Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

ஜோதிட சூட்சுமங்கள் ( பாடம் : 06 ) - விருட்ச சாஸ்திரம்

| Feb 12, 2011
வாசக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நேற்று , நமது இணையத்தில் வெளியான - பிரகாஷ் ராஜ் சம்பந்தப்பட்ட கட்டுரையை படித்து , நமது வாசகர்களில் நிறைய பேர், கண்டனக் குரலே எழுப்பி இருந்தார்கள். பெரும்பாலானோரின் எண்ணம், இது போன்ற சினிமா , அரசியல் போன்ற சாக்கடைக்கு ஒப்பான சமாச்சாரங்களைப் பற்றிய கட்டுரைகளை , நமது இணைய தளத்தில் தவிர்க்கலாமே யென்று . 

நமது தளத்தில் நிச்சயமாக சர்வ சாதாரணமாக  இருக்கும் எந்த ஒரு விஷயங்களும் , பிரசுரிக்கப் பட மாட்டது. குடும்பம் , கணவன் - மனைவி , என்கிற ஒரு அமைப்பே சமீப காலத்தில் கேலிப் பொருளாகிக் கொண்டிருக்கிறது. மது ,  மாது என்கிற விசயங்கள் - சமூகத்தில் மெல்ல மெல்ல அங்கீகாரம் ஆகிக் கொண்டிருக்கின்றன. இது , சமூக நலன் எண்ணமுள்ள எல்லோராலும், நிச்சயமாக கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.

பஞ்ச பூதங்களை சாட்சியாகக் கொண்டு , கரம் பிடிக்கும் வாழ்க்கைத் துணை - குழந்தைகள் பெற்று, ஒரு 10 வருடம் மனம் ஒருமித்து வாழ்ந்து.. பிறகு  திடீரென இன்னொரு தகாத தொடர்பு ஏற்பட்டு , மன முறிவு ஏற்பட்டு , அந்த குடும்பமே சீரழியும் நிலை இப்போது , சர்வ சாதாரணமாக அடித்தட்டு மக்களிடமும் , கிராமங்களிலும் கூட
ஏற்படுகிறது..(பிரபு தேவா - நயன் தாரா விஷயமும் கிட்டத்தட்ட இதே கதி தான்.)
கேட்டால், மனது ஒத்துப் போகவில்லை யென்று சொல்கிறார்கள். 
எத்தனை பேர்தான் "சதி லீலாவதி - கல்பனா" போல் இருக்க முடியும்?  திட்டமிட்டே சில பேர் இது போன்ற செயல்களில் ஈடு படுகின்றனர்.
.
நேற்று வரை , மனைவி , குழந்தைகள் என்று நிம்மதியாக இருந்த ஒருவரது வாழ்க்கை, இப்போது  பல குடும்பங்களின், அருவருப்புக்கு ஆளாகி உள்ளது.  வசதி இருப்பவர்கள் ஓரளவுக்கு தப்பித்து விடுகிறார்கள்..இல்லாதவர்களுக்கு.. பட்டினி, திருட்டு, தற்கொலை, விபச்சாரம்  ..  கொஞ்சம் , கொஞ்சமாய் மனிதம் செத்துப் போகும்..


நமது இணையத்தின் தீவிர வாசகர்களில் , திரையுலகை  சேர்ந்த சில பிரபலங்களும், குடும்பங்களும் உண்டு..  எத்தனையோ மனைவி மார்கள், ஒரு சில பெண்களால் எங்கே கணவர் தம்மை ஒதுக்கி விடுவாரோ என்கிற பயமும்.. கேட்டாலே பிரச்னை வந்துவிடுமோ என்று மருகுவதுமாக உள்ளனர்.  சில கணவன் மார்களுக்கும் இதே நிலைமை தான். .. பொறி வைத்து குடும்ப பெண்களாகவே பார்த்து பழகும் சில பேர்களால்...

குடும்பம் சிதறாமல் பாது காப்பாய் இருக்க வேண்டிய பொறுப்பு - கணவன் , மனைவி இருவருக்குமே உண்டு..


ஆன்மீக தேடல் இருப்பவர்கள் ஒவ்வொருவரும், பிரம்மசாரிகளாய் இருந்தால் பரவா இல்லை. குடும்பம் என்று வந்து விட்டால் , குடும்ப கடமைகளே முடித்து விட்டே , இறை தேடல் இருக்க வேண்டும்.. மனைவியையும், குழந்தைகளையும் சேர்த்துக் கொண்டு.. ஞான தேடலில் ஈடுபடுங்கள்.. வருங்கால சந்ததி வளமுள்ளதாகட்டும்..


