Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

கலக்கலான SMS ஜோக்குகள்

| Dec 31, 2010
1.மிஸ்,நீங்க பாக்க என் மனைவி மாதிரியே இருக்கீங்க,

அப்படியா,உங்க மனைவி பேரென்ன?

அதை நீங்கதான் சொல்லனும்.

(காதலை புதிய அணுகு முறையில் சொல்வது இப்படித்தான்.)

=================================================================

2. கவிதை என்பது வார்த்தை தொகுப்பு

    காதல் என்பது வயசு கொழுப்பு


=================================================================
3. ஒரு கடை வாசலில் போர்டு வசனம்

பனாரஸ் சேலை - ரூ 10,  நைலான் சேலை ரூ8,  காட்டன் சேலை ரூ 5.

மனைவி -என்னங்க,எனக்கு ரூ 500 குடுங்க,50 சேலை வாங்கிடறேன்.

கணவன் - அடியே அல்பம்,இது லாண்டரி கடைடி.அயர்ன் பண்ற சார்ஜ் அது.

=================================================================


4. சிங்கம் ரீ மிக்ஸ் டயலாக் - என்னை ரோட்ல பாத்திருப்பே,காலேஜ்ல பாத்திருப்பே,ஆனா ஒயின் ஷாப்ல உக்காந்து தண்ணி அடிச்சு பாத்திருக்கியா?வெறித்தனமா சரக்கு அடிப்பேண்டா,உக்காந்து அடிச்சா ஒரே டைம்ல ஒன்றரை ஃபுல்டா,பாக்கறியா?
=================================================================

5.வாழ்க்கையில் மறக்க முடியாத 3 விஷயங்கள் 

1.காலை சாப்பாடு 2. மதிய சாப்பாடு  3.இரவு சாப்பாடு.

=================================================================

6.மாப்ளே,புது படம் ஒன்று எடுக்கறேன்,நீதான் ஹீரோ,நான் வில்லன்,நான் ஹீரோயினை ரேப் பண்றேன்,நீ அவளை மேரேஜ் பண்றே,அவளுக்கு வாழ்க்கை தர்றே,ஏன்னா நீதான் ஹீரோவாச்சே,படத்தோட டைட்டில் “இனிஷியல் உன்னுது,பேபி என்னுது.”


=================================================================

7. காதல் ஒரு மழை மாதிரி,நனையும்போது சந்தோஷம்,
     நனைந்தபின்பு ஜலதோஷம்.

=================================================================

8. அன்பர்களே,100 கோவில்கள் கட்டுவதை விட ஒரு காலேஜ் கட்டுவது சிறந்தது,ஏன் தெரியுமா? கோவிலை விட காலேஜ்லதான் நிறைய ஃபிகரை பாக்க முடியும்.

=================================================================

9.என்னோடு அவள் இருந்திருந்தால் இளவரசியாக இருந்திருப்பாள்,பாவம் இப்போது யாருக்கோ இல்லத்தரசியாக இருக்கிறாள்.

=================================================================

10.என்னோட அட்ரஸ் வேணும்னு நிறைய பேர் கேட்டுக்கிட்டே இருக்காங்க,இதோ,  ஜே.நெப்போலியன்,சன் ஆஃப் மார்க்கோபோலோ,எம் சி இல்லம்,மானிட்டர் நகர்,ஓல்டு மங்க் முதல் கட்டிங்க்,கிங் ஃபிஷர் ஏரியா,விஸ்கி தாலுகா, ரம் டிஸ்டிரிக்ட்,பின்கோடு -60005000.


=================================================================
11.தீபாவளிக்கு டாஸ்மாக் கடைல பட்டாசு விக்கப்போறாங்களாம்.

அப்போ   பட்டாஸ்மாக் கடைனு சொல்லுங்க.

=================================================================

12.காய்கறிகள் அழுவாம (அழுகாம) இருக்கனும்னா என்ன செய்யனும் தெரியுமா?

ஃப்ரிட்ஜ்ல வைக்கனுமா?

இல்ல,அடிக்கடி அதுங்ககிட்ட ஜோக் சொல்லனும்,அழுகாம சிரிச்சுட்டே இருக்கும்.

(கடவுளே ,என்னை ஏன் தான் இவ்வளவு புத்திசாலியா படைச்சியோ?)

=================================================================
13.நட்புக்கும்,காதலுக்கும்  என்ன வித்யாசம்?

வீட்ல இருக்கறவனை ஒயின்ஷாப்புக்கு போக வைக்கறது காதல்,ஒயின்ஷாப்ல இருக்கறவனை வீட்டுக்கு கூட்டிடு வர்றது நட்பு.

=================================================================
14. வோட்கா + வாட்டர் = கிட்னிக்கு பாதிப்பு

ரம் + வாட்டர்  = லிவ்வர்க்கு பாதிப்பு

விஸ்கி + வாட்டர் = இருதயத்துக்கு பாதிப்பு

ஜின் + வாட்டர் = மூளைக்கு பாதிப்புநீதி - அப்போ வாட்டர்லதான் ஏதோ பிரச்சனை இருக்கு .சுத்தமான தண்ணீர்தான் இனி மிக்ஸ் பண்ணனும்.

=================================================================

15.  ஹாய் ,ஐ ஆம் விஜய்...எனக்கு எல்லா ஆந்திரா ஹீரோஸ்சோட ஹிட் பட ரீமேக்கும் எனக்கு அத்துபடி..என்னோட ஸ்பெஷல் ஸ்கில்ஸ் - லாங்க் ஜம்ப் (குருவி),கபடி காமெடி (கில்லி), அத்லெட்டிக்ஸ் (அழகிய தமிழ்மகன்).
என் ரெக்கார்ட்ஸ் - 50 படத்துக்கு 30 படம் ஃபிளாப்.

மனுஷன் படைச்சதுலயே உருப்படாத 2 விஷயம்
1. நான்   2 ,என் படம்.

=================================================================
16. பொண்ணுங்களோட லவ்

முதல் நாள் - ஹாய்

2வது நாள் - எப்படி இருக்கீங்க?

3வது நாள் - நான் ஒண்ணு சொன்னா கோவிச்சுக்காதடா...

4வது நாள் - ஐ லவ் யூ

5வது நாள் - நீ இல்லாம என்னால ஒரு நொடி கூட வாழ முடியாதுடா....

6வது நாள் - சாரிடா -- 2 நாளா உன்னைப்பார்க்க முடியல.

7வது நாள் - ஐ ஆம் ரியலி சாரி..எனக்கு வீட்ல வேற மாப்பிள்ளை பார்த்துட்டாங்க... பை பை


8.வது நாள் - யார் நீங்க?

9வது நாள் - நீங்கதான் என் முதல் காதலர்.. ஓக்கே.அதுக்கு ஞாபகார்த்தமா இன்னும் 10 மாசத்துல எனக்கு பிறக்க்ப்போற குழந்தைக்கு உங்க பேரை வெச்சுடறேன்....


10வது நாள் - கண்ணா ,மாமாவுக்கு டாட்டா சொல்டா...

=================================================================
17. லேட்டஸ்ட் தற்கொலை விளக்கக்கடிதம்

என்னை யாரும் தேட வெணாம்,நான் தற்கொலை பண்ணிக்கப்போறேன். சாரி விஜய் படம் பார்க்கப்போறேன்,,,

=================================================================
18. ஒரு கோழியின் கவிதை

காலையில் கொக்கரக்கோ என்றேன்,மாலையில் குக்கருக்குள் வெந்தேன்.
என்ன கொடுமை சார் இது?

=================================================================
18. ஹமாம் ரீ மிக்ஸ் விளம்பரம்

பவித்ரா.. டி வி டி வாங்கிட்டு வாம்மா..
ஓக்கேம்மா
அய்யோ என்ன டி வி டின்னு சொல்லலையே..விஜய் நடிச்ச படமா இருந்தா மயக்கம் வரும்,தலை சுத்தும்,வாந்தி வரும்,என் பொண்ணுக்கு பைத்தியமே பிடிச்சிடும்..பவித்ரா...

அம்மா.. நம்ம சந்தானம் இருக்க பயம்  ஏன்? காமெடி டி வி டி தான் வாங்கிட்டி வந்தேன்.காமெடி பீஸ்  டி வி டி வாங்கலை கவலைப்படாதீங்க...

=================================================================
19. பிரபாகரன் - என் மக்கள்  ( வாரிசுகள்)  இறந்தாலும் தமிழ் மக்களுக்காக போராடுவேன்.

கலைஞர் - தமிழ் மக்கள் இறந்தாலும் என் மக்களுக்காக ( வாரிசுகள்) போராடுவேன்.


=================================================================
20. மைனா படம் கற்றுக்கொடுத்த நீதி

லவ் பண்ணுங்க ,லைஃப் நல்லாருக்கும் - இந்த டயலாக் சொன்ன ஹீரோ படத்துல செத்துடறாரு,ஹீரோயின் செத்துடறா,இந்த அட்வைஸ் கேட்ட போலீஸ் ஃபேமிலியும் காலி..

அதனால் நான் சொல்றதை கேளுங்க லவ் பண்ணாதீங்க லைஃப் நல்லாருக்கும்.


=================================================================
21. டாஸ்மாக் நீதி - குடிகாரர்களின் முதல் சரக்கு அவர்கள் காசில் வாங்கப்பட்டதாகவே இருக்காது,ஓ சி சரக்காகத்தான் இருக்கும் நல்லா யோசிச்சு பாருங்க...

THE FIRST BEER OF EVERY PERSON WAS NOT BOUGHT ON THEIR OWN MONEY.

செயற்கை கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் - திரு நள்ளாறு சனி பகவான்

| Dec 30, 2010

இன்று பல நாடுகள் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.அவற்றில் செல்போன் பயன்பாடு,ராணுவ பயன்பாடு,உளவு...என்று பல்வேறு காரணங்களுக்கு செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன.

சில வருடங்களுக்கு முன்பு,ஒரு அமெரிக்க செயற்கைக்கோள் பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3வினாடிகள்
ஸ்தம்பித்து விடுகிறது.3வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க ஆரம்பித்துவிடுகிறது.எந்த வித பழுதும் செயற்கைக்கோளில்-அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது.இது எப்படி சாத்தியம்?என்பதை ஆராய்ந்தது.

கிடைத்த ஆய்வு முடிவு-நாசாவை மட்டுமல்ல..உலகத்தையே மிரள வைத்தது.ஆம்!நமது இந்து மதம் எவ்வளவு விஞ்ஞானபூர்வ மானது என்பதை நமக்கே உணர்த்தியுள்ளது.எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில்-இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள-புதுச்சேரியின் திருநள்ளாறு- ஸ்ரீதர்ப்பணேசவரர்   கோயிலுக்கு நேர் மேலே உள்ள வான்பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள் …தம்பித்துவிடுகின்றன.அப்படி ஸ்தம்பிப்பதற்குக் காரணம்.. ...ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புல்னாகாத கருநீலக்கதிர்கள் அந்தக் கோயில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன.2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும்-ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருக்கின்றன.விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்துவிடுகின்றன.அதே சமயம்,செயற்கைக்கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால்,இந்தக் கோவில்தான் இந்துக்களால் “சனிபகவான்”…தலம் என்று போற்றப்படுகிறது.ஆக,இந்துக்கள் உலகிலேயே அறிவுத்திறனும்,அறிவியலில் மிக நீண்ட பாரம்பரியமும் கொண்டவர்கள் என்பது இதன் மூலம் புலனாகிறது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு,நாசா விலிருந்து  பல முறை திருநள்ளாற்றிக்கு நேரில் வந்து பல ஆராய்ச்சிகள் செய்துவிட்டனர்.மனிதனுக்கு மீறிய சக்தி உண்டு என்பதினை உணர்ந்தனர்.அவர்களும் திருநள்ளாறு சனிபகவானை கையெடுத்துக் கும்பிட்டு வழிபட்டனர்.

