Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

ஜோதிடம் - கேள்வி - பதில்கள் (1)

| Oct 31, 2010
ஜோதிடம் - கேள்வி - பதில்கள் (1)

கேள்வி : ஐயா, இத்துடன் நான் எனது மற்றும் என் மனைவியின் பிறந்த தேதியையும், மற்ற குறிப்புகளையும் இணைத்துள்ளேன். நான் உடல் நலகுறைவாலும், பொருளாதாரக் கஷ்டத்திலும் உள்ளேன். எங்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. எங்களுக்கு திருமணம் ஆகி இரண்டரை வருடம் ஆகிறது. இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை . தக்க வழி காட்டவும். ( சிவப்பிரகாசம் , கரூர்  )


பதில் : தங்கள் மனைவிக்கு புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி. மகர லக்கினம். தங்களுக்கு பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, மேஷ லக்கினம்.உங்கள் இருவர் ஜாதகத்தையும் ஆராய்ந்து பார்த்ததில் இருவருக்குமே முன்னோர்களின் ஆசி இன்றி, தங்கள் வாழ்வின் ஒவ்வொரு முயற்சிகளும் முற்