Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம்

| Jan 31, 2011
உனக்காக நான், எனக்காக நீ என்று பிறவி எடுத்ததுபோன்ற தம்பதியர்
இருந்தார்கள். காதல் திருமணம். முதலில் இருவீட்டாரின் எதிர்ப்பு இருந்தா
லும், திருமணமான ஆறுமாதங்களுக்குள் ஒன்றிப்போய்விட்டார்கள்.

அதற்குப் பிறகுதான் மாப்பிள்ளையின் பெருமை பெண்வீட்டார்களுக்குத்
தெரிந்தது. மருமகளின் பெருமை பையன் வீட்டார்களுக்குத் தெரிந்தது

இருவருக்கும் ஒரு அசத்தலான பெயர் பொருத்தம் இருந்தது. அவன் பெயர்
சோமசுந்தரம். அவள் பெயர் மீனாட்சி!.

அதுவா முக்கியம்?

அதைவிட முக்கியமாக தம்பதியர் இருவரும் அன்பாக அன்னியோன்யமாகக்
குடும்பம் நடத்தினார்கள். ஒருவருக்காக ஒருவர் உருகினார்கள்.ஒரு பெண்
குழந்தையும் பிறந்தது

எல்லாமே சரியாக இருந்துவிட்டால் கதையை எப்படி நகர்த்துவது?

ஒரே ஒரு குறை இருந்தது.
http://www.cinejosh.com/newsimg/newsmainimg/1273339994_anushka-gopichand-lip-2.jpg

சோமு என்ற சோமசுந்தரம் 'அந்த' சமாச்சரத்தில் அதீத இச்சை உடையவன்
அதிகாலை, மதியம். முன்னிரவு என்ற காலக்கணக்கில்லாமல் தன்னை
சந்தோஷப் படுத்தச் சொல்வான். அவளும் மனம் கோணாமல் எப்போது
அவன் படுக்கைக்கு அழைத்தாலும் ஒத்துழைப்பாள்.

யாருடைய கொள்ளிக்கண் பட்டதோ தெரியவில்லை. சோமு ஒரு நாள்
அவன் பொறியாளராக வேலை பார்த்த தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில்
இறந்து விட்டான். அவன் இறந்தபோது அவனுக்கு வயது முப்பதுதான்.
மீனாட்சி அவ¨னிவிட இரண்டு வயது இளையவள்

எப்படி இருக்கும் மீனாட்சிக்கு? நொருங்கிப்போய்விட்டாள்

யாராலும் அவளுக்குச் சமாதானம் சொல்ல முடியவில்லை!

ஆனாலும் காலதேவன் ஒரு மருந்து வைத்திருக்கிறான். அதுதான் மறதி.
மெல்ல மெல்ல அவளுடைய துக்கம் ஆறிவிட ஒருவருடத்திற்குள் அவள்
பழைய இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டாள்.

அவளுடைய குழந்தை அவளுக்கு ஆறுதலையும், மகிழ்ச்சியையும் ஒரு
சேரக் கொடுத்துக் கொண்டிருந்தது!

அப்படியே ஒரு இருபது வருடங்கள் ஓடிப்போனது தெரியவில்லை!

ஒரு சமயம் திருவண்ணாமலையில் அவள் ஒரு சித்தரைச் சந்தித்து
வணங்கி, தன் கதையைச் சொல்லி அழுதாள்.

அவர் அவளுக்குப் பிறப்புக்களைச் சொல்லி சமாதானம் செய்தார்.

அவளுக்கு ஓரளவு இறப்பு, மறு பிறவிகள் மேல் நம்பிக்கை ஏற்பட்டது!

இறந்துபோன தன்னுடைய கணவன் இப்போது மறுபிறவி எடுத்து
எங்கே இருப்பான் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் அவளுக்கு ஏற்பட்டது.

அதை அவள் அவரிடம் சொன்னாள்.

உடனே அவர் புன்னகையுடன் இரண்டு வெள்ளிக் கிண்ணங்களை, தன்
ஆசிரம அலமாரியில் இருந்து எடுத்துக் கொடுத்தார்.

கொடுத்ததோடு சொன்னார். "இதை நீ உன் காதுகளில் வைத்துக் கொண்டு,
மனம் உருகி இறைவனைப் பிரார்த்தனை செய்தால், உன் கணவனுடைய
ஆத்மாவுடன் தொடர்பு கிடைக்கும். நீ மனதில் என்ன கேட்க நினைக்
கிறாயோ அதை மனதிலேயே நினைத்துக் கொண்டால், அவன் உன்னுடன்
பேசுவான், அது உன் மனதிற்கு மட்டும் கேட்கும்.போய் பேசிவிட்ட வா"
என்றார்

அவள் உற்சாகமாக எழுந்து சென்று கொஞசம் தள்ளி இருந்த அரச மரத்து
நிழலில் அமர்ந்து கொண்டு பேச ஆரம்பித்தாள்.

"என்னங்க நான்தான் உங்களுடைய மீனாட்சி பேசுகிறேன். என்னோடு
பேசுங்களேன்...." மனம் உருகிச் சொன்னாள்.

என்ன ஒரு ஆச்சர்யம், காதில் அவளுடைய கணவனின் குரல் தேனாக
ஒலித்தது.

"என்னடி செல்லம் நல்லாயிருக்கியா?"

"இருக்கிறேன். நன்றாக இல்லை. நடைப்பிணமாக இருக்கிறேன்"

"கவலைப் படாதே.கடவுளை வேண்டிக்கொள். மீன்டும் ஒரு பிறவியில்
நாம் மறுபடியும் இணவோம்!"

"அதற்கு எவ்வளவு நாளாகும்?"

"யாருக்குத் தெரியும்? எவ்வளவு நாளாலென்ன? உன்னைப்போல ஒரு
உத்தம மனைவி கிடைக்க நான் எத்தனை நாட்கள் வேண்டுமென்றாலும்
காத்திருப்பேன்"

அவள் குளிர்ந்துபோய் விட்டாள். மனது காற்றில் பறக்க ஆரம்பித்தது.

உடனே பழைய சம்பவங்கள் மனதில் மின்னலாய்த் தோன்ற அவள்,
ஒரு குறுகுறுப்புடன் கேட்டாள்:

"அந்த' சமாச்சாரம் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க மாட்டீர்களே?
இப்போது அது தடையின்றிக் கிடைக்கிறதா?"

"ஆகா, ஒரு நாளைக்குப் பத்து முறை!"

நாளொன்றுக்குப் பத்து முறைகளா? எப்படி சாத்தியம்?

வியப்போடு கேட்டாள்:" பத்து முறை எப்படி சாத்தியம்? பொய் சொல்லி
விளையாடுகிறீர்களா?"

"இல்லடி செல்லம் உண்மையைத்தான் சொல்கிறேன். இப்போது நான்
முயலாகப் பிறந்துள்ளேன்

ஒருவனுடைய பிறவி அபிலாஷைகள் தீராமல், அறைகுறை வயதில்
இறந்தால், அந்த வினைப் பயன் தீரும் வரை, அவன் அதற்குத்
தகுந்தபடி பல பிறவிகளை எடுத்துக் கொண்டே இருப்பான் என்பது
தான் பழைய கூற்று. அதானால்தான் பெரியவர்கள் சொல்வார்கள்
தர்மத்தின் மேல், இறைவன் மேல் அதிக ஆசை வை. சிற்றின்பங்களின்
மேல் அதிக ஆசை வைக்காதேயென்று!

துர் மரணமும், ஆவியும் ....உங்களை பாதுகாப்பது எப்படி?

|
ஆவிகள் சூரியனை நோக்கிச் சென்றால் சொர்க்கம்!
சந்திரனை நோக்கிச் சென்றால் வைகுண்டம்!!இங்கு செல்லும் ஆவிகள் மறுபிறவி பிறக்கும்.சனிக்கிரகத்தை நோக்கிச் சென்றால் நரகம்.பல ஆண்டுகள் கடும்வேதனையை அனுபவிக்க வேண்டும்.இதுபற்றிய முழுவிபரம் கருட புராணத்தில் இருக்கின்றது.

[childghost.jpg]
திடீர் விபத்து,தற்கொலை,போர்/கலகம்/கொலை/எதிர்பாராத மரணம் இவற்றால் இறப்பவர்கள் முறைப்படி இறக்கும் காலம் வரை ,எங்கே இறந்தார்களோ,அங்கேயே ஆவியாக இருக்க வேண்டும்.இறந்தது ஆண் எனில் அதற்கு பேய் என்றும், பெண் எனில் பிசாசு என்றும் பெயர்.

நம் சூட்சும உடல் ஸ்தூல உடலான ஐம்பூத உடலில் இருந்து பலவந்தமாக பிரிக்கப்படுவதால் இறந்தவரின் ஆவி எந்த இடத்தில் மரணமடைந்ததோ அங்கேயே சுற்றும்.சுமார் 20 அடி சுற்றளவுக்குள் சுற்றும்.வெளியே எங்கும் செல்லமுடியாது.உயரேயும் பறக்க முடியாது.இதைத்தான் மந்திரவாதிகள் பிடித்து தங்களிஷ்டப்படி ஏவல் செய்கின்றனர்.அருளாளர்களின் ஆசி கிடைத்தால் இந்த ஆவிகளுக்கு விடுதலை!

துர்மரணம் அடைந்தவர்களின் பெயரை குழந்தைகளுக்கு வைக்கக்கூடாது.அவர்களை வணங்கக்கூடாது.அவர்களுக்கு படையல் போடக்கூடாது.உச்சாடன கணபதி ஹோமம் மற்றும் பிதுர் ஹோமம் மூலம் அவைகளை வேறிடத்திற்குப் போகச் செய்யலாம்.
துர்மரணமடைந்தது வாலிபவயதுப் பையனாக இருந்தால் வாலிப வயதுப் பெண்ணைத் துன்புறுத்தும்.வாலிப வயது பெண்ணாக இருந்தால் வாலிபவயதுப் பையனைத் துன்புறுத்தும்.கைகள், கால்கள் உள்ளங்கால்கள் தொப்புள் ஆகிய இடங்களில் மருதாணி இலையை மட்டும் பிடுங்கி அரைத்துத் தடவி வந்தால் துர் ஆவிகள் தாக்காது.ட்யூப்லைட் வெளிச்சத்தில் துர் ஆவிகள் செயல்பட முடியாது.ஏன் எனில் அதில் பாதரசம் உள்ளது.பிரண்டைத் துவையல், தடியங்காய்(வெண்பூசணி லேகியம்),வெள்ளைப்பூண்டு லேகியம் சாப்பிட்டால் துர் ஆவிகள் தாக்குதல் இராது.

நயம்சாம்பிராணி, வலம்புரிக்காய், கோஷ்டம்,விரலி மஞ்சள் ஆகியவைகளை நன்கு இடித்து அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் புகைபோட ஆவிகள் ஓடிவிடும். புகைபோட்ட பின் கைகளை நன்கு கழுவ வேண்டும்.
ஹாஸ்டல்கள்,அரண்மனைகள்,ஆஸ்பத்திரிகள்,சில வீடுகளில் இப்படிப்பட்ட ஆவிகள் இருக்கும். மாந்திரீகத்தொழில் தெரிந்தவர்கள் மூலமாக பச்சைப்பானைகளில் அடைத்து இவற்றை ஆற்றங்கரை, குளக்கரை, கடற்கரை, வனங்களில் விட்டால் அந்த ஆவிகளுக்கும் விடுதலை.நமக்கு பெரும் புண்ணியம் தரும் செயலாகும்.

மகாபாரதமும் நிஜமே! ஆதாரங்களுடன்

|

ராமரால் கட்டப்பட்ட சேது பாலம் எப்படி 17,50,000 ஆண்டுகளாக இராமேசுவரம் அருகில் உள்ளதோ அதேபோல மகாபாரதத்தில் ஸ்ரீகிருஷ்ணபகவான் வாழ்ந்த அரசாண்ட துவாரகாபுரியும் 5200 ஆண்டுகளாக கடலுக்குள் மூழ்கிக் கிடக்கிறது.கலியுகம் துவங்கி இப்போது 5100 ஆண்டுகளாகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்த வலைப்பூவிற்கான படங்கள்
http://www.deshgujarat.com/ என்ற தளத்திலிருந்து பெறப்பட்டுள்ளன.இந்திய தேசிய கடல் ஆராய்ச்சிக் கழகம் 1983 முதல் 1990 வரை 18 ஆராய்ச்சிகளை மேற்கொண்டது.ஆராய்ச்சிக்குழுவின் தலைவரான எஸ்.ஆர்.ராவ் தனது ஆராய்ச்சி முடிவுகளை ஒருபுத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.அந்தபுத்தகத்தின் பெயர் The Lost City of Dwarka.

புராண அல்லது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பு அகழ்வாராய்ச்சியின் மூலம் வெளிப்பட்டுள்ளது.இது மகாபாரதக்கதை நிஜத்தில் நிகழ்ந்த நிகழ்வு என்பதை துவாரகை இருந்ததையும் உறுதிப்படுத்துகிறது.
கி.மு.1500 ஆம் ஆண்டுவாக்கில் தற்போதைய துவாரகை மற்றும் அதன் அருகில் உள்ள பெட் துவாரகை ஆகிய பகுதிகளில் கிருஷ்ணன் வாழ்ந்ததற்கான ஆதாரம் இருக்கிறது.

