Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

அகஸ்தியரை நேரில் தரிசிக்க முடியுமா?

| Dec 21, 2010
நீங்கள் திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பழக்கம் இருந்தால், கிரிவலப் பாதையில் அகஸ்திய ஆசிரமம் உள்ளது. ஒவ்வொரு மாதமும் அகஸ்திய விஜயம் என்ற மாத இதழை விற்பனை செய்கின்றனர். அவர்களின் நிறைய இதழ்கள் , வெளியீடுகள் - ஆன்மிகத் தேடல் உள்ளவர்களுக்கு நல்ல தீனியாக உள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போது நீங்களும் வாங்கிப் படித்துப் பாருங்கள்.

நீங்கள் நாடி ஜோதிடம் எப்போதாவது பார்த்து இருக்கிறீர்களா? தமிழ் நாட்டில் இப்போது எத்தனையோ போலிகள் வந்து விட்டார்கள். அகஸ்தியர், வசிஷ்டர் என்று நிறைய நிறைய நாடி ஜோதிட நிலையங்கள் வந்துவிட்டன. ஆனால் உங்களுக்கான நாடி கிடைத்துவிட்டால், உங்கள் பெருவிரல் ரேகை மட்டுமே வைத்து உங்கள் பெயர், அப்பா, அம்மா பெயர் , பிறந்த நட்சத்திரம் , வருடம் என்று ஜாதகமே கணித்துவிடுகிறார்கள். இது வரை ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால் அதன் பிறகு.... எல்லோரும் ஒரே பார்முலா  தான். யாரவது, நல்ல , பக்காவான நாடி ஜோதிடர்கள் உள்ளார்களா என்று நண்பர் வட்டாரத்தில் விசாரித்துக் கொண்டிருந்தபோதுதான் எதேச்சையாக , ஒரு அகத்திய விஜயம் இதழ் கிடைத்தது.
உங்களுக்கு அகஸ்திய  தரிசனம்  வேண்டுமா?  கீழ்க்கண்ட முறையை பின்பற்றுங்கள் என்று... ... எனக்கு மிகவும் தெரிந்த நண்பர்ஒருவர் இதைச் செய்ய ஆரம்பித்தார். அவருக்கு அகஸ்திய தரிசனம் கிடைத்ததா இல்லையா என்று தெரியவில்லை. அதைப் பற்றி கூற மறுத்துவிட்டார்.. ஆனால் அவரது நடவடிக்கையில் நிறையவே நல்ல மாற்றங்களை உணர முடிகிறது.  விருப்பம் உள்ள அன்பர்கள் பின்பற்றிப் பாருங்கள்


கீழ்க்காணும் மந்திரத்தை தினமும் காலை அல்லது இரவில் 108 முறை ஜபிக்கவும்.
ஒரு வெள்ளைத்துண்டினை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.அதை தினமும் காலை 4.30 மணிமுதல் 6.00 மணிக்குள் ஏதாவது ஒரு மணி நேரம் (4.30 டூ 5.30 அல்லது 5.00 டூ 6.00 இப்படி) அல்லது இரவு 8 மணி முதல் ஏதாவது ஒரு மணி நேரம் இந்த வெள்ளைத்துண்டினை விரித்து அதில் அமர்ந்து, விநாயகரை நினைத்துவிட்டு,இந்த அகத்திய தியானத்தை 108 முறை ஜபித்துவரவும்.45 நாட்களில் அகத்தியரை நேரில் அல்லது கனவில் சந்திக்கலாம்.
நாம் முற்பிறவிகளில் கடுமையான பாவம் செய்திருந்தால்,இந்த கட்டுரையைக்கூட வாசிக்கும் சந்தர்ப்பம் அமையாது;ஓரளவு பாவம் செய்திருந்தால் கனவில் அகத்தியர் தோன்றுவார்.அல்லது நேரில் வருவார்.
மந்திரம்:
ஓம் சிம் பம் அம் உம் மம் மகத்தான அகத்தியரே
என் குருவே வா வா வரம் அருள்க
அருள் தருக அடியேன் தொழுதேன்.

இந்த 45 நாட்களில் தெரியாமல் கூட அசைவம் சாப்பிடக்கூடாது.மது கூடாது.துக்க,ஜனன வீடுகளுக்குச்செல்லக்கூடாது.இந்த தியானத்தை முடித்தப்பின்னர் வேண்டுமானால் மனைவியுடன் கூடலாம்.முறையற்ற உறவைத்தவிர்க்க வேண்டும்.
கடும் பாவம் சிலர் முற்பிறவிகளில் செய்திருந்தால்,45 நாட்களுக்கும் மேலாக தியானம் செய்ய வேண்டும்.
பெண்களும் இந்த தியானத்தை மேற்கொள்ளலாம்.அவர்கள் தீட்டுநாட்கள் 5 நாட்கள் வரை அகத்திய தியானத்தைக் கண்டிப்பாக தவிர்க்கவும்.

அகத்தியரை நேரில் தரிசிக்கும் பாக்யம் பெற்றவர்கள்,முதலில் அவரை கையெடுத்துக்கும்பிட வேண்டும்.பிறகு, அவரது கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவேண்டும்.
ஒளிரும் தங்க நிறத்தில் 4 அல்லது 5 அடி உயரத்தில் தங்க நிற தாடியும்,ஜடாமுடியும் வைத்திருப்பார்.

பொதுவாக கும்ப ராசி மற்றும் கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு விரைவில் அகத்திய சித்தரின் தரிசனம் கிட்டும்.
முற்பிறவிகள் ஒன்றில் அகத்திய வழிபாடு செய்திருந்தாலும், அகத்தியருக்கு கோவில் கட்டியிருந்தாலும்,அகத்தியரின் புகழைப் பாடியிருந்தாலும், ஏராளமான புண்ணியம் செய்திருந்தாலும் விரைவில் அகத்திய தரிசனம் கிட்டும் என்பது நிஜம்.
அகத்திய மகரிஷியை தரிசியுங்கள்; என்னை சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள் குருதேவா என வேண்டுங்கள்.அதை விட பிறவிப்பயன் வேறில்லை;

7 comments:

GUNA said...

very nice and auspicious information. gods grace with u u have servicing mind so u are sharing it with everybody

thanks
]
guna

vairatamil said...

நல்ல தகவல்

vairatamil said...

நல்ல தகவல், சுந்தரமகாலிங்காயா என்று கூறுங்கள் அகத்தியர் அருள்கிடைக்கும் நன்றி

kavi siva said...

ஓம் சிம் பம் அம் உம் மம் மகத்தான அகத்தியரே
என் குருவே வா வா வரம் அருள்க
அருள் தருக அடியேன் தொழுதேன்.

VJAAYA said...

No one will reveal the truth like this...but you are great.
Agashthiya maharishi may bless you always.

VJAAYA said...

6

Unknown said...

நான் அகத்திய மா முனியை கனவில் கண்டேன்

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com