Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

மங்கள ரூபிணி - துக்க நிவாரண அஷ்டகம்

| Nov 25, 2010
மங்கள ரூபிணி - துக்க நிவாரண அஷ்டகம் 
- மனதை வருடும் துக்க நிவாரண அஷ்டகம் , பாடலை கேட்க, பார்க்க கீழே உள்ள இந்த வீடியோ லிங்கை க்ளிக் செய்யவும்.
காலையில் இந்த பாடலை ஒருமுறை கேட்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் , உங்கள் மனதுக்கு வல்லமை தந்து , உங்கள் கவலைகளை பறந்தோடச் செய்யும். காமாட்சி அம்மனின் அருள்கிடைக்க பிரார்த்திக்கிறோம்!

பரிகாரங்கள் செய்வது எப்படி?

| Nov 24, 2010
எந்த ஒரு மனிதனும் தனக்கு வேறு ஒரு வழியில்லை... தன்னால் முடியக்கூடியது எதுவும் இல்லை , நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது என்று உணரும் தருணத்தில் தான் , அவனது மனது ஜோதிடம், ஜாதகம் என்று திரும்புகிறது.
நான் , தான் என்னும் அகம்பாவம் அழியும்போது தான் இறைவனை நினைக்க தோன்றும்.
Career Related Yagnas
உதாரணத்திற்கு நம் குடும்பத்தில் யாருக்காவது உடல் நலம் சரியில்லை என்று வைத்துக்கொள்வோம். முதலில் ஒரு சின்ன ஆஸ்பத்திரி, அப்புறம் இன்னும் கொஞ்சம் பெரியது, இன்னும் பெரிய டாக்டர் இப்படியே நீளும். அவர்கள் ஒரு பெரிய தொகையை சொல்லி உடனடியாக ஆபரேஷன் செய்யவேண்டும் என்று கூறினால்,  அந்த தொகையை ஏற்பாடு செய்து விட்டால் பிரச்னை இல்லை. எப்பொழுது அந்த பெரிய டாக்டரும் கையை விரித்து விடுவாரோ, அல்லது அந்த தொகை ஏற்பாடு செய்ய முடியவில்லையோ , அப்பொழுது மாட்டிக் கொள்வது கடவுளும், ஜோதிடர்களும்.

இப்படித்தான் ஒரு அன்பர் எம்மிடம் வந்தார். "சார், கொஞ்சம் என்னோட ஜாதகம் பார்த்து சொல்லுங்க சார். எனக்கு இந்த நோய் பிரச்னையிலிருந்து விடுதலை வேணும். பரிகாரம் எதாவது செய்யனும்னா செஞ்சுவிடுகிறோம்", என்று கேட்டார்.

நாமும் அவரது ஜாதகத்தை ஆராய்ந்து , அவருக்கு பலவீனமான கிரகங்களுக்குத் தக்க பரிகாரம் கூறினோம். அவருக்கு , ஆறாம் இடம் பலவீனமாக இருந்தது.  ஆறாம் இடம் - ருண, ரோக, சத்ரு ஸ்தானம். அதாவது கடன், நோய், எதிரியைக் குறிக்கும். அந்த இடத்தின் அதிபதி பலவீனமாக இருந்தாலோ , அல்லது அந்த வீடு பாவ கிரகங்களின் பார்வையிலோ , சேர்க்கையிலோ இருந்தால் , அந்த இடத்தின் அதிபதியின் தசை நடந்தால் , அவர் கடன் அல்லது நோயினால் பாதிக்கப்படுகிறார்.
அதற்கு அந்த கிரகத்தின் அதிபதிக்கு உரிய பரிகாரம் மேற்கொள்ளவேண்டும். இந்த அன்பருக்கு அதன்படி குரு பகவானுக்கு உரிய பரிகாரம் மேற்கொள்ளவேண்டி இருந்தது. நண்பரும் அதன்படி ஆலங்குடி சென்று, குரு பகவானை தரிசித்து விட்டு வந்தார். ஆனால் பலன் முழுவதுமாக கிடைக்கவில்லை. ஓரளவு தான் அவருக்கு பலன் தெரிந்தது.


Mrityunjaya Homam
திரும்பவும் அவர் எம்மிடம் வந்தார்.

பரிகாரம் செய்யும் அன்பர்கள் ஒரு விஷயத்தை மனதில் ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும். பரிகாரம் என்பது நல்ல மழை பெய்யும் நேரத்தில் கையில் ஒரு குடையுன் பாதுகாப்பாக செல்வதற்கு ஒப்பானது மட்டுமே. மழை அதிகமாகப் பெய்தால் , குடை இருந்தும் , நீங்கள் நனையத் தான் வேண்டி இருக்கும். நமக்கு கிடைக்கும் துன்பங்கள் , நமது கர்ம வினைக்கு ஏற்ப , இந்த ஜென்மத்தில் திரும்பக் கிடைக்கும். பரிகாரங்கள் அதன் தாக்கத்தை , கடுமையை ஓரளவுக்கு குறைக்கச் செய்யும். அவ்வளவுதான்.
காலம் முழுக்க அநியாயங்கள் செய்துவிட்டு , பரிகாரம் செய்தால் மட்டும் போதுமா !? என்று கேட்டால், இது பொருத்தமாக தோன்றவில்லை. வந்திருந்த நண்பர் - ஒரு அரசாங்க அதிகாரி. தினமும் லஞ்சம் - சர்வ சாதாரணமாக புழங்கும் இடம். அவரால் வாங்காமலும் இருக்க முடியாது. அவர் இருக்கும் ஆபீஸ் சூழ்நிலை அப்படி.

ஆலங்குடி கோவிலிலும் அவர்க்கு தெரிந்த நண்பரைச் சந்தித்து, அங்கும் ராஜ உபச்சாரம். ஏதோ ஒரு பிக்னிக் போவதுபோல் , கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் சென்று வந்து விட்டார்.

 பரிகாரம், ஹோமம் , யாகம், அன்னதானம் ஆகியவை அந்த தேவதையின் முழு ஆசிர்வாதம் கிடைக்கச்  செய்யப்படுவது. பரிகாரம் செய்ய விரும்பும் அன்பர்கள் அங்கு சென்று தங்கள் பராக்கிரமத்தைக் காட்டாமல் இருப்பதே நல்லது. மேலும் எந்த ஒரு பரிகாரம் செய்ய விரும்பினாலும் , பரிகாரம் செய்ய விருக்கும் தினத்திற்கு முன் , குறைந்தது ஒரு மண்டலத்திற்கு (48 நாட்கள்) விரதமிருந்து , உடலையும், மனதையும் சுத்தமாக வைத்து, இரு வேளை நீராடி , அந்த தெய்வத்தை மனமுருக வேண்டி பின் பொருத்தமான நாளில் அந்த ஸ்தலத்துக்கு சென்று இறைவனை மனமார தொழுது, குறிப்பட்ட தொல்லைகளில் இருந்து விடுவிக்க வேண்டி வழிபடவேண்டும். அபிஷேகம், அர்ச்சனை ,வாய்ப்பு இருந்ததால் அங்க பிரதஷ்ணம் செய்வது ஆகியவை இன்னும் நல்லது. (சபரி மலைக்கு மாலை அணிபவர்கள் இருப்பதை போல).
உடல் நலம் மிக குன்றியவர்கள் - விரதம் இருக்க இயலாதவர்கள் , மனதளவில் முடிந்தவரை நாம ஜபம் செய்ய வேண்டும்.
பரிகாரம் செய்து முடித்த பிறகும், பிறருக்கு தெரியாமல் இருந்தால் கூட ,  நம் மனதை உறுத்தும் தவறுகளை மீண்டும் செய்யாமல் , சுயக் கட்டுப்பாட்டுடன் இருத்தல் அவசியம். அது உங்கள் சந்ததியினருக்கு நல்லது.

அந்த நண்பருக்கு இதை எடுத்து சொல்லி, அவரை மீண்டும் ஒருமுறை சென்று வரச் சொன்னோம்.  இதைத் தவிர்த்து  , அவருக்கு நியாயம் இல்லாத முறையில் வரும் லஞ்சப் பணத்தை , சொந்த செலவுக்கு பயன்படுத்தாது - கோவில்களில் அன்னதானத்திற்கோ அல்லது முதியோர் இல்லத்திற்கோ பயனுள்ள வழியில் செலவிடச் சொன்னோம். அவர்களின் வயிறு குளிர குளிர, எத்தனையோ வயிறு எரிந்து பணம் வாங்கிய பாவம் குறையும். இதை செய்தால் உங்கள் நோயிலிருந்து முற்றிலும் நிவாரணம் கிடைக்கும் என்று கூறி அனுப்பினோம்.  அதன்படியே , நண்பர் திரும்பவும் ஆலயம் சென்று வந்து, அவரால் முடிந்தவரை அநாதை ஆசிரமங்களுக்கும் , ஆலயப் பணிகளுக்கும் உதவி வருகிறார்.
அவரே ஒருநாள் எம்மிடம் திரும்பி வந்து , இப்போது நோயின் தீவிரம் மிகவும் மட்டுப் பட்டு விட்டதாகவும், முன் எப்போதையும் விட , மன நிறைவான வாழ்க்கை வாழுவதாகவும் தெரிவித்தார்.
Pictures Of Mookambika
எனவே , பரிகாரம் செய்யும் அன்பர்கள் - முழு நம்பிக்கையுடன் , மேலே கூறியபடி முறைகளை பின்பற்றி செய்து வர , அவர்கள் வாழ்வில் நல்லதொரு மாற்றம் கண்டிப்பாக நிகழும்.இதைத் தவிர தங்கள் இஷ்ட தெய்வத்தை நித்ய வழிபாடு செய்வதைவழக்கமாக வைத்திருங்கள். அவன் இஷ்டப்படியே நமக்கு எல்லாமே இங்கு ப்ராப்தம். 

ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹா !

ராசிகள் - நட்சத்திரங்கள் - கிரகம் - தெய்வம் - அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள்

| Nov 20, 2010
நாம் பிறந்த நட்சத்திரப்படி நமக்கு எந்த ராசி? யார் ராசி அதிபர்? யார் நட்சத்திர அதிபர்? எந்த தெய்வம் நாம் பிறந்த நட்சத்திரத்திற்கு இஷ்ட தெய்வம்?

ராசிகள்       நட்சத்திரங்கள்
மேஷம்           - அசுவினி, பரணி, கார்த்தி கை 1-ஆம் பாதம் முடிய
ரிஷபம்           - கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரிஷம் 2-ஆம் பாதம் முடிய
மிதுனம்         - மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய
கடகம்            - புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய
சிம்மம்          - மகம், பூரம் உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
கன்னி            - உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய
துலாம்          - சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய
விருச்சிகம்- விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய
தனுசு             - மூலம், பூராடம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
மகரம்            - உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய
கும்பம்         - அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய
மீனம்           - பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடியநட்சத்திரங்கள்                                                                                  தெய்வம் 

 
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன் (ஞாயிறு)         சிவன்
ரோகிணி, அத்தம், திருவோணம் - சந்திரன் (திங்கள்);       - சக்தி
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய்                - முருகன்
திருவாதிரை, சுவாதி, சதயம் - இராகு                              - காளி, துர்க்கை 
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - குரு                           - தட்சிணாமூர்த்தி
பூசம், அனுசம், உத்திரட்டாதி; - சனி                                  - சாஸ்தா 
ஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன்                                     - விஷ்ணு
மகம், மூலம், அசுவினி - கேது                                             - வினாயகர் 
பரணி, பூரம், பூராடம் - சுக்கிரன் (வெள்ளி )                        - மகா லக்ஷ்மி

  நட்சத்திரங்கள் --------------- அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள்

அஸ்வினி                  - ஸ்ரீ சரஸ்வதி தேவி
பரணி                     - ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
கார்த்திகை              - ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
ரோகிணி                  - ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)
மிருகசீரிடம்              - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
திருவாதிரை                     - ஸ்ரீ சிவபெருமான்
புனர்பூசம்                         - ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)
பூசம்                           - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)
ஆயில்யம்                 - ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
மகம்                         - ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
பூரம்                        - ஸ்ரீ ஆண்டாள் தேவி
உத்திரம்                  - ஸ்ரீ மகாலக்மி தேவி
ஹஸ்தம்                - ஸ்ரீ காயத்திரி தேவி
சித்திரை                             - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
சுவாதி                   - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
விசாகம்               - ஸ்ரீ முருகப் பெருமான்
அனுசம்                 - ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்
கேட்டை               - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
மூலம்                  - ஸ்ரீ ஆஞ்சனேயர்
பூராடம்                - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
உத்திராடம்                      - ஸ்ரீ வினாயகப் பெருமான்
திருவோணம்                  - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
அவிட்டம்                     - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணுப் பெருமான்)
சதயம்                       - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
பூரட்டாதி                - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
உத்திரட்டாதி             - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
ரேவதி                      - ஸ்ரீ அரங்கநாதன்

குருப் பெயர்ச்சி - 21.11.2010 ( கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு)

|
நவக் கிரகங்களில் - முழு சுபரான குரு பகவான் நாளை (21 .11 .2010 )  இரவு 11 .11 மணிக்கு கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கிறார். குரு பகவானைப் பற்றியும், அவரது ஸ்லோகங்களைப் பற்றியும் இந்தக் கட்டுரை.

 குழந்தைச் செல்வம், காசு பணம். இந்த இரண்டையும் விரும்பாதவர்களே இருக்க முடியாது. தனம், புத்திரம் இந்த இரண்டுக்கும் அதிபதி குரு பகவான். நம் ஜாகத்தில் குரு பலமாக இருந்தால் இந்த இரு யோகமும் தங்குதடையின்றி அமையும். கிரகங்களிலேயே சுப கிரகம் குரு. இவர் இருக்கும் இடம்தான் சங்கடங்களுக்கு ஆளாகுமே தவிர, இவரது பார்வை மிகவும் சக்தி வாய்ந்தது. இவரது பார்வை பல தோஷங்களை அகற்றிவிடும் வல்லமை கொண்டது. குரு 5, 7, 9 பார்வையில் பார்க்கும் இடங்கள் சுபிட்சம் பெறும். ‘அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு’ என்ற ஜோதிட வாக்கு இவரை குறிப்பதுதான். சமூக அந்தஸ்து, ஆன்மீக ஈடுபாடு, தர்ம காரியங்கள், நற்பணி நிலையங்கள், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள் அமைத்தல், பள்ளி, கல்லூரிகள் கட்டுதல், வங்கி, அரசு கஜானா போன்ற இடங்களில் வேலை கிடைத்தல் நிதி, நீதித்துறையில் பணிபுரிவது, நீதிபதி, அரசு உயர்பதவிகள் போன்றவற்றை அளிக்கும் வல்லமை உடையவர் குரு பகவான்.
குருவின் அம்சங்கள் (ஆதிக்கம்)
கிழமை: வியாழன்
தேதிகள்: 3, 12, 21, 30
நட்சத்திரம்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
ராசி: தனுசு, மீனம். கடகத்தில் உச்சம்
நிறம்: மஞ்சள்
ரத்தினம்: புஷ்பராகம்
தானியம்: கொண்டைக்கடலை
ஆடை: தூய மஞ்சள்
குருவுக்கு உரிய தேதிகள், கிழமைகள், நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு பல யோகங்கள் உண்டாகும். மேலும் ஜாதகத்தில் கேந்திர, கோணங்களில் இருப்பதும் சிறப்பானதாகும்.
எந்த லக்னம்/ராசியில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் எந்த வகையான யோகங்களை தருவார்?
மேஷ லக்னம்/ராசி & பாக்ய ஸ்தான பலன்கள், கல்வியில் உயர் நிலை, நிதி, நீதித்துறையில் பணிபுரியும் யோகம்.
மிதுன லக்னம்/ராசி & வெளிநாடு செல்லும் வாய்ப்பு, மனைவி வகையில் யோகம், தொழில் மூலம் உயர்வு.
கடக லக்னம்/ராசி & வெளிநாட்டு தொழில் யோகம். பள்ளி, கல்லூரிகள் அமைக்கும் யோகம்.
சிம்ம லக்னம்/ராசி & திடீர் அதிர்ஷ்டங்கள். பிள்ளைகளால் யோகம்.
கன்னி லக்னம்/ராசி & கல்வி, கலை ஆகியவற்றில் யோகம். வெளிநாட்டு தொடர்புகள் உண்டாகும்.
விருச்சிக லக்னம்/ராசி & வங்கி, நீதித்துறையில் உயர் பதவிகள். சொந்த நிறுவனம், பைனான்ஸ் கம்பெனி தொடங்கும் யோகம்.
தனுசு லக்னம்/ராசி & கல்வியில் மேன்மை, நிலபுலன்களால் யோகம்.
கும்ப லக்னம்/ராசி & சொல்லாற்றல், நிதி, நீதி போன்ற துறைகளில் யோகம்.
மீன லக்னம்/ராசி & கவுரவ பதவிகள். தொழில், வியாபாரத்தால் செல்வச் செழிப்பு, அந்தஸ்து, புகழ் உண்டாகும் யோகம்.
எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும் குரு நீச்சம் பெறாமலும் 6, 8, 12&ம் இடத்திலும் 6, 8, 12 ஆகிய அதிபதிகளுடன் சேராமல் இருக்க வேண்டும்.
வழிபாடு, பரிகாரம்
கும்பகோணம் அருகே உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாகும். அங்கு பரிகார பூஜைகள் செய்து வழிபடலாம். நவ திருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி குரு ஸ்தலமாகும். அங்கும் வழிபாடு செய்யலாம். திருச்செந்தூரில் முருகப் பெருமான் குரு வடிவாகவே அருள்புரிகிறார். எல்லா சிவன் கோயில்களிலும் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடத்தி வழிபடலாம்.
‘ஓம் விருஷப த்வஜாய வித்மஹே
க்ரூணி ஹஸ்தாய தீமஹி
தந்தோ குரு பிரசோதயாத்’

அல்லது
‘ஓம் குரு தேவாய வித்மஹே
பிரம்மானந்தாய தீமஹி
தந்நோ குரு பிரசோதயாத்
’ என்ற குரு காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.
‘ஓம்பிம் சிவய வசி குரு தேவாய நம’ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.
வியாழக்கிழமை விரதம் இருந்து மாலையில் சிவன் கோயிலுக்கு செல்லலாம். அங்கு தட்சிணாமூர்த்திக்கு நடக்கும் சிறப்பு பிராத்தனையில் கலந்துகொண்டு பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டைக்கடலை சுண்டல் வழங்கலாம்.

குருப் பெயர்ச்சியினால் ஏற்படும் பலன்களையும், பரிகாரங்களையும் அறிய  நாம் ஏற்கனவே கொடுத்துள்ள இந்தக் கட்டுரையை படிக்க இங்கே சொடுக்கவும் :

http://www.livingextra.com/2010/11/2010.html

தசரத மன்னன் இயற்றிய சனி பகவான் ஸ்தோத்ரம்

|
 தசரத மன்னன் சனி பகவானை பதித்துச் செய்த ஸ்தோத்திரம் மிக்க சக்தி வாய்ந்தது. அவர் எதற்காக இதை இயற்றினார் என்பதற்கு ஒரு வரலாறு உண்டு.

ரகுவம்சத்தின் தசரதன் (ஸ்ரீ ராமபிரானின் தந்தை) பூவுலகை ஆண்ட போது  ஒரு சங்கடமான நிலை உண்டாயிற்று. அரசவை ஜோதிடர்கள் சனிபகவான் ரோஹிணி நட்சத்திரத்தின் சகடத்தை உடைத்துக் கொண்டு சஞ்சாரம் செய்யப்போவதால் பன்னிரெண்டு வருடம் நாட்டில் மழை  பெய்யாது. நீர் வற்றிப்பஞ்சம் ஏற்படும். தானிய விளைவு இருக்காது. உயிர்கள் அனைத்தும் பட்டினியால் மடிந்து விடும் என்று கூறினார்கள்.