இன்று வரையிலும்,விண்ணில் மனிதனால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் திருநள்ளாறு பகுதியைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்த்தம்பித்துக் கொண்டே இருக்கின்றன. இதைப் பற்றிய தகவல்கள் ஜூனியர் விகடனில் 2005 -06 வாக்கில் , வெளிவந்தது.

நாம் ஏன் நமது பெருமைகளை நமது சந்ததிகளுக்குச் சொல்லுவது இல்லை..?
-----   கை. வீரமுனி (ஆன்மீகக் கடல் )

தனியார் வங்கியில் உங்கள் பணம் உள்ளதா? .. உஷார்... சிட்டி பேங்க் 400 கோடி மோசடி

|
மிகப் பெரிய அளவிலான ஒரு வங்கி மோசடி ஹரியானா மாநிலம்  குர்கான் இல் நடந்துள்ளது. அங்குள்ள சிட்டி பாங்க்கில்  பணியாற்றும் ஊழியர் ஒருவர், வங்கிக் கணக்குகளிலிரு்து ரூ. 400 கோடியை தனது பெயருக்கு மாற்றி பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

மொத்தம் 20 கணக்குகளிலிருந்து பணத்தை எடுத்து அவர் இந்த மோசடியைச் செய்துள்ளார். இதுதொடர்பாக சிட்டி வங்கி சார்பில் போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது. போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து சிட்டி வங்கி செய்தித் தொடர்பாளர் வெளியி்ட்டுள்ள அறிக்கையில், கர்கான் கிளையில் சில கணக்குகளில் முறைகேடாக பணம் எடுக்கப்பட்டிருப்பது குறித்து புகார் வந்ததும் நாங்கள் விசாரணையைத் தொடங்கினோம். அதில்தான் இந்த நிதி மோசடி குறித்த விவரம் தெரிய வந்தது.

சிவராஜ் பாட்டீல் என்ற ஊழியர்தான் இதைச் செய்ததாக கண்டுபிடித்துள்ளோம். பல்வேறு வாடிக்கையாளர்களை அணுகி கவர்ச்சிகரமான திட்டங்கள் இருப்பதாக கூறி முதலீடு செய்ய வைத்து அந்தப் பணத்தையெல்லாம் இவர் சுருட்டியுள்ளார். அநத்ப் பணத்தை எடுத்து வேறு சில கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்துள்ளார்.
இப்படியாக 20 வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ. 400 கோடி வரை சுருட்டியுள்ளதை கண்டுபிடித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

சிட்டி வங்கியின் அறிவிப்புகள் என்று கூறி மோசடியான திட்ட அறிவிப்புகளை இவரே அச்சிட்டு அதை வாடிக்கையாளர்களிடம் காண்பித்து முதலீடு செய்யத் தூண்டியுள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும் செபியின் நோட்டீஸைப் போல போலியான ஒன்றையும் தயாரித்து இவர் வாடிக்கையாளர்களை ஏமாற்றிப் பணம் கறந்துள்ளார்.
தற்போது இந்த வழக்கை குர்கான்  போலீஸார் விசாரித்து வருகின்றனர். 420, 467, 468 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

செல்வ வளம் பெருக உதவும் லக்ஷ்மி கணபதி மந்திரம்

|


செல்வ வளம் பெருக உதவும் லக்ஷ்மி கணபதி மந்திரம்
பின்வரும் மந்திரத்தை தினமும் அரை மணி நேரம் வீதம் மூன்றுமாதங்கள் வரையிலும் ஜபித்து வந்தால் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் அடியோடு நீங்கி,செல்வ வளம் பெருகும்.
சதுர்புஜம் பாசதரம் கணேசம்
ததாங்குச தந்தயுக்தம் த்ரிநேத்ரம்
லம்போதரம் சர்பயக்ஞோபவீதம் கஜகர்ணம்
ரமயாசிஷ்ட பார்ஸ்வ பத்மமாலா
அலங்க்ருத விபும் சாந்தம் சுரகணசேவிதம்
லக்ஷ்மி கணபதிம் பாதபத்மம் பஜேஹம்

அணு அணுவாய் துடிக்க வைக்கும் கடன்... ஜோதிடம் என்ன கூறுகிறது?

|

 கடனாளி என்பது ஒவ்வொருவரின் ஜாதகத்தைப் பொறுத்தது. ஒரு சிலருக்கு கடன் வாங்குங்கள் என்று நாங்களே கூறுகிறோம்.
லக்னத்திற்கு 6க்குரியவனின் தசை என்று வைத்துக் கொண்டால் அவன் சத்ரு, நோய் , விபத்து, கடன் இவற்றைக் கொடுப்பான். 6க்குரியவன்தான் இவற்றுக்குக் காரணம். எனவே முதலிலேயே நாம் கடனை வாங்கி விட்டால் மற்றவைகளில் இருந்து தப்பிக்கலாம்.கிரகங்கள் எல்லாம் ஒன்றைக் கொடுத்துவிட்டால் மற்றவற்றை கொடுக்காது. எனவே 6க்குரிய தசையா, கடன் வாங்கி விடுங்கள். அதுவும் சுபக் கடனாக வாங்கி விட்டால் மற்றவற்றில் இருந்து தப்பி விடலாம்.வீடு, வாகனம் போன்றவை தவணை முறையில் பணம் கட்டுவது போல் கடன் வாங்கி விடுவதும் நல்லது. மாதா மாதம் பணம் கட்டும்போதெல்லாம் கஷ்டப்பட்டு கட்டுவது இந்த கிரகத்தின் அமைப்பாக இருக்கும்.அதேப்போல அஷ்டமத்து சனி, ஏழரை சனி போன்றவை நடக்கும்போது பல்வேறு கஷ்டங்களை அனுபவிப்பார்கள்.

அதாவது லி·ப்ட் கேட்டு ஏறியவன், கொஞ்ச தூரம் போனதும் கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தை, நகைகளை கொள்ளை அடிப்பது போன்றவை நடந்துள்ளது. சில நேரங்களில் வண்டியையே தள்ளிக் கொண்டு போனதும் உண்டு.எனவேதான் லி·ப்ட் தராதீர்கள், ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள் என்று சொல்கிறோம். குறிப்பிட்ட ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு காலக்கட்டம்தான் நெருக்கடியானது. அந்த காலத்தில்தான் இதுபோன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறோம்.

ஒருவர் இருக்கிறார். அவருக்கு நெருங்கிய நண்பர். ஒன்றாக படித்து வளர்ந்தவர்கள். ரொம்ப யோக்கியமானவர். அவரது நண்பருக்கு கேரண்டர் கையெழுத்து போட்டு கடன் வாங்கிக் கொடுத்தார். இவரது போதாத  காலம் அவரால் கடனைக் கட்டாமல் போக இவர் கட்ட வேண்டியதாகி, அவரது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு துணைவியார் பிரிந்து போக ஒரு குடும்பமே சின்னாபின்னமாகிவிட்டது.

எனவேதான் சில நேரங்களில் இதுபோன்ற கேரன்ட்டி  கையெழுத்துக்களை போடாதீர்கள், உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று சொல்கிறோம். யாருடனும் வம்பு தும்புக்குப் போகாமல் வாயைக் கிளறினாலும் பேசாமல் இருக்க வேண்டும் என்று கூறி அனுப்புகிறோம்.

சிலருக்கு அவர்களது நேரத்தின்படி, வந்தவர்களுக்கு உதவுங்கள். நண்பர்களுக்கு எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று கூறுகிறோம். சின்ன வயதில் உங்களுக்கு உதவியவர்களுக்கு கைமாறு செய்யுங்கள் என்றும் கூறுகிறோம்.

வில்வத்தின் மகிமைகள் - ஏழரை சனிக்கு சரியான பரிகாரம்

| Dec 29, 2010

வில்வ இலைக்கு அதிக சக்தி உண்டு. மருத்துவ ரீதியாக பார்க்கப் போனால் ஆண்களின் விந்தணு நீர்த்த தன்மையை போக்கும். விந்தணு நீர்த்த தன்மை பிரச்சினை இருப்பவர்கள் வில்வ இலையை சாப்பிட்டாலே போதும்.அதற்காகத்தான், அந்த காலத்தில் பெருமாள் கோயிலுக்கும், சிவன் கோயிலுக்கும் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று சொல்வார்கள். ஏனென்றால் பெருமாள் கோயிலில் கொடுப்பது துளசி, சிவன் கோயிலில் கொடுப்பது வில்வம். இவை இரண்டுக்குமே அதீத சக்தி உண்டு.பிரசாதங்கள் என்று கோயிலில் கொடுப்பவை அனைத்துமே மூலிகைகள்தான். ராஜ ராஜன் காலத்தில் எல்லாம் மூலிகைகளால் செய்யப்பட்ட சிவலிங்கங்கள் எல்லாம் உண்டு. சில கோயில்களில் எல்லாம் அபிஷேகங்கள் இருக்காது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள லிங்கம் மண்ணால் ஆனது என்றும் சொல்லப்படும். அதாவது மண்ணை மூலிகைச் சாறுகள், வில்வக் குழம்புகளை வைத்து செய்யப்பட்டது. அதனால்தான் அவற்றிற்கு அபிஷேகங்கள் செய்வதில்லை. 

 


வில்வத்தின் வடிவத்தைப் பார்த்தால் சிறப்பாக இருக்கும். மூன்றாகப் பிரிந்திருக்கும். சூலம் என்று எடுத்துக்கொடுக்கலாம். மூன்று தெய்வங்களை குறிப்பதாகவும், நங்கூரத்தின் வடிவிலும் இருப்பதாக கூறலாம். சாதாரணமாக சிவனுக்கு எத்தனை ரத்தினம் அணிவித்தாலும், வில்வத்தால் பூஜை செய்தால் அதீத சக்தி கிட்டும். வில்வத்திற்கு அவ்வளவு மகிமை.மேலும் நாம் தினமும் வில்வ பொடியை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நலம் கிட்டும். ரத்தத்தை சுத்திகரிப்பது, விந்தணு நீர்த்தத் தன்மை போன்ற பல பிரச்சினையை சீர் செய்யும். அம்மன் கோயிலில் கொடுக்கப்படும் வேப்பிலைக்கும் அதிக மருத்துவ குணம் உள்ளது.வில்வத்தால் சிவனை அர்சிக்கும்போது, சிவனோடு நாம் இன்னும் நெருங்க முடியும், சிவனின் அருளைப் பெற முடியும் என்று சொல்லப்படுகிறது.  எல்லாவற்றிற்கும் மேலாக, வில்வ  இல்லை அர்ச்சனை  ஏழரை சனிக்கு சரியான பரிகாரம் கூட. 

