Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

எழுத்தாளர் சுஜாதாவுடன் ஒரு நேர்காணல் :

| Jan 12, 2011
சிலருக்கு மரணம் என்பது வெறும் உடலுக்கு மட்டுமே. என்றென்றும் சிரஞ்சீவியாக, ஒரு சகலகலா வல்லவனாக, தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதும் ஒரு நல்ல அறிவு ஜீவியாக அறியப்பட்ட, எத்தனையோ ஏகலைவர்களுக்கு துரோணராக விளங்கிய - சுஜாதா அவர்களின் ஒரு நேர்காணல் சமீபத்தில் ஒரு பதிவர் அனுப்பி இருந்தார். உங்கள் அனைவரின் பார்வைக்கு... பதில்களைப் பாருங்கள்.. சுருக், சுருக், நச் நச். ....

Essence of your life so far ரத்னச்சுருக்கமாக சொல்ல முடியுமா?

'ரத்னச்சுருககமாக 'ஓரிரு வரிகளில்' எல்லாம் ஒரு வாழ்க்கையைச் சொல்ல முடியாது.
இபபடிக்  கேட்பது தமிழனின் சோம்பேறித்தனங்களில் ஒன்று, என் வாழ்க்கை என் எழுத்தில் முழுவதும் விரவிக் கிடக்கிறது.

வேறு வார்த்தைகளில், தங்களைப்பற்றித் தெரியவே தெரியாத ஒரு ஆடியன்ஸ் முன் தாங்கள் எப்படி அறிமுகம் செய்து வைக்கப்பட விரும்புவீர்கள்?

முதலில் அவர்களை என் ஒரு சிறுகதையையாவது படிக்கச் சொல்வேன்

பல துறைகளில் தடம் பதித்துள்ளீர்கள். தங்கள் Home ground என்று எதைக் கருதுகிறீர்கள்?

அறிவியல் சார்ந்த விஷயங்களைத்தான். அதில்தான் உண்மை அதிகம் உள்ளதுதங்கள் தாய் ஈன்ற பொழுதில் பெரிதுவப்பார்கள். அவர்களைப் பற்றிக்  கொஞ்சம்.ஈன்ற பொழுதில் மட்டும் அல்ல. எல்லா பொழுதிலும் தன் மூன்று மகன்களையும் பற்றி பெரிதுவந்தவள்.

சமீபத்தில் ஸ்ரீரங்கம் சென்றீர்களா?  தேவதைகள் காலத்திலிருந்து என்ன மாறுதல் அடைந்துள்ளது?

ஸ்ரீரங்கத்துக்கு ஏடிஎம்மும் பிட்ஸாவும் வந்து விட்டது. ஐயப்பா கும்பல் வந்துவிட்டது. அடையளைந்தான் தெருக்களில் பலமாடி ஃபளாட்கள் வந்துவிட்டன.

கல்லூரியில் உங்களுடன் படித்த காலத்து அப்துல் கலாம் பற்றி சுவையாக
ஏதாவது..


நன்றாகப் படிப்பார.் ஒரு கிளைடர்
(glider) கட்டினார். நாங்கள் இருவரும் தமிழில் அறிவியல் கட்டுரைகள் எழுதினோம்

தங்களின் எழுதுக்களில் இயல்பாக இழைந்தோடும் நகைச்சுவை அனைவரும்  ரசித்தவை. இருப்பினும் கற்றதும் பெற்றதும்-ல் spoonerism (நகைச்சுவைகள்) முகம்  சுளிக்க வைக்கிறதே எனத் தோன்றுகிறது. உங்கள் comments?

அதைமட்டும நினைவு வைத்துக் கொண்டிருக்கும் உங்களை எண்ணி முகம் சுளிக்க வைக்கிறது.

We are ardent admirers of Sujatha. என்றாலும் when we are confronted by
Sujatha baiters about Boys dialogue
, நாங்கள் நெளிய வேண்டியிருக்கிறது. இதைத் தவிர்த்திருக்க முடியுமா?


