Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

குறைகளை உடனே நிவர்த்தி செய்யும் - சில அற்புதமான வழிபாட்டு ஸ்தலங்கள்

| Feb 9, 2011
 கீழே கொடுக்கப்பட்டுள விவரங்கள் அனைத்தும்,  ஏன் ? எதற்கு ? எப்படி ? என்று காரண காரியங்கள் அறிய முடியாதவை.. பகுத்தறிவு பேசும் நண்பர்களிடம் நான் ஒரு சின்ன காரணம் கூட சொல்ல முடியாது...  ஆனால் ... அனுபவத்தில்... !!
அனைவரும் உணர்ந்து பார்க்க முடியும்.. பிரச்சனை தீர்ந்து , பரவசத்தில் , கண்களில் கண்ணீர் வர வைத்து , மனம் ஆனந்தக் கூத்தாடும்..
என்னுடைய, நான் அறிய என் நெருங்கிய நண்பர்கள் .. மிக நெருக்கமாக உணர்ந்து .. மெய் சிலிர்த்த ஸ்தலங்களின் அனுபவங்கள் இவை.
======================================
திருவண்ணாமலை - கிரிவலம் , சதுரகிரி - மகா லிங்க தரிசனம்  - இவை இரண்டையும் பற்றி , நாம் ஏற்கனவே நிறைய எழுதி இருக்கிறோம், ... இன்னும் நமது இணைய தளத்தில் எழுத விருக்கிறோம்.. என்னுடைய அனுபவத்தில் , எவ்வளவு இமாலய பிரச்னைகள் இருந்தாலும், முழுக்க முழுக்க அவை தீர , உங்களுக்கு நல்ல தொரு வழி காட்டி, மிக முக்கியமாய் மனது முழுக்க சந்தோசம் அளித்து ...  மன நிம்மதிக்கு அந்த மகாலிங்கம் என்று உங்களை உணர வைப்பதில் ... அந்த சிவனுக்கு நிகர் சிவனே. .....http://4.bp.blogspot.com/_WOMkL904No4/TGE-HDksT5I/AAAAAAAAAAM/UYTC6_bl0NY/S220/Lingam.jpg

உங்களை கோடீஸ்வரனாக்க , நீங்கள் ஒரு முறை - குபேர கிரிவலம் சென்று வாருங்கள்..
விவரங்கள் நமது தளத்தில் , பழைய கட்டுரைகளில் இருக்கிறது...  ( அந்த பாக்கியம் இருப்பவர்களுக்கு மட்டுமே.அதை அறிய /  உணர முடியும் . அதனால் இப்போது  வேண்டும் என்றே லிங்க் தரவில்லை.. )
=======================================================
நல்ல வேலை கிடைக்க, இப்போது இருக்கும் வேலையில், ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால்  அவை சுமுகமாகத் தீர , நீங்க சொந்த தொழில் செய்பவராய் இருந்தால் , அது மென் மேலும் விருத்தி பெற -  நீங்கள் வழி பட வேண்டிய தெய்வம் - திருப்பதி - ஏழுமலையான். மனது உருக வேண்டி, அங்கு வந்து - முடி காணிக்கை செய்து கொள்கிறேன் என்று வேண்டினாலோ, அல்லது - கீழிருந்து மேலே - நடை பாதை வழியாக வந்து தரிசிப்பேன் என்று  வேண்டினாலோ, அல்லது அங்க பிரதட்சிணம் செய்கிறேன் என்று வேண்டினாலோ .....   (நோட் பண்ணுங்கள்... வேண்டிக்கொண்டாலே).... அந்த பிரச்னை முழுவதும் தீரும்...  அதன் பிறகு... கூடிய விரைவில் அந்த நேர்த்திக் கடனை செலுத்துங்கள்..

திருப்பதியில் சேவை செய்ய விருப்பமா ? ( Volunteer service ) என்று ஏற்கனவே எழுதிய கட்டுரையால், பயன் அடைந்தவர்கள் , விவரிக்கும் சம்பவங்கள் ஆனந்த கண்ணீர் வரவைக்கின்றன..  மயிர் கூச்செறிய வைக்கின்றன. உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது ... முயற்சி செய்யுங்கள்..
=========================================
திருப்பூர் அருகே உள்ள திருமுருகன்பூண்டி முருகநாதஸ்வாமி கோவில்,பிரம்மஹத்திதோஷம் நீங்க முருகப்பெருமான் சிவனை வழிபட்ட தலம்.இங்குள்ள தீர்த்தம் மனவியாதியைக் குணமாக்கும் சக்தியைப் பெற்றது.இன்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் திருமுருகன்பூண்டி இறைவனை வழிபட்டு குணமாகி வருகின்றனர்.