கடற்கரையிலிருந்து சுமார் அரை மைல் தூரம் நன்கு வடிவமைக்கப்பட்ட ஒரு நகரம் இருந்திருக்கிறது.ஒவ்வொன்றும் 18 மீட்டர் அகலமுள்ள இரண்டு பிரதான சாலைகள்,ஒன்றுக்கொன்ரு தொடர்புடைய ஆறு குடியிருப்புகள், மூன்று பிரம்மாண்டமான கட்டடத் தொகுப்புகளைக் கொண்டு துவாரகை விளங்கியிருக்கிறது.

அந்நகரின் சுவர் கல் 3600 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மைவாய்ந்ததாக இருக்கின்றன.கடலில் மூழ்கிய இந்நகரம், வடக்கு நோக்கி விரிவடைந்திருக்கிறது.இப்படி விரிவாக்கமான பகுதி ‘பெட் துவாரகை’ என்றழைக்கப்படுகிறது.இந்த தீவுப்பகுதி கிருஷ்ணர் மற்றும் அவர் மனைவியரான சத்யபாமா மற்றும் ஜாம்பவதிக்கான பொழுதுபோக்குதலமாகவும் அமைந்திருக்கிறது.மேலும் தென்னிந்தியாவின் ஒகமதி என்ற இடம் வரையிலும், கிழக்கு இந்தியாவில் பிந்தாரா பகுதியில் ‘பிந்த்ரா-தாரகா’என்ற இடத்தில் துர்வாசரின் குடில் இருந்ததாக மகாபாரதத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது.
துவாரகையின் நிர்மாணம் பிரமிப்பூட்டக்கூடியது.மேற்குக் கடலிலிருந்து நிலம் பெறப்பட்டு நகரம் திட்டமிடுக் கட்டப்பட்டுள்ளது.

இது கோமதி நதிக்கரையில் அமைந்துள்ளது.த்வாரமதி,குசஸ்தலை என்றும் துவாரகை அழைக்கப்படது.எல்லா அடிப்படை வசதிகளும் நிறைந்த ஆறு பகுதிகள்,குடியிருப்புகள்,வியாபார ஸ்தலங்கள்,அகன்ற சாலைகள்,பொது இடங்கள், ‘சுதர்மா சபா’ என்ற பொதுக்கூட்ட அரங்கம் மற்றும் அழகான துறைமுகம் ஆகியவற்றைக்கொண்டு விளங்கியது துவாரகை.

மகாபாரதயுத்தம் முடிந்து 36 ஆண்டுகள் கழித்து துவாரகையைக் கடல் கொண்டது.இதை முன்கூட்டியே அறிந்த கிருஷ்ணர், யாதவர்களை ப்ரபாஸ் என்ற உயரமான மலைப்பிரதேசத்திற்கு(தற்போதைய சோம்நாத்) அழைத்துச் சென்று காத்தார்.

இந்த துவாரகையை நீர்மூழ்கிக்கப்பல் மூலமாக எல்லோரும் சென்று பார்ப்பதற்கு இந்திய கடல் அகழ்வாராய்ச்சிக்கழகம் ஏற்பாடுகள் செய்து வருகிறது.
நன்றி:ஆன்மீகப்பலன் மாத இதழ் செப்டம்பர் 2007 பக்கம் 4முதல் 7 வரை.

ராமாயணமும் உண்மை.மகாபாரதமும் உண்மை.
 

விதி னா என்ன? நம்ம கையிலே ஏதும் இருக்கா ? இல்லையா?

|
ரால்·ப் பார்லெட் (Ralph Parelette) என்பவர் பிரபல அமெரிக்கப் பேச்சாளர். ஒரு முறை அவர் 'விதி' பற்றிப் பேச ஒரு கண்ணாடி ஜாடியுடன் மேடைக்கு வந்தார்.

அந்த ஜாடியில் சிறிய பீன்ஸ் விதைகளும் பெரிய வாதுமைக் கொட்டைகளும் (Walmuts) இருந்தன. ஜாடியை ஒரு முறை நன்றாகக் குலுக்கி விட்டு அங்கிருந்தவர்களுக்கு அதைக் காண்பித்தார். அளவில் பெரிய வாதுமைக் கொட்டைகள் ஜாடியின் மேல்புறத்திலும், சிறிய பீன்ஸ் விதைகள் அடிப்பகுதியிலும் இருந்தன.

"நண்பர்களே!இந்தப் பீன்ஸ் விதைகளில் ஒன்று என்னிடம் உதவி கேட்கின்றது. அதற்கும் வாதுமைக் கொட்டைகளுக்கு இணையாக மேலே தங்க ஆசையாம், நான் அதற்கு உதவப் போகிறேன். உங்கள் முன்னிலையிலேயே அந்த சிறிய பீன்ஸை மேலே வைக்கிறேன் பாருங்கள். ஆஹா, இப்போது பீன்ஸ் விதைக்குத் தான் எத்தனை சந்தோஷம்"

அவர் மறுபடி ஜாடியை நன்றாகக் குலுக்கினார். "அடடா, குலுக்கலில் பீன்ஸ் விதை தன் பழைய இடத்திற்கே போய் விட்டதே! அந்த பீன்ஸ் விதைக்கு மிகவும் வருத்தம். சமத்துவம் என்பது இல்லையே என்று அங்கலாய்ப்பு. அது மறுபடி என்னிடம் வேண்டிக் கொள்கிறது. தான் மேலே போய்த் தங்கா விட்டாலும் பரவாயில்லை. வாதுமைக் கொட்டை தனக்குச் சமமாகக் கீழே தங்க வேண்டும் என்கிறது"


"சரி, அதையும் செய்வோமே. பாருங்கள். உங்கள் முன்னிலையில் வாதுமைக் கொட்டை ஒன்றை எடுத்து பீன்ஸ்களுக்கு அடியில் வைக்கிறேன். சரி தானே!"

அவர் மறுபடி ஜாடியை நன்றாகக் குலுக்கினார். முன்பு போலவே அந்த வாதுமைக் கொட்டை மேலே வந்து விட்டது. பீன்ஸ் அடியில் தங்கி விட்டது.

"நண்பர்களே இது இயற்கையின் நியதி. அளவில் சிறியவை கீழும், அளவில் பெரியவை மேலும் எப்போதும் தங்கும். பீன்ஸ் மேலே வர வேண்டுமானால் அதற்கு ஒரே வழி, அது அளவில் பெரிதாக வளர்வது தான். அதை விட்டு நாம் எத்தனை தான் உதவினாலும் காலத்தின் குலுக்கலில் எல்லாமே தங்களுக்கு உரிய இடத்திலேயே தங்க நேரிடும்."

"நண்பர்களே பீன்ஸ¤க்கும் வாதுமைக் கொட்டைக்கும் தங்களின் ஆசைப்படி தங்களை மாற்றிக் கொள்ள முடியாது. ஆனால் மனிதர்களைப் பொறுத்தவரை நாம் அப்படிக் கையாலாகாதவர்கள் அல்ல. கடவுள் நம்மை அப்படிப் படைக்கவில்லை. நாம் உயர வேண்டுமானால் வளர வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அப்படி முயற்சி எடுப்பதன் மூலமாகவோ, முயற்சி எடுக்க மறுப்பதன் மூலமாகவோ நாமே நம் விதியைத் தீர்மானித்துக் கொள்கிறோம்" என்று கூறி முடித்தார்.

இது ஒரு மிக அழகான உவமை. ரால்·ப் பார்லெட்டின் பீன்ஸைப் போல் தான் நம்மில் பலரும் இருக்கிறோம். யாராவது ஏதாவது செய்து எப்படியாவது நம்மை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு போய் விடக் காத்து இருக்கிறோம்.

அப்படி வெறுமனே காத்துக் கிடக்கிற காலத்தில் பாதியைச் சரியாக, புத்திசாலித்தனமாக, முழுமனதோடு பயன்படுத்தினால் போதும், அந்த நிலைக்குத் தேவையான சகல தகுதிகளையும் நம் முயற்சியால் நாமே உருவாக்கிக் கொள்ள முடியும். யார் தயவும் இன்றி நம் இலக்குகளை நாமே சென்றடைய முடியும். மாறாக நல்ல நேரத்திற்காகவோ, அடுத்தவர் உதவிக்காகவோ, அதிர்ஷ்டத்திற்காகவோ காத்துக் கிடப்பவர்கள் இருக்குமிடத்திலேயே இருக்க வேண்டி வரும். அது தான் விதி.
fate2.jpg

எனவே அறிவையும் தகுதிகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள். காலத்திற்கேற்ப திறமையாக, விரைவாகச் செயல்படுங்கள். உங்கள் அறிவும் திறமையும் அதிகப்பட அதிகப்பட உங்கள் இலக்கிற்கான வழிகள் தாமாகவே தெளிவாகப் புலப்படத் துவங்கும். சரியான சந்தர்ப்பங்கள் தானாக உங்களைத் தேடி வர ஆரம்பிக்கும். இதுவே இயற்கையின் நியதி.

உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?

|
இந்தக் கேள்வியைக் கேட்டால் ஒரே மாதிரியான பதில் சர்வ நிச்சயமாக வராது. ஒவ்வொருவரிடம் இருந்து ஒவ்வொரு மாதிரியான பதில் வரும்.

அன்புமிக்க தாய், அறிவுமிக்க தந்தை, பாசமிக்க சகோதரர்கள், சகோதரிகள், பரிவுமிக்க மனைவி, உள்ளத்தைக் கொடுக்கும் குழந்தைகள், உயிரைக்கூட கொடுக்கும் நண்பர்கள், இவற்றோடு பாரதி பாடிய காணி நிலம், வற்றாத கேணி, பத்துப்பதினைந்து தென்னை மரங்கள், கத்தும் குயிலோசை, அதோடு...!

என்ன அதோடு? இது போதாதா?

அதோடு இணைப்பாக அசையா சொத்துக்கள், வற்றாத வங்கிக் கணக்கு இருப்பு, பிடித்தமான ஊரில்  வசிக்கும் வசதி, போட்டியில்லாத தொழில், இன்னோவா, டாட்டா சுமோக் கார்கள், பாரத ரத்னா வேண்டாம், அட்லீஸ்ட் பத்மபூஷன் பட்டம் கிடைக்கும் கெளரவம். ஒரு வட்டம் அல்லது மாவட்டச் செயலாளர் பதவி, என்று பலரும் பலவற்றை ஏக்கத்துடன் அல்லது ஆசையுடன் சொல்வார்கள்.

அவ்வளவும் கிடைத்து விடுமா என்ன?

கிடைக்காது!
http://www.everestjournal.com/wp-content/uploads/shiva-yoga.jpg

சரி மனித முயற்சி என்பதற்குப் பலன் எதுவும் கிடையாதா?

ஏன் இல்லை? முயற்சிக்குப் பலன் உண்டு.

நீ மாட்டை வைத்துதான் பிழைப்பு நடத்த வேண்டுமென்பதுதான் விதியென்றால் நீ மாட்டை வைத்துத்தான் பிழைப்பை நடத்தியாக வேண்டும். ஆனால் மாட்டின் எண்ணிக்கையை இறைவன் தீர்மானிப்பதில்லை.

அது உன் கையில்தான் உள்ளது. உன் முயற்சியில்தான் உள்ளது. 4 மாடுகளா அல்லது 40 மாடுகளா என்பது உன் முயற்சியால் நிர்ணயிக்கப்படும்.

ஒரு ஏழைப் பால் வியாபாரி இருந்தான். இரண்டு மாடுகளை வைத்துப் பால் வியாபாரம் செய்து கொண்டிருந்தான். வருமானம் போதவில்லை. பற்றாக்குறை. வீட்டில் அவன் மனைவி, பிள்ளைகளைச் சேர்த்து ஐந்து ஜீவன்கள். வீ ட்டு வாசல் திண்ணையில் கவலையோடு அவன் அமர்ந்திருந்தபோது, அந்த வழியாகச் சென்ற
முனிவர் ஒருவர், அவனை நோக்கிக் கேட்டார், ”தம்பி, சற்றுக் களைப்பாக இருக்கிறது, பசியாற ஏதாவது கிடைக்குமா?”

அவன் பதறிவிட்டான். பசியின் கொடுமை அறிந்தவனல்லவா? உடனே திண்ணையை விட்டுக் குதித்துக் கீழே வந்தவன், “அய்யா நல்ல மோர் இருக்கிறது, தரட்டுமா?” என்று கேட்டான்.

அவர் சம்மதம் சொல்ல, ஒரு செம்பு நிறைய மோரைக் கொண்டு வந்து கொடுத்தான்.

வாங்கி அமைதியாகக் குடித்தார் முனிவர். குடித்தபிறகுதான் அவனை உற்று நோக்கினார்.அவன் முகத்தில் கவலை குடிகொண்டிருந்தது.

தன் ஞானக்கண்ணால் அவனுடைய நிலைமையை முழுதாக உணர்ந்தவர் சொன்னார்:

“நாளை அதிகாலை என்னை வந்துபார். உன் கவலைகளை ஓட்டும் வழியைச் சொல்லித் தருகிறேன்” அவன் அவருடைய இருப்பிடத்தை அறிந்து கொண்டு, அடுத்த நாள் உதயத்தில், நம்பிக்கையுடன், அவரைச் சென்று பார்த்தான்.

அவர் அவனுடன் அதிகமாகப் பேசவில்லை. ஆனால் தீர்க்கமாக ஒன்றைச் சொன்னார் “உன்னிடம் இருக்கும் இரண்டு மாடுகளையும் ஓட்டிக் கொண்டு போய் பக்கத்து ஊர்ச் சந்தையில் விற்று விட்டு வந்து, விற்ற பணத்தை உன் வீட்டில் பத்திரமாக வை.”

அவன் அதிர்ந்து போய் விட்டான்.

மாடுகள் இரண்டையும் விற்று விட்டால் வயிற்றுப் பிழைப்பிற்கு என்ன செய்வது என்று அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளும் முனைப்பில், “அய்யா...” என்று இழுத்தான்.

