற்கும் என்றென்றும் நன்றி...

நமது இணைய தளம் , எத்தனையோ உள்ளங்களுக்கு - ஒரு ஒளியாக, வழி காட்டியாக , அரு மருந்தாக , ஆறுதலும், நம்பிக்கையும் தரும் , உற்ற கருவியாக , உங்கள் ஆன்மீகத் தேடலை அதிகரிக்கும் உங்கள் தோழனாக , என்றென்றும் எங்கள் பணி  தொடரும். உங்கள் அனைவருக்கும், அந்த பரம் பொருளின் ஆசிகள் என்றும் கிடைக்கட்டும்!!

23 comments:

எடப்பாடி சிவம் said...

ஆசிரியர் ஐயா,

நீங்கள் தொடர்ந்து சோதிட பாடங்களை நடத்தி வாருங்கள்,, ஆர்வமற்றவர்களை
பற்றி நமக்கென்ன ? விருப்பமுள்ளவர்களாவது பயன் அடைவார்களே ? எனவே தொடர்ந்து நடத்துங்கள்


ஐயா,

சோதிடத்தில் ஜாதகரின் தந்தையின் - தாத்தா பாட்டியின் நிலை மற்றும் ஆயுள் போன்ற விபரமும்,

ஜாதகரின் தாயாரின் தாத்தா பாட்டியின் நிலை. ஆயுள் போன்ற விபரமும்,

எதை ( எந்த கிரகத்தை ) அடிப்படையாக வைத்து சொல்வது ?
இவற்றுக்கு கோட்சார பலன்கள் எந்த கிரகத்தின் அடிப்படையில் சொல்வது ?

THEIVAM said...

correct boss ninga sollurathu 100% correct, mailayee sollunga athuthan sariyaa irukkum. appuram enga vitula visesamuna maila invitation anupinalum vanthuranum OKVA?

ஆதிசைவர் said...

வணக்கம்,
தொடர்ந்து ஜோதிட பாடம் நடத்தவும்.மிக எளிமையாக உள்ளது.

ஒரு சந்தேகம்,தவறாக நினைக்கவேண்டாம்.இந்த பாடங்கள் நீங்களே பதிவதா?அல்லது வேறு தளத்திலிருந்து காப்பி செய்யப்பட்டதா?ஏனெனில் இங்கு உள்ள பல கட்டுரைகள் வேறு தளத்திலிருந்து எடுக்கப்பட்டவையே,ஏன் என்னுடைய தளத்திலிருந்தே குருபெயர்ச்சி வழிபாடுகளை தட்சிணாமூர்த்திக்கு செய்யலாமா?என்ற பதிவு இங்கு காப்பி செய்யப்பட்டுள்ளது.அதனால் கேட்டேன்

Rishi said...

அன்புள்ள நண்பரே,உங்கள் கேள்விக்கு நன்றி.


இதிலுள்ள கட்டுரைகளில் நிறைய, நமது நண்பர்கள் எமக்கு மின்னஞ்சலில் அனுப்பியவை. அதன் மூலம் தெரிந்தால், அதன் லிங்க் கும், சேர்த்து வெளியிட்டு இருந்திருப்போம். சுவாரஸ்யமான தகவல்கள் என்பதால், அதை வெளியிட்டு இருக்கிறோம்..


ஜோதிட சம்பந்தமான கட்டுரைகள் அனைத்தும், நமது சொந்த சரக்கு தான்.

சந்தேகம் வேண்டாம். ஜோதிட பாடங்கள் தொடரும் ... நிச்சயமாக ஒரு நானூறு , ஐநூறு பதிவுகள் தாண்டும் என்ற நம்பிக்கை உள்ளது..


இந்த கேள்வியை அனுப்பியதற்கு நன்றி...

Rams said...

வணக்கம் அய்யா,
உங்கள் ஜோதிட பாடங்கள் மிகவும் எளிமையாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது. நேற்றில் இருந்து தான் நான் இந்த இணையதளத்தை கண்டு ஜோதிட பாடங்களை படிக்க ஆரம்பித்தேன். பதினோரு பாடங்கள் வரை படித்து இருக்கிறேன்.
சாப்ட்வேர் எஞ்சிநீராக இருந்தாலும் எனக்கு உங்கள் பாடங்களை படிக்க ஆரம்பித்த பிறகு மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் ஏற்பட்டிருகிறது. எனவே தங்களின் இனிவரும் பாடங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

மிக்க நன்றி,
ராமசாமி.

god is great said...

ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் படம் வேண்டும் சார் gv.raj1969@gmail.com

god is great said...

ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் படம் வேண்டும் சார் . . .

Balasubramanian Pulicat said...

I started seeing your blog some weeks back and have been accessing it almost daily. Dont mistake that i am not posting any comment. There may be many like me. With best regards,

balamurugan said...

வணக்கம்,
உங்களின் ோதிட பாடங்களைபடங்களை படித்தபின் தான் விருப்பமும்,இன்னும் சோதிடத்தில் நிறைய விபரமும் பெற விரும்புகிறேன்.

Anonymous said...

respected sir,

your lessons are very nice.

subramanian said...

very good site ,i am learning astology.

Anonymous said...

வணக்கம்,
ஐயா,
தொடர்ந்து ஜோதிட பாடம் நடத்தவும்.எளிமையாகவும் புரிந்துக்கொள்ளும்படியும் உள்ளது.

ஒரு சந்தேகம், ராசி சக்கரம் , நவாம்சம் .இந்த இரண்டுக்கும் உள்ள தொடர்பு,வித்தியாசம் என்ன? எதை பார்த்து பலன் தெரிந்துக்கொள்ளஅல்லது சொல்ல வேண்டும்..

kabali said...

ஆசிரியர் ஐயா,
ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் படம் வேண்டும் saravanan271@gmail.com

Anonymous said...

வக்கம் ஐயா! நான் இலங்கை கிளிநொச்சியில் இருந்து எழுதுகின்றேன், இன்று தான் தங்களது தளத்திற்கு வந்துள்ளேன், நானும் 
ஜோதிடம் கற்க முடியும் என்ற நம்பிக்கையுடன் தொடர விரும்புகிறேன்,

siva arul said...

siva arul : the service you provide was simply superb & great, the language used was also simple & easily it can be captured by us.so pl continue your service to yoor followers to make us to be an astrolger

Thamilselvan said...

Respected sir, pls continue your service
Ian new student to this blog. Kindly send all previous chapters. to me. Thanks.

Raja sekar said...

Respected sir,
This is Rajasekar from chennai, past 3 years i am reading all your posts in this blog. Really its very useful for us, but nowdays you are not giving any post it makes us feel sad, so i kindly request you to enhance our spiritual knowledge by your post. Also a request, will give your mail address and phone number. pls pls pls. And this is my mail id- rajasekar.chief@gmail.com

Raja sekar said...

வணக்கம் அய்யா,
உங்கள் ஜோதிட பாடங்கள் மிகவும் எளிமையாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது.
I have lots of problem in my life, so i need to contact you sir, so could you pls give your mail address or phone number. please please please. And my phone number is 994018098

KUMARAN BALURAMDOSS said...

Sir,

EXCELLANT SERVICE TO SOCIETY FOR THEIR SUCCESS.

kumaran-bangalore

Kousalya said...

I am regularly studying your blog. Very interesting and useful. Not only studying I introduced so many friends to your blog. I am fan of you sir, I subscribed newletter on 2012. I saw all the articles. but not posting comments. Hereafter i try to post the comments. If Any errors in my letter please forgive me.
Kousalya

parameswari said...

Sir, Vanakkam. I am reading jothidam lessons regularly. It is very good and interesting. I am reading your blog since three months only. I like reading jothidam lessons. So far I have read seven lessons. Eighth lessons is not appearing in blogs.
kindly publish. I have subscribed. I WILL post comments.
Thanks a lot for publishing the lessons.

Ganesh king said...

I am Ganesh, its very useful to me and u r great sir... thank u ... thank u so muchmohinroh mohin said...

SIR...NAAN malaysia le iruntu yeluthugiren ...jotidatil ithuvarai yenakku oru GURU kidaiyathu....unggal websit paartha piragu neengaltan naan thedum Yenathu Jotida Guru....yennai unggal seedaraga yedru kollungal ...
mohinsheela@gmail.com

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com