Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

ஈஷா யோகம் - தியான லிங்கம் - படங்கள், வாழ்வியல் கொள்கைகள்

| Dec 11, 2010
கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களை பார்க்கும்பொழுதே , நீங்களும் ஒரு தடவை கண்டிப்பாக போக வேண்டும் என்று தோன்றும். மனதுக்கு மிக ரம்மியமான , இயற்கை கொஞ்சும் சூழலில் , தியான லிங்கத்தை - பிராண பிரதிஷ்டை செய்து இருக்கிறார் - சத்குரு - ஜாக்கி வாசுதேவ். சமீபத்தில் - லிங்க பைரவி ஆலயமும் எழுப்பி இருக்கிறார்.
வாய்ப்பு கிடைக்கும்போது ஒரு முறை சென்று வாருங்கள். நம்ம கோயம்புத்தூருக்கு வெகு சமீபம் தான்.


 'ஈஷா' யோகத்தின் கொள்கைகள் உங்களுக்குத் தெரியுமா? யோகம் என்றவுடன் தவம், விரதம் என்று பயப்படத் தேவையில்லை. நடைமுறை வாழ்க்கையின் வளம்தான் அவர்களின் கொள்கைகளாக இருக்கின்றன. அவர்கள் சொல்லக்கூடிய யோகங்களுள் சிலவற்றை நாம் எல்லோருமே செய்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் கவனத்துடனோ அல்லது முழு ஈடுபாட்டுடனோ அல்லது தொடர்ச்சியாகவோ செய்வதில்லை. நம் வசதிக்கேற்ப செய்கின்றோம். அந்த மனநிலையைக் கொஞ்சம் மாற்றிக் கொண்டு, வாழ்வின் நித்திய கடமைகளாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் அவ்வளவுதான். இதை கடைபிடித்துக் கொண்டிருக்கும் அத்தனை பெரும், தனது வாழ்வு நல்லா விதமாக மாறி இருப்பதாக கூறுகிறார்கள்.1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள்.

2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்தச் சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக அமருங்கள்.

3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள்.

4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

5. நிறைய விளையாடுங்கள்; நன்றாக விளையாடுங்கள்.

6. கடந்த ஆண்டில் படித்ததை விட இன்னும் அதிகமான புத்தகங்களை இந்த ஆண்டு படியுங்கள்.

7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள் இயந்திரத்தனமான வாழ்க்கைக்குப் புத்துணர்ச்சி அளிக்கும்.

8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள்.

9. நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது!

10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை நிறைய உண்ணுங்கள். ஆனால், இவை மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களைக் குறைவாக உண்ணுங்கள்.

11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள்.

12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.

13. உங்களுடைய உன்னதமான ஆற்றலைத் தேவையற்ற வம்புகளில் இழக்காதீர்கள்.

14. உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவற்றைப் பற்றி யோசிக்காதீர்கள்.

15. எதிர்மறையான எண்ணங்களைக் கைவிட்டு, ஆக்கபூர்வமான நிகழ்காலத்தில் வாழுங்கள்.

16. 'வாழ்க்கை என்ற பள்ளிக்கூடத்தில் நாம் அனைவரும் மாணவர்கள். பிரச்சினைகள் என்பது நம்முடைய பாடத்தின் ஒரு பகுதி. அல்ஜீப்ரா வகுப்பு போல அது மாறிவிடும். ஆனால் நம்முடைய படிப்பனுபவம் வாழ்வின் இறுதி வரை வரும்' என்று உணர்ந்து கொள்ளுங்கள்.

17. உங்களின் காலை உணவை ஓர் அரசன் போல அருந்துங்கள்; மதிய உணவை ஓர் இளவரசன் போல உண்ணுங்கள்; இரவு உணவை ஒரு பிச்சைக்காரன் போல உண்ணுங்கள்.

18. நன்றாக வாய்விட்டு சிரியுங்கள்.

19. உலகில் வாழப்போகும் குறுகிய கால வாழ்க்கையில் எவரையும் வெறுக்காமல், எல்லோரிடமும் அன்பு கொண்டு வாழுங்கள்.