அது தெரியாதா அவருக்கு? கையைக் உயர்த்திக் காட்டியதோடு, சொன்னார், “ சொன்னதைச் செய், மற்றது தானாக நடக்கும், மீண்டும் நீயே வந்து என்னைப் பார்ப்பாய், இப்போது போ!”
அவன் அவர் சொன்னபடியே செய்தான். இரண்டு மாடுகளும் நல்ல விலைக்குப் போயிற்று. விற்ற பணத்தைக்கொண்டு வந்து, வீட்டுப் பரணின் மேலிருந்த பானைக்குள் வைத்து மூடினான். பிறகு நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, பாயைப் போட்டு படுத்து உறங்கிவிட்டான்.
தூக்கம் என்றால் அப்படியொரு தூக்கம்.

மாலை ஆறு மணிக்குத்தான், ”அம்மா...” என்று தன் மாடுகள் கத்தும் ஒலி கேட்டுத் திடுக்கிட்டு  எழுந்தவன், ஓடிப்போய் தன் வீட்டிற்குப் பின் புறம் இருந்த தொழுவத்தில் பார்த்தான். அங்கே அவனுடைய மாடுகள் இரண்டும் நின்று கொண்டிருந்தன. மயக்கம் வராத குறை அவனுக்கு.

அதோடு அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. விற்று விட்டு வந்த மாடுகள் எப்படித் திரும்பி வந்தன?

இருட்டி விட்டதால் வீட்டிலேயே தங்கி விட்டு, அடுத்த நாள் காலையில் ஒட்டமும் நடையுமாகச் சென்று முனிவரைப் பார்த்தான்.

தியானத்தில் இருந்த அவர் இவன் உள்ளே வந்த ஒலி கேட்டு, கண்களைத் திறந்து பார்த்தார். பார்த்தவர் கேட்டார்,” என்ன உன்னுடைய மாடுகள் இரண்டும் திரும்பி வந்து விட்டனவா?”

அவன் ஆச்சரியத்தின் எல்லைக்கே போய் விட்டான்.

சலனமற்று காட்சியளித்த அவர் சொன்னார்,” நேற்றுச் செய்ததுபோல இன்றும் செய்; ஒன்றும் கேட்காதே, பிறகு சொல்கிறேன் ... இப்போது போய் வா”

வந்த வேகத்திலேயே திரும்பியவன், அவர் சொல்லியபடியே அன்றும் செய்தான். மறுபடியும் கிட்டத்தட்ட அதே அளவு தொகை கிடைத்தது. வீட்டிற்குக் கொண்டு வந்து, பானைக்குள் போட்டுப் பரணுக்குள் வைத்துவிட்டு, எப்போதும் போல சாப்பிட்டுவிட்டுக் கண் அயர்ந்தான்

நேற்று நடந்தது போலவே இன்றும் நடந்தது. அவன் அதிசயப்படும் விதமாக அவனுடைய
இரண்டு மாடுகளும் இன்றும் திரும்பி வந்து தொழுவத்தில் நின்று கொண்டிருந்தன!

இது தொடர்ந்தது. ஒரு நாள் அல்ல இரு நாள் அல்ல பத்து நாட்கள் தொடர்ந்தது. வழக்கப்
படி பதினோறாம் நாள் காலையில் முனிவரைச் சென்று பார்த்தான்

அவர் சொன்னார்,” இன்மேல் அந்த அதிசயம் தொடராது. உன்னிடம் இப்போது 20 மாடுகளுக்கான தொகை இருக்கிறது. இன்று சந்தைக்குப்போ; நல்ல மாடுகளாகக் கிடைக்கும் 20 மாடுகளை வாங்கி வந்து இன்று முதல் உன் பால் வியாபாரத்தை நல்லபடியாகச் செய்!”

அவன் நெகிழ்ந்து விட்டான். கண்கள் பனிக்கக் கேட்டான்,”அய்யா உங்களுக்கு நான் மிகுந்த நன்றிக் கடன் பட்டவனாக இருப்பேன். இதுவரை அந்த அதியசம் எப்படி நடந்தது என்பதைச் சொன்னீர்கள் என்றால் நான் சற்று மன நிம்மதியோடு போவேன்.”

“உன் தலையெழுத்து மாடுகளை வைத்து பிழைப்பதுதான். ஆனால் நீ முயற்சி எதுவும் செய்யாமல், இருப்பதை வைத்து இதுவரை உன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு வந்திருக்கிறாய். உனக்கு உதவும் பொருட்டே, எனது சித்து வேலையால் நான் அப்படிச் செய்தேன். எதற்கும் ஒரு அளவு உண்டு. அது தெரிந்து நான் நேற்றோடு நிறுத்திவிட்டேன். இனிமேல் நான் நினைத்தால்கூட உனக்கு உதவ முடியாது. இறைவனை வேண்டிக்கொள். உன் பிரச்சினைகள் எல்லாம் தீரும். அதோடு இனிச் சோம்பியிருக்காமல் முயற்சி செய்து கடுமையாக உழைத்தாய் என்றால்
உன் மாடுகளின் எண்ணிக்கை கூடிய சீக்கிரம் 100 ஆகும், பிறகு 200 ஆகும். போய்ப்
பிழைத்துக் கொள்!” என்று முடித்தார்.

கதை அவ்வளவுதான். முயற்சி எப்படி வேலை செய்யும் என்பதற்குத்தான் இந்தக் கதை!
நமக்கும் ஒரு முனிவர் வருவாரா என்று யாரும் காத்துக் கொண்டிருக்க வேண்டாம். இது
கலியுகம்.

ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டு , நீங்கள் செய்யும் வேலையை இன்னும் எப்படி திறம்பட செய்வது என்று யோசித்துப் பாருங்கள்.. உங்களுக்கு கண்டிப்பாக வழி புலப்படும். 

ஒரு வரி... நக்கல்கள்... ( கொஞ்சம் எகத்தாளம்.. நிறைய சிரிப்பு)

|

சும்மா சொல்லக் கூடாது... மனுஷன்  அவர் பொண்டாட்டியாலே ரொம்ப நொந்து நூலாகி இருப்பார் போல... wife னு வந்தாலே அவ்வளவு நையாண்டி , நக்கல், எகத்தாளம் எல்லாம்... படிச்சுப் பாருங்களேன்... nice quotes ...
====================================================
1) அப்பப்போ குட்டித் தூக்கம் போட்டா, நீங்க வயசு ஆகாமே தடுக்கலாம்.. நீங்க உங்க வண்டி ஓட்டும்போதும் கூட இது பொருந்தும். ... 

2  ஒரே ஒரு குழந்தை தான்னா  நீங்க அப்பா..  ரெண்டு னா?.  நீங்க ரெப்ரீ(refree ) தான்.

3  கல்யாணம் கிறது ஒரு நல்ல உறவு. இதுலே எப்போவுமே ஒருத்தர் கரெக்ட். இன்னொருத்தர் கணவர்.

4 வரி கட்டுறதுக்கு ஏன் இவ்வளவு பீல் பண்ணுறீங்க ?.. நல்ல சந்தோசமா சிரிங்க.. நானும் அதைதனப்பா செஞ்சேன்.. ஆனா விட மாட்டேன்கிறான்க ... காசு கேட்குறாங்க... 

5 நீங்க பசங்களுக்கு புதுசா ஸ்கூல் யூனி பார்ம் வாங்குனதும்,  ரொம்ப சீக்கிரம் வளருவாங்களே  எப்பூடி  ...!?

6 எதை நெனைச்சும் கவலைப் படாதீங்க... உலகத்துலே நெறைய பேரு முட்டாளுங்கதான் ..... 

7 யார் கூட வாழணும்னு நினைக்கிறையோ அவளை கல்யாணம் பண்ணாதே. யார் இல்லாமே உன்னாலே வாழ முடியாதோ, அவளைப் பண்ணு.
என்ன? எப்படினாலும் கொஞ்ச நாள் கழிச்சு நீதான் வருத்தப்படணும்.. 

8 அன்புக்கு விலையே இல்லை. ஆனா உங்களுக்குணா மட்டும் நீங்க ஒரு பெரிய விலை கொடுத்து தான் ஆகணும்.

9 மோசமான அரசியல் வாதிகள் நல்ல குடி மக்களால் தான் பொறுப்புக்கு வர்றாங்க. ஓட்டு போடததாலே.

Funny Jokes

10 கல்யாணம்கிறது கொடுத்து வாங்கல் மாதிரி. நீங்களா கொடுத்துட்டா நல்லது. இல்லைனா புடுங்கிருவாங்க.

11 நானும் என் வீட்டுக்காரியும் எப்போவுமே ஒத்துப் போயிடுவோம். எந்த ஒரு விஷயமானாலும் நான் தப்புனு ஒத்துக் கிடுவேன். அவள் அது சரினு சொல்லிடுவா. 

12 யார் ஒருத்தர் சிரிக்க மாட்டேன்கிறாரோ, அவரை பார்த்து மத்தவங்க சிரிச்சுடுவாங்க. 

13  ஒரு திருமண வாழ்க்கை ஜெயிக்கிறது , ஒருத்தர் மேலேயே திரும்ப திரும்ப லவ் வர்றது வைச்சுத் தான்.

14 ஒரு விஷயம் செய்யிறதை விட , அதைப் பத்தி யோசிச்சிங்கனா உங்களுக்கு வயசு ஆகுது னு அர்த்தம். 

15    சேமிப்பு ஒரு சூப்பரான விஷயம். உங்க அப்பா அதை பண்ணி இருந்தா...

16    Mother tongue னு ஏன் சொல்றாங்க? அம்மா மட்டும் தான் பேசுறாங்க.. அப்பாவை எங்க பேச விடுறாங்க?

 17     டாக்டர் , நீண்ட நாள் வாழனும் னா என்ன செய்யனும்.  
      நீங்க... முதல்லே கல்யாணம் பண்ணுங்க...
      ஏன் ? அதனாலே என்ன ஆகும்?
      இல்லை, இந்த மாதிரி எண்ணமே உங்களுக்கு வராது.

18   கல்யாணம் பண்றப்போ, ரெண்டு பேர் கையையும் ஒன்னு சேக்கிறாங்களே எதுக்கு ?   சும்மா ஒரு பார்மாலிட்டி தான்பா. குத்து சண்டை ஆரம்பிக்க முன்னாலே ரெண்டு பேரும் கை கொடுத்துக்கிறது இல்லே..   ..

19   என்னங்க ! இன்னைக்கு நம்ம கல்யாண நாள். என்ன பண்ணப் போறீங்க?
      ஒரு ரெண்டு நிமிஷம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டியதுதான் ... .

20 ஜனங்க பேசிக்கிறப்போ காமெடியா இருக்கும். அரேன்ஜெட் மேரேஜ் நல்லதா.. இல்லை லவ் மேரேஜ் நல்லதா னு...?
இன்னுமா உங்களுக்கு புரியலை? ஒன்னு கொலை... இன்னொன்னு தற்கொலை ...  

காமம், காதல், கள்ள உறவுகள்.. ... புரியாத புதிர்களும்... முடிவே இல்லாத அவலங்களும்.

|
ஜோதிடம் ஒரு முழுமையான அறிவியல்.ஒழுங்காக உழைத்துப்பிழைக்கத் தெரியாத பல சோம்பேறிகள் ஜோதிடத்தொழிலுக்கு வந்து ஜோதிடத்தின் மரியாதையைக் கெடுத்துவிட்டனர்.

ஒரு மனிதன் ஏன் காதல் வயப்படுகிறான்? ஏன் தகாத உறவுகள்..? பொருத்தம் பார்த்த கல்யாணம் ஏன் தடுமாற வைக்கிறது? கட்டுப் படுத்த முடியாத காமம் ஏன் ஒருவர் வாழ்க்கையை புரட்டி போடுகிறது..?
ஆயில்யம், சுவாதி, அவிட்டம், அசுபதி,திருவாதிரை இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அதே நட்சத்திரங்களில் பிறந்தவர்களை திருமணம் செய்வதே நல்லது.மற்ற நட்சத்திரங்களில் பிறந்தவரை மணம் முடித்தால் ஒருவரின் புத்திசாலித்தனத்திற்கு மற்றவர் அடிமையாகத்தான் வாழ வேண்டியிருக்கும்.

இன்று ரோட்டோரக்கடைகளில் ஒரே நிமிடத்தில் திருமணப்பொருத்தம் பார்ப்பது எப்படி? என ரூ.10/-க்கு புத்தகம் விற்பனையாகிக்கொண்டு இருக்கிறது.அதில் வெறும் நட்சத்திரப் பொருத்தம் மட்டும்தான் இருக்கும்.அது மட்டும் கொண்டு ஒரு திருமணத்தை முடிப்பதால்தான் இன்று நீதிமன்றங்களில் தினமும் விவாகரத்து வழக்குகள் குவிகின்றன.

தவிர, திருமணத் தரகர்கள் இன்றைய காலகட்டத்தில் ஒரு திருமணம் நடப்பதற்காக என்னவேண்டுமானாலும் செய்கின்றனர்.உதாரணமாக ஜாதகத்தையே போலியாக தயாரிக்கின்றனர்.

