Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

ருத்ராக்ஷத்தின் சிறப்புகளும் பலன்களும்

| Jan 4, 2011
சகலவேத ஆகமங்களிலும், ஆன்மீக நூல்களிலும் இறைவனாருக்கு உகந்த பொருட்களில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டது ருத்ராக்ஷமணிகள் ஆகும்.
ருத்ராக்ஷ மணிகளை சாதாரண பொருளாகக் கருதுவது மிகவும் தவறு. அதில் மறைந்துள்ள உண்மைகளும் தெய்வீக சக்திகளையும் இன்றைய அறிவியல் உலகமே கண்டு வியக்கிறது. வெளிநாட்டினரும் விரும்பி அணியக் கூடியது. பெண்களுக்குத் திருமாங்கல்யம் எவ்வளவு முக்கியமானதோ சிவனடியார்களுக்கு ருத்ராக்ஷம்.

ருத்ரம் என்ற புனிதப்பெயரிலிருந்து தோன்றியதாகக் கூட நாம் எடுத்துக் கொள்ளலாம்.திருமாங்கல்யம் உடைய பெண் எப்படி சுப காரியங்களுக்குத் தகுதியுடையவளோ அதேபோல ருத்ராக்ஷத்தை அணிந்தவன் சகல நல்ல காரியங்களுக்கும் தகுதியுடையவனாக ஆவான். சகலவேத ஆகமங்களிலும் சொல்லியபடி முக்தியை விரும்புபவர்களும் மற்றவர்களும் விபூதியைப் போலவே ருத்ராக்ஷத்தை அணிய வேண்டும். ருத்ராக்ஷத்தை அணிந்து கொண்டிருப்பவர்களைக் கண்டாலே சகலவித பாவங்களும் துன்பமும் அதி விரைவில் நீங்கும்.

திருமாங்கல்யத்தைப் பார்த்ததும் எப்படி ஒரு பெண்ணை சுமங்கலியாக நினைங்கிறோமோ அதைப்போன்று ருத்ராக்ஷத்தை அணிந்தவர்களைக் கண்டால் சிவனடியார் என்றே நினைக்க வேண்டும்.

சாபால உபநிடதமும் அட்சாமாலிகா உபநிடதமும் முழுக்க முழுக்க ருத்ராக்ஷத்தின் மகிமைகளையும் பெருமைகளையும் மட்டுமே கூறுகின்றன. அதனால் தான் வள்ளளாரும் "அக்கமா அணியும் உண்டாம்" என ருத்ராக்ஷத்தை சிறப்பித்துக் கூறுகிறார்.

ருத்ரரின் கண்ணிலிருந்து தோன்றிய ருத்ராக்ஷத்துக்கு சம்சார துக்கத்தை நீக்கும்படியான அருள்பார்வை என்பதற்குச் சிவ பெருமானைப் போலவே ருத்ராக்ஷமும் நம்மிடம் உள்ள தீமைகளை நீக்கி நமக்கு அருள்புரியும் என்பதும் விளங்கும் ருத்ராக்ஷம் துறவிகளுகக்கு மட்டுமின்றி இல்லறத்தாருக்கும் ஏற்புடையதே திருநீறை அணிவதுபோல ருத்ராக்ஷமும் அணியலாம்.

ருத்ராக்ஷ முகங்களைக் கணக் கெடுக்க, ஆரஞ்சு பழத்தை தோலுரித் துப்பார்த்தும் அதன் சுனைகள் எப்படி ஒன்றுடன் ஒன்று சேர்ந்து திருப்பது போல் ருத்ராக்ஷ முகங்களும் ஒன்றை யொன்று அடுத்தடுத்து சேர்ந்திருக்கும்.

 
ஒருமுகம் உள்ள ருத்ராக்ஷம் சாட்சாத் சிவ சொரூபமாகும். 
  இதனை அணிவதால் ப்ரும்மஹத்தி தோஷம் நிவர்த்தி ஆகிறது.