உடனே தசரதன் தனது மந்திரிமார்களுடனும் வசிஷ்டர் முதலிய முனிவர்களுடனும் ஆலோசனை செய்தார். சனிபகவானோடு தசரதன் போரிட்டு அவர் ரோஹினி நட்சத்திரத்தை உடைக்காமல் தடுக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.

அற்புதமான ரதத்தில் ஏறி சனி பகவானுடன் போர் தொடுக்கப் புறப்பட்டார் தசரதன். சனி பகவான் மேல் தனது அம்பைச் செலுத்தினார்.

இதைக் கண்ட சனி பகவான் யாராலும் மாற்றப்பட முடியாத தன்னுடைய சஞ்சாரத்தை மாற்றுவதற்கு ஒரு மனிதகுல மன்னனான தசரதன் முயற்சி செய்வதை அறிந்து தசரதனின் அறியாமையை எண்ணிச் சிரித்தார்.

ஆனாலும் சுயநலம் கருதாமல் நாட்டு மக்களின் நலம் ஒன்றே பிரதானம் எனக்கருதி, யாராலும் வெற்றி கொள்ள முடியாத தன்னோடு போரிட வந்த  தசரதனின் மேன்மை கண்டு அவரை மெச்சியவாறே "தசரதா, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்" என்றார்.

உடனே தசரதன் , "நாட்டில் தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் கஷ்டங்கள் வராமல் தவிர்க்கப்பட வேண்டும். இது ஒன்றே என் கோரிக்கை" என்று பணிந்தார்.

உடனே "அவ்வாறே தருகிறேன்" என்று வரமளித்த ஸ்ரீ சனிபகவானைத் துதித்து அவர் மேல் ஸ்தோத்ரம் ஒன்றைப் பாடினார் தசரதன்.

அதுகேட்டு மகிழ்ந்த ஸ்ரீ மகிழ்ந்த ஸ்ரீ சனி பகவான் "இத்தோத்திரத்தைத் சொல்லி என்னைச் துதிப்பவர்க்கு என்னால் துன்பமே வராது" என்று அருள் செய்தார்.

அந்த ஸ்தோத்ரம் வருமாறு:-

நம: கிருஷ்ணாய நீலாய ஸிதிகண்டநியாய ச
நமோ நீலமயூகாய நீலோத்பல நியாய ச
நமோ நிர்மாம்ஸ தேஹாயா தீர்கஸ்ருதி ஜடாய ச
நமோ விஸாலநேத்ராய சுஷ்கோதர பயானக

நம: பெளருஷகாத்ராய ஸ்தூலரோம்ணேச தே நம:
நமோ நித்யம் தார்தாய ஹ்யத்ருப்தாய சதே நம:
நமோ கோராய ரெளத்ராய பிஷணாய கரானிதே
நமோ திர்காய சுஷ்காய காலடம்ஷ்டர நமோஸ்துதே

நமஸ்தே கோரருபாய துர்நிரீக்ஷ்யாய தே நம:
நமஸ்தே ஸர்வபக்ஷாய வலீமுக நமோஸ்துதே
ஸூர்யபுத்ர நமஸ்தேஸ்து பாஸ்கரே பயதாயினே
அதோ த்ருஷ்டே நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்துதே

நமோ மத்தகதே துப்யம் நிஷ்ப்ரபாய நமோ நம:
தபனாஜ் ஜாததே ஹாய நித்யயோகதராய ச
ஞானசக்ஷுர் நமஸ்தேஸ்து காஸ்பாத்மஜஸூனவே

துஷ்டோ ததாஸி ராஜ்யம் த்வம் கருத்தோ
தேவா ஸுரமானுஷ்யாஸ்ச ஸித்தவி த்யாதரோரகா:
த்வயாவலோகிதாஸ்ஸர்வே தைத்யாமாஸு வ்ரஜத்தி தே
பிரம்மா சுக்ரோ யமஸ்சைவ முனயஸ்ஸப்ததாரகா:
ராஜ்யப்ரஷ்டா: பதந்தீஹ தவ த்ருஷ்ட்யாவலோகிதா

த்வயாவலோகிதஸ்தேபி நாஸம் யாந்தி ஸமுலத:
ப்ரஸாதம் குரு மே ஸெளரே ப்ரணத்யா ஹி த்வ மர்த்தித:
ஏவம் ஸ்துதஸ்ததா ஸெளரி: க்ரஹராஜோ மஹாபல:
அப்ரவீஸ்ச சனிர்வாக்யம் ஹ்ருஷ்டரோமா ஸ பாஸ்கரி

ப்ரீதோஸ்மிதவ ராஜேந்த்ர ஸ்தோத்ரேணாநேந ஸ்ம்ப்ரதி!
அதேயம் வா வ ரம் துப்யம்ப்ரீதோஹம் ப்ரததாமி ச!!
த்வயா க்ருதம் து யத் ஸ்தோத்ரம் ய: படேதிஹ மாநவ!
ஏகவாரம் த்விவாரம் வா பீடாம் முஞ்சாமி தஸ்ய வை !!
ம்ருத் யுஸ் தாநக தே வாபி ஜந்மஸ்தாநகதேபி வா!!
ய: புமாந் ஸ்ரத்தயா யுக்த: ஸுசி: ஸ்நாத்வா ஸமாஹித:!!
ஸமீபத்ரை: ஸமப்யர்ச்ய ப்ரதிமாம் லோஹஜாம் மம!
மாஷோட நம் திலைர் மிஸ்ரம் தத்யால் லோஹம் து தக்ஷிணாம்!!
க்ருஷ்ணாம் காம் மஷிஷீம் வஸ்த்ரே மாமுத்திஸ்ய த்விஜாதயே!!
மத்திநேது விஸேஷேண ஸ்தோத்ரரேணாநேந பூஜயேத்!!

பித்ருக்களின் மனம் குளிரவைக்கும் திலா ஹோமம் - விளக்கக் கட்டுரை

| Nov 19, 2010
பல ஆயிரக்கணக்கான அன்பர்களின் வருங்கால ஷேமத்தை மனதில் கொண்டு, அவர்கள் வாழ்வில் நிச்சயமாக ஒரு மலர்ச்சியை  ஏற்படுத்த , அந்த சர்வேஸ்வரனை முழு மனதாய் தியானித்து - திலா ஹோமம் பற்றி ஒரு முழு விளக்கக் கட்டுரை சமர்ப்பிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.


தில் என்றால் எள். திலா ஹோமம் ( Thilaa homam ) என்பது எள்ளினால் செய்யப்படும் ஹோமம். சாதாரணமாக பிதுர்க்களுக்கு செய்யும் தர்ப்பனத்திற்கும் , திலா ஹோமத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. திலா ஹோமம் - ராமேஸ்வரம் அல்லது  திருப்புல்லாணி ஆகிய இரு இடங்களில் மட்டுமே செய்யப்படுகிறது.


ராமேஸ்வரம் - நம் நாட்டின் தொன்மை வாய்ந்த புண்ணிய ஸ்தலங்களில் மிக முக்கியமானது. ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஸ்தாபித்த ராமநாதரால் உலகம் எங்கும் கோடிக்கணக்கான பக்தர்களை வசீகரித்து, பல கோடிக்கணக்கான ஆன்மாக்களின் பாவங்களைக் கரைத்து ஜீவன் முக்தி அடையை செய்யும் தவ பூமி.திலா ஹோமம் எங்கே செய்வது? ஏன் செய்ய வேண்டும்? யார் யார் கண்டிப்பாக செய்ய வேண்டும்? எவ்வளவு செலவாகும்? என்ன பலன்கள் ஏற்படும் என்கிற உங்கள் மனதில் தோன்றும் கேள்விளுக்கு விளக்கம் இதோ.


நீங்கள் அந்தணர்களாய் இருந்தால் நீங்கள் செல்லவேண்டிய இடம் திருப்புல்லாணி. மற்ற அனைத்து சமூகத்திற்கும் ராமேஸ்வரத்தில் செய்வது தான் முறை. ஒரு சிலருக்கு ராமேஸ்வரத்தில் தொடங்கி தனுஷ்கோடியில் முடிப்பதும்  வழக்கம்.
திலா ஹோமம் முடித்தவுடன் - சோளிங்கர் சென்று  யோக நரசிம்ஹர் ஆலயம் வந்து , தங்களால் முடிந்த அளவுக்கு ( 3 பேருக்கோ, 9 பேருக்கோ, 27 பேருக்கோ ) அன்னதானம் செய்வதும் நல்லது.  சோளிங்கர் - திருத்தணி , அரக்கோணம் அருகில் இருக்கும் ஸ்தலம். யோக நரசிம்ஹர் ஒரு மலையிலும், ஆஞ்சநேயர் சின்ன மலையிலும் அமர்ந்து அருள் பாலிக்கின்றனர்.

 பிதுர் தோஷம் நீங்குவதற்கு ஒரே பரிகாரம் இந்த திலாஹோமம்  தான். எவர் ஒருவர் குடும்பத்தில் முன்னோர்களுக்கு உரிய தர்ப்பனங்கள் தரப் படவில்லையோ,  எவர் ஒருவர் தலைமுறையில் - செயற்கை மரணம் ( கொலை) , ஆத்மாவின் விருப்பம் இல்லாமல் பிரிந்த உயிர் - விபத்துகள் போன்றவை, தற்கொலை , வயதான பெற்றோர்களை சரியாக கவனிக்காமல் , அநாதை இல்லம், முதியோர் இல்லம் போன்றவற்றில் அவர்களை வாட விடுதல் , போன்ற சமபவங்கள் நடந்திருப்பின், அந்த குடும்பத்திற்கு பிதுர் தோஷம் ஏற்படுகிறது. அந்த ஜாதகர் திலா ஹோமம் செய்யாமல் வேறு எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் அது உரிய நிவாரணம் அளிக்காது.

எவர் ஒருவர் வாழ்வில் திருமணத் தடை, விவாக ரத்து , நிம்மதி இல்லாத திருமண வாழ்க்கை , முறைகேடான உறவு முறைகள் - அதனால் வழக்கு, வில்லங்கம், குழந்தைகள் இல்லாமை, கர்ப்பசிதைவு,   குழந்தைகள் - பெற்றோர் மனம் கோணும்படி வேறு மதம் அல்லது சமூகத்தில் திருமணம் புரிதல், எத்தனையோ உரிய தகுதிகள் இருந்தும் , திறமைகள் இருந்தும் வாழ்வில் அதற்குரிய நிலையை அடைய முடியாமல் போதல், குடும்பத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுதல் , இதோ முடிந்துவிட்டது இந்த வேலை என்று நினைத்துக் கொண்டிருக்கும் கடைசித் தருணத்தில் - நம் கை நழுவி போகும் நிலை ,  என்று - திருப்தி அடையாத ஆத்மாக்கள் - அந்த தலைமுறையை , அது தாய் தந்தையோ , வாரிசுகளோ - அவர்கள் வாழ்வில் ஏதோ ஒரு வகையில் வேதனை ஏற்படுத்திவிடுகிறது. அப்படி தலைமுறை தலைமுறையாக ஏங்கித் தவிக்கும் ஆத்மாக்களை , சாந்தி அடையச் செய்து - அவர்களின் முழு ஆசீர்வாதம் வேண்டி செய்யப்படும் ஹோமமே இந்த திலா ஹோமம்.


ஜாதகப்படி - யார் யாருக்கு பித்ரு தோஷம் இருக்கிறது என்பதை எப்படி உணர முடியும்?

எல்லோருடைய ஜாதகத்திலும் அவரவர்  பிறந்த நேரப்படி லக்கினம் கணிக்கப்படுகிறது. மொத்தம் இருக்கும் பன்னிரண்டு கட்டங்களில் , ஒரு கட்டத்தில் " ல" என்று எழுதி இருக்கும். இது அந்த ஜாதகரின் முதல் வீடு என்று அழைக்கப்படுகிறது . கடிகாரச் சுற்றுப்படி 1 முதல் 12 வீடுகள் எண்ணிக்கொள்ளவும். எவர் ஒருவர் ஜாதகத்தில் - 1 , 5 , அல்லது 9 எனப்படும் திரிகோண வீடுகளில் - சர்ப்ப கிரகங்கள் எனப்படும் இராகு அல்லது கேது கிரகங்கள் இருந்தால் - அது பிதுர் தோசமுள்ள  ஜாதகம் என்று கருதப்படுகிறது.
இதைத் தவிர எவர் ஒருவர் ஜாதகத்தில் இரண்டு முக்கியமான வீடுகளும்  - பூர்வ புண்ணியம் எனப்படும் 5 ஆம் வீடும், கர்ம ஸ்தானம் எனப்படும் 10 ஆம் வீடும் - பாதிக்கப் பட்டிருந்தால் , அதன் அதிபதிகள் பாவ கிரகங்களால் பாதிக்கப் பட்டிருந்தால் , அந்த அதிபதிகளின் திசை நடக்கவிருந்தால் அவர்களும் பிதுர் தோஷத்தால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று பொருள்.
 
இது ஒரு பவர்புல் ஹோமம். முழு மனதுடன் செய்ய வேண்டும். முறைப்படி செய்ய தவறினால் அது செய்பவர்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அது போக முக்கியமான விஷயம் - நம் வாழ் நாளில்  ஒரே ஒரு தடவை மட்டுமே இதை செய்ய வேண்டும். சரியாக செய்யப்படும் திலா ஹோமம் , ஒரு சந்ததிக்கே நல்ல வழிகாட்டும்.
இதை செய்த ஆறு மாதங்களில் - நீங்கள் இதைக் கண்கூடாக உணர முடியும். உங்கள் வாழ்வில் ஒரு திருப்பு முனை நிகழும். உங்கள் ஜாதகப்படி பலம் பொருந்திய நாளில் இதைச் செய்வது நல்லது.

யோக பலம் பொருந்திய நாளை எப்படி தெரிந்து கொள்வது ? 
உங்கள் லக்கினத்திலிருந்து - 9 ஆம் வீட்டுக்கு உரியவரின் கிழமை உங்கள் வாழ் முழுவதும் - யோகமான நாளாக கருதப்படும். உதாரணத்திற்கு நீங்கள் மேஷ லக்கினத்தில் பிறந்து இருந்தால், 9 ஆம் வீடு தனுசு. அதற்கு அதிபர் - குரு பகவான். ஆகவே வியாழக்கிழமை - உங்களுக்கு யோகமான நாள்.
ஆகவே மேஷ லக்கினத்தில் பிறந்தவராக இருந்தால் - ஒரு வளர்பிறை வியாழக்கிழமையில், உங்கள் ராசிக்கு சந்திர அஷ்டமம் இல்லாத நாளில் - திலா ஹோமம் செய்து , அன்று இரவு தங்கி, வெள்ளிகிழமை  ராமேஸ்வரத்திலிருந்து கிளம்புதல் நலம். இதைபோலே , உங்கள் ஜாதகப்படி யோகமான நாளைத் தெரிந்துகொண்டு செயல்படவும்.

ஜாதகப்படி பிதுர் தோஷம் இல்லாதவர்களும், விருப்பம் இருந்தால் - வாழ்வில் ஒரே ஒரு முறை - திலா ஹோமம் செய்து கொள்ளலாம்.


அனைவருக்கும் அந்த சர்வேஸ்வரனின் ஆசிகளும், முன்னோர்களின் ஆசிகளும் கிடைக்க பிரார்த்திக்கிறோம்.

நமது ஆன்மிக அன்பர்களின் பார்வைக்காக ராமேஸ்வரம், திருப்புல்லாணி , தேவிப்பட்டினம் ( நவபாஷாணம்) பற்றிய படங்களின் தொகுப்பை வெளியிட்டிருக்கிறோம். இந்த இரு இடங்களுமே ராமேஸ்வரத்திற்கு வெகு அருகில் இருக்கும் ஸ்தலங்களாகும். இதில் நவபாஷானத்தில் இருக்கும் நவகிரகங்கள் ஸ்ரீ ராமராலேயே நிறுவப்பட்டு , வழிபட்ட நவகிரகங்களாகும். நாமே கிரகங்களை வலம் வந்து, நம் கைப்பட அர்ச்சித்து வழிபடலாம். (ஆண், பெண் இருபாலாரும்). ஆனால் இப்போது இருக்கும் நிலை?  கண்ணில் நீர்வரவைக்கும் அளவுக்கு கடலையே மாசுபடுத்தி இருக்கிறோம். தண்ணீரில் இறங்கி நவக்ரக வலம் வருவதற்கே மனசு கேட்பதில்லை. அவ்வளவு அசுத்தம்.. கொடுமை. !! செல்லும் பக்தர்களும் , கோவில் நிர்வாகமும் மனது வைத்தால் நவ கிரகங்களும் மனம் குளிரும். பக்தர்களுக்கும் நல்லது.


திருப்புல்லாணி சேதுக்கரை ( Thiruppullani sethukkarai )
திருப்புல்லாணி புஷ்கரணி (Thiruppullaani Pushkarani )
Dharba sayana ramar moolavarDharba sayana ramar UtsavarPattabisheka ramar moolavar


Pattabisheka ramar utsavar

குருப்பெயர்ச்சிப் பலன்கள் - 2010

| Nov 15, 2010
12 ராசிகளுக்கும் உரிய பலன்களும் , பரிகாரங்களும் :

கார்த்திகை மாதம் தீப திருநாளும் பௌர்ணமியும் இணைந்து வரும் 21 .11 .2010 அன்று நள்ளிரவு நேரத்தில் குரு பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு தனது சொந்த வீட்டில் பிரவேசிக்கிறார். எல்லா ராசிக்காரர்களும் இந்த குறிப்பிட்ட நேரத்தில் ஆலயம் சென்று குரு பகவானையோ, தட்சிணா மூர்த்தியையோ வழிபாடு செய்யலாம். வாய்ப்பு கிடைத்தால் திருவண்ணாமலை கிரிவலம் சென்று ஜோதி ரூபத்தில் அந்த சிவத்தை தரிசனம் செய்து  வரலாம்.நவ கிரகங்களில் சுப கிரகங்களாக வர்ணிக்கப்படுபவை குரு, சுக்கிரன், சந்திரன், புதன் ஆகிய நான்கு கிரகங்கள் மட்டுமே. இதிலும் வளர்பிறைச் சந்திரன் சுபராகவும் தேய்பிறைச் சந்திரன் அசுபராகவும் எடுத்துக் கொள்ளப்படும். அதேபோல புதனும் சுப கிரகத்தோடு சேருகிறபோது சுபத்தன்மை உடையவராகவும்; அசுபரோடு சேருகிற போது பாபத்தன்மை உடையவராகவும் கருதப்படும். ஆகவே முழு சுப கிரகங்களாகச் செயல்படுவது குருவும் சுக்கிரனும் மட்டும்தான். மற்ற ஐந்து கிரகங்களும் (சூரியன், செவ்வாய், சனி, ராகு-கேது) முழு பாப கிரகங்களாக ஜோதிட சாஸ்திரம் நிர்ணயித்திருக்கிறது.

மேற்கண்ட இரண்டு முழு சுப கிரகங்களான குருவை தேவகுரு என்றும்; சுக்கிரனை அசுர குரு என்றும் புராணங்கள் வர்ணிப்பதால், குரு ஒருவரையே முழு சுபகிரகம் எனவும் நல்லதைச் செய்ய வல்லவர் எனவும் பாராட்டலாம். அதனால்தான் "குரு பார்க்க கோடி நன்மை' என்று கூறப்படுகிறது.

அப்படிப்பட்ட குரு வருடத்திற்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு மாறுவார். "தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று பொதுவாகச் சொல்வதுபோல் குருப் பெயர்ச்சியினால் விமோசனம் ஏற்படும் என்றும்; குருபார்வையில் நன்மைகள் நடக்கும் என்றும் பொதுவாக எதிர்பார்க்கலாம்; நம்பலாம்.