சில பெண்கள் யோகக்காரிகளாக இருப்பர்.அது முறையாகக் கற்ற ஜோதிடர்களுக்கு மட்டுமே தெரியும்.அதனால் தான் மனைவியை மகாலட்சுமி என்று அழைக்கிறோம். அது போன்ற யோக்காரப்பெண்களால்தான் உங்களின் தெருவில் வாழும் சாதாரண ஆண் சில வருடங்களில் கோடீஸ்வரனாகியிருக்கின்றனர்.
 http://1.bp.blogspot.com/_qrmD8jCqKjE/THyzlvnMaOI/AAAAAAAAJqU/5btmvEaZA3c/s1600/nayanthara-prabhu-deva.jpg
இன்றைய காலகட்டத்தில் உங்கள் ஜாதியைச் சேர்ந்த ஜோதிடரிடம் ஜாதகம் பார்க்காமல் இருப்பது மிக நன்று.(இதில் விதிவிலக்கும் உண்டு).
பல வருடங்களுக்கு முன் அந்த நமது ஜாதியை சேர்ந்த ஜோதிடருக்கும் நமது குடும்பத்தாருக்கும் ஏதாவது பகை ஆகியிருக்கும்.நாம் மறந்திருப்போம்.அவர் பலனில் சூப்பராக பழிவாங்கிவிடுவார்.

சில பெண்களை ஒருபோதும் மணம் முடிக்ககூடாது.ஏனெனில், சில குறிப்பிட்ட கிரகநிலையில் பிறந்த பெண்கள் திருமணம் முடிந்தபின்னரே விபச்சாரியாகிறார்கள்.தகுந்த ஜோதிடரைக் கொண்டு பெண்ணின் பிறந்த ஜாதகத்தைப் பார்த்து மணம் முடிக்கவும். காதல் படுத்தும் பாடு - பொருத்தம் பார்க்காமல் நிறைய மணங்கள் நடக்கின்றன. நல்லவிதமாய் பொருத்தம் இருந்தால் சரி.. பொருந்தாதவை ... உடனே மன (மண) முறிவை ஏற்படுத்தி விடுகின்றன... 

சில சினிமா நடிகைகளை பார்த்தால் , பாவமாக இருக்கும். அவர்கள் சொந்த வாழ்வு அவ்வளவு சோகமாக இருக்கும்.. பணம், புகழ் இருக்கும். ஆனால் வாழ்க்கை துணை... ...? 
தாலி கட்டினால் தான் மனைவி என்று இல்லை. இந்த கலி காலத்தில் விருப்பத்துடன் உறவு கொண்டாலே அவர் மனைவி ஸ்தானம் தான். ஒருவர் ஜாதகம் பார்க்கும்போதே தெரியும். இவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள்  என்று. அப்படி என்றால் அவர் தாலி கட்டி குடும்பம் நடத்துவார் என்று இல்லை.  . 


ஒருவருக்கு ஏற்படும் காம கொந்தளிப்பு அவர்களை விலை மாதுக்களிடம் செல்ல வைக்கிறது. அவர்களின் ஜாதக நிலைமை யாருக்கு தெரியும்? அப்படி செல்பவர்களுக்கு , அந்த பெண்களின் ஜாதகப்படி கண்டிப்பாக இவரது வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.  அதனால் தான் பொருத்தம் பார்த்து மனம் முடித்து தாம்பத்யம் தொடங்குகின்றனர்...
சில பெண்களை தொட்ட உடனே , பெரிய அளவில் பிரச்னைகள் , நிம்மதியின்மை ஏற்படும்.. .... சில பெண்களை தொட்டாலே மரணம் தான்.. சில பெண்களுடன் உறவு கொண்டால் அவரது ஆண்மை பறிபோய் விடும்.....

மனைவியை தவிர மற்றவரை பார்த்து ஏங்குவதொடு  நிறுத்திக் கொள்ளுங்கள். ... தப்பி தவறி தொட்டு விட்டால்... எதுவும் நடக்கும்..  எதற்கு வம்பு?  

பாவங்களை குறைக்க என்ன வழி? தானங்களும் அவற்றின் பலன்களும்..

|
தானம்  செய்யும்போது உங்களை அறியாமல் ஒரு கர்வம் ஒட்டிக் கொள்ளும். எப்பாடு பட்டாவது அதை துடைத்து எறியுங்கள்... நடக்கும் எந்த ஒரு காரியத்திற்கும் கண்டிப்பாக ஒரு பின்னணி இருக்கும். நீங்கள் ஒரு சிறு கருவி மட்டுமே. ஆட்டுபவனும், ஆடுபவனும் அந்த சிவமே....  உங்கள் வாழ்வில் எந்த தானம் செய்தால் என்ன பலன்கள் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

நம்பிக்கையுடன் செய்யுங்கள்... வளம் பெற வாழ்த்துக்கள்...
1.ஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும்.அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று.

வியாழக்கிழமையன்று ஆடைதானம் செய்வதால் பெண்களிடம் நல்லுறவும், சுக போக பாக்யவிருத்தியும்,உடல் வலிமையும் உண்டாகும்.

2.தேன் தானம்: புத்திர பாக்யம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள், வெண்கலப்பாத்திரத்தில் தாரா பலன் உள்ள நட்சத்திரத்தன்று( இதை அறிய உங்கள் ஆஸ்தான ஜோதிடரை அணுகவும்) சுத்தமான தேனை தானம் செய்ய வேண்டும்.

3.நெய்தானம்:  பாவக்கிரக திசை நடப்பவர்கள் (6,8,12 ஆம் அதிபதியின் திசை).நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும்.சகலவிதமான நோய்களும் தீரும்.

4.தீப தானம்: இஷ்ட தெய்வ சன்னதியில் மாதம் ஒருமுறை 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும்.அல்லது ஏழை மற்றும் பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் பார்வைத்திறன் எப்போதும் பாதுகாக்கப்படும்.

5.அரிசிதானம்:  பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்தவை விலக ஏழை அல்லது பிராமணர்களுக்கு அரிசி தானம் செய்யவேண்டும்.யாருக்கு வீடு வாசல் இல்லையோ அவர்களுக்கு தானம் செய்தால் தான் நாம் தானம் செய்த பலன் நமக்கு உண்டு.
http://lh6.ggpht.com/_dWvY9THb98I/StC-posTInI/AAAAAAAAAi0/TlmaEPCh_7g/DSCF1720.JPG
6.கம்பளி-பருத்தி தானம்: வாயு சார்ந்த நோய் உள்ளவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு கம்பளிதானம் செய்தால் நோய் தீரும்.வெண்குஷ்டம் அறிகுறி தென்பட்டால் பருத்திதானம் (பருத்திஉடைகள்) செய்து அதிலிருந்து மீண்டுவிடலாம்.

நம்பிக்கையுடன் செய்யுங்கள்... வளம் பெற வாழ்த்துக்கள்... 

மரணத்திற்குப் பின் ?? - சில உண்மை சம்பவங்களும் , அலசலும் (2)

| Jan 29, 2011


சென்ற நூற்றாண்டின் இறுதிவரை இறந்தபின் என்ன நடக்கிறது எனபது பற்றிப் பல ஆராய்ச்சிக்கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால் பெருவாரியான மக்கள், விஞ்ஞானம், காலம் காலமாக  ஆவி பற்றியும் ஆத்மா பற்றியும் தாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகளைச் சிதைக்கின்றன எனக் கருதினார்கள். ஆவி உலகம் பற்றி நம்பிக்கை பெருகியது. இறந்தவர்களுடன் தொடர்புகொள்ள மக்கள் ஊடகங்களைத் துணை தேடலானார்கள். அவர்கள் இன்னமும் இறப்பிற்குப் பின் வாழ்க்கை இருக்கிறது என்பதில் திட நம்பிக்கை வைத்திருந்தார்கள்.

1882
ல் ஒரு உளவியல் ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டு இறப்புக்குப் பின் என்ன நிகழ்கிறது என்பது பற்றிய ஆராய்ச்சிகள் துவங்கின. ஆனால் இறப்பிற்குப் பின் வாழ்க்கை இருக்கிறது என்பதற்கான நம்பும்படியான ஆதாரம் எதுவும் கிட்டவில்லை. 1926ம் ஆண்டு, Sir William Barrett என்ற ஆராய்ச்சியாளர்,  'இறக்கும்போது புலப்படும் தோற்றங்கள்' (Deathbed Visions)  என்ற தனது புத்தகத்தில், இறப்பவர்கள், இறப்பதற்குமுன், வேறொரு உலகத்தைக் காண்கிறார்கள், இறந்தவர்களுடன் பேசுகிறார்கள்என்று சொல்கிறார். இறக்கும்போது இசையையும் அவர்கள் கேட்டதாகவும், உடலைவிட்டு ஆவிபிரிவதைக் காண முடிந்ததாகவும் அவர் கூறுகிறார்.

ஆனால் இன்று வளர்ந்துவரும் மருத்துவ உலகில், இறக்கும் நிலையில் ஏற்படும் அனுபவங்கள் என்பவை அரிதாகவே இருக்கின்றன. முன்பெல்லாம், இறக்கும் தருவாயிலிருப்பவர்களைச் சுற்றி நண்பர்களும் உறவினர்களும் இருப்பார்கள்; தேவையான மருத்துவ வசதிகள் இருக்காது . இன்றோ பலருக்கு மருத்துவ மனையில் தான் உயிர் பிரிகிறது.- உயிர் பிரியும்போது பெரும்பாலும் அவர்கள் தனித்தே இருக்கிறார்கள். உற்றார் உறவினர் யாருமின்றி தனித்து மருத்துவவமனையில் இறப்பவர்களுக்கு இந்தமாதிரியான அனுபவம் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் குறைவு என்பதையே இது காட்டுகிறது.,

1975
ல் ரோமன்மூடி என்பவர் "வாழ்க்கைகக்குப் பின் வாழ்க்கை" எனும் தனது கட்டுரையில், தான், இறப்பின் விளிம்புவரை சென்று திரும்பியவர்களுடன் நிகழ்த்திய உரையாடல்களைக் குறிப்பிடுகிறார். "ஒருவர், இறக்கும் நிலையில்அவர் இறந்துவிட்டதாக டாக்டர் கூறுவதைக் கேட்கிறார்., பிறகு ஒரு சத்தம், அல்லது இசைக் குரல் கேட்கிறது.- பின்னர் ஒரு இருட்டு சுரங்கப்பாதை போன்ற ஒன்று புலப்படுகிறது. இறப்பவரால், தனது உடல் அந்த சுரங்கப்பாதையில் செல்வதைக் காணமுடிகிறது. பின்னர், முன்னால் இறந்த பலரைச் சந்திக்கிறார். ஒரு ஒளிசக்தி, அவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது.- இதன்மூலம் அவரால் தான் வாழும்போது எப்படி இருந்தோம் என்பதை எடைபோட முடிகிறது. வழியில் எதோ ஒரு தடை - அவர் வந்த இடத்திற்கே திரும்பிச் செல்லவேண்டும் எனக் காட்டுகிறது. சென்ற இடத்தில், அவருக்கு அமைதி, சந்தோஷம், அன்பு எல்லாம் கிடைத்தாலும் அவர் தனது உடலுக்கே திரும்பிவந்து மீண்டும் உயிர் பெறுகிறார். பிறகு தனது அனுபவத்தை பிறரிடம் பகிர்ந்துகொள்ள முயற்சி செய்கிறார். மற்றவர்கள் அவரைப் புரிந்து கொள்வதில்லை. ஆனால் அவர் பெற்ற அனுபவம் , அதற்குப் பிறகு அவர் வாழும் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது." என அவர் கூறுகிறார்.

பல விஞ்ஞானிகள் ரொமான்ட் மூடி கூறிய கருத்துக்களை ஏற்க மறுத்தார்கள். அவர்கள் மூடி, மிகைப்படுத்திக் கூறுவதாகக் கருதினார்கள். .இந்தச் சந்தேகங்களுக்கு விரைவிலேயே தீர்வு கிட்டியது. ஒரு இருதய நோய் நிபுணர் இறக்கும் தறுவாயிலிருந்த 2000 பேர்களிடம் பேசிய 20 வருட அனுபவம், மூடி கூறுபவை சரியென்று சான்றுரைக்கின்றன  என்கிறார். சைப்ரஸிலிருந்து ஒரு பெண் எழுதும் அனுபவமொன்று மூடி கூறுவது சரியாயிருக்கலாம் என்பதையே வெளிப்படுத்துகிறது.


அந்தப் பெண்ணுக்கு ஒரு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை நடந்து நாலாவது நாள் அந்தப்பெண் பல மணி நேரங்களுக்கு நினைவிழந்தாள். தான் நினைவிழந்திருந்தாலும் உயிர் பிழைத்துப் பல ஆண்டுகளுக்குப் பின்னர்கூட தான் மயக்கமாயிருந்த நிலையில் அறுவை சிகிச்சை நிபுணரும், மயக்கமருந்து கொடுப்பவரும் நிகழ்த்திய உரையாடல்களை நினைவுகூற முடிவதாகக் கூறினார். அவர் கூறுகிறார், " நான் எனது உடலுக்கு மேலே படுத்திருந்தேன் - எந்த வலியுமில்லை. அப்போது நான் கீழே இருக்கும் எனது உடலில் முகம் வலியால் துடிப்பதைக் கண்டு பரிதாபப் பட்டேன். நான் அமைதியாக மிதந்து கொண்டிருந்தேன்.  பிறகு... நான் ஒரு இருண்ட  இடத்தை நோக்கி - இருண்டிருந்தாலும் பயமேதுமில்லை. மிதந்து கொண்டிருந்தேன் - பிறகு ஒரே அமைதி. சிலபொழுதில் எல்லாமே மாறியது - மறுபடியும் எனது உடலுக்குள் வந்துவிட்டேன். மறுபடியும் வலியை உணர ஆரம்பித்தேன்"என்று.

