Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

ஒரு நடிகையின் கல்யாணம் !!!

| Dec 10, 2010
 படித்ததில் பிடித்தது : விகடனில் ரெகுலரா எழுதிக்கொண்டிருக்கும் திரு. பாக்கியம் ராமசாமி அவர்கள் எழுதிய - ஒரு நடிகையின் கல்யாணம் . முழுக்க நையாண்டியுடன் எழுதி இருந்தாலும், இதில் இருக்கும் நிதர்சனம் நெஞ்சில் நிற்கிறது. படித்து பாருங்கள் ... நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்....  ரொம்ப பழைய மேட்டர் தான். ஆனால் என்றும் சிரஞ்சீவி கட்டுரை... என்ஜாய்...!!
--------------------------------------------------------------------------------------------
ஒரு நடிகையை ரசிகர்கள் திரும்பத் திரும்பத் திரும்பக் கேட்கும் கேள்வி - உங்கள் திருமணம் எப்போது?

இந்தக் கேள்விக்குச் சட்டென்று நடிகை பதில் சொல்லிவிட மாட்டார். ஸஸ்பென்ஸ்
ஒரு மர்மமான ஹிட்லர் மீசைக்காரர் எப்போதும் குறிப்பிட்ட நட்சத்திரத்தின் ஷ¥ட்டிங்கில் காணப்படுகிறார். அவர் யார்? நடிகையுடனே காரில் போவார். வருவார். படப்பிடிப்பின் போதும் உட்கார்ந்து கொண்டிருப்பார்.

அவர் நடிகரின் பி.ஏ.வா? மானேஜரா? முறைப் பையனா? காதலனா? கடன்காரனா...? என்று எல்லா ரசிகர்களும் உற்சாகமாக ஊகித்துக் கொண்டிருக்க நட்சத்திரம் சந்தர்ப்பம் தருவார்.
திருமணத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அயல்நாட்டு புருஷன் (புய்யன் அல்ல புருஷன்) அனேகமாக பார்க்க லட்சணமாக இருப்பான். லட்சணம் இருக்கோ இல்லையோ, கோட் சூட்  நிச்சயம் உண்டு.

Tamil Actress Meera Jasmine postpones marriage

கல்யாணம் என்றைக்கு என்பது ரசிக மக்களின் அடுத்த ஆர்வம்...

அதை ஒரு ஸஸ்பென்ஸாக்கி, ஜவ்வு மாதிரி இழுப்பார் நடிகை. பெற்றோர் என்ற ஒரு ஜாதியினரின் எதிர்ப்பு இருப்பது போலவும், சம்மதத்துக்காகப் போராடுவது போலவும் சில அயிட்டங்களை வெளியிடச் செய்வார்கள்.

ரசிகர்களுக்கு ராத் தூக்கம் போச்சு. நடிகை கல்யாணம் நடக்குமா, நடக்காதா?

திடீரென்று ஆறுமாசம் ஒரு வருஷம் கழித்து நீ கல்யாணம் பண்ணிக் கொண்டாலென்ன, நாசமாய்ப் போனால் என்ன என்று ரசிகர்களுக்கு அலுப்பு ஏற்படும் சமயம்.

நடிகை தடாலென்று சென்னையில் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் 'திருமண வரவேற்பு' என்ற செய்தியைப் போட்டு உடைப்பார்.
இப்போது ரசிகர்களுடைய மண்டையை அடுத்தாற்போல் குடையும் கேள்வி. 'திருமணத்துக்குப் பின் நடிகை நடிப்பாரா?' நடிகருக்கு இந்தக் கேள்வி போடுவது கிடையாது. நடிகர் என்பவர் எந்தப் புயலடித்தாலும், எத்தனை கல்யாணம் ஆனாலும், நடித்துக் கொண்டிருப்பார்.
துரதிருஷ்டம் என்னவென்றால் பெரும்பாலான நடிகைகளால் ஆறு மாசத்துக்கு மேல் திருமண வாழ்க்கை நடத்த முடிவதில்லை.

விவாகரத்துக்கு ஆசைப்படுகிறார்கள். அந்தப் புருஷன் அமெரிக்கத் தொழிலதிபராக இருந்தாலும் சரி, அமெரிக்க பிரசிடெண்ட் புஷ்ஷாக இருந்தாலும் சரி. பிடிக்காமல் போய் விடுகிறது.

கணவன் மீது, அவன் தன்னை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தினான் என்பதற்கு, விவாகரத்து வல்லுனர்களால் தொகுக்கப்பட்டு ரெட்ட ரெடியாக இருக்கும் விவாகரத்து Guideகளிலிருந்து காரணங்களைப் பொறுக்கி எடுத்து அறிக்கையாக விடுவார்கள்.

