Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

ரூம் போட்டுத்தேன் யோசிக்கிறாங்கப்பா

| Nov 1, 2010
ரூம் போட்டுத்தேன்  யோசிக்கிறாங்கப்பா
மணிமொழிகள்
1. ஒரு ஆண் தனக்கு தேவையான 1 ரூபாய் பொருளை 2 ரூபாய் கொடுத்து வாங்குகிறான்.
ஒரு பெண் தனக்கு தேவை இல்லாத 2 ரூபாய் பொருளை 1 ரூபாய் கொடுத்து வாங்குகிறாள்.
2. ஒரு பெண் தனக்கு கணவன் கிடைக்கும் வரை எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறாள்.
ஆனால் ஒரு ஆண் தனக்கு மனைவி கிடைக்கும் வரை எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை.
3.தன் மனைவி செலவழிப்பதை விட அதிகம் சம்பாதிப்பவன் வெற்றி கண்ட ஆண்.
வெற்றி கண்ட பெண் என்பவள் அப்படிப்பட்ட ஆணை அடைபவள்.
4 ஒரு ஆணை நன்கு புரிந்துகொண்டு அவனிடம் சிறிது அன்பு செலுத்தினால் போதும்
ஒரு பெண்னை நிறைய அன்பு செலுத்தி ஆனால் புரிந்து கொள்ள முயலாமல் இருக்க வேண்டும்.

5. திருமணத்தின் போது ஒரு பெண்ணைன் கையை பிடிக்கும் ஆண் அடுத்த மாதத்தில் அவள் கையை பிடிப்பது தற்காப்புக்கு மட்டுமே.
6 திருமணம் ஆன ஆண்கள் தம் தவறுகளை மறக்க வேண்டும். ஏன் என்றால் பெண்கள் அவற்றை மறப்பதில்லை. ஒரே விஷயத்தை நினைவில் வைக்க இருவர் ஏன்?
7.ஆண் மாறி விட வாய்ப்பு இருக்கும் என கருதி பெண் அவனை மணந்து கொள்கிறாள். ஆனால் அவன் மாறுவதில்லை. பெண் மாற மாட்டாள் என கருதி ஆண் மணந்து கொள்கிறான். ஆனால் அவளோ மாறி விடுகிறாள்.
8 ஒவ்வொரு வாக்கு வாதத்திலும் பெண்ணின் வார்த்தையே இறுதி ஆகும். இதன் பின் ஆண் எதாவது பேசினால் அது புதிய வாக்கு வாதம் ஆகிவிடும். 
 
கோபு : பொருத்தம் பார்க்காம கல்யாணம் பண்ணினா அடிக்கடி சண்டை வருமாமே. 10 பொருத்தம் பார்த்து கல்யானம் பண்ணினாவராதா?


ஜோசியர் : கணவன் அடங்கிப்போக வாய்ப்பு இருக்கு.
 
2.சீனு: (பக்கத்து போர்ஷன் பாபுவிடம்) இன்னிக்கு காலையிலே குளிக்கும்போது உன் அக்காவை பார்த்தேன்.
பாபு: ஏண்டா பாவி அப்படி பண்ணினே?
சீனு. என் மேல் தப்பு இல்லை .அவள் தான் நான் குளிக்கும்போது என் பாத்ரூம் பக்கமா நடந்து போனாள்.

3.நோயாளி : டாக்டர் ! என் மனைவிக்கு 2 நாளா பேசவே முடியலை.
டாக்டர் : 2 நாள் முன்னே அவள் என்ன சாப்பிட்டான்னு கேட்டு சொல்லுங்க. என் மனைவிக்கும் வாங்கி கொடுக்கணும்.


4.டாக்டர்: தலைவலி இறங்கறதுக்கு மாத்திரை எழுதி கொடுத்தேனே. இப்ப எப்படி இருக்கு?
நோயாளி: 10 தெரு சுத்தியும் அது ஸ்டாக் இல்லைன்னு சொல்லிட்டாங்க. இப்ப கால் வலி ஆயிடுச்சு.
டாக்டர் : (ஏதோ நினைவில்) முக்கால் வாசி குறைஞ்சிருக்கா. வெரி குட்.
 
நம்ம காதலை வீட்டுல மெதுவாப் பேசி ஆரம்பிச்சி வச்சிட்டே‎ன்!"

"அப்படியா! அதுக்கு எ‎ன்ன ரெஸ்பா‎ன்ஸ்?"

"மெதுவா சொன்னதால அது யார் காதிலயும் விழல.. நா‎ன் இப்ப என்ன செய்ய..?"


*****

"நீ எ‎ன்ன சோப் யூஸ் ப‎ண்ற?"

"கோபால் சோப், கோபால் டூத்பேஸ்ட், கோபால் பனிய‎ன், கோபால் ஜட்..."

"ஆ.. போதும் போதும்! கோபால் பெரிய இ‏ண்டர்நேஷனல் கம்பெனியா?"

"இல்ல.. கோபால் எ‎ன் ரூம் மேட்!"


*****

"103க்கும் 105க்கும் நடுவுல எ‎ன்ன இருக்கு தெரியுமா?"

"104"

"அதா‎ன் இல்லை.. நடுவுல ‘0'தா‎ன் இருக்கு. நீங்க இன்னும் மேத்ஸ்ல வீக்குதா‎ன்!"


*****

நாம பெரிய ஆளா வரணும்னா ஏற்கெனவே பெரிய ஆளா‏ இருக்கறவங்க கூட கை கோர்த்துக்கணுமாம்.

"அப்படியா! வித் ப்ளெஷர்! நீ எ‎ன் கூட கை கோர்த்துக்கறதுல எனக்கு எந்த ஆட்சேப‎னையும் இல்ல..!"


*****

(பயாலஜி வகுப்பில் ஆசிரியர் மாணவனிடம்..)

"இந்தப் பறவையோட காலைப் பார்த்து இ‏து என்ன பறவை‎ன்னு சொல்லு"

"தெரியலை சார்"

"‏இது தெரியலியா? நீயெல்லாம் உருப்படவா போற!! உ‎ன் பேரு என்னடா?"

"எ‎ன் காலைப் பார்த்து நீங்களே சொல்லுங்க சார்..!!"
******

"அமைச்சரே! நாட்டில் மாதம் மும்மாரி பொழிகிறதா?"

"மக்களிடமிருந்து சரமாரியாய் வசைமாரி பொழிகிறது மன்னா!"
 
(புதிதாய் பிறந்த குழந்தை நர்ஸிடம் பேசுகிறது...)

"நர்ஸ், ஒரு மொபைல் ‏இருந்தா கொடுங்க."

"எதுக்குடா செல்லம்?"

"நா‎ன் சேஃப்டியா லேண்ட் ஆயிட்டே‎னு சொல்றதுக்கு கடவுள்கிட்ட மிஸ்டு கால் கொடுக்கணும்!!"

*****

"ஏண்டா.. உங்க அப்பா எ‎ந்நேரமும் உ‎ன்னைத் திட்டிக்கிட்டே இருக்காரு."

"ஹ..ஹ்ஹ.ஹா.... சிங்கத்தைக் கொஞ்ச முடியாதுல்ல.. அதா‎ன்!!"

*****

"டாக்டர் எனக்கு தற்கொலை பண்ணிக்கணும் போல ‏இருக்கு."

"அதெல்லாம் கூடாது.. ரொம்ப தப்பு. அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்?"

*****

(‏ஐ.டி.தொழிலாளி, கார்ப்பொரேஷ‎ன் குப்பைத் தொழிலாளியிடம்..)

"எ‎ன் கையில டிகிரி இருக்கு; நெறய நாலெட்ஜ் ‏ இருக்கு; சொசைட்டில பெரிய அந்தஸ்து இ‏ருக்கு. உனக்கு??"

"நிரந்தரமான வேலை ‏இருக்கு!!"

*****

எங்க பேங்க்ல இன்ட்ரஸ்ட் இல்லாமயே லோன் கொடுக்கறோம்

"சார்.. கொடுக்கறதுதான் கொடுக்கறீங்க.. கொஞ்சம் இன்ட்ரெஸ்ட்டா கொடுத்தாதான் என்னவாம்?!"

****

"ஏன் இன்னிக்கு கிளாஸ்க்கு லேட்?"

"ஒரு பையன் என்னை ஃபாலோ பண்ணிட்டு வந்தான் டீச்சர்"

"அதனால?"

"அவன் ரொம்ப ஸ்லோவா நடந்து வந்தான் டீச்சர்"

****

(டிவியில்.. நேரலையில்..)

டிவி காம்பியர் : நீங்க எங்கே இருக்கீங்க..?

நேயர் : தண்டபாணி தெரு, டி.நகர்

டிவி காம்பியர் : அட.. நானும் அங்கதான் இருக்கேன். உங்க டோர் நம்பர்?

நேயர் : 110

டிவி காம்பியர் : அட.. நானும் அங்கதான் இருக்கேன். நீங்க யாரு?

நேயர் : நான் உன் புருஷன்.. வீட்டுச் சாவியை எங்க வச்சிருக்க?"

****

"சாரி.. இப்போதைக்கு எங்க கம்பெனில வேலை எதுவும் இல்லை. நீங்க போகலாம்"

"அப்படினா நான்தான் உங்க கம்பெனிக்கு சரியான ஆள். வேலை கேட்டு தொந்தரவே பண்ண மாட்டேன் சார்!"

****

"நான் சீசனுக்கு சீசன் வியாபாரத்தை மாத்திடுவேன்"

"இப்போ என்ன வியாபாரம் பண்றே?"

"செருப்பு வியாபாரம். நல்லா சேல்ஸ் ஆகுது. முக்கியமா பிரஸ் மீட் நடக்குற இடங்கள்ல..!!"
 
டாக்டர் : குழந்தைக்கு தண்ணீர் கொடுக்கறதுக்கு முன்னாடி நல்லா கொதிக்க வெச்சுக் குடுங்க.

ஜோ : ஏன் டாக்டர், குழந்தைகளை அடுப்பில கொதிக்க வைக்கிறது தப்பில்லையா?
**********
கணவன் : "உனக்குத்தான் 2 கண்ணும் நல்லா இருக்கே, ஒழுங்கா அரிசில இருந்து கல்லைப் பொறுக்க மாட்டியா?''

மனைவி : "உங்களுடைய 32 பல்லும் நல்லாதானே இருக்கு. 2,3 கல்லை கடிச்சு சாப்பிட முடியாதா?''
***********
"டீச்சர்.. எ‎‎ன் தலைல எதுவுமே ஏறாது‎ன்னு சொன்னீங்கல்ல?"

"ஆமாடா.. அதுக்கெ‎ன்ன இப்போ."

"நல்லாப் பாருங்க. ஒரு எறும்பு ஏறிட்டு இருக்கு"
********
"டாக்டர் எனக்கு கோபமே வர மாட்டேங்குது. யாரைப் பாத்தாலும், எதைப் பாத்தாலும் சிரிச்ச மொகமாவே இருக்கேன். அதுக்கு ஏதாவது மருந்து குடுங்களே‎ன்."

"கவலைப்படாதீங்க.. அதுக்கு நா‎ன் என்னோட பில் தர்றே‎ன்."
ஐ.டி. துறையில் வேலை பார்ப்பவர்களின் தினசரி நேர அட்டவணை இப்படித்தான் இருக்குமா....
 
சன் தொலைக்காட்சியில் ஒரு பெண்மணி வேடம் தரித்து அனைவரது உள்ளங்களையும் கவர்ந்த கோவை ரமேஷ் கார் விபத்தில் பலியானது பெரும் இழப்பாகும். சொர்கத்திற்கு செல்லும் அவர் அங்கு அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியை நடத்துவதாக ஒரு கற்பனை.இது அவருக்கு அஞசலி செலுத்தும் என்று வேண்டுகிறேன்.
சொர்கத்தில் இந்திரன்:
வாங்க ரமேஷ். வாரம் தோறும் அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியில் உங்களை தொலைக்காட்சி பெட்டி மூலம் கண்டு களித்த எங்களுக்கு இப்போ நேராகவே அதை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சி. அங்கே பாருங்க " சொர்கமே ஆனாலும் சொந்த ஊர் போல் வருமானு சோகமா இருக்காங்களே ஆயிரக்கணக்கான அப்பாவி இலங்கை தமிழர்கள் அவர்கள் சிரித்து தங்கள் துக்கங்களை மறக்க நீங்கள் ஒரு நிகழ்ச்சி நடத்தணும்.

ரமேஷ்: ஓ கண்டிப்பா. செய்கிறேன்

இந்திரன் : ஓ.கே. ரமேஷ் இன்னிக்கு என்ன செஞ்சு அசத்தப் போறீங்க?

ரமேஷ்: ஸடாண்ட் அப் காமெடி பண்ணலாம்னு இருக்கேன்.

இந்திரன்: அசத்துங்க

ரமேஷ் ஆரம்பிக்கிறார்.

நான் சொல்லப் போற ஜோக்ஸ் எல்லாம் சொர்கம் சம்பந்தப்பட்டதாக இருக்கும். முதலாவதாக

இரண்டு சர்தார்ஜிகள் இறந்தபின் சொர்கத்தில் சந்திக்கிறார்கள்.

முதல் சர்தார்ஜி: நீ எப்படி இங்கே வந்தே?

இரண்டாவது சர்தார்ஜி: குளிர்ல விறைச்சு செத்துட்டேன். நீ எப்படி இங்கே வந்தே?

முதல் சர்தார்ஜி: ராத்திரி வீட்டக்குள்ளே ஒரு திருடன் வந்துட்டான். அவனை தேடி தேடி மேல கீழ போனதில ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு.

இரண்டாவது சர்தார்ஜி (மனசுக்குள்): அடப் பாவி பிரிட்ஜை திறந்து பார்திருந்தீனா நாம இரண்டு பேருமே உயிரோடு இருந்திருப் போம்.


அடுத்ததாக

ஒரு டீச்சர் பள்ளிக் கூடத்தில பசங்களுக்கு இறந்தபின் எப்படி சொர்கத்துக்கு போக முடியும் னு விளக்கினார்.

டீச்சர்: சொர்கத்துக்கு போகணும்னா முதல்ல என்ன பண்ணனும்? நிறைய நல்ல காரிங்கள் பண்ணனும். ஏழைகளுக்கு உதவணும். எல்லா உயிரினங்களிடமும் அன்பா இருக்கணும். வேற என்ன பண்ணணும்? உங்களால சொல்ல முடியுமா?

ஒரு மாணவன் எழுந்து சொன்னான்: டீச்சர் சொர்கம் போக முதல்ல செத்து போகணும்.


அடுத்ததாக

விஞ்ஞானி ஐன்ஸ்டைன் இறந்த பின் சொர்கம் வருகிறார். அங்கு வாயில் காப்பவர்கள் "நீங்கள் தான் ஐன்ஸ்டைன் என்று எப்படி நாங்கள் நம்புவது?"

ஐன்ஸ்டைன் அவர்களிடம் ஒரு கரும்பலகையை கேட்டு வாங்கி அதில் தனது ரிலேடிவிடி தத்துவத்தை விளக்கினார் காவலாளிகளும் நீங்கள் ஐன்ஸ்டைன் தான் உள்ளெ செல்லுங்கள் என்றார்கள்.

அடுத்தாற் போல் சிறந்த ஓவியர் பிகாஸோ வந்தார். அவரிடமும் "நீங்கள் தான் பிகாஸோ என்று எப்படி நாங்கள் நம்புவது?" என்று அவர்கள் கேட்க பிகாஸோ அதே கரும் பலகையில் ஒரு ஓவியத்தை வரைந்தவுடன் நீங்கள் பிகாஸோ தான் உள்ளெ செல்லுங்கள் என்றார்கள்.

அடுத்தாற்போல் ஒரு சர்தார்ஜி வந்தார் அவரிடமும் காவலாளிகள் " ஐன்ஸ்டைன் பிகாஸோ இருவரும் தாங்கள் யார் என்று நிரூபித்து உள்ளே போனார்கள். நீங்களும் அதே மாதிரி செய்யுங்கள்" என்றார்கள். சர்தார்ஜி அவர்களிடம் " ஐன்ஸ்டைன் பிகாஸோ இவங்கள்ளெல்லாம் யாரு?" என்றார். காவலாளிகள் உடன் அவரை உள்ளெ செல்ல அனுமதித்தனர்.


அடுத்ததாக

மூன்று மனிதர்கள் இறந்த பின் சொர்கம் செல்கிறார்கள்.

அவர்களிடம் இந்திரன் " நீங்க இங்கெ வந்திட்டீங்க. அனால் இங்கே பொய் பேசாமல் இருக்கணும். அப்படி பேசி விட்டால் வாழ் நாள் முழுவதும் நீங்கள் மிக கோரமான பெண்மணியுடன் வாழ வேண்டியிரக்கும்" என்றார்.

ஒரு வாரம் கழித்து ஒருவர் தான் பூமியில் பெரும் பணக்காரராக இருந்தார் என்று பொய் சொல்லவே மிக கோரமான பெண்மணியுடன் வாழ வேண்டியதாயிற்று.

இரண்டாமவரும் பொய் சொல்லி கோரமான பெண்மணியுடன் வாழ வேண்டியதாயிற்று.

சில நாட்கள் கழித்து இந்த இருவரும் தங்களத கோர பெண்மணியுடன் சென்று கொண்டிருக்கும் போது எதிர்த்தார் போல் மூன்றாவது மனிதர் ஒரு மிக அழகான பெண்ணுடன் வந்தார். இந்த இருவரும் அவரிடம் இது எப்படி என்று கேட்க அந்த அழகான பெண்மணி சொன்னார் " நான் பொய் சொல்லி விட்டேன்".


நன்றி நன்றி நன்றி

0 comments:

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com