இதற்குப்பிறகு சில ஆண்டுகளில் பல கேள்விகளுக்கு விடை கிடைத்தன. கனக்டிகட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த Kenneth Ring என்பவர் 1980ல்  சாவின் விளிம்பிற்குச் சென்றுவந்த 102 பேரிடம் விவரங்கள் சேகரித்தார். அவற்றில் 50 சதவிகிதத்தினர் அடைந்த அனுபவத்தில் ஒரு ஒற்றுமை இருந்தது. அவர்கள் அடைந்த அனுபவங்களை, கென்னத் ரிங்  'அமைதி, உடலைவிட்டு உயிர் பிரிவது, ஒரு இருட்டு சுரங்கப்பாதையை அடைவது, வெளிச்சத்தைக் ககாண்பது, ஒளியை அடைவது' என ஐந்து பகுதிகளாகப் பிரித்தார். இதற்கடுத்த பகுதிகள் வெகு சிலராலேயே உணரப்பட்டன. எனவே, இறப்பின் போது காணும் காட்சிகளில் ஒரு ஒற்றுமை இருப்பதை அவர் கண்டார்.

இறப்பின் விளிம்பில் என்ன நடக்கிறது என்று ஆராயும் போது கலாசாரப் பின்னணியையும் கருத்தில் கொள்ளவேண்டுமா என்ற வினா எழுகிறது. கலாச்சார வேறுபாடு இல்லை என்று நடத்தப்பட்ட சில ஆராய்ச்சிகள் கூறினாலும், மத அடிப்படை  இந்த விஷயங்களை விவரிப்பதில் இடைப்படுகிறது என்பது தெளிவாகிறது. குழந்தைகளிடம் கூட சில ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. அவர்கள் இறப்பின் விளிம்பில் மரணமடைந்த தங்கள் நண்பர்களையே காண்கிறார்கள் என்பது ஆச்சரியப் படவைக்கும் விஷயம் . இதற்குக் காரணம்அவர்களது நண்பர்கள் வியாதிகளின் காரணமாக மரணமடைவதென்பது எப்போதாவது நிகழும் அரிய நிகழ்ச்சி என்பதுதான். சிறுவயதுகளில் யாரும் நோயின் காரணமாக அதிகம் இறப்பதில்லை.

இறப்பிற்கு முன் ஏற்படும் அனுபவத்தைப் பெறுவதற்கு  சாவின் விளிம்புவரை செல்லவேண்டுமா என்பது ஒரு கேள்வி - "இல்லை" என்பதுதான் இதற்கான பதில். தொடர்ந்து சிகிச்சை  எடுத்துக் கொள்பவர்கள், மிகவும் களைப்பாக இருப்பவர்கள், மற்றும் சாதாரணமாக உழைப்பவர்களிடம்கூட இந்த அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த அனுபவங்கள் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளைப்போல  உண்மையானதாகவே தோற்றமளிக்கின்றன. ஒரு சுரங்கப் பாதைக்குள் போவதுபோலத் தெரியும் அனுபவம், ஒரு கற்பனைத் தோற்றமாகத் தெரிவதில்லை.- உடலுக்கு வெளியிலிருந்து நம்மைப் பார்ப்பதாகக் காணப்படும் இத்தோற்றம் உண்மையிலேயே நடப்பதாகவே தோன்றுகிறது.

சாவின் விளிம்பிற்குச் செல்லும் எல்லாருக்கும் இந்த அனுபவம் ஏற்படும் என்று சொல்ல முடியாது. அப்படியென்றால் எத்தகைய மனிதர்களுக்கு இப்படியான அனுபவம் ஏற்படக்கூடும்? மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் இந்த அனுபவங்கள் ஏற்படும் என்றும் சொல்வதற்கில்லை. இத்தகைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் பலர் எல்லாரையும் போல பின்புலனும், மனதளவில் ஆரோக்கியமானவர்களுமாகவே இருக்கிறார்கள்.


[ghost.jpg] 


இதைத்தவிர வரவேற்கவேண்டிய ஒரு விஷயம், இந்த அனுபவம் பெற்றவர்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படுகிறது. அவர்கள் போட்டி, பொறாமை, பேராசை போன்ற குணங்களிலிருந்து விடுபட்டு, மற்றவர்களின் நலனில் அக்கறையும் ஆர்வமும் காட்டுகிறார்கள். இறக்கும் தருவாயில் என்ன நடக்கிறது எ?ன்பது பற்றிய ஆராய்ச்சி,
இந்த மனமாற்றத்திற்கான காரணத்தை இன்னும் கண்டறியவில்லை. எந்த ஆராய்ச்சியும் இதற்கு விடை காணாமல் முழுமையாய் இருக்க முடியாது.

மரணத்திற்குப் பின் ?? - சில உண்மை சம்பவங்களும் , அலசலும் (1)

|


ந த்வேவாஹம்ஜாது நாஸம்ந த்வம் நேமே ஜனாதி பா
நசைவ ந பவிஷ்யாம ஸர்வே வயமத;பரம் (கீதை)


(நீ எவர் அழிவார் என்று நினைக்கிறாயோ, அவர்கள் அனைவரும் நீயும் நானும்கூட இல்லாமல் போகமாட்டோம். இந்த உடல் தோன்றுவதற்கு முன்னும் நாம் அனைவரும் இருந்தோம். இந்த உடல் அழிந்தபிறகும் நாம் இருப்போம். உடல் அழிவதால் ஆத்மா நாசமுறாது. ஆகவே நசித்துவிடுவார்களோ என்று ஐயப்படுவதும் வருந்துவதும் உசிதமல்ல)

இறப்பு என்றாலே நமக்கு ஒரு அச்சம்; மனதிலே ஒரு பயம். அதுதான் நமது முடிவா? இல்லை, அதற்குப் பிறகும் இன்னொரு பிறப்பு அல்லது ஒரு வாசல் காத்திருக்கிறதா? விடைகாணமுடியாத ஒரு கேள்வி. 


இறந்தவர்கள் யாரும் இதுவரை நம் முன் இறப்பிற்குப் பின் நடப்பது என்ன என்று சொன்னதில்லை. ஆனால், இந்தக் கேள்விக்கு விடையாக சாவின் விளிம்பைத் தொட்டுப்பார்த்து மீண்டவர்கள் சொல்லும் அனுபவங்கள் நாம் இறந்த பிறகு என்ன நடக்கும் என்பதை அறியத் துணையாக இருக்கும். உடலை விட்டு உயிர் பிரிந்து அந்த சொர்க்கத்தின் அல்லது நரகத்தின் வாயில்களைத் தட்டும்போது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றிப் பலர் தங்கள் கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள். அவைகள் பெரும்பாலும் சாவு என்பது ஒரு இனிமையான, மகிழ்ச்சிகரமான அனுபவமாகவே காட்டுகின்றன.

இந்த அனுபவம் பலருக்கு, இறப்பிற்குப்பின் வாழ்க்கை தொடர்கிறது என்பதை உறுதி செய்வதாகவே இருக்கிறது. உண்மையில் இறப்பைக்கண்டு அஞ்சிடும் பலருக்கு நமது உடலைவிட்டு உயிர் பிரிந்தாலும் அதற்கு மரணமில்லை. தொடர்ந்து வாழ்கிறது என்ற எண்ணமே மரணபயத்திலிருந்து வெளிவர உதவியாய் இருக்கிறது. இதில் நம்பிக்கையில்லாதவர்கள், இவையெல்லாம் விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று சொல்பவர்கள்கூட, இந்த நம்பிக்கையால் நிம்மதி அடையும் பெரும்பாலோரின் எதிர்ப்புக்களிடையேதான் தங்கள் கருத்துக்களையும் வாதங்களையும் முன் வைக்க வேண்டியுள்ளது. 

ஜேம்ஸ் ஆல்காக் என்பவர் ஏன் மரணத்திற்குப் பிறகு ஆன்மா அழிவதில்லை என்பதில் மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதற்குக் காரணம் கூறுகிறார். "அறிவுபூர்வமாக எப்படியும் ஒரு நாள் நாம் இந்த உலகை விட்டுப் பிரிந்து செல்லப்போகிறோம் என்று தெரிந்த மக்கள் அதை உணர்வுப்பூர்வமாக ஒப்புக்கொள்வதில்லை. இறப்பிற்குப் பிறகும் ஒரு வாழ்வு இருக்கிறது. நாம் முற்றிலும் அழிவதில்லை என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஒரு தெம்பைத்தருகிறது" 
சாவைத் தொட்டுவரும் அனுபவங்கள் பற்றிய குறிப்புக்கள் இன்று நேற்றல்ல, தொன்று தொட்டே நிலவி வருகிறது. இதைப்பற்றிய முதல் செய்தியாக ப்ளேட்டோவின் Republic என்ற நூ¢ல் இறந்தபிறகு உயிர் மீண்டு வருவதாகக் கூறப்படும் ஒரு வீரனைப் பற்றி குறிப்பிடுகிறது. பைபிளிலும் இறப்பிலிருந்து உயிர்ப்பிப்பதாகக் கூறப்படும் பல கதைகள் உள்ளன. மற்ற பல மதநூல்களும் இதே நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன. பல நூற்றாண்டுகளாக இந்த நம்பிக்கைகள் இருந்துவந்தாலும் சமீபகாலத்தில் இதுபோன்ற அனுபவங்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் விஞ்ஞானிகள் இந்த அனுபவங்களை ஒப்புக் கொள்வதில்லை. இவைகள் யாவும் இறக்கும்போது செயலிழக்கும் மூளையில் ஏற்படும் பிரமைகள் என்றும், ஒருவிரிந்த கனவு என்றுமே அவர்கள் கருதுகிறார்கள்.

அப்படி என்றால், எது சரியான விளக்கம்? இந்த சாவைத் தொட்டுவரும் அனுபவங்கள், இறப்பிற்குப்பின் துவங்கும் வாழ்க்கையைக் குறிக்கிறதா? இல்லை, நாம் காற்றோடு காற்றாகக் கலக்குமுன்னர் ஏற்படும் இறுதி அனுபவத்தைக் குறிக்கிறதா?

இறப்பிற்குச் சற்று முன்னர் தாங்கள் பெற்றதாகப் பலர் கூறும் அனுபவங்கள் நமக்கு வரும் கனவுகளைவிடச் சுவையானவை. இவை நிஜம்போலவேத் தோன்றுகின்றன. சாவுக்குப் பின் ஏற்படும் அனுபவங்களைச் சொல்லும் எந்த ஆராய்ச்சியும் இவற்றை மனதில் கொள்ளவேண்டும். இந்த அனுபவங்களையும் விஞ்ஞானத்தையும் அடிப்படையாகக் கொண்டு விளக்கம் தேடும்போது, மனங்களைப் பற்றியும், சுய உணர்வுகள் பற்றியும் கேள்விகள் எழுகின்றன. 
சாவைத் தொட்டுவரும் அனுபவங்களைச் சந்தித்தவர்கள் தங்களது உடலைவிட்டு வெளியே வருவதை உணர்கிறார்கள். அப்போது அவர்கள் அனுபவிப்பது ஒரு பரிபூரண சுதந்திரம், வலியே இல்லாத ஒரு நிலை. இந்த அனுபவத்தைப் பெற்றவர்கள் பெரும்பாலும் அப்போது தாங்கள் படுத்திருக்கும் இடத்திற்கு மேலே மிதப்பதாக அறிகிறார்கள். அங்கிருந்து அவர்களால் கீழே படுத்திருக்கும் 'அவர்களைப் ' பார்க்கமுடிகிறது. தான் படுத்திருக்கும் இடத்தைச் சுற்றி என்ன நடக்கிறது, கூடி நிற்பவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைத் தெளிவாக உணர முடிகிறது. பல சந்தர்ப்பங்களில் அவர்கள் கூறும் விஷயங்கள் மிகவும் சரியாகவே அமைகின்றன. இந்த செத்துப் பிழைக்கும் அனுபவத்தை உடலைத் தாண்டிய அனுபவம் (Out of body experience) என்றும் கூறலாம். இத்தகைய அனுபவங்களுக்குத் தகுந்த உதாரணமாக, சியாட்டில் நகருக்கு முதல் முறையாகப் பயணம் செய்த மரியா என்ற பெண்ணிற்கு நேர்ந்த நிகழ்ச்சியைக் கூறுவார்கள்.
மரியா என்ற வாஷிங்டன் நகரைச் சேர்ந்த பெண் 1977ம் ஆண்டு தன் நண்பர்களைக் காண முதல்முறையாக சியாட்டில் நகருக்கு வருகிறாள். வந்த இடத்தில் அவளுக்கு பலத்த இருதயநோய் ஏற்பட அவள் Harbourview மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். அங்கு கிம்பர்லி கிளார்க் என்ற சமூகசேவகி மரியாவை உடனிருந்து கவனித்து வந்தார். திடீரென மரியாவின் இருதயம் செயலிழக்க, மருத்துவர்கள் செயற்கை முறையில் அவள் இருதயத்தை இயங்க வைக்க முயற்சி செய்து வெற்றி அடைந்தார்கள். 
 Ghost Under Bed
அதன் பின்னர் கிம்பர்லி கிளார்க்கிடம் மரியா சொன்ன செய்திகள் தான் பரபரப்பானவை. "டாக்டர்களும் நர்ஸ்களும் என் உடலில் சோதனை செய்துகொண்டிருந்தபோது அதிசயமான அனுபவம் எனக்கு ஏற்பட்டது. நான் உயர நாலாவது மாடியின் உயரத்திற்கு மிதந்து சென்று அந்த மேற்கூரையிலிருந்து என்மீது நடத்தப்படும் சோதனைகளைக் காண முடிந்தது என்று மரியா கூறியபோது கிளார்க் அதை நம்பவில்லை. ஆனால் அதற்குப்பிறகு அவள் கூறியவை திகைப்பூட்டின. தனது உடல்நிலைபற்றிய குறிப்புப்படங்கள் மானிட்டரிலிருந்து வெளிவருவதைப் பார்த்ததாகக் கூறினாள். அதுதவிர, தான் மேலும் அந்தக் கட்டிடத்திற்கு வெளியே மிதந்து சென்றதாகவும் அவள் கண்ட அவசர சிகிச்சை வழியைப்பற்றியும் அதன் கதவுகள் முன்புறமாகத் திறக்கப்படுவதைப் பற்றியும் விரிவாகக் கூறியபோது நம்பாமலும் இருக்க முடியவில்லை. ஏனென்றால், அந்த மருத்துவமனைக்கு முதல் முறையாக மரியா வந்திருப்பதால் அதன் பல வேறு இடங்கள் பற்றி அவள் அறிந்திருக்க வழியேயில்லை. அவள் மேலும் தனது கட்டிடத்திற்கு வலதுபக்கத்தில் உள்ள கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் ஒரு ஜன்னலின் விளிம்பில் ஓரத்தில் கிழிந்துபோன ஒரு டென்னிஸ் ஷ¥வைக் கண்டதாகவும் அதன் முடிச்சு ஷ¥வின் அடிப்பாகத்தில் இருந்ததாகவும் கூறினாள். மரியா இருந்த இடத்திலிருந்து அப்படிப்பார்க்க வாய்ப்பே இல்லை. கிளார்க் அடுத்த கட்டிடத்தின் மூன்றாவது தªமாடிக்குச் சென்று அந்த ஜன்னலில் சோதனையிட்டபோது மரியா கூறியது சரியாகவே இருப்பது தெரியவந்தது இறப்பின் பின்னும் ஆன்மா அழியாமல் இருக்கிறது என்பதை நம்புபவர்கள் இதைத் தகுந்த சான்றாகக் காட்டுகிறார்கள். 

