Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் பணியாரம் சுடும் பாட்டி - சிவ ராத்திரியன்று நடக்கும் அதிசயம் !

| Feb 28, 2011
இது நமது இணையத்தில் ஏற்கனவே பதிக்கப்பட்டதின் மறுபதிப்பு. நாம் ஏற்கனவே இந்த பதிவை பதிப்பித்தவுடன், அதை வாசித்த ஏராளமான அன்பர்களின் வாழ்வில் அன்னை நடத்திய அதிசயங்கள் , மயிர் கூச்செறிய வைக்கும்.. 
சிவ ராத்திரி நெருங்குவதால், நமது வாசகர்களுக்கு ஒரு நினைவூட்டல் படுத்துவதின் பொருட்டு  மற்றும் தினமும் புதிதாக வரும் வாசகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மீண்டும் ஒருமுறை ..........
உங்களது எல்லா பிரச்னைகளையும் போக்கும் பத்திரகாளி
கலி என்றால் துன்பம் என்று பொருள்.கலியுகம் என்றால் துன்பயுகம் என்றுதான் அர்த்தம்.பிறக்காத குழந்தையும், இறந்து போன மனிதனும் தான் நிம்மதியாக வாழ்பவர்கள்.அவர்களை விட நிம்மதியாக வாழ்ந்து வருபவர்கள் தான் பத்திரகாளியை வழிபடுபவர்கள்.இந்தியா,தமிழ்நாடு மாநிலம்,விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் சிவகாசி சாலையில் ஊருக்குள் உள்ளது முதலியார்பட்டித்தெரு. அங்கே,மக்கள் வசிப்பிடத்துக்கு நடுவே அமைந்துள்ளது  ஸ்ரீ பத்திரகாளி யம்மன் கோவில்!
முதலியார்பட்டித் தெரு நெசவாளர்கள் வாழும் பகுதியாகும்.அங்கே சில நூற்றாண்டுகளாக அமர்ந்து கேட்ட வரம்  தருபவள் பத்திரகாளி!!

உங்களுக்கு தீராத கடன் அல்லது நோய் அல்லது செலவு அல்லது எதிரிகள் உள்ளதா?இவை அனைத்தும் தீர வேண்டுமா?


அவர்கள் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று இங்கு நடைபெறும் பவுர்ணமி பூஜையில் கலந்து கொண்டால் போதும். ஒவ்வொரு பவுர்ணமியன்றும் இரவு 10.30 மணிக்கு பவுர்ணமி பூஜை துவங்கி நள்ளிரவு 1.20க்கு நிறைவடைகிறது.

இந்த கோவிலில் ஒவ்வொரு வருட சிவராத்திரியன்றும் கொதிக்கும் நெய்யில் ஒரு 60 வயது பாட்டி வெறும் கையால் பணியாரம் சுட்டுவருகிறார்.கடந்த 30 வருடங்களாக இந்தக் காரியத்தைச் செய்து வருகிறார்.அந்த பாட்டியின் கையில் சிறு மாற்றம் கூட இருப்பதில்லை.கரண்டியைப் பயன்படுத்துவதில்லை.ஒரு முறை நேரில் வந்து பார்க்கவும். விஜய் டி.வி. யின் நிஜம் பகுதியிலும் இதை ஒளி பரப்பினார்கள்..இந்த பத்திரகாளி நிகழ்த்தும் அதிசயங்கள் ஏராளம்:அவற்றில் சில..


சாதரணமாக தொழில் செய்து வந்த ஒரு நபர் இங்கு தினமும் ஒரு முறை வீதம் 4 வருடங்கள் வந்து வழிபட்டார்.இப்போது அவரது தொழில் சொத்து மதிப்பு சில கோடிகள்....

8 வருடமாக டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்கு நடையாய் நடந்த ஒருவர் இந்த பத்திரகாளியை சில மாதங்கள் தினமும் வழிபட்டுக் கொண்டே வந்தார். ஜீவனாம்சம் தர வேண்டிய அவசியம் இல்லாத விதத்தில் டைவர்ஸ் கேஸ் முடிவுக்கு வந்துவிட்டது.

பிறவியிலிருந்தே மனநிலை சரியில்லாமல் இருந்த ஒரு 21 வயது இளைஞன் இந்த கோவிலுக்கு 2 வருடமாக அழைத்து வரப்பட்டான்.தற்போது சராசரி மனிதனாகி விட்டான்.தற்போது அவன் வேலைக்குச் செல்லத் துவங்கிவிட்டான்.

ஒரு டெய்லர் அவர்,14 வருடங்களாக வந்து கொண்டே இருக்கிறார்.மிக சாதாரண நிலையிலிருந்தவர்.கடைக்கு இடம் கிடைக்காமல் திண்டாடிக்கொண்டிருந்தவர்.இது வரை 20 முறை தனது டெய்லர் கடையை மாற்றியிருப்பார்.தற்போது,ஊருக்கு இதயப் பகுதியில்-நிரந்தரமான கடை அவருக்கு அமைந்துவிட்டது.சுமார் 20 பேருக்கு  நிரந்தரவேலை தருமளவிற்கு வளர்ந்து விட்டார்.  இருந்தபோதிலும், இன்றும் அந்த டெய்லர் ஒரு நாள் விடாமல்  பத்திரகாளியை வழிபட்டபின்பே தனது  கடையைத் திறக்கிறார்.


 80 % மதிப்பெண் வாங்கிக் கொண்டு இருந்த பையன் , ஞாயிறு தவறாமல் ராகு கால நேரத்தில்  இங்கு வர, அவன்  +2 வில்  93 % மதிப்பெண் பெற்று  அரசு கல்லூரியில் இன்ஜினியரிங் படிக்கிறான்.


எனக்கு தெரிந்த அன்பர் ஒருவர் , சென்னையில் வசிப்பவர் --- ஒருமுறை இந்த கோவில் வந்து , அவரது நீண்ட நாள் பிரச்சினை உடனடியாக தீர, இன்று அம்மனின் மஞ்சள் காப்பு இல்லாமல் அவர் வீட்டில் இருந்து வெளியே வருவதே இல்லை... கடுமையான கடன் தொல்லையில்  இருந்த அவரது சொத்து மதிப்பு இன்று ஒரு கோடியை தாண்டி விட்டது... ( இரண்டே வருடங்களில்... )  - மஞ்சள் காப்பு என்பது குங்குமத்திற்கு பதிலாக வழங்கப்படும் மஞ்சள் பிரசாதம்.. 


மேலும் முறை கேடான உறவுகள் இருப்பவர்கள், உடனடியாக திருந்த இந்த அம்மன்  அருள் பாலிக்கிறாள். சிறிய கோவில் தான். ஆனால் இந்த அம்மனின் அருள் , நீங்கள் நேரில் வரும்போது நிச்சயம் உணர முடியும்.


ஆக,நிம்மதியும்,செல்வவளமும் 100% காரண்டி.    


உங்களுக்கு அஷ்டம சனி, ஏழரை சனி, நடப்பதை இருந்தால் உடனடியாக அம்மனை நாடி சரணடையவும். ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பவுர்ணமி பூஜையில் நீங்கள்கலந்து கொண்டாலே -- உங்களுக்கு பரிபூரண நிம்மதி கிடைப்பது உறுதி...

சத்தமே இல்லமால் சில சித்தர்களை உருவாக்கி கொண்டு இருக்கிறாள் அன்னை. தினமும் வரும் பக்தர்கள் , அன்னை பேசுவதை உணர்கிறார்கள்...  


நீங்கள் சதுரகிரிக்கு செல்லுபவராய் இருந்தால் , அவசியம் ஒருமுறை இந்த பத்திரகாளியை தரிசித்து வாருங்கள்...  இங்கிருந்து சதுரகிரி 25 கி.மீ. தான்.  மேலும் விவரங்கள் தெரிய வேண்டுமாயின்,  editor @livingextra .com  என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.  

"சும்மா நச்"சுனு சில SMS ஜோக்குகள்..

| Feb 27, 2011

கொஞ்ச நாளா சீரியசான கட்டுரைகளே எழுதிக் கிட்டு இருக்கமா.? கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம் னு...  சில ஜோக்குகள் ... 

எல்லாமே, நமக்கு "மெயில் " SMS "   ல வந்ததுங்க.. எல்லாமே பழசு தானேப்பா னு , நீங்க டென்ஷன் ஆகிடாதேங்க... என்ன..? 

 ========================================
தண்ணி அடிச்ச  மப்புல நம்மாளுங்க அடிக்கடி சொல்ற வசனங்கள் என்னென்ன..

* மாப்ள.. நீ எதுக்கும்  கவலைப்படாத.. நான் ஸ்டெடியாத்தான் இருக்கேன்..

* டேய் மாப்ள.. நா வண்டிய ஓட்டுறேண்டா

* ச்சே.. எவ்ளோ அடிச்சாலும் ஏறவே மாட்டேங்குதுடா

* நான் போதைல உளருறேன்னு மட்டும் தப்பா நினைக்காதீங்க

* இன்னொரு பெக்  அடிச்சா சும்மா கும்முன்னு இருக்கும்

* இப்போ சொல்றா மாப்ள.. உனக்காக உயிரையும் கொடுப்பேன்

கடைசியா.. இதுதான் ...

* மச்சி.. நாளைல இருந்து இந்த சனியனத் தொடவேக் கூடாது

==================================================

உலகத்துலேயே சின்ன லீவ் லெட்டர் !

மதிப்பிற்குரிய ஐயா,

உன்னால என்ன புடுங்க முடியுமோ புடுங்கிக்கோ
நான் கிளாசுக்கு வரமாட்டேன்

மிக்க நன்றி.

=========================================


உனக்கென ஒரு தனிப்பாதையை வகுத்துக் கொள். விருப்பம் போல காதல் செய். உள்மனம் சொல்வதை மட்டும் கேள். மனதில் தோன்றுவதை மட்டுமே பேசு. ஒரு நாள் இந்த உலகம் உன்னைப் பார்த்துச் சொல்லும்..

"தறுதலப் பயபுள்ள.. இது யார் பேச்சையும் கேக்காது.. எங்கே உருப்படப்  போகுது?"

===================================================டீச்சர்: உன்னோட பேர் என்னமா?

பெண்: ஐஸ்வர்யா

டீச்சர்: நல்ல பேரு.. வீட்டுல எப்படி கூப்பிடுவாங்க?

பெண்: கிட்டக்க இருந்தா மெல்லமா கூப்பிடுவாங்க.. தூரமா இருந்தா சவுண்டாகூப்பிடுவாங்க..


டீச்சர்:   ??? 
( எதுக்கு தாயி இந்த கொலை வெறி? )

===================================================

இரண்டு குடிகாரர்கள் ரயில்வே தண்டவாளத்தின் மீது நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

"மச்சி என்னடா இவ்ளோ தூரம் நடந்தும் படியேறியும் இன்னும் நாம மேல போகவே இல்லையே.."

"அட அது கூட பரவாயில்ல மாமு.. சனியன் புடிச்சவனுங்க.. கைப்பிடிய எம்புட்டு கீழ வச்சிருக்காங்க பாரு.."

=====================================================

சர்தாரும் அவருடைய மனைவியும் டைவர்ஸ் கேட்டு கோர்ட்டில் அப்ளை செய்திருந்தார்கள். ஜட்ஜ் எவ்ளவோ சொல்லியும் ரெண்டு பேரும் பிரியணும்னு தீர்மானமா சொல்லிட்டாங்க. கடைசியா ஜட்ஜ் கேட்டார்.

"உங்களுக்குத்தான் மூணு பிள்ளைங்க இருக்காங்களே.. அவங்கள எப்படி பிரிச்சுப்பீங்க.."

ரொம்ப யோசிச்சுட்டு சர்தார் சொன்னார்.

"சரி விடுங்க.. நான் அடுத்த வருஷம் டைவர்ஸ் பண்ணிக்கிறேன்.."

==================================================


பெண்களின் கண் அசைவுக்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. ஆனால் ஒரு உண்மையான ஆண் நண்பனின் கண் அசைவுக்கு ஒரே ஒரு அர்த்தம்தான் உண்டு.

"மச்சி.. டக்குன்னு திரும்பாத.. ஒரு சூப்பர் பிகரு நம்மள கிராஸ் பண்ணிப் போகுது.."

===================================================


இது கொஞ்சம் டச்சிங்...


ஒருத்தர் லீவு நாள்ள , புதுசா கார் வாங்கினதை , துணி , தண்ணி வைச்சு கிளீன் பண்ணிக்கிட்டு இருக்காரு..  "   " பாத்து, மெள்ள --- காருக்கு  வலிக்கப் போகுது "


அவரோட குழந்தை ... சின்ன பையன் ....செம க்யூட்..  4 வயசுன்னு  வைச்சுக்கோங்களேன்..  கையிலே அவன் எதோ ஆணி வச்சு இருப்பான்போலே  .. காரு புதுசு இல்லே.. சின்னப் புள்ளைக்கு என்ன தெரியும்..?
அவன் ஆணியை வைச்சு கார்லே எதோ கிறுக்கிட்டு இருந்து இருக்கான்  ..
திடீர்னு பார்த்தாரே மனுஷன்..  கையிலே கிடைச்சதை எடுத்து , ஓங்கி ஒரே போடு.. கையிலே பட்டு, ஒரு விரலு துண்டாப் போச்சு.. ...ரத்தம் .. தர தர னு ஊத்துது... பையனுக்கு ஒன்னும் புரியலை.. நடுங்கிறான்...  ஆ... ஊ...  னு அலறுறான்..


நம்ம ஆளு, அடிச்சுப் புடிச்சு ..ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போறாரு.. டாக்டரு , மருந்து எல்லாம் போட்டு, விரலை ஒட்ட வைச்சு ஸ்டிச் பண்ணி...  பையனை 

குணப்படுத்துறாங்க.. ... ஒரு நாள் ஆஸ்பத்திரிலே ரெஸ்ட் எடுக்கட்டும்.... நாளைக்கு டிஸ்சார்ஜ்  பண்ணிடலாம்  னு சொல்றாங்க...


பையன், "அப்பா --- நம்ம வீட்டுக்குப் போகலாம்பா" னு சொல்றான்...
நம்ம ஆளு பாவம்... அந்த பையனை விட.. அவருக்கு தான் கண்ணீர் அதிகம் வருது...   (பாசம் பாஸூ..  )

" வலிக்குதா கண்ணு... ?..  டாடி .. சாரி டா .... நீ கொஞ்ச நேரம் தூங்கு.. டாடி போய்.. உனக்கு மருந்து வாங்கிட்டு வந்துடுறேன்.. ஈவனிங் நாம வீட்டுக்கு போவோம்.. என்ன?  " 
பையன், பெயின் கில்லெர் லே , அப்படியே அசந்து தூங்குறான்..

நம்ம ஆளு, சோகமா .. நொந்து நூலாகி , வெளியே வர்றார்...

ச்சே,.. என்ன மடத்தனம் பண்ணிட்டேன்.. ஆத்திரம் என்னோட கண்ணை எப்படி மறைச்சுடுச்சு.. நலல வேளை ... இதோட போச்சு.. . பிஞ்சு குழந்தை .. என்ன நெனைச்சு இருப்பான்.. என்னைப் பத்தி.. . எங்கேயாவது எசகு , பிசகா .. முகத்துலே, கண்ணுலே பட்டு இருந்தா... ? ச்சே.. நான்லாம் மனுஷனே இல்லை..

நடந்துக் கிட்டே.. கார் பார்க் பண்ண இடத்துக்கு வர்றார்... அப்பதான்.. கார்லே அவர் பையன் கிறுக்கினதை பார்க்கிறார்... என்ன தெரியுமா எழுதி (கிறுக்கி )  இருக்கு?

எப்படி இருக்கும் அவருக்கு?

காதலுக்கு மட்டும் இல்லே.. பாசத்துக்கும் , கோபத்துக்கும்  கூட கண் இல்லை.. 
கோபம் வரும்போது.. நம்மோட உணர்ச்சிகளை கட்டுப் படுத்துறதும் முக்கியம்..  அப்படி பண்ணிட்டா  .. நம்மை மிஞ்ச யாருமே இல்லை... 

நீங்க ரொம்ப நேசிக்கிறவங்க கிட்டே தான் கோபம் ரொம்ப வரும்.. கோபத்தை குறைங்க... அதுக்கு பிறகு வாழ்க்கையே வசந்தமாகும்.. !!

வாழ்த்துக்கள் !!நுணுக்கமான ஒரு கால ரகசியம்.. ! சிறப்புக் கட்டுரை !

| Feb 25, 2011
இந்த வார சிறப்புக் கட்டுரை : 

ஜோதிட பாடங்கள் - எட்டு முடிந்த நிலையில், ஓரளவுக்கு நீங்கள் அடிப்படை தெரிந்து இருப்பீர்கள் என நம்புகிறேன். இன்று , நாம் பார்க்க விருப்பது - ஒரு மிக நுணுக்கமான - காலத்தின் ரகசியம் பற்றி.  