உங்கள் பாவத்தை குறைக்கும் - சதுரகிரி மகாலிங்க நாம ஜெபம்

|
உங்கள் பாவத்தை குறைக்கும் - சதுரகிரி மகாலிங்க நாம ஜெபம்
நீங்கள் மந்திரஜபம் எழுதுவதில் ஆர்வம் உள்ளவரா? அல்லது மந்திர ஜபம் எழுதுவதால் உங்களது பாவமூட்டையின் சுமை குறையும் என்பதில் நம்பிக்கையுள்ளவரா? ஆம் எனில்,
ஓம் சேவே ஸ்ரீமஹாலிங்கம் சிவாலிங்கிதம்
என்ற இந்த சதுரகிரி சுந்தரமகாலிங்க மந்திரத்தை 10,008 முறை எழுதி நேரில் ஒரு முறை சதுரகிரி சென்று சுந்தர மகாலிங்கம் சந்நிதியில் சமர்ப்பியுங்கள். நேரில் செல்ல இயலாதவர்கள்  பின்வரும் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.

ஒரு கட்டுரை நோட்டில் நீல நிறப்பேனாவில்/பந்துமுனைப் பேனாவாலும் எழுதலாம்.
இப்படி எழுதி அனுப்பப்படும் மந்திரஜப நோட்டுக்கள் ஒரு அமாவாசைதினத்தன்று சதுரகிரி ஸ்ரீசுந்தரமகாலிங்க சுவாமி சன்னிதியில் சமர்ப்பிக்கப்படும்.
நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
S.SUBRAMANIAM,H.No.8-43/16/1 Srinivasa Colony
Uppal post Hydrabad-500 039.
Mobile:08019197783,040-27200129.
நன்றி:திரிசக்தி 1-15,ஆகஸ்டு,2010.

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க உங்க கமபனி லெ?" - நியாயமான ஒரு கேள்வி

|
Laughter Yoga at SAP India, bangalore

"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?
நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.
நானும் விவரிக்க ஆரம்பிதேன்.
-
"
வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியணும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."

"
அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".
 
"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்கனு கேப்பாங்க. இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.

"
சரி"
-
இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants. ...".
 
இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.
காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?
ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா?அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.
 
அப்பா : "இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?

"MBA, MS-
னு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."
அப்பா : "முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?"
அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.
அப்பா : சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?”

அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்
அப்பா : "500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"

"
இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.
ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒண்ண நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு "ஐயோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.

"
அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.
-
"
இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.
-
அப்பா : "CR-னா?"
-
"Change Request.
இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."
-
அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.
 அப்பா : "இதுக்கு அவன் ஒத்துபானா?" -
"
ஒத்துகிட்டு தான் ஆகணும்.
முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"
அப்பா : "சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"

"
முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு." அப்பா : "அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."

"
அதான் கிடையாது.
இவருக்கு நாங்க பண்ற எதுவுமே தெரியாது."

அப்பா : "அப்போ இவருக்கு என்னதான் வேலை?" –
-
அப்பா குழம்பினார்.

"
நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பான்னு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறதுதான் இவரு வேலை."
-
"
பாவம்பா"

"
ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."
அப்பா : "எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"

"
ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."
-
அப்பா : "நான் உன்னோட அம்மா கிட்ட பண்ற மாதிரி?!"
 
"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."
-
அப்பா : "இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"

"
வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர் வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."
அப்பா : "அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே?   அவங்களுக்கு என்னப்பா வேலை?"
"
இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை.
அப்பா : புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம்கறது மாதிரி."
"
ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?

"
அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"
 
அப்பா:  "கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"

"
கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."
-
அப்பா : "எப்படி?"

"
நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை." இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம்.
அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".
அப்பா : "சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"

"
அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்."

"
அப்புறம்?"

"
ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒண்ண பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."
-
"
அப்புறம்?"

"
அவனே பயந்து போய்,
"
எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒண்ணு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு" புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க."
இதுக்கு பேரு "Maintenance and Support". இந்த வேலை வருஷ கணக்கா போகும்.

"
ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.

அப்பா  :  "எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுச்சிப்பா."

2 வேளையும் பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறைவு...!

|
காலை, மாலை இரு வேளையும் பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதயத்தில் ரத்தம் உறையும் நோய் ‘த்ராம்போசிஸ்’ எனப்படுகிறது. இதுபற்றி ஆய்வு செய்யும் நிறுவனம் லண்டனில் உள்ளது.

 kid2.jpg
மாரடைப்பு, ஸ்டிரோக் வருவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்நிறுவனம் ஒரு ஆராய்ச்சி நடத்தியது. அதில் தெரியவந்த தகவல்  : உடலில் தேவையற்ற கொழுப்பு, லிப்பிட் பொருட்கள் அதிகமானால் ரத்தக்குழாயில் அவை படிகின்றன. ரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்பை ஏற்படுத்துகின்றன என்று பல காலமாக கூறப்பட்டு வருகிறது.

கொழுப்பு, லிப்பிட் மட்டுமல்ல.. வைரஸ் கிருமிகள் மற்றும் நோய்த் தொற்றுகளால்கூட மாரடைப்பு ஏற்படும். பெரும்பாலும் கிருமித் தொற்று பல்லில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. வாய் வழியாக வயிற்றுக்குள் போய்விடும் உணவுப் பொருட்கள் செரிக்கப்பட்டு சக்தியாகவும் சத்துகளாகவும் மாறுகின்றன. பல்லில் படியும் உணவுத் துகள்கள் கிருமிகளாக மாறுகின்றன.
ஒழுங்காக பல் தேய்க்காவிட்டால் இவை உள்ளே சென்று படிப்படியாக மாரடைப்பு உள்பட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். தினமும் 2 வேளை பல் தேய்த்தால் மாரடைப்பு, ஸ்டிரோக் வரும் வாய்ப்பு 60 முதல் 70 சதவீதம் வரை குறையும். இதயம் பலமாக இருக்கும்.இவ்வாறு இதய நிபுணர்கள் கூறுகிறார்கள் .

வாழ்வில் ஒரு முறையேனும் கண்டிப்பாக செல்ல வேண்டிய ஸ்தலம் - நவபிருந்தாவனம்

| Dec 28, 2010தமிழ்நாட்டில் இருந்து மும்பை எக்ஸ்பிரஸில் மந்திராலயம் செல்ல பயணச்சீட்டு எடுக்க வேண்டும்.மந்திராலயம் இறங்கினால் அங்கு மட்டுமே தங்கும் வசதிகள் உள்ளன.அங்கிருந்து 6மணி நேரம் பேருந்து பயணம் சென்றால் நவபிருந்தாவனம் சென்றடையலாம்.துங்கபத்ரா நதிக்கரையில் நவபிருந்தாவனம் அமைந்துள்ளது.இங்கு 9 மகான்கள் ஜீவ சமாதியடைந்துள்ளனர். இந்த இடம் ஒவ்வொரு யுகத்திலும் சில வரலாற்றுச் சம்பவங்கள் நிகழ்ந்த இடமாக உள்ளது.
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை ஆஞ்சேநேயர் முதன் முதலில் தரிசித்த இடமும் இதுவே.

ஒருமுறை சென்று வந்த சில வாரங்களில் உங்களது நீண்ட கால பிரச்னைகள் தீர்ந்து விடுகின்றன.இந்த அனுபவம் பல ஆயிரம் தமிழ்மக்களுக்கு கிடைத்துள்ளது.

இன்னும் சுலப வழி என்னவென்றால் இந்த புகைப்படத்தை உங்கள் வீட்டுப் பூஜை அறையில் வையுங்கள்.தினமும் இந்த புகைப்படத்திற்கு தனியாக நெய்தீபம் ஏற்றி வாருங்கள்.45 நாட்கள் இப்படி செய்து வந்தால் மள மளவென உங்கள் பிரச்னைகள் தீர்வதை உணரலாம்.


இலங்கைத்தமிழர்களும்,மலேசியத்தமிழர்களும்,காஷ்மீர் பண்டிட்களும் நிம்மதியாக வாழ நவபிருந்தாவனத்து மகான்களை பிரார்த்திப்போம்.
திருச்சிமுதல் ஓசூர் வரை வாழும் வட தமிழகத்து மக்கள் பெரும்பாலானோர் டூரிஸ்டாக நவபிருந்தாவனம்,அஹோபில மடம், மந்திராலயம் சென்று வருகின்றனர்.இம்மூன்றும் மிக புனிதமான ஆலங்களாக முக்கோணதூரத்தில் அமைந்துள்ளது. மந்திராலயம் ஸ்ரீஇராகவேந்திரர் மகானுடைய ஜீவ சமாதியாகும்.

சித்தர்களை நேரில் தொடர்புகொள்ளும் ரகசியம்...

|
இது 90 நாட்கள் தொடர்பயிற்சி...
தேவையானவை:
குறைந்தது 10 சதுர அடி கொண்ட ஒரு தனிஅறை
ஒரு குத்துவிளக்கு அல்லது சிறிய தீபம் எரியும் கிண்ணம் அதாவது கிளிஞ்சட்டி
தாமரை நூல் திரி மற்றும் சுத்தமான பசு நெய்(பாக்கெட் நெய் வேண்டாம்).ஒரு காசி சொம்பு,சுத்தமான நீர்.(வீட்டில் நிறைகுடத்திலிருந்து தினமும் தண்ணீர் முதலில் எடுக்கவும்).தினமும் சில பழங்கள்.
அமாவாசையன்று ஆரம்பிக்கவும்.இரவு சரியாக 8 மணிக்கு மந்திர ஜபம் ஆரம்பிக்க வேண்டும்.இரவு 9 மணிக்கு முடித்துவிட வேண்டும்.

அகத்தியர் சித்தர்களின் தலைவர்.நந்தீசர்,திருமூலர்,கொங்கணர்,கோரக்கர்,புலிப்பாணி, காகபுஜீண்டர் என பல ஆயிரம் சித்தர்கள் உள்ளனர்.உங்களுக்கு யாரைப் பிடிக்கின்றதோ அந்த சித்தரை-அவர் உருவம் நமக்கு தெரியாதல்லவா? எனவே அவரது பெயரை நினைத்துக் கொண்டு கீழ்க்காணும் மந்திரத்தை ஒரு மணி நேரம் தொடர்ந்து ஜபித்து வரவேண்டும்.

