Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

சதுரகிரி - சித்தர்கள் இன்றும் நடமாடும் தவபூமி - வீடியோ காட்சிகள்

| Nov 13, 2010
சதுரகிரி , இந்த பெயரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நம் தமிழ் நாட்டில் சிவ வழிபாட்டிற்கு, மனதுக்கு இதமான இயற்கையின் அரவணைப்போடு மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள  பூலோக கயிலாயம் என்று போற்றப்படுகிற, சித்தர்கள் இன்றும் ஜாலம் செய்யும் தவபூமி.

விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மலை, சமீப காலமாக தமிழகம் முழுவதும் இருந்து லட்சக் கணக்கான பக்தர்களால் பௌர்ணமி, அமாவாசை தினங்களில் நிரம்பி வழிகிறது. சதுரகிரி மலையில் எடுத்துள்ள ஒரு வீடியோ தொகுப்பைக் காண கீழே
சொடுக்கவும். நீங்கள் ஒருமுறை சென்று அந்த மகாலிங்கத்தை தரிசித்து வர உங்கள் வாழ்வில் ஏற்படும் நல்ல மாற்றத்தை நிச்சயமாக உணரமுடியும்.
இப்போது நல்ல மழை பெய்து இருப்பதால், மலையின் மேலிருந்து கீழே தாணிப்பாறை வரை எங்கும் பச்சைபசேல் என்று காட்சி அளிக்கிறது. நேரில் சதுரகிரி தரிசனம் செய்ய இருப்பவர்கள் மேலும் விவரங்களுக்கு rishyasirungar @gmail .com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
இங்கிருந்து குற்றாலம் சுமார் 75 கி. மீ. தொலைவில் உள்ளது.
மதுரையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், செங்கோட்டை பேருந்துகளில் ஏறி  கிருஷ்ணன்கோவில் என்ற நிறுத்தத்தில் இறங்கவும். (approx 65kms ) இங்கிருந்து வத்திராயிருப்பு (வத்ராப்) செல்லும் பேருந்தில் செல்லவேண்டும் . (approx 8kms ).
அங்கிருந்து மினிபஸ் அல்லது ஷேர் ஆட்டோ வில் தாணிப்பாறை செல்லவேண்டும்.
தாணிப்பாறை சதுரகிரி மலையின் அடிவாரம் ஆகும். அங்கிருந்து மகாலிங்கம் சந்நிதிக்கு சுமார் 15 km மலைப்பாதையில் நடந்து தான் செல்ல வேண்டும்.
 சற்று கரடு முரடான பாதைதான். சின்ன குழந்தைகள் முதல் , 70 / 75 வயது மூதாட்டிகள் வரை சர்வ சாதாரணமாக மகாலிங்கத்தை தரிசிக்க வருகிறார்கள். எதற்கு எடுத்தாலும் டூ வீலெர், shoe என்று பழகியவர்களுக்கு அவர்களை பார்த்தால் பொறாமை தான் வரும்.

தனியே செல்வது நல்லதல்ல. முதன் முறை செல்பவர்கள் பௌர்ணமி அல்லது அமாவாசை தினங்களில் சென்று , நன்கு பழகியபின் சாதாரண தினங்களில் செல்லலாம். இதைபோலே மழைக் காலங்களில் செல்வது இன்னும் மனதுக்கு ரம்மியமாக இருக்கும். இங்கு நடமாடாத சித்தர்களே இல்லை . கிடைக்காத மூலிகைகளே இல்லை.
மதிமயக்கி வனம் என்று உள்ளே ஒரு அடர்ந்த வனப்பகுதி உள்ளது. உள்ளே சென்றவர்கள் யாரும் திரும்பியதே இல்லை. அவர்கள் மதியை மயக்கி அந்தே சிவமே ஆட்கொண்டுவிடுவதாகக் கூறுகிறார்கள். மலையை முழுவதும் மலைப் பளியர்கள் துணையுடன் சுற்றிப் பார்க்க ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் ஆகிறது. வனத்துறையிடம்  விசேஷ அனுமதி பெற்று செல்லவேண்டும். பிரமிக்க வைக்கும் அனுபவங்கள் உங்களை நிச்சயம் பரவசப் படுத்தும்.

ஆன்மிகத் தேடல் இருப்பவர்க்கும், ஒரு வித்தியாசமான adventure அனுபவத்தை எதிர் பார்ப்பவர்களுக்கும் , அந்த சிவத்தை தொழும் சித்தர்களின் நிரந்தர வாசஸ்தலமாக விளங்கும் இந்த சதுரகிரி மலை யாத்திரை அனுபவம்.


கைலாஷ் யாத்திரை அனுபவம் எவ்வளவு பரவசமோ அதற்கு சற்றும் குறையாத, அந்த அனுபவங்களையும், அந்த சுந்தர மகாலிங்கத்தின் பெருமைகளையும், அருள் திருவிளையாடல்களையும், இனி வரும் பதிவுகளில்  பதிவு செய்வோம்.

4 comments:

subramani periyannan said...

how can old people like to visit as i could not walk for even 1 km

கிருஷ்ணமூர்த்தி said...

அருமை .நான்காம் முறை சென்ற ஆனுபவம் கிடைக்கிறது .நன்றி .

*என்றென்றும் அன்புடன் ,*
*கிருஷ்ணமூர்த்தி*

ravi said...

முதன் முறையாக 29/03/2014 அன்று சதுரகிரி எங்கள் நண்ப்ர்கள் ஐந்து பேர்களுடன் சென்றோம், மிக அருமையான தரிசனம், அனைவரும் வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய சிவதலமாகும். ஓம் நவச்சிவாயravi said...

சதுரகிரி பயணம் வாழ்வில் ஒரு முறையேனும் சென்று வரக்கூடிய சிவதலமாகும். ஒம்நமச்சிவாய

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com