உங்கள் அருகில், உங்களுக்கு தெரிந்தவர்கள் - நீங்கள் மிக நன்றாக பழகியவர்கள் -  ஓஹோ என இருந்தவர்கள் (அல்லது)  இருக்க வேண்டிய அளவுக்கு திறமை இருப்பவர்கள் , திடீரென்று ... ஒட்டு மொத்தமாக அவர்களின் இமேஜ் சரிந்து , பாவமாய் இருப்பார்கள்.. கவனித்து இருக்கிறீர்களா?

பொதுவில் யார் யாருக்கெல்லாம், சந்திர தசை நடக்கும்போது - ஏழரை சனி அல்லது அஷ்டம சனி ,  சேர்ந்து வருகிறதோ -  அவர்களுக்கு , சொல்ல முடியாத அளவுக்கு கஷ்டங்கள் ஏற்படுகின்றன. குடும்பம், மனைவி, குழந்தைகள் , நண்பர்கள் என எந்த இடத்திலும் உதவி கிடைக்காத அளவுக்கு, அல்லது அவர்களிடம் ஏதாவது தகராறு ஏற்பட்டு , பிரச்னை ஆகி விடுகிறது.  மொத்தத்தில் , யாரையாவது கொன்று விடும் அளவுக்கு அவர்களுக்கு வெறி வருகிறது. அல்லது தற்கொலை செய்யும் அளவுக்கு விரக்தி எண்ணம் ஏற்படுகிறது.. அந்த அளவுக்கு , வாழ்வில் ஒடுங்கிப் போய் , மற்றவர்களின் கேலிக்கும், பரிதாபத்துக்கும் ஆளாகும் நிலை ஏற்படுகிறது. 


சந்திரன் - மனோ காரகன்.... சந்திரன் பலம் இழந்து ஜாதகத்தில் இருக்க , அவருக்கு சந்திர தசை நடக்கும்போது - சிலருக்கு புத்தியே பேதலித்து விடுகிறது. 

 ந்திர தசை - சனி புக்தி   ( அல்லது ) சனி தசை - சந்திர புக்தி -  இரண்டும் - அவ்வளவு மோசமான நேரங்கள் .
இந்த கால கட்டத்தில் -  ஒருவருக்கு பொருள் விரயம் ஏற்பட்டால் , வியாபார ரீதியாக நஷ்டம் ஏற்பட்டால், இதுவரை அவர் சம்பாதித்த அத்தனையும் இழந்து - வெளியில் கடன் வாங்கி , தப்பிக்கவே முடியவில்லை என்று சூழ்நிலை வந்தால்...  அவர் எவ்வளவோ புண்ணியம் செய்து இருக்கிறார்  என்று அர்த்தம்.. ஆம், சந்தேகமே இல்லை... உண்மையிலேயே நல்லவர்களுக்கு , அவர்கள் செய்த தவறுகளை மன்னித்து, இறைவன் இதோடு நிறுத்திக் கொள்கிறார். 


இந்த கால கட்டத்தில் - பொருள் இழப்பு / உயிர் இழப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாது என ஜோதிட விதிகள் கூறுகின்றன. பெரும்பாலோருக்கு , அவர் மனைவியை பிரிந்து விடும் சூழ்நிலை ஏற்படுகிறது. விவாக ரத்து அல்லது உயிர் பிரிதல். . இந்த மாதிரி ஒரு நிலை வருவதற்கு , பொருள் இழப்பே பரவா இல்லை அல்லவா?


 சமீபத்தில் ஏழரை சனி நடந்து முடிந்த கடக ராசி அன்பர்களும், சிம்ம ராசி நேயர்களும்.. பெரும்பாலோர் இந்த கால கட்டத்தை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கும். ஒரு சிலருக்கு சந்திர தசை - சனி புக்தி , அருகில் வர விருக்கும் சூழ் நிலை இருக்கும். 


உங்களால் முடிந்த அளவுக்கு,  வழிபாடுகள் மேற்கொண்டு இறை பலத்துடன், முழு கவனத்துடன் , இந்த கால கட்டத்தை நீங்கள் எதிர் கொள்ளுதல் நலம். 

சாதாரண நேரங்களில் சின்ன சின்ன ஊடல் களாய் முடிந்து இருக்க வேண்டிய விஷயங்கள் , இந்த நேரத்தில் - பூதாகரமாய் இருக்கும்.  


இந்த கால கட்டத்தில் , உங்களுக்கு தேவையான மனோ பலம் தருவது - இறையருள் மட்டுமே. அந்த பரம சிவனின் திருவடி நிழலை தஞ்சம் அடைய, தலைக்கு வந்தது , தலைப் பாகையோடு போக வைக்கும்,  


அருகில் இருக்கும் சிவ ஆலயத்திற்கு , செல்வதை வழக்கமாக கொள்ளுங்கள். 
சந்திர தசை நடக்கும் அன்பர்கள்,  சோம வார விரதம் ஆரம்பித்து , சிவ நாமம் சொல்லி ஜெபித்து வர , உங்களுக்கு ஏற்படும் தீமைகள் அனைத்தும், உங்களை நெருங்கவே நெருங்காது.


நமது இந்து மத மரபுப்படி , ஒரு சில தினங்களில் விரதம் அனுஷ்டிக்கும் முறை இருந்து வருகிறது.. ஒவ்வொரு மாதமும் ஏகாதசி இரண்டு முறை வருகிறது.. இந்த தினங்களில் விரதம் கடை பிடிப்பது , ஏராளமானோரின் பழக்கம். கிரகண நேரத்தைப் போலே, ஒரு சில கிரக கதிர்வீச்சுக்கள் இந்த தினங்களில் அதிகம் இருப்பதாகவும், செரிமானம் மிக கடினமாவதாகவும் , கண்டுபிடித்த நம் முன்னோர்கள் - இந்த ஏகாதசி தினத்தை விரத தினமாக கடை பிடித்தனர். 
பகவான் விஷ்ணுவின் பரிபூரண அருள் , இந்த விரதம் கடைபிடிப்பவர்களுக்கு கிடைக்கிறது.
விரதங்கள் ,  மனம் ஐம்பொறிகளின் தன்மைக்கு ஆட்பட்டு அலைபாயாது, பொய்யான ஆசைகளுக்கு ஆட்படாமல் மெய்ஞான வழியில் தங்களது நினைவை செலுத்த, நெறி பிறழாத நினைவால் இறைவனை ஒரு நிலைப்படுத்திய வழக்காக சில நியமங்களைக் கைக் கொள்ள வேண்டியுள்ளது.

முதலாவது மனக்கட்டுப்பாட்டுடன் உணவுக் ட்டுப் பாட்டினையும் கடைப்பிடித்திட வேண்டும். உணவின் தன்மைக் கேற்ற நமது சிந்தனைகள் மென்மை, கடினம் என்ற நிலையைப் பாதிப்பதால் உணவுகட்டுப்பாடு ஒழுக்கத்துடன், நமது முன்னோர்கள். விரதங்களை கடைப்பிடித்தனர் - .

கீழே காணப்படும் ஒன்பது விரதங்கள் - சிவ பெருமான் அருள் கிடைக்க உதவும் சக்தி வாய்ந்த விரதங்கள் ஆகும். . 
சோம வாரவிரதம்,  திருவாதிரை விரதம், உமா மகேஸ்வரி விரதம், சிவ ராத்திரி விரதம், கேதார விரதம், கல்யாண சுந்தர விரதம், சூல விரதம், இடப விரதம், பிரதோஷ விரதம், கந்த சஷ்டி விரதம் ஆகும்.

சோம வார விரதம்

சோம வார விரதம் - கார்த்திகை மாதம் முதல் சோம வாரத்திலிருந்து இருத்தல் வேண்டும் சோமா வாரத்தில் உண்ணா நோன்பு மேற்கொள்வது முறை இவ்விரதம் வாழ்நாள் முழுமையோ, ஓராண்டு , மூன்று ஆண்டுகள், 12 ஆண்டுகள் என்ற கணக்கில் அனுஷ்டிப் பதே முறை.

திருவாதிரை விரதம்

மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று இருவேளை உண்ணா நோன்பும். இரவு பால், பழத்தடன் முடித்துக் கொள்வது.

உமா மகேஸ்வரி விரதம்

இவ்விரதம் கார்த்திகை பௌர்ணமியில் இருக்க வேண்டும். இந்நாளில் ஒரு பொழுது பகல் உணவு அருந்தலாம். இரவு பலகாரம் பழம் சாப்பிடலாம்.

சிவராத்திரி விரதம்

இவ்விரதம் மாசி கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று இருத்தல் வேண்டும். அன்று உண்ணா நோன்பு மேற்கொள்வது சிறப்பு. நான்கு  ஜாமங்களும் உறங்காது சிவபூஜை செய்வது மிக நல்லது.

கேதார விரதம்

இந்த விரதம் புரட்டாசி மாதம் சுக்கிலபட்ச அஷ்டமி முதல் 21 நாட்களும் கிருஷ்ணபட்ச பிரதமை முதல் 14 நாட்களும் கிருஷ்ணபட்சத்து அ
ஷ்டமி முதல் 7 நாட்களும் கிருஷ்ணபட்சத்து சதுர்த்தியன்றும் இருத்தல் வழக்கம்.

இந்த விரதம் அனுஷ்டிக்கும் போது இருபத்தொரு  நூலிழைகளினால் காப்புகட்டிக் கொள்வது முறை ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டுதல் வேண்டும். இவ்விரதம் நிகழ்முறை முதல் 20 நாட்கள் ஒரு பொழுது மட்டும் உணவு கொள்ள வேண்டும். இறுதி நாளன்று உண்ணாவிரத இருத்தல் முறை.

கல்யாண சுந்தர விரதம்

இவ்விரதம் பங்குனி உத்திரத்தன்று மேற்கொள்ளப்படும் ஒரு பொழுது மட்டும் உணவு கொள்ளலாம் இரவில் பால் அருந்தலாம்.

சூல விரதம்

இந்த விரதம் தை மாசம் அமாவாசையன்று இருக்க வேண்டும். ஒரு பொழுது மட்டும் பகல் உணவு உட்கொள்ளலாம் . இரவு உண்ணா நோன்பு இருக்க வேண்டும்.

இடப விரதம்

இவ்விரதம் சுக்கிலபட்சம் அட்டமியன்று மேற்கொள்ள வேண்டும். ஒரு பொழுது பகல் உணவு மட்டும் உண்ணலாம்.

பிரதோஷ விரதம்

இவ்விரதம் சுக்கிலபட்ச திரயோதசி, கிருஷ்ணபட்ச
திரயோதசி ஐப்பசி அல்லது கார்த்திகை அல்லது வைகாசி மாதங்களில் சனி பிரதோஷம் முதல் மேற்கொள்ள வேண்டும். பகலில் உணவு உட்கொள்ளக்கூடாது. பிரதோஷம் கழிந்த பின் உணவு அருந்தலாம்.

கந்த சஷ்டி விரதம்

ஐப்பசி மாதம் சுக்கிலபட்சம் பிரதமை முதல் சஷ்டி வரை விரதம் மேற்கொள்ள வேண்டும். ஆறு நாட்களும் உண்ணா நோன்பிருத்தல் மிகமிக சிறப்பு ஒன்று முதல் ஐந்து நாட்கள் ஒரு பொழுது உணவு கொண்டு ஆறாம் நாள் முழுமையா உண்ணா விரதம் இருத்தல்.

இது ஆறு ஆண்டுகள் தொடர்ந்து செய்வது மிகமிக சிறப்பான நலம் பெறுதல் உண்டு. திருச்செந்தூர் சென்று விரதம் இருக்க விரும்புவோர், முன்கூட்டிய தேவஸ்தான நிர்வாக அதிகாரியைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவும். அவர்கள் நமது தேவைக்குரிய வைகளை ஏற்பாடு செய்து தருவதுடன் அதற்குரிய ஒரு சிறு கட்டணமாக பணம் செலுத்தச் சொல்வார்கள். சூரசம் ஹாரம் முடிந்து பிரசாதங்களுடன் வீடு வந்து சேரலாம்.

விருச்சிக ராசி அன்பர்கள் , ஏழரை சனி, அஷ்டம சனி  நடக்கும் அன்பர்கள் - முறைப்படி விரதம் இருந்து, பௌர்ணமி கிரிவலம் சென்று வந்தால் - மனோ காரகனின் பலம் கூடும். .. உங்களுக்கு வாழ்க்கை நல்ல முறையில் அமைய, அந்த சந்திர சேகரர் - ஆசிர்வாதம் அளிப்பார்... !!

பில்லி, சூன்யம், ஏவல் தொல்லைகளில் இருந்து உங்களை காக்க -- சரபேசர் வழிபாடு

| Feb 24, 2011
எங்கெல்லாம் சரபேசரின் சிலை உள்ளதோ,  அங்கெல்லாம் ஸ்ரீ கவச ஜலூசர் என்னும் சித்தரின் ஆத்மா , சிலை வடிக்கும் போதே உள்ளே புகுந்து விடுகிறது.
தனி சிலையாக இருந்தாலும், தூணில் இருந்தாலும் ....அருள்மிகு கம்பகரேசுவரர் திருக்கோயில் - திருப்புவனம் 

 
சரபேசர் அவதார நோக்கம் என்ன? அவரை வணங்குவதால் என்ன பலன்கள் என்று காண்போம்..

ஹிரண்யனை வதம் செய்வதற்காக நரசிம்மர் அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு , வதம் முடிந்த பின்னரும் தன்னுடைய உக்கிரத்தை அடக்க முடியாமல், இருக்க அவன் மார்பில் வாசம் செய்யும் அந்த "ஸ்ரீ" கூட நரசிம்மரின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் தவித்தாள். அண்ட சராசரங்களும் நடுங்கின அவரின் கோபத்தில். செய்வதறியாது திகைத்த தேவாதி தேவர்கள் சிவபெருமானைச் சரணடைய அவர் தான் ஒருத்தன் தான் இவரை அடக்கவல்லவன் என்று சொல்லி சரபரின் தோற்றத்தில் உருமாறியதாகக் காளிகா புராணம் சொல்லுகிறது.

இந்த சரபரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபர். தங்க நிறப் பறவையின் உடலும், மேலே தூக்கிய 2 இறக்கைகளும், 4 கால்கள் மேலே தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழேயும், மேலே தூக்கிய ஒரு வாலும், தெய்வீகத் தன்மை கொண்ட மனிதத் தலையும், அதில் சிங்க முகமும் கொண்ட ஒரு விசித்திரப் பிறவியாக உருமாறினார். இந்த அபூர்வப் பிறவி தோன்றியதும் போட்ட சப்தத்தில் நரசிம்மர் அடங்கியதாய்ச் சொல்வார்கள்.

சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்களாகவும், கூர்மையான நகங்களோடும், நாலு புறமும் சுழலும் நாக்கோடும், காளி, துர்க்கா ஆகியோரைத் தன் இறக்கைகளாகவும் கொண்டு வேகமாய்ப் பறந்து, பகைவர்களை அழிக்கும் இந்த சரபேஸ்வரரைப் "பட்சிகளின் அரசன்" என்றும் "சாலுவேஸ்வரன்" என்ற திருநாமத்துடனும் குறிப்பிடுகின்றனர். இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள் ப்ரத்யங்கிரா, மற்றும் சூலினி. இதில் தேவி பிரத்யங்கிரா சரபரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதாகவும், இவள் உதவியுடன் தான் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாகவும் சில குறிப்புக்கள் கூறுகின்றன. காஞ்சி புராணத்தில் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கப் பரமசிவன் வீரபத்திரரை அனுப்பியதாகவும், நரசிம்மம் ஆனது வீரபத்திரரைக் கட்டிப் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்ததாகவும், அந்தச் சமயம் சிவன் ஒரு ஜோதி ரூபமாக வீரபத்திரர் உடலில் புகுந்ததாகவும், உடனே சரபராக வீரபத்திரர் உருமாறி நரசிம்மத்தை அடக்கியதாகவும் கூறுகிறது. லிங்க புராணக் குறிப்புக்களும் இவ்விதமே குறிப்பிடுகிறது.

எப்படி இருந்தாலும் சரபேஸ்வரரின் சக்தி அளவிட முடியாதது. சத்ருக்களால் ஏற்படக் கூடிய பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றுக்கு மட்டுமில்லாமல் இவரைத் தரிசித்து முழு நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வந்தால் எல்லாவிதமான நோய்களையும் தீர்த்து வைப்பார் என்றும் கூறுகிறார்கள். 

இவரைக் "கலியுக வரதன்" என்றும் குறிப்பிடுகிறார்கள். "நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி" என்றும் குறிப்பிடுகின்றனர். தற்சமயம் காணப்படும் சரபர் மூர்த்தங்கள் யாவும் பிற்காலச் சோழர் காலத்தில் வந்தவை எனவும் சொல்கின்றனர். பழைய தஞ்சை மாவட்டத்தில் இருந்த தாராசுரம், திருபுவனம் போன்ற ஊர்களில் உள்ள கோவில்களில் சரபரின் சிற்பங்கள் காணப் படுகிறது. இதில் திருபுவனம் கோவிலில் தனி சன்னதி இருக்கிறது.  சிதம்பரம் கோவிலில்  தனிச் சன்னதி உள்ளது.  

