Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

வாசகர்களின் அன்புக்கும் , ஆதரவுக்கும் நன்றி .

| Feb 4, 2011
நமது இணையத்தில் பிப் 1 ஆம் தேதி வெளியான நீங்கள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டுமா..? ஜோதிட ரீதியாக ஒரு சூத்திரம்  


என்ற கட்டுரையை படித்து விட்டு , ஏராளமான வாசகர்கள் எமது மின்னஞ்சலில் வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார்கள்.  (பின்னூட்டம் இடுவதில் பிரச்னை இருந்ததை சரி படுத்தி விட்டோம)

அவர்களில் ஒரு சிலரின் கருத்துக்களை பின்னூட்டத்தில் இணைத்துள்ளேன். 

உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி. இப்பொழுது  இன்னும் பொறுப்பு கூடி இருப்பதை தெளிவாக உணர முடிகிறது.  உங்கள் அனைவரின் எதிர் பார்ப்புகளையும் முடிந்த அளவு  நிறைவேற்ற எங்கள் குழுவின் சார்பாக உறுதி அளிக்கிறோம்.

சிலரது பின்னூட்டங்களை படிக்கும்போது , நிஜமாகவே கண்கள் பனிக்கிறது.
ஒரு சில அன்பர்களுக்கு, நமது இணையத்தில் வெளியான கருத்துக்கள் , அவர்கள் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதை உணரும்போது, நமது இணையம் எந்த நோக்கத்திற்காக தொடங்கப் பட்டதோ, அந்தப் பாதையில் அடி எடுத்து வைப்பதை உணர்கிறோம். 


ஒரு பதிப்பாளனாய் வாசகர்களிடம் இருந்து இதைத் தான் எதிர் பார்க்கிறோம.  ஏதாவது கருத்துக்களில் உங்களுக்கு உடன் பாடு இல்லை எனினும், தயவு செய்து தெரியப் படுத்துங்கள்.  உங்கள் விமர்சனங்கள், இன்னும் தரமான கட்டுரைகள் எழுதுவதற்கு எங்களுக்கு மிகப் பெரிய உந்துதலைத் தரும்.


அதைப் போல, உங்களுக்கு தெரிந்த உபயோகமான தகவல்களை , எங்களுக்குத் தெரியப் படுத்துங்கள்.. பிரசுரிக்கத் தகுந்த கட்டுரைகள் , உங்கள் பெயருடன் வெளியிடப்படும். அது இன்னும் நிறைய வாசகர்களுக்கு உபயோகமாகவும், ஊக்கமாகவும் இருக்கும்.



நாம் ஏற்கனவே அறிவித்து இருந்தபடி இன்று முதல் ... தொடர் கட்டுரைகள் ஆரம்பம் ஆகின்றன. வாசக நண்பர்கள் அனைவரும், உங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிப்பீர்கள் என்று நம்புகிறேன் ..

அதிக மின்னஞ்சல்கள் வருவதால், வாசகர்களுக்கு ஜாதக பலன்கள் அளிப்பதில்,  மிகுந்த தாமதம் ஆகி வருகிறது. முடிந்த அளவு , அதை துரிதப் படுத்த முயற்ச்சிக்கிறோம்  .

அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த, மனமார்ந்த நன்றிகள்...

நேசமுடன் உங்கள் சகா,


ரிஷி
(Editor : livingextra .com)

0 comments:

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com