நான் கொஞ்சம கூட நெளியவிலலை.
Boys இபபோது சன் டிவியில் மாதாமாதம் உலகமெங்கும் ஒளிபரப்பாகி வருகிறது எனக்காக நீங்கள் 'நெளிய வேண்டிய' தேவையே இல்லை. இதனால் எனக்கு குற்ற உணர்ச்சி நிச்சயம் ஏற்படாது

தெளிவாக எழுதுகிறீ£ர்கள். தாங்கள் சலவைக் கணக்கு எழுதினால் கூட வெளியிட ஊடகங்கள் உள்ளன. ஆர்வமிக்க வாசகர்கள் ஏராளம். விழ்ப்புணர்வு ஊட்டும் விஷயங்களைப் பற்றி தாங்கள் எழுதினால் பலருக்கும் பலன் தரும்.

எனக்கு இந்த வகை உபதேசம் தேவையில்லை

அறிவியல், ஆன்மீகம், சிறுகதைகள், கவிதை, சஸ்பென்ஸ் நாவல்கள் சுருங்கச் சொன்னால் நீங்கள் தொடாத துறையே கிடையாது. ஒரே ஒரு துறையைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற ஒரு அவசியம் ஏற்பட்டால் எதைத்   தேர்ந்தெடுப்பீர்கள்.

அவ்வகை அவசியம் எனக்கு ஏற்படாதபோது அதைப்பற்றி யோசிக்கத் தேவையில்லை

இணையத்தில் தமிழின் எதிர்காலம்..?

தமிழ் எதிர்காலத்தில் இணையத்தையும் வளைத்துப் போட்டு விடும். தமிழின் எல்லா இலக்கியங்களும் இணையத்தில் வந்துவிடும். தமிழர்களிடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை இணையம் டெக்னாலஜி முலம் சமன் படுத்திவிடும். ஒர் உதாரணத்துக்கு இன்று தமிழில் விசைப்பலகை, ஓதுக்கீடு ஐந்துவகை உள்ளது. யுனிகோடு உள்பட எழுத்துருவாக்கங்கள் அரை டஜன் உள்ளன. இருந்தும் மென்பொருள்கள் மூலம் இந்த வேற்றுமையை சமாளித்து விடுகிறோம். நம்முடைய பிழைகளுக்கும் குறைகளுக்கும் நிவாரணம தொழில் நுட்பத்தில் உள்ளது. இணையத்துக்கு ஜாதி இல்லை. அது ஒரு வசீகரமான
anarchy.

உங்களுக்கு மிகவும் பிடித்த, நீங்கள் மிகவும் மதிக்கும்
ஒரு கவிஞர்
ஒரு எழுத்தாளர்
ஒரு நடிகர்
ஒரு டைரக்டர்
ஒரு கர்நாடக இசை வித்வான்
ஒரு அரசியல் வாதி

*ஒரு* என்பதில்தான் சங்கடம். எத்தனையோ கவிஞர்களைப் பிடிக்கும். எத்தனையோ எழுத்தாளர், நடிகர், டைரக்டர், இசைக்கலைஞர். பிடித்தவர்களின் பட்டியலை அவ்வப்போது திருத்திக் கொள்ளும்படியாக ரசனையைத் திறந்து வைத்துக் கொள்வது அவசியம் என்று நம்புகிறவன் நான்

ரஜினியின் சிவாஜிக்கு வசனம் எழுதுகையில் உங்களுக்கு ஏற்பட்ட சுவையான அனுபவங்கள்...

தேக்கடியிலும் ஐதராபாதிலும அமைதியான சூழ்நிலையில் தொடர்ந்து கதையை விவாதித்து எழுதியபோது தேக்கடியில் விசாரிக்க வந்த யானைகளும் ஐதராபாதில் பாஷை தெரியாவிட்டாலும எங்கள் ஆசை தெரிந்து  கேட்டது கொண்டுவந்த தெலுங்கு நண்பரும்தான்

0 comments:

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com