Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

2012 முதல் இங்கிலாந்து அழிய ஆரம்பிக்கும் - ஒரு ஜோதிடரின் பார்வை..

| Feb 5, 2011
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம் ஜோதிடத்தில் பட்டயப்படிப்பை அறிமுகப்படுத்தியது.ஆறுமாத பட்டயப்படிப்பு அது.இந்த படிப்பை அறிமுகப்படுத்திய உடனே மதுரையைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் இயக்கங்கள் அனேகமாக மக்கள் கலை இலக்கியக் கழகம் என நினைக்கிறேன்.கம்யூனிஸ்டுகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.எதிர்ப்பின் அடையாளமாக பெரியாரிலிருந்து பல்கலைக்கழகம்செல்லும் ஒரு நகரப் பேருந்தை (டவுன் பஸ்) எரித்தன!!!

இதைப் பார்த்து எத்தனை மக்கள் சிரித்திருப்பார்கள்.மேற்கு வங்காளத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்த மாநில அரசாங்கத்தின் மந்திரிகள் துர்கா பூஜைகளில் (திருட்டுத்தனமாக) இன்றும் கலந்துகொள்ளுகிறார்கள். 

ஏன் ? நம்ம ஊரில் கூட எதாவது கோவில், கும்பாபிசேகம் என்றால் ரெட்ட ரெடியாக இருப்பது.. நமது மாண்புமிகு அமைச்சர்கள் தானே.

சிலரது பிறந்த ஜாதகத்தில் சனியுடன் ராகு அல்லது கேது சேர்ந்திருந்தால் அவர் தெய்வநம்பிக்கையற்றவராகவும், தனது பிறந்த நாட்டின் புராதன சாஸ்திரங்களைக் கிண்டல் செய்பவராகவும் இருப்பார் என ஜோதிடம் சொல்லுகிறது


அதே சமயம், ஜோதிடப்பட்டயப்படிப்பிற்கு முதல் பேட்ச் மாணவர்களின் எண்ணிக்கை 60,000.இத்தனைக்கும் இது அஞ்சல்வழிப்படிப்பாகும்.

கி.பி.2009 இல்  மதுரையைச் சேர்ந்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கேட்டுக்கொண்டதன் பேரில் மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம் ஜோதிடப் பட்டயப் படிப்பை நிறுத்திக்கொண்டது. ஆனால்,இந்த பட்டயப்படிப்பு ஒரு ஆண்டுக்கு ரூ.20,00,000/-(இருபது லட்சம் ரூபாய்) வருமானம் பல்கலைக்கழகத்துக்குத் தந்துகொண்டு இருந்தது.  ( தினமலர்,பிப்ரவரி,2009.)

அதே சமயம், தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூரில் கற்பகம் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஜோதிடப் பட்டயப்படிப்பை அறிமுகம் செய்துள்ளன.இதில் சாஸ்திரா பட்டயம் முதல் முதுகலை வரை ஜோதிடவியல் பாடத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே துவக்கிவிட்டது.

அமெரிக்காவில் வேத ஜோதிடம் (vedic astrology) என்ற பெயரில் நமது இந்து ஜோதிடக்கலையை பல பல்கலைக் கழகங்கள் நடத்திக்கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவில் அமெரிக்க வேத ஜோதிட சங்கம் (www.aava.com= American Association of Vedic Astrology),இங்கிலாந்தில் பிரிட்டன் வேத ஜோதிட சங்கம்(British Association of Vedic Astrology = www.bava.org) என அமைப்புக்கள் இயங்கிவருகின்றன.

கி.பி.2002 ஆம் ஆண்டு வாக்கில் இங்கிலாந்து அரசு .400 கோடி பவுண்டுகள் செலவழித்து பல யாகங்களை லண்டன் மாநகரத்தில் செய்தது.(ஆதாரம் தினமலர் கி.பி.2002). இங்கிலாந்து அரசு வேத ஜோதிடர்களைக் கொண்டு தனது நாட்டின் எதிர்காலத்தை கணிக்கச் சொன்னது. அந்த கணிப்பின் படி கி.பி.2012 முதல் 2015க்குள் இங்கிலாந்தின் பெரும் பகுதிகள் கடலுக்குள் மூழ்க இருப்பதைக் கண்டறிந்தது.பின்னே.. கொஞ்சமா அநியாயம் செஞ்சு இருப்பாங்க.. ?
கடந்த நூற்றாண்டில் அது உலகின் பல நாடுகளை ஆக்கிரமித்தது.அப்போது அதன் நிர்வாகிகளும் இங்கிலாந்து ராணுவமும் பல மதத்தைச் சார்ந்த வழிபாட்டுத்தலங்களை இடித்ததாலும், ஏராளமான பெண்களை மானபங்கப்படுத்தியதாலும், கற்பழித்ததாலும் இந்த சாபம் உருவானது.http://www.iuma.de/assets/images/England.gif
இதை மாற்ற கேரள நம்பூதிரிகளைக் கொண்டு பல யாகங்களைச் செய்தது.
இந்தச் செய்தி முழு நிஜம்.  உடனே இதுக்கு எல்லாம் என்ன ஆதாரம் னு கேட்க ஆரம்பிக்காதீங்க..   வேணும்னா கூகுள் அம்மாவை  தேடிப் பாருங்க.. இல்லை பழைய தின மலரை தேடி எடுக்கலாம். இதிலே இருந்து நமக்கு என்ன தெரியுது..?


பெரிய புடுங்கி னு நெனைச்சுக் கிட்டு இருக்கிறவனுங்களே , நடு நடுங்கி , இந்த விஷயம் மேலே முழு நம்பிக்கை வைச்சு , ஏதாவது வழி பண்ண முடியுமா னு ... (அது அறிவியல் ரீதியா ஒத்துக்க முடியலேன்னா கூட)... பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.  

யார் பாவம் , பண்ணினாலும் - என்னைக்கோ ஒரு நாள் ஆண்டவன் தலையிலே தட்டுவாரு .. கண்டிப்பா.... தனி மனித ஒழுக்கம் வேணும்..  யாரும் நம்மளைப் பார்க்கலை னாலும், கேள்வி கேட்க ஆள் இல்லை னாலும், மனசு அறிஞ்சு எந்த தப்பும் பண்ணாதீங்க... 


ரெண்டு, எந்த யுனிவெர்சிட்டி லெ ஜோதிட பாடம் நிறுத்தினாலும்..... நம்ம இணைய தளத்திலே பாடங்கள் கண்டிப்பா வந்து கிட்டே இருக்கும்..


3 comments:

THEIVAM said...

kandippa seniyunga sir, nan onlinela padichuttu online vasathi illathavangalukku nan ithai solli kodukalam endru irukeran en mudivu sariyaaa????

Rishi said...

Oh, yes... thaaralamaa pannunga... wish you all the best

Anonymous said...

UR BLOGS ARE VERY WELL.please help.
pls tell me (or write a blog) how to vanish bad habbits from the mind. or how to stop doing bad habbits? i tried to stop but i failed all times.some of my bad habbits are lose talking, kidding others, handjob(main problem) i'm born in kanya rasi, simha lagna. mangal & sukra in 12th house from lagna, ketu in my lagna,surya,budha & guru in 11th, shani in 5th (psathishkumarcivil@gmail.com)

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com