ஞாயிற்றுக் கிழமை , தின பிரதோஷ நேரம் வரும் ராகு கால வேளையில் - சரபேசர் வழிபாட்டில் , கலந்து கொள்ளுங்கள்...

ஞாயிற்று கிழமை - பிரதோஷம் வந்தால் , தவறாமல் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்..  அபரிமிதமான பலன்கள் ஏற்படும்..

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் , நவக்கிரக சந்நிதி அருகில் - சரபேசர் சிலை , தூணில் உள்ளது... மஞ்சள் அல்லது சந்தன காப்பு அணிந்து நீங்கள் வேண்டினால், கேட்டது கிடைக்கும்..

சரபேசரை வணங்கினால் வியாதிகள், மனக்கஷ்டங்கள், கோர்ட் விவகாரங்கள், பில்லி சூன்யங்கள், ஏவல், மறைமுக எதிரிகள் தொல்லை, திருஷ்டி தோசங்கள், சத்ரு தொல்லைகள், ஜாதக தோசங்கள், கிரக தோசங்கள் அனைத்தும் நீங்கும்.

கல்வி, ஆரோக்கியம், ஆயுள் விருத்தி , மனம் விரும்பும் படியான வாழ்க்கை, உத்தியோக உயர்வு போன்ற நினைத்த காரியங்கள் கைகூடும்.குழந்தை பேறு கிடைக்கும் கடன் தொல்லை நீங்கும்.

சுவாமி கம்பகேசுவரரை வணங்குவோர்க்கு நடுக்கங்கள், நரம்புதளர்ச்சி,தேவையற்ற பயம், மூளை வளர்ச்சியடையாமல் இருத்தல் ஆகிய பிரச்சினைகள் நீங்கி ஆயுள் விருத்தி, நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.


அம்பாள் தருமத்தை வளர்த்து காப்பவள் என்பதால் அவளை வணங்குவோர்க்கு பாவங்கள் நீங்கப் பெறும்.பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.குழந்தை பாக்கியமும் கிடைக்கப்பெறுவார்கள்.


ஆயுள்பலமுள்ள குழந்தைகள் பிறக்க ( பாலாரிஷ்ட தோஷம் நீங்க ), ஒரு அற்புத ஸ்தலம்..

|

இன்று  நாம் பார்க்க விருப்பது, ஒரு அற்புதமான ஆலயம் பற்றி. வெளி உலகிற்கு அதிகம் பரிச்சயமாகாத, ஆனால் வியத்தகு பெருமைகளை தன்னகத்தே கொண்டுள்ள , ஒரு அற்புதமான ஆலயம்.. 


குழந்தைகள் பிறந்தாலும், இறை சித்தத்தால் நம்மோடு வாழக் கொடுத்து வைப்பதில்லை. இவர்களின் குறைதீர்த்து, ஆயுள்பலமுள்ள குழந்தைகள் பிறக்க அருள்செய்கிறார் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர். இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
 
ஸ்தல வரலாறு: 

சித்தர்கள் சிலர் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தனர். இவர்கள் நினைத்தபோதெல்லாம் சுந்தரேஸ்வரரை தரிசிக்க விரும்பினர். சித்தர்கள் தனித்து சிவனை வணங்குவதையே விரும்புவர். இதற்காக, இவர்கள் காட்டுப்பகுதியில் லிங்கம் இருக்கிறதா என தேடியலைந்தனர். ஓரிடத்தில் லிங்கம் ஒன்று இருந்தது. அதையே சுந்தரேஸ்வரராக கருதி வழிபட்டனர். 

ஆண்டிகளான சித்தர்கள் தங்கியதால், அந்தப்பகுதிக்கு ஆண்டிப்பட்டி என்று பெயர் வந்தது. பின்னர் மீனாட்சியம்மைக்கும் சன்னதி எழுப்பப்பட்டது. ஸ்தல  சிறப்பு: 

சூரியனும் சந்திரனும் அருகருகே அருள்பாலிக்கின்றனர். எனவே இங்கு தினமும் அமாவாசை தர்ப்பணம் செய்கின்றனர். சிவனுக்கும் அம்மனுக்கும் நடுவில் முருகன் சன்னதி அமைந்துள்ளதால், சோமாஸ்கந்த தலமாக உள்ளது. இதை வழிபட்டால் கைலாயத்தை வழிபட்ட பலன் கிடைக்கும். 

இத்தல பிள்ளையார் 'கோடி விநாயகர்' எனப்படுகிறார். இவரை ஒரு தடவை கும்பிட்டால் கோடி விநாயகரை கும்பிட்ட பலன் கிடைக்கும்

முருகன் வடக்கு பார்த்து மயில் மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.இந்த முருகனை தரிசித்தால் பழநி முருகனை தரிசித்த பலன் கிடைக்கும்

இங்குள்ள வீராசன தட்சிணாமூர்த்தியின் பாதத்தின் கீழ் சப்த ரிஷிகள் அருள்பாலிக்கின்றனர். 

கோயில் அமைப்பு: 

ஏழு நிலை ராஜகோபுரம் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது.மூலவர் சுந்தரேஸ்வர் கிழக்கு நோக்கியும், அன்னை மீனாட்சி தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். 


கோயில் பிரகாரத்தில் கோடி விநாயகர், சந்தான விநாயகர், நாகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை, சண்டிகேஸ்வரர், கஜலட்சுமி, நவக்கிரகங்கள், பைரவர் அருள்பாலிக்கின்றனர். ஆண்டிபட்டியை சுற்றியுள்ள ஊர்களில் நடக்கும் எந்த விழாவாக இருந்தாலும் இத்தலத்தில் வழிபாடு செய்த பின்னரே தொடங்கும்.

பிரார்த்தனை: 

குழந்தை பாக்கியத்திற்காக வழிபாடு செய்வதற்கு நாட்டில் பல கோயில்கள் இருந்தாலும்,  குழந்தை பிறந்து பிறந்து இறப்பவர்களின் குறை தீர்ப்பதற்காக ஒரு சில கோயில்களே உள்ளது. அதில் முதன்மையான கோயில் இது.

குழந்தை பிறந்து, பிறந்து இறக்கும் தோஷம் உளளவர்கள், இங்குள்ள சிவன், முருகன், அம்மன் மூவருக்கும் பாலபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்தால், தோஷம் நீங்கி பிறந்த குழந்தைகள் இறக்காது என பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.

குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள சந்தான விநாயகரை வழிபடுவது சிறப்பு. 

தீராத வழக்குகளில் சிக்கி தவிப்பவர்கள் இங்கு தினமும் மாலை வேளைகளில் விளக்கு போட்டு  வழிபடுவது நல்லது.

உணவு சாப்பிடுவதில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும், உணவு செறிமானம் ஆகாமல் வயிற்று வலியால் அவதிப்படுபவர்களும், இங்குள்ள சிவனுக்கு  சுத்தன்னம் நைவேத்தியம் படைத்து  அந்த பிரசாதத்தை சாப்பிட்டால்  விரைவில் குணமாகும்.
ஸ்தல பெருமை: 

சிவனாண்டி சித்தரின் ஜீவ சமாதி இங்குள்ளது. தீராத நோய்களால் அவதிப்படுபவர்கள் இவரது சன்னதியில் தரப்படும் விபூதியை பூசினால் நோய்கள் குணமாகும் என்று நம்புகிறார்கள். ஊர் செழிப்புடன் இருக்க, வெள்ளிக் கிழமைகளில் இங்குள்ள வேலுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. இங்கு திருமணம் செய்து கொண்டால், எந்தவித குறைபாடும் இன்றி வாழலாம் என்பதால், ஏராளமான திருமணங்களும் நடக்கின்றன.

திறக்கும் நேரம்: காலை 7 -12 மணி, மாலை 5.30 - இரவு 8.30 மணி.. 

இருப்பிடம்: மதுரையில் இருந்து தேனி செல்லும் வழியில் 60 கி.மீ., தூரத்தில் ஆண்டிபட்டி உள்ளது. இங்குள்ள சந்தை அருகே கோயில் அமைந்துள்ளது. போன்: 99527 66408, 94435 01421 . முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தல்ல , போட்டியிட்ட தொகுதி.. அதனாலே ஆண்டிபட்டிக்கு இன்னும் அறிமுகம் தேவையில்லைன்னு நெனைக்கிறேன்.. 

சுந்தரேஸ்வரரை வழிபட்டு, நல்ல அறிவுள்ள , ஆயுள் பலத்துடன் குழந்தை வரம் பெற்று , மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்கள்... !

அம்பிகையின் சக்தி பீடங்கள் தோன்றிய வரலாறு...

| Feb 22, 2011
சென்ற  வாரம்  நமது சக்தி பீடங்கள் பதிவைப் படித்து விட்டு , நமது நீண்ட நாள் வாசகர் " தெய்வம் " அவர்கள் தனது சந்தேகம் ஒன்றை அனுப்பி இருந்தார். "சார் , இந்த லிஸ்ட் லே சமயபுரம் வரவில்லையே?" என்று...
இந்த சக்தி பீடங்கள் லிஸ்ட் லே இல்லைனா என்ன? அங்கும், இங்கும் எங்கும் வியாபித்து இருக்கிறது - அந்த அன்னையின் அருள்... இந்த 51 இடங்கள் என்பது ஒரு ஐதீகம்..

நீங்க சொன்ன மாதிரி, என்னுடைய அனுபவத்திலே - எனக்கு முதல் முதல் லே --- ஒரு தெளிவான ஆன்மீக அதிர்வு ஏற்பட்ட இடம்.. சமயபுரம் தான்..
மத்தவங்க அம்மனை சாமியா பார்க்கலாம்...  ஆனா , நிஜமா என்னோட அம்மா வா தான் பார்க்கிறேன்... என்னோட டோட்டல் பவர் ஹவுசே --- "அம்மா" தான்..
 அம்மா படம் முன்னாலே , விளக்கு ஏத்தாமே , வீட்டில் இருந்து வெளியே கிளம்பவே மாட்டேன்...  அதனாலே , இந்த லிஸ்ட் லே இல்லையே னு " feel "  பண்ணாதீங்க...

சரி, இந்த சக்தி பீடங்களுக்கு பின்னாலே ... என்ன பின்னணி னு இப்போ பார்க்கலாம்... அப்படியே கொஞ்சம் திருவிளையாடல் படத்தை ஞாபகப் படுத்துங்க..அண்ட சராசரங்களுக்கும் அதிபதியாய் திகழக் கூடியவன் சிவபெருமான். திருமாலும் பிரம்மனும் அடி முடி காண முயன்ற போது ஜோதி வடிவாய் நீண்டு வளர்ந்து அவர்களை பிரமிக்க செய்தவன். இவ்வாறு அகில லோகத்திற்கும் நாயகனாக விளங்கக் கூடிய சிவபெருமான் தனக்கு மருமகனாக வர வேண்டும் என்று  ஆசை கொண்டான் ஒரு மன்னன். அவன் பெயர் தட்சன்.

தன்னுடைய ஆசையை நிறைவேற்ற எண்ணம் கொண்ட தட்சன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். அவனுடைய தவத்திற்கு இரங்கி வந்த சிவபெருமான் வேண்டிய வரங்களை கேள் என்று அவனிடம் கூறினார். தாங்கள் எனக்கு மருமகனாக வேண்டும். இதுவே  நான் விரும்பும் வரம் என்று தட்சன் கூறினான். கேட்டதை கேட்டபடியே கொடுக்கக் கூடிய எம்பெருமானாகிய சிவபெருமான் அப்படியே ஆகட்டும் என்று கூறி மறைந்தார்.

அதன் காரணமாக தட்சனுக்கு தாட்சாயணி என்ற பெயரில் ஒரு மகள் தோன்றினாள். அவளை சீரும் சிறப்புமாக வளர்த்த தட்சன் உரிய பருவம் வந்ததும் சிவபெருமானுக்கு மணமுடித்தான். சிவபெருமான் தனக்கு மருமகனாக வரவேண்டும் என்று தட்சன் ஆசைப்பட்டது உண்மையான அன்பின் காரணமாகவா? அதுதான் இல்லை அகில லோகத்திற்கும் அதிபதியாக விளங்கக்கூடிய சிவபெருமான் தனக்கு மருமகனாகி விட்டால் எல்லோரும் தனக்கு அடங்கி நடக்கக்கூடியவர்களாக ஆகிவிடுவார்கள் என்று நினைத்துதான் அவன் அந்த வரத்தினைக் கேட்டான்.

அனைத்தும் அறிந்த சிவபெருமானுக்கு இது தெரியாமல் போகுமோ? அவனுடைய ஆணவப் போக்கை புரிந்து கொண்ட அவர் எவரிடமும் சொல்லாமல் தாட்சாயணியை அழைத்துக் கொண்டு கைலாயம் போய் விட்டார். மாமனார் என்ற மரியாதை வைக்காமல் அவர் தாட்சாயணியை அழைத்துக் கொண்டு போய்விட்டதாக நினைத்தான் அவன். அதன் காரணமாக எம்பெருமானாகிய சிவபெருமானையே எதிரியாக நினைத்தான். அதன் காரணமாக ஒரு பெரிய யாகத்தை அவன் தொடங்கினான். சகல தேவர்களுக்கும் அழைப்பு அனுப்பினான்.

தேவர்களுக்கெல்லாம் தேவனான மகாதேவனுக்கு மட்டும் அழைப்பு இல்லை. யாகம் தொடங்கும் நாளும் வந்தது. சகல தேவர்களும் அந்த கூட்டத்தில் குவியத் தொடங்கினர். தாட்சாயணி யாகத்துக்குச் சென்று வர சிவபெருமானிடம் அனுமதி கேட்டாள். மதியாதார் தலைவாசல் மிதியாதே என்றார் மகாதேவன். ஐயனே யாகத்திற்கு செல்ல எனக்கு விருப்பம் இல்லை. தட்சனின் தவறினை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்த எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை தாங்கள் எனக்கு தர வேண்டும். சென்று வர அனுமதியளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள் தாட்சாயணி. பிறைசூடனாகிய எம்பெருமான் அதனை மறுத்து பேசுகிறார்: தாட்சாயணி சகல தேவர்களுக்கும் அழைப்பு அனுப்பியுள்ளான் அந்த தட்சன். வேண்டும் என்றே எனக்கு அழைப்பு அனுப்பவில்லை அவன் அழியும் காலம் நெருங்கிவிட்டது. அழிய போகிற ஒருவனை நல்வழிப்படுத்தப் போகிறேன் என்கிறாய். அது உன்னால் முடியாது. நீ போக வேண்டாம். போய் அவமானம் அடைய வேண்டாம் என்று கூறுகிறார்.

தாட்சாயணி விடவில்லை முயற்சி செய்து பார்க்க விரும்புகிறேன் தாங்கள் அதற்கு அனுமதி தந்தருள வேண்டும் என்று மீண்டும் கூறத் தொடங்கினாள். பிறந்த வீட்டார் அநியாயக்காரர்களாக இருந்தாலும் புகுந்த வீட்டில் அவர்களைப் பற்றி விட்டுக்கொடுக்காமல் பேசுவது பெண்களின் வழக்கம் அகிலாண்ட நாயகனின் துணைவியான தாட்சாயணியும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியாதல்லவா?

அதனை புரிந்து கொண்ட எம்பெருமான் போ என்று வெறுப்புடன் கூறினார். தாட்சாயணி யாக சாலைக்கு வந்தாள் தட்சனைப் பார்த்து அவள் பேசுகிறாள் தந்தையே.. மாமன் வீட்டில் விழா என்றால் முதல் அழைப்பு மருமகனுக்குத்தானே? சாதாரண குடிமகனுக்கு தெரிந்த இந்த நீதி உங்களுக்கு தெரியவில்லையா? என்றாள். அதைக் கேட்ட தட்சன் அடங்கா சினம் கொண்டான். என்னை மதிப்பவர்களை நான் மதிப்பேன். என்னை மதிக்காதவர்களை எதிர்க்க தயங்க மாட்டேன் என்று இருமாப்புடன் கூறினான் அவன்.

அதனைக் கேட்ட தாட்சாயணி கடுமையுடன் பேசுகிறாள். சிவபெருமான் உங்கள் மருமகன் என்று குறுகிய எண்ணத்தோடு நோக்க வேண்டாம். அகில லோகத்துக்கும் அதிபதி அவர். அவரை அவமதித்து அவனிலே வாழ முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவிர்பாகம் அளித்து ஆணவத்தை விடுங்கள் என்றாள். தட்சனின் கோபம் தலைக்கேறியது. சுடுகாட்டில் சுற்றித் திரியும் பித்தன் எனக்கு மருமகனும் அல்ல நீ எனக்கு மகளும் அல்ல. அழையாத வீட்டுக்கு வந்த உன்னை யாரும் எதிர்கொண்டு அழைக்கவில்லை. போய்விடு என்று கூச்சலிட்டான் ஆத்திரம் அவனது அறிவை மறைத்தன. சுடுகாட்டில் சுற்றித்திரியும் பித்தன் பேயன் என்றெல்லாம் எம்பெருமானை சாடினான். தட்சனின் வார்த்தகளைக் கேட்ட தாட்சாயணி எரிமலையாகிறாள்.