ஒம் சிங் ரங் அங் சிங்

இது தான் சித்தர்களை நேரில் வரவைக்கும் மந்திரம்.ஞானக்கோவை என்ற புத்தகத்தில் இந்த மந்திரம் கூறப்பட்டுள்ளது.
ஜபம் செய்யும் முறை:
அமாவாசையன்று இரவு 8 மணிக்குள் 10 சதுர அடி உள்ள அறையில் ஒரு விரிப்பு அல்லது பலகையை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமைக்கவும்.அதிலிருந்து 8 அடி தூரத்தில் நமது கண்களுக்கு நேராக வருமாறு நெய்தீபம் தாமரைநூலில் எரியவேண்டும்.அந்த தீபத்தின் முன்பக்கம் காசிச்சொம்பில் சுத்தமான நீர் நிரப்ப வேண்டும்.அந்த காசிச்சொம்பின் முன்பக்கமாக பழங்களை நிவேதனமாக வைக்க வேண்டும்.
இரவு 8 மணியானதும் அந்த தீபத்தைப் பார்த்தவாறு நாம் விரும்பும் சித்தர் பெயரை நினைத்துக்கொண்டு மேலேக் கூறிய மந்திரத்தை உதடு அசையாமல் ஒருமணிநேரம் வரை ஜபித்துவரவேண்டும்.இப்படி தினமும் ஒருமணிநேரம் வீதம் 90 நாட்கள் ஜபித்துவர நமது சித்தர் நேரில் வருவார்.அவரை குருவாக ஏற்றுக்கொண்டு நிம்மதியாக வாழவும்.
9 மணியானதும் காசிச்சொம்பில் உள்ள நீரைப்பருகவும்.படையல் செய்த கனிகளைச் சாப்பிடவும்.இரவில் பால்சாதம் சாப்பிடவும்.
இந்த 90 நாட்களில் அசைவம் கண்டிப்பாக தவிர்க்கவும்.உணவில் உப்பு,காரம்,புளி குறைத்துக்கொண்டால் நல்லது.
இந்த முறையால் பல ஆயிரம் மனிதர்கள் பூமியில் சித்தர்களை தரிசித்துள்ளனர்.இன்றும் தரிசித்து வருகின்றனர்.
ஜாதி,மதம்,மொழி கடந்து யாரும் சித்தர்களை தரிசிக்கலாம்.
18 வயதுக்கு மேற்பட்ட யாரும் முயற்சிக்கலாம்.
வாழ்க வளமுடன்! உயர்க சித்தர்கள் அருளால்!!!
குறிப்பு: இந்த முயற்சி,சித்தர் சந்திப்பை ரகசியமாக வைத்துக்கொள்வது அவசியம்.தம்பட்டம் அடிக்கக் கூடாது.
உலகில எந்தப்பகுதியில் இருந்தாலும் ,வாழ்ந்தாலும் அந்தந்தப்பகுதியில் இரவு 8 மணிக்கு ஆரம்பிக்கவேண்டும்.
--------------------------------
நன்றி : கை. வீரமுனி

நான் ரசித்த பாடல்கள்... (2)

| Dec 27, 2010
இந்தப் பாடல்... கொஞ்சும் குரல் ஜென்சி யோடது... வாலி சார் எழுதிய பாடல். கடவுள் அமைத்து வைத்த மேடை படம்...  கேட்டுப் பாருங்க... படார்னு பஞ்சர் ஆயிடுவீங்க...

பாடல் வரிகள் :
மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ

மயிலே மயிலே...மயிலே மயிலே

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ

மயிலே மயிலே...மயிலே மயிலே

தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
நீ அணைக்க நான் இருக்க...நாள் முழுக்க தேன் அளக்க
கனி வாய் பல நாள் நினைவே
வரவா தரவா பெறவா...நான் தொடவா

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ

மயிலே மயிலே...மயிலே மயிலே

மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க
மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க
பூங்குழல் தேனருவி...தோளிரண்டும் நான் தழுவி
வரும் நாள் ஒரு நாள் அதுதான் திருநாள்
உறவாய் உயிராய் நிழலாய்...நான் வருவேன்

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ

மயிலே மயிலே...மயிலே மயிலே

நான் ரசித்த பாடல்கள்... (1)

|
சில பாடல்களை கேட்டால்தான்  சுகம் வரும். சிலவற்றை நினைத்தாலே போதும்.. கிறங்க அடிக்கும். அந்த வகையில் இளையராஜாவின் இந்த பாடல் ...
அது இசைக்கா.. இல்லை பாடல் வரிகளுக்கா... கேட்டுப் பாருங்கள்...
இந்த வகையில் நமது நண்பர் விவேகா  ' நான் ரசித்த பாடல்கள் ' என்ற தலைப்பில் தொடர் பதிவு இட இருக்கிறார்... உங்கள் விமர்சனங்கள் , கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள். உங்களுக்குப் பிடித்த பாடல்களை கேட்டால்.. அவற்றையும் பதிவிட முயற்சி செய்கிறோம். ....
லண்டனில் வசிக்கும் நண்பர் பிரேம் ராஜ் .. கவனிப்பாராக  ....
பாடல் வரிகள்:
சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையொடு என்
முன்னே யார் வந்தது
தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது

கையென்றே செங்காந்த மலரே
நீ சொன்னால் நான் நம்பவோ
கால் என்றே செவ்வாழை இலைகளை
நீ சொன்னால் நான் நம்பி விடவோ
மை கொஞ்சம்.......
பொய் கொஞ்சம்........
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்திலே....

அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம் தா..அ...
கொஞ்சம் தா..ஆ..
கண்ணுக்குள் என்னென்ன நளினம்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்திலே

ஆடை ஏன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது
நாளைக்கே ஆனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்
கை தொட்டு...ஆ
மெய் தொட்டு..ஆ
சாமத்திலே தூங்காத விழிகளில்
சந்தித்தேன் என்னென்ன மயக்கம்

தமிழ் சங்கத்திலே பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்ததுநீங்கள் கோடீஸ்வரராக வேண்டுமா..? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?

|
1.ஒவ்வொரு தமிழ்மாதத்திலும் ஏதாவது ஒரு திங்கள் கிழமையன்று திருப்பதி சென்று ஸ்ரீவெங்கடாஜலபதியை தரிசிக்க வேண்டும்.அங்கு எப்போதும்   கூட்டமாக இருக்கும் இல்லையா? நீங்கள் திங்கட்கிழமையன்று பெருமாளை தரிசித்துவிட வேண்டும்.இப்படி 12 திங்கட்கிழமைகள் அதாவது ஒருவருடம் வரை ஸ்ரீபாலாஜியை தரிசிக்க வேண்டும்.இப்படி செய்தால் நீங்கள் கோடீஸ்வரராவது உறுதி. 


money

உங்களது பிறந்த ஜாதகத்தில் கோடீஸ்வரயோகம் இல்லாவிட்டாலும் கோடீஸ்வரர் ஆவது நிச்சயம் என்பது அனுபவ உண்மை.நீங்களும் ஒருமுறை டெஸ்ட் செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.

2.அமிதிஸ்டு என்ற ரத்தினம் அதாங்க ஜெம் நகைக்கடைகளில் கிடைக்கிறது.இந்த ரத்தினத்தின் பூர்வீகம் அமெரிக்கா.இந்தக்கல் இருக்கும் இடத்தில் வீண் செலவுகள் குறையும்.பணம் சேமிக்கும் காந்த அலைகளை இது வெளியிடுகிறது. இது ஒரு காரட் ரூ.100 அல்லது அதைவிடக் குறைவாகத்தான் இருக்கும்.குறைந்தது 10 காரட் வாங்கி பணம் வைக்குமிடத்தில் வைக்கவும்.உங்களது மணிபர்ஸிலும் வைக்கலாம்.நிறைய பணம் மிச்சமாகும்.

3.ஒவ்வொரு வருடமும் கார்த்திகைமாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று மாலை 4.30 மணிக்கு திருஅண்ணாமலையில் உள்ள குபேரலிங்கம் சன்னதிக்கு வருக!!! அங்கு நடக்கும் நித்ய பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு , கிரிவலம் செல்ல வேண்டும். குபேர லிங்கத்தில் தொடங்கி , குபேர லிங்கத்தில் கிரிவலம் முடித்து , பின்பு உங்கள் இல்லம் திரும்ப வேண்டும்.
வீட்டில் மாதம் தோறும் குபேரபூஜை அல்லது மகாலட்சுமி பூஜை செய்து வருக!

அண்ணாச்சி ஹோட்டல் லெ " சிக்கன்-65 " சாப்பிடுற ஆளா நீங்க? - ஒரு நிமிஷம் கவனிங்க...

| Dec 23, 2010
சமீபத்திலே நம்ம நண்பர் ஒருத்தர் இத்தாலி க்கு - வேலை சம்பந்தமா ஒரு 6 மாசம் போயிட்டு வந்தார். சாப்பாடு எல்லாம் எப்படி னு கேட்டேன்? பாஸு, வாயிலே வைக்க முடியாது. எத்தனை நாளு தான் பீட்சா சாப்பிடுறது..   நொந்துட்டேன். நல்ல வேளை.. பக்கத்துலே ஒரு பாகிஸ்தானி ரெஸ்டாரன்ட் இருந்தது.. அவர் கிட்டே சொல்லி நம்ம ஊரு சாப்பாடு , சிக்கன் . முட்டை னு சாப்பிட்டேன். அது கூட யாருக்கும் தெரியாம, ஏதோ திருட்டுத் தனம் பண்ற மாதிரி தான் சாப்பிட்டேன். "ஏன்" னு கேட்டேன்? 
அங்க இருக்கிற மெனு தவிர வேற ஏதும் சமைக்க கூடாதாம். அதுலேயும், என்ன ஐட்டம் எவ்வளவு அளவு, அதை எவ்வளவு நேரம் செய்யனும். என்ன ஆயில் , அந்த food அவ்வளவு கலோரி தரும் - எல்லாத்தையும் , சார்ட் போட்டு ரெஸ்டாரன்ட் லைசென்ஸ் எடுக்கும்போதே கொடுக்கணுமாம்.  அடிக்கடி ஆபீசர்ஸ் வந்து செக் பண்ணுவாங்களாம். யாரது ஒருத்தர் இவர் கிட்டே சாப்பிடதுனாலே தான்  ஏதாவது வியாதி வந்துச்சு னு  தெரிஞ்சது , சுளுக்கு தான். கம்பி எண்ணிக் கிட்டே இருக்க வேண்டியதுதான். அட்டெம்ப்ட் மர்டர் கேஸ் ஆம். நம்ம ஊரைப் பத்தியும் நினைச்சுப் பார்த்தேன். ம்ஹூம்... இந்தியா வல்லரசு ஆகப்  போகுது னு சொன்னா மட்டும் போதாதுங்க ... மக்களை பத்தி அக்கறை பட வேண்டிய அரசாங்கமும் வேணும்... நாமளும் கொஞ்சம் திருந்தனும்... இங்கே நடந்த ஒரு சம்பவத்தை பாருங்க....

 இன்னைக்கு சரக்கு அடிக்காத மனுஷங்களை ஏதோ வேற்றுக் கிரக வாசிங்க மாதிரி பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.. சைடு டிஷ் க்கு - சிக்கன் இல்லாத நாளே இருக்காது... இதைப் படிச்ச பிறகாவது கொஞ்சம் திருந்துவோம்... நம்மளை நம்பி குடும்பம் னு ஒன்னு இருக்கே...
 ------------------------------------------

photo
ராகவனுக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. அவருக்கு கேன்சர் என்று மருத்துவர்கள் சொன்னதும், ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து போனது. காரணம் ராகவனிடம் மது, புகை என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லை. பிறகு எப்படி கேன்சர்? தலையைப் பிய்த்துக்கொண்ட மருத்துவர்கள் கடைசியாக அவரது உணவுப் பழக்கத்தை ஆராய்ந்தபோதுதான் உண்மை தெரியவந்தது. அசைவப்பிரியரான ராகவன் தினமும் சாப்பாட்டில் சிக்கன் 65 இல்லாமல் சாப்பிடவே மாட்டாராம். அதுவும் செக்கச் சிவந்த நிலையில் மொறு மொறுவென்று இருக்கும் சிக்கன் 65ஐத்தான் விரும்பிச் சாப்பிடுவாராம். அதுதான் அவரது கேன்சருக்குக் காரணமாம். எப்படி? பளிச்சென்று தூக்கலாகத் தெரிவதற்காக சிக்கனுடன் சேர்க்கப்படும் அந்த சிவப்பு நிற கெமிக்கல் பவுடர்தான் அந்த கேன்சருக்கு முழுக்காரணம்.