20. வாழ்க்கையைச் சிக்கலான நிலையாகக் கொள்ளாதீர்கள். 'ஈஸி'யாக எடுத்துக் கொள்ளுங்கள்.

21. எல்லா விவாதங்களிலும் நீங்கள்தான் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணாதீர்கள். முரண்பாடுகளையும் மௌனமாய் ஏற்றுக் கொள்ளுங்கள்.

22. கடந்தகால வாழ்க்கையுடன் சமாதானமாகப் போய் விடுங்கள். இதனால் நிகழ்கால வாழ்க்கை அமைதியாக இருக்கும்.

23. மற்றவர்களின் வாழ்க்கை நிலையை, உங்களுடனோ அல்லது உங்கள் வாழ்க்கைத் துணையுடனோ ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அவர்களுடைய வாழ்க்கைப் பயணம் பற்றி நமக்கு எதுவும் தெரியாது.

24. உங்களுடைய மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் நீங்கள் மட்டுமே பொறுப்பு என்பதை உணருங்கள்.

25. எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்கத் தயாராக இருங்கள்.

26. ‘உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்’ என்று யோசிப்பது உங்கள் வேலை இல்லை என்று உணருங்கள்.

27. கடவுள் அனைத்தையும் ஆற்றுபவன் என்று மனதார உணருங்கள்.

28. நல்லதோ கெடுதலோ, எல்லாமே கடந்து போய்விடும் என்று நம்புங்கள்.

29. உங்களுடைய துன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர்கள் உங்கள் நண்பர்கள். எனவே அவர்களோடு நிரந்தரமாகத் தொடர்பு வைத்திருங்கள்.

30. பயனில்லாத, அழகில்லாத, மகிழ்ச்சியளிக்காதவைகளில் இருந்து வெளியே வந்து விடுங்கள்.

31. உங்கள் தகுதிக்குத் தேவையான அனைத்தும் உங்களிடம் இருப்பதால் பிறரைப் பார்த்து பொறாமைப்படுவதைத் தவிர்த்து விடுங்கள்.

32. வாழ்வின் 'உன்னதம்' என்பது இன்னும் வரவில்லை. நிச்சயம் வந்து விடும் என்று நம்புங்கள்.

33. நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் நன்றாகக் குளித்து, சுத்தமான ஆடையை அணிந்து கொள்ளுங்கள்.

34. எல்லோராலும் அங்கீகரிக்கப்படும் செயல்களையே செய்யுங்கள்.

35. எத்தனை 'பிஸி'யாக இருந்தாலும் குடும்பத்தினருடன் பேசி மகிழுங்கள்.

36. உங்களுக்கு உள்ளே இருக்கும் 'ஆன்மா' எப்போதும் ஆனந்தமாக இருப்பதை உணர்ந்து, நீங்களும் ஆனந்தமாக இருங்கள்.

37. தினசரி மற்றவருக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு செயலைச் செய்யுங்கள்.

38. உங்களுடைய வரம்பை அறிந்து எந்தச் செயலையும் செய்யுங்கள். அளவுக்கு மீறினால் அம்சமும் இம்சைதான்!

39. நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் உயிருடன் இருப்பதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள்!

40. யார் மீது நீங்கள் அதிக அக்கறையுடன் இருக்கிறீர்களோ, அவர்களைப் படிக்கச் செய்து இவற்றைப் பரப்புங்கள்!

'ஈஷா' யோகத்தை ஒவ்வொருவரும் பின்பற்றத் தொடங்கினால் நாட்டில் காணப்படும் பொறாமை, கோபம், வன்முறை ஆகிய அனைத்தும் தொலைந்து விடும்! வரும்  புத்தாண்டு நாள் அதற்கு ஒரு நல்ல துவக்கமாக இருக்கட்டும்! நமது இணைய தளத்திற்கு வரும் ஆன்மீக அன்பர்களுக்காக கீழே சில தியான லிங்கத்தின் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.  நன்றி!0 comments:

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com