நடிகை இப்போது சுதந்திரப் பறவைதான். விட்ட இடத்தில் மறுபடி தொழில் செய்ய ஸ்டூடியோ வலம் வரத் தொடங்குகிறார்.

சே! என்னே ரசிகர்களின் தயாரிப்பாளர்களின், டைரக்டர்களின் ரசனை மாறுதல்.


ஆறு மாசத்துக்கு முன்னால் கனவுக்கன்னியாக, கவர்ச்சிப் பழமாக இருந்த நடிகையை அக்கா ரோலிலும் பாட்டி ரோலிலும் ஈவிரக்கமில்லாமல் தள்ளி விடுகிறார்கள்.
சின்னத் திரை இரு கை விரித்து (இருகை என்ன இரு நூறு கை) வந்தாரை வாழ்விக்கத் தொடங்குகிறது.

'நான் இப்போது சின்னத்திரையின் ராணியாக்கும்' என்பது போல செயற்கையான மதர்ப்புடன் நடிகை கொஞ்ச காலம் தள்ளுகிறார்.

பிறகு சின்னத் திரையிலும் மெதுவாக ஆயா வேஷம் அவரை நோக்கி வருகிறது.

இப்போது ரசிகர்கள் - மகா மறதிப் பேர்வழிகள் - 'இதை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே!' என்கிறார்கள்

பின்னணியில் தான் இருந்து கொண்டு கவர்ச்சி விடுதி நடத்தத் தொடங்கி விடுவார். அவருக்கு அதிகபட்ச வேலை, வெற்றிலை பாக்கு புகையிலை குதப்பிக் கொண்டு எச்சிலை உமிழ்ந்து கொண்டு ரிஸப்ஷனிஸ்டாக இருப்பது. (பொதுபொதுவென்று சதை போடுமாறு பெருத்துக் கொள்வது ரொம்ப முக்கியம்.)

போலீஸ¤ம் சட்டமும் சும்மா இருக்குமா கையைக் கட்டிக் கொண்டு.

விபசார வழக்கில் நடிகையை புக் செய்வார்கள்.

அதை சுவாரசியமான செய்தியாகப் பத்திரிகைக்காரர்கள் பிரசுரிப்பார்கள்

'அழகி அபசாரா விபசார விடுதியில் கைது' என்று போடுவார்கள்.

ஆனால் தப்பித் தவறி அழகி அபசாரா படத்தைப் போட்டு விட்டால் அவ்வளவுதான். பெரீய மாமிச மலை மாதிரி கிங்காங்குக்கு கவுன் போட்ட மாதிரி இப்போது அழகி அபசாரா தோற்றம் தருவாள். அமெரிக்கத் தொழிலதிபரை மணந்த பேரழகி அபசாராவா இது? என்று ரசிகர்கள் மூக்கின் மீது விரலை வைத்து கண்ணை மறைத்துக் கொள்வார்கள். தோல்வியை துக்கத்தை மறக்கக் குடித்துக் குடித்து ஊதிவிட்டதாக அபசாராவின் காரியதரிசி கிசுகிசுக்கக் கூடும்.

அதற்குள் அழகி அபசாராவின் சொந்தப் பெண்ணோ, வளர்ப்புப் பெண்ணோ திரையில் புகுந்து இரண்டொரு படத்தில் தலை காட்டும்....

அவ்வளவுதான் - ரசிகர்கள் அபசாராவின் மகளைப் பற்றி அறிய ஆவலுடன் அபசாராவின் பெண் விபசாரா எப்படி நடிக்கிறாள், அம்மாவின் அளவு பெயரெடுப்பாளா என்று ஆவலாக இருப்பார்கள்.

ஸெட்டில் ஒரு ஆயாக் கிழவி அரைத் தூக்கத்தில் நாற்காலியில் சரிந்து கிடப்பாள்.

அவள்தான் மாஜிப் பேரழகி - அபசாரா. தற்கால விபசாராவின் தாயார் அபசாராதான். டயாபெடிக் வந்து சதையெல்லாம் கரைந்து எலும்பு ப்ளஸ் தோல் மட்டும்.

''பொண்ணு கெவுனிக்கிறதே இல்லே. அன்னாடம் சாப்பாட்டுக்கே கஷ்டம் நைனா. ஸெட்டுக்கு வந்தால் துன்ன ஏதாவது கிடைக்கும்னுதான் வர்ரேன். டைரக்டரையும் கண்டுகினு போலாம்னு குந்தியிருக்கேன்! தொழில் நடத்தவும் எல்லா இடத்திலும் தகராறுப் பண்றாங்க...''

அழகியைப் பார்த்தவர்கள் அவசரமாக வெளியேறுகிறார்கள்.

நீதி : சினிமா நடிகைகளுக்கு விவாகம் ஒரு சாபக்கேடு.

---------------------
பாக்கியம் ராமசாமி

0 comments:

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com