இந்த கெமிக்கல் கலந்த சிக்கன் 65 சாப்பிடுவதால் வயிற்றில் கேன்சர், சிறுநீரகக் கோளாறு. மரபணுக்களில் பாதிப்பு போன்ற நோய்கள் உண்டாவதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.உணவுப் பொருட்களில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள் பற்றியும், பயன்படுத்தக்கூடாத நிறங்கள் பற்றியும் நெல்லை மாநகராட்சியின் உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் பேசும்போது :

உணவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள், பயன்படுத்தக்கூடாத செயற்கை நிறங்கள் என உண்டு. இந்தியாவில் 8 வகையான செயற்கை நிறங்களை மட்டுமே உணவுப் பொருட்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறங்களும் குறிப்பிட்ட அளவு. அதாவது 10 கிலோ உணவுப் பொருளுக்கு 1 கிராம் மட்டுமே சேர்க்க அனுமதி. ஆனால் இதை யாரும் கடைப்பிடிப்பதில்லை. அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் செயற்கை நிறங்களைச் சேர்த்தால் உடலுக்குக் கேடுதான். எடுத்துக்காட்டாக, உணவில் சிவப்பு நிறம் கொடுக்க பயன்படுத்தப்படும் எரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக் கழலை நோய் (goItre) வரும். இந்த செயற்கை நிறங்களும் இனிப்பு வகைகளில் மட்டுமே சேர்க்க அனுமதி. கார வகையான உணவுகளில் சேர்க்க அனுமதி கிடையாது.

பொன்சியூ4.ஆர்., எரித்ரோசின் பயன்படுத்தினால் சிவப்பு நிறம் கிடைக்கும். பிரில்லியண்ட் புளூ, இண்டிகோ கார்மைன் பயன்படுத்தினால் ஊதா கலர் கிடைக்கும். இந்த மாதிரியாக கிடைக்கக் கூடிய எட்டு வகையான கலர்களை ஐஸ்கிரீம் ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் என ஏழு வகையான உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி.

கார வகையான உணவுப் பொருட்களில் செயற்கை வண்ணங்களை கண்டிப்பாகச் சேர்க்கக்கூடாது. ஆனால் நமது மக்களின் மனதில் உணவைவிட உணவின் கலர்தான் பளிச்சென்று பதிந்து இருக்கிறது. சிக்கன் 65 என்றால் சிவப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது சிக்கன் 65 என்ற முடிவில் மக்கள் இருக்கிறார்கள். மக்களின் மனதிற்கேற்ப வியாபாரிகளும் சிக்கன் 65 நிறத்தைக் கூட்டி, ஆபத்தை அறியாமலேயே வியாபாரம் செய்கின்றனர்.

சிக்கன் 65-ல் செயற்கை வண்ணங்களைச் சேர்ப்பதே தவறு. அதிலும் அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணங்களை அளவுக்கு அதிகமாக சேர்க்கின்றனர். எடுத்துக்காட்டாக சூடான் டை, மெட்டானில் எல்லோ கெமிக்கல்களைச் சேர்த்து துணிகளுக்கு சாயம் ஏற்றுவார்கள். இன்று இதனை சிக்கன் 65யுடன் சேர்த்து விடுகின்றனர். இப்படி சேர்ப்பதால் சிக்கன் 65 ரெட் கலரில் பளிச்சென்று தூக்கலாகத் தெரியும். இதைச் சாப்பிடுவதால் குடல்கேன்சர், சிறுநீரகக் கோளாறு, மரபணுக்களில் கோளாறு என கொடிய நோய்களை உண்டாக்கி விடுகிறது.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் சூடான் டையை உணவில் பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர். செயற்கை நிறம் கொடுக்கக் கூடிய சூடான் டை கலந்த உணவை எலிகளுக்குக் கொடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் எலிகளின் சிறுநீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகியதாம்.இப்படி உணவுப் பொருளில் கலப்படம் செய்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் உணவு தடைச்சட்டத்தின் பிடியிலிருந்தும் ஈஸியாகத் தப்பி விடுகின்றனர்.

உணவுக் கலப்பட வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர் காந்திமதிநாதன் கூறும்போது: ஃபுட்கலர்ஸ் விற்பவர்கள் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அந்த ஃபுட்கலர்ஸ் உணவுப் பொருட்களில் கலந்து உணவுப் பொருட்களுக்கு நிறத்தைக் கொடுத்த பின்புதான் அது குற்றமாகிறது. கலப்பட உணவுப் பொருட்களின் மீது வழக்குத் தொடரவேண்டுமானால் முதலில் தயாரித்து வைத்த உணவுப் பொருட்களை மூன்று பாகங்களாக சாம்பிள் எடுக்க வேண்டும். முதல் பாகத்தை உடனடியாக கெமிக்கல் லேபுக்கு அனுப்பி கலப்படத்தை உறுதி செய்து, ரிப்போர்ட் வாங்கி அந்த அடிப்படையில் வியாபாரியின் மீது வழக்குத் தொடரவேண்டும். மீதமுள்ள இரண்டு பாகமும் சுகாதார அதிகாரியின் கட்டுப்பாட்டில் வைத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது சுகாதார அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ள உணவுப் பொருளின் இரண்டு பாகங்களை நீதிமன்றம் மூலம் மத்திய பகுப்பாய்வுக் கூடத்திடம் ரிசல்ட் கேட்கவேண்டும். அந்தச் சூழ்நிலையில் கண்டிப்பாக உணவுப் பொருள் கெட்டுப்போய்த்தான் இருக்கும். மத்திய பகுப்பாய்வுக் கூடத்தால் சரியான ரிசல்ட்டை கொடுக்க முடியாது. இதனால் வழக்கு நிற்காமல் அடிபட்டு விடும்.


எடுத்துக்காட்டாக சூடான் 'டை' யால் நிறம் ஊட்டப்பட்ட சிக்கன் 65ஐ சாம்பிள் எடுத்து கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் என்ற கெமிக்கலை சிக்கன்-65 மீது ஊற்றி வைப்பார்கள். அந்த கெமிக்கல் சிக்கன் 65யின் முழுப்பகுதியையும் அடைய வாய்ப்புக் குறைவு. அப்படி கெமிக்கல் படாத இடம் முதலில் கெட்டுப்போய் மொத்த சிக்கன் 65ஐயும் கெட்டுப்போகச் செய்து விடுகிறது. அதனால் அதிலிருந்து சரியான ரிசல்ட் எடுக்க முடியாமல் போய் விடுகிறது.உணவுக் கலப்பட சட்டத்தைப் பொறுத்தமட்டில் வியாபாரிகளுக்கும், சில பங்களிப்பு இருப்பதால் வியாபாரிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர்'' என்கிறார். அதனால் தேவையற்ற கெமிக்கல் கலர் பொடிகள் சேர்த்த சிக்கன்களைத் தவிர்ப்பது ஒன்றே இதற்குத் தீர்வு?

கேன்சர் ஆபத்து!

இது குறித்து சென்னையைச் சேர்ந்த பிரபல குடல்நோய் நிபுணர் டாக்டர் சதீஷிடம் கேட்டபோது: ``சிக்கன் 65ல் சேர்க்கப்படும் நிறத்தால் உடனடி பாதிப்பாக நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை அதிகரிப்பால் இரைப்பை அழற்சி ஏற்படும். நீண்ட நாட்கள் அதைச் சாப்பிட்டு வந்தால் பெருங்குடலில் கேன்சர், சிறுநீரகப் பாதிப்பு உண்டாகும். தொடர்ந்து சிறுநீரகத்திலிருந்து ரசாயன நச்சுப் பொருட்கள் ரத்தத்தோடு கலந்து சிறுநீர்ப் பைக்கும் செல்லும். அங்கே ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப் பையில் புற்றுநோய் வரும் ஆபத்து உண்டு. கழுத்தில் கழலை, மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது' என்று எச்சரிக்கிறார்.

பி.கு.:

என்ன நண்பர்களே....அதிர்ச்சியாக உள்ளதா? இந்த மேட்டர், ஏதோ பத்திரிக்கையிலோ, பதிவிலோ வந்தது போலத் தெரிகிறது. எதுவாக இருந்தாலும், எழுதியவர்களுக்கும் பகிர்ந்தவர்களுக்கும் நன்றி. இதையும் நீங்கள் உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.  இந்தியாவில் உணவுக்கான வண்ணங்கள் அளவு மீறிப் பயன்படுத்தப்படுவதும், தடை செய்யப் பட்ட வண்ணங்கள் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. இது சரியான முறையில் கண்காணிக்கப்படுகிறதா என்று தெரியவில்லை. சிறு நகரங்களில் இது இன்னும் கேள்விக்குரியது.

இந்நிலையில் நாம்தான் எச்சரிக்கையோடு பளிச்சென்று வண்ணங்கள் நிறைந்த உணவுப்பொருட்களைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். கோபி மன்சூரியன், பஜ்ஜி, சில்லி சிக்கன் போன்றவை மீதும் எனக்கு சந்தேகம் உண்டு.

அகஸ்தியரை நேரில் தரிசிக்க முடியுமா?

| Dec 21, 2010
நீங்கள் திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பழக்கம் இருந்தால், கிரிவலப் பாதையில் அகஸ்திய ஆசிரமம் உள்ளது. ஒவ்வொரு மாதமும் அகஸ்திய விஜயம் என்ற மாத இதழை விற்பனை செய்கின்றனர். அவர்களின் நிறைய இதழ்கள் , வெளியீடுகள் - ஆன்மிகத் தேடல் உள்ளவர்களுக்கு நல்ல தீனியாக உள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போது நீங்களும் வாங்கிப் படித்துப் பாருங்கள்.

நீங்கள் நாடி ஜோதிடம் எப்போதாவது பார்த்து இருக்கிறீர்களா? தமிழ் நாட்டில் இப்போது எத்தனையோ போலிகள் வந்து விட்டார்கள். அகஸ்தியர், வசிஷ்டர் என்று நிறைய நிறைய நாடி ஜோதிட நிலையங்கள் வந்துவிட்டன. ஆனால் உங்களுக்கான நாடி கிடைத்துவிட்டால், உங்கள் பெருவிரல் ரேகை மட்டுமே வைத்து உங்கள் பெயர், அப்பா, அம்மா பெயர் , பிறந்த நட்சத்திரம் , வருடம் என்று ஜாதகமே கணித்துவிடுகிறார்கள். இது வரை ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால் அதன் பிறகு.... எல்லோரும் ஒரே பார்முலா  தான். யாரவது, நல்ல , பக்காவான நாடி ஜோதிடர்கள் உள்ளார்களா என்று நண்பர் வட்டாரத்தில் விசாரித்துக் கொண்டிருந்தபோதுதான் எதேச்சையாக , ஒரு அகத்திய விஜயம் இதழ் கிடைத்தது.
உங்களுக்கு அகஸ்திய  தரிசனம்  வேண்டுமா?  கீழ்க்கண்ட முறையை பின்பற்றுங்கள் என்று... ... எனக்கு மிகவும் தெரிந்த நண்பர்ஒருவர் இதைச் செய்ய ஆரம்பித்தார். அவருக்கு அகஸ்திய தரிசனம் கிடைத்ததா இல்லையா என்று தெரியவில்லை. அதைப் பற்றி கூற மறுத்துவிட்டார்.. ஆனால் அவரது நடவடிக்கையில் நிறையவே நல்ல மாற்றங்களை உணர முடிகிறது.  விருப்பம் உள்ள அன்பர்கள் பின்பற்றிப் பாருங்கள்


கீழ்க்காணும் மந்திரத்தை தினமும் காலை அல்லது இரவில் 108 முறை ஜபிக்கவும்.
ஒரு வெள்ளைத்துண்டினை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.அதை தினமும் காலை 4.30 மணிமுதல் 6.00 மணிக்குள் ஏதாவது ஒரு மணி நேரம் (4.30 டூ 5.30 அல்லது 5.00 டூ 6.00 இப்படி) அல்லது இரவு 8 மணி முதல் ஏதாவது ஒரு மணி நேரம் இந்த வெள்ளைத்துண்டினை விரித்து அதில் அமர்ந்து, விநாயகரை நினைத்துவிட்டு,இந்த அகத்திய தியானத்தை 108 முறை ஜபித்துவரவும்.45 நாட்களில் அகத்தியரை நேரில் அல்லது கனவில் சந்திக்கலாம்.
நாம் முற்பிறவிகளில் கடுமையான பாவம் செய்திருந்தால்,இந்த கட்டுரையைக்கூட வாசிக்கும் சந்தர்ப்பம் அமையாது;ஓரளவு பாவம் செய்திருந்தால் கனவில் அகத்தியர் தோன்றுவார்.அல்லது நேரில் வருவார்.
மந்திரம்:
ஓம் சிம் பம் அம் உம் மம் மகத்தான அகத்தியரே
என் குருவே வா வா வரம் அருள்க
அருள் தருக அடியேன் தொழுதேன்.

