Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

அழியும் உலகம் - மர்மமான ஈஸ்டர் தீவுகள் ஒரு சுளீர் கட்டுரை.

| Nov 11, 2010
ஈஸ்டர் தீவுகள் - இந்த பெயரை கேட்டிருக்கிறீர்களா? ஓஷோவின் மறைந்திருக்கும் உண்மைகள் படித்திருந்தால் இந்த ஆச்சர்யமான தீவுகளைப் பற்றி உங்களுக்கு ஞாபகம் வரலாம். 

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்ட ஒரு சிறிய தனித் தீவு. நீண்ட நெடுங் காலத்திற்குப் பின் கி.பி 1722 டச்சை சேர்ந்த ஜேகப் ரகவீன் (Jacob Roggeveen) ஈஸ்டர் தினத்தில் இந்த தீவுக்கு வந்தார். அதுவே இந்த தீவுக் கூட்டத்திற்க்கு காரணப் பெயராகிவிட்டது.  இதன் பொலினிசியப் பெயர் ரப்பா நுயி (Rapa Nui). தற்சமயம் சிலியின் அரசுக்குட்பட்ட சிறப்பு பகுதி. சரி, இங்கே என்ன அதிசயம் என்று கேட்கிறீர்களா?
அந்த தீவில் இப்போது இருக்கும் மக்கள் தொகை மொத்தமே இருப்பது 200 பேர் தான்.
ஆனால், சுமார் ஆயிரக்கணக்கில் , பிரமாண்டமான கற்சிலைகள் இருக்கின்றன.
மனித முகம் போல் தோற்றமுடைய மொவய்கள் என்ற பிரமாண்டமான கற்சிலைகள் - உயரம் சராசரியாக 10 மீட்டர், எடை 80 டன் (தோராயமான கணக்கு).


http://www.knowledgerush.com/wiki_image/a/a4/Easter_island_and_south_america.jpg


http://www.bugbog.com/images/galleries/chile_pictures/easter_island_pictures.jpg

யார் இந்த சிலைகளைச் செய்தார்கள் ? எதற்காக இந்த சிலைகளைகள் ?
செய்தவர்கள் எங்கே ? அவர்களுக்கு என்ன ஆனது? யாருக்கும் எதுவும் தெரியாது.
விஞ்ஞானம் வளரவளர பதில் கிடைக்க ஆரம்பித்தது மெதுவாக.
ஈஸ்டர் தீவு, ஒரு தனித்தீவு அருகில் நிலப்பரப்பு கிழக்கில் தென் அமெரிக்கா மேற்கில் பொலினீசிய தீவுகள் ஆனால் இரண்டும் இருப்பதோ ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில். பெரும் நிலப்பரப்பான தென் அமெரிக்காவிலிருந்து வந்திருக்ககூடும் என்று நம்பப்பட்டு வந்ததை மாற்றியவர் எரிக்கா. ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு ஜெனடிக் கோட் (genetic code) வேறுபடும் அதன் படி ஈஸ்டர் தீவுவாசிகளின் எலும்புகளிலிருந்து எடுக்கப்பட்ட DNA ஜெனடிக் கோட் ஒத்துப்போனது பொலினீசிய கோட். அந்த நாளில் சாதாரண படகுகள் மூலம் அவர்கள் கடந்த தூரம் நினைத்துக் கூட பார்க்க இயலாதபடி, மலைக்க வைக்கிறது. மிக நிச்சயமாக  இந்த உலகில் நடந்த மாபெரும் கடல் வழி இடப்பெயர்ச்சி. அதுவும் சாதாரண படகுகளில். அம்ம்மாடி... !!!இந்த இடப்பெயர்ச்சி ஏழாம் நூற்றாண்டில் நடந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது, அதற்குப்பின் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு யாரும் இந்த தீவுக்கு வரவில்லை. தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகள் அங்கே நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்திருந்ததையும், விவசாயம் , மீன்பிடித்தல் முக்கிய தொழிலாக இருந்ததையும்  உறுதிப்படுத்தின.
பிரமாண்டமான கற்சிலைகள், எப்படி ஒரு கற்கால மனிதர்களால் இதை செய்யமுடிந்தது ? எப்படி அவர்கள் இதை தீவைச் சுற்றி நகர்த்தினார்கள் என்பது முதல் ஆச்சரியம். அடுத்தது ரன்னோ ரக்கூ (Rano Raraku), இந்த மொவய்கள் செதுக்கப்பட்ட கற்ச்சுரங்கம் முன்னூறுக்கும் மேற்ப்பட்ட மொவய்கள் பல்வேறு நிலைகளில் இன்றும் காணப்படுகின்றன எடை 80 டன்னிலிருந்து 250 டன் வரை. ஒரு சிலையை செதுக்குவதற்க்கே ஆண்டுக்கணக்கில் ஆகியிருக்கும், இதை நகர்த்த ஆகியிருக்கும் நேரத்தோடு ஒப்பிட்டால் இது ரொம்பக்குறைச்சல். பத்து மைல் தூரம் வரை தீவைச்சுற்றி நகர்த்தியிருக்கிறார்கள்.
"மூதாதையர்களின் வாழும் முகங்கள்" இதைத்தான் மொவய்கள் குறிக்கின்றது , ஒரு தொன்மையான நாகரீகதின் மூதாதையர் வழிபாடு, நம்பவூர் நடுகல் மாதிரி . சைஸ் தான் வித்யாசம். இந்த மோவய்களுடன் காணப்படுவது மனிதனும் பறவையும் சேர்ந்த ஒரு உருவம் (பறவை மனிதன்).

எது இந்த தீவுவாசிகளை இந்த நாள் வரை பேசவைத்ததோ அதுவே ஈஸ்டர் தீவுவாசிகளுக்கு சவக்குழியும் தோண்டியது. ஒவ்வொரு முறையும் சிலைகளை நகர்த்த ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன , ஒரு கட்டத்தில் இந்ததீவின் வனப்பகுதி முற்றிலும் அழிந்தது. பெரும் மழைகள் வண்டல் மண்ணை அடித்துச் செல்ல விவசாயம் பொய்த்தது, மீன் பிடிக்க படகு செய்ய மரம் இல்லாததால் தீவுவாசிகள் பெரும் உணவுப்பிரச்சனைக்கு ஆளானார்கள். நாகரீகம் பின்னோக்கி சுழலத்துவங்கியது "நரமாமிசகாலம்" தொடங்கியது. ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டுசெத்தார்கள் சும்மா ஒன்றும் அடித்து"கொல்லவில்லை" கூடவே மோவய்களையும் முடிந்தவரை சிதைத்தார்கள்.மக்கள் தொகை பெருமளவு குறைந்தது

எஞ்சியிருந்தவர்கள் மெதுவாக பழைய வாழ்க்கைக்கு திரும்பத்தொடங்கியிருந்த போது ஜேகப் ஈஸ்டர் தீவில் காலடி எடுத்துவைத்தார்  வந்தோமா மோவயை பார்தோமா என்றில்லாமல் தீவுவாசிகளையும் பிடித்துக்கொண்டு போனார்கள், சிலை செய்ய இல்ல அடிமைகளாக . ஒரு சிலர் சில ஆண்டுகளுக்குப்பின் தப்பி வந்தார்கள், வந்தவர்கள் கொண்டுவந்தது சின்னம்மை. இது போன்ற வியாதிகளை அறிந்திராத தீவுவாசிகள் வாழ்க்கையின் இறுதி அத்யாயத்தை அது எழுதியது. ஒரு கற்காலத்திலேயே தேங்கிப்போன ஒரு நாகரீகம் தடயமில்லாமல் அழிந்தது.


ரப்பா நூயி ஒரு சோகமான முடிந்த வரலாறு மட்டுமல்ல, இன்றைய உலகிற்க்கு ஒரு பாடம்.

ஒரு சிறிய தீவில் மரங்களை முற்றிலும் அழித்தன் மூலம் சுற்றுப்புற சூழலை மாற்றினார்கள்.
சிலை செய்வதற்காக தங்கள் வாழ்வாதாரங்களையே அழித்தார்கள்.
குறைந்த அளவுடைய  வளங்களை எப்படி கையாள்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை.சகமனிதனின் வன்மம் தப்பிபிழைத்தவர்களையும் அழித்தது.

நமக்கும் ஈஸ்டர் தீவுவாசிகளுக்கும் பெரிய வித்யாசமில்லை, இதையெல்லாம் நாமும் செய்கிறோம். இப்போதாவது நாம் விழித்துக்கொள்ளாவிட்டால் உலகத்தின் நிலையும் ஈஸ்டர் தீவின் கதிதான்.

0 comments:

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com