மற்றுமொரு நிகழ்ச்சி. Laurelynn என்ற பெண்மணி ஒரு சாதாரண அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்கிறாள். ஆனால், அறுவை சிகிச்சையின் போது ஆழமாகக் கத்தி பாய்ந்ததால் அவளது உடலிலிருந்து ஏராளமான ரத்தம் வெளியேறியது. அறுவை சிகிச்சை நிபுணர்கள் பரபரப்புடன் இருந்தார்கள். அவர்கள் உடையில் வெளியே எங்கு பார்த்தாலும் ரத்தம். என்னால் அங்கு என்ன நடக்கிறதென்று அறிந்துகொள்ள முடியவில்லை. அப்போது என்னால் டாக்டர்கள் என்னுடைய உடலில்தான் சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது கூடத் தெரியவில்லை. ஆனால் அதுபற்றிய கவலையும் அப்போது எனக்கில்லை; நான் மிகவும் சுதந்திரமாக உணர்ந்தேன்; அருமையான நேரம் அது. அவர்களிடம், 'எனக்கு ஒன்றுமில்லை, என்னைப்பற்றிக்கவலைப் படாதீர்கள், நான் சந்தோஷமாக இருக்கிறேன்' என்று சொல்ல நினைத்தேன். உடலைவிட்டுப் பிரிந்து சென்ற நான் வேறு உலகத்தில் பிரவேசிக்கிறேன். அங்கு அமைதி- பூரண அமைதி- உடலில் எந்தவிதமான வலியுமில்லை. ஆனால் ஒரு சுகானுபவம் இருந்தது; இருட்டான, ஒரு மகிழ்ச்சி ததும்பும் ஒரு இடம்; அன்பும் ஆதரவும் என்னைச் சுற்றிப் பரவியிருப்பதை உணர்ந்தேன். அந்த சுகமான இருட்டு வழி தொடர்ந்து போய்க்கொண்டே இருந்தது. 
இதுவரை பூமியில் அனுபவிக்காத ஒரு மயிர்க்கூச்செறியும் அனுபவம் அது- இருட்டுவழியின் எல்லையில் ஒரு மஞ்சள் நிறம் கலந்த வெண்மையான ஒளியைக் காண்கிறேன். அந்த அமைதியை அந்த ஆனந்தத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. வெண்மை கலந்த ஜோதியை நான் அடைவதற்கு முன்னால், எனது வலதுபுறம் யாரோ இருப்பதை உணரமுடிந்தது- 

அதுவேறுயாருமில்லை- ஏழு மாதங்களுக்கு முன்னால் இறந்த என் மனைவியின் சகோதரன்தான். என்னுடைய கண்களாலும் காதுகளாலும் பார்க்கவோ கேட்கவோ முடியாவிட்டாலும் அது எனது மனைவியின் சகோதரன்தான் என்பதை உணரமுடிந்தது. அவனுக்கு உருவமில்லை; ஆனால் அவனை உணர முடிந்தது- அவனது சிரிப்பை அவனது நகைச்சுவை உணர்வை என்னால் அறிய முடிந்தது- அவன் என்னை வரவேற்கக் காத்திருந்தான்" - கென்னத் ரிங் கின் Lessons from the Light".

இதுபோன்ற அனுபவங்கள், இவைகளை வெறும் மனப் பிரமையென்றோ, கட்டுக்கதைகள் என்றோ ஒதுக்கிவிட முடியாது என்பதையே வெளிப்படுத்துகின்றன. இந்த அனுபவங்கள் ஏற்பட்டவர்கள் இந்த பூமியை விட்டு வேகமாகத் தாங்கள் செல்வதை உணர்கிறார்கள். பிறகு ஒரு ஒளிநிறைந்த அன்புமயமான இடத்தை அடைகிறார்கள். அங்கு முன்னமே இறந்த அவர்களது உறவினர்கள் அவர்களை 'நீங்கள் இங்கே வருவதற்கு நேரம் இன்னும் வரவில்லை, இன்னும் பூமியில் நீங்கள் ஆற்றவேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது", எனக் கூறித் திருப்பி அனுப்பிவிடுகிறார்கள்.
இந்த உலகிற்குத் திரும்பி வந்தவுடன் எப்படி தனது இறப்பு அனுபவம் ஒரு ஆனந்தத்தை அளித்தது என உணர்கிறார்கள். ஆனால், அந்த அனுபவத்தைப்பற்றி மற்றவர்களிடம் விளக்க சரியான வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறுகிறார்கள். இந்த அனுபவம் அவர்களது வாழ்க்கையையே மாற்றுகிறது. அவர்கள் அதற்குப்பிறகு சாவைக்கண்டு அஞ்சுவதில்லை. இந்த பூதவுடல் மறைந்தபிறகும் 'நான்'- 'எனது ஆன்மா' உயிர்வாழ்கிறது என அறிகிறார்கள் . 

அதற்குப்பிறகு அவர்களது அணுகுமுறையில், மற்றவர்களை மன்னிப்பதில், அன்புகாட்டுவதில், உதவி செய்வதில் ஆன்மிகத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்துகிறார்கள்- இந்த அனுபவம் அவர்கள் வாழ்ந்த வாழ்வை, செய்த நன்மைகளையும் தீமைகளையும் ஒரு சில நொடிகளில் அவர்கள் கண்முன்னே கொண்டுநிறுத்தி அவர்களைப் பண்பட்டவர்களாக்குகிறது.

உங்கள் காதல் ஜெயிக்குமா? எப்படி அறிவது? ஒரு ஜோதிடரின் பார்வை

| Jan 27, 2011
 சற்று கூர்ந்து நம் வாழ்வை ஆராய்ந்தோமானால் , நம் ஒவ்வொரு முயற்சியுமே .. ஒரு நல்ல வாழக்கைத் துணையை சார்ந்தே இருக்கிறது. 
நல்ல கல்வி, வேலை, சொத்து, ஒழுக்கம்.. ... இப்படி எல்லாமே...  


ஒன்று அவரை அடைவதாக இருக்கலாம். அல்லது அடைந்தவரை மகிழ்விக்க இருக்கலாம். / தக்க வைத்துக்கொள்ள இருக்கலாம். நடைமுறை வாழ்வில் , இன்னொருவர் துணையை வேறொருவர் கவர்வதிலும் நிறையவே மெனக்கெடுகிறார்கள். 

இன்று கல்லூரியில் படிப்பவர்களில் கிட்டத்தட்ட அனைவருமே காதலிக்கிறார்கள்.. அல்லது காதலிக்க முயற்ச்சிக்கிறார்கள் ... இதில் 10 க்கு 2 பேர் தப்பினாலே அபூர்வம். ....

உயிரைக் கொடுத்து காதலர்களை சேர்த்து வைக்கும் நண்பர்கள் கண் எதிரிலேயே ... வாழ்க்கையில் பிறந்து போன ஜோடிகளும் உள்ளனர்.. இது எல்லாம் எப்படி நடக்கிறது... கிரகங்களின் கோளாறு ஒருவர் வாழ்வில் எப்படி எல்லாம் புரட்டிப் போடுகிறது... இதில் இருந்து தப்பிக்க என்ன சூட்சுமம்.. 
இப்படி பல விதங்களில் ஆராய்ந்து ....நிறைய அனுபவங்களை மேற்கோள் காட்டி  நமது இணையத்தில் ஒரு தொடர் கட்டுரை எழுத விருக்கிறார். பலருக்கும் அதும் பயன் தரும் என்று நம்புகிறோம்... 


திரு. கே. பி. வித்யாதரன் அவர்கள் ஒரு கட்டுரையில் எழுதி இருக்கும் அலசல் கீழே  கொடுக்கப் பட்டுள்ளது. 
http://psyblogger.com/wp-content/uploads/2009/09/love45454.jpg
காதலிப்பவர்கள் முதலில் சரியானவரை காதலிக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அது ரொம்ப முக்கியம்.காதலிப்பது யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம். அது நல்லவர்களுக்கும் வரும், கெட்டவர்களுக்கும் வரும். 

3 வருட காதல் முடிந்து போவதும் உண்டு. 30 வருடம் காதலித்து கல்யாணம் செய்து கொள்பவர்களும் உண்டு. பொதுவாக ஏழரை சனி வரும்போதுதான் காதலிக்கிறார்கள். பலரும் அஷ்டமத்து சனி, அர்தாஷ்டம சனி வரும்போது காதலிக்கிறார்கள். பொதுவாக தசா புக்தி சரி இல்லாத காலக்கட்டத்தில்தான் காதலிக்கிறார்கள்.சரி இல்லாத தசா புக்தி, சரி இல்லாத நேரத்தில் காதலிப்பவர்களின் காதல் நீடிக்காது. சனி இருக்கும் வரை காதலிப்பார்கள். அது முடிந்தவுடன் காதலும் முடிந்துவிடும். 

அதன்பிறகு ஒரு தெளிவு வரும்.மோசமான தசா புக்தி இல்லாத காலக்கட்டத்தில் காதலிப்பவர்களின் காதல் மட்டுமே நீடிக்கும். அந்தக் காதல் தான் கடைசி வரை நீடிக்கிறது. அவர்கள் கணவன் - மனைவியாகி நல்ல குழந்தைகளைப் பெற்று கடைசி வரை அதே காதலோடு வாழ்ந்து காட்டுகிறார்கள். இதே சனி திசையில் வரும் காதல், மோசமான நேரத்தில் வரும் காதல் சரியாக கனியாது. அதனால் எந்த தசை நடக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். அதைப் பொறுத்து காதல் நீடிக்குமா? நீடிக்காதா என்பதை தீர்மானிக்க வேண்டும்.காதலிக்கும் போது கண்ணே, மணியே என்று கொஞ்சிக் கொண்டு, கல்யாணத்திற்குப் பிறகு பார்க்கக் கூடப் பிடிக்காமல் விலகிப் போகுபவர்களையும் நாம் பார்க்கிறோம்.எந்த காலக்கட்டத்தில் நமக்கு காதல் உருவாகிறது என்பதைப் பார்த்து அந்தக் காதல் எப்படி முடியும் என்பதை நிச்சயமாகக் கூறலாம்.

உங்களுக்கு ஏழுக்குரிய  கிரகம்,  ஏழில் நிற்கும் கிரகங்கள், ஏழாம் வீட்டைப் பார்க்கும் கிரகங்கள் - ஆகியவற்றின் பலன் அறிய வேண்டும்.

உங்கள் ஜாதகம், நீங்கள் விரும்பும் நபரின் ஜாதகம் இருந்தால் மின்னஞ்சலில்  தொடர்பு கொள்ளவும். ஆராய்ந்து பதில் தரப்படும்.   நிறைய அன்பர்கள் அனுப்புவதால் சற்று தாமதமாகும். பொறுத்துக் கொள்ளவும்...

ஆர் யு எ ஸ்மோக்கர் ?

|
உலக அளவில் மரணம் பற்றிய ஆய்வு நடந்ததில், முதல் பத்து இடத்தை நிரப்பிய வியாதிகள் இவை. ரொம்ப சர்வ சாதாரணமாக சிகெரெட் பிடிக்கும் பழக்கம் இன்று நிறைய பேரிடம் இருக்கிறது. தினமும் குடிக்காத மேல் தட்டு மக்களே இல்லை. 
எல்லா பாதிப்புகளும் தெரிந்தும் , இதை விடுவதற்கு எவருக்கும் மனமில்லை. 

முதல் மூன்று இடத்தைப் பிடிக்கும் நோய்கள் , சிகெரெட் பிடிப்பதால் மட்டுமே வருகின்றனவாம். உயிர் மேல் ஆசை இருக்கும் அனைவரும் இனி திருந்தி வாழ்ந்தால் மட்டுமே , உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நல்லது. 