இந்த 45 நாட்களில் தெரியாமல் கூட அசைவம் சாப்பிடக்கூடாது.மது கூடாது.துக்க,ஜனன வீடுகளுக்குச்செல்லக்கூடாது.இந்த தியானத்தை முடித்தப்பின்னர் வேண்டுமானால் மனைவியுடன் கூடலாம்.முறையற்ற உறவைத்தவிர்க்க வேண்டும்.
கடும் பாவம் சிலர் முற்பிறவிகளில் செய்திருந்தால்,45 நாட்களுக்கும் மேலாக தியானம் செய்ய வேண்டும்.
பெண்களும் இந்த தியானத்தை மேற்கொள்ளலாம்.அவர்கள் தீட்டுநாட்கள் 5 நாட்கள் வரை அகத்திய தியானத்தைக் கண்டிப்பாக தவிர்க்கவும்.

அகத்தியரை நேரில் தரிசிக்கும் பாக்யம் பெற்றவர்கள்,முதலில் அவரை கையெடுத்துக்கும்பிட வேண்டும்.பிறகு, அவரது கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவேண்டும்.
ஒளிரும் தங்க நிறத்தில் 4 அல்லது 5 அடி உயரத்தில் தங்க நிற தாடியும்,ஜடாமுடியும் வைத்திருப்பார்.

பொதுவாக கும்ப ராசி மற்றும் கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு விரைவில் அகத்திய சித்தரின் தரிசனம் கிட்டும்.
முற்பிறவிகள் ஒன்றில் அகத்திய வழிபாடு செய்திருந்தாலும், அகத்தியருக்கு கோவில் கட்டியிருந்தாலும்,அகத்தியரின் புகழைப் பாடியிருந்தாலும், ஏராளமான புண்ணியம் செய்திருந்தாலும் விரைவில் அகத்திய தரிசனம் கிட்டும் என்பது நிஜம்.
அகத்திய மகரிஷியை தரிசியுங்கள்; என்னை சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள் குருதேவா என வேண்டுங்கள்.அதை விட பிறவிப்பயன் வேறில்லை;

ஒற்றைத் தலைவலி நீங்க சிறந்த மருந்து

|
அகன்ற சிறகாக உடைந்த இலைகளை உடையது சுண்டை. வெள்ளை நிறமான பூங்கொத்துக்களையும், கொத்து கொத்தான உருண்டை வடிவமான காய்களையும் உடைய முள்ளுள்ள சிறு செடி இனம். காய் சற்று கசப்புச் சுவை உடையது. காய் வற்றலாகக் கடைகளில் கிடைக்கும். காயே மருத்துவக் குணம் உடையது. வீட்டுத் தோட்டங்களிலும் வளர்ப்பதுண்டு. மலைக் காடுகளிலும் இது தானாகவே வளர்வதுண்டு. இந்த வகை சுண்டையை மலைச் சுண்டை என்பார்கள். கோழையை அகற்றவும், வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும் மருத்துவக் குணம் உடையது.

மருத்துவக் குணங்கள்:
பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி வெளியேறும்.
சுண்டைக் காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வர மார்புச் சளி, இரைப்பிருமல் (ஆஸ்துமா), காச நோய் குணமாகும். வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.
சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம் பருப்பு, கறிவேம்பு, சீரகம் சம அளவாக எடுத்து வறுத்து இடித்துப் பொடியாக்கி 2 வேளை ஒரு சிட்டிகையளவு 1 டம்ளர் மோரில் கலந்து குடித்து வர பேதி, மூலம், பசியின்மை, மார்புச் சளி குணமாகும்.
சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் 3 வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள். மூலம் குணமாகும்.
சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்து உணவுடன் உண்டு வர நீரிழிவு நோய் தணியும்.
சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாங்கொட்டை பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் சம அளவாக எடுத்து தனித்தனியே இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து 5 கிராம் பொடியை 2 வேளை 1 டம்ளர் மோருடன் கலந்து சாப்பிட தீக்குற்றத்தால் உண்ட சுவையின்மை, வயிற்றுப் புழு, நிலைக் கழிச்சல், சீதக் கட்டு நீங்கும். இதையே மார்பு சளி செரியாக் கழிச்சல், மூலம், நீரிழிவு இவற்றிற்கும் சாப்பிட கட்டுப்படும்.
சுண்டைக் காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம், மந்தம், செரியாமை குணமாகும்.
சுண்டைக்காய் வேர்ப் பட்டையை பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க வேண்டும். இதனை ஒரு சிட்டிகை மூக்கிழுக்க, தலை நோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர்ப்பாய்தல் நீங்கும்.
சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழுப்பு நோய் தணியும்.
சுண்டை வேர் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாய்ச்சல் குணமாகும்.

கர்ப்பம் தரிக்க / எதிர்பார்த்திருக்கும் பெண்கள் செய்ய வேண்டியவை!

|
கருத்தரிக்கக் கூடிய காலத்தை எப்படி அறிந்து கொள்ள முடியும் ?

இதற்காக ஒரு பெண் தன மாதவிடாய் நாட்கள் பற்றி தெளிவாக அறிந்து கொண்டிருக்க வேண்டும். அநேகமான பெண்களிலே மாதவிடாய்  ஒழுங்காக 28 தொடக்கம் 32 நாட்களுக்கு இடைப்பட்ட  காலப்பகுதிகளிலே ஏற்படும்.

ஒரு மாதவிடாய் ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து தோராயமாக பதினாலாவது நாள் அந்தப் பெண்ணில்  முட்டை வெளியேறும். இந்த முட்டை வெளியேறி 24 மணித்தியாலத்திற்குள் ஆணின் விந்தைச் சந்தித்தால் கருக்கட்டல் நடைபெற்று குழந்தை உருவாகும்.

ஆணின் விந்தானது பெண்ணின் யோனியினுள் செலுத்தப்பட்டு  72 மணிகள் வரை உயிரோடு இருக்கும்(கருக்கட்டக் கூடிய நிலையில்).

ஆக , நீங்கள் கர்ப்பம் தரிப்பதற்கு உகந்த காலம் உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாளில் இருந்து பதினோராவது நாளுக்கும்  பதினைந்தாவது நாளுக்கும் இடைப்பட்ட காலமாகும்.

அதாவது நீங்கள் மாதவிடாய் ஏற்பட்டு பதினோராவது நாளில் இருந்து உடலுறவில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஈடுபடும் போது கருக்கட்டல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம்அதிகமாகும்.
கர்ப்பம் தரிக்கும் பெண்கள்  செய்ய வேண்டியவை :
1.இயற்கையான எந்த உணவுகளையும் விருப்பப்படி சாப்பிடலாம்.
2.செயற்கையான இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல்               நல்லது (சோடா போன்றவை)
3.பழுத்த அன்னாசி சாப்பிடுவதால் கர்ப்பத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை
4.போலிக் அசிட் எனப்படும் மாத்திரையை நாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் விழுங்குவது நல்லது
5.பரசிட்டமோல் மாத்திரை விழுங்குவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது
6.வேறு எந்த மாத்திரை எடுக்கும் முன்னும் வைத்திய ஆலோசனை பெற வேண்டும்
7.எந்தவொரு மருத்துவப் பரிசோதனைக்கு (குறிப்பாக  எக்ஸ் -ரே ) முன்னும் வைத்திய ஆலோசனை பெற வேண்டும்.
8.இறுதியாக மாதவிடாய் ஏற்பட்ட நாளை மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் 
9.உங்களுக்கு நீரழிவு, வலிப்பு ,ஆஸ்த்மா, பிரசர் போன்ற நோய்கள் இருப்பின் கர்ப்பம் தரிப்பதற்கு முன் அவை சிறந்த கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். 
10.மேலே சொன்ன நோய்களுக்கு மாத்திரைகள் பாவிக்கும் நபர் என்றால் கர்ப்பம் தரிக்கும் முன்னமே வைத்தியரிடம் கூறி கர்ப்பத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.
11.கர்ப்பம் தரித்தவுடன் கர்ப்பிணிகளுக்கான சிகிச்சை நிலையத்தில் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக பதிவு செய்து கொள்ளவும்.
 --------------------------------
நன்றி : டாக்டர் வெ. சீதா ராமன்
 

கர்ப்பிணிகளுக்கு அம்மை வந்தால் என்ன செய்வது?