ஆசிரியர் என்கிற முறையில், இனிமேல் இதைப் போன்ற கழிசடை சமாச்சாரங்கள் நிச்சயம் வராது என்கிற உறுதி மொழி அளிக்கிறேன். நமக்கு பிரதானம் ஆன்மிகம் மட்டுமே. ஆனால், சமூக பிரக்ஞை , அக்கறை கொண்ட கட்டுரைகள் ஒன்றிரண்டு வந்தால், அது நிச்சயம் ஒரு விழிப்புணர்வுக்காக மட்டுமே..  உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்..  என்றும் உங்கள் ஆதரவை நோக்கி....
ரிஷி (ஆசிரியர்)
==================================
சரி, இன்றைய ஜோதிட பாடம் பார்க்கலாம்..  இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது .. விருட்சங்களை பற்றி.. நாம் பிறந்த நட்சத்திரங்களுக்கும், ஒரு சில விருட்சங்களுக்கும் நேரடி தொடர்பு உண்டு.

மனிதனாய் பிறந்த அனைவருக்கும் , ஏதாவது ஒரு வகையில் பிரச்னைகள் இருந்து கொண்டு தான் இருக்கும்.. சிலருக்கு  விஸ்வ ரூபம் எடுக்கும்.. சிலருக்கு, பணம், சிலருக்கு நோய், சிலருக்கு குடும்பம் , ..... இது சகலருக்கும் பொருந்தும்.. பிரச்னை இல்லாதவர்கள் ... குழந்தைகள் .. இல்லையேல் ஞானிகள்...

பந்தம், பாசம் அற்று இருக்க வேண்டும்.. இல்லையேல் ஒன்றும் அறியாத குழந்தையாய் இருத்தல் வேண்டும்.  மொத்தத்தில் மனம் நிச்சலனமாய் இருக்க வேண்டும். தன்னை  அறிவதே வாழ்க்கை.  நாம் இந்த பிறவியில் எந்த நோக்கத்திற்காக பிறந்து இருக்கிறோம், அனைத்தும் ஒடுங்கி அந்த பரம்பொருளில் இணைவதே.. முடிவில் வாழ்க்கை என்று தெரிய வரும்.. ஜோதிடம் என்பது அந்த வகையில் ஒரு கருவி நமக்கு. .. நாம் சென்ற பிறவியில் நல்லவனாய் இருந்தோமா.. இந்த பிறவியில் எப்படி இருப்போம்..? நமக்கு எப்போது நேரம் நல்லபடியாக இருக்கும்? எப்போது கடுமையாக இருக்கும்? என்று பல விதங்களில் உங்களுக்கு வழி காட்டும்.. ஜோதிடம் படிக்க, படிக்க , நாம் நம்மை அறியாமலேயே நிறைய ஜாதகங்களை .. தெரிந்தவர்களை, பிரபலங்களை அலசி ஆராய்வோம் ... அது பல விதங்களில் உங்களுக்கு நன்மைகள் செய்யும்.. பல சூட்சுமங்களை நமக்கு உணர்த்தும்.. நீங்கள் மற்றவர்களுக்கு ஜாதக பலன்கள் சொல்லுகிறீர்களோ இல்லையோ, உங்கள் ஜாதகத்தில் நீங்கள் Ph D செய்து தான் ஆக வேண்டும்..   ..


நம்மை அறியாமல் நாம் செய்யும் பாவங்களை, பாவ கதிர்களை கிரகிக்கும் சக்தி விருட்சங்களுக்கு உண்டு..  உங்கள் நட்சத்திரத்துக்குரிய மரத்தை , நீங்களே உங்கள் கையால் நட்டு , நீரூற்றி வளர்த்து வாருங்கள்.. அந்த மரம் வளர , வளர உங்கள் வாழ்வும் வளம் பெறும். உங்கள் பாவக் கதிர்களை கிரகித்து , உங்களுக்கு அற்புதமான ஒரு ஆன்ம தொடர்பை இந்த மரங்கள் செய்யும். சில மரங்களை வீட்டில் வளர்க்க முடியாது.. உங்கள் கண் படும் இடங்களில் , உங்கள் தோட்டத்திலோ, சாலை ஓரங்களிலோ, இல்லை ஆன்மிக ஸ்தலங்களில்  , ஒரு கோயில்சார்ந்த வனப்பகுதியில் (சதுரகிரி, திருஅண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம், பாபநாசம், குருவாயூர், திருப்பதி, திருத்தணி,சுவாமி மலை) தென்மேற்குப் பகுதியில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் நடவேண்டும்.அந்த மரக்கன்றையும் அவரது பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிக நன்று.

மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களை ஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு ஊறிய நவதானியங்களையும் அந்த மரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும்.

இப்படிச் செய்த மறு விநாடிமுதல், அம்மரக்கன்று வளர,வளர அதை நட்டவரின் வாழ்க்கை மலரும்.அந்த மரக்கன்றை நட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும்.

அம்மரக்கன்று பூத்து,காய்க்கும்போது,உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத்துவங்கும்.அவரது கர்மவினைகள் நீங்கியிருக்கும்.கர்மவினைகளை வெற்றிகொள்ள ‘விருட்ச சாஸ்திரம்’ இப்படி ஒரு வழிகாட்டுகிறது.

இப்போது உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரிய விருட்சம் எனப்படும் மரம் எதுவெனப் பார்ப்போம்:

அஸ்வினி
1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி)
2 ம் பாதம் - மகிழம்
3 ம் பாதம் - பாதாம்
4 ம் பாதம் - நண்டாஞ்சு


பரணி
1 ம் பாதம் - அத்தி
2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் - விளா
4 ம் பாதம் - நந்தியாவட்டை

கார்த்திகை
1 ம் பாதம் - நெல்லி
2 ம் பாதம் - மணிபுங்கம்
3 ம் பாதம் - வெண் தேக்கு
4 ம் பாதம் - நிரிவேங்கை

ரோஹிணி
1 ம் பாதம் - நாவல்
2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் - மந்தாரை
4 ம் பாதம் - நாகலிங்கம்

மிருகஷீரிஷம்
1 ம் பாதம் - கருங்காலி
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - வேம்பு
4 ம் பாதம் - நீர்க்கடம்பு

திருவாதிரை
1 ம் பாதம் - செங்கருங்காலி
2 ம் பாதம் - வெள்ளை
3 ம் பாதம் - வெள்ளெருக்கு
4 ம் பாதம் - வெள்ளெருக்கு

புனர்பூசம்
1 ம் பாதம் - மூங்கில்
2 ம் பாதம் - மலைவேம்பு
3 ம் பாதம் - அடப்பமரம்
4 ம் பாதம் - நெல்லி

பூசம்
1 ம் பாதம் - அரசு
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - இருள்
4 ம் பாதம் - நொச்சி

ஆயில்யம்
1 ம் பாதம் - புன்னை
2 ம் பாதம் - முசுக்கட்டை
3 ம் பாதம் - இலந்தை
4 ம் பாதம் - பலா

மகம்
1 ம் பாதம் - ஆலமரம்
2 ம் பாதம் - முத்திலா மரம்
3 ம் பாதம் - இலுப்பை
4 ம் பாதம் - பவளமல்லி

பூரம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - வாகை
3 ம் பாதம் - ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா


உத்திரம்
1 ம் பாதம் - ஆலசி
2 ம் பாதம் - வாதநாராயணன்
3 ம் பாதம் - எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்

ஹஸ்தம்
1 ம் பாதம் - ஆத்தி
2 ம் பாதம் - தென்னை
3 ம் பாதம் - ஓதியன்
4 ம் பாதம் - புத்திரசீவி

சித்திரை
1 ம் பாதம் - வில்வம்
2 ம் பாதம் - புரசு
3 ம் பாதம் - கொடுக்காபுளி
4 ம் பாதம் - தங்க அரளி

சுவாதி
1 ம் பாதம் - மருது
2 ம் பாதம் - புளி
3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை

விசாகம்
1 ம் பாதம் - விளா
2 ம் பாதம் - சிம்சுபா
3 ம் பாதம் - பூவன்
4 ம் பாதம் - தூங்குமூஞ்சி

அனுஷம்
1 ம் பாதம் - மகிழம்
2 ம் பாதம் - பூமருது
3 ம் பாதம் - கொங்கு
4 ம் பாதம் - தேக்கு

கேட்டை
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - பூவரசு
3 ம் பாதம் - அரசு
4 ம் பாதம் - வேம்பு