குரு மாங்கல்ய காரகன்- கணவன் காரகன்(பர்தா காரகன்) என்றும்; சுக்கிரன் களஸ்திர காரகன் (மனைவி காரகன்) என்றும் சொல்லப்பட் டாலும், திருமணமாகாத ஆண்-பெண் இருபாலருக்கும் திருமண யோகத்தைத் தருகிற கிரகம் குருதான். அதனால்தான் குருபலம் வந்துவிட்டதா? வியாழ நோக்கம் வந்துவிட்டதா என்று ஜோதிடம் பார்ப்பார்கள்.

அதேபோல குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும் புத்திர யோகத்தைக் கொடுக்கும் கிரகம் குரு பகவான்தான்! இவர் புத்திர காரகன் என்பதோடு, காசு பணம் செல்வத்தைக் கொடுக்கும் தன காரகனும் ஆவார்! வித்தை, ஞானம், புகழ், கீர்த்தி, பெருமை, செல்வாக்கு, பாண்டித்யம், மேன்மை இவற்றையெல்லாம் தருகிற கிரகமும் குருதான்!  நவ கிரகங்களில் வடக்கு நோக்கி இருக்கும் கிரகம் குரு. சிவன் கோவிலில், சிவனுக்கு வலது புறம் தெற்கு பார்த்த வண்ணம் இருக்கும் தெய்வம் தட்சிணாமூர்த்தி. அவரையும் குரு என்பார்கள். ஆனால் நவ கிரக குரு வேறு; தெய்வ தட்சிணாமூர்த்தி குரு வேறு! நவ கிரக குருவுக்கு அதிதேவதை தட்சிணாமூர்த்தி.

குருவுக்கு உரிய ஸ்தலமாக திருச்செந்தூரும், கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடியும் சிறப்பாகக் கூறப்படுகிறது. மேலும் நெல்லை மாவட்டம் செங்கோட்டை புறநகரில் புளியறையிலும், காரைக்குடி திருப்பத்தூர் அருகில் (9 கி.மீ) பட்டமங்கலத்திலும் தட்சிணாமூர்த்தி சந்நிதி தனிச் சந்நிதியாக (வலம் வரும் அளவு) அமைந்திருக்கிறது. இதேபோல தஞ்சாவூர் அருகில் தென்குடித் திட்டை என்ற ஊரிலும் குரு பகவான் (வியாழன்) தனிச் சந்நிதியில் காட்சியளிக்கிறார். திருச்சி அருகில் பழூர் சிவாலயத்தில் நவ கிரகங்களும் தம்பதி சகிதம் எழுந்தருளியிருக்கிறார்கள். அதில் குருவும் தமது பத்தினி தாராவுடன் அருள் புரிகிறார்.

மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம் போகும் பாதையில் (அவுட்டர்) வள்ளலார் கோவில் என்ற இடத்தில் உள்ள சிவாலயத்தில் மேதா தட்சிணாமூர்த்தி நந்தி வாகனத்தில் காட்சியளிக்கிறார். கும்பகோணம், ஆடுதுறை அருகில் சூரியனார் கோவிலில், சூரியனுக்கு எதிரில் குரு எழுந்தருளியுள்ளார். சென்னைக்கு அருகில் தற்போது பாடி என்று அழைக்கப்படும் திருவலிதாயத்திலும், மயிலாடுதுறை பேரளம் பூந்தோட்டம் அருகில் திருவீழிமிழலையிலும், வேலூர் சங்கரன் பாளையம் பிள்ளையார் கோவில் தெருவில் ஸ்ரீ யோக தட்சிணா மூர்த்தியாகவும், சென்னை-திருப்பதி சாலையில் 40 கி.மீ. தூரம் ஊத்துக்கோட்டை என்ற ஊரில் அம்பாளை மடியில் இருத்தியபடி தாம்பத்ய தட்சிணாமூர்த்தியாகவும் அருள்புரிகிறார். புதுக்கோட்டை யிலிருந்து அறந்தாங்கி போகும் பாதையில் ஆலங்குடி என்ற ஊரில் தட்சிணாமூர்த்திக்கு குருப் பெயர்ச்சி ஹோமம், சிறப்பு அபிஷேகம், பூஜை நடத்தப்படுகிறது. மதுரை அருகில் குருவித்துறையிலும் (வைகைக் கரையில் உள்ள பெருமாள் கோவில் அருகில்) குருவுக்கு ஹோமம், அபிஷேகம், பூஜை செய்யப்படுகிறது. தேனி மாவட்டம், சின்னமனூர் அருகில் குச்சனூர் ஆதீனம் ராஜயோகம் தரும் வட குரு பகவான் ஸ்தலத்தில் குரு யானை வாகனத்தில் காட்சியளிக்கிறார். இங்கும் குருப் பெயர்ச்சி விழா நடக்கிறது.

குரு அவரவர் ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் வரும்போது நற்பலனும்; 3, 6, 8, 12 ஆகிய இடங்களில் வரும்போது துர்ப்பலனும்; ஜென்மம், 4, 10-ஆம் இடங்களில் வரும்போது சம பலனும் நடக்கும். இது பொது விதிதான். சந்திரா ராசிக்குக் கூறப்படுவதுபோல ஜென்ம லக்கனத்துக்கும் குருப் பெயர்ச்சிப் பலன் பொருந்தும். ஜனன ஜாதகத்தில் குரு நின்ற ராசிக்கு 2, 5, 7, 9, 11-ல் வரும்போது நற்பலனும்; 3, 6, 8, 12-ல் வரும்போது துர்ப்பலனும் நடக்கும். இது அனுபவப் பூர்வமான உண்மை.


மீன ராசிக்கு வந்திருக்கும் குரு பகவான் அங்கு ஆட்சி பலம் பெற்று, தான் நின்ற இடத்தில் இருந்து 5-ஆம் பார்வையாக கடக ராசியையும்; 7-ஆம் பார்வையாக கன்னி ராசியையும்; 9-ஆம் பார்வையாக விருச்சிக ராசியையும் பார்க்கிறார். குருவுக்கு 5, 7, 9-ஆம் பார்வை உண்டு.

குரு உங்களுடைய ராசிக்கு அல்லது லக்கனத்துக்கு எந்த இடத்தில் வந்திருக்கிறார் என்று கணித்துப் பலன் சொல்லுவதுபோல- அவர் பார்க்கும் இடங்கள் உங்கள் ராசிக்கு அல்லது லக்னத்துக்கு எத்தனை யாவது இடம் என்றும்; அதனால் நல்லதா கெட்டதா என்றும் ஆராய்ந்து, பார்வைப் பலன், சேர்க்கைப் பலன், ஸ்தான பலன், சார பலன் இவற்றையும் ஆய்வு செய்து விளக்கமாக இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளேன். குருப் பெயர்ச்சிப் பலன் நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் அதை சாதகமாக்கிக் கொள்ள பிரார்த்தனை, ஸ்லோக பாராயணம், பூஜை, பரிகார முறைகளைக் கடைப்பிடித்து ஆறுதல் அடையலாம்.

பரிகாரம் என்பது கிரக பலனையோ, வரும் விதிப் பலனையோ தடுத்து நிறுத்தும் வழியல்ல.  பரிகாரம் என்பது கிரக பலனை ஏற்றுக் கொள்ளுமளவு நமது மனதைப் பக்குவப்படுத்திக் கொள்வதாகும்! நமக்கு ஒரு கவசம் போன்றதாகும்!

வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்திக்கு அல்லது நவ கிரகத்தில் உள்ள வியாழனுக்கு (குருவுக்கு) சுண்டல் கடலை நெய்வேத் தியம் செய்து அர்ச்சனை செய்யலாம். அபிஷேகம் செய்து மஞ்சள் நிற ஆடை அணிவித்து மஞ்சள் நிற மலர்மாலை அல்லது முல்லை மலர் மாலை சாற்றலாம். தட்சிணாமூர்த்தி நெற்றியில் கஸ்தூரி திலகம் (பொட்டு) வைத்து வழிபடலாம். தட்சிணாமூர்த்திக்கும் நவ கிரகங்களுக்கும் ஹோமம் வளர்க்கலாம். நவ கிரக சந்நிதியில் வியாழ னுக்கு (குரு) அபிஷேகப் பூஜை செய்யலாம். குருவின் அதிதேவதை தட்சிணாமூர்த்தி என்பதால் அவருக்கும் பூஜை, வழிபாடு செய்யலாம்.

நவ கிரகங்களில் குரு கிரகத்துக்குச் செய்த அர்ச்சனைப் பொருட்களை தேங்காய், பழம் ஆகியவற்றை கோவிலிலேயே தானம் செய்து விடவேண்டும்; வீட்டுக்கு எடுத்து வரக் கூடாது. ஆனால் தட்சிணாமூர்த்திக்கு (தென்முகக் கடவுள்) அர்ச்சனை செய்த பிரசாதங் களை வீட்டுக்கு எடுத்து வரலாம். கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய இயலாதவர்கள் வீட்டிலேயே தட்சிணாமூர்த்தி படத்தின் முன்பாகவோ அல்லது குத்துவிளக்கு தீபம் ஏற்றியோ ஜப பாராயணம் செய்யலாம். திருமுறைப் பாடல்களைப் படிக்கலாம். வீட்டில் நவ கிரகப் படம் வைத்து வழிபடக்கூடாது. ஆனால் தட்சிணாமூர்த்தி படம் வைத்து பூஜை செய்யலாம்.

குரு காயத்ரீ மந்திரம்

ஓம் பிரஹஸ்பதீச வித்மஹே சுராசார்யாய தீமஹி

தந்நோ குரு ப்ரசோதயாத்


ஓம் வ்ருஷபத்வாஜாய வித்மஹே  க்ருணீ ஹஸ்தாய தீமஹி

தந்நோ குரு ப்ரசோதயாத்.

குரு ஸ்லோகம்

தேவனாம்ச ரிஷிணாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்

பக்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.

தட்சிணாமூர்த்தி மூல மந்திரம்

ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தயே

மஹ்யம் மேதாம் பிரக்ஞாம் ப்ரயச்ச நமஹா.

தட்சிணாமூர்த்தி ஸ்லோகம்

குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு

குரு தேவோ மஹேஸ்வரஹ  குரு சாட்சாத் பரப்ரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா.


குரவே ஸர்வ லோகாநாம்   பிஷஜே பவ ரோகிணாம்
நிதயே ஸர்வ வித்யாநாம்  தட்சிணாமூர்த்தயே நமஹா.

அப்ரமே த்வயாதீத நிர்மல ஞான மூர்த்தயே
மநோ இராம் விதூராய தட்சிணாமூர்த்தயே நமஹா.

தட்சிணாமூர்த்தி காயத்ரீ மந்திரம்

ஓம் தட்சிணாமூர்த்தயே ச வித்மஹே த்யா நஸ்த்தாய தீமஹி
தந்நோ தீச ப்ரசோதயாத்.மேஷம்
(அசுவதி, பரணி, கார்த்திகை 1-ஆம் பாதம் முடிய)

                    மேஷ ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 11-ல் இருந்த குரு பகவான் 12-ஆம் இடத்துக்கு மீன ராசிக்கு வருகிறார். மேஷ ராசிக்கு 9, 12-க்கு உடைய குரு 12-ல் ஆட்சியாக அமர்கிறார். ஏற்கெனவே இருந்த இடம் 11-ஆம் இடம் லாப ஸ்தானம் என்றாலும், மேஷம் சர ராசி என்பதால் அதற்கு 11-ஆம் இடம் பாதக ஸ்தானம் ஆகும். அதனால் கும்ப குரு உங்களுக்கு எந்தவிதமான யோகத்தையும் செய்யவில்லை என்பதுதான் அனுபவப்பூர்வமான உண்மை.

மேலும் கும்பத்தில் குரு இருந்த காலம், மேஷ ராசிக்காரர்களுக்கும் மேஷ லக்னக்காரர்களுக்கும் உடல்நலக் குறைவு, எதிர்பாராத வைத்தியச் செலவு, ஆபரேஷன், விபத்து, ரத்த சம்பந்தமான தொந்தரவுகள் போன்றவையெல்லாம் தந்தது. சிலருக்கு சிக்கன் குனியா காய்ச்சல் வந்து மூன்று நாளில் காய்ச்சல் குணமானாலும், மூன்று மாதம் முழங்கால் வலி, உட்கார்ந்து எழுந்திருக்க முடியாத வலி என்று வாட்டி வதைத்து விட்டது.


இப்போது குரு 12-ல் விரய ஸ்தானத்துக்கு வந்திருந்தாலும், ஆரம்பத்தில் பூரட்டாசி 4-ல் தன் சுய சாரம் பெறுகிறார். நவாம்சத்தில் கடகத்தில் உச்சம் பெறுவார். ராசியில் குரு ஆட்சி; அம்சத்தில் குரு உச்சம். ஆகவே குரு 12-ல் நின்றாலும் கெடுக்க மாட்டார். செலவுகளைத் தந்தாலும் அவை சுபச் செலவுகள்தான்!

12-ஆம் இடம் என்பது அயன சயன சுகபோக ஸ்தானம். அங்கு பாக்யாதிபதி 9-க்குடைய குரு ஆட்சி பெறுவதால் சுகபோக சௌக்கியங்களை அனுபவிக்கலாம். பெண்களாக இருந்தால் ருதுமங்களச் செலவு- திருமணச் செலவு ஏற்படும். ஆண்களாக இருந்தால் திருமணம், புத்திர பாக்யம், புதிய வேலைவாய்ப்பு, வீட்டின் குடியிருப்பை குளுகுளு வசதி உடையதாக மாற்றுவது, புதிய வீடு, மனை, வாகனம் வாங்குவது, உத்தியோக ரீதியாக வெளியூர் போவது, கடல் கடந்த வாய்ப்பு, தேச சஞ்சாரம், ஆன்மிகப் பயணம், தீர்த்த யாத்திரை செல்லுதல் போன்ற காரியங்கள் கைகூடும்.

குரு 9, 12-க்கு உடையவராகி, 12-ல் ஆட்சி பெற்று மேஷ ராசிக்கு 4-ஆம் இடத்தையும், 6-ஆம் இடத்தையும், 8-ஆம் இடத்தையும் பார்க்கிறார். அதனால் 4, 6, 8-ஆம் இடங்கள் சம்பந்தப்பட்ட செலவுகளை-சுப விரயங்களைச் செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.

4-ஆம் இடம் பூமி, வீடு, வாகனம், சுகம், கல்வி, தாய் இவற்றைக் குறிக்கும் இடம். 4-ஆம் பாவம் கடகத்துக்கு- குரு 6, 9-க்கு உடையவர் 9-ல் நின்று பார்க்கிறார். அதனால் 4-ஆம் பாவம் சம்பந்தமான சுபச் செலவுகளும் அதற்காக கடன் வாங்கும் யோகமும் உண்டாகும். பூமி, வீடு, வாகன வகையில் சுப முதலீடு செய்யலாம். விவசாயத்தை விரும்பி ஏற்கலாம். பால் பண்ணை, கோழிப் பண்ணை, மீன் பண்ணை, இறால் பண்னை, தென்னந் தோப்பு, வாழைத் தோட்டம், தோப்பு துரவு போன்ற வகையில் முதலீடு செய்யலாம். மேற்கண்ட வகைக்காக வங்கிக் கடன், விவசாயக் கடன், தனியார் கடன் வாங்கலாம்.

தேக ஆரோக்கியத்தில் தெளிவும் சுகமும் தெரியும். நான்காம் இடம் தாயார் ஸ்தானம். அங்கு செவ்வாய் இருப்பதால் தாயா ருக்கு ஆபரேஷன் சிகிச்சை செய்யலாம்! கண் ஆபரேஷன் நடக்கும். பார்வையில் முன்னேற்றம் ஏற்படும்! சிலருக்கு முழங்கால் வலி, மூட்டுவலி, பாதவலி இருக்கும். அதற்காக கேரள வைத்தியம் பார்க்கலாம். தைலம் தடவலாம். (சனி பார்ப்பதால்- சனி தைலக்காப்பு கிரகம். )

தாய் வர்க்கத்தில் சிலருக்குப் பகை உணர்வுகளும் உறவில் விரிசல்களும் இருந்த நிலை மாறி நட்பும் நல்லுறவும் மலரும். சிலருக்கு தாய்ப் பாசமும் தாயின் அருமையும் இப்போதுதான் உணரும் காலம். படிப்பில் அரியர்ஸ் வைத்திருந்தவர்கள் இனி அவற்றை எழுதிப் பாஸ் செய்யலாம்; மேற்படிப்பையும் தொடரலாம். கல்விக் கடன் கிடைக்கும் யோகமுண்டு. அதற்காக வங்கிக்கு தினசரி படையெடுக்கலாம் அல்லது சிபாரிசுக்கு ஆட்களைத் தேடலாம்.


4-ஆம் இடம் என்பது 10-ஆம் இடத்துக்கு 7-ஆம் இடமாகும். அதனால் தொழில் சம்பந்தமான சுபவிரயமும் உண்டு. இரும்பு யந்திரம், மிஷினரி சம்பந்தப்பட்ட புதிய தொழில் திட்டங்கள் கைகூடும். அக்னி, மின்சாரம், அரசு பெர்மிட்- லைசென்ஸ் பெற்றுச் செய்யும் தொழில்களும் கெமிக்கல், ஹோட்டல் போன்ற தொழில்களும் செய்யலாம்.

4-ஆம் இடம், 6-ஆம் இடம், 8-ஆம் இடங்களை குரு பார்ப்பதால் 4-ஆம் பாவம்- பூமி, வீடு, வாகனம் சம்பந்தமான யோகமும் உண்டாகும்; சிரமங்களும் உண்டாகும்.

6-ஆம் இடத்துக் கெடுதல்கள் இயற்கையாக வருவது ஒரு வகை! தானாகவே தேடிக் கொள்வது இன்னொரு வகை! கல்யாணம் காட்சி, வீட்டுச் செலவு, ஆடம்பர- அத்தியாவசியப் பொருள் சேர்க்கை, வண்டி வாகனம், வீடு, நிலம் போன்ற ஸ்தாவர சங்கமச் சொத்துகளுக்காகக் கடன் வாங்குவதும் வட்டி கொடுப்பதும் இயற்கையான செலவு; இயற்கையான கடன்; இயற்கையான சுமை (சுகமான சுமை).

அடுத்தவருக்காக ஜாமீன் பொறுப்பேற்று அவர் பட்ட கடனையும் வட்டியையும் தானே அடைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அது தானாகத் தேடிக் கொள்வது. இதே மாதிரி இயற்கையாக நோய் வருவது என்பது ஒருவிதம்! குடித்துக் குடித்துக் குடலைப் புண்ணாக்கிக் கொண்டு அறுவை சிகிச்சை செய்து கொள்வது வேறு விதம். மது, மாது, சூது என்று மனம் போன வழியில் ஆடி, பின்விளைவுகளுக்கும் பக்க விளைவுகளுக்கும் ஆளாகி அவஸ்தைப்படுவதும் தானாகத் தேடிக்கொள்வது.

குரு 8-ஆம் இடத்தைப் பார்க்கிறார். 8 என்பது விபத்து, மரணம், கேவலம், அவமானம், அபகீர்த்தி, கௌரவ பங்கம் ஆகியவற்றைக் குறிக்கும் இடம். ஜாதக தசா புக்திகள் யோகமாக இருந்தால் இவற்றில் இருந்து தப்பிக்கலாம். இல்லாவிட்டால் இவற்றை அனுபவித்தாக வேண்டும் கன்னிச் சனி மூன்றாம் பார்வையாக விருச்சிகத்தை- ஆயுள் ஸ்தானத்தை ஆயுள்காரகனே பார்ப்பதால் ஆயுள் குற்றம் வராது; காப்பாற்றப்படலாம்.