| Dec 20, 2010
அம்மை நோய்கள் எதனால் ஏற்படுகின்றன? வராமல் தடுப்பது எப்படி? வந்தபிறகு எப்படி நடந்து கொள்ள வேண்டும்? பெரியம்மை என்று சொல்லப்படக்கூடிய அம்மைதான் உயிர் குடிக்கும் ஒரு அம்மையாக இருந்து வந்தது. பெரியம்மைக்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு இன்று அந்த அம்மையை உலகத்தை விட்டே துரத்திவிட்டோம்.
தற்போது என்னென்ன அம்மைகள் நமக்கு வருகின்றன?
சின்னம்மை என்றழைக்கப்படும் சிக்கன் பாக்ஸ் (கொப்புளங்களாக வருமே...)
மணல்வாரி அம்மை என்றழைக்கப்படும் மீசில்ஸ்
பொன்னுக்கு வீங்கி என்றழைக்கப்படும் மம்ப்ஸ்
அம்மை நோய்கள் எப்படி பரவுகின்றன?
அம்மை நோய்கள் பெரும்பாலும் காற்றின் மூலமாகத் தான் பரவுகின்றன.
அதனால்தான் அம்மை நோயை "பிராப்லெட் இன்ஃபெக்ஷன்" என்று சொல்கிறோம். நோயாளி இருமும் போதோ, தும்மும் போதோ அவரிடமிருந்து "வைரஸ் கிருமிகள்" காற்றில் வெளியேற்றப்பட்டு, மற்றவர்களைத் தாக்குகிறது. இது தவிர நோயாளியைத் தொடும்போது கூட இந்த நோய் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் அம்மை நோய்களை தீவிரமான ஒரு "தொற்று நோய்" என்று சொல்கிறோம்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு அம்மை நோய் வந்தால் பிரச்சினை என்கிறார்களே?
கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு அம்மை நோய் வந்தால், அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. குறிப்பாக, கருவுற்றிருக்கும் முதல் மூன்று மாதங்களில் அம்மை நோய் வந்தால் உடனடியாக பெண்கள் மகப்பேறு மருத்துவரைச் சந்திக்க வேண்டும். சாமி குத்தம் ஆகிவிடும் என்று வீட்டிலேயே இருந்து விடக்கூடாது. ஏனென்றால், குழந்தையின் இதயம் ஐந்தாவது வாரம் வளர ஆரம்பித்து விடுகிறது. அந்த சமயத்தில் அம்மை நோயால் தாய் பாதிக்கப்பட்டாலும், சரியான ட்ரீட்மென்ட் எடுத்துக் கொள்ளாவிட்டாலும் தாயின் வயிற்றில் உள்ள குழந்தையின் இதயத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமில்லை, ஆண் குழந்தைகள், அம்மை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சரியான ட்ரீட்மென்ட் கொடுக்கப்படாவிட்டால், விதைகள் பாதிக்கப்பட்டு அவர்கள் பெரியவர்கள் ஆனபிறகு மலட்டுத் தன்மையும்கூட ஏற்படலாம்.
அம்மை நோய்க்குத் தடுப்பூசிகள் இருக்கிறதா?
சின்னம்மைக்குக்கூட தற்போது தடுப்பூசிகள் வந்துவிட்டது. குழந்தைப் பருவத்தின் ஓரிரு ஆண்டுகளிலேயே போடப்படும் இந்தத் தடுப்பூசியால், வாழ்நாள் முழுவதும் நோய் பற்றிய பயம் இன்றி இருக்கலாம்.
எம்.எம்.ஆர். என்று சொல்லப்படும் முத்தடுப்பு ஊசியால் மணல்வாரி, பொன்னுக்கு வீங்கி முதலிய அம்மைகள் வராமல் தடுக்கலாம்.
குழந்தை பிறந்து ஒன்பதாம் மாதத்தில் "மீசல்ஸ் வேசின்" என்ற ஊசி மணல்வாரிக்காகத் தனியாகப் போடப்படுவது.
இந்த தடுப்பூசிகளை டாக்டரின் ஆலோசனைப்படி தவறாமல் போட்டுக் கொண்டாலே அம்மை பற்றிய பயமில்லாமல் இருக்கலாம்.
அம்மை நோய் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொள்வது எப்படி?
சின்னம்மை வருவதற்கு மூன்று, நான்கு நாட்கள் முன்பே காய்ச்சல், ஜலதோஷம், இருமல், உடல்வலி, தலைவலி, கண் எரிச்சல் போன்றவை ஆரம்பிக்கும். பிறகு தோலில் எரிச்சலும், அரிப்பும் ஏற்படும். பிறகு முகம், கழுத்து, முதுகு, மார்பு என்று உடல் முழுவதும் கொப்புளங்கள் வரும்.
சின்னம்மைக்கு என்றே தனியாக மாத்திரைகள், சிரப், ஆயின்மென்ட்டுகள் இருக்கின்றன. டாக்டரிடம் முதலிலேயே காட்டி ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டால் நோயின் வீரியத்திலிருந்தும், பக்க விளைவுகளிலிருந்தும் தப்பலாம்.
ட்ரீட்மென்ட் சரியாக எடுத்துக் கொள்ளாத போது வயிற்றுப் போக்கு ஏற்படும். சின்னம்மை ஒரு முறை ஏற்பட்டால், அது ஆயுளுக்கும் திரும்ப வராது.
மணல்வாரி அம்மை வந்தாலும் சளி, இருமல், ஜலதோஷம், கண் எரிச்சல் இருக்கும். தாடையின் உள்பகுதிகளில் சிவப்பு கலந்த வெண் புள்ளிகள் தோன்றுவதுதான் இந்த நோயின் அறிகுறி.
இந்த அம்மைக்கும் சரியான மருத்துவம் எடுத்துக் கொள்ளாவிட்டால் வயிற்றுப்போக்கு, காதில் சீழ் வடிவது, நிமோனியா போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
காதின் கீழ்ப்புறம், தாடையின் கீழ்ப்புறம் காணப்படும் உமிழ்நீர் சுரப்பிகளைத் தாக்கக்கூடியது, "பொன்னுக்கு வீங்கி" அம்மை. தொண்டை வலி, விழுங்குவதில் சிரமம், வாயைத் திறக்கும்போது வலி, காதின் கீழ் வலியுடன் வீக்கம் போன்றவை இதன் அறிகுறிகள். மருந்து மாத்திரைகள் மூலமே வலியையும், வீக்கத்தையும் குறைக்கலாம்.
அம்மையின்போது என்ன சாப்பிடலாம்?
உணவில் காரம், புளிப்பைத் தவிர்ப்பது நல்லது. பழரசம், கஞ்சி, மோர், பழங்கள், இளநீர், குளுக்கோஸ் போன்றவை உடம்புக்கு மிகவும் நல்லது. எல்லாவற்றுக்கும் மேலாக, தனி நபர் சுத்தமும், சுற்றுப்புற சுத்தமும், சரியான நேரத்தில் டாக்டரின் ஆலோசனையும் உங்களை இந்த நோயிலிருந்து காப்பாற்றும்.
-----------
நன்றி : டாக்டர். வெ. சீதா ராமன்

உங்கள் கடன் தீர - ஜோதிடம் கூறும் வழி

|
 நமது தமிழ்வருடம் விக்ருதியில் சில குறிப்பிட்ட நாட்களில்,சில குறிப்பிட்ட நேரங்கள் வரும்.அந்த நேரங்களுக்கு மைத்ர முகூர்த்தம் என்று பெயர்.இந்த நேரத்தை முறையாகப் பயன்படுத்தினால்,நமது கடன் முழுமையாகத் தீர்ந்துவிடும். எப்படி என்பதைப் பார்ப்போம்:

நான் ராமன் என்பவரிடம்15.7.2004 அன்று ரூ.1,00,000/-கடன் வாங்கியிருக்கிறேன்.வருடங்கள் பல கடந்தும்,என்னால் வட்டி மட்டுமே கட்ட முடிகிறது.எனக்கோ எரிச்சல்! உழைக்கும் சம்பளம் வட்டி கட்டவே சரியாகிவிடுகிறது என நான் நினைக்கிறேன்.எப்படி நான் இந்த ஒரு லட்ச ரூபாய்க் கடனை அடைப்பது?
கீழே ஜோதிடப்படி, மைத்ர முகூர்த்த நேரங்கள் கணிக்கப்பட்டு,தரப்பட்டுள்ளன.இந்தப் பட்டியலில் வரும் நேரத்தில்,நான் ராமன் என்பவரை சந்திக்க வேண்டும்.நான் ரூ.1,00,000/-வாங்கினேன் அல்லவா? அதற்கு வட்டி மாதா மாதம் தந்துகொண்டிருக்கிறேன் என கூறியிருக்கிறேன்.இந்த நேரத்தில் அசலில் ஒரு பகுதியைக் கொண்டு சென்று,(உதாரணம் ரூ.5000/- அல்லது ரூ.10,000/-) ராமன் அவர்களிடம் கொடுத்து இந்த நேரத்தில் வரவு வைக்கச் சொல்ல வேண்டும்.இப்படி ஒரே ஒரு முறை அசலில் ஒரு பகுதியை மைத்ர முகூர்த்தத்தில் கடன் வாங்கியவரிடம் செலுத்திவிட்டால்,அதன்பிறகு,மீதிக் கடன் தொகை(ரூ95,000/- அல்லது ரூ.90,000/-) வெகு விரைவாக,வெகு எளிதாகத் தீர்ந்துவிடும்.

விக்ருதி வருடத்தின் மைத்ர முகூர்த்தங்கள்:

1.1.2011 சனி காலை 4.21 முதல் காலை 6.21 வரை

1.1.2011 சனி காலை 8.21 முதல் காலை 10.21 வரை

1.1.2011 சனி மதியம் 2.21 முதல் மாலை 4.21 வரை

1.1.2011 சனி இரவு 8.21 முதல் இரவு 10.21 வரை

13.1.2011 வியாழன் மதியம் 12.15 முதல் 2.15 வரை

28.1.2011 வெள்ளி நள்ளிரவு 1.37 முதல் விடிகாலை 3.37 வரை

9.2.2011 புதன் காலை 10.45 முதல் மதியம் 12.45 வரை

24.2.2011 வியாழன் இரவு 11.39 முதல் நள்ளிரவு 1.39 வரை
8.3.2011 செவ்வாய் காலை 9.53 முதல் காலை 11.53 வரை

9.3.2011 புதன் காலை 9.01 முதல் காலை 11.01 வரை

24.3.2011 வியாழன் இரவு 9.45 முதல் இரவு 11.45 வரை

5.4.2011 செவ்வாய் காலை 6.46 முதல் காலை 8.46 வரை

கடன் இல்லாத தமிழ்நாடு உருவாக வேண்டும் என்பது எனது ஆசை.இந்த ஆசையை நீங்களும் உங்களது லட்சியமாக்கிடலாம்.
சென்ற(மார்ச் 3 ஆம் வாரத்தில்),ஜீனியர்விகடனில் வந்த ஒரு செய்தி என்னை கடும் கோபத்துக்கு ஆளாக்கியது.திருப்பூர் அருகே பள்ளிப்பாளையம் என்ற ஊரில் ஒரு சாதாரண குடும்பத்தினர், ஒரு கந்து வட்டி கும்பலிடம் கடன் வாங்கியிருந்தனர்.வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாததால்,அந்தக் குடும்பத்தின் பருவ வயதுப்பெண்ணை அந்த கந்துவட்டிகும்பல் கடத்திச் சென்றுள்ளது.கடத்திச் சென்று,அவளைக் கற்பழித்துள்ளது.அப்படிக் கற்பழித்ததை,வீடியோவாக எடுத்து,இணையதளத்துக்கு விற்றுள்ளது.இதை விடக் கேவலம் நம் தமிழ்நாட்டில் வேறு என்ன இருக்க முடியும்?
அது மட்டுமல்ல; அந்த கற்பழிக்கப்பட்ட, மானமிழந்தப் பெண்ணுக்கும்,குடும்பத்திற்கும் ஆதரவாகக் களமிறங்கிய அந்தப்பகுதியை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரை அந்த கந்துவட்டிக்கும்பல் வெட்டிக் கொன்றுள்ளது.... இதுவும் தமிழ் நாடு தான்.... கொடுமை இல்லே... ? நன்றி : திரு. கே. வீரமுனி (www .aanmigakkadal .com )

ஆழ்மனத்தின் ஆற்றல் - ஒரு விஞ்ஞானபூர்வ நிரூபணம்

|
எல்லா அற்புதங்களையும் நிகழ்த்தக்கூடிய ஆழ்மனதின் சக்திகள் ஆல்ஃபா, தீட்டா, டெல்டா அலை வரிசைகளில் நாம் இருக்கையில் சாத்தியமாகின்றன என்பதைப் பார்த்தோம். அவற்றில் நம்மையறியாமல் நாம் பல முறை சஞ்சரித்துக்கொண்டு இருந்திருக்கலாம் என்றாலும் அவற்றை நாம் உணர்ந்திருப்பதில்லை. அவற்றை நாமாக ஏற்படுத்திக் கொள்ளாமல் தானாக அந்த அலைவரிசைகளில் இருந்திருக்கக் கூடிய சந்தர்ப்பங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நாம் அறிந்திருப்பதுமில்லை.

முதலில் ஆல்ஃபா அலைகள் பற்றியும், அந்த அலைவரிசைக்கு நம் மனதைக் கொண்டு செல்வது எப்படி என்பதையும் பார்ப்போம்.

1924 ஆம் ஆண்டு ஜெர்மானிய மனோதத்துவ அறிஞர் ஹேன்ஸ் பெர்கர் அதீத மனோசக்திகளை ஆராய்ச்சி செய்யும் போது, குறிப்பாக டெலிபதி என்னும் ஒரு மனதிலிருந்து இன்னொரு மனத்துக்கு செய்தி அனுப்பவோ, பெறவோ முடிந்த சக்தியை ஆராய்ச்சி செய்த போது அந்த நேரங்களில் அந்த மனிதர்கள் ஆல்ஃபா அலைவரிசையில் இருப்பதைப் பதிவு செய்தார்.

முதல் முதலில் அந்த அலைகளுக்கு ஆல்ஃபா அலைகள் என்று பெயரிட்டவரும் அவர் தான் என்று சிலர் சொல்கிறார்கள். அந்த சக்தி கிட்டத்தட்ட 100 மைக்ரோவால்ட்ஸ் ஆக இருக்கிறது என்றும் அவர் அளவிட்டார். அவர் காலத்தில் இந்த அலைவரிசைகள் பெரும் அளவில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படா விட்டாலும் பிற்காலத்தில் பெருமளவில் ஆராயப்பட்டது.

புதிய புதிய கண்டுபிடிப்புகளைச் செய்த பெரிய விஞ்ஞானிகளும், தங்கள் கற்பனையால் காலத்தால் அழியாத புதுமைகளைப் படைத்த பிரபல கலைஞர்களும், யோகிகளும் அதிகமாக ஆல்ஃபா அலைவரிசைகளிலேயே அதிக நேரங்களில் இருந்தார்கள் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பரபரப்பு மிகுந்த, அதிக சக்தி செலவழித்து முயலும், மனநிலையில் தான் பெரிய வேலைகள் ஆகின்றன, அதிக வேலைகள் சாத்தியமாகின்றன என்று நாம் பலரும் இன்றும் தவறாக நினைக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல என்று EEG போன்ற கருவிகளைக் கொண்டு செய்த ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

சென்ற நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் கூட தன் ஆராய்ச்சி நேரங்களில் பெரும்பாலும் ஆல்ஃபா அலைவரிசையில் தான் இருந்திருக்கிறார் என்பதை EEG கருவியால் அளந்திருக்கிறார்கள். அதிலும் மிகவும் சிக்கலான கணிதங்கள் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளில் கூட அதிலேயே அவர் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மிக மிகக் கடினமான கட்டத்துக்கு வந்த ஓரிரு சமயங்களில் மட்டுமே ஆல்ஃபா அலைவரிசையில் இருந்து பீட்டா அலைவரிசைக்கு அவர் வந்திருக்கிறார்.

கிட்டத்தட்ட அரைத்தூக்க நிலை, அல்லது லேசான கனவு நிலை போன்றது இந்த ஆல்ஃபா அலைவரிசையில் உள்ள நிலை என்பதை நாம் கண்டோம். அப்படியானால் அதிக நேரங்களில் இந்த அலைவரிசையில் உள்ளவர்கள் எல்லாம் பெரிய மேதைகளா, ஞானிகளா, படைப்பாளிகளா என்று கேட்டால் அல்ல என்பது தான் உண்மையான பதில். பல மந்த புத்திக்காரர்களும், மகா சோம்பேறிகளும், போதை மருந்துகளை உட்கொண்டவர்களும் கூட அதிக நேரம் இந்த அலைவரிசைகளில் இருக்கிறார்கள் என்பதை டாக்டர் பார்பரா ப்ரவுன் போன்ற ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் இது போன்ற ஆட்கள் ஆல்ஃபா அலைவரிசைகளில் அதிகம் இருந்தாலும் உள்ள சக்திகளையும் இழந்து அழிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதில் இன்னொரு கருத்து இருக்க முடியாது.

அப்படியானால் முன்பு சொன்னதற்கும், இப்போது சொன்னதற்கும் இடையே முரண்பாடு உள்ளதே என்று பலரும் நினைக்கலாம். கூர்ந்து யோசித்தால் முரண்பாடு இல்லை. ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளும், பெரிய மேதைகளும் ஆல்ஃபா அலைவரிசைக்கு விழிப்புணர்வோடு முயற்சி செய்து செல்பவர்களாக இருந்திருக்கிறார்கள். மந்த புத்திக்காரர்களும், மகா சோம்பேறிகளும் கிட்டத்தட்ட ஜடநிலையில் அந்த அலைவரிசையில் இருக்க, குடி மற்றும் போதையால் அந்த அலைவரிசையில் இருப்பவர்கள் செயற்கையாக அங்கு இழுத்து செல்லப்பட்டவர்களாக இருக்கிறார்கள். எனவே முன்னவர்கள் அந்த அலைவரிசையில் செயல்பட முடியும் போது, பின்னவர்கள் அந்த அலைவரிசையில் முடங்கியே போகிறார்கள். இதை நாம் என்றும் மறந்து விடக்கூடாது.

சரி ஆல்ஃபா அலைவரிசைக்கு செல்வதெப்படி என்பதைக் காண்போம். ஆல்ஃபா அலைவரிசையை ஒரே வார்த்தையில் விளக்க வேண்டும் என்றால் மிகப் பொருத்தமான வார்த்தை "ரிலாக்ஸ்" (Relax). பதட்டமில்லாத, அவசரமில்லாத அமைதியான
மனநிலை இது. இக்காலத்தில் இந்த அமைதியான மனநிலையை நாம் சிறிது சிறிதாக இழந்து வருகிறோம். நமக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன.

முந்த வேண்டிய ஆட்கள் நிறைய இருக்கிறார்கள். கவனிக்க வேண்டிய கவலைகள் ஏராளம் இருக்கின்றன. பிரச்னைகள், நேரக்குறைவு போன்றவை வேறு இருக்கின்றன. இப்படி இருக்கையில் அமைதியான மனநிலை எப்படிக் கிடைக்கும் என்ற கேள்வி எழலாம்.

ஆனால் எந்தக் காரணங்களுக்காக அமைதியான, ரிலாக்ஸான மனநிலை சாத்தியமில்லை என்று நினைக்கிறோமோ அந்தக் காரணங்களை முறையாகக் கையாள பீட்டா அலைவரிசையை விட ஆல்ஃபா அலைவரிசை தான் சிறந்தது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

பீட்டா அலைவரிசையில் இருக்கும் போது நம் சக்திகள் மிக அதிக அளவு விரயமாகின்றன. அப்படி விரயம் செய்து நாம் சாதிப்பதோ மிகக் குறைவாகவாகத் தான் இருக்கும். ஏனென்றால் பார்வைக்கு மிகவும் சுறுசுறுப்பாகவும் அதிவேகமாகவும் செயல்கள் நடைபெறுவது போல் தோன்றினாலும் பீட்டா அலைவரிசையில் தேவை இல்லாத பரபரப்பில் தான் நம் சக்திகள் அதிகம் வீணாகின்றன. ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளே சிரமமான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் ஆல்ஃபா அலைவரிசையில் செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றால் நம்மைப் போன்றவர்கள் அதைப் பின்பற்றுவதல்லவா புத்திசாலித்தனம்.

முதலில் தினந்தோறும் அதிகாலை அரை மணி நேரமும், இரவு அரை மணி நேரமுமாவது அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். அமைதியான ஒரு இடத்தில் அமருங்கள். இயற்கையழகு நிறைந்த இடமாகவோ, ஜனசந்தடி அதிகம் இல்லாத இடமாகவோ இருந்தால் மிக நல்லது. இல்லாவிட்டால் தனியாக ஒரு அறையில் அமர்ந்து கொள்ளுங்கள். இசைப்பிரியராக இருந்தால் வார்த்தைகள் இல்லாத இசையைக் கூட நீங்கள் இருக்கும் இடத்தில் தவழ விடலாம். வார்த்தைகள் கலந்த இசையானால் அந்த வார்த்தைகளின் பொருள், அதன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்று மனம் தீவிரமாக செயல்பட்டு பீட்டா அலைகளுக்குப் போய் விட வாய்ப்பு அதிகம்.

சிறிது நேரம் உங்கள் மூச்சில் கவனம் வையுங்கள். உள்ளிழுக்கும் காற்று, வெளியே விடும் காற்று இரண்டிலும் கவனம் வையுங்கள். நீங்களாக எந்த மாற்றத்தையும் மூச்சில் கூடக் கொண்டு வர முயற்சிக்காதீர்கள். குறிப்பாக எதைப் பற்றியும் சீரியஸாக நினைக்காதீர்கள். மூச்சு ஒரே சீராக மாற ஆரம்பிக்கும். இயற்கையழகு நிறைந்த சூழ்நிலையில் இருந்தால் அந்த அழகை ரசிக்க ஆரம்பியுங்கள். நீங்கள் இருப்பது உங்கள் அறையில் தான் என்றால் கண்களை மூடிக் கொண்டு நீங்கள் மிகவும் ரசிக்கும் இயற்கை சூழ்நிலையை உங்கள் கற்பனையில் வரவழைத்துக் கொள்ளுங்கள். மலைச்சாரல், நதிக்கரை அல்லது கடற்கரை போன்ற ஏதாவது இடத்தில் நீங்கள் இருப்பதாக நினைத்துக் கொண்டு ரசியுங்கள்.

மூச்சு சீராகி, மனமும் அமைதியடையும் போது ஆல்ஃபா அலைகளில் இருக்க ஆரம்பிக்கிறோம். ஆழ்மன சக்திகள் அடைவது உட்பட எந்த தீவிரமான சிந்தனையும் இந்த நேரத்தில் வேண்டாம். இப்போதைய ஒரே குறிக்கோள் ஆல்ஃபா அலைகளில் பயணிப்பது தான். அந்த அலைவரிசைக்கு நம் விருப்பப்படி தினமும் போய் வருவது தான். சிலருக்கு ஆரம்பத்தில் உறக்கமே வரலாம். பரவாயில்லை. இயற்கைச் சூழலுக்குப் போக முடியவில்லை, எனக்கு கற்பனையும் வராது என்றாலும் பராயில்லை. அப்படிப்பட்டவர்கள் மூச்சின் சீரான போக்கில் மட்டும் கவனம் வையுங்கள். ஆல்ஃபா அலைவரிசையில் இருந்து பாருங்கள்.

இந்த எளிய பயிற்சியை அடுத்த வாரம் வரை தினமும் செய்து பாருங்கள்.
நன்றி:http://youthful.vikatan.com/youth/Nyouth/ganesan100310.asp

காதலும் உங்கள் ராசியும்(12 ராசிகளுக்கும்)..... ஆய்வுக் கட்டுரை

|

நீங்கள் காதலிக்கிறீர்களா? உங்கள் ராசிப்படி நீங்கள் காதலில் எப்படி ? வெற்றி பெறுவீர்களா? தொடர்ந்து படியுங்கள்.. 

மேஷம்
இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்..

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.

கடகம்
இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்

கன்னி
கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை

கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும்,மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

துலாம்
எப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் துலாம் ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது.துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.

விருட்சிகம்
விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்.எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.

தனுசு
இவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார்.தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்

மகரம்
இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.

மீனம்
மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின் ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர்.

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com