உயிரை எடுக்கும் முதல் பத்து காரணிகள் :
1.மாரடைப்பு  (Coronary heart disease)

2.மூளையின் இரத்தக் கசிவுகள் / பாரிசவாதம் (Stroke and other cerebrovascular diseases)

3.சுவாசப் பைத் தொற்றுக்கள் /நியுமோனியா (Lower respiratory infections)

4.சுவாசப்பை அடைப்பு நோய் (Chronic obstructive pulmonary disease)

5.வயிற்றோட்டம் (Diarrhoeal diseases)

6.HIV/AIDS

7.காச நோய் (Tuberculosis)

8.சுவாசப்பை புற்று நோய்கள் (Trachea, bronchus, lung cancers)

9.வீதி விபத்துக்கள் (Road traffic accidents)

10.முதிர்ச்சியடையாத குழந்தைகளின் பிறப்பு / நிறை குறைவான குழந்தைகளின் பிறப்பு (Prematurity and low birth weight)

இவற்றிலே மாரடைப்பு, மூளையின் இரத்தக் கசிவுகள் / பாரிசவாதம் ,  சுவாசப்பை அடைப்பு நோய், காச நோய், சுவாசப்பை புற்று நோய்கள் போன்றவற்றிற்கு முக்கிய காரணமாக இருப்பது புகைப் பிடித்தல்.
 

சொத்து சேர்க்கணும்னு வெறி இருக்கா? .... மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்... ...

| Jan 25, 2011
என்ன நடக்குதுனே தெரியாம, காலைலே தூங்கி எழுந்தோம். அவசர அவசரமா வேலைக்கு கெளம்பினோம். கஷ்டப்பட்டு சம்பாதிச்சோம். பிள்ளைகளை வளர்த்தோம். சொத்து சேர்த்தோம்.. நம்ம அனுபவிச்சோமோ இல்லையோ, நம்ம புள்ளைகளுக்கு சொத்து சேர்ப்போம்.  அப்புறம் ஒருநாள் ... டிக்கெட் வாங்கிட்டு கெளம்பியாச்சு... இதேதான்  இன்னைக்கு 100 க்கு 95 பேரு பண்ற விஷயம்.

நம்ம வீடு, நம்ம குழந்தைகள்.. நம்ம சொந்தம் ? (அது கூட அபூர்வம் ) .. இதை தவிர வேற எதையும் யோசிக்க கூட நேரம் இல்லை.. சரி இந்த மாதிரி சொத்து சேர்த்து வைச்சா அது நல்ல விதமா உபயோகமாகுமா? இப்போ இருக்கிற பெரிய பெரிய கோடீஸ்வரன் வீட்டு பிள்ளைங்க , அரசியல்வாதி பிள்ளைங்க எல்லாம் எப்படி இருக்கிறாங்க னு நெனைக்கிறீங்க...

எந்த மாடல் கார் வந்தாலும் வாங்கணும்..  எப்போவுமே குடி போதைலே இருக்கணும்.. எப்போவுமே ஏதாவது பொண்ணுங்க கூட சுத்தணும்.. எங்கேயும் ஒரு அடாவடித் தனம். அதனாலே ஒரு வம்பு... காசு இருக்கிற வரைக்கும் ஒரு கும்பலே கூட இருக்கும். அப்புறம் வாழ்க்கையிலே ஒரு செம அடி... அதுக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிக்கும். இதே போல தான் உங்க பிள்ளையும் இருக்கணும் னு நெனைக்கிறீங்களா?
இவங்களுக்கு எல்லாம் ஏன் இந்த மாதிரி ஒரு வாழ்க்கை னு எப்போவாவது தோணுவது உண்டா?

ஆடி அடங்கி , நாடி தளர்ந்து .. கடைசி நாட்கள் வரும்போது படுக்கையிலே படுத்து இருப்போமே அப்போ நம்ம கிட்டே மிஞ்சி இருக்க போறது  ... வெறும் நினைவுகள் மட்டுமே. .. வாழ்க்கையை ஒரு அர்த்தமுள்ள ஒரு வாழ்வாக ஆக்குவது ஒவ்வொரு மனிதனின் கடமை. நம் வருங்கால சந்ததி வளமான ஒரு வாழ்வு வாழ்வதும் நம்ம கையிலேதான்..


http://topnews.in/files/Deepika-Padukone_11.jpg

நீங்கள் யாருக்காக அத்தனை கஷ்டப்பட்டு சேர்த்துவைக்கின்றீர்களோ, அந்த செல்வங்கள், உங்களுக்குப் பிறகு, நீங்கள் சேர்த்து வைத்துவிட்டுப்போன செல்வங்கள், உங்கள் வாரிசுகளால் அல்லது அவர்களின் வாரிசுகளால் என்ன நிலமைக்கு உள்ளாகும் என்பதை ஒளவை மூதாட்டி அழகாக நான்கே வரிகளில் நச்’சென்று சொல்லியுள்ளார்.

“நம்பன் அடியவர்க்கு நல்காத் திரவியங்கள்
பம்புக்காம் பேய்க்காம் பரத்தையர்க்காம் - வம்புக்காம்
கொள்ளையர்க்காம் கள்ளுக்காம் கோவுக்காம் சாவுக்காம்
கள்ளர்க்காம் தீக்காகும் காண்!”   (ஒளவையார் )நம்பன் அடியவர்க்கு - சிவனின் அடியவர்களுக்கு
நல்காத் திரவியங்கள் - மனமுவந்து வழங்காத செல்வங்கள்
பம்புக்காம் - சூனிய வித்தைகளுக்கும்
பேய்க்காம் - பேய் வழிபாடுகளுக்கும்
பரத்தையர்க்காம் - தாசிகளுக்கும்
வம்புக்காம் - வீண் செலவுகளுக்கும்
கொள்ளையர்க்காம் - கொள்ளை கொடுப்பதற்கும்
கள்ளுக்காம் - மதுவிற்கும்
கோவுக்காம் - பகை அரசால் பறிமுதல் செய்யப்படுவதற்கும்
சாவுக்காம் - அவனுடைய சாவிற்கும்
கள்ளர்க்காம் - கள்வர்களால் கவர்ந்து கொள்ளப்படுவதற்கும்
தீக்காகும் - நெருப்பால் வெந்து அழிக்கப்படுவதற்கும்
காண் - உரியனவாகும் !

இன்றைய காலகட்டத்தில் அடியார்கள் என்பவர்கள் உலகம் மேன்மையுறப் பாடுபடுபவர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

சூனிய வித்தைகள் என்பதை இன்றைய காலகட்டத்தில், குதிரை ரேஸ், லாட்டரி சீட்டுக்கள், சீட்டாட்டம், விளையாட்டுக்களை வைத்து நடைபெறும் சூதாட்டங்கள் (betting)  என்று எடுத்துக் கொள்ளலாம்.

பேய்வழிபாடுகள் என்பதற்கு பெண்களைக் கூட்டிக்கொண்டுபோய், அல்லது நமது தீய நட்புக்களைக் கூட்டிக்கொண்டுபோய் - அதாவது கஃபிற்கும், ப ஃபிற்கும் அல்லது பார்களுக்கும் கூட்டிக் கொண்டுபோய்ச் செய்யும் செலவுகள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

பகை அரசால் பறிமுதல் செய்யப்படுவதற்கும் என்பதற்கு, வம்பு, வழக்கு, நீதிமன்றத்தண்டனை போன்ற சிக்கல்களில் மாட்டிக்கொண்டு செய்யும் செலவுகள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

சாவிற்கும் என்பதற்கு, தீராத நோய் நொடிகள் வந்து லட்சக்கணக்கில் சாகும்வரை செய்யப்படும் மருத்துவச் செலவுகள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

சரி என்ன செய்ய வேண்டும்?

அளவு முக்கியமில்லை! உங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை  நல்ல காரியங்களுக்குச் செலவு செய்யுங்கள். தர்ம காரியங்களுக்குச் செலவு செய்யுங்கள். இறைப்பணிக்கு, கல்விப்பணிக்கு, ஏழைப் பெண்களின் திருமணங்கள் போன்றவற்றிற்கு, வறியவர்களுக்கு, முதியவர்களுக்குத் தானமாகக் கொடுங்கள். அன்னதானம் செய்யுங்கள். உங்களுக்கு முன்பின் தெரியாதவர்களுக்கு செய்யுங்கள்

வாழ்க  மானுடம்..!

உங்கள் தீராத கடன் தீர 100 % உண்மையான ஆலோசனை...

| Jan 24, 2011
இந்தக் காலத்தில் கடன் இல்லாத மனிதரே இல்லை எனலாம். கொஞ்சம் கொஞ்சம் என்று ஆரம்பிக்கும் இந்த பழக்கம் கடைசியில் ஒரு மனிதரின் ஒட்டு மொத்த நிம்மதியை குலைத்து , சமயங்களில் குடும்பத்தை பிரித்து.. ஏன் ஒரு சிலரின் உயிரையே எடுத்து இருக்கிறது... நமது இணைய தளத்தில் ஏற்கனவே நாம் நிறைய கட்டுரைகள் பிரசுரித்து இருக்கிறோம். அவைகளை மீண்டும் ஒருமுறை படித்துக் கொள்ளவும்.

ஒரு சிலரது அனுபவத்தில், சில கடன்கள் எத்தனை பிரயாசைப் பட்டும் அடைவது இல்லை. அந்த மாதிரி தீராத கடன்களுக்கு ஜோதிடம் கூறும் வழி தான் இது...

மைத்ர முகூர்த்தம் என்ற ஒன்று ஜோதிடத்தில் இருக்கிறது.ஒரு தமிழ் மாதத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு வரும்.அந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக இரண்டு மணிநேரம் வரும்.இந்த நேரத்தைப் பயன்படுத்தி,நமது கடன் எத்தனை கோடி ரூபாய்களாக இருந்தாலும்,அதை முழுமையாக அடைத்துவிட முடியும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள மைத்ர முகூர்த்த நேரம் ஒன்றில்  வாங்கிய கடனில் அசலில் ஒரு சிறு பகுதியை திருப்பித் தர வேண்டும்.அப்படி ஒரே ஒரு முறை திருப்பித் தந்தாலே,அதன்பிறகு,அந்தக் கடன் அடியோடு,முழுமையாக தீர்ந்துவிடும் என்பது அனுபவ உண்மை.

1.1.2011 சனி காலை 4.21 முதல் காலை 6.21 வரை

1.1.2011 சனி காலை 8.21 முதல் காலை 10.21 வரை

1.1.2011 சனி மதியம் 2.21 முதல் மாலை 4.21 வரை

1.1.2011 சனி இரவு 8.21 முதல் இரவு 10.21 வரை

13.1.2011 வியாழன் மதியம் 12.15 முதல் 2.15 வரை

28.1.2011 வெள்ளி நள்ளிரவு 1.37 முதல் விடிகாலை 3.37 வரை

9.2.2011 புதன் காலை 10.45 முதல் மதியம் 12.45 வரை

24.2.2011 வியாழன் இரவு 11.39 முதல் நள்ளிரவு 1.39 வரை


8.3.2011 செவ்வாய் காலை 9.53 முதல் காலை 11.53 வரை

9.3.2011 புதன் காலை 9.01 முதல் காலை 11.01 வரை

24.3.2011 வியாழன் இரவு 9.45 முதல் இரவு 11.45 வரை


20.4.2011 புதன் இரவு 7.30 முதல் 9.30

30.4.2011 காலை 6 முதல் 7,காலை 11 முதல் 1,மாலை 5 முதல் 7 வரையிலும்.

1.5.2011 ஞாயிறு காலை 5.11 முதல் 7.11

17.5.2011 செவ்வாய் இரவு 7.35 முதல் 8.00 வரை

18.5.2011 புதன் மாலை 6.01 முதல் 6.40 வரை

14.6.2011 செவ்வாய் மாலை 4.43 முதல் 6.43 வரை

22.7.2011 வெள்ளி இரவு 11.36 முதல் நள்ளிரவு 1.36 வரை

8.8.2011 திங்கள் மதியம் 12.45 முதல் 2.45 வரை

19.8.2011 வெள்ளி இரவு 10 முதல் 12 வரை

4.9.2011 ஞாயிறு காலை 11.05 முதல் 1.05 வரை

16.9.2011 வெள்ளி இரவு 8.05 முதல் 10.05 வரை

2.10.2011 ஞாயிறு காலை 9.09 முதல் 10.38 வரை

12.10.2011 புதன் இரவு 7.57 முதல் 8.30 வரை

29.10.2011 சனி காலை 7.02 முதல் 9.02 வரை

9.11.2011 புதன் மாலை 4.12 முதல் 6.12 வரை

25.11.2011 வெள்ளி மாலை 5.40 முதல் 7.40 வரை

6.12.2011 செவ்வாய் மதியம் 2.40 முதல் 4.40 வரை

23.12.2011 வெள்ளி காலை 5.50 முதல் 7.50 வரை

3.1.2012 செவ்வாய் மதியம் 1.45 முதல் 3.45 வரை

30.1.2012 திங்கள் காலை 11.05 முதல் மதியம் 1.05 வரை

26.2.2012 ஞாயிறு காலை 9 முதல் 11 வரை

27.2.2012 திங்கள் காலை 9.04 முதல் 10.04 வரை

13.3.2012 செவ்வாய் இரவு 10.10 முதல் 12.10 வரை

25.3.2012 ஞாயிறு காலை 7.10 முதல் 9.10 வரை

9.4.2012 திங்கள் இரவு 8.30 முதல் 10.30 வரை


பெரிய அளவு கடனை அடைக்க விரும்புவோர்,இந்த நேரங்களை தொடர்ந்து பயன்படுத்துவது விரைவில் கடன் தீர வழிவகுக்கும்.