அவளுடைய கடும் கோபத்திலிருந்து உருவமற்ற காளி உருவெடுததாள் அதேசமயம் சிவபெருமானின் கோபததிலிருந்து வீரபத்திரன் தோன்றினான். சிவபெருமான் வீரபத்திரனைப் பார்த்து கூறுகிறார் வீரபத்திரா தட்சன் நமக்கு அவிர்பாகம் கொடுக்க மறுத்தால் அவனையும் யாகத்தையும் அழித்து வருக என்றார். எம்பெருமானின் கட்டளையை ஏற்ற வீரபத்திரன் வேகமாக யாக சாலைக்கு வந்து , "ஏ தட்சனே அகிலாண்ட நாயகனான ஆதிசிவனுக்கு அவிர்பாகம் அளிக்காமல் நீ யாகத்தை நடத்த முடியாது. அறியாமை காரணமாக யாகத்தை தொடங்கியிருக்கிறாய். மன்னிப்பு கேட்டுக் கொண்டு ஆண்டவனை பணிந்தால் உனக்கு உயிர் பிச்சை கொடுக்கிறேன். இல்லையேல் உன்னையும் உன் யாகத்தையும் உருத்தெரியாமல் ஆக்கிட உத்தரவு பெற்று வந்திருக்கிறேன். உன் முடிவை நீயே முடிவு செய்துகொள்" என்றான்.

வீரபத்திரன் கூறியும் தட்சனுக்கு புத்தி வரவில்லை. ஆணவத்துடன் வார்த்தைகளை கூறினான். உடனே காளியாக தோன்றிய தாட்சாயணியும் வீரபத்திரனும் சேர்ந்து யாகத்தை நிர்மூலமாக்கினார்கள். யாகத்திற்கு வந்திருந்த தேவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். தட்சனின் தலை கீழே உருண்டது. சற்று நேரத்திற்கு முன்வரை ஆணவமாக பேசிய அவன் தலை கீழே உருண்டது.

தட்சனாகிய கொடியவன் வளர்த்த அந்த உடலை அவள் வெறுத்தாள். அகிலாண்ட நாயகனை அவமதித்தவனின் மகள் என்று உலகம் கூறுவதை அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதன் காரமணமாக தன் உடலை அவள் தீக்கிரையாக்கினாள். தீயிலே கருகிய அவள் உடலை கண்டு சிவபெருமான் துயரம் கொண்டு அவளின் உடலை தோளில் தாங்கி ருத்ர தாண்டவம் ஆடினார். அவருடை ஆட்டத்தில் அண்ட சராசரங்களும் ஆடின. அனைத்து உயிர்களும் என்ன நடக்குமோ என்று அதிர்ச்சி அடைந்தன.

அவருடைய ஆட்டத்தை நிறுத்த திருமால் தன்னுடைய சக்ராயுதத்தை ஏவினார். அந்த சக்கரம் தாட்சாயணியின் உடலினை சிதைத்து துண்டு துண்டுகளாக்கியது. சிதறிய அந்த துண்டுகள் பாரத தேசம் முழுவதும் விழுந்தன. அந்த துண்டுகள் விழுந்த இடங்களே சக்தி பீடங்களாகவும் அன்னையின் ஆலயங்களாகவும் இன்று திகழ்ந்து கொண்டிருக்கின்றன.

பிறகு, அந்த மகேசன் அன்னையை திரும்பவும் வரவழைத்தார்..

 அந்த 51 இடங்களிலிருந்து , அன்னை பராசக்தி யின் ஆத்ம சக்தி , பல்கிப்  பெருகி - இன்றும்  உலகை, நாடி வரும் பக்தர்களை  - காத்துக் கொண்டு இருக்கிறது.. !!

பக்தர்களின் துயர் துடைக்க , நமக்கு ஒரு வழியை ஏற்படுத்த - அன்னை நடத்திய ஒரு திருவிளையாடல் இது.. ..!!

ஆனால் ஒன்று மட்டும் சர்வ நிச்சயம்.. இந்த இடங்களில் மட்டும் அல்லாது , ஒரு சில இடங்களில், ஆலயங்களில் - அன்னையின் அருள் , பொங்கி வழிகிறது ...  இதைக் கண் கூடாக உணர முடியும்...!!

ஜோதிட சூட்சுமங்கள் : (ஜோதிட பாடம் : 08 )

|
வாசக  அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்னைக்கு நாம பார்க்கப் போகிற பாடம் , ரொம்ப இரத்தின சுருக்கமா இருக்கும். இதிலே வர்ற ஒவ்வொரு விஷயங்களையும், , நாம விரிவா - பின்னாலே பார்க்கப் போகிறோம்..  அதனாலே , கீழே கொடுக்கப் பட்டுள்ள விஷயங்களை நல்லா புரிஞ்சுக்கோங்க. ... பின்னாலே உங்களுக்கு ஈஸியா இருக்கும். 

ஜோதிடர்கள் ஜாதகத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் வீடு
என்பார்கள்.உங்களுடைய லக்கினம் எதுவோ -அதுவே பிரதானமானது.

அதிலிருந்து துவங்குவதுதான் எல்லா பலாபலன்களும்.

லக்கினத்தை - முதல் வீடு என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

- 1 , 5 , 9 - ஆகிய வீடுகள் - திரி கோண ஸ்தானம்.  (லக்ஷ்மி ஸ்தானம்)

- 1 , 4 , 7 ,10 -  கேந்திர வீடுகள் என்பர்.  ( விஷ்ணு ஸ்தானம் )

- 3, 6 , 8 , 12 - மறைவு  வீடுகள் என்று கூறுவர்.  அதாவது , இந்த வீட்டில் இருக்கும் கிரகங்கள் - பலம் இழந்து இருக்கும்..

- 2 , 11 - உப , ஜெய ஸ்தானங்கள் என்பர்.

===================

1 ஆம் வீடு  - திரி கோணமும் , கேந்திரமும் ஆகிறது...
எந்த ஒரு கிரகமும் - திரி கோணத்திலோ , கேந்திரத்திலோ - நின்றால் - அது மிக்க பலத்துடன் நிற்கிறது என்று அர்த்தம்.   

2 , 11 - வீடுகளில் நின்றால் - பரவா இல்லை , நல்லது.

3 ஆம் வீடு - சுமார்.

6 ,8 ,12 - ஆம் வீடுகள் -  நல்லதுக்கு இல்லை. அப்படினா என்ன, ஒரு சுப கிரகம் , இந்த வீடுகள் லே இருந்தா, அதுனாலே ஏதும் , பெருசா  நல்லது பண்ண முடியாது.

=================================================

ஒரு கிரகம் கெட்டு விட்டது , பலம் இல்லை என்று எப்படி கூறுவது?

ஒரு கிரகம் , நீசம் ஆகி இருந்தால்....  மறைவு வீடுகளில் இருந்தால்...  பகை வீட்டில் இருந்தால்... பகை கிரகங்களுடன் சேர்ந்து இருந்தால்... , அந்த கிரகம் சரியான நிலைமையில் இல்லை என்று பொருள்.


====================================

ஒவ்வொரு லக்கினத்தையும் -  நெருப்பு, நிலம், காற்று ,  நீர் - ராசிகள் என்று கூறுவர்.  

மேஷம், சிம்மம் , தனுசு  - நெருப்பு ராசிகள்
ரிஷபம், கன்னி ,  மகரம்  - நிலம் ராசிகள்
மிதுனம், துலாம் ,  கும்பம்  - காற்று ராசிகள்
கடகம் ,  விருச்சிகம் ,  மீனம்  - நீர் ராசிகள்.

இதை ஈஸியா நீங்க ஞாபகம் வைக்கிறதுக்கு ஒரு ஐடியா இருக்கு,.

இங்கிலீஷ் லே - FIRE , LAND , AIR , WATER   ----------  முதல் எழுத்துகளை மட்டும் ஞாபகம் வைச்சுக்கோங்க..   FLAW  ...... (எப்பூடி....? )

===========================

லக்கினங்களை -  சரம் , ஸ்திரம் , உபயம்  னு மூணு வகைப் படுத்தலாம்.

மேஷம் , கடகம் , துலாம், மகரம்    -   சர ராசிகள்  
ரிஷபம், சிம்மம் ,  விருச்சிகம் , கும்பம்  - ஸ்திர ராசிகள்
மிதுனம் , கன்னி , தனுசு ,  மீனம்  - உபய ராசிகள் .

இதனோட , அமைப்பு என்ன ,  ஏதுங்கிறது - பின்னாலே நாம விரிவா , அலசி ஆராயப் போறோம்.. இப்போதைக்கு , இத தெரிஞ்சுக்கோங்க...

============================================

கிரகங்களின் பார்வைகள் :

எல்லா கிரகங்களுக்கும் - பொதுவா ஏழாம் பார்வை உண்டு.  அதாவது , எந்த ஒரு கிரகமும் , நேர எதிர  இருக்கிற ஏழாம் வீட்டைப் பார்க்கும். ....

சரி பார்க்கட்டும்... அதுக்கு என்ன? 

உங்க வீட்டுக்கு எதிரிலே நல்ல ஒரு வாத்தியார் இருக்கிறார்.. .. எப்படி இருக்கும்..?  அதுவே ஒரு பேட்டை ரவுடி இருந்தா..?

சுப கிரகம் , பார்த்தா அந்த வீடு வளம் பெறும்.  பாவ கிரகம் பார்த்தா , நல்லது இல்லை.

எல்லா கிரகத்துக்கும் ஏழாம் பார்வை - பொது.
சனி க்கு -  3 , 10 ஆம் பார்வைகள் உண்டு. 
செவ்வாய்க்கு - 4 , 8 ஆம் பார்வைகளும் உண்டு.
குருவுக்கு - 5 , 9 ஆம் பார்வைகளும் உண்டு.

இதை நல்லா ஞாபகம் வைத்துக் கொள்ளவும். 

இது போக - சூரியனுக்கு - 3 , 10 ஆம் பார்வைகளும் ; ராகு , கேது - 3 , 11 ஆம் பார்வைகளும், சுக்கிரனுக்கு - 4 , 8  - ஆம் பார்வைகளும் உண்டு... ஆனால் , இவை முக்கியத்துவம் பெறுவதில்லை.

=====================================================

இதை எல்லாம் எதுக்காக இப்போ உங்களுக்கு சொல்லி இருக்கிறேன்னா,  நாம் அடுத்த பாடத்திலேயே , ஜாதகம் வைச்சு , ஆராயப் போறோம்.. நான் பாட்டுக்கு குரு  இங்கே பார்க்கிறாரு, சனி இங்கே பார்க்கிறாரு னு சொன்னா ... டக்கு னு புரியணும் இல்லியா..?

=======================================

சரி இப்போ ---  ஓரிரு வார்த்தைகளில், 12 வீடுகளைப் பத்தி பார்ப்போம்..
இது ஒன்னொன்னும் - ஒவ்வொரு கட்டுரை எழுதுற அளவுக்கு - விரிவா பார்க்க வேண்டிய விஷயம்... இப்போதைக்கு , ஷார்ட் அண்ட் ஸ்வீட் ...

லக்கினம் -  முதல் வீடு - ஜாதகரைப் பத்தி சொல்லும். ஆளு பார்க்கிறதுக்கு எப்படி ...தோற்றம்?  குண நலன்கள் ........ ஒவ்வொரு லக்கினத்துக்கும் , சில அடிப்படை பண்புகள் இருக்கு...

இரண்டாம் வீடு - தனம் , குடும்பம், வாக்கு , ஆரம்ப கால கல்வி

மூன்றாம் வீடு - தைரியம், வீர்யம், இளைய சகோதரம்,,,

நான்காம் வீடு - கல்வி , மாதுர் ஸ்தானம் (தாய்), வாழும் வீடு, வாகனம், சுகம் .....

ஐந்தாம் வீடு -  பூர்வ புண்ணியம், குழந்தைகள்,  குல தெய்வம், முற் பிறவி 

ஆறாம் வீடு - கடன், நோய், எதிரிகள்

ஏழாம் வீடு - நண்பர்கள் , கணவன் / மனைவி

எட்டாம் வீடு - ஆயுள் , (பெண்களுக்கு - மாங்கல்ய ஸ்தானம் ), திடீர் எழுச்சி , வீழ்ச்சி , வில்லங்கம், சிறை, மான பங்கம், அவமானம்

ஒன்பதாம் வீடு - பாக்கிய ஸ்தானம் , பிதுர் (தந்தை) ஸ்தானம் ...

பத்தாம் வீடு - கர்ம ஸ்தானம்


பதினொன்றாம் ஸ்தானம் - லாபம், இரண்டாம் திருமணம் , மூத்த சகோதரம்

பன்னிரண்டாம் ஸ்தானம் - விரயம் , அயன , சயன போகம்..  அப்படினா? ஒழுங்கா தூங்குறது..... படுக்கை சுகம்...


இதெல்லாம் சில முக்கிய பலன்கள் பார்க்கிறதுக்கு ... இதை தவிர நிறைய விஷயங்கள் இருக்கு... அதை எல்லாம்... கொஞ்சம் கொஞ்சமா ...அப்புறம் பார்ப்போம்..
=========================

நவ கிரகங்களில் - ஒவ்வொரு வீட்டுக்கும் - ஒருவர் காரகம் பெறுகிறார்....
நாம் ஏற்கனவே கொடுத்துள்ள நவ கிரகங்களின் காரகத் துவங்களை, ஒரு தடவை திரும்ப பாருங்க... 

===========================


சரி, இப்போ உதாரணத்துக்கு  -  ஒரு ஜாதகர் அவரோட அம்மாவை பத்தி பார்க்கணும்... னு நினைக்கிறார்...

என்ன , என்ன விஷயம் பார்க்கணும்.... சொல்லுங்க பார்ப்போம்...


First   ----

ஜாதகர் -  லக்கினத்தில் இருந்து  -   4   ஆம் வீடு  .... என்ன னு பார்க்கணும்..
அந்த வீட்டு அதிபதி யார்? அவரு எங்கே இருக்கிறார்..?  நல்ல வீட்டிலே இருக்கிறாரா..? உச்சம் , ஆட்சி , நட்பு வீடு..? மறைவு வீடு இல்லாம இருக்கிறாரா?  சுப கிரகசேர்க்கை இல்லை பார்வை உண்டா..?
  நீசம் இல்லாம , பகை இல்லாம?  அவர் கூட எதாவது பாவ கிரகம் இருக்கா...? ஏதாவது பாவ கிரகம் அவரை பார்க்குதா ?

4 ஆம் வீட்டிலே  ஏதாவது - சுப கிரகம் இருக்கா..?  பாவ கிரகம் இருக்கா..?


4 ஆம் வீட்டின் அதிபதி - எந்த நட்சத்திர சாரம்  வாங்கி இருக்கிறார்..? அவர் நிலைமை யை யும்.. கவனிக்கணும்....


அது மட்டும் இல்லை...   சந்திரன் நிலைமை என்ன னு பார்க்கணும்.. எதுக்கு சந்திரன்...   ???

சந்திரன் தானே மாதுர் காரகன்,...?? மறந்துட்டீங்களா  ...?  மேலே சொன்ன எல்லாக் கேள்விக்கும்  , சந்திரனை வைச்சும் பார்க்கணும்... ..

இப்போ கோச்சார ரீதியா... கோள்கள் எங்கே இருக்கு...  அதனோட பார்வைகள் எங்கே .. எல்லாம் பார்த்துக்கிடனும்..?
==================

சரி , அம்மாவோட ஆயுள்.. பார்க்கணும்...  So ,  4 ஆம் வீட்டில் இருந்து - 8 ஆம் வீடு .. பார்க்கணும்..  கரெக்டா..?  அப்படினா..? லக்கினத்தில் இருந்து.. 11 ஆம் வீடு..  திரும்ப மேலே சொன்ன எல்லாக் கேள்விக்கும்.. பாருங்க..

OK வா  ....?
======================================

 
  சரி, ....   இப்போவே... கிர்ருனு ஆகுது னு... back அடிக்காதீங்க... .... இன்னும் கொஞ்சம் பாடங்கள் படிச்சீங்கனா... ஒண்ணுமே கஷ்டமா இருக்காது...

நீங்க எல்லாம் --- நல்லா ஆர்வமா கத்துக்கிட வந்து இருக்கீங்க... இன்னைக்கு நாட்டிலே நெறைய ஜோஷ்யருங்க ... படிப்பு ஏராம ,  படிக்க கஷ்டப் பட்டுக்கிட்டு.. பொழைக்க வழி தேடி.. ஜோதிடம் னு சொல்லிக் கிட்டு , அவங்க தலையிலேயே  .. ஏறுதாம்... ..  உங்களை மாதிரி " Genius " க்கு எல்லாம்  , இது சர்வ சாதாரணம்...