இரண்டு முக ருத்ராக்ஷம் தேவதேவி வடிவம் பலவிதமான பாவங்களைப் போக்க வல்லது. பசுவை வதம் செய்த பாவம் நீங்கும்.
தேவ தேவனாகிய சிவசக்தி வடிவான ஸ்ரீ அர்த்த நாரீஸ்வர சொரூபமாகும். இதனை அணிவதால் புத்தி பூர்வம், அபுத்தி பூர்வம் என்னும் இரண்டு வகையான பாப வினைகள் நீங்குகிறது.

முன்று முகமுள்ள ருத்ராக்ஷம் அக்னிவடிவம் கொண்டது இது பெண்ணைக் கொலை செய்த பாவத்தை ஒரு கணத்தில் எரிக்கும்.

நான்கு முகம் உள்ள ருத்ராட்சம் பிரம்ம தேவனின் வடிவம். அது மனிதவதை புரிந்த பாவத்தை நீக்கும்.

ஐந்து முகம் ருத்ராட்சம் ருத்ரனே ஆகும் காலாக்னி என்ற அதன் பெயரே சிறப்பாகும்.
இதனை அணிபவருக்கு சிவ அனுக்ரகம் கிட்டும்

ஆறு முகம் ருத்ராட்சம் கார்த்திகேய வடிவம் அதை வலது கையில் அணிந்து கொள்ள வேண்டும் பிரம்மஹத்தியின் நிழல்கூட அண்டாது காக்கும்.
இதனை வலது காதில் குண்டலமாகவோ அல்லது வலது புஜத்தில் அணிவது விசேஷ பலன்களைக் கொடுக்கும்.

ஏழு முகமுள்ள ருத்ராட்சம் மன்மத வடிவம் பொன் முதலியவைகளைத் திருடிய பாவத்தைப் போக்கும் இது ஆதிசேடன் வடிவம் எனப்படும்.
பெரும் சம்பத்து, ஆரோக்கியம், ஐசுவரியம், ஞானம், வாக்குத் தூய்மை போன்ற நல்ல சுகபோகங்கள் வாய்க்கும்.

எட்டாவது முக ருத்ராட்சம் விநாயக வடிவம் தானத்தை திருடிய பாவம். தீய வெண்ணை அடைந்தபாவம் அடுத்தவர் உணவை உண்டதும், நீங்கும்.
இது ஸ்ரீ மஹாகணபதி ஸ்வரூபம். அஷ்ட வசுக்களை தெய்வமாகக் கொண்ட எட்டுமுக ருத்ராக்ஷத்தை தரிப்பவர்களுக்கு பலவகையான தோஷங்கள் நீங்குகின்றன.

ஒன்பது முகம் கொன்ட ருத்ராட்சம் பைரவ வடிவம். அதை இடது கையில்  அணிய வேண்டும். அது புத்தி, முக்தி முதலியவைகளைத் தரும். பரமேஸ்வரனுக்கு சமமான குணத்தையும் கொடுக்கும். முடிவில் சிவனிடமே சேர்க்க வல்லது.
இது சிகப்பு நிறமுடையதாக இருக்கும். இதன் அதிர்ஷ்ட தேவதை அம்பிகை. இதனை இடது கையில் தரிப்பவர்கள் சிவ ரூபமாகவே கருதப்படுகிறார்கள். புத்தி முத்திகளை கொடுக்க வல்லது.


பத்துமுக ருத்ராக்ஷம்: "பத்து முகம் புவியுண்டவனிர் உருவம் மருவு நாளொரு கோள் பல, மண்ணைப் பூதங்கள் பிரம்மராக்கத பேதுறுப்புரியும் விரவு தீங்கெலாபம் வெயில் படுபனியென விளக்கும்."இது விஷ்ணு ச்வரூபமாகும். தச திக்குகளுக்கு தேவதைகளின் சொரூபமாக விளங்கும் இந்த ருத்ராக்ஷத்தை தரிப்பவர்களுக்கு அந்தந்த தேவதைகளின் ப்ரீதி கிட்டும். கிரஹதோஷங்களையும், பூத பேய் பிசாசுகளை விரட்டும். சர்ப்ப விஷங்களையும் போக்கும்.