குடியும்.. யோகாவும்.. only for fun images....

|
யோகா பண்ணினா உடம்புக்கு நல்லது . நல்லா மூக்கு முட்ட குடிச்சுட்டு , இவங்க கிடக்கிறதை வைச்சு நம்ம நண்பர் ஒருத்தர் அனுப்பி வைச்ச மெயில்... 


யோகா பண்ணுறவங்க கெட்டாங்க போங்க.. 


குடியும்.. யோகாவும்..  
Malasana
This position, for ankles and back muscles. 


Savasana
Position of total relaxation. 


Balasana
Position that brings the sensation of peace and calm.


Setu Bandha Sarvangasana
This position
 calms the brain and heals tired legs. 


Marjayasana
Position stimulates the midirift area and the spinal comumn. 


Halasana
Excelent for back pain and imsomnia. 


Dolphin
Excelent for the shoulder area, thorax, legs, and arms.  Salambhasana
Great excersice to stimulate the lumbar area, legs, and arms.


 Ananda Balasana
This position is great for masaging the hip area. 

எனக்கு மட்டும் ஏன் இப்படி...? உண்மை சம்பவம்...

| Jan 21, 2011
கடவுள் நல்லவர்களைத் தான் அதிகம் சோதிக்கிறார் என்று சொல்லாதவர்கள் குறைவு. நல்லதற்குக் காலமில்லை என்று சொல்பவர்கள் நல்லவர்கள் படும் பாட்டைப் பட்டியல் இடுவதுண்டு. எத்தனையோ நன்மைகள் செய்தும் சோதனைக்குள்ளாகும் போது பாதிக்கப்பட்ட நல்லவர்கள் "கடவுளே ஏன்?" என்று கேட்காமல் இருப்பதும், தொடர்ந்து தன்னால் முடிந்த நன்மைகளை மற்றவர்களுக்கு செய்து வருவதும் மிக அபூர்வம். அப்படிப்பட்ட அபூர்வமான ஒரு நபர் ......

கோட்டயம் மெடிகல் காலேஜ் ஆஸ்பத்திரியில் அட்டெண்டராக 1970ல் தற்காலிகப் பணியில் சேர்ந்தவர் பி.யூ.தாமஸ். இரக்க குணம் படைத்தவர். ஏழை எளிய மக்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளை ஆரம்பத்தில் இருந்தே செய்து வந்தார். ஆஸ்பத்திரியில் வரும் எத்தனையோ ஏழைகள் உண்ண உணவு இல்லாமல் கஷ்டப்படுவதைக் கண்ட அவருக்கு, தன்னால் இயன்ற ஓரிருவருக்காகவாவது உணவு கொடுத்தால் என்ன என்று தோன்ற அதை உடனடியாக செயல்படுத்தினார். ஓரிருவர் என்று ஆரம்பித்தது நாளடைவில் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகரிக்க ஆரம்பித்தது. தன் குறுகிய வருமானத்தில் பலருக்கு உணவளிக்க ஆரம்பத்தில் அவர் மிகவும் சிரமப்பட்டார்.

ஆனால் அவரது நல்ல சேவையைக் கண்ட சிலர் தாங்களும் அவருக்கு உதவ முன் வந்தனர். ஒருவர் அரிசி தர முன் வந்தார். இன்னொருவர் உணவு கொண்டு வர வாகன உதவி செய்ய முன் வந்தார். இப்படி பலரும் பல விதங்களில் உதவ முன் வந்தனர். பணமாகவோ, பொருளாகவோ தர முடியாதவர்கள் தங்கள் உழைப்பைத் தர முன் வந்தனர். இன்று கிட்டதட்ட 1200 பேருக்கும் மேலாக இவர் அமைத்த நவஜீவன் என்ற அமைப்பு மூலம் உணவு பெறுகிறார்கள். இன்று நவஜீவன் சமையலறையில் பணியாளர்களும், தன்னார்வத் தொண்டர்களுமாக சேர்ந்து சுமார் 50 பேர் பணி புரிகிறார்கள்.

மனநிலை சரியில்லாமல் தெருவில் சுற்றிக் கொண்டு இருப்பவர்கள் மீது இரக்கம் கொண்டு அவர்களுக்குப் பாதுகாப்பாக தங்க இடமும், உண்ண உணவும் தரவும் அவர் முற்பட்டார். மனநிலை சரியில்லாதவர்களை பராமரிப்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஆனால் கருணை உள்ளம் படைத்த அவருக்கு அவர்களை அப்படியே விட மனமில்லை. அன்பும் ஆதரவும் காட்டி அவர்களுக்கு அபயம் அளித்தார். அப்படி அங்கு வாழ்ந்து குணமான பலர் அவருடைய சேவையில் தங்களையும் இணைத்துக் கொண்டார்கள். ஒரு நல்ல காரியத்தைத் தொடங்கி, விடாமுயற்சியுடன் தொடர்ந்தால், நாளடைவில் பலருடைய உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கிறது என்பதற்கு தாமஸின் முயற்சிகளே உதாரணம்.

http://aaronroberts.com/wordpress/wp-content/uploads/2008/12/kids9.jpg
இப்படி ஆயிரக்கணக்கான மக்களுக்கு தினமும் உதவி வரும் தாமஸிற்கு நான்கு மகள்கள். ஒரு மகன். மகன் ஏழு வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டான். இப்படி கருணையே உருவானவருக்கு கடவுள் கருணை காட்டத் தவறி விட்டாரே என்ற வருத்தத்தில் ஒரு பத்திரிக்கையாளர் அவரிடம் ஒரு பேட்டியில் கேட்டார். "ஏழை எளியவர்களுக்கு இத்தனை சேவை புரியும் உங்கள் ஒரே மகனை இறைவன் பறித்துக் கொண்டாரே என்று தங்களுக்கு வருத்தமாயில்லையா?"

அந்தக் கேள்வி நியாயமானதே. எப்படிப்பட்டவருக்கும் அப்படி தோன்றாமல் இருப்பது அரிது. ஆனால் தாமஸ் சொன்னார். "ஏழு வயதே ஆயுள் உள்ள ஒரு குழந்தையை பூமியில் பிறப்பிக்க வேண்டி இருந்த போது இறைவன் அந்தக் குழந்தையை பாசத்துடன் வளர்க்க ஏற்ற நபராக என்னைக் கண்டதாக நான் நினைத்துக் கொள்கிறேன். இது கடவுள் என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது என்றே எண்ணுகிறேன்"

மகன் இறந்ததும் நல்லதற்குக் காலமில்லை என்று விரக்தி அடைந்து தன் சேவைகளை நிறுத்தாமல், கடவுள் மீது கோபம் கொண்டு ஏசாமல், இப்படி எண்ண முடிந்த நபரைப் பற்றி இனி என்ன சொல்ல?

குழந்தை பேறின்மை மற்றும் இந்து மதத்தை ஆராய்ந்து வியந்து போகும் ஜெர்மானியர்கள்....

| Jan 20, 2011
சென்ற வருடம் மே மாதம் உத்தியோக நிமித்தம் ஜெர்மனி சென்று இருந்தேன். 
ம்யூனிக் கிலிருந்து ரெண்டு மணி நேர பயணம். ஒரு சிறிய வில்லேஜ்  தான்.  நான் சென்றது இத்தாலியில் இருந்து சாலை பயணம். ஆஸ்திரியா, சுவிஸ் வழியாக ....   நடுவில் ஒரு நதி வந்தது..... சற்று அடர்ந்த காடுகளும் கூடவே .

மனதுக்கு மிக ரம்மியமான பயணம்.  நம்ம ஊரு காவிரி, நர்மதை இரண்டு மூன்று மாநிலங்கள் வழியாக செல்வது  போல அங்கெ மொத்தம் 8 நாடுகள் வழியாக அந்த நதி பாய்கிறது. அவர்கள் அந்த நதியையும் , காடுகளையும் பாது காக்கும் விதம் .... அவ்வளவு அழகு. ஒன்றும் இல்லை... கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல்  நாம் கற்பழிப்பதை அவர்கள் செய்யவில்லை. .... , தொழிற் சாலை கழிவுகள் கலப்பதில்லை .... ஒரு வரம் போல நினைத்து அவர்கள் கொண்டாடுகிறார்கள்.. 

நம்ம ஊரு கூவம் ஒரு காலத்தில் குடி தண்ணீர் ஆக இருந்தது சென்னை முழுக்க.. இப்போது... ?  

சரி விஷயத்துக்கு வருவோம்..

அங்கு உள்ள டிவி சேனலில் ஒருவர் ஜெர்மானிய மொழியில் யோகா வகுப்பு நடத்திக் கொண்டு இருந்தார். எனக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அர்த்த மச்சேந்திர ஆசனம், சர்வாங்க ஊர்த்துவ பத்மாசனத்தை அவ்வளவு துல்லியமாக செய்து கொண்டு இருந்தார். மேலும் அங்கு சமஸ்கிருதம் கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகம். மாக்ஸ் முல்லர் நன்றாகவே அடித்தளம் அமைத்து  இருக்கிறார் போலும்.  
========================
சவுந்தர்ய லஹரி என்ற ஒரு பாடல் தொகுப்பு இருக்கின்றது.அதை ஆதிசங்கரர் திருக்கையிலாய மலைக்குச் சென்று சிவபெருமானிடமிருந்து வாங்கி வந்தார்.அதில்  வரும் “தனுர் பவுஷ்பம் மெளர்வி” என்கிற சுலோகத்தை ஒரு லட்சம் தடவை ஜபித்தால் அம்பாளுடைய தரிசனம் ஏதாவது ஒன்று நமது கண்களுக்குத் தெரியும்.

ஒரு ஜெர்மனியர் இதை டெஸ்ட் பண்ணிவிட நினைத்தான்.அவருக்கு இந்த தனுர் பவுஷ்பம் மெளர்வி என்பதை உச்சரிக்க முடியலை.அதனால், ஒரு காரியம் செய்தார் ;இந்த சவுந்தர்ய லஹரி வரியை 10 டேப் ரெக்கார்டரில் ரெக்கார்டு செய்து தொடர்ந்து ஒரு லட்சம் தடவை சொல்வது போல் செய்தா
ர்.ஒரு லட்சம் தடவை அந்த டேப்ரிக்கார்டர் சொன்னதும் அந்த டேப்ரிக்கார்டர்கள் பத்தி எரிந்தன;அதில் அம்பாளுடைய வடிவம் வந்தது.இதை நாமும் முயற்சி செய்து பார்க்கலாமே!!!http://1.bp.blogspot.com/_LQrDyXv3gZk/So1qA0T2Z_I/AAAAAAAAAaI/3iC8XSPTutY/s320/30384.beach_yoga_aw
கேரளாவில் பத்து வருடம் முன்பு கி.பி. 2000 வாக்க்கில் ஒரு புத்திரகாமேஷ்டி யாகம் செய்தனர்.இருப்பதிலேயே தலைசிறந்த வேத விற்பன்னர்களை அழைத்துவந்து,யாருக்கெல்லாம் குழந்தையில்லையோ அனைவரும் வந்து இந்த யாகத்தில் கலந்துகொள்ளுங்கள் என அழைத்தார்கள்.

யாருக்கெல்லாம் குழந்தையில்லையோ,அவர்களுக்கு எந்தக் காரணத்தினால் குழந்தையில்லை என்ற மெடிக்கல் ரிப்போர்ட்களை எடுத்தார்கள்.அதற்கேற்றாற்போல், குழந்தையில்லாத தம்பதிகள் 48 நாட்கள் இந்த புத்திரகாமேஷ்டியாகத்தில் கலந்துகொள்ள வேண்டும்.அந்த 48 நாட்களுக்குத் தேவையான உணவு,தங்குமிடம் இலவசமாக அந்த தம்பதிகளுக்குத் தந்தார்கள்.ஒரு ஜெர்மன் ஆய்வுக்குழு இந்தச் செலவுகளை ஏற்றுக்கொண்டனர்.

புத்திரகாமேஷ்டியாகம் முடிந்து சில வருடங்கள் கழிந்தப்பின்னர்,ஒரு சர்வே எடுத்தார்கள்.இந்த யாகத்தில் கலந்துகொண்ட தம்பதிகளில் 100க்கு 90 பேருக்கு ஆன்மீகபூர்வமாக அவர்களுக்கு குழந்தை பிறந்திருந்தன.
(ஆதாரம் : சிவசங்கரபாபா,:பக்கம் 49,ஜோதிடபூமி வெளியீடு,அக்டோபர் 2010.)

இள நரையை / முடி உதிர்வதை தடுக்க என்ன வழி ?

| Jan 19, 2011
இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது. முடி என்னமோ எளிதாகக் கொட்டிவிடுகிறது. ஆனால், அதனை மீண்டும் முளைக்க வைக்கவோ, மேலும் முடி கொட்டாமல் காப்பாற்றுவதோ இன்றைய மருத்துவத்தில் பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில், முடி உதிர்வதைத் தடுக்கவும், இள நரையைத் தவிர்ப்பதும் எப்படி என்பது குறித்து இயற்கை மருத்துவம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்­ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.
சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.
சரி, முடி உதிர்வதைப் பார்த்தோம், நரை போக்க வழி பார்த்தோம். முடி வளர வழி இருக்கிறதா?

ஆம் அதுவும் இருக்கிறது நம் இயற்கை மருத்துவத்தில்.
கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும்.

இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.
இவையனைத்திற்கும் மேலாக, சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு ஒரு குறிப்பு.
கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனைத் துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி அதனைத் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com