Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

மாவீரன் அலெக்சாண்டரின் இறுதி நிமிடங்களும், கடைசி மூன்று ஆசைகளும்

| Feb 16, 2011
உலகத்தையே ஜெயிக்க வேண்டும் என்று கிளம்பியவன் ... மாவீரன் அலெக்சாண்டர்.
கிரேக்க தத்துவ மேதை அரிஸ்டாட்டில் அவனுக்கு குருவாக இருந்தார்.. தான் கலந்து கொண்ட எந்த போரிலும் தோல்வியே அடையாத வீரன்.

உலகையே தான் காலடியில் கிடத்திய மாவீரனின் இறுதி கட்டத்தில் ,  அவனது கடைசி சில விருப்பங்கள் என்ன என்பதை சமீபத்தில் ஒரு கட்டுரையில் படிக்க நேர்ந்ததை , உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நமது வாழ்வில் ஒவ்வொருவருக்கும் தேவையான பாடங்கள் அவை.
=====================

பல போர்க்களங்களில் ஈடுபட்டு , உடல் தளர்ந்து  விரக்தியில் சொந்த நாடு திரும்பிக் கொண்டு இருந்தான். மரணப் படுக்கை. இனி உயிர் பிழைக்க முடியாது என்று தெரிந்து விட்டது. சுற்றிலும் அவனது படைத் தளபதிகள் , வைத்தியர்கள்.. சோகத்தில் அவன் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தனர்.
சாகும் முன் தன் தாயின் முகத்தை  கடைசியாக ஒரே ஒரு தடவை பார்க்க ஆசைப்பட்டான்.. அது நிராசை என்று அவனுக்கும் தெரிந்து இருந்தது.
தனது உயிரின் எஞ்சி இருந்த கடைசி சக்தியை திரட்டி பேச ஆரம்பித்தான்....

 
அருகில் இருந்த முக்கிய தளபதியைப் பார்த்து, " நண்பா!  எனக்கு மூன்று கடைசி ஆசைகள்.. நிறைவேற்றித் தருவாயா?"
" சொல்லுங்கள், சக்கரவர்த்தி".
" முதலாவதாக , நான் இறந்த பிறகு, என் சவப் பெட்டியை , எனக்கு மருத்துவம் பார்த்த வைத்தியர்கள் மட்டுமே தூக்கி செல்ல வேண்டும்... ..
 இரண்டாவதாக  என்னுடைய சவ ஊர்வலம் செல்லும் போது , நான் இதுவரை வெற்றி கண்டபோது , கவர்ந்த தங்க , வைர நகைகளை வழி தோறும்  சுடுகாடு வரையிலும் , தரையில் கீழே போட்டுக்கொண்டே செல்ல வேண்டும்


மூன்றாவதாக , சவப் பெட்டிக்கு வெளியே  என் கைகள் இரண்டும் தெரியும் படி,   என்னை மண்ணில்  புதையுங்கள்"..


அங்கு இருந்த அனைவரும் கண்டிப்பாக நிறை வேற்றுவோம் என்று ஒரே குரலில் உறுதி கூறினார்கள்... அனைவருக்கும் ஆனால் அதற்கான காரணம் மட்டும் புரியவில்லை..

அருகில் இருந்த பிரதான தளபதி  அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் , " மா மன்னா ! என் இப்படி கூறுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா? " என்று கேட்டான்.

வெளிறிப் போன முகத்துடன் , வறண்டு போன நாவைத் தடவியபடியே  அந்த மாவீரன் பேசினான்." ஒன்னும் இல்லை, நண்பா, எனக்கு வாழ்க்கை இப்போ தான் கத்துக் கொடுத்த பாடங்கள் அவை. நாளைக்கு உலகத்திலே உள்ளவங்களுக்கு ஒரு பாடமா இருக்கும்."

மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்குது.. உடம்பு புரட்டி போடுது.. எல்லார் கண்ணிலும் கண்ணீர்.