மூலம்
1 ம் பாதம் - மராமரம்
2 ம் பாதம் - பெரு
3 ம் பாதம் - செண்பக மரம்
4 ம் பாதம் - ஆச்சா

பூராடம்
1 ம் பாதம் - வஞ்சி
2 ம் பாதம் - கடற்கொஞ்சி
3 ம் பாதம் - சந்தானம்
4 ம் பாதம் - எலுமிச்சை

உத்திராடம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - கடுக்காய்
3 ம் பாதம் - சாரப்பருப்பு
4 ம் பாதம் - தாளை

திருவோணம்
1 ம் பாதம் - வெள்ளெருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் - பாக்கு

அவிட்டம்
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருவேல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் - ஜாதிக்காய்

சதயம்
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்பை
3 ம் பாதம் - ராம்சீதா
4 ம் பாதம் - திலகமரம்

பூரட்டாதி
1 ம் பாதம் - தேமா
2 ம் பாதம் - குங்கிலியம்
3 ம் பாதம் - சுந்தரவேம்பு
4 ம் பாதம் - கன்னிமந்தாரை

உத்திரட்டாதி
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர்
3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் - செம்மரம்

ரேவதி
1 ம் பாதம் - பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - செஞ்சந்தனம்
4 ம் பாதம் - மஞ்சபலா

தங்களுக்குரிய  நட்சத்திரங்கள் , பாதங்கள் அறிந்து விருட்சங்கள் வளர்த்து , வளம் பெறுங்கள்..
 சில மரங்கள் - நீங்கள் கேள்விப்படாததாக இருக்கலாம். அருகில் இருக்கும் சித்த மருத்துவரையோ, அல்லது , கூகுள் லெ யோ தேடிப் பாருங்கள்.. இல்லையா , அந்த நட்சத்திரத்துக்கு மற்ற  பாதங்களுக்குரிய - பரிச்சயமான மரங்களை வளர்க்கலாம்.


மரங்களை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஸ்தல விருட்சங்கள் உண்டு. அந்த ஸ்தல விருட்சத்தின் அடியில், அருகில் நீங்கள் அமர்வது , நீங்கள் அந்த ஆலயத்தின் கருவறைக்குள் அமர்வதுக்கு ஒப்பானது. ஆலயத்தை சுற்றி இருக்கும் அருள் அலைகளை ஸ்தல விருட்சம் கிரகித்து வெளியிடுகிறது..  திருவண்ணாமலை சென்றால், அந்த மகிழ மரத்தடியில் சில நிமிடங்கள் அமர்ந்து, உணர்ந்து பாருங்கள்..  உங்கள் ஊரில் அருகில் இருக்கும் ஸ்தலங்களில் விருட்சங்களின் அடியில் அமர்ந்து உணர்ந்து பார்த்துவிட்டு ... உங்கள் அனுபவங்களை எழுதுங்கள் ..


எந்த ஒரு ஜாதகருக்கும், சில சமயங்களில், கிரக நிலைக்கு ஏற்ப எத்தனையோ பரிகாரங்களை செய்த போதிலும், பலன்கள் உடனடியாக கிடைக்காமல் போனால், நீங்கள் தாராளமாக இந்த விருட்சங்களை பரிந்துரைக்கலாம். 

5 comments:

THEIVAM said...

ithu oru advice thane, padatha nadathunga boss

இர.கருணாகரன் said...

ஆன்மீகம் என்பது வெறும் சாமியார்த்தனமான சோம்பேறிகளின் பணியல்ல அது முழுக்க சமுதாய சீர்பாட்டு உணர்வானது , அதில் கொஞ்சம் மாற்றங்கள் வரும்போது சமூக அக்கறைகொண்ட நெஞ்சத்தில் இதுபோன்ற கவலைகள் ஏற்படுவது சகஜம்தான் .

உங்களின் ஆதங்கம் புரிகிறது , இந்த சூழலை உங்கள் இதயம் எப்படி பார்க்கின்றது என்பதுதான் எம்பெருமானின் பரீட்சை .


வாழ்க வளமுடன் .

வெல்க உங்கள் சீரிய தொண்டு

அன்புடன்

M. Thiruvel Murugan said...

very useful parigaaram... thank you sir...

Neelakandan Dilli said...

பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி ஐயா,

Selvi Periyasami said...

Amazing post..

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com