பதினொரு முகமுள்ள ருத்ராட்சம்
இது ஸ்ரீ ஏகாதச ருத்ரரின் ச்வரூபமாகும். இந்த ருத்ராக்ஷத்தின் பதினொரு முகங்களும் பதினொரு ருத்ர ஸ்வரூபங்களைக் குறிக்கும். அவை: போலி - பிங்கள - பீம - விரூபாக்ஷ - வியோகித - சாஸ்தா - அஜபாத - அஹிர்புத்தீய - சம்பு - சண்ட - பவ. இதனை சிரசில் தரிப்பதால் ஆயிரம் அஸ்வமேத யாகங்களை நடத்திய பலனும், கோடி கோதானம் செய்த பலனும் உண்டாகும்.

பன்னிரண்டு முகமுள்ள ருத்ராட்சம் : 12 சூரியர்களின் வடிவம் கோமேத, அசுவமேத யாகங்கள் செய்த பலன்களைத் தரும். கொம்புள்ள மிருகங்கள் ஆயுதம் தாங்கியவர்கள் பலி முதலியன கொடூர மிருகங்கள் முதலியவற்றால் வரும் பயம், தடுத்தும் எல்லாவற்றையும் தீர்க்கும் உடல் வியாதிகளால் வரும் துன்பங்கள் நீங்கும்.
துஷ்ட மிருகங்களால் துன்பம் ஏற்படாது. இதனைக் காதுகளில் அணிவது விஷேஷ பலனைத் தரும்.

பதின்மூன்று முகமுள்ள ருத்ராட்சம் கார்த்தி கேய வடிவம். அது எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்யும். தாய், தந்தை, சகோதரன் முதலியனவர்களைக் கொன்ற பாவத்தை நீக்கும்.
இந்திர ஸ்வரூபம். இந்த ருத்ராக்ஷத்தை ஸ்ரீசதாஷிவ ஸ்வரூபம் என்றும் என்றும் கூறுவர். இந்த ருத்ராக்ஷ மாலையை அணிவதால் சர்வ கார்ய சித்தி உண்டாகும்

பதினான்கு முகமுள்ள ருத்ராட்சம் அணிந்து கொள்பவன் சிவபெருமானுக்கு இணையானவனாகி தேவர்களாலும் போற்றி வணங்கப்பட்டு மோட்சத்தை அடைகிறான் அதன் மகிமை சொல்லில் அடங்காது. "சக்தி! நீயும் நானும் சேர்ந்த வடிவம் இது" என் பரமேஸ்வரனே தேவியிடம் கூறி இருக்கிறார். வசிய சக்தியைத் தரும். சிவ உலகிலேயே இருக்க வைக்கும். அதைக் கழுத்தில் அணிந்தால் உச்சரிக்கும் மந்திரங்கள் பலிக்கும் வெற்றி உண்டாக்கும்.
இந்த ருத்ராக்ஷத்தை ஸ்ரீ ருத்ரமூர்த்தி சொரூபம் எனவும், ஸ்ரீஹனுமான் சொரூபம் எனவும் கூறுவர். இது கிடைப்பது மிகவும் அரிது.

ருத்ராக்ஷங்களை அணிபவர் முறைப் படி சிவ பூசை செய்து, ''ஓம் நம சிவாய '' எனும் சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தை ஓத வேண்டும். 

3 comments:

Jayachandran said...

இதைத்தான் இத்தனை நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன். தயவு செய்து பரிசுத்தமான ருத்ராக்ஷமணி எங்கு கிடைக்கும் என்று கூறவும்.. என்னுடைய மெயில் p.jayachandran22@gmail.com

Arun said...

ஐயா, இதில் எனக்கு சில சந்தேகங்கள்!! 3,4,7,14, இந்த முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் நீக்கும் பாவங்கள் மன்னிக்ககூடாத பாவங்கள், இவைகளை ருத்ராட்சங்கள் நீக்கும் என்றால் இந்த பாவத்தை செய்து விட்டு இந்த ருத்ரச்சதை அணிந்தால் போதுமா ? அது நல்லது இல்லையே...

Palanikumar Vasu31 said...

ஐயா எனக்கு ருத்ராட்சம் கிடைக்குமா ஏன் என்றால் நன் இருப்பது சிங்கப்பூர்ரில் email Palanikumarvasu31@gmail.com

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com