" என்கிட்டே உலகத்திலேயே  தலை சிறந்த மருத்துவர்கள் இருக்கிறாங்க.. ஆனா, பாரு , போகப் போற உயிரை , யாரும் தடுக்க  முடியலை. நான் எவ்வளவோ சம்பாதிச்சேன். கொள்ளை அடிச்சேன்., ஆனா மண்ணில் புதைக்கிறப்போ , அதிலே இருந்து ஒரு துளி கூட நம்ம கூட வரப் போறது இல்லே.எல்லாம் மண்ணிலே தான்...  நான் எவ்வளவோ பேராசையில் இருந்தேன்.. என்ன வேணுமோ அனுபவிச்சேன். எல்லா செல்வங்களும் இருந்தது... கடைசிலே, நான் எதையும் கையிலே கொண்டு போகலை.. என் கையை பார்த்துக்கோ..வெறும் கையோட வந்தேன், வெறும் கையோட தான் போறேன். "

இதிலே இருந்து நமக்கு என்ன தெரியுது ?:

" உன் கிட்ட என்னதான் வசதி இருந்தாலும், சக்தி இருந்தாலும், மருத்துவம் பார்க்கிற வசதி இருந்தாலும் , விதினு ஒன்னு வந்தா யாரும் ஒன்னும் பண்ண முடியாது.... உடம்பை ஒழுங்கா பார்த்துக்கிறவங்களுக்கே இந்த கதி... நம்ம உடம்பைக் கூட பார்த்துக்காம , சொத்து , சுகம் னு தேடி , எதைக் கொண்டு போகப்போறோம்  ..? நம்மள்ள எத்தனை பேரு, நமக்காக , நம்ம குடும்பத்துக்காக நேரத்தை செலவழிக்கிறோம்..?
செய்யிற வேலை இல்லை சொந்த பிசினெஸ் , இதையே காரணம் காட்டி , அதுக்குள்ளேயே மூழ்கி, என்ன பண்றோம் னே தெரியாம, திடீர்னு வயசு ஆகி... மேலே போகப்போறோம்..  நாம கடைசிலே கொண்டு போகப்போறதும் ஒன்னும் இல்லே.. இருக்கிறவரைக்கும் , நாமும் நம்ம குடும்பமும் சந்தோசமா இருப்போம்.. நமக்கு மிஞ்சியதை , முடியாதவங்களுக்கு , நம்மாலே முடிஞ்சவரை உதவி செய்வோம்...
வாழ்க்கையிலே இருந்து நாம என்ன கத்துக்கிறோம் னு புரிஞ்சு , நல்ல விதமா வாழ்க்கையை மாத்துவோம்..
சம்பாதிக்கிறதுலே ஒரு பகுதியை, முடியாத ஏழைகளுக்கு , முதியவர்களுக்கு கொடுத்து உதவுங்க.. உங்களை பெத்தவங்களை நேசியுங்க... அவங்க மனசு வாழ்த்த , வாழ்த்த , உங்களுக்கு நல்ல வாழ்வு நிச்சயம் கிடைக்கும்.

பெத்த புள்ளைங்க உயிரோட இருக்கிறப்போ, அனாதையா  முதியோர் இல்லத்துலே சேர்க்கிற கொடுமை இனிமேலாவது ஒழியட்டும்...

முடிஞ்சவரை , ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம், உங்க உடல் நலத்துக்காக செலவழியுங்க.. அது உடற் பயிற்சியாக இருக்கலாம். இல்லை "வாக்கிங்", "ரன்னிங்",  "யோகா" வா இருக்கலாம்..நம்மளை நாமே தான் பார்த்துக்கணும்.. உங்க குழந்தைகளுக்கும் கத்துக் குடுங்க.. ஒரு தலைமுறைக்கே வழி காட்டியா இருக்கும்..!!!

வாழ்க மானுடம்! வாழ்க மனித நேயம்..!

2 comments:

Surya (Delhi) said...

All Your lessons as well as Astrology are extemely useful. I am keen follower of your blog. youngsers should understand that there is something beyond our control.

Surya, New Delhi

Anonymous said...

super.kindly post good articles

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com