பரிகாரம்

கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் போகும் பாதையில் குடவாசல் என்னும் ஊர் இருக்கிறது. அங்கிருந்து நான்கு கி.மீ. தொலைவில் சேங்காலிபுரம் என்னும் கிராமம் உள்ளது. அங்கு தத்த குடீரம் என்னும் கோவிலில் தத்தாத் ரேயரைத் தரிசிக்கலாம். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் ஒன்று சேர்ந்த தோற்றம்தான் தத்தாத்ரேயர். இங்கு கார்த்தவீர்யார்ஜுன யந்திரம் இருக்கிறது. அதைப் பூஜிப்பதால் காணாமல் போன பொருள்கள் கிடைக்கும். வர வேண்டிய பாக்கிகள் வசூல் ஆகும். விசுவாசமுள்ள வேலைக்காரர்கள் அமை வார்கள். களவு போகாது. கார்த்தவீர் யார்ஜுன யந்திரம் மட்டுமே இங்கு பிரதிஷ்டை. வாலாஜா பேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் கார்த்தவீர்யார் ஜுனருக்கு மரகதக் கல்லில் (பச்சைக் கல்லில்) உருவச் சிலையே வைத்திருக்கிறார்கள். உலகத்திலேயே இங்கு தவிர வேறு எங்குமே கார்த்தவீர்யார்ஜுனருக்கு சிலை இல்லை. சேங்காலிபுரத்தில் பிரம்ம பூத ராமானந்த பிரம்மேந்திர சுவாமிகள் ஜீவ சமாதியாக விளங்குகிறார். இந்த ஊருக்குச் சென்றால் குருவருளும் திருவருளும் சேர்ந்து கிடைக்கும். வருடம் தோறும் கார்த்திகை மாதப் பௌர்ணமியை ஒட்டி தத்த ஜெயந்தி உற்சவமும் தொட்டில் உற்சவமும் நடைபெறும். அதில் கலந்து கொள்ளும் சுமங்கலிப் பெண்களுக்கு ஆண் வாரிசு கிடைக்கும். 
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிடம் 2-ஆம் பாதம் முடிய)

                    ரிஷப ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 10-ல் இருந்த குரு இப்போது 11-ஆம் இடத்திற்கு மாறியிருக்கிறார். ஏற்கெனவே இருந்த 10-ஆம் இடத்தைவிட இப்போது மாறியிருக்கும் 11-ஆம் இடம் மிகமிக யோகமான இடம். 11-ஆம் இடம் லாப ஸ்தானம். அதில் குரு ஆட்சியாக வந்து அமர்ந்திருப்பதால் இந்த குருப் பெயர்ச்சியினால் அதியோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப் போகும் ஐந்து ராசிக்காரர்களில் நீங்களும் ஒருவர். குருவுக்கு வீடு கொடுத்த சனி குருவுக்கு 8-ல் மறைந்தும் ரிஷப ராசிக்கு 5-ல் நின்றும் குரு 6-8- ஆக இருந்ததால் உடல்நலத்தையும் பாதித்தது. செவ்வாயின் பார்வையால் ஆபரேஷன், வைத்தியச் செலவுகளையும் சந்திக்க வைத்தது. பிள்ளைகள் வகையிலும் தொல்லைகளையும் துயரங் களையும் அனுபவிக்க வைத்தது. சொத்துப் பிரச்சினையால் ஒருவருக் கொருவர் பனிப்போர் புரிந்ததை தீர்க்கவும் முடியாமல் சமாதானப் படுத்தவும் முடியாமல் மனதுக்குள் ரத்தக் கண்ணீர் வடித்த நிலை.  இப்போது 11-ஆம் இடத்து குரு 11-ல் ஆட்சியாக அமர்ந்து 10-க்குடைய சனியும் பார்ப்பதால், அன்று நீங்கள் உழைத்த உழைப்பிற்கும் விசுவாசத்திற்கும் இன்று பரிசு கிடைப்பதுபோல பாராட்டும் போனசும் பதவி உயர்வும் கிடைக்கும். சில கம்பெனி தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் சம்பள உயர்வுப் பேச்சு நடந்தாலும், சில மாதங்களுக்குப் பிறகு மொத்தமாக இன்கிரிமெண்ட்டும் போனசும் கிடைக்கும்.

குரு மாறியுள்ள இடம் 11-ஆம் இடம் லாப ஸ்தானம், வெற்றி ஸ்தானம், ஜெய ஸ்தானம். அங்கு நீசபங்கமாக அமர்ந்துள்ள குருவுக்கு உங்கள் முயற்சிகளை வெற்றியாக்கி மனதில் மகிழ்ச்சியையும் திருப்தியையும் ஏற்படுத்தும் சக்தி வருகிறது. ரிஷப ராசிக்கு 3-ஆம் இடத்தையும் 5-ஆம் இடத்தையும் 7-ஆம் இடத்தையும் குரு பார்க்கிறார். 3-ஆம் இடம் சகோதர ஸ்தானம், சகாய ஸ்தானம், தைரிய ஸ்தானம். அந்த இடத்திற்கு (கடகத்திற்கு) 9-ல் நிற்கும் குரு சகோதர- சகோதரி வகையில் சகாயமும் நன்மையும் உண்டாக்குவார். புது எதிரியை அல்லது பொது எதிரியைப் போராடி ஜெயிக்க சகோதரர்களின் ஆதரவும் உதவியும் அனுகூலமாக அமையும்.


குரு ரிஷப ராசிக்கு 5-ஆம் இடத்தைப் பார்க்க, அங்கு சனி நிற்கிறார். 5-ஆம் இடம் புத்திர ஸ்தானம். சனி நிற்பது புத்திர தோஷம் அல்லது புத்திர சோகம் என்றாலும், புத்திர காரகன் குரு பார்ப்பதால் தோஷம் விலகிவிடும். புத்திர ஸ்தானத்தில் குரு இருந்தால் தோஷம். "காரகோ பாவக நாசம்'. ஆனால் புத்திர ஸ்தானத்தை குரு பார்த்தால் கோடி நன்மை. தோஷம் நிவர்த்தி!

நீண்ட காலமாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு இனி புத்திர பாக்கியம் உண்டாகும். சனி நிற்பதால் டெலிவரி ஆபரேஷன் கேஸாக அமையலாம். அப்படியிருந்தால் திருச்சி தாயுமான சுவாமிக்கு நேர்த்திக் கடன் வைத்துக் கொள்ளலாம். அல்லது கர்ப்பிணிப் பெண்கள் அல்லது அவர்களின் கணவன்மார்கள் பன்னிரு திருமுறையில் 2-ஆம் திருமுறை- திருஞானசம்பந்தர் அருளிய "நன்றுடையானைத் தீயதிலானை நரை வெள்ளேறு அன்றுடையானை' என்று தொடங்கும் 11 பாடல்களையும்; 5-ஆம் திருமுறை "மட்டுவார் குழலாளொடு மால் விடை இட்டமாவுகந்தேறு மிறைவனார்' என்று திருநாவுக்கரசர் பாடிய நான்கு பாடல்களையும் தினசரி பாராயணம் செய்தால் சுகப் பிரசவம் ஏற்படும். இது அனுபவப்பூர்வமான உண்மை.

7-ஆம் இடத்தை குருவும் பார்க்க சனியும் பார்ப்பதால், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இதுவரை தடைப்பட்டு வந்த திருமணம் இனி செயல்படும். மனதுக்கேற்ப மாப்பிள்ளை அல்லது பெண் அமைந்துவிடும். சனி பார்வையால் ஏற்படும் தாமதப் பலன்களைப் போக்க கிருஷ்ணாபுரம் ஜெயவீர அபய ஹஸ்த ஆஞ்சனேயருக்கு சனிக்கிழமை படிப்பாயச பூஜையும் அபிஷேகமும் செய்யலாம்.

வாலாஜாபேட்டையில் தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஆண்களுக்கு கந்தர்வ ராஜ ஹோமம் செய்யலாம். பெண்களுக்கு சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்யலாம்.

ஏற்கெனவே திருமணமாகி மனைவி கொண்டு வந்த சீர், சீதன நகைகளை விற்றுச் செலவு செய்தவர்களும் கணவன் அல்லது மனைவியின் வியாதிக்காக ஆயிரக்கணக்கில் வைத்தியச் செலவு செய்து வெந்து நொந்து நூலாகிப் போனவர்களும்- 7-ஆம் இடத்தை குரு பார்த்த பெருமையால் நலமடைவார்கள்; மேன்மையடைவார்கள். அதிர்ஷ்டவசமாக சம்பாத்தியம் செய்து இழந்த பொருட்களை மீட்டு மகிழ்ச்சியடையலாம். கணவன்- மனைவிக்குள் பரிபூரண ஆரோக்கியமும் சுகமும் ஏற்படும்.


பரிகாரம்:

நாமக்கல்லிலிருந்து கொல்லிமலை போகும் பாதையில் சேந்தமங்கலம் என்னும் ஊரில் சாமியார்கரடு என்னும் பகுதியில் தத்தகிரி முருகன் கோவில் சிறுகுன்றின் மேல் இருக்கிறது. சேங்காலி புரத்தில் இருப்பதுபோல இங்கும் தத்தாத்ரேயர் சந்நிதி இருக்கிறது. அதன்கீழ் மண்டபத்தில் சுயம்பிரகாச சுவாமிகள் என்னும் அவதூதர் ஜீவசமாதியாக விளங்குகிறார். ஏழடி உயரத்தில் தட்சிணாமூர்த்திக்கு தனிச் சந்நிதி உண்டு. ஏழரை அடி உயரத்தில் சனீஸ்வரரும் அவருக்கு எதிரில் ஏழடி உயரத்தில் பஞ்சமுக ஆஞ்சனேயரும் காட்சியளிக் கிறார்கள். இங்கு சென்று வழிபடுவதால் சனியின் பிடியும் தளரும்; குருவின் திருவருளும் மலரும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

                  மிதுன ராசி அன்பர்களே!

மிதுன ராசிக்கு 9-ஆம் இடத்தில் இருந்த குரு இப்போது 10-ஆம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார். அது அவருக்கு ஆட்சி வீடு. ஏற்கெனவே இருந்த 9-ஆம் இடம் மிகமிக யோகமான இடம்தான். இப்போது மாறியுள்ள இடம் 10-ஆம் இடம் என்றாலும்- 9-ஆம் இடத்தைவிட யோகமான இடம் என்று சொல்லமுடியாவிட்டாலும் 10-ஆம் இடமான மீனம் குருவுக்கு சொந்த வீடு என்பதால், 9-ல் இருந்த யோகத்தைத் தொடர்ந்து 10-லும் செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.

பாக்யத்தில் (9-ல்) குரு 10-க்கு உடையவராகி நின்றதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்பட்டது. ஆனாலும் அவருக்கு வீடு கொடுத்த சனி குருவுக்கு 8-ல் மறைந்த காரணத்தால் சில நேரங்களில் நூறு சதவிகித வெற்றியும், சில நேரங்களில் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக ஏமாற்றமும் ஆனது. இருந்தாலும் அடிப்படை பாதிப்புகள் இல்லாத அளவில் நினைத்தோம் முடித்தோம் என்றில்லாமல், வெயிட்டிங் லிஸ்டில் காத்திருந்து காத்திருந்து ஒவ்வொரு காரியங்களையும் நிறைவேற்றிய நிலை. இப்போது 10-ல் ஆட்சியாக வந்திருக்கும் குருவை 9-க்குடைய சனி 4-ல் இருந்து பார்ப்பதோடு, குருவும் சனியைப் பார்க்கிறார். எனவே தர்மகர்மாதிபதி யோகம் பரிபூரணமாக உண்டாகிறது. மேலும் சனி ஜென்ம ராசி மிதுனத்தையும் பார்ப்பதால் இந்த குருப் பெயர்ச்சி உங்களுக்கு அனுகூலமான பெயர்ச்சி என்பதில் சந்தேகமில்லை.

10-ஆம் இடம் என்பது வாழ்க்கை, தொழில், உத்தியோகம், புதுமுயற்சி ஆகியவற்றைக் குறிக்கும். மிதுன ராசிக்கு 7, 10-க்குடைய குரு 10-ல் ஆட்சி பெறுவதால் தொழில்வளம் மேன்மையடையும். மனைவியின் பெயரிலும் உபதொழில் யோகம் உண்டாகும். இருவருக்கும் உத்தியோக வாய்ப்பு ஏற்பட்டு இருவரும் சம்பாதிக் கலாம். மிதுன ராசிநாதன் புதனின் நட்சத்திரமான ரேவதி மீனத்தில் அடங்குவதால், மீனத்தில் சஞ்சரிக்கும் குரு உங்கள் கௌரவத்தையும் மதிப்பு, மரியாதை, செல்வாக்கையும் எந்தவகையிலும் குறையவிடாமல் பாதுகாப்பார். 8, 9-க்குடைய சனி 4-ல் அமர்ந்து குருவைப் பார்ப்பதோடு, மிதுன ராசியையும் பார்க்கிறார்.

அதனால் தேகசுகம் நலமாக- பலமாக இருக்கும். அட்டமாபதியே பாக்யாதிபதியாவதால் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். ஏற்கெனவே குறிப்பிட்டபடி தர்மகர்மாதிபதி யோகம் உங்களுக்கு ஆதரவாகவும் அனுகூலமாகவும் அமையும். எடுக்கும் காரியங்கள் அத்தனையும் எளிதாக ஈடேறும். ஓய்வில்லாத பயணங் களால் உடல் சோர்வடைந்தாலும் பொருளாதார ஏற்றத்தால் மனம் சோர்வடையாது. உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வேலை செய்வோரும்- மனநிறைவு, மேலதிகாரிகளின் பாராட்டு, பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற நன்மைகளை அடையலாம்.

மீனத்தில் ஆட்சி பெற்ற குரு மிதுன ராசிக்கு 2-ஆம் இடத்தைப் பார்க்கிறார். கடன், பணக்கஷ்டம் என்ற பேயிடமிருந்து உங்களை மீட்டுக் காப்பாற்றும். சிலருக்கு கூட்டுறவு வங்கிகளில் அரசு குறிப்பிட்ட சதவிகித வட்டியைத் தள்ளுபடி செய்து ஆணை பிறப்பித்த வகையில் ஆதாயமும் அனுகூலமும் உண்டாகும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். வேலை காரணமாக வெளிநாடு போனவர்களும் வெளியூர் வேலைக்குப் போனவர்களும் குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு போகும் யோகம் ஏற்படும். அல்லது வெளிநாட்டில் வாழ்ந்தது போதும்; சொந்த ஊரில் எந்த வேலையாவது அல்லது தொழிலாவது செய்து கொண்டு பிள்ளைகளோடு சந்தோஷமாக இருக்கலாம் என்று சொந்த ஊருக்குத் திரும்பி குடும்பத்தோடு சேர்ந்திருக்கலாம்.

10-ஆம் இடத்து குரு 7-ஆம் பார்வையாக மிதுன ராசிக்கு 4-ஆம் இடத்தைப் பார்க்கிறார். ஜென்மத்தில் ஞான காரகன் கேது நிற்கிறார். 4-ஆம் இடத்தில் ஜீவன காரகன் சனி நிற்கிறார். சனி ஜென்ம கேதுவையும் பார்க்கிறார். 2-ஆம் இடமும் கல்வி ஸ்தானம், 4-ஆம் இடமும் கல்வி ஸ்தானம். 2 என்பது அனுபவக் கல்வி, இயற்கை அறிவு, ஞானம். 4 என்பது பள்ளிக் கல்வி, கற்கும் கல்வி. கடந்த காலத்தில் 4-ஆம் இடத்திற்கு குரு 6-ல் மறைவு பெற்றதாலும் அர்த்தாஷ்டமச்சனி நடந்ததாலும் சிலருடைய படிப்பு தடைப்பட்டிருக்கலாம். அல்லது படிப்பில் அரியர்ஸ் ஏற்பட்டிருக்கலாம். இறுதித் தேர்வில் ஒரு மார்க் இரண்டு மார்க் வித்தியாசத்தில் தோற்றுப் போனவர்களும் உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கெல்லாம் இந்த குருப் பெயர்ச்சி அனுகூலப் பெயர்ச்சியாக அமையும். பட்டப் படிப்பை முடிக்கலாம். விட்டுப் போன பாடத் திட்டத்தைப் பூர்த்தி செய்யலாம்.

4-ஆம் இடம் என்பது தாயார், சுகம், பூமி, வீடு, வாகனத்தைக் குறிக்கும். கும்பத்தில் குரு இருந்த காலம் 4-ஆம் இடத்திற்கு மறைவு என்பதால், புது இடத்தில் வீடு கட்டும் முயற்சியில் பக்கத்து இடத்துக்காரன் பொறாமையால் ஏற்படுத்திய கெடுதல்களினால் ஆயிரக்கணக்கில் பண நஷ்டம், மனக் கஷ்டம். ஒருசிலர் அனுபவம் தவணைக் கடன் வாங்கிப் புது வண்டியை எடுத்து பெருமையாக ஓட்டி, அக்கம் பக்கத்தார் திருஷ்டி ஏற்பட்டதால் விபத்து, சேதம் போன்றவற்றைச் சந்தித்திருக்கலாம்.

இப்போது குரு 10-ல் வந்திருப்பதால், 4-ஆம் பாவத்திற்கு 4-க்குடையவர் கேந்திரம் பெறுவதால் காணாமல் போன வாகனம் கிடைத்துவிடும். தேக நலனில் தெளிவு ஏற்படும். பூமி, வீடு, வாகன சம்பந்தப்பட்ட இனங்களில் காணப்பட்ட தடைகள் எல்லாம் விலகிவிடும். புதிய வீட்டைக் கட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம். சொந்த உபயோகத்திற்காகவும் வியாபார நோக்கத்தோடும் வண்டி வாகனங்களை வாங்கலாம்.

பரிகாரம்:

ராஜபாளையத்திலிருந்து தென்காசி போகும் பாதையில் வாசுதேவ நல்லூருக்கு அருகில் தாருகாபுரம் என்னும் ஊரில் மத்தியஸ்த நாதர் கோவில் இருக்கிறது. சுவாமி மத்தியஸ்த நாதர், அம்பாள் அகிலாண்டேஸ்வரி. திருவானைக்கா கோவில்போல இந்தப் பகுதியில் பஞ்சமுக ஸ்தலங்களில் சுக்கிரன் ஸ்தலமாகும். சிவன் சந்நிதி பிராகாரத்தில் நவகிரக தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். நவ கிரகங்களும் சனகாதி நால்வரும் தட்சிணாமூர்த்தி விக்ரகத்தில் இருக்கிறது. தேய்பிறை அஷ்டமி அன்று பைரவருக்கு நெய்தீபம் ஏற்றப்படுகிறது. ஒவ்வொரு பௌர்ணமிதோறும் மாலை ஆறு மணியளவில் திருவண்ணாமலையைப்போல இங்கும் கிரிவலம் நடக்கிறது. நோய் விலகும்; கடன் நிவர்த்தியாகும்; தொழில் மேன்மையடையும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

                  டக ராசி அன்பர்களே!

உங்கள் ராசியான கடகத்திற்கு இதுவரை 8-ஆம் இடத்தில் இருந்து உங்களை வாட்டி வதைத்த குரு இப்போது 9-ஆம் இடமான மீன ராசிக்குப் பெயர்ச்சியானதோடு, அது அவருக்கு சொந்த வீடு என்பதால் ஆட்சிபலம் அடைகிறார். குருவுக்கு சிறப்பான இடங்கள் 2, 5, 7, 9, 11-ஆம் இடங்கள்தான். குருப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தையும் அதி யோகத்தையும் அடையப் போகும் ராசிக்காரர்கள் ஐவர்! அதில் நீங்களும் ஒருவர்! ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், கும்பம் ஆகிய ஐந்து ராசிக்காரர்களும் குருப் பெயர்ச்சி யோகத்தை நேரடியாக அனுபவிக்கப் போகிறவர்கள்.


பாக்கிய ஸ்தானத்தில் வந்திருக்கும் குரு ஆட்சி வீடாக பலம் பெறுகிறார். எனவே குரு 8-ல் இருந்தபோது நீங்கள் அனுபவித்த கஷ்ட நஷ்டங்களையெல்லாம் போக்கிக் கண்ணீரைத் துடைத்து இஷ்டங்களை ஈடேற்றப் போகிறார். 9-ல் குரு இருந்தால் குருவருளும் திருவருளும் உருவாகும். கும்பிடப் போன தெய்வம் எதிரே வந்தது மாதிரி தேடிப்போன நல்லவையெல்லாம் உங்களை நாடிவரும். இதுவரை நீங்கள் செய்த வழிபாடு, பிரார்த்தனை, பூஜை, ஜபம், தியானம் எல்லாவற்றுக்கும் இனிமேல் வட்டியும் முதலுமாகப் பலன் கிடைக்கப் போகிறது.

