Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

இறை வழிபாடு - ஏன் அவசியம்? எந்த தெய்வத்தை வணங்குவது?

| Nov 10, 2010
இறை வழிபாடு என்பது ஒரு கேலிக்குரிய விஷயமாகி விட்ட இந்த காலத்தில், நமது இந்த இணைய தளத்தில் எந்த கடவுளை வழிபட்டால் , என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று  நெடுந் தொடர் கட்டுரைகளை பிரசுரிக்க விருக்கிறோம். எப்போது மனித முயற்சிகள் தோற்றுப்போய் , ஏதாவது வழி கிடைக்காதா எனும் ஏங்கும்போது, இறைவனின் திருவடிகளை தவிர இளைப்பாற  வேறு  இடமே இல்லை. இதை ஒவ்வொருவரும் நம் வாழ்வில் எதோ ஒரு தருணத்தில் நிச்சயமாக உணர்ந்தே இருப்பர்.
நாம் செய்த கர்ம வினைகளுக்கேற்ப நமக்கு துன்பங்களும், துயரங்களும் நம் வாழ்வில் தொடரும். ஆனால், தீவிர இறைவழிபாடு , அந்த கர்மங்களின் தாக்கத்தை பெருமளவில் குறைத்து , கஷ்டங்களை தாங்கும் சக்தியை நமக்கு கொடுக்கும்.
சிக்கல்கள் தீர்ந்தவுடன் , திரும்பவும் நம் மனம் முருங்கை மரமேறி விடுகிறது. ஏழரை, அஷ்டம சனி இருப்பவர்கள் மட்டும் , அந்த சூட்டை உணர்ந்து தங்கள் வாலை சுருட்டி கொண்டு , ஒழுங்கான பிள்ளைகளாய்  கடவுளை பற்றிக்கொண்டு இருக்கிறார்கள். வாங்கிய அடி , அவர்களை கொஞ்சம் பக்குவப் படுத்துகிறது என்றே தோன்றுகிறது. சரி விஷயத்துக்கு வருவோம்.
இறை வழிபாடு - ஹயக்ரீவர் காயத்ரி, துதி, ஸ்ரீ ஹயக்ரீவாஷ்டோத்தரசத நாமாவளி
நாம் முதலில் தொடங்க விருப்பது ஹயக்ரீவர். திருமாலின் மிக சக்தி வாய்ந்த மூர்த்தங்களில் முக்கியமானவர்கள் ஹயக்ரீவரும், நரசிம்ஹா மூர்தியுமே என்பது என் அபிப்பிராயம். ஆனால், இதுவரை ஒரு ரகசியம் போலவே மறைத்துவைக்கப் பட்டிருக்கிறது. ஹயக்ரீவர் , கலைமகளுக்கே குரு வாக மதிக்கப் படுகிறார். 
கல்வி பயிலும் குழந்தைகள் , நல்ல ஞானம் பெற ஹயக்ரீவரை வழி பட, அவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று மிக நல்ல நிலை அடைவது உறுதி. சினிமா, தொலைக்காட்சி போன்ற வெகுஜனத் தொடர்பு உடைய துறைகளை தேர்ந்து எடுப்பவர்கள் , இவரை வழிபட , அவர்கள் தடைகள் நீங்கி , பிரபலம் அடைவர். இது ஏன் என்பது, அவரது அவதார வரலாற்றை அறிந்து, அவரை வழிபட நம் வாழ்வில் படிப்படியாக ஏற்படும் மலர்ச்சியை வைத்து உணர்ந்து கொள்ள முடியும்.

அவதாரம் :
பகவான் விஷ்ணு, பிரளய காலத்தில் இந்த உலகையும் மக்களையும் தன்னுள்ளே தாங்கி, ஆலிலை மேல் பாலகனாய் பிரளயகால சமுத்திரத்தில் யோக நித்திரை செய்து வந்தார். பின் உலகைப் படைப்பதற்காக தன் நாபிக்கமலத்திலிருந்து பிரம்மனை படைத்து நான்கு வேதங்களையும் உபதேசித்தார். பிரம்மனும் படைப்புத்தொழிலை ஆரம்பித்தார்.ஒருமுறை பெருமாளின் நாபிக்கமலத்தில் உள்ள ஓர் இதழில் இரண்டு தண்ணீர்த்திவலைகள் தோன்றி, மது, கைடபன் என்ற அசுரர்களாக மாறினர். இவர்கள் பெருமாளிடமிருந்து பிறந்த தைரியத்தில், பிரம்மனிடமிருந்த வேதங்களை அபகரித்து, தாங்களே படைப்புத்தொழில் புரிய ஆசைப்பட்டனர். குதிரை முகம் கொண்டு, பிரம்மனிடமிருந்து வேதத்தைப் பறித்துக்கொண்டு, பாதாளத்தில் ஒளித்து வைத்தனர்.வேதங்களை இழந்த பிரம்மன் பெருமாளைச் சரணடைந்தார். பெருமாள் வேதங்களை மீட்க பாதாள உலகம் வர, அங்கே அசுரர்கள் குதிரை வடிவில் இருப்பதைக்கண்டார். உடனே தானும் குதிரை முகம் கொண்டு அவர்களுடன் போரிட்டு, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் கொடுத்தார். அசுரர்கள் கைபட்டதால் தங்களது பெருமை குன்றியதாக நினைத்த வேதங்கள், தங்களை புனிதமாக்கும்படி பெருமாளை வேண்டின. குதிரைமுகத்துடன் இருந்த பெருமாள் வேதங்களை உச்சிமுகர்ந்ததால், அந்த மூச்சுக்காற்றில் வேதங்கள் புனிதமடைந்தன.
 