==================================================
கோவைக்கு அருகில் உள்ள அனுபாவி சுப்பிரமணியசுவாமி கோவிலில் திரேதாயுகத்தில் (17,50,000 ஆண்டுகளுக்கு முன்பு) அனுமன் உருவாக்கிய ஊற்று இருக்கிறது.எந்த கோடைகாலத்திலும் வற்றாமல் தண்ணீரைத் தந்துகொண்டு இருக்கிறது.
================================
ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள்,காலபைரவரை வணங்கினால் பாதிப்பு குறையும் என்பதுஅனுபவ உண்மை.ஏனெனில்,சனிபகவானின் குருவாக இருப்பவர் காலபைரவர்!!!


காலபைரவரை முதன்மைக்கடவுளாகக்கொண்ட கோவில்கள் ஒருசில மட்டுமே தமிழ்நாட்டில் உள்ளன. அதில் ஒன்று, ஈரோடு மாவட்டம்,தாராபுரம் அருகில் உள்ள குண்டடம் கொங்கு வடுகநாத ஸ்வாமி கோவில் ஆகும்.இங்கு தேய்பிறை அஷ்டமிதிதியில் நடபெற்றுவரும் சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்து வருகின்றனர்.
==========================================

பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன்கோயிலில் திருட்டு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர் மிளகாய் அரைத்துப்பூசினால்,குற்றவாளி உடனடியாகத் தண்டிக்கப்படுவர்.இது ஒவ்வொருமுறையும் நிஜமாகியுள்ளது.

===========================================
 

திண்டுக்கல் மாவட்டம்,தாடிக்கொம்பு சவுந்தரராஜப்பெருமாள் கோவிலில் ரதிக்கும்,மன்மதனுக்கும் தனித்தனி சன்னதி இருக்கின்றது. இங்கு வழிபாடு நடத்தினால் திருமணத்தடை நீங்கி,உடனே திருமணசம்மந்தம் கிடைக்கும்.

இங்குள்ள சுவர்ண ஆகர்ஷணபைரவரை, கடன்பட்டவர்கள் தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் கடன் தொல்லையிலிருந்து நீங்கிவிடுவார்கள் என்பது ஐதீகம.
 ==================================================
 நவ பிருந்தாவன் - ஒரு முறை சென்று வாருங்கள். தினமும், நவ பிருந்தாவன் படத்திற்கு முன், நெய் தீபம் ஏற்றுங்கள்.. பொருளாதார ஏற்றம், உங்கள் வாழ்வில் நிச்சயம் உண்டு...
==================================================
 மேலும் சில முக்கிய ஸ்தலங்களை , வர விருக்கும் கட்டுரைகளில் பார்க்கலாம்.

நமது வாசக அன்பர்கள் , அனைவரிடமும் திரும்ப , திரும்ப கேட்பது ஒன்று தான்... உங்கள் கருத்துக்களை , பின்னூட்டத்தில் தெரியப் படுத்துங்கள்.. அவை மிகுந்த உற்சாகமளிக்கும் ;  எங்களை மென்மேலும் முறைபடுத்தும். 

6 comments:

g said...

Thirupathi sendral enakku prachanai adhigamaga agirathu nan enna seivathu..advise please

Anonymous said...

Dear Sir,
Very important details. Keep it up. Don't worry more people read your data but most of the people read and they don't want put any comments. Even me also followup your site near 1 month but i didn't put any comments till now.
Thanks Lot. Keep it up

vijayasekaran said...

sir nearby Dindugal is not ''thalakkombu'' it is ''dhadikkombu'' actual name. your website is very useful for all.

saravanan said...

dear sir
every information is very very excellent.and it is very useful for our good life in the earth.
god will be always with you sir.

thanks with regards
R.SARAVANAN

Pathrachalam Chalam said...

EXCELLENT AYYA KEEP IT ALL PEOPLE WITH U

Vijay Vijayaragavan said...

thanks for your information sir

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com