கடந்த காலத்தில் குரு உங்கள் ராசிக்கு (கடகத்துக்கு) 8-ல் இருந்த காலம்- ஜென்மத்தில் கேதுவும் 7-ல் ராகுவும் இருந்ததோடு ஏழரைச் சனியும் நடந்தது. அதனால் வேலை, வருமானம், தொழில் என்று பெருமையாக எதுவும் சொல்லிக் கொள்ள முடியாதபடி நாளும் பொழுதும் விழலுக்கு இரைத்த நீராக எதிர்பார்ப்பிலேயே காலம் சென்றது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

விவேக சிந்தாமணியில் ஒரு பாடல் உண்டு. விலைமாதராக இருக்கும் ஒரு பெண் தன் தாயாரிடம், "எனக்கு இன்பம் தந்ததோடு என்னிடம் பணம் கொடுத்துச் செல்லுகிற ரகசியம் என்ன?' என்று கேட்பாள். அதற்கு, "முறைகேடாக சம்பாதித்த பணம் பரத்தைக்கும் கள்ளுக்கும் காமத்துக்கும் நோய்க்கும் போகும்' என்று விளக்கம் கொடுப்பாள். அது மாதிரி அதர்மமாக வந்த பணம் அதர்மமான வழியில் அழியும்.

8-ஆம் இடத்தில் குரு இருந்தபோது சம்பாத்தியம் இல்லாமல் சங்கடப்பட்டவர்களைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. சம்பாத்தியத்தைக் குவித்தவர்கள் சாந்தி இல்லாமல் சங்கடப்பட்ட வர்களை நினைத்து வினையை வலியத் தேடிக் கொண்டவர்கள்- விரயத்தைக் தழுவிக் கொண்டவர்கள் எனலாம்.

9-ல் ஆட்சி பெற்ற குரு உங்கள் ராசியைப் (கடகத்தை) பார்க்கிறார். 3-ஆம் இடத்தையும் 5-ஆம் இடத்தையும் பார்க்கிறார்.

ஜென்ம ராசியைப் பார்ப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும். மதிப்பு, மரியாதை, கவுரவம் உயரும். உங்களைப் பார்த்து கடந்த காலத்தில், "அவ்வளவுதான்! குளோஸ் ஆகிவிட்டது; ஆட்டம் முடிந்து விட்டது; இனி அவுட்!' என்று ஏளனமாக எள்ளி நகையாடியவர்களும் கேவலமாகப் பேசியவர்களும், "எப்படியோ தப்பி மேலே வந்து விட்டாரே' என்று ஆச்சரியப்படும் அளவுக்கு உங்களுக்கு முன்னேற்ற மும் யோகமும் வளர்ச்சியும் உண்டாகப் போகிறது.

கண்டபடி கடனை வாங்கி அசலும் அடைக்க முடியாமல் வட்டியும் கட்ட முடியாமல் ஊரை விட்டு ஓடிவிடுவதா அல்லது மானத்துக்கு அஞ்சி உயிரை மாய்த்துக் கொள்வதா என்று மயங்கித் தயங்கியவர் களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் உருவாகி விடும். 9-ஆம் இடத்து குருப்பெயர்ச்சியால் வாழ்வு உண்டு; வளமுண்டு; நலமுண்டு; நல்ல காலமுண்டு. பைசா பாக்கி இல்லாமல் கடன்களைப் பைசல் செய்து, நாணயத்தைக் காப்பாற்றி நற்பெயர் எடுக்க முடியும் என்ற நம்பிக்கையான சூழ்நிலை உருவாகும்.

3-ஆம் இடம் சகோதர சகாய ஸ்தானம். உங்களுடைய பணக் கஷ்டத்தைப் பார்த்து, ஒட்டி உறவாடினால் எங்கே கைமாற்றுக் கடன் கேட்டு விடுவீர்களோ என்று கடந்த காலத்தில் உங்களைப் பார்த்தும் பார்க்காமல் போன உடன்பிறப்புகளும் நண்பர்களும் இனிமேல்
5-ஆம் இடமான விருச்சிகத்தையும் அதன் அதிபதியான செவ்வாயையும் குரு திரிகோணமாக நின்று பார்க்கிறார். 5-ஆம் இடத்தை சனியும் பார்க்கிறார் பொதுவாக சனி பார்த்தால் புத்திர சோகம் அல்லது அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் ஏற்படும். அதற்காக வாஞ்சா கல்ப கணபதி புத்ரப்ராப்தி ஹோமம் செய்வது நல்லது. புத்திர தோஷம் விலக சந்தான பரமேஸ்வர ஹோமம், சந்தான கோபால ஹோமம் செய்யலாம். ராமநாதபுரம் அருகில் திருப்புல்லானியில் சந்தான கோபால பூஜை செய்யலாம். ஆரணியில் புத்திர காமேஸ்வரர் கோவில் இருக்கிறது. அங்கு சென்றும் பூஜை பண்ணலாம்.

5-ஆம் இடம் புத்திர ஸ்தானம் மட்டுமல்ல; திட்டம், மகிழ்ச்சி, தாய்மாமன், பாட்டனார், மந்திர உபதேசம் ஆகியவற்றையும் குறிக்கும். அதற்கு குரு பார்வை கிடைப்பதால் ஜாதக ரீதியாக 5, 9- பூர்வபுண்ணிய பலம் பெற்றவர்களுக்கு மந்திர உபதேசம் கிடைக்கும். தீட்சை பெற்று அனுஷ்டான விதிகளைச் செயல்படுத்தலாம். பிள்ளைகளும் பெருமை அடைவார்கள். பிள்ளைகளால் பெற்றவர்களும் பெருமையடையலாம். உங்களுடைய நீண்டகாலத் திட்டங்கள் நிறைவேறும். பாட்டனார், தகப்பனாரின் பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் தீர்க்கப்படும். சொத்து சுகங்கள் இருந்தும் விற்கவும் முடியாமல் அனுபவிக்கவும் முடியாமல் பூதம் காத்த புதையல் போல கட்டிக் காத்துவந்த நிலை மாறும். உங்கள் கஷ்டத்திற்குக் கைகொடுக்கும் விதமாக பரிவர்த்தனை பண்ணலாம் அல்லது பயன்படுத்தலாம்; அனுபவிக்கலாம். தெய்வ உபாசனை, தியானப் பயிற்சி, யோகா, மெடிடேஷன் போன்றவையும் சித்தியாகும். குரு மீனத்தில் இருக்கும்போது இவற்றுக்கு அஸ்திவாரம் போடப்பட்ட மாதிரி. அடுத்து ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு ராகு 5-ல் வரும்போது ஆன்மிகம், ஜோதிடம், வைத்தியம் இவற்றில் கிரகப் பிரவேசம் செய்வது போல! பேரும் பெரும் புகழும் அடையலாம்.


1

பரிகாரம்:

மதுரை-காரைக்குடி நெடுஞ்சாலையில் திருப்பத்தூர் என்னும் ஊரிலிருந்து 9 கி.மீ. தூரத்தில் பட்டமங்கலம் என்னும் கிராமம் இருக்கிறது. அங்கு பல ஆண்டுகள் மூப்பான ஆலமரத்தின் அடியில், கிழக்கு பார்த்த சந்நிதியாக அட்டமா சித்தி தட்சிணாமூர்த்தி சந்நிதி இருக்கிறது. பொதுவாக தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கித்தான் இருப்பார். இங்கு வித்தியாசமாக கிழக்கு நோக்கி இருக்கிறார். திசை மாறியிருக்கும் தெய்வங்களுக்கு அருள்நிலை அற்புதமாக அமைந்தி ருக்கும். அமாவாசையன்றும் வியாழக் கிழமையன்றும் சிறப்புப் பூஜைகள் நடக்கும். சிவனின் நெற்றிக் கண்ணில் தோன்றிய ஆறு நெருப்புப் பொறிகளும் சரவணப் பொய்கையில் சேர்ந்து ஆறு குழந்தை களாக மாற, அவர்களை ஆறு கார்த்திகைப் பெண்கள் வளர்த்த கடமைக்காக பராசக்தியிடம் அட்டமாசித்தியை உபதேசம் பண்ணும் படி கேட்க, அதனை அறிந்த பரமசிவன் அவர்களைக் கற்களாகச் சபித்து விடுகிறார். பல ஆண்டு காலமாக கற்களாகக் கிடந்து, பிறகு சாபவிமோசனம் பெற்ற இடம்தான் பட்டமங்கலம். இங்கு சென்று வழிபடுவதால் வினைப்பயன் விலகி புனர்வாழ்வு கிடைக்கும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

               சிம்ம ராசி அன்பர்களே!

சிம்ம ராசிக்கு கடந்த காலத்தில் 7-ல் இருந்த குரு இப்போது 8-ஆம் இடத்துக்கு மாறுகிறார். 7-ஆம் இடத்தைவிட 8-ஆம் இடம் மோச மான இடம்தான். விபத்து, கண்டம், அபகீர்த்தி, அவமானம், மலையேறி வீழ்தல், சஞ்சலம் ஆகிய பலன்களைக் குறிக்கும் இடம்தான் 8-ஆம் இடம்! இயற்கையில் சுப கிரகமான குரு 8-ஆம் இடத்துக்கு வருவதால்-8-க்கு உரிய கெட்ட பலன்களை அதிகப்படுத்தலாம். எனவே குருப் பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசிக்காரர்களில் சிம்ம ராசிக்காரர்களும் ஒருவர். ஆக, சிம்ம ராசிக்கு 8-ல் குரு இருப்பது மட்டுமல்ல; ஏழரைச் சனி கழிவும் பாதச்சனியும் இருப்பது, "கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனால் அங்கே ரெண்டு கொடுமை ஆடிக்கிட்டு இருந்த மாதிரிதான்!' ஆனால் இதில் ஒரு ஆறுதல் என்னவென்றால், 8-க்குடையவர் 8-ல் ஆட்சி பெற்று சனியைப் பார்ப்பதுதான்! ஏனென்றால் குரு பார்க்க கோடி நன்மை என்பதும் கோடி தோஷம் போகும் என்பதும் பழமொழியல்லவா?இப்போது குரு சிம்ம ராசிக்கு 8-ல் மறைவு. அவரை 6-க்குடைய சனி பார்க்கிறார். குருவும் சனியைப் பார்க்கிறார். 6-க்குடைய சனி 2-ல் நிற்கிறார். 2-ஆம் இடம் தன ஸ்தானம், குடும்ப ஸ்தானம், வாக்கு ஸ்தானம். அதில் சிம்ம ராசிக்கும் 6-க்குடையவர்- பொருளாதாரச் சிக்கல், குடும்பத்தில் பிரச்சினை, விவகாரம், வாக்குவாதம், பனிப்போர், கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் போன்ற பலனையும் அனுபவிக்கலாம்.

5-க்குடையவர் 8-ல் மறைவு என்பதால் பிள்ளைகள் வகையிலும் தொல்லைகள், அனுசரிப்பு இல்லாத நிலை உண்டாகும். 7-க்குடையவர் சனி தன் ஸ்தானத்துக்கு 7-க்கு 8-ல் மறைவதால் கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிவினை ஏற்படலாம். ஒருவருக் கொருவர் குறை கூறிக் கொண்டே கரைச்சல் பண்ணிக் கொண்டிருப் பார்கள்.


இப்போது மீன ராசிக்கு மாறிய 8-ஆம் இடத்து குரு 12-ஆம் இடத்தையும் (கடகத்தையும்) 2-ஆம் இடத்தையும் (கன்னியையும்) 4-ஆம் இடத்தையும் (விருச்சிகத்தையும்) பார்க்கிறார்.

12-ஆம் இடம் என்பது பயணம், வெளியூர் வாசம், அயன சயன போக ஸ்தானம். விரயம், செலவு, மாற்றம் ஆகியவற்றையும் குறிக்கும். அந்த 12-ஆம் இடம் கடகத்துக்கு குரு 6, 9-க்குடையவராகி 9-ல் ஆட்சிபெற்று பார்ப்பதால், பூர்வீகச் சொத்துப் பரிவர்த்தனை அல்லது லாப விரயமாகி கடன் கப்பிகளை அடைத்து செட்டில் பண்ணலாம். பங்காளி விவகாரம் பைசல் ஆகும். தந்தை- பிள்ளை உறவில் பிரச்சினை ஏற்பட்டு நிவர்த்தி அடையும்.

2-ஆம் இடம் வாக்கு, வித்தை, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும். அந்த 2-ஆம் இடத்துக்கு 4, 7-க்குடையவராகி 7-ல் ஆட்சி பெற்று 2-ஆம் இடத்தைப் பார்க்கிறார். அங்கு 2-ஆம் இடத்துக்கு 5, 6-க்குடைய சனியும் இருக்கிறார். எனவே ஏழரைச்சனியின் ஆரம்பக் கட்டத்தில் படிப்பில் பின்தங்கியிருந்தவர்களும், அரியர்ஸ் வைத்திருந்த வர்களும், படிப்பு தடைப்பட்டவர்களும் இப்போது மீண்டும் சனி போவதற்குள் (சிம்மராசிக்கு கடைசிக் கட்ட ஏழரை) படிப்பைத் தொடரலாம். பட்டம் பெறலாம். கடந்த கால அனுபவத்தில் பரீட்சை நேரத்தில் உடல்நலக் குறைவால் பரீட்சை எழுத முடியாமல் போனவர் களும் இனி தெளிவாக சுகமாகி, தெம்பாக பரீட்சை எழுதி வெற்றி பெறலாம்.

குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் நிலவிய கருத்து வேறுபாடுகள் விலகி, பிரிந்திருந்தவர்கள் இணைந்து வாழும் யோகமுண்டாகும். அதேபோல வரவுக்குமேல் செலவாகி பட்ஜெட்டை சரிக்கட்ட, தராதரம் எல்லாம் பார்க்காமல் பத்து வட்டிக்கும் மீட்டர் வட்டி, ரன் வட்டி என்று கடன் வாங்கி கேவலப்பட்டவர்களுக்கும் 5, 8-க்குடையவர் 2-ஆம் இடத்தைப் பார்க்க, 6, 7-க்குடையவர் 2-ல் நிற்க- எதிர்பாராத பண உதவியாலோ அல்லது மனைவி (கணவன்) முயற்சியாலோ தாராளமான வரவு ஏற்பட்டு கடன்களையெல்லாம் பைசல் பண்ணிவிடலாம்.

கொடுத்த பணம் திரும்பக் கிடைக்க கார்த்தவீர்யார்ஜுன ஹோமமும் சொர்ண ஆகர்ஷண பைரவ ஹோமமும் செய்ய வேண்டும். தனிப்பட்ட முறையிலும் செய்யலாம். வாலாஜாபேட்டையில் தன்வந்திரி ஆரோக்கிய பீடத்திலும் மேற்படி ஹோமம் செய்யலாம். உலகத்திலேயே தன்வந்திரி பீடத்தில் மட்டுமே கார்த்த வீர்யார்ஜு னருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

12-ஆம் இடத்தைப் பார்க்கும் குரு உங்களுக்குத் தவிர்க்க முடியாத விரயத்தையும் செலவையும் ஏற்படுத்தினாலும், 2-ஆம் இடத்தையும் பார்ப்பதால் தன வரவுக்கும் வழி செய்வார். செலவழிக்கும் யோகம் இருக்கிறது என்றால் வரவுக்கும் வழி இருக்கிறது என்றுதானே அர்த்தம்.


பரிகாரம்

கும்பகோணத்திலிருந்து ஆலங்குடிக்கு நேரடி பஸ் வசதி உண்டு. இங்குள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு அற்புத சக்திகள் உண்டு. வசதிபோல அபிஷேகம், அர்ச்சனை, பூஜைகள் செய்யலாம்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

                   ன்னி ராசி அன்பர்களே!

கடந்த காலத்தில் கன்னி ராசிக்கு 6-ல் இருந்த குரு இப்போது 7-ஆம் இடத்துக்கு மீன ராசிக்கு மாறியிருக்கிறார். அங்கு ஆட்சி பெறுகிறார். பொதுவாகவே குருவுக்கு 2, 5, 7, 9, 11-ஆம் இடங்கள் யோகமான இடங்கள். அதிலும் அவர் ஆட்சி பலம் பெறுவதும் விசேஷம். 

ஜென்மச்சனியும் குருவும் 6 ல 8 சஷ்டாஷ்டக தோஷம் வேறு! 6-ஆம் இடத்து குரு கன்னி ராசிக்கு 10-ஆம் இடத்தையும் 12-ஆம் இடத்தையும் 2-ஆம் இடத்தையும் பார்த்தார். 10-ஆம் இடத்தை சனியும் பார்த்தார். அதனால் தொழில் அல்லது வேலை அல்லது உத்தியோகம் கெடாமல் காப்பாற்றப்பட்டாலும் பிரச்சினைகளோடு போராடும் நிலை நீடித்தது. "நித்திய கண்டம் பூரண ஆயுசு' என்ற மாதிரி! வேலை இருந்தால் ஆள் இல்லை; ஆள் இருந்தால் வேலை இல்லை; இரண்டும் இருந்தால் கொள்முதலுக்குப் பணம் இல்லை; மூன்றும் இருந்தால் கரண்டு இல்லை என்று வேண்டா வெறுப்பாகத் தொழிலைக் காப்பாற்றினீர்கள்- தொழில் உங்களைக் காப்பாற்றவில்லை.

நெருங்கிப் பழகிய உண்மையான நண்பர்களைப் பிரிய வைத்தது. போலியானவர்களிடம் வசியம் வைத்த மாதிரி மனதைப் பறிகொடுத்து, அவர்களை உபசரித்து உபசரித்து காசு பணத்தைச் செலவழிக்கச் செய்தது. அப்படிச் சொல்லுவதைவிட, ரௌடிகளுக்கு வரும் நேரமெல்லாம் மாமூல் கொடுத்த மாதிரி கப்பம் கட்ட வைத்தது. போதையில் இருப்பவனுக்கு நல்லவன்- கெட்டவன், நல்லது- கெட்டது தெரியாது. அதேபோல மோகத்தில் சிக்கியவனுக்கும் காமவெறி தலைக்கேறியவனுக்கும் வயது வித்தியாசம், உறவு முறை தெரியாது.

இப்போது குரு 7-ல் ஆட்சி பெற்று 11-ஆம் இடத்தையும் ஜென்ம ராசியையும் 3-ஆம் இடத்தையும் பார்க்கிறார். குரு தான் நின்ற இடத்தில் இருந்து 5, 7, 9-ஆம் இடங்களைப் பார்ப்பார் என்பது தெரிந்ததே! ராசியை குரு பார்ப்பதால் செல்வாக்கும் சொல்வாக்கும் உருவாகும். அந்தஸ்தும் மதிப்பும் மரியாதையும் உண்டாகும். பொதுத்தொண்டு, அரசியல் கட்சி ஈடுபாடு உடையவர்களுக்குப் பெருமை சேரும். பதவிகள் தேடி வரும். ஜென்ம ராசியில் சனி நிற்க, 10-ஆம் இடத்திற்கு கேது- ராகு சம்பந்தம் ஏற்பட்டு சனியும் பார்ப்பதால், அரசியலில் கட்சி விட்டுக் கட்சி மாறுவதன் மூலம் தன் எதிர்காலத்தை அதிர்ஷ்டமாக்கிக் கொள்வார்கள். எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். ஆற்றல், செயல்பாடு ஆகியவற்றில் ஆர்வம், அக்கறை, திறமைகளை வெளிப்படுத்தி பெருமையடையலாம்.

கடந்த காலத்தில் உங்களை ஓரம் கட்டியவர்களும் உதவாக்கரை என்று ஒதுக்கியவர்களும் கருவேப்பிலை மாதிரி காரிய சாதனைக்குப் பயன்படுத்திக் கொண்டு தூக்கி எறிந்தவர்களும் இனி உங்கள் அருமை பெருமைகளை அறிந்து முக்கியத்துவம் கொடுப்பார்கள். பொதுத் தொண்டில், அரசியலில் ஈடுபாடு உள்ளவர்களுக்குத் தலைமைப் பொறுப்பு அமையும். பட்டம், பதவி, அந்தஸ்தைத் தேடி அலைய வேண்டாம். அதுமட்டுமல்ல; இதுவரை நீங்கள் ஊருக்கு உழைத்தது போதும். மற்றவர்கள் உயருவதற்கு ஏணியாக இருந்தது போதும். இனிமேல் உங்கள் மனைவி மக்களுக்காகவும் சொந்தக் குடும்பத்திற் காகவும் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். அதற்குரிய வாய்ப்பையும் வழிமுறை சந்தர்ப்பங்களையும் ஜென்ம ராசியைப் பார்க்கும் குரு வகுத்துக் கொடுப்பார்.

7-ஆம் இடம் என்பது கணவன் அல்லது மனைவி ஸ்தானம் ஆகும். அங்கு குரு வந்திருப்பதால் திருமணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு ஆண்களானாலும் சரி; பெண்களானாலும் சரி- திருமணத் தடை நீங்கித் திருமணம் கூடிவிடும். ஏற்கெனவே திருமணமாகி ஏழரைச் சனியில் பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் இனிமேல் ஒன்று சேர்ந்து இணைந்து வாழ்வார்கள்.

கடந்த காலத்தில் குரு 6-ல் இருந்தபோது சில அத்தியாவசியத் தேவைகளுக்காகத் தவிர்க்க முடியாமல் கடன்பட்டவர்கள், இப்போது 7-ல் குரு இருக்கும் காலத்தில் எல்லாக் கடன்களையும் அடைத்து விடலாம். அதற்கு மனைவி, மக்களின் ஆதரவும் உதவியும் அமையலாம். அதாவது, மனைவி வகையில் எதிர்பாராத தனவரவு வந்து கடன் அடைபடலாம். அல்லது மனைவி பேரில் தொழில் செய்து லாபம் கிடைத்து கடனை அடைக்கலாம். அதேபோல பிள்ளைகளும் நல்ல வேலைக்குப் போய் ஆயிரக்கணக்கில் சம்பாத்தியம் செய்து கொடுத்து உதவலாம். அல்லது வெளிநாட்டு வேலைக்குப் போய் லட்சக்கணக்கில் சம்பாதித்து அனுப்பலாம். அதை வைத்துக் கடனை அடைக்கலாம்.

மீன குரு 5-ஆம் பார்வையாகக் கன்னி ராசிக்கு 11-ஆம் இடம் லாப ஸ்தானத்தைப் பார்ப்பதால் (கடகத்தை) நீங்கள் செய்யும் தொழில் துறையில் அதிக லாபம் ஈட்டலாம். நீண்ட காலமாக நடந்து வந்த பூர்வீகச் சொத்து வழக்கு உங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பாகி, பொசிஷனைக் கைப்பற்றி, அதைப் பல மடங்கு லாபத்துக்கு விற்றுக் காசாக்கலாம். அதனால் உங்கள் திட்டங்கள் நிறைவேறலாம்.

11-ஆம் இடம் என்பது மூத்த சகோதர ஸ்தானத்தையும் குறிக்கும்; உபய களஸ்திரத்தையும் குறிக்கும். அதனால் உங்கள் உடன் பிறந்தவர்கள் வகையில் லாபம், வெற்றி உண்டாகலாம். அவர்களின் ஆதரவுடன் வாழ்வில் முன்னேற்றமடையலாம். அவர்களோடு சேர்ந்து தொழில் துறையில் ஈடுபடலாம். ஜாதக யோகம் அமைந்திருந்தால் சிலருக்கு மறுமணம் செய்து கொள்ளுவதன் மூலமாகவோ அல்லது சின்னவீடு செட்-அப் செய்து கொள்வதன் மூலமாகவோ வாழ்வில் முக்கியமான திருப்பங்கள், நன்மைகள் உண்டாகும்.
அடுத்து மீன குரு 3-ஆம் இடத்தைப் பார்க்கிறார். 3-ஆம் இடம் என்பது சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம், பராக்கிரம ஸ்தானம். அந்த இடத்துக்கு (விருச்சிகத்திற்கு) 2, 5-க்குடைய குரு 5-ல் ஆட்சி பெற்று அதைப் பார்க்கிறார். ஒவ்வொரு வீட்டிற்கும் பலனை நிர்ணயிக்கும்போது அந்த வீட்டுக்கு 5, 9-க்குடையவர்களையும் அவர்கள் நிலையையும் ஆராய வேண்டும். அதனால் அந்த இடத்திற்கு நன்மைகள் நடக்கும். அதேபோல அந்த வீட்டுக்கு 6, 8, 12-க்குடையவர்கள் சம்பந்தம் ஏற்பட்டால் அந்த இடத்துக்குக் கெடுதல் நடக்கும். கன்னி ராசிக்கு 3-ஆம் இடமான விருச்சிகத்திற்கு 5-ல் குரு ஆட்சி பெற்று 3-ஆம் இடத்தைப் பார்ப்பதால், 3-ஆம் பாவம் மேன்மையடையும். அதனால் சகோதர வகையில் நிலவிய பிரச்சினைகளும் சச்சரவுகளும் மாறும். அந்நியர்களின் விரோதமும் மாறும். ஜென்ம ராசியில் சனி நின்று 3-ஆம் இடத்தையும் பார்ப்பதால் சில நேரங்களில் நாம் விட்டுக் கொடுத்து உறவு கொள்வதா என்ற "ஈகோ' உணர்வையும் ஏற்படுத்தும். அவரையும் குரு பார்ப்பதால் விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை என்ற தத்துவப்படி "ஈகோ' உணர்வை விரட்டி விட்டு உறவாடுவதால் நன்மை உண்டாகும். பூர்வஜென்ம வினைப் பயனாக இந்த ஜென்மாவில் ரத்தபந்த சொந்தத்தோடு பிறந்து விட்டோம். அடுத்து வரும் ஜென்மாவில் யார் யாரோ எங்கே எங்கேயோ! இருக்கும் காலத்தில் ஏன் வேறுபாடு? பேதம்? "ஈகோ'? இவற்றைக் எல்லாம் ஒதுக்கி விட்டால் "அன்பே சிவம்' என்று ஆகிவிடலாம். "அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.'

பரிகாரம்

தஞ்சை அருகில் தென்குடித்திட்டை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவாலயத்தில் குரு பகவான் தனிச் சந்நிதியில் வீற்றிருக்கிறார். அங்கு சென்று சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, பூஜை வியாழக் கிழமையன்று செய்யலாம். அல்லது மதுரை சோழவந்தான் வழி செல்லும் நகரப்பேருந்தில் குருவித்துறை சென்று, சித்திர ரத வல்லப பெருமாள் ஆலயத்தின் வெளியில் சக்கரத்தாழ்வாருடன் குரு பகவான் தனிச் சந்நிதியில் யோக குருவாகக் காட்சியளிக்கிறார். வியாழக்கிழமை சென்று வழிபடலாம்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

                    துலா ராசி அன்பர்களே!

2009-டிசம்பரில் கும்ப ராசிக்கு வந்த குரு நான்கரை மாதத்தில் மீன ராசிக்கு மாறிவிட்டார். (2-5-2010). உங்கள் ராசிக்கு 5-ல் இருந்த குரு இப்போது 6-ஆம் இடத்துக்கு மாறியிருக்கிறார். ஏற்கெனவே இருந்த இடம் (5-ஆம் இடம்) அற்புதமான- யோகமான இடம் என்பதும், 6-ஆம் இடம் மோசமான இடம் என்பதும் பொது விதி!

அப்படி யோகமான 5-ஆம் இடத்தில் இருந்த குரு துலா ராசிக்காரர்கள் எல்லாருக்கும் கடந்த காலத்தில் யோகத்தைச் செய்தாரா என்று கருத்துக் கணிப்பு நடத்தினால், 20 சதவிகிதம்தான் நல்லது நடந்தது; மீதி 80 சதவிகிதம் எந்தவித நல்லதும் நடக்கவில்லை என்பதுதான் "ரிசல்ட்'டாக இருக்கும்.

பிள்ளைகள் வகையில் தொல்லைகளும் நிம்மதிக் குறைவும் சஞ்சலமும் அடைய நேர்ந்தது. ஒருசிலர் பிள்ளைகளால் புறக்கணிக்கப் பட்டு ஆதரவற்ற அனாதைகள்போல அவதிப்பட்டார்கள். முதியோர் இல்லத்தில் தஞ்சம் அடைவதா அல்லது முகவரி தெரியாத இடத்துக்கு கண் காணாமல் போய்விடுவதா என்று தடுமாறினார்கள். சிலர் தாங்கள் வகுத்த திட்டங்களில் திருப்பத்தையும் ஏமாற்றத்தையும் சந்தித்தார்கள்.

10-ஆம் இடத்துக்கு கும்ப குரு 8-ல் மறைந்த காரணத்தால், சிலர் தொழில் ஸ்தாபனம் நடந்த இடத்தில் பிரச்சினையை சந்திக்க நேர்ந்தது. அடிமை வேலையில் இருந்த சிலர் கௌரவப் பிரச்சினையால் பார்த்த வேலையைத் தூக்கி எறிந்து விட்டு வெளியேறினார்கள். சிலருக்கு வேலையில் விரும்பத்தகாத மாற்றமும் பதவி இறக்கமும் ஏற்பட்டது.

அப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கெல்லாம் மீன ராசிக்கு வந்திருக்கும் குரு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தப் போகிறார். எப்படி? வேலையைத் தூக்கி எறிந்து வெளியேறியவர்களுக்கு வேறு நல்ல வேலை அமையும். அல்லது சொந்தமாகப் புதிய தொழில் ஆரம்பிக்கும் யோகம் உண்டாகும். அல்லது  கூட்டுத்தொழில் செய்ய வாய்ப்பு வரும். இதற்கெல் லாம் முதலீட்டுத் தொகை கடனாகக் கிடைக்கும்.

அதே சமயம் தொழில் துறையில் போட்டியும் பொறாமையும் எதிர்ப்பும் இடையூறும் ஏற்பட்டாலும், குரு பார்வை இருப்பதால் உங்களுடைய தெய்வ பக்தியால் அவற்றை சமாளித்து விடலாம்.

குருவருளும் திருவருளும் இருந்தால் எவ்வளவு சங்கடங்கள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடலாம். என்னால் உருவாக்கப்பட்டவர் களும் என்னைப் பயன்படுத்தி முன்னேறியவர்களும் ஏராளமானவர்கள் உண்டு. அவர்கள் அனைவருமே விசுவாசமும் நன்றியும் உடையவர்கள் என்று சொல்ல முடியாது. இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்க நினைத்தவர்ளும் உண்டு. ஏறிய பிறகு ஏணியை எட்டி உதைத்த மாதிரி எனக்கு எதிரியாகி என்னை வீழ்த்த சதி செய்தவர்களும் உண்டு. அவர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்றி, அவர்களின் சூழ்ச்சியில் வீழ்ச்சியடையாமல் என்னை வளர்த்து வருவது குருவருளும் திருவருளும்தான்! தெய்வத்தின் துணையிருந்தால் நல்லவன் வாழ்வான்.

துலா ராசிக்கு 3, 6-க்குடைய குரு 6-ல் ஆட்சி பெற்று 10-ஆம் இடத்தையும் 12-ஆம் இடத்தையும் 2-ஆம் இடத்தையும் பார்க்கிறார்.

12-ஆம் இடம் வெளியூர் வாசம். 2-ஆம் இடம் வருமானம். 10-ஆம் இடம் தொழில் ஸ்தானம். ஊர்விட்டு ஊர் மாறுவதால் சில முன்னேறங் களும் உண்டாகும். உள்ளூரில் நல்ல வேலை, நல்ல வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டவர்கள் வெளியூரில் அல்லது வெளிநாட்டில் போய் அதிகச் சம்பளம் கிடைக்கும் வேலையில் அமர்ந்து செல்வாக்கு, யோகம், அதிர்ஷ்டத்தை அடையலாம்.

குரு 2-ஆம் இடத்தைப் பார்ப்பதன் பலன்- 2-ஆம் இடத்துக்கு 5-க்குடையவர் ஆட்சி பெற்றுப் பார்ப்பது சிறப்பு. ஒவ்வொரு வீட்டுப் பலனை நிர்ணயிக்கும்போது, அந்த வீட்டுக்கு 5, 9-க்குடையவர் களையும் அந்த இடத்தையும் கணிக்க வேண்டும் என்பது ஒரு விதி! அதன்படி 2-ஆம் இடத்துக்கு யோகாதிபதி குரு யோக ஸ்தானத்தில் நின்று பார்ப்பதால் வாக்கு, தனம், குடும்பம் ஆகிய 2-ஆம் பாவத்துக்கு யோகம் உண்டாகும். அந்த யோகத்துக்குத் துணை நிற்பது சனி பகவான் தான்! சனியா? அவர் எப்படி யோகம் செய்வார் என்று உங்களுக்கு சந்தேகம் வருகிறதா? துலாராசிக்கு சனி ராஜயோகாதிபதியாவார். அவரும் 12-ல் நின்று விருச்சிக ராசியைப் (2-ஆம் இடத்தை) பார்க்கிறார். அதாவது 2-ஆம் பாவத்தின் யோகாதிபதியும் துலா ராசியின் யோகாதிபதியும் (குருவும் சனியும்) ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதுடன் அந்த இருவரும் 2-ஆம் பாவத்தைப் பார்க்கிறார்கள். அதனால் 2-ஆம் பாவத்துக்கு யோகம் உண்டாகிறது. இது பிளஸ் பாயிண்டு! துலாராசிக்கு 6-ல் குருவும் 12-ல் சனியும் மறைவு ஸ்தானத்தில் நின்று பார்ப்பது மைனஸ் பாயிண்டு. ஆகவே சில எதிர்ப்புகளும் அல்லது போட்டி பொறாமைகளும் ஏற்படத்தான் செய்யும். அதைச் சமாளிக்க வேண்டிவரும். அரசின் நல்ல திட்டங்களை மற்றவர்கள் வரவேற்றாலும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வதில்லையா? அதுபோல! உங்கள் வாக்குச் சாமர்த்தியமும் பேச்சுத் திறனும் உங்களுக் குப் பெருமை தேடித் தரும். சிலருக்கு வாக்குப்பலிதமும் உண்டாகும்.

6-ஆம் இடம் அசுப ஸ்தானம். குரு சுப கிரகம். சுப கிரகம் எந்த வீட்டில் இருத்தாலும் அந்த இடத்துப் பலனை விருத்தி பண்ணுவார். கெட்ட கிரகம் அந்த இடத்துப் பலனைக் கெடுப்பார். அதனால் 6-ல் குரு ஆட்சி பெறுவதால் எதிரி, கடன், நோய், வைத்தியச் செலவு போன்ற கெடுதலை பலப்படுத்துவார் என்று சொல்ல வேண்டும். ஆனால் அந்த வீட்டுக்குடையவர் என்பதால் விதிவிலக்கு ஏற்படும்.

பரிகாரம்:

திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோவில் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி சந்நிதி இருக்கிறது. ஆலங்குடியையும் திருச்செந்தூரையும் குரு ஸ்தலம் என்பார்கள். இங்கு சென்று தட்சிணா மூர்த்திக்கு சிறப்புப் பூஜை செய்வதோடு, மூலஸ்தானம் பக்கத்தில் (சுரங்கப்பாதை வழி) பஞ்சலிங்க தரிசனமும் செய்ய வேண்டும். கடலில் சமுத்திர ஸ்நானம் செய்வதற்கு விதிமுறை உண்டு. முதலில் நாழிக் கிணற்றில் குளித்த பிறகுதான் சமுத்திரத்தில் நீராட வேண்டும். பிறகு மீண்டும் நாழிக் கிணற்றில் குளிக்கலாம் அல்லது வெளிக் குழாயில் குளிக்கலாம்.
விருச்சிகம்
(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

                       விருச்சிக ராசி அன்பர்களே!

இதுவரை 4-ல் இருந்த குரு இப்போது 5-ஆம் இடத்துக்கு மாறியது மட்டுமல்ல; ஆட்சி பலம் பெற்று உங்கள் ராசியைப் பார்ப்பதும் யோகம்தான்! இந்த குருப் பெயர்ச்சியின் மூலமாக அதிர்ஷ்டத்தையும் யோகத்தையும் அனுபவிக்கப் போகும் ஐந்து ராசிக்காரர்களில் நீங்களும் ஒருவர்.  பொதுவாகவே குருவுக்கு யோகமான இடங்கள் 2, 5, 7, 9, 11-ஆம் இடங்கள்தான்.


இப்போது 5-ஆம் இடத்துக்கு வந்திருக்கும் குரு அங்கு ஆட்சிபலம் அடைகிறார். 5-ஆம் பார்வையாக 9-ஆம் இடத்தையும் 7-ஆம் பார்வையாக 11-ஆம் இடத்தையும் 9-ஆம் பார்வையாக உங்கள் ஜென்ம ராசியையும் பார்க்கிறார். குருவுக்கு 5, 7, 9-ஆம் பார்வை உண்டு என்பது உங்களுக்குத் தெரிந்ததே.

5-ஆம் இடம் என்பது புத்திர ஸ்தானம். மகிழ்ச்சி, திட்டம், எண்ணம், குரு உபதேசம், பக்தி, பூர்வ புண்ணியம் ஆகியவற்றைக் குறிக்கும் இடம். அங்கு புத்திர காரகனும் தன காரகனுமான குரு அமர்ந்திருப்பதும் ஆட்சி பெறுவதும் அனுகூலம்தான்! சிறப்புதான்! மக்கள் பேறு, மகிழ்ச்சி, உண்மையான வேலையாட்கள் அமைதல், சகலவிதமான சம்பத்து, செல்வம், பாக்கியம் உண்டாகுதல், மந்திர உபதேசம் கிடைத்தல், பக்தி வழிபாடு, இஷ்ட தெய்வ- குலதெய்வ பிரார்த்தனை நிறைவேறுதல், தாய்மாமன் உதவி, பாட்டனார் அல்லது பிதுரார்ஜித சொத்துகள் கிடைத்தல் ஆகிய பலன்கள் உண்டாகும். உங்களின் நீண்ட காலத் திட்டங்களும் கனவுகளும் நிறைவேறும்.

திருமணமாகி பல ஆண்டுகளாக வாரிசு இல்லாமல் எதிர்பார்த்து ஏங்கியவர்களுக்கு ஆண் வாரிசு அல்லது பெண் வாரிசு உண்டாகும். திருமண வயதில் காத்திருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் நிறைவேறும். பருவ வயதுடைய பெண்களுக்கு பூப்பெய்தல் போன்ற மங்கள காரியங்கள் கைகூடும்.

படித்த பிள்ளைகளுக்கு தகுதிக்கேற்றபடி தரமான வேலை வாய்ப்பும் முன்னேற்றமும் உண்டாகும். பதவியில் இருப்போருக்கு பதவி உயர்வும் எதிர்பார்க்கும் சம்பள உயர்வும் விரும்பிய இடப்பெயர்ச்சியும் உண்டாகும். வாழ்க்கைத் தரத்தில் மேன்மையும் மன நிறைவும் ஏற்படும்.

விருச்சிக ராசிக்கு 5-ல் நிற்கும் குருவால் உங்கள் அந்தஸ்து உயரும். கௌரவம் மேலோங்கும். பெரும் புகழும் பெருமையும் உண்டாகும். குரு எந்தெந்த வீட்டுக்கு 5, 9 என்ற திரிகோணத்தில் இருக்கிறாரோ அந்த வீட்டுக்கு நன்மை ஏற்படும் என்று ஏற்கெனவே பார்த்தோம். அதேபோல அவர் பார்த்த இடத்துக்கும் பெருமை சேர்ப்பார். ஜென்ம ராசிக்கு 5-ல்- 9-ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானத்துக்கு- 9-ல் திரிகோணம் பெறுகிறார்.

குரு ஜென்ம ராசிக்குத் திரிகோணத்தில் நின்று ஜென்ம ராசியைப் பார்ப்பதால் இதுவரை ஏனோதானோவென்று எந்தக் குறிக்கோளும் லட்சியமும் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கைக்கு இனிமேல்தான் ஒரு அர்த்தம் உண்டாகப் போகிறது. ஜென்மம் என்பது செல்வாக்கு, கீர்த்தி, திறமை, செயல்பாடு, அந்தஸ்து ஆகியவற்றைக் குறிக்கும் இடம். உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். திறமைக்கேற்ற பெருமையும் பாராட்டும் கிடைக்கும். கஷ்டப்பட்ட தற்குப் பலன் கிடைக்கும். கௌரவப் பதவிகள் கிடைக்கும். சமூக நலச் சங்கங்களிலும் லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் அறக்கட்டளை போன்ற ஸ்தாபனங்களிலும் முக்கிய பொறுப்புகள் தேடிவரும். மதிப்பு, மரியாதை, செல்வாக்கு, அந்தஸ்து உயரும்.

இதுவரையிலும் உங்களுக்கு அன்ன, ஆடை தரித்திரம் இல்லையென்றாலும், குடியிருக்கும் இடத்துக்கும் பிரச்சினை இல்லையென்றாலும் ஏலக்காய் இருந்த வெறும் டப்பா சரக்கு இல்லாவிட்டாலும் மணக்கும் என்பதுபோல வறட்டுக் கௌரவமாகத் தான் வாழ்க்கை ஓடுகிறதே தவிர, பத்து நாள் முடியாமல் வீட்டில் படுத்துக் கொண்டால் கையிருப்பில் இருந்து எடுத்துச் செலவழிக் குமளவு சேமித்து வைக்கவில்லை. குருப் பெயர்ச்சியால் அந்த நிலை மாறிவிடும்.

உங்கள் குடும்பத்துக்கும் மனைவி மக்களுக்கும் பயன்படும் அளவில் பலன் கிடைக்கப் போகிறது. வீடுவாசல் வசதி, சேமிப்பு உண்டாகப் போகிறது. இதுவரை உங்களை உதாசீனப்படுத்தி ஓரம் கட்டிய உற்றார் உறவினர்கள் உங்களைத் தேடிவந்து கைகுலுக்கிப் பாராட்டுவார்கள். பூர்வீகச் சொத்துகள் அல்லது சுய சம்பாத்திய சொத்துகள் இருந்தும் அனுபவிக்க முடியாத- பயன்படுத்த முடியாத நிலை இனி மாறிவிடும். கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக சொத்துகளை விற்கமுடியாமலும்,. அதனால் வருமானம் பார்த்து அனுபவிக்க முடியாமலும் அவதிப்பட்டார்கள். அந்த அவல நிலைக்கு இந்த குருப் பெயர்ச்சி ஒரு நல்ல திருப்பத்தையும் அனுகூலத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

ஆலய வழிபாடு, ஆன்மிகத் தொடர்பு, மகான்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். தெய்வப் பிரார்த்தனைகளையும் நேர்த்திக் கடன்களையும் நிறைவேற்றலாம். குலதெய்வத்தின் அருளுக்குப் பாத்திரமாகலாம். 2-ல் உள்ள ராகுவும் அவரைப் பார்க்கும் கேதுவும் ஜோதிட ஞானம், வைத்தி யம், கைராசி, அருள்வாக்கு சொல்லும் யோகத்தை வழங்குவார்கள்.

11-ஆம் இடம் லாப ஸ்தானம், வெற்றி ஸ்தானம். அதையும் குரு பார்க்கிறார். 2-க்குடையவராகி 11-ஆம் இடத்தைப் பார்ப்பது தனலாபம்! தொட்டதெல்லாம் தோல்வியின்றி வெற்றியாகும்! நீண்டகாலமாக நடைபெற்று வந்த வில்லங்கம், விவகாரம் எல்லாவற்றிலும் ஜெயம் உண்டாகும். சாதகமான திருப்பமும் நல்ல தீர்ப்பும் கிடைக்கும். மூத்த சகோதர வகையில் அல்லது சகோதரி வகையில் சகாயமும் லாபமும் அனுகூலமும் எதிர்பார்க்கலாம். குரு மீன ராசியில் இருக்கும்போதே- காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்பதுபோல உங்கள் எதிர்கால இன்ப வாழ்க்கைக்கு காங்கிரீட் பவுண்டேஷன் போட்டு கட்டிடம் எழுப்பி விடுங்கள்.

பரிகாரம்:

மயிலாடுதுறை அருகில் திருவீழிமிழலை என்னும் ஊரில் உள்ள சிவாலயத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி அற்புத சக்தி படைத்தவர். அவரை வணங்கலாம். காரைக்குடியில் நாகநாத சுவாமி கோவில் வெளிப்புறத்தில்- ஊருணிக் கரையில் ஆலமரத்தடியில் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி பிரதிஷ்டை ஆகியிருக்கிறார். வியாழக்கிழமை அவருக்கு அபிஷேகம் செய்து வழிபடலாம்
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

               னுசு ராசி அன்பர்களே!

இதுவரை ராசிக்கு 3-ல் இருந்த குரு இப்போது 4-ஆம் இடத்திற்கு மாறியிருக்கிறார். ஏற்கெனவே இருந்த இடமும் சரியில்லை; இப்போது மாறியுள்ள இடமும் சுமார்தான். 

இப்போது குரு பகவான் தனுசு ராசிக்கு 4-ல் வந்திருந்தாலும் அங்கு ஆட்சி பலம் பெறுவதால் சிறப்பு உண்டு. குரு 4-லிலே வந்தபோது தர்மபுத்திரர் வனவாசமாகப் போனாலும்கூட அட்சய பாத்திர உதவியால் பஞ்சம், பசி, பட்டினி இல்லை. பஞ்சபாண்டவர்களுக்கு அன்ன, ஆடை தரித்திர வாழ்க்கையும் இல்லை. கண்ணபரமாத்மா வின் வழிகாட்டுதலோடு ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு சாதனை களைச் செய்து ஊராரின் பாராட்டுக்கு ஆளானார்கள். அதுமாதிரி 4-க்குடைய குரு 4-ல் ஆட்சி பெற்று 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் தொழில், வாழ்க்கை சீராகச் செயல்படும்.
தனுசு ராசிக்கு 10-ல் சனி இருப்பதால், படித்த இளைஞர்கள் வெளிநாட்டு வேலைக்குப் போய் நல்ல சம்பாத்தியத்தில் செட்டிலாகி விடலாம். உள்ளூரில் வேலை பார்க்கிறவர்களுக்கும் பதவி உயர்வு, சம்பள உயர்வு என்ற பெருமை உண்டாகும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கும் வியாபார விருத்தியும் முன்னேற்றமும் லாபமும் சேமிப்பும் உண்டாகி பழைய கடன்களை அடைத்துவிடலாம். தொழில் சீர்திருத்த மேன்மைக்காக சுப விரயம் செய்யலாம்.

இன்றைக்கு பலசரக்குக் கடையாகட்டும், ஹோட்டல் ஆகட்டும், மெடிக்கல் ஸ்டோராகட்டும், ஜவுளிக் கடையாகட்டும், சலூன் கடையாகட்டும்- எல்லாத் தொழில் ஸ்தாபனங்களிலும் ஆடம்பர அலங்கார ஷோகேஸ் செட்டப் இருந்தால்தான் மக்களைக் கவர முடிகிறது. மினி பஸ்ஸில்கூட டி.வி., காய்ன் பாக்ஸ் போனெல்லாம் அமைத்திருக்கிறார்கள். காய்கறி வியாபாரத்தில்கூட ஏ.சி. செட்டப் அமைக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் தொழில்வகை சுபவிரயம் தான். இப்படி இருந்தால்தான் மக்கள் பேரம் பேசாமல் எழுதி வைத்துள்ள கிரயத்தை வாட் வரியோடு கொடுத்துப் போவார்கள். அதுமட்டுமல்ல; எல்லா வியாபார ஸ்தாபனங்களிலும் ஒரு கம்ப்யூட்டரும், அதை ஆப்ரேட் செய்ய ஒரு பெண் ஊழியரும் இருப்பதைப் பார்க்கலாம்!

ஆக, விஞ்ஞானம் முன்னேற முன்னேற நாகரீகம் முன்னேறுகிறது. நாகரீகம் முன்னேற முன்னேற எதிர்மறை விளைவுகளும் ஆபத்துகளும் அதிகமாகிறது.

குருவும் சனியும் கூடினால் சண்டாள யோகம் என்பார்கள். இங்கு கூடவில்லை. மீன குருவும் கன்னிச் சனியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள். தனுசு ராசிக்கு 4-ல் குருவும் 10-ல் சனியும் நின்று பார்த்துக் கொள்வதால், வேலை பார்த்துக் கொண்டே படிக்கும் யோகமும் உருவாகும். பதவி உயர்வுக்கான படிப்பாகவும் அது அமையலாம். 7-ஆம் இடத்திற்கு 9-க்குடைய சனியும் 10-க்குடைய குருவும் பார்த்துக் கொள்வதால், 7-ஆம் இடத்திற்கு தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படும். அதனால் தனுசு ராசியில் பிறந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமண யோகம் உண்டாகும். திருமணமானவர் களுக்கு கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் யோகம் உண்டாகும். 7-க்கு 4, 10-ல் குரு, சனி சம்பந்தம் ஏற்படுவதால், மனைவிக்கு அல்லது கணவருக்கு பதவி உயர்வு, சொந்த வீடு போன்ற யோகங்களை எதிர்பார்க்கலாம். சிலருக்கு புதிய வாகன யோகமும் அமையும். 7-ல் கேதுவும் அதை ராகுவும் பார்ப்பதால் சிலபேருக்கு ஜாதக தசாபுக்திகள் மோசமாக இருந்தால் ஆரோக்கியம் பாதிக்கப் படும். குறிப்பாக ராகு- கேது சம்பந்தப்பட்ட தசைகள் நடந்தால் சுகர், பி.பி. போன்ற பாதிப்புகள் ஏற்பட இடமுண்டு. சிலருக்கு அறுசுவை சாப்பாட்டு வசதிக் குறைவால் வாய்க்கு ருசியாகச் சாப்பிட முடியாமல் சலிப்பு ஏற்படும். வெளியூர் வேலையில் இருப்பவர்கள் தாங்களே தெரிந்தவரை சமைத்துச் சாப்பிடும் அமைப்பும் உருவாகும்.

மீன ராசியில் இருக்கும் குரு 5-ஆம் பார்வையாக 8-ஆம் இடத்தையும், 7-ஆம் பார்வையாக 10-ஆம் இடத்தையும், 9-ஆம் பார்வையாக 12-ஆம் இடத்தையும் பார்க்கிறார். 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் தொழில் முன்னேற்றம், உத்தியோக முன்னேற்றம் எல்லாம் சிறப்பாக இருக்கும். 8-ஆம் இடத்தைப் பார்ப்பதால் சில நேரங்களில் மனக் குழப்பமும் வேதனையும் கற்பனை பயமும் வரலாம். நீங்கள் யாருக்கு நல்லது செய்தாலும் அது கெடுதலாக முடியலாம். வேண்டாத விவகாரங்களிலும் பிரச்சினைகளிலும் தலையிட்டு அலட்டிக் கொள்ளும் நிலையும் ஏற்படலாம். வேலை செய்யும் இடத்திலும் கௌரவப் போராட்டம் நீடிக்கும்.

அடுத்து, குரு 12-ஆம் இடத்தைப் பார்ப்பதோடு சனியும் 12-ஐப் பார்க்கிறார். 12 என்பது மாறுதலுக்குரிய இடம். சிலருக்கு வெளிநாட்டு யோகமும் வெளியூர் வாசமும் ஏற்படும். 4-ல் குரு இருப்பதால், அவரை சனி பார்ப்பதால் வீடு மாறலாம். அல்லது கார், ஸ்கூட்டர், லாரி போன்ற வாகனங்களை மாற்றலாம். நீண்ட காலத்திற்கு முன்பு வாங்கிப் போட்ட காலிமனை, பிளாட்டுகளை அதிக லாபத்திற்கு விற்கலாம். அல்லது அந்த இடம் நான்கு ரோடு தங்கச்சாலைக்கு அருகில் அமைவதாலோ, டவுன்ஷிப் விரிவடைவதாலோ, மத்திய பேருந்து நிலையம் அருகில் வரப்போவதாலோ, இடத்தின் வேல்யூ அதிகமாகி காம்ப்ளக்ஸ் கட்டிடம் கட்டி வியாபார ஸ்தலங்களுக்கு நல்ல வாடகைக்கு விடலாம். ஒரு சிலர் பணப் பற்றாக்குறையைச் சமாளிக்க இடத்தில் ஒரு பகுதியை நல்ல விலைக்கு விற்று, அந்தப் பணத்தைக் கொண்டு அபார்ட்மெண்ட்ஸ் கட்டலாம். கட்டிட சம்பந்தமான காரியங்களில் தேக்கமும் தடையும் காணப்பட்டால், புதுக்கோட்டை- பொன்னமராவதி பாதையில் குழிபிறை அருகில் செவலூர் சென்று பூமிநாத சுவாமிக்குப் பூஜை போடலாம். அருப்புக்கோட்டை அருகில் திருச்சுழி சென்று அங்கும் பூமிநாத சுவாமியையும், துணை மாலைநாத அம்மனையும் பிரார்த்திக்கலாம். சைவ நெறியில் உள்ளவர்கள் விருத்தாசலம் அருகில் உள்ள மேற்கண்ட இரண்டு இடங்களுக்கும் போய் வழிபடுவது சிறப்பு. அதேபோல வைஷ்ணவ சம்பிரதாயத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் விருத்தாசலம் அருகில் ஸ்ரீமுஷ்ணம் சென்று பூவராக சுவாமியை வழிபட்டால் பூமி, கட்டிடம் சம்பந்தமான காரியங்கள் தங்கு தடையின்றி நிறைவேறும்.

பரிகாரம்:

கும்பகோணம், ஆடுதுறை அருகில் சூரியனார் கோவில் என்னும் நவகிரக தலம் இருக்கிறது. இங்கு சூரியன் உஷா, பிரத்யுஷா தேவி சகிதம் மூல ஸ்தானமாக மேற்கு நோக்கி இருக்கிறார். அவர் எதிரில் குரு (வியாழன்) யானை வாகனத்துடன் காட்சியளிக்கிறார். மற்ற ஏழு கிரகங்களும் சூரியனைச் சுற்றித் தனித்தனி சந்நிதிகளில் எழுந்தருளி உள்ளார்கள். இங்கு சென்று வழிபடுவதால் நவகிரகங்களும் உங்களுக்கு அனுக்கிரகம் செய்வார்கள். அருகில் திருமங்கலக்குடியில் மங்களாம் பிகை- பிராணநாதேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. பிராணனைக் காத்த பிராணநாதேஸ்வரர், மாங்கல்யம் காத்த மங்களாம்பிகை! இங்கும் சென்று வழிபட வேண்டும்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

                 கர ராசி அன்பர்களே!

இதுவரை மகர ராசிக்கு 2-ல் இருந்த குரு இப்போது 3-ஆம் வீட்டுக்கு மாறுகிறார். அது அவரது சொந்த வீடு; ஆட்சி வீடு!


இப்போது 3-ஆம் இடத்துக்கு வந்த குரு என்ன செய்யப் போகிறார்? 3-ஆம் இடம் என்பது சகோதர ஸ்தானம். தைரிய வீரிய பராக்கிரமத்தையும் சகாயம், உதவியையும் குறிக்கும் இடம். 3-க்குடையவரே குருதான்.  உங்களுக்குத் தைரியமும் தன்னம்பிக்கையும் உண்டாகும். தைரியம் புருஷ லட்சணம் என்பார்கள். அதனால் தைரியம் இருந்தால் எதையும் சாதிக்கலாம். 

மீன குரு 5-ஆம் பார்வையாக 7-ஆம் இடத்தைப் பார்க்கிறார். 7-ஆம் இடம் கடகம். அதற்கு குரு 6, 9-க்கு உடையவர். 9-ல் ஆட்சி பெற்று பார்க்கிறார். அங்கு செவ்வாய் நீசமாக இருக்கிறார். செவ்வாய் இருப்பது தோஷம் என்றாலும் குரு பார்வையால் தோஷம் விலகும்; திருமணத் தடையும் விலகும். "எத்தனையோ பெண்களைப் பார்த்தாச்சு; எத்தனையோ வரன்களைப் பார்த்தாச்சு. வயது ஏறிக்கொண்டே போகிறது. இன்னும் கல்யாணம் கூடமாட்டேங்குது' என்று பெண்ணைப் பெற்றவர்களும் பிள்ளையைப் பெற்றவர்களும் கலங்கிக் கண்ணீர் வடிக்கும் நிலைக்கு இந்த குருப் பெயர்ச்சி ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடும். சுபமுடிவு எடுக்கச் செய்யும். மனசுக்கேத்த மருமகன் அல்லது மருமகள் அமைந்து விடும். திருமணக் கனவு காணும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கனவு நிறைவேறும். மனம்போல மாங்கல்யம் நிறைவேறிவிடும்.

கடந்த காலத்தில் 7-ஆம் இடமான கடகத்துக்கு 8-ல் குரு மறைவு பெற்றதால், கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாட்டால் வெறுத்து விலகியிருந்தவர்களும் இப்போது 7-ஆம் இடத்தை குரு பார்ப்பதால், பிரிந்திருந்தவர்கள் ஒருவரையொருவர் புரிந்து இணைந்து விடுவார்கள். 7-க்கு பாக்யாதிபதி குரு -ஜீவனாதிபதி செவ்வாய். இருவருக்கும் பார்வை சம்பந்தம் கிடைப்பதால்- 7-ஆம் இடத்துக்கு தர்மகர்மாதிபதி யோகம் உண்டாவதால் 7-ஆம் பாவத்துக்கு அனுகூலமான பலன் நடக்கும்.

7-ஆம் இடம் என்பது உப தொழில் ஸ்தானமும் ஆகும். அதனால் உபதொழில் யோகம் அமையும். அல்லது மனைவிக்கு வேலை யோகம், உத்தியோக வாய்ப்பு கிடைக்கும். அல்லது மனைவி பேரில் தொழில் அமைக்கலாம். கூட்டுத் தொழில் ஆரம்பிக்கலாம்.

அடுத்து குரு 9-ஆம் இடத்தைப் பார்க்கிறார். அந்த 9-ஆம் இடத்தில் ராசிநாதன் சனி இருக்கிறார். பொதுவாக குருவும் சனியும் சேர்ந்தால் சண்டாள யோகம். ஆனால் பார்த்தால் தோஷமில்லை. மேலும் ராசிநாதன் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்துக்கு நன்மையுண்டு. எனவே பிதுரார்ஜித சொத்துக்களினால் உங்களுக்குச் சகாயம் உண்டு; நன்மையுண்டு. குரு 3-க்குடையவர் 3-ல் ஆட்சி என்பதால், உங்கள் சகோதர- சகோதரி வகையில் இருக்கும் தகப்பனார் அல்லது தாயாரின் பங்கு பாகங்களையும் நீங்கள் விலைக்கு வாங்கி விடலாம். அவர்களும் வெளியாட்களுக்கு பூர்வீகச் சொத்துக்களைக் கொடுப்பதற்குப் பதில் ஒன்றுக்குள் ஒன்று உடன்பிறந்தவர்களுக்கே கொடுக்க முன்வரலாம். தெய்வ அனுகூலமும் தகப்பனாரின் ஆசியும் பண உதவியும் எதிர்பார்க்கலாம். குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு, பிரார்த்தனைக் கடன்களை பங்காளிகள் சேர்ந்து நிறைவேற்றலாம். பழனி, திருச்செந்தூர் போன்ற முருகன் ஸ்தலங்களில் தங்க ரதப் பிரார்த்தனைகள் நிறைவேறும்.

அடுத்து குரு 11-ஆம் இடமான விருச்சிகத்தைப் பார்க்கிறார். அந்த இடத்தை சனியும் பார்க்கிறார். எனவே தொட்டதெல்லாம் வெற்றி மேல் வெற்றியும் முன்னேற்றமும் லாபமும் உண்டாகும். யோக காரனுக்கு ஆண்டவன் காவல்காரன் என்பார்கள். அதனால் உங்களுக்கு தெய்வ அனுகூலமும் பரிபூரணமாக அமையும்.

மகர ராசிக்கு 10-ஆம் இடம் தொழில் ஸ்தானம் துலாம். அதற்கு 3, 6-க்குடைய குரு 6-ல் ஆட்சி பெற்று 10-ஆம் இடத்துக்கு தன ஸ்தானத்தையும் விரய ஸ்தானத்தையும் (10-க்கு 2, 12-ஐ) பார்ப்பதால் தொழில் துறையில் வரவும் உண்டு; செலவும் உண்டு.

பரிகாரம்:

சென்னை- அம்பத்தூர் செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில் பாடி என்னும் ஊர் இருக்கிறது. இதுவே திருவலிதாயம் எனப்படும். இங்குள்ள ஈசன் வலிதாய நாதர். திருஞானசம்பந்தப் பெருமானால் பாடல் பெற்ற ஸ்தலம். இங்கு தட்சிணாமூர்த்திக்குப் பெருமையும் சிறப்பும் உண்டு. சென்னைக்கு வடக்குப்புறம் 10 கி.மீ. தொலைவில் திருவொற்றியூர் இருக்கிறது. பட்டினத்தார் ஜீவசமாதியான இடம். வடலூர் வள்ளலார் இங்கு தங்கியிருந்தார். ஈசன் தியாகராஜப் பெருமான், அம்பாள் வடிவுடையம்மன். இங்குள்ள குரு தட்சிணாமூர்த்தி அருள் நிறைந்தவர். 27 நட்சத்திரத்திற்கும் 27 சிவலிங்க மூர்த்திகள் உள்ளன. அவரவர் நட்சத்திர லிங்கத்திற்கு அர்ச்சனை செய்வது சிறப்பு.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

                 கும்ப ராசி அன்பர்களே!

இதுவரை ஜென்ம ராசியில் இருந்த குரு பகவான் இப்போது இரண்டாம் இடத்திற்கு மாறியுள்ளார். குருவிற்கு 2, 5, 7, 9, 11-ஆம் இடங்கள் யோகமான இடங்கள். இந்த குருப் பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தையும் யோகத்தையும் அடையப்போகும் ஐந்து ராசிக்காரர்கள் ரிஷப ராசி, கடக ராசி, கன்னி ராசி, விருச்சிக ராசி, கும்ப ராசி ஆகும். அதில் நீங்களும் ஒருவர்.


ஆனாலும் கும்பத்தில் குரு இருந்தபோது சிம்மச்சனி பார்த்ததாலும் பிறகு சனி அட்டமத்துச் சனியாக கன்னிக்கு மாறியதாலும் கும்ப குருவின் நன்மைகள் பலருக்கு பூரணமாக- நிறைவாக- திருப்தியாக அமையவில்லை.

இப்போது குரு 2-ஆம் இடத்திற்கு வந்திருப்பதால் முதலில் உங்களுடைய மனக் கஷ்டத்தைப் போக்குவார். தாராளமான பணப் புழக்கமும் ஏராளமான சம்பாத்தியமும் சீரான வரவு- செலவும் உண்டாகும்.

மீன குரு கும்ப ராசியின் 6-ஆம் இடம், 8-ஆம் இடம், 10-ஆம் இடங்களைப் பார்க்கிறார். 6-ஆம் இடம் என்பது கடன், போட்டி, பொறாமை, வைத்தியச் செலவு ஆகியவற்றைக் குறிக்கும் இடம். ஆனால் தொழில் ஸ்தானமாகிய 10-ஆம் இடத்திற்கு யோக ஸ்தானம். 8-ஆம் இடம் என்பது விபத்து, கௌரவப் போராட்டம், கவலை, சஞ்சலம் ஆகியவற்றைக் குறிக்குமிடம். என்றாலும் தொழில் ஸ்தானத்திற்கு லாப ஸ்தானம்.

2-ஆம் இடத்திற்குரிய வாக்கு, தனம், குடும்பம், வித்தை ஆகிய சிறப்புகளை குரு கொடுப்பார். திருமணமாகாமல் தனிக்கட்டையாக இருந்தவர்களுக்கு குடும்பம் அமையும். குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் ஏற்படும். பொறுப்புகளும் கடமை உணர்ச்சிகளும் ஏற்படும். வரவேண்டிய பாக்கி சாக்கிகளும் வந்துசேரும். படிப்பில் ஆர்வமும் அக்கறையும் ஏற்படும். உயர்படிப்பில் மேன்மைகள் உண்டாகும். வாக்கு சாதுர்யத்தாலும் வாக்கு மேன்மையாலும் நன்மைகள் உண்டாகும். 2, 11-க்குடையவர் 2-ல் ஆட்சி பெறுவதால் தன லாபம் பெருகும். கணவன்- மனைவி உறவில் சலசலப்பு நீங்கி கலகலப்பு ஏற்படும்.

2-ல் இருக்கும் குரு 6-ஆம் இடத்தையும் 8-ஆம் இடத்தையும் பார்ப்பதால் கடன், எதிரி, வைத்தியச் செலவு, நோய் ஆகியவை பெருகும். கவலையும் சஞ்சலமும் பெருகும். அதாவது ஒரு கெட்ட கிரகம் கெட்ட இடத்தில் இருந்தால் அந்த இடத்துக் கெட்ட பலனை நிஷ்பலனாக்குவார். ஒரு சுபகிரகம் கெட்ட இடத்தைப் பார்த்தால் அந்த பலனை விருத்தி செய்வார். அந்த விதிப்படி 6-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் கடன் அதிகரிக்கும்; எதிரிகளும் எதிர்ப்புகளும் அதிகரிக்கும். ஆனால் அங்கு செவ்வாய் நீசமாக இருப்பதால் இவை எல்லாம் அழிந்துவிடும். இது வளரவிட்டு அழிப்பது என்பது. இதே மாதிரி 6-ஆம் பாவத்தை வேரோடு அழிக்க வேண்டுமென்றால் அது அதிகரித்தால்தான் முடியும். 6-ஆம் இடமாகிய கடகத்திற்கு குரு 6, 9-க்குடையவர். அதாவது 6-க்கு 6-க்குடையவர் அதைப் பார்ப்பதால் எதிரியை வளரவிட்டு அழிக்கும் அமைப்பு. 


குரு 8-ஆம் இடத்தைப் பார்ப்பார். 8 என்பது விபத்து, மரணம், அபகீர்த்தி. 8-ல் இப்போது ராசிநாதன் சனிபகவானும் இருக்கிறார். குருவும் சனியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள். அதனால் கவலை அதிகரிக்கலாம். வீண்பழி அல்லது அவச்சொல்லை சந்திக்கலாம். செய்யாத தப்புக்கு வீண்பழி வந்த பிறகும் உயிர்வாழ வேண்டுமா என்ற விரக்தி ஏற்படலாம். ஆனால் முடிவில் நீங்கள் குற்றமற்றவர்; உங்கள் தவறொன்றுமில்லை என்பது நிரூபணம் ஆகும். அதுமாதிரி நீங்கள் நல்லவர், வல்லவர் என்பது மற்றவர்களுக்கு உணர வைப்பதற்காக கிரகங்கள், அட்டமத்துச்சனி உங்கள்மேல் அபாண்டத்தைச் சுமத்தினாலும், குற்றமற்றவர் என்பதை குரு மூலமாக நிரூபிக்கும். மேலும் 8-ஆம் இடம் என்பது அதிர்ஷ்ட ஸ்தானம்.

சொந்தத் தொழில் செய்கிறவர்கள் தொழிலுக்காக கடன் வாங்கலாம். அரசு வேலைக்கோ, வெளிநாட்டு வேலைக்கோ முயற்சிப்பவர்கள் அதற்காகக் கடன் வாங்கலாம். அட்டமத்துச்சனி நடப்பதால் அப்படிப்பட்ட சூழ்நிலையில் தராதரம் பார்த்து பணம் வாங்கவோ கொடுக்கவோ வேண்டும். இல்லாவிட்டால் ஏமாற்றமும் உண்டாகும். 8-ஆம் இடம் அதிர்ஷ்டத்தையும் தரும்; ஏமாற்றத்தையும் தரும்.

குரு 6-ஆம் இடம், 8-ஆம் இடங்களைப் பார்த்தாலும், 10-க்கு 2, 5-க்குடையவராகி 5-ல் ஆட்சி பெற்று 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் கஷ்ட- நஷ்டங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தொழில், சம்பாத்தியம், தனலாபம் சிறப்பாக அமையும்.  10-ஆம் இடத்திற்குக் கிடைக்கும் குரு பார்வை அற்புத நிறைவைத் தரும்.


பரிகாரம்:

குச்சனூர் ஆதீனத்தில் (தேனி அருகில்) வட குரு பகவான் சந்நிதி இருக்கிறது. அங்கு சென்று வழிபடவும். ராஜயோகம் தரும் வட குரு பகவான் என்று பெயர். தேனி குமுளி சாலையில் சின்னமனூரிலிருந்து ஆறு கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இங்கு சனீஸ்வரரும் குடிகொண்டி ருக்கிறார். அட்டமத்துச்சனி, 2-ஆம் இடத்து குரு இரண்டுக்கும் இங்கு செல்வது பரிகாரமாகும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசி அன்பர்களே!

இதுவரை 12-ல் இருந்த குரு இப்போது ஜென்ம ராசிக்கு- மீனத்துக்கு மாறியிருக்கிறார்.

குருவின் சொந்த வீடு மீனம். அதில் அவர் ஆட்சி பெறுவதாலும், அவர் பார்க்கும் இடங்கள் 5, 7, 9 என்ற யோக ஸ்தானங்கள் என்ப தாலும் குருப் பெயர்ச்சியால் மீன ராசிக்கும் நல்லதே நடக்கும். இந்த குருப் பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தையும் அதியோகத்தையும் அடையப் போகிற ராசிக்காரர்கள் ஐந்து ராசிக்காரர்கள். ரிஷப ராசி, கடக ராசி, கன்னி ராசி, விருச்சிக ராசி, கும்ப ராசி ஆகிய ஐந்து ராசிக் காரர்களோடு தனுசு, மீனம் ஆகிய இரண்டு ராசிக்காரர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். தனுசு ராசியும் மீன ராசியும் குருவின் சொந்த ராசிகள். ஆகவே தனக்குப் போகத்தான் தான தர்மம். அரசாங்க சலுகைத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டால், அமைச்சர்களும் அதிகாரி களும் தனக்கு வேண்டியவர்களுக்கும் சலுகைகளை வழங்குவதுபோல குரு பகவான் 2, 5, 7, 9, 11-ஆம் ராசிக்காரர்களைப் போல தனுசு, மீன ராசிக்காரர்களுக்கும் நன்மையைச் செய்வார்; யோகத்தைக் கொடுப் பார். கெடுதலைச் செய்ய மாட்டார்.

கடந்த காலத்தில் கும்ப குரு, மீன ராசிக்கு 12-ல் மறைந்திருந்தாலும், கும்பத்துக்கு 5, 7, 9-ஆம் இடங்களைப் பார்த்தார். அது மீன ராசிக்கு 4, 6, 8-ஆம் இடங்களாக அமைந்த காரணத்தால்- சுபகிரகமான குரு பார்த்த இடத்தின் பலனை விருத்தி பண்ணுவார் என்பதால் 4, 6, 8-ஆம் இடத்தில் கெடுதல்களை அதிகமாக்கினார்.

நோய், வைத்தியச் செலவு, கடன், வட்டிச் செலவு, எதிரி, போட்டி, பொறாமை, எதிர்ப்பு, தடைகள், விபத்து, அபகீர்த்தி, பதவி இறக்கம், தொழில் நஷ்டம், வியாபார மந்தம், இடப்பெயர்ச்சி, குடும்பப் பிரிவு போன்ற அடுக்கடுக்கான துன்பங்களை அடுத்தடுத்து அனுபவிக்க வேண்டிய அவல நிலை. இது கடந்த கால அனுபவம்.

இப்போது ஜென்ம ராசியில் வந்திருக்கும் குரு அங்கு ஆட்சி பலம் பெறுவதால், உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு உண்டாகும். உங்கள் பேரும் புகழும் சீரும் சிறப்பும் அடையும். செயல் பாடுகள் மேன்மையடையும். கௌரவம், கீர்த்தி ஏற்படும். அந்தஸ்து உயர்வு அடையும். 
குரு தான் நிற்கும் ராசியைவிட தான் பார்க்கும் ராசிக்குத்தான் பெருமையும் சிறப்பும் ஏற்படுத்துவார். அதனால்தான் குரு பார்க்க கோடி நன்மை என்கிறார்கள். தனுசு ராசியில் ஆட்சி பெறும் குரு 5-ஆம் பார்வை, 7-ஆம் பார்வை, 9-ஆம் பார்வையாக 5-ஆம் இடம், 7-ஆம் இடம், 9-ஆம் இடங்களைப் பார்க்கிறார். பொதுவாக குருவுக்கு 5, 7, 9, 2, 11-ஆம் இடங்களும் யோகமான இடங்களாகும்.

5-ஆம் இடம் புத்திர ஸ்தானம். குரு புத்திர காரகன். புத்திர ஸ்தானமாகிய 5-ஆம் இடத்தை புத்திர காரகன் குரு பார்ப்பதால், நீண்ட காலமாக வாரிசு இல்லாமல் வருத்தப்பட்டவர்களுக்கு இனி வாரிசு உதயமாகும். வருத்தம் திருத்தமாகிவிடும். 5-ஆம் இடம் மனசு, இதயம், எண்ணம், மகிழ்ச்சி, திட்டம், குரு உபதேசம் இவற்றையும் குறிக்கும். அதனால் உங்கள் நீண்ட காலத் திட்டங்கள் நிறைவேறும். எண்ணங்கள் ஈடேறும். மனதில் மகிழ்ச்சியும் மனநிறைவும் உண்டாகும். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தாலும் 5, 9-க்குடைய சம்பந்தம் பெற்றிருந்தாலும் ஜோதிடம், மருத்துவம் போன்ற துறையிலும் பயிற்சிகளும் ஈடுபாடும் அனுகூலமும் உண்டாகும். 


  7-ஆம் இடத்தை குரு பார்ப்பதன் காரணமாக திருமணத்தடை விலகும். நல்ல சம்பந்தம் அமையும். திருமணமானவர்களுக்கு வாரிசு அமையும். மனைவியின் பேரில் சொத்துகள் அமையும். அல்லது கணவர் பெயரிலும் சொத்துகள் வாங்கலாம். மனைவியின் பெயரில் தொழில் ஆரம்பிக்கலாம். மனைவிக்கு வேலை வாய்ப்பு, தொழில் வாய்ப்பு, சைடு பிஸினஸ் செய்யும் வாய்ப்பும் உருவாகும். அல்லது கூட்டுத் தொழில் செய்யும் யோகமும் அமையும்.

குரு 9-ஆம் இடத்தைப் பார்ப்பதால் பூர்வீகச் சொத்துகளில் உள்ள பிரச்சினைகளும் சிக்கல்களும் விலகும். பங்கு பாகங்கள் முறையாகப் பிரிக்கப்படும். அது மட்டுமல்ல; வெகுகாலமாக குலதெய்வக் கோவிலுக்குப் போக முடியாதவர்கள் அங்கு போய் சாமி கும்பிடலாம். குலதெய்வத்தின் எல்லை தெரியாதவர்களுக்கும் அந்த குலதெய்வமே யார் மூலமாவது வந்து உணர்த்தி தன் எல்லைக்கு வரும்படி உத்தரவு கொடுக்கும். பங்காளிகளுடன் போய் முறைப்படி வழிபட்டு குல தெய்வக் குற்றத்திலிருந்து விடுபட்டு குலதெய்வத்தின் அருளுக்குப் பாத்திரமாகலாம்.


10-ஆம் இடத்திற்குரிய குரு ஜென்ம ராசியில் ஆட்சி பெற்று 5-ஆம் இடத்திலுள்ள செவ்வாயைப் பார்க்கிறார். செவ்வாய் 9-க்குடையவர் என்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. அதுவும் உங்களுக்கு அனுகூலமான யோகங்களைத் தரும். இதுவரை குடத்திற்குள் வைத்த விளக்காக இருந்த நீங்கள் இனிமேல் குன்றின் மேல் ஏற்றி வைத்த கார்த்திகை தீபமாகப் பிரகாசிக்கப் போகிறீர்கள். ஒரு குறுகிய வட்டத் திற்குள் இருந்த உங்கள் திறமையும் ஆற்றலும் இனிமேல் ஊரறியத் தெரியும். அதனால் பேரும் புகழும் பெருமையும் பரவும்.

10-ஆம் இடத்தில் ராகு நிற்க, அவருக்கு 10-ல் சனி கேந்திரமாக இருப்பதால் கடல் கடந்து வேலைக்குப் போகலாம். கைநிறைய சம்பா திக்கலாம்.பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தி சந்நிதியில் மூன்று நெய் விளக்கு ஏற்றி, முல்லை மலர் சாற்றி தட்சிணாமூர்த்தி பாடல்களைப் படிக்கவும். திருச்சி- பெரம்பலூர் சாலையில் 30 கி.மீ. தூரத்தில் சிறுகனூர் அருகில் (மேற்கே 4 கி.மீ.) திருப்பட்டூர் சென்று பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் வழிபடவும்.

  சேலம் ஆத்தூர் அருகில் ஆறகலூரில் சிவன் கோவிலில் அஷ்ட பைரவர் சந்நிதி இருக்கிறது. இங்கு சென்று வழிபடுவதால் சனி பகவான் சாந்தியடைவார். திருப்பத்தூர் யோக பைரவரையும், வயிரவன்பட்டி பைரவரையும் இலுப்பக்குடி பைரவரையும் சனிக்கிழமை வழிபடலாம்.
 காஞ்சிபுரம் அருகில் திருக்காலிமேடு என்ற பகுதியில் சத்யநாதசுவாமி பிரமராம்பிகை சமேதராக அருள்பாலிக்கிறார். புதன் கிரக பதவி பெற்ற ஸ்தலம். 1500 வருடத்துக்கு முந்திய சிவாலயம். காஞ்சிபுரம் உழவர் சந்தைக்கு கிழக்கு ரோடு. காஞ்சிபுரத்தில் ஏகாம்பர நாதர் கோவிலுக்கு கிழக்கே இரண்டு கி.மீ. தூரத்தில் பவளவண்ணர் கோவில் எதிரில் பெரிய கம்மாளர் தெருவில் பச்சை வண்ணர் திருக்கோவில் இருக்கிறது. ஆதிசேஷனே இங்கு நாக விளக்காக காவல் காப்பதாக ஐதீகம். நெய் தீபம் ஏற்றி வழிபட தோஷங்கள் விலகும்.

சென்னையிலிருந்து ஆந்திரா போகும் வழியில் (ஆந்திரா பார்டர்) 40 கி.மீ. தூரம் ஊத்துக்கோட்டை என்ற ஊரின் அருகில் சுருட்டப் பள்ளி என்னும் ஊரில் சிவன் கோவில் உள்ளது. இங்குள்ள தட்சிணா மூர்த்தி அம்பாளை மடியில் தாங்கியவராக தாம்பத்ய தட்சிணாமூர்த்தி யாக விளங்குகிறார். இங்கு சென்று வழிபட, குடும்பத்தில் மகிழ்ச்சியும் மனநிறைவும் சாந்தமும் உண்டாகும்.

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com