ரொம்ப ஈஸியா... பிக் அப் பண்ணிடலாம்... ஒரு வேளை , நான் சொல்லிக் கொடுக்கிறது , சரி இல்லாம இருக்கலாம்...   புரியலை னா...  கேளுங்க... என்னாலே முடிஞ்ச அளவுக்கு சொல்லித் தர்றேன்..

கொஞ்சம் , கொஞ்சமா - பின்னாலே ஒரு சில விதிக்கு , என்ன என்ன காரணம் னு தெளிவா பார்க்கப் போறோம்...  அதை எல்லாம்  , தெரிஞ்சு கிட்டீங்க  னா -  physics , chemistry மாதிரி ஜோதிடமும் ஒரு க்ளியரான சப்ஜெக்டா தெரியும் உங்களுக்கு.. ..

எது , எப்படியோ.. ஆனா ... கண்டிப்பா இண்டரஸ்டிங் ஆ இருக்கும்... அதுக்கு நான் கேரண்டி... எப்படி தெரியுமா...?   வெறுமனே விதிகளைப் பத்தி மட்டும் வைச்சு பார்க்கப் போறது இல்லை... என்னுடைய அனுபவத்திலே... நான் கண்ட , ஆராய்ந்த அமைப்புகள்... விதியில் இல்லைனா கூட.. அனுபவத்திலே, . நடைமுறை லே ஒத்து வர்ற விஷயங்களை யும் பார்க்கப் போறோம்...

அதனாலே, அவசரமே படாதீங்க.. பட்டையக் கிளப்பலாம்  ..

சரி, இன்னைக்கு இவ்வளவு போதும்.. அடுத்த பாடத்திலே பார்ப்போமா ?
====================================

பழைய பாடங்களையும் , அப்பப்போ  ரிவைஸ் பண்ணுங்க... பாஸு... !!

பதிவு படிக்கிற வாசகர்கள் , உங்க கருத்துகளை மறக்காம , கமெண்ட்ஸ் பகுதிலே அனுப்புங்க...
==========================================      (  ஜூட்...)

லக்ஷ்மி கடாட்சம் பெருக உதவும் ஸ்தோத்ரம்

| Feb 21, 2011
 இந்த ஸ்தோத்திரம் தினம் ஜெபிக்கும் நபர்களுக்கு - செல்வம் அவர்களிடம் தங்க ஆரம்பிக்கும்...  இந்த ஸ்லோகத்தின் பெயர் -  கனகதாரா ஸ்தோத்ரம்
நான், தனிப்பட்ட முறையில் எனது சக நண்பர்களுக்கு - அதிக அளவில் பரிந்துரைத்த ஸ்லோகம் இது..  நமது வாசகர்களுக்காக...
ஒரு ஏழைப் பெண்மணியானவள், வாசலில் வந்து பிச்சை கேட்டு நிற்கும் சன்னியாசிக்கு பிச்சையிட வீட்டில் எதுவுமில்லையே என்று வருந்தி, வீட்டு மாடத்திலிருந்த ஒரு நெல்லிக்கனியை எடுத்து வந்து, கண்ணீருடன் அந்த சன்னியாசியிடம்  சமர்ப்பித்தாள்.  

இவளுடைய உண்மையான பக்தியையும், அவளுடைய ஏழ்மை நிலையையும் கண்டு கொண்ட சன்னியாசி  வேடத்திலிருந்த ஆதிசங்கரர், கனகதாரா ஸ்தோத்ரம் சொல்லி, பொன்மழை பெய்ய வைத்தார் என்பது சரித்திரம்.  அந்தப் பெண்மணியை போல் மனமுவந்து, இருப்பதை கொடுத்து, நிறைய கொடுக்க இயலவில்லையே என்று வருத்தப்படுபவர் இருந்தால், பொன்மழை பெய்யலாம்கனகதாரா ஸ்தோத்ரம் 


அங்கம்ஹரே: புலகபூஷணமாஸ்ரயந்தீ
ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம்
அங்கீக்ராதாகில விபூதிரபாங்கலீலா
மாங்கல்யதாஸ்து மம மங்களதேவதாய:


முக்தாமுஹுர்விதததி வதநே முராரே:
பிரேமத்ரபாப்ரணிஹிதாநி கதாகதாநி
மாலா த்ருஸோர் மதுகரீவ மஹோத்பலே யா
ஸா மே ஸ்ரியம் திஸது ஸாகரஸம்பவாயா:


ஆமீலிதாக்ஷமதிகம்ய முதா முகுந்தம்
ஆநந்தகந்தமநிமேஷமநங்க தந்த்ரம்
ஆகேகரச்திதகநீநிகபக்ஷ்மநேத்ரம்
பூத்யை பவேந் மம புஜங்க ஸயாங்கநாயா:


பாஹ்வந்தரே மதுஜித: ஸ்ரிதகௌஸ்துபே யா
ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி
காமப்ரதா பகவதோ(அ)பி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹது மே கமலாலயாயா:


காலாம்புதாலி லலிதொரஸி கைடபாரே:
தாராதரே ஸ்புரதி யா தடிதங்கநேவ
மாது ஸமஸ்தஜகதாம் மஹநீயமூர்த்தி:
பத்ராணி மே திஸது பார்க்கவ நந்தநாயா:


ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்யபாஜி மதுமாதிநி மந்மதேந
மய்யாபதேத் ததிஹ மந்த்ரமீக்ஷணார்த்தம்
மந்தாலஸம் ஸ மகராலய கந்யகாயா:


விஷ்வாமரேந்த்ரபத விப்ரமதாநதக்ஷம்
ஆநந்தஹேதுரதிகம் முரவித்விஷோ(அ)பி
ஈஷந்நிஷீதது மயி க்ஷணமீக்ஷணார்த்த
மிந்தீவரோதர ஸஹோதர மிந்திராயா:


இஷ்டாவிஷிஷ்டமதயோபி யாயா தயார்த்த
ஸ்ருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் சுலபம் லபந்தே
திருஷ்டி: ப்ரஹ்ருஷ்ட கமலோதர தீப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா:


தத்யாத் தயாநுவபநோ த்ரவிணாம்பு தாரா
மஸ்மிந்நகிஞ்சந விஹங்கஸிஸௌ விஷண்ணே
துஷ்கர்ம கர்ம மபநீய சிராய தூரம்
நாராயண ப்ரணயிநி நயநாம்புவாஹ:


கீர்தேவதேதி கருடத்வஜ ஸுந்தரீதி
ஸாகம்பரீதி ஸஸிஸேகர வல்லபேதி
ஸ்ருஷ்டிஸ்திதி ப்ரளயகேளிஷு ஸம்ஸ்திதா யா
தஸ்யை நமஸ்த்ரிபுவநைக குரோஸ்தருண்யை


ஸ்ருத்யை நமோஸ்து ஸுபகர்மபலப்ரஸுத்யை
ரத்யை நமோஸ்து ரமணீய குணார்ணவாயை
சக்த்யை நமோஸ்து சதபத்ரநிகேதநாயை
புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை


நமோஸ்து நாளீகநிபாநநாயை
நமோஸ்து துக்தோததி ஜந்ம பூம்யை
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
நமோஸ்து நாராயண வல்லபாயை


நமோஸ்து ஹேமாம்புஜ பீடிகாயை
நமோஸ்து பூமண்டலநாயிகாயை
நமோஸ்து தேவாதிதயாபராயை
நமோஸ்து ஸார்ங்காயுதவல்லபாயை


நமோஸ்து தேவ்யை ப்ருகுநந்தநாயை
நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்தியயை
நமோஸ்து லக்ஷ்ம்யை கமலாலயாயை
நமோஸ்து தாமோதரவல்லபாயை


நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை
நமோஸ்து பூத்யை புவநப்ரஸூத்யை
நமோஸ்து தேவாதிபி ரர்ச்சிதாயை
நமோஸ்து நந்தாத்மஜவல்லபாயை


சம்பத்கராணி சகலேந்த்ரிய நந்தநாதி
சாம்ராஜ்யதாநவிபவாநி ஸரோருஹாக்ஷி
த்வத்வந்தநாதி துரிதாஹரணோத்யதாநி
மாமேவ மாதரநிஸம் கலயந்து மாந்யே


யத்கடாக்ஷஸமுபாஸநாவிதி:
ஸேவகஸ்ய ஸகலார்த்தஸம்பத:
ஸந்தநோதி வசநாங்க மாநஸை:
த்வாம் முராரிஹ்ருதயேஸ்வரீம் பஜே


ஸரஸிஜநிலயே ஸரோஜஹஸ்தே
தவள தமாம்ஸுக கந்தமால்யஸோபே
பகவதி ஹரிவல்லபே மநோக்ஞே
த்ரிபுவநபூதிகரி ப்ரஸீத மஹ்யம்


திக்கஸ்திபி: கனககும்பமுகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாஹிநீ விமலசாரு ஜலாப்லுதாங்கீம்
ப்ராதர்நமாமி ஜகதாம் ஜநநீ மஸேஷ
லோகாதிநாத க்ருஹிணீ மம்ருதாதிபுத்ரீம்


கமலே கமலாக்ஷவல்லபே த்வம்
கருணாபுர தரங்கிதைரபாங்கை:
அவலோகய மாமகிஞ்சநாநாம்
ப்ரதமம் பாத்ரமக்ருத்ரிமம் தயாயா:


ஸ்துவந்தி யே ஸ்துதிபிரமீபிரந்வஹம்
த்ரயீமயீம் த்ரிபுவநமாதரம் ரமாம்
குணாதிகா குருதரபாக்யபாகிந:
பவந்தி தே புவி புதபாவிதாஸயா: 

கீழே கொடுக்கப்பட்டுள லிங்க் - உங்கள் உச்சரிப்பை சரி பார்க்க உதவும்..

நமது (Living Extra .com ) வாசகர்களுக்கு மட்டும்.... !!

|

நமது (Living Extra .com )  வாசகர்களுக்கு மட்டும்.... !!

நாம் ஜோதிட பாடங்கள் ஆரம்பித்து ஏழு பாடங்கள் , பதிப்பித்து விட்டோம்... ஏழாவது பாடத்தின் முடிவில்... நான் நமது வாசர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்து இருந்தேன்... யார் , யார் எல்லாம் ஜோதிட பாடங்களை , ஆரம்பத்தில் இருந்து , முறையாக படித்து வருகிறார்களோ, அவர்கள் தமது கருத்துக்களை - எனது E -மெயில்  முகவரியிலோ, அல்லது (Comments ) பின்னூட்டத்திலோ , பதிவு செய்யுங்கள் என்று .

 ஒரு சிலரை தவிர யாரும் அதைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை . ஒன்று நமது பதிவை , சரியாக படிக்காமல் இருந்து இருக்கலாம். .. இல்லை மேம் போக்காக படித்து இருக்கலாம்... கவனிக்காமலே விட்டு இருந்திருக்கலாம்.  
(ஒருவேளை மேலும் தொடர வேண்டாம் என்பதே , பெரும்பாலோர் விருப்பமோ? )

ஜோதிட பாடம் என்பது , ஏனோ தானோ என்று - ஒரு ஆர்வம் இல்லாமல் படித்தால் , வசப் படாது...  மிக சரியாக புரிந்து கொள்ள வேண்டும். சந்தேகங்களை , உடனுக்குடன் தெளிவு படுத்த வேண்டும்.... எனது தரப்பிலும், உங்கள் தரப்பிலும் இருந்து... 2 way communication - இருத்தல் வேண்டும்.. நான் மட்டும் .... சொல்லிக் கொண்டே போவதால் பயன் இல்லை... 

கிட்டத்தட்ட ஒரு குருகுலம் போல  - நமது ஆசிரியர் குழுவுக்கும், வாசகர்கள் வட்டத்திற்கும் - ஒரு புரிந்து உணர்தல் வேண்டும்...  நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு - E -மெயில் , அனுப்புகிறீர்களோ - அவ்வளவுக்கு , உங்களை பற்றி , நாங்களும் அறிந்து கொள்ள முடியும்... 

பத்திரிக்கைகளில், நாம் எத்தனையோ நல்ல விஷயங்களை , கதைகளைப் படித்தாலும் - கடிதம் போடுவது என்பதே இல்லை ... கூச்சம், சோம்பேறித்தனம். .. ஆனால் இணையத்தில்  உங்களுக்கு - கமெண்ட்ஸ் போடுவது - ஒரு நிமிட வேலை... மின்னஞ்சல் அனுப்ப - 5 நிமிடங்கள் ஆகலாம்.

ஒரு பதிப்பாளராக, உங்கள் கருத்துக்கள் மட்டுமே - எங்களுக்கு வினையூக்கி... நாங்கள் இன்னும் மெருகேற , அது மட்டுமே நாங்கள் உங்களிடம் இருந்து எதிர் பார்ப்பது... 

நீங்கள் தமிழிலோ, ஆங்கிலத்திலோ - தாராளமாக  எழுதி அனுப்பலாம்.. 

நீங்கள் எத்தனை பேர், ஜோதிட பாடங்களை - ரெகுலராக படிக்கிறீர்கள் , என்ற எண்ணிக்கை தெரிந்தது கொள்வதற்காக மட்டுமே.  .... நம் இருவருக்கும் உள்ள தகவல் மரிமாற்றம் , ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும்.. 

ஜோதிட ஆலோசனை கேட்டு வரும் கடிதங்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, எனது அலை பேசி எண்ணை தருவது , எனது privacy க்கு  நல்ல தல்ல என்றே தோன்றுகிறது.ஒரு சில அன்பர்கள் , எடுத்த எடுப்பிலேயே - cell no . கேட்கிறார்கள்.. தயவு செய்து , தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்..   ஆதலால் " மின்னஞ்சலிலேயே " நமது தகவல் பரிமாற்றம் தொடரலாம் என்று எண்ணுகிறேன்... 


நம்மிடம்,  E - மெயிலில் ரெகுலர் தொடர்பில் இருக்கும் நபர்களுக்கு, ஒய்வு வேளைகளில் மட்டும் தொடர்பு கொள்ளும் , உரிமையும் , பாசமும், இங்கிதமும்  தெரிந்த நண்பர்களுக்கு  - ஏற்கனவே எனது மொபைல் எண்ணைக் கொடுத்துள்ளேன்..   உங்கள் பாசத்திற்கும் , அன்பிற்கும் என்றென்றும் நன்றி...

நமது இணைய தளம் , எத்தனையோ உள்ளங்களுக்கு - ஒரு ஒளியாக, வழி காட்டியாக , அரு மருந்தாக , ஆறுதலும், நம்பிக்கையும் தரும் , உற்ற கருவியாக , உங்கள் ஆன்மீகத் தேடலை அதிகரிக்கும் உங்கள் தோழனாக , என்றென்றும் எங்கள் பணி  தொடரும். உங்கள் அனைவருக்கும், அந்த பரம் பொருளின் ஆசிகள் என்றும் கிடைக்கட்டும்!!

வாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.. ஒரு சிறந்த ஆன்மீக ஆலோசனை

|
எவ்வளவோ வசதி இருந்தும், அழகு இருந்தும், திறமை இருந்தும் - ஒரு சிலருக்கு திருமணம் எளிதில் நடப்பதில்லை.... ஏன்  ??

நல்ல வேலை ... கை நிறைய சம்பளம்... ஆனால் கழுத்துக்கு மேல கடன்... எப்படி?

நல்ல திறமை, கடின உழைப்பு... -  ஆனா , ப்ரோமோஷன் , இன்கிரிமென்ட் எல்லாம் இது எதுமே இல்லாத , உங்க "கலீக்" க்கு மட்டும்.. உங்களுக்கு , நல்ல அழகா ஒரு பட்டை... நாமம்..!! ஏன் இப்படி நமக்கு மட்டும்?

எவ்வளவோ வசதி இருந்தும், கொஞ்சுறதுக்கு ஒரு குழந்தை இல்லை... ஏன் இப்படி?

இந்த பிறவிலேயோ, இல்லை போன பிறவியிலோ , ரொம்ப ஓவரா ஆட்டம் போட்டு இருந்தா.... ஆண்டவன் அடிக்கிறது இந்த மாதிரி தான்...

ஜாதகத்தை நன்றாக பார்க்க தெரிந்தவர்கள் , இதை உடனே கணித்து விடுவார்கள். இதற்கு பெயர் - பிரம்மஹத்தி தோஷம்.  யார் ஒருவர் ஜாதகத்தில், சனி , குரு இணைந்தோ, ஒருவரை ஒருவர் , பார்த்து இருந்தாலோ - 99 % அவருக்கு - பிரம்மஹத்தி தோஷம் - இருப்பதாக அர்த்தம்..... நவ அம்சத்திலும் இணைந்து இருந்தாலும் , இது பொருந்தும்..

பிரம்மஹத்தி தோஷம் எதனால் ஏற்படுகிறது?

ஏதோ ஒரு காரணத்தால் ஒருவரை கொலை செய்து விடுவதால் , ஒருவருக்கு இந்த தோஷம் ஏற்படுகிறது. கொலை அல்லது அதற்கு சமமான பாவங்கள் : 

1.பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்குகொடுத்து, அவளை அனுபத்து , திருமணம் செய்யாமல் இருத்தல்

2.பலரின் உழைப்பை உறிஞ்சி,அதற்குரிய சம்பளம் தராமல் இருப்பது

3.குருவுக்கு தட்சிணை தராமல் இருப்பது

4.குருவின் கொள்கைபிடிக்காமல் தானே குருவாக மாறுவது

5.வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பைக் கொன்றுவிடுவது

6 . சென்ற பிறவிகளில் , ஆலயத்தை தகர்த்தல், சாமி சிலையை திருடுதல் 

7.உங்கள் மீது தனக்கிருக்கும் ஆசையை வெளிப்படுத்தியும்,அந்த ஆசையை நிறைவேற்றாமலிருப்பது (ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும்)

பிரம்மஹத்தி தோஷம் என்ன செய்யும்?

1.வருடக்கணக்கில் மனக்குழப்பம் இருக்கும்

2.தவறே செய்யாமல் தண்டனை கிடைக்கும்

3.மருத்துவத்திற்குக்கட்டுப்படாத நோய் வரும்

4.தொழிலில் திடீர் சரிவு அல்லது வீழ்ச்சி ஏற்படும்

5.திருமணம் தள்ளிப்போகும் அல்லது நடக்காது

6.குழந்தைப்பாக்கியம் இல்லாமல் அல்லது தாமதம்


பரிகாரம்:தமிழ்நாடு,கும்பகோணம் அருகில் இருக்கும் திருவிடைமருதூர் கோவிலுக்குச் சென்று , பிரம்மஹத்தி தோஷ நிவாரணம் செய்து , ஒரு வாசல் வழியே நுழைந்து வேறொரு வாசல் வழியே வெளியேறுதல். அங்கே அதற்குரிய யாகம் நடத்துதல்.

எனக்கு தெரிந்த அன்பர் ஒருவர் , விடிவு காலம் வராதா என ஏங்கியவர்,  இதை செய்த 6 மாதங்களில் , ஒரு வழி (ஒளி ) கிடைத்து, ஒரு நிம்மதியான வாழ்வு வாழத் தொடங்கி இருக்கிறார். ....  அதிகம் செலவு ஆகாது.. ஆயிரம் ரூபாய் அதிகம்.. ஆனால் பய பக்தி , மன சுத்தம் முக்கியம்... 


நமது பழைய கட்டுரையை  ( பரிகாரங்கள் செய்வது எப்படி? ) திரும்ப ஒருமுறை refer செய்து கொள்ளவும். 
இது விளையாட்டு சமாச்சாரம் அல்ல... 30 வயது ஆகியும் திருமணம் ஆகாத ஒரு பெண்மணிக்கு, எவ்வளவோ தோஷ பரிகாரங்கள் செய்து , கடைசியாக நாம் அவர்களுக்கு ,  இந்த தோஷ நிவாரணம் பரிந்துரை செய்து, இன்று அவர்கள் மணமாகி , நல்ல வாழ்க்கை அமைந்து இருக்கிறது... 
அந்த குடும்பத்திற்கு , அதன் பிறகு எல்லா நல்ல காரியங்களும், நமது அறிவுரைக்குப் பிறகே... அவர்கள் வழியில் சுமார் இருபது குடும்பங்கள் , நமது  ஆன்மிக அறிவுரையின் படி நடந்து கொள்கிறார்கள்..

 தினமலரில் வெளியான திருவிடை மருதூர்  ஆலய சிறப்பு கட்டுரைகளை காண , கீழே படத்தை க்ளிக் செய்யவும்வாழ்க வளமுடன்!

கைலாஷ் - மானசரோவர் , அபூர்வ புகைப் படங்கள் , வீடியோ காட்சிகள்...

|
ஆன்மிகம் தேடும் ஒவ்வொருவருக்கும், இறக்கும் முன், ஒரே ஒரு முறையாவது , கயிலாயம் சென்று பார்க்க வேண்டும் என்பது ஆசை.

உடல் நலம் - ஆரோக்கியமாக இருக்க வேண்டும்... , போய் வர , பண வசதி இருக்க வேண்டும்.. இது எல்லாம் தாண்டி , எப்படியாவது போக வேண்டும் என்ற பேரவா (வெறி) இருக்க வேண்டும். லீவ் கிடைக்க வேண்டும். அந்த நேரத்தில் , நமது குடும்பத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடக்காமல் இருக்க வேண்டும்... ஆனால், எத்தனை பேருக்கு கொடுப்பினை இருக்கிறது?


வயது முதிர்ந்தவர்களுக்கு , இந்த படத்தொகுப்பு ஒரு நல்ல வரப் பிரசாதம். கடைசியா ஒரு போட்டோ இருக்குது பாருங்க... ரெண்டு திபெத்திய பெண்கள்.. பரிக்ரமா பண்ணுறாங்க.. "பரிக்ரம" ங்கிறது - கிரிவலம்.
நடந்து போறதுக்கு  - 3 நாள் ஆகுது..சுமார். 45 கி. மீ.

இந்த பெண்கள்,  மலையை நமஸ்காரம் பண்ணி , பண்ணி வர்ராங்க... அடி பிரதட்ஷனம் செய்யிற மாதிரி... அந்த பனியிலே ,  இந்த மாதிரி பண்றதுக்கு - சுமார் 30 இலேருந்து   45 நாள் ஆகுதாம்.. இந்த மாதிரி பண்றதுக்கு , எவ்வளவு மன , உடல் தைரியம் இருக்கணும்... ... யோசிச்சுப் பாருங்க..( பக்தி... )
 


கீழே கொடுக்கப்பட்டுள வீடியோ லிங்க் - இஷா வோட - கைலாஷ் - மானசரோவர் யாத்திரை , அபூர்வமான படத் தொகுப்பு.. சில அபூர்வ புகைப் படங்களையும், கீழே கொடுத்து இருக்கிறோம்...படங்களை க்ளிக் பண்ணினால், பெரியதாக தெரியும்...


இந்த வார சிறப்புக் கட்டுரை - கோ மாதா எங்கள் குல மாதா

| Feb 19, 2011
இந்த வார ஸ்பெஷல் கட்டுரையை நமக்கு அனுப்பி வைத்த நண்பர் விவேகா அவர்களுக்கு, மனமார்ந்த நன்றிகள். அருமையான தகவல்கள்.  நமது வாசக நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில், பெருமை கொள்கிறோம். 

==============================
எட்டிக்காயும் இறைவன் படைப்பே. எள்ளும் அவன் படைப்பே. அன்னாசிப்பழமும் அரளிக்காயும் அவன் படைப்பே. இருந்தாலும், எள்ளும் அன்னாசிப் பழமும் மனிதருக்கு ஏற்றதாக இருப்பது போல எட்டிக்காயும், அரளிக்காயும் இன்னும் பலவும் இல்லை.


அருவி நீரும், ஆற்று நீரும், கிணற்று நீரும், கடல் நீரும், குளத்து நீரும், நீர் தான் என்றாலும், எல்லா நீரும் அனைத்து மனிதர்க்கும் ஒரே அளவிலும், எப்பொழுதும் எல்லாத் தேவைகளுக்கும் பயன் படுவதாக அமையவில்லை.

தொன்றுதொட்டு மனித இனம் தான் கண்டவற்றில், சிலவற்றையே மிக்க பயன் அளிப்பதாக அனுபவித்து உள்ளது. அதன் அடிப்படையிலேயே, அவற்றை போற்றி பாராட்டி தெய்வமாகவும் வழிபட்டு வந்திருக்கின்றது..

மரங்களில் வாழையையும், தென்னையையும், வேம்பையும், நம்மிடம் நன்றி பாராட்டுவதில் நாயையும் போற்றுவது போல, பசுவையே எல்லா இனங்களுக்கும் மேலாக வணங்கி, அட்சய பாத்திரமாக வற்றா ஊற்றாக போற்றி வருகிறது.

வேறு எதற்கும் அளிக்கப்படாத ஒரு தனிப் பெருமையை பசுமாட்டிற்கு மட்டும் இந்து மதம் அளித்து வந்திருக்கிறது.

பசுவை வெறுமனே மாடு என்று அழைக்காமல், பசுத்தாய், கோமாதா என்று வழங்கி வந்திருக்கிறது.

பெற்ற தாய்க்கு ஈடாக கருதப்படும் ஒரே மிருகம் பசு மட்டுமே.


ஐக்கிய ஸ்வரூபம் கோமாதா

எல்லாமே இறை வடிவம் என்றாலும், நாம் தொன்றுதொட்டு, சிலவற்றிலேயே, சில வடிவங்களிலேயே, அனைத்து குணங்களின் ஐக்கியத்தை உணர்ந்திருக்கிறோம்.


அர்த்த நாரீஸ்வரரில் சிவ-சக்தி ஐக்கியத்தையும்,
சங்கர நாராயணரில் சிவ-விஷ்ணு ஐக்கியத்தையும்,
லக்ஷ்மி நாராயணரில் விஷ்ணு-லக்ஷ்மி ஐக்கியத்தையும்,
நரசிம்மரில் மனித-மிருக ஐக்கியத்தையும்,
தாணுமாலயனில் ஹரி-ஹர-ப்ரும்ம ஐக்கியத்தையும்,
கணபதியில் யானை-தேவர்கள் ஐக்கியத்தையும்,
ஏகபாத த்ரிமூர்த்தியில் மூவரின் இணைவையும் காண்கிறோம்.

பலவற்றுள் ஐக்கியப்பாடு வெளிப்படையாக தெரியாவிட்டாலும் எல்லாமே சர்வ குண ஐக்கிய வடிவமே. யாவுமே நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாசம் ஆகிய பஞ்ச பூதங்களின் ஒவ்வொரு வகை அளவு கலவை வடிவமே.

ஆணும் பெண்ணும் வித்தியாசமாக தோன்றினாலும், இரு பாலாருமே 45 'X' 'Y' க்ரோமசோம்களின் கூட்டே. இவற்றில் ('X' 'Y' - ல்)ஒன்று கூடினால் ஆண் என்றும், மற்றொன்று கூடினால் பெண் என்றும் கூறுகிறோம்.

ஒவ்வொரு ஜீவ அணுவின் அடிப்படை அமைப்பான DNA, ஒரு மனிதரின் பல்லாயிரக் கணக்கான மூதாதையர்களின் குணங்களை உள்ளடக்கி இருப்பது போலவும், மிகச்சிறிய ஆலம் விதை பிரும்மாண்டமான ஆலமரத்தின் தன்மைகளை உள்ளடக்கியிருப்பது போலவும், ஒவ்வொரு பசுவும் அனைத்து தேவரின் ஒருமை வடிவமாகும்.


இங்கு ஒரு முக்கியமான செய்தியை கவனிக்க வேண்டும். இந்து மதம் பசுமாட்டைத் தவிர வேறு எந்த இனமும் தெய்வசக்தியற்றது என்று கூறவில்லை.

காலையில் எழுந்தவுடன் நம் உள்ளங் கைகளைப் பார்த்து நுனிப்பகுதியில் மகாலக்ஷ்மியும், இடையில் சரஸ்வதியும், கணுப்பகுதியில் பார்வதியும், (முச்சக்திகளும் இருப்பதை) நினைவுபடுத்திக் கொள்ளும் வழக்கம் இன்றும் உள்ளது.

எனினும் தோட்டத்துக் கனியை அறியாமல் இருப்பதே பொது குணம் என்பதால் நாம் நம்மை அறிவதற்கு ஏதுவாக பரம்பொருளை, முதலில் பிறவற்றில் இருப்பதை உணர, பல வழிவகைகளை இந்து மதக்கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. இவ்வடிப்படையில் தோன்றியதே கோபூஜை (பசு வழிப்பாடு).

உலகில் உள்ள கோடிக்கணக்கான கீரை, காய், கனிகளையும், தெரிந்த பின்னரே சிலவற்றை உபயோகிப்போம் என்பதில்லை.

நமக்கு நன்மை அளிப்பதாக அறிந்ததை உடனே பயன்படுத்திடுகிறோம்.

இது போல பூச்சி முதல் பிரும்மாண்டமான இனம் வரை, ஒவ்வொன்றின் தெய்வ அம்சத்தை உணரும் வரை காத்திராமல், பசுமாடு போன்று, தெய்வாம்சம் அறியப்பட்ட இனங்களை வழிபட்டு பயன் பெறுவதே அறிவுடைமை.

நன்மை அளிப்பதாக அறிந்ததை மறந்திடக் கூடாது என்றும் கிடைத்த கனியை நழுவவிடக் கூடாது என்பதற்காகவும் துவங்கப்பட்டு தொடர்வதே கோமாதா பூஜையாகும்.

எல்லோரும் தத்தம் வீட்டிலேயே, பசு வழிபாடு செய்ய இயலாதிருக்கலாம் என்றே ஒவ்வொரு ஆலயத்திலும், பசுத்தொழுவம் அமைத்து, அன்றாடமும், கோபூஜை நடத்தும் மரபு ஏற்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு ஆலயத்திலும் "கோ சாலை" (பசு மடம்) இருந்தால் அருகில்வாழ் மக்கள் அனைவரும் பசு பராமரிப்பிலும், பசு வழிபாட்டிலும் கலந்து கொள்ள முடியும்.

தினமும் பசுமடத்தில் விரிவான பூஜை செய்ய இயலாவிட்டாலும் வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்வது மேன்மை. அதோடு, முக்கிய நாட்களில் அல்லது பல்லோரும் கலந்து கொள்ள வாய்ப்புள்ள நாட்களில், பெரிய அளவில் 108 கோ பூஜை, 1008 கோ பூஜை செய்யலாம். ஆலயத்திற்கு மட்டுமின்றி, அருகுள்ள மக்களுக்கு மட்டுமின்றி அகிலத்திற்கே அனைத்து நன்மையும் அளிக்கும்.

பசுத்தாய் - கோமாதா (பெருமையும், பராமரிப்பும், பூஜையும்)பாரதத்தில் வேதகாலம் தொடங்கி, இன்று வரை, பசுவின் (கோமாதாவின்) பெருமையையும், அதனைப் பராமரிக்க வேண்டிய அவசியத்தையும், பசு இனத்தை வழிபாடும் முறைகளையும், தெரிவிக்காத இறை நூல்களே இல்லை எனலாம்.

- அவனருள்

புராணங்களில் (வரலாறுகள்) மற்றும் இறை இலக்கியங்களில், பசுவை போற்றியவர்கள், பராமரித்தவர்கள், காப்பாற்றியவர்கள் அடைந்த நன்மை நிகழ்வுகள் பல்லாயிரக்கணக்கில் உள்ளன. அவற்றை தொகுப்பதோ, முக்கியமானவற்றை நினைவு கூறுவது மட்டுமோ நோக்கம் அல்ல.

நம் நன்மை நாடி நாம் பசுவை ஆதரிக்க வேண்டும் என்பதை விட, பசுக்களைப் பராமரிப்பது நம் கடமை என்பதை வலியுறுத்துவதே நோக்கமாகும்.

கோ பூஜையினால், கோ தானத்தினால் அடையும் நன்மைகள் தெரிவிக்கப்பட்டிருப்பினும், பசுப்பராமரிப்பு நம் அனைவரின் அதி அவசரமான அவசியமான பணியாகும் என்று எல்லோரும் உணர வேண்டும்.

பசு வழிபாடு மூட நம்பிக்கை அல்ல; நம் மூதாதையர்களின் அறிவுடைமையால் உருவான மிக முக்கியமான செயல்பாடே. நவீன வாழ்முறை மோகத்தினால், பண்டையோர் விஞ்ஞான அடிப்படையில், மெய்ஞானமும் கூட்டுவதாக அளித்துள்ள பாரம்பரியப் பண்பாட்டை மறவாதிருக்க, பின்பற்றிட இறையருள் வைக்கட்டும் அவனருள்.

பசு (கோமாதா) வழிபாடு.

மேற்கத்திய வரலாற்று இயல் காலத்துக்கும் முன்பிருந்தே "சனாதன தர்மம்" என்ற இந்துமதம், "எல்லாம் இறை மாயம்" என்றும் "தத்வமசி" அதாவது "நீயும் பரம்பொருளே" என்றும் "அத்வைதம்" - எல்லாம் ஒன்றே - அதாவது "பரம்பொருள் இன்றி வேறொன்றும் இல்லை" என்றும் "காண்பவை எல்லாம், கடவுளின் எண்ணற்ற தோற்றங்களே" என்றும் கூறி வந்திருக்கின்றது.. இந்நிலையில்,

மிருக இனங்களில், பசுவையும், யானையையும்,
ஊர்வனவற்றில் நாகப் பாம்பையும்,
தாவர இனத்தில் அரசு, வேம்பு, போன்ற சிலவற்றை மட்டும்,
மிகச் சிறப்புடையதாக, நம்மிலும் மேலாக, தெய்வங்களாக,
தொன்று தொட்டு வழிபட்டு வருவதும்,
அவ்வழக்கத்தை தொடர்ந்திட வேண்டும் என்று கோருவதும்,

பாரபட்சமற்ற செயல் தானா?
ஞாயமான பரிந்துரை தானா?

இந்துக்கள், பசுவையையும், யானையையும், பாம்பையும், வேம்பையும் சிறப்புடையதாகப் போற்றி வந்திருக்கின்றனர் தவிர, பிறவற்றை இழிவு படுத்தவில்லை, அழிக்கச் சொல்லவுமில்லை.
எந்த சிற்றின உயிர்களையும் துன்புறுத்தக்கூடாது என்றும் அவற்றைப் போற்றிப் பேண வேண்டும் என்றுமே இந்துக்கள் வலியுறுத்தி வந்திருக்கின்றனர்.

திருக்குளங்களில் மீன்களுக்கு இரை போடுவதும், ஈ, எறும்பு, எலி போன்றவற்றுக்கு உணவாக வாசலில், வாயிற்படிகளில் பச்சரிசி மாக்கோலம் போடுவதும், புற்றுகளில் பாம்புக்குப் பால் வைப்பதும், அன்றாடம் பகலில் காக்கைக்கு உணவளிப்பதும், இரவு வேளையில் நாய்களுக்கு உணவளிப்பதும், பறவைகளுக்கு உணவாக நேர்கதிர்களைத் தொங்கவிடுவதும், இந்துக்களின் வழக்கமாக இருந்து வருகிறது.

இதோடு, சிற்றினங்களை நமக்குச் சமமாக மட்டுமின்றி, மேலானவையாகவும் நாம் கருத வேண்டும் என்பதற்காக, பெரும்பாலான தெய்வங்களின் வாகனங்கள் மிருகங்களாகவே, பறவைகளாகவே இருப்பதாக விவரிக்கப்பட்டுள்ளன.

- விநாயகன் யானைத்தலையன்
- அவன் ஆட்கொண்டு அமர்ந்திருப்பது மூஞ்சூறு
- தம்பி முருகன் மகிழ்ந்து வருவது மயிலில்
- தகப்பன் சிவன் அணிந்திருப்பது நாகம்
- மாமன் திருமால் படுப்பது பாம்பணையில்
- அவன் ஏறும் வாகனம் கருடன்
- எடுத்த உருவங்கள் மீனும், பன்றியும், சிங்கமும்
- தர்மதேவன் வருவது எருமையின் மீது
- சனீஸ்வரனை சுமப்பது காகம்

இப்படி நூற்றுக் கணக்காக பட்டியலிடலாம்.

மேலும், பல இனங்களின் நிலையை ஆய்ந்து, சிலவற்றை, உதாரணமாக, பூரான் தாய்க்கு ஒரு பிள்ளை என்பதற்காக கொல்லப்படக்கூடாது என்றும் வழக்கம் இருக்கின்றது.


கோமாதா நம் குலமாதா!பசு பிரசவிக்கும்போது கன்றின் தலைதான் முத லில் வரும். இந்த நிலையில், இரண்டு தலைகள் கொண்ட பசுவை பார்ப்பதுபோல் இருக்கும். அதாவது முன்பக்கமும், பின்பக்கமும் தலைகள் இருப்பது போல் காணலாம். பசு இப்படிக் காட்சி தருவதை 'உபயதோமுகி' என்பர். இந்தக் காட்சியை தரிசிப்பது பெரும் புண்ணியம். இந்த தருணத்தில், பசுவை வலம் வந்து வணங்கினால் நமது சகல பாவங்களும் நீங்குவதுடன், ஈரேழு பதினான்கு உலகங்களிலும் உள்ள சகல தேவதைகளையும் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.

கன்றுக்கு பால் இல்லாமல், பசுவிடம் இருந்து பால் முழுவதையும் கறந்து விடுபவன், நரகத்தை அடைந்து வேதனையுறுவான். தவிர, மறுபிறவியிலும் மனிதனாகவே பிறந்து, பட்டினியுடனும் நீர் அருந்தவும் முடியாத நோயாளியாகவும் கிடந்து துன்பப்படுவான்.

நெற்றியில் குங்குமப் பொட்டு அளவுக்கு சுழியுடன் திகழும் பசுக்கள் வீட்டில் இருப்பது பெரும் பாக்கியம். அந்த வீட்டில் திருமணம், பிரசவம் போன்ற சுப காரியங்கள் அடிக்கடி நடைபெறும்.

கிராமப் பகுதிகளில் பசுக்களை மேய்ச்சலுக்கு அனுப்புவது வழக்கம். பசுக்களுடன் ஓர் ஆசாமியும் உடன் செல்வான். ஆடி மாதத்தில் ரோகிணி நட்சத்திர நாளில்... மேய்ச்சலுக்குச் சென்று திரும்பும் பசுக்களில், சிவப்பு நிற பசு ஒன்று முதலில் ஓடி வந்து தொழுவத்தில் நுழைந்தால் அந்த வருடம் அதிகம் மழை பொழியும் என்பது ஐதீகம்.

வீட்டில் பசு இருப்பதால், ஐஸ்வர்யம் பெருகும். பசு மாட்டை விற்பதாக இருந்தால், அதை, கட்டி இருக்கும் தாம்புக் கயிற்றுடன் கொடுக்கக் கூடாது. கயிறை நாம் வைத்துக் கொண்டு பசுவை மட்டுமே கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான், வேறு பசுக்கள் உடனடியாக நம் இல்லம் வந்து சேரும் என்பது நம்பிக்கை.

கோமாதாவும் பூமாதாவும் :-

காஞ்சி மஹா பெரியவர் அருளியது

ஜனக மாதாவும், கோமாதாவும் பாலைச் சுரக்கிற மாதிரி தானியங்கள், உலோகங்கள், தாதுக்கள் ஆகிய வளங்களையும், இவை எல்லாவற்றுக்கும் மேலாக நீர்வளம் என்பதையும் பூமி சுரக்கிறது. அதனால் தான் பூமாதா என்பது, பசுத்தாய் என்பது போல் புவித்தாய்.

மிருகமாகத் தெரிகிற பசு, ஜடமாகத் தெரிகிற பூமி ஆகிய எல்லாவற்றிலும் உயிருள்ளதும் அன்பே உருவமானதுமான மாத்ருத்வத்தை - தாய்த் தத்துவத்தை - கண்டு கொண்டு நம்முடைய முன்னோர்கள் கோமாதா என்றும் பூமாதா என்றும் சொன்னார்கள்.

பூமாதாவே கோமாதாவாக உருக்கொண்டதும் உண்டு. த்வாபரயுகம் முடிகிற நிலைக்கு வந்து கலியுகம் ஆரம்பிப்பதற்கு முந்தைய சமயம். லோகத்திலே துஷ்ட அரசர்களின் ரூபத்தில் அசுர சக்திகள் தலையோங்கிய அப்போது பூமாதேவியால் அந்தப் பாபபாரத்தைத் தாங்க முடியவில்லை.

அப்போது பூமாதேவியும், அவளுடைய சார்பிலே பிரம்மாவும் மஹா விஷ்ணுவிடம் முறையிட்டு பிரார்த்தித்துக் கொண்டதன் மேல் தான் பகவான் க்ருஷ்ணாவதாரம் பண்ணினார். அந்த சமயத்திலே, தன்னுடைய முறையீடு பகவானுடைய மனசைத் தொட்டு இறக்கி, அவரை ரக்ஷணத்துக்கு வரும்படிப் பண்ண வேண்டுமானால் தான், அவருடைய பத்னியான பூமாதேவி ரூபத்திலில்லாமல், அதை விட ப்ரியத்துக்கும் பரிவுக்கும் உரிய தாயான கோமாதா ரூபத்தில் இருந்தால் தான் முடியும் என்பதால் பூமாதாவே கோமாதாவாக உருவம் எடுத்துக் கொண்டு தான் போனாள் என்று புராணக்கதை இருக்கிறது. அதற்கேற்பத் தான் பகவான் கோபாலனாகப் பிறந்து, அந்த அவதாரத்தில் கோக்களோடு அத்யந்தமாக உறவாடினார்.

"கோ" என்றாலே பூமி என்றும் ஒரு அர்த்தம்.

கிருஷ்ணர் பூர்ணாவதாரம். அம்சாவதாரம் என்பதாக பகவான் தன்னுடைய ஒரொரு அம்ச கலையை மட்டும் வெளிப்படுத்தியும் அவதாரங்கள் நிகழ்த்தியதுண்டு. பாகவதத்தில் சொல்லியிருக்கிற கணக்குப்படி பகவானுக்கே இருபத்தி நாலு அவதாரங்கள். அந்த இருபத்து நாலில் நம் எல்லோருக்கும் தெரிந்த தசாவதாரங்கள் போகபாக்கியிருக்கிற பதினாலு பேரும் அம்சாவதாரங்கள். அப்படி பகவானின் அம்ச அவதாரங்களாக இருந்தவர்களில் ப்ருது என்கிற சக்ரவர்த்தியும் ஒருத்தர். அவர் தான் லோகத்தில் நாடு, நகரம் என்ற அமைப்புகளை முறைப்படி ஏற்படுத்தியவர். அவர் பூமாதாவையே கோமாதா ரூபத்தில் கண்டு அந்த பசுத் தாயிடமிருந்து அவரவர்களும் தங்கள் தங்களுக்கு இஷ்டமான சம்பத்துக்களை தங்கள் தங்கள் ஸ்ஸ்வதர்மம் என்ற கன்றைக் கொண்டு கறந்து கொள்ளச் செய்தார் என்று பாகவதத்தில் சொல்லியிருக்கிறது.

கோ ரூபத்தில் பகவானுக்கு எததனை ப்ரீதி என்பதற்காகச் சொன்னேன். கோவுக்கும் அவரிடத்தில் அதேபோல் ப்ரீதி வேணுகோபாலனாக பகவான் இடது பாதத்தை பூமியில் ஊன்றிச் செங்குத்தாக வைத்துக் கொண்டிருக்கும் போது தாமரை மாதிரியான அவருடைய உள்ளங்காலை ஒரு கோ நக்கிக் கொண்டிருக்கும். சித்ரங்களில் அப்படி போட்டிருக்கும்.

மாட்டுப்பொங்கல் இடுவது ஏன்?

வாயில்லா ஜீவன்களில் மனித சமுதாயத்தோடு இரண்டறக் கலந்து நிற்பது பசு என்றால்
அது மிகையில்லை. காலையில் எழுந்ததும் "பால் வந்து விட்டதா?" என்பது தான் நம் முதல் கேள்வியாக இருக்கிறது. அன்போடு வாஞ்சையாக "அம்மா'' என்று பசு அழைக்கிறது. ஆனால், உண்மையில் நம் எல்லோருக்கும் பசுவே தாயாக இருந்து பால் தந்து காக்கிறது.பெற்ற தாய் கூட இரண்டு வயது வரை தான் பால் தருவாள். ஆனால், எத்தனை வயதானாலும் பசுவின் பால், மோர், தயிர், நெய் நம் உணவில் சேர்த்துக் கொள்ள மறப்பதில்லை.


வயதாகி சாப்பிட முடியாத நிலை வரும் போது, பசும்பால் மட்டுமே நமக்கு
கைகொடுக்கிறது. உயிர் வெளியேறத் துடிக்கும் போது, குழந்தைகளெல்லாம் வாயில் பால் ஊற்றுகிறார்கள். இறந்த பிறகு சமாதியிலும் பால் ஊற்றுகிறார்கள். இப்படி பிறப்புமுதல் இறப்புக்குப் பிறகும் நம்மை வளர்த்து ஆளாக்கிய தாயான பசுவுக்கு நன்றிக்கடன் செலுத்தும் நோக்கத்திலேயே மாட்டுப்பொங்கல் இடப்படுகிறது. அதனால் தான் அதனை "கோமாதா'' என்று அழைக்கிறோம்.

பசுவுக்காக வாழ்ந்த சித்தர் :-திருவாவடுதுறைக்குத் தெற்கே உள்ள சாத்தனூர் என்னும் ஊரில் மூலன் என்னும் இடையன் வாழ்ந்து வந்தான். தான் வளர்த்து வந்த பசுக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தான். பசுக்களும் மூலன் மீது தன் அன்பைப் பொழிந்தன. ஒருநாள் காட்டில் மேய்ச்சலுக்கு சென்றபோது, ஒரு பாம்பு மூலனைத் தீண்டியது. அவன் இறந்து விட்டான்.

மூலனை விட்டுப் பிரிய மனமில்லாத பசுக்களின் கண்களில் கண்ணீர் பெருகியது. அவனைச் சுற்றிச் சுற்றி வந்து கதறி நின்றன. வான் வழியே சென்று கொண்டிருந்த சிவயோகியான சித்தர் ஒருவர் இக்காட்சியைக் கண்டு பசுக்கள் மீது இரக்கம் கொண்டார். பசுக்களின் கண்ணீரைத் துடைக்க எண்ணம் கொண்டார். "பரகாயப்பிரவேசம்" என்னும் கூடுவிட்டுக் கூடுபாயும் முறையில் மூலனின் உடம்பில் புகுந்தார். அதுவரை மூலனாக இருந்த அந்த உடல், சித்தரின் புனித சேர்க்கையால் "திருமூலர்" என்ற பெயர் பெற்றது. அவர் புகழ் பெற்ற சித்தர் ஆனார். தன் மீது அன்புகாட்டிய மூலன் உயிர்த்தெழுந்ததைக் கண்ட பசுக்கள் மகிழ்ச்சியில் திளைத்தன. காலையிலிருந்து பசும்புல் உண்ணாமல் வாடி நின்ற பசுக்கூட்டங்களை திருமூலர் நீர் அருந்தச் செய்து,
வயிறார மேயச் செய்து ஊர்போய் சேர்ந்தார். இவர் எழுதிய பாடல்கள் "திருமந்திரம்" என்று போற்றப்படுகிறது.

பசுக்குலத்திற்கே பெருமை :-அப்பர் தேவாரத்தில் ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல்
என்று பாடுகிறார். "ஆ" என்றால் பசு; "அஞ்சாடுதல்" என்றால் "பஞ்சகவ்யத்தால்
அபிஷேகம் செய்தல்". பஞ்சகவ்யம் என்பது பசுவிடமிருந்து உண்டாகும்


- பால்
- தயிர்
- நெய்
- கோமியம் (பசுவின் ஜலம்)
- கோமயம் (பசுஞ்சாணம்)


என்னும் ஐந்து பொருள்களும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் சேர்ந்த கலவையே பஞ்சகவ்யம் எனப்படும்.


இதுதவிர,


- பாலபிஷேகம்
- தயிர் அபிஷேகம்
- நெய்யபிஷேகம்


என்று தனித்தனியாகவும் சிவபெருமானுக்குச் செய்வதும் உண்டு.


திருவையாறு அருகிலுள்ள "தில்லைஸ்தானம்" என்னும் தலத்தில் இருக்கும்
பெருமானுக்கு நெய்யபிஷேகம் சிறப்பாகும். தில்லைஸ்தானம் என்னும் இத்தலம்  தேவாரத்தில் திருநெய்த்தானம் என்று குறிக்கப்பட்டுள்ளது. பஞ்சகவ்யத்தால்  சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது பசுக்குலத்திற்கே பெருமை என்று அப்பர்  குறிப்பிடுகிறார். பால் அபிஷேகத்தை "கோசிருங்கம்" எனப்படும் பசுக்கொம்பினால் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும்.


*சாத்வீக** **உணவு**:* சாதுவான பிராணியான பசுவினைத் தெய்வமாகக் கருதி வழிபாடு  செய்கிறோம். பசு தன் கன்றுக்கு மட்டுமில்லாமல் மனிதசமுதாயத்திற்கு மகத்தான உணவுப்பொருளாகப் பாலைத் தருகிறது. உணவு வகையில்,


- சாத்வீகம் (சாந்தம்)
- இராட்சசம்(மிருகம்)
- தாம்சம் (மந்தம்)


என்று முக்குணங்களை ஏற்படுத்தும் பொருள்கள் உண்டு.


இதில் பசுவின் பால் சாத்வீக உணவாகும். பால் பசுவின் இரத்தம் என்பதால் அதுவும்  அசைவம் தானே என்ற அபிப்ராயம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். ஆனால், சாஸ்திரத்தில் பசும்பால் சாத்வீக உணவு என்றே குறிக்கப்பட்டுள்ளது. பாலைக் கொடுப்பதால் பசுவிற்கு ஹிம்சை எதுவும் இல்லை. அது நம் அறிவை துலங்கச் செய்கிறது. பல சாதுக்கள், பசும்பாலை ஆகாரமாகக் கொண்டு உதாரணமாக வாழ்ந்து  காட்டியிருக்கிறார்கள். முக்குண உணவுகளைப் பற்றி விவரிக்கும் கீதையை போதித்த கிருஷ்ணர், ஆயர்பாடியில் பாலையும், வெண்ணெயையும் திருடிச் சாப்பிட்ட
நவநீதகிருஷ்ணனாக இருந்திருக்கிறார். இந்து சமயத்தில் பசுவை வணங்குவதைப் பெரும் புண்ணியமாகக் கருதுகின்றனர். இந்தப் பசுவை கோமாதா என்றும் பெருமையுடன் அழைக்கின்றனர். பசுவின் உடலில் ஒவ்வொரு பகுதியிலும் தெய்வங்களும், புனிதத்திற்குரியவர்களும் இருப்பதாகக் கருதுகின்றனர்.

*பசுவின் கொம்புகளின் அடியில் – பிரம்மன், திருமால்
*கொம்புகளின் நுனியில் – கோதாவரி முதலிய புண்ணிய தீர்த்தங்கள்,சராசை உயிர் வர்க்கங்கள்
*சிரம் – சிவபெருமான்
*நெற்றி நடுவில் – சிவசக்தி
*மூக்கு நுனியில் – குமரக் கடவுள்
*மூக்கினுள் – வித்தியாதரர்
*இரு காதுகளின் நடுவில் – அசுவினி தேவர்
*இரு கண்கள் – சந்திரர், சூரியர்
*பற்கள் – வாயு தேவர்
*ஒளியுள்ள நாவில் – வருண பகவான்
*ஓங்காரமுடைய நெஞ்சில் – கலைமகள்
*மணித்தலம் – இமயனும் இயக்கர்களும்
*உதட்டில் – உதயாத்தமன சந்தி தேவதைகள்
*கழுத்தில் – இந்திரன்
*முரிப்பில் – பன்னிரு ஆரியர்கள்
*மார்பில் – சாத்திய தேவர்கள்
*நான்கு கால்களில் – அனிலன் எனும் வாயு
*முழந்தாள்களில் – மருத்துவர்
*குளம்பு நுனியில் – சர்ப்பர்கள்
*குளம்பின் நடுவில் – கந்தவர்கள்
*குளம்பிம் மேல் இடத்தில் – அரம்பை மாதர்
*முதுகில் – உருத்திரர்
*சந்திகள் தோறும் – எட்டு வசுக்கள்
*அரைப் பரப்பில் – பிதிர் தேவதைகள்
*யோனியில் – ஏழு மாதர்கள்
*குதத்தில் – இலக்குமி தேவி
*வாயில் – சர்ப்பரசர்கள்
*வாலின் முடியில் – ஆத்திகன்
*மூத்திரத்தில் – ஆகாய கங்கை
*சாணத்தில் – யமுனை நதி
*ரோமங்களில் – மகாமுனிவர்கள்
*வயிற்றில் – பூமாதேவி
*மடிக்காம்பில் – சகல சமுத்திரங்கள்
*சடாத்களியில் – காருக பத்தியம்
*இதயத்தில் – ஆசுவனீயம்
*முகத்தில் – தட்சிணாக்கினி
*எலும்பிலும், சுக்கிலத்திலும் – யாகத் தொழில் முழுவதும்
*எல்லா அங்கங்கள் தோறும் – கலங்கா நிறையுடைய கற்புடைய மாதர்கள் வாழ்கிறார்கள் .
 

மனமே... உணர்ச்சி வசப்படாதே...!!!

|
கீழே கொடுக்கப்பட்டுள்ளது, திருவண்ணாமலை அருணாசலம் படம்... படத்தை , கிளிக் செய்யுங்கள், பெரிய அளவில் தெரியும். ... மிக அருமையான படம்.....  உங்கள் கம்பியூட்டருக்கு , டெஸ்க்டாப் வால் பேப்பர் வைத்துக் கொள்ள உதவும். ....  இவ்வளவு அற்புதமான வியூ , கிடைப்பது அபூர்வம். 
தினமும் கண் குளிர , அருணாச்சல தரிசனம் செய்யலாம்.  
 கீழே உள்ள கட்டுரையை நமக்கு அருளியவர். பூஜ்ய ஸ்ரீ . தயானந்த சரஸ்வதி அவர்கள். அற்புதமான கட்டுரை. நமது வாசகர்களுக்காக.. ...

நமக்கு இஷ்டமானவையாக இருந்தாலும் சரி, இஷ்டமில்லாதவையாக இருந்தாலும் சரி, அவற்றில் என்றும் சமமான சித்தத்துடன் இருக்கவேண்டும்; அதாவது அவற்றை சம சித்தத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இம்மாதிரியான சித்தம் நமக்கு நித்யம்-எப்பொழுதும் இருக்க வேண்டும் என்கிறார் பகவான். நமக்குப் பிடித்தவை கிடைத்துவிட்டது என்பதால் நாம் தலைகால் தெரியாமல் துள்ளிக் குதிக்கக்கூடாது. நமக்குப் பிடிக்காத பலன் கிடைத்து விட்டால் வானமே இடிந்து தலைமேலே விழுந்து விட்டது போல் தளர்ந்து போய்விடவும் கூடாது.

உதாரணமாக ஒரு விபத்து நடந்து விட்டால், மனத்தை நடுநிலையில் வைத்து அங்கு என்ன நிகழ்ந்திருக்கிறது, நாம் என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்துச் செயல்பட வேண்டும். நாம் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்துவிட்டால் மனம் இடிந்து போகாமல், ஏன் இந்த முயற்சி தோல்வியுற்றது, இதற்கான காரணங்கள் என்ன என்று ஆலோசித்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிகளைக் கண்டு அவற்றைச் செயல்படுத்த வேண்டும். நடப்பவற்றை அவை உள்ளவாறே, அதாவது உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப் படாமல், காண வேண்டும்; இனி செய்ய வேண்டியது என்ன என்று ஆலோசித்துச் செயல்பட வேண்டும்.

நமக்குப் பிடித்த ஒன்று நடக்கும்போது துள்ளிக் குதிக்கக் கூடாது. மனம் எவ்வளவுக்கெவ்வளவு உயரத்தில் துள்ளிக் குதிக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு நமக்குப் பிடிக்காதவை கிடைக்கும்போது அதல பாதாளத்தில் விழுந்தது போல் உணர்வோம். 

சமசித்தத்வம் என்றால் துள்ளிக் குதிப்பதும், இடிந்து போவதுமாக மனம் எப்பொழுதும் ஊஞ்சலாடிக் கொண்டே இல்லாதிருப்பது. நடப்பது என்னவென்றாலும், அவை இஷ்டமானதோ, இஷ்டமில்லாததோ, வெற்றியோ, தோல்வியோ, நல்லதோ, கெட்டதோ, நமக்கு வசதியானதோ, இல்லாததோ எதுவானாலும் சரி எப்பொழுதும் சமநிலையில் இருப்பதாகும்.

வாழ்வில் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நாம் சமநிலையில் உள்ள மனத்துடன் அணுகும்போது, அந்த நிகழ்ச்சியை நம் உணர்ச்சிகள் என்னும் வண்ணம் பூசாமல், அதை ஆப்ஜெக்டிவாக, அதாவது உள்ளவாறே அணுகுவோம். இது யதார்த்தங்களை ஒப்புக்கொள்வதாகும். பெரும்பாலும் நாம் உண்மைகள் நிதர்சனமாக இருந்தாலும், அவற்றை உள்ளவாறே ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம். 

உண்மைகளை உள்ளவாறே ஏற்றுக் கொள்ள மறுக்கும்போது, உண்மைகள் பிரச்னைகள் ஆகின்றன. இதற்கு ஓர் உதாரணம், நமக்குப் பிடிக்காத ஒரு செய்தியைக் கேட்கும்போது நம்முடைய முதல் வெளிப்பாடு என்னவாக இருக்கிறது என்று பார்த்தால் தெரியும். பிடிக்காத செய்தியைக் கேட்கும்போது ஓ! அப்படி இருக்கவே முடியாது என்று கூறுகிறோம். அல்லது என்ன, என்ன? என்று திருப்பிக் கேட்கிறோம். நமக்குக் காது கேட்காமல் இல்லை. ஆனால், என்ன, என்ன? என்று கேட்பதால் அந்த உண்மையை ஏற்றுக் கொள்வதைச் சிறிது தள்ளிப் போடுகிறோம்.

ஒரு சோகமான செய்தியைக் கேட்டாலும், அவற்றை நிதர்சனமான உண்மையாக எப்படிக் காண்பது என்பதற்கு, ஒரு தத்துவ ஞானியைப் பற்றிய நடந்த கதை விளக்குகிறது.

அவர் ஒரு பெரிய கப்பலின் சொந்தக்காரர். அந்தக் கப்பலில் அவருடைய மனைவி, மக்கள் வெளிநாட்டிலிருந்து  திரும்பிக் கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட அவருடைய எல்லாச் சொத்துகளும் அந்தக் கப்பலில்தான் இருந்தன. கப்பல் கரைக்கு வரும் செய்திக்காக அவர் காத்திருந்தார். அப்பொழுது அவர் இருந்த அறையின் கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்தவுடன் அவருடைய வேலைக்காரன் ஒருவன் மூச்சிரைக்கக் கூறினான்.

“சார்! உங்களுடைய மனைவி வந்து கொண்டிருந்த கப்பல் மூழ்கிவிட்டது.”
“என்ன?”
“உங்களுடைய கப்பல் மூழ்கிவிட்டது சார்”
“அதனால் என்ன?”
“உங்களுடைய மனைவி, மக்கள் மூழ்கிவிட்டனர்”
“என்ன?”
“ஒருவர் பாக்கி இல்லாமல் அனைவரும் மூழ்கி விட்டனர்”
“அதனால் என்ன?”
“உங்களுடைய அனைத்து சொத்துகளும் போய் விட்டன”
“என்ன?”
“நீங்கள் ரொம்ப பாவம் சார்”
“அதனால் என்ன?”
“உங்களுக்கென்று ஒருவருமே, ஒன்றுமே இல்லை சார்”
“என்ன?”
“நீங்கள் அநாதை சார்”
“அதனால் என்ன?”

ஒவ்வொரு முறையும் இவர் என்ன? என்ன? என்று கேட்டபோது சொல்லப்பட்ட விஷயம் இவர் காதில் விழவில்லை அல்லது இவருக்குப் புரியவில்லை என்பதல்ல. தான் கேட்ட செய்தியை அவர் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. அந்த என்ன? என்ன? என்பது செய்தி கொண்டு வந்தவனுக்குச் சொல்லப்பட்டதல்ல.
அது தனக்கே கூறிக்கொண்டதாகும். அவருடைய மறுப்பே என்ன? என்ன? என்று வெளிப்பட்டது. ஆனால் அவர் தத்துவஞானி என்பதால், அந்த மறுப்பை அவரால் உடனே உதற முடிந்தது.

கப்பல் மூழ்கி விட்டது. அதனால் என்ன? அதைப் பற்றி நான் செய்யக் கூடியது ஏதும் இல்லையே. நான் திவால்  ஆகிவிட்டேன். அதனால் என்ன? நிறையச் சொத்து சம்பாதித்தேன். இப்பொழுது திரும்பவும் உழைத்து சம்பாதிப்பேன். என் மனைவியும் மக்களும் இறந்து விட்டனர். அழுது புரள்வதால் அவர்கள் திரும்பி வரப் போவதில்லை. போனவர் போனவர்தான். அதனால் என்ன? அதுதான் உண்மை. இப்பொழுது நான் மட்டும்தான் பாக்கி இருக்கிறேன். அதுவும் உண்மை. ஆதலால் உண்மைகளைப் புரிந்து கொண்டு யதார்த்தங்களை ஏற்றுக்கொண்டு செய்ய வேண்டியவற்றைச் செய்வேன்.

உண்மைகள் மகிழ்ச்சிகரமாக இருக்கலாம் அல்லது துக்ககரமாக இருக்கலாம். நமக்குச் சாதகமாக இருக்கலாம் அல்லது பாதகமாக இருக்கலாம். இப்பொழுது மகிழ்ச்சிகரமானு, இப்பொழுது துக்ககரமானது இப்பொழுது சாதகமானது, இப்பொழுது பாதகமானது இப்படி அவை மாறிக் கொண்டே இருக்கின்றன. இப்பொழுது வெயில் மிக அதிகமாக இருக்கிறது. அதுதான் உண்மை. இப்பொழுது வெயில் குறைந்து மிதமாக இருக்கிறது. அதுவும் உண்மை. இப்பொழுது மிகவும் குளிருகிறது. அதுவும் உண்மை. இப்பொழுது நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். அதுவும் உண்மை. இப்பொழுது எனக்கு ஃப்ளூ வந்து உடம்புக்கு முடியவில்லை. அதுவும் உண்மை.

இப்படி நாள்தோறும் பல விஷயங்களை நாம் சந்திக்க வேண்டி இருக்கின்றன. அனைத்தும் நிதர்சமான உண்மைகள்.ஆதலால் அவற்றை உள்ளவாறே சமநிலையுடன் எதிர்கொள்ள வேண்டும். நமக்கு சாதகமான நிலைகளை துள்ளிக்குதிக்காமல் நிதானமாக அனுபவிக்கிறோம். நமக்கு பாதகமானவற்றை மறுக்காமல், மனத்தில் எதிர்க்காமல் ஏற்றுக் கொண்டு மேற்கொண்டு செய்ய வேண்டியவற்றைச் செய்கிறோம்.

மனோபலமே உண்மையான மனித பலம்

இப்படி உண்மைகளை, யதார்த்தங்களைச் சந்தித்துச் செயல்படும்போது நாம் ப்ராக்டிகல் மனிதர்களாகிறோம். சூழ்நிலைகளை உள்ளவாறே எதிர்கொண்டு செயல்படுபவனே பயனுள்ளவாறு செயல்படமுடியும். இதுதான் உண்மையான மனித பலம். மிகவும் ஆச்சர்யகரமான செயல்களைச் செய்வதில் பலம் வெளிப்படுவதில்லை. அமைதியாக ஒவ்வொரு சூழ்நிலையையும் பதற்றமின்றி எதிர்கொண்டு செயல்படுபவனே உண்மையாகவே பலம் உள்ளவன். ஏனெனில், மனோபலமே உண்மையான பலமாகும். சூழ்நிலைகளை யதார்த்தமாக ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் கோழைகள். ஒவ்வொரு சூழ்நிலையையும், பிரச்னையையும் சிறிய சிறிய யதார்த்தங்களாகப் பிரித்து அவற்றுக்கேற்ப செயல்படுவதில்தான் உண்மையான மனித பலம் வெளிப்படுகிறது.

நடந்த விஷயங்களிலிருந்து நம்முடைய உணர்ச்சிகள், பதற்றம் ஆகியவற்றைக் கொண்டு பூசப்பட்ட வண்ணக் கலவைகளை சுத்தமாகக் கழுவி விடும்போது, நடந்தவற்றை யதார்த்தமாக, சமமான நிலையுடன் காண்கிறோம். உண்மைகளை நம் மனம் எதிர்ப்பதில்லை. மறுப்பதில்லை. நம் விருப்பு, வெறுப்புகள் பூசப்பட்ட சூழ்நிலையைத்தான் நாம் எதிர்க்கிறோம். மறுக்கிறோம். அதனால் உணர்ச்சி வசப்படுகிறோம். ரியாக்ட் செய்கிறோம். 

சூழ்நிலைகளை நம் விருப்பு, வெறுப்புகளின் பூச்சு இல்லாமல் நம் மனம் சமநிலையை, அமைதியை அடைகிறது. அப்படிப்பட்ட மனமே வேதாந்தம் கற்பதற்கு வேண்டிய பக்குவத்தைப் பெறுகிறது. வேதாந்த ஞானம் என்பது மெய்ப்பொருளைப் பற்றிய ஞானம் என்பதால், அன்றாட விவஹார உண்மைகளைக் கூட காண மறுக்கும் மனத்தால் மெய்ப்பொருளை எப்படி காணமுடியும்?

வேதாந்தமோ அன்றாட உலகின் விவஹார உண்மைகளையே மித்யா என்கிறது. அதாவது அவற்றுக்குச் சுயமான இருப்பு கிடையாது என்கிறது. அவை மெய்ப்பொருளின் தோற்றமே என்று கூறுகிறது. இதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றால் முதலில் குறைந்த பட்சம் விவஹார உலகின் உண்மைகளை எவ்வித வண்ணப்பூச்சும் இல்லாமல் காண்பதற்கும் பழக வேண்டும். அன்றாட உலகத்தின் உண்மைகளையே தன் விருப்பு, வெறுப்புகள் என்னும் வண்ணக் கண்ணாடி மூலமே பார்க்கும் மனிதன்,  மிகவும்  சூட்சுமமானதும், அறியப்படும் பொருளாக இல்லாததுமான மெய்ப் பொருளைப் பற்றிக் கூறும் வேதாந்த உபதேசத்தை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?

ஆதலால், வேதாந்த உபதேசத்திற்குத் தயாராக உள்ள மனம் அன்றாட உண்மைகளுக்குத் தன் விருப்பு, வெற்றுகள், சொந்த மதிப்பீடுகள் ஆகியவற்றைக் கொண்ட பூச்சுகளைப் பூசுவதில்லை. அவற்றை உள்ளவாறே ஏற்றுக்கொண்டு சம நிலையுடன் செயல்படுகிறது. அந்த மனம் எந்தச் சூழ்நிலையையும் எதிர்ப்பதில்லை, மறுப்பதில்லை. உணர்ச்சி வசப்படாமல் பதற்ற மடையாமல் செய்வதைச் செவ்வனே செய்கிறது. இதுதான்  ஸமசித்தத்வம் என்பதாகும்.

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com