தியான காயத்ரி : 
ஓம் வாகீஸ்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி
தன்னோ ஹம்ஸஹ் ப்ரசோதயாத்
 துதி :
ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மகே

பொருள் : ஞானத்தின் இருப்பிடமும், ஆனந்த மயமானவரும்; படிகம் போன்ற நிர்மலமான குணம் உள்ளவரும்; எல்லாக் கலைகளுக்கும், கல்விக்கும் ஆதாரமாகத் திகழ்பவருமான ஹயக்ரீவரை வணங்குகிறேன் என்று சொன்னபடியே தரிசியுங்கள். நீங்கள் ஜெயிப்பது நிஜம்!
ஸ்ரீ ஹயக்ரீவாஷ்டோத்தரசத நாமாவளி
ஓம் ஹயக்ரீவாய நம:
ஓம் மஹாவிஷ்ணவே நம:
ஓம் கேஸவாய நம:
ஓம் மதுஸூதநாய நம:
ஓம் கோவிந்தாய நம:
ஓம் புண்டரீகாக்ஷõய நம:
ஓம் விஷ்ணவே நம:
ஓம் விஸ்வம்பராய நம:
ஓம் ஹரயே நம:
ஓம் ஆதித்யாய நம:
ஓம் ஸர்வவாகீஸாய நம:
ஓம் ஸர்வாதாராய நம:
ஓம் ஸநாதநாய நம:
ஓம் நிராதாராய நம:
ஓம் நிராகாராய நம:
ஓம் நிரீஸாய நம:
ஓம் நிருபத்ரவாய நம:
ஓம் நிரஞ்ஜநாய நம:
ஓம் நிஷ்களங்காய நம:
ஓம் நித்யத்ருப்தாய நம:
ஓம் நிராமயாய நம:
ஓம் சிதாநந்தாய நம:
ஓம் ஸாக்ஷிணே நம:
ஓம் ஸரண்யாய நம:
ஓம் ஸர்வதாயகாய நம:
ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் லோகத்ரயாதீஸாய நம:
ஓம் ஸிவாய நம:
ஓம் ஸாரஸ்வதப்ரதாய நம:
ஓம் வேதோத்தர்த்ரே நம:
ஓம் வேதநிதயே நம:
ஓம் வேதவேத்யாய நம:
ஓம் புரதநாய நம:
ஓம் பூர்ணாய நம:
ஓம் பூரயித்ரே நம:
ஓம் புண்யாய நம:
ஓம் புண்யகீர்த்தயே நம:
ஓம் பராத்பரஸ்மை நம:
ஓம் பரமாத்மநே நம:
ஓம் பரஸ்மை ஜ்யோதிஷே நம:
ஓம் பரேஸாய நம:
ஓம் பாரகாய நம:
ஓம் பரஸ்மை நம:
ஓம் ஸகலோநிஷத்வேத்யாய நம:
ஓம் நிஷ்களாய நம:
ஓம் ஸர்வஸாஸ்த்ரக்ருதே நம:
ஓம் அக்ஷமாலா ஜ்ஞாநமுத்ரா யுக்தஹஸ்தாய நம:
ஓம் வரப்ரதாய நம:
ஓம் புராண புருஷாய நம:
ஓம் ஸ்ரேஷ்டாய நம:
ஓம் ஸரண்யாய நம:
ஓம் பரமேஸ்வராய நம:
ஓம் ஸாந்தாய நம:
ஓம் தாந்தாய நம:
ஓம் ஜிதக்ரோதாய நம:
ஓம் ஜிதாமித்ராய நம:
ஓம் ஜகந்மயாய நம:
ஓம் ஜராம்ருத்யுஹராய நம:
ஓம் ஜிவாய நம:
ஓம் ஜயதாய நம:
ஓம் ஜாட்யநாஸதாய நம:
ஓம் ஜபப்ரியாய நம:
ஓம் ஜபஸ்துத்யாய நம:
ஓம் ஜபக்ருதே நம:
ஓம் ப்ரியக்ருதே நம:
ஓம் ப்ரபவே நம:
ஓம் விமலாய நம:
ஓம் விஸ்வரூபாய நம:
ஓம் விஸ்வகோப்த்ரே நம:
ஓம் விதிஸ்துதாய நம:
ஓம் விதயே நம:
ஓம் விஷ்ணவே நம:
ஓம் சிவஸ்துத்யாய நம:
ஓம் ஸாந்திதாய நம:
ஓம் க்ஷõந்தி பாரகாய நம:
ஓம் ஸ்ரேய: ப்ரதாய நம:
ஓம் ஸ்ருதிமயாய நம:
ஓம் ஸ்ரேயஸாம் பதயே நம:
ஓம் ஈஸ்வராய நம:
ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்த ரூபாய நம:
ஓம் ப்ராணதாய நம:
ஓம் ப்ருதிவீபதயே நம:
ஓம் அவ்யக்தாய நம:
ஓம் வ்யக்த ரூபாயை நம:
ஓம் ஸர்வஸாக்ஷிணே நம:
ஓம் தமோஹராய நம:
ஓம் அஞ்ஞாநநாஸகாய நம:
ஓம் ஜ்ஞாநிநே நம:
ஓம் பூர்ணசந்த்ரஸமப்ரபாய நம:
ஓம் க்ஞாநதாய நம:
ஓம் வாக்பதயே நம:
ஓம் யோகிநே நம:
ஓம் யோகீஸாய நம:
ஓம் ஸர்வகாமதாய நம:
ஓம் மஹாமௌநிநே நம:
ஓம் மஹாயோகிநே நம:
ஓம் மௌநீஸாய நம:
ஓம் ஸ்ரேயஸாம்நிதயே நம:
ஓம் ஹம்ஸாய நம:
ஓம் பரம ஹம்ஸாய நம:
ஓம் விஸ்வகோப்த்ரே நம:
ஓம் விராஜே நம:
ஓம் ஸ்வராஜே நம:
ஓம் ஸுத்தஸ்படிக ஸங்காஸாய நம:
ஓம் ஜடாமண்டல ஸம்யுதாய நம:
ஓம் ஆதிமத்யாந்தரஹிதாய நம:
ஓம் ஸர்வவாகீஸ்வரேஸ்வராய நம:

புதுச்சேரி - முத்தியால்பேட்டை - ஆலய முகப்பு :  

[Image1]  
 புதுச்சேரி நகரின் நடுவே முத்தியால்பேட்டையில் கோயில் அமைந்துள்ளது.
 முழுவதும் சாளக்கிராமத் தாலான திருமேனியைக் கொண்டு அருள்பாலிக்கும் இந்த ஹயக்ரீவர் ஆலயத்திற்கு, ஒருமுறை சென்று வந்தாலே உங்கள் வாழ்வில் திருப்புமுனை ஏற்படும் என்பது திண்ணம்.

நேசமுடன்,

ரிஷி.

2 comments:

karges said...

"எப்போது மனித முயற்சிகள் தோற்றுப்போய் , ஏதாவது வழி கிடைக்காதா எனும் ஏங்கும்போது, இறைவனின் திருவடிகளை தவிர இளைப்பாற வேறு இடமே இல்லை"

தாங்களே சொல்லிவிட்டீர்கள்
அது இளைப்பாறுவதற்கு ஒரு இடம் தான், அதனால் பிரயோஜனம் ஏதும் இல்லை.. ஆகவே சக மனிதனின் நிழலில இளைப்பாற கற்றுக்கொள்வோம்... சத்தியமாகா நீங்கள் கூறியது போல் கேலி செய்யவில்லை.. எல்லாம் தெரிந்தும் ஏன் இருப்பதை விட்டுவிட்டு இல்லாத்தை நாடி போகிறீர்கள் என்றுதான் தாழ்மையுடன் கேட்கிறோம்...

தாங்களாவது பரவாயில்லை இல்லை என்று தெரிந்தும் போகிறீர்கள் .நம்மில் பலர் அது தெரியாமலே உள்ளர்... சும்மா கும்புட்டுட்டு போனாலும் பரவால்ல...

1.நேரம்
2.பொருள்
3.அடுத்தவர்களை மனதளவிலும் உடலளவிலும் புண்படுத்துவது என்ற அளவில்தான் உள்ளது இன்றைய இறைவழிபாடு....

நான் குறிப்பிடுவது மோஹிக்களையும் , கத்தோலிக்க வெறியர்களையும் கூட சேர்த்துதான்.. மேல் சொன்ன மூன்றும் அன்பை போதிக்கும் புத்த மததிலும் , இறை தூதராக நம்பப்பட்ட யேசு கிறிஸ்துவை நம்புகிறவர்களிடமும் உள்ளது.. இந்துக்களையும் இசுலாமியர்களையும் அடிக்கடி குறிப்பிடுவதற்கான காராணம் அவர்கள் அடித்துகொள்வது கண்முன்னே தெரிகிறது அவ்வளவுதான்...


தயவு செய்து மனிதர்களை நேசிக்க கற்றுக்கொள்வோம்..

இல்ல சாமி கும்புட்டுட்டேதான் மனிதனை நேசிப்பேன்னு சொன்னா தாராளமாக.. ஆனால் மேற்கூறிய மூன்று விஷயங்களை தயவு செய்து கருத்தில் கொள்ளுங்கள்

Chitti said...

இத்தனை நாள் இங்கு( புதுச்சேரியில்) இருந்து இது தெரியாமல் போய்விட்டதே. இனி நான் செல்வேன். ஹயக்ரிவரின் வரலாற்றை தந்தமைக்கு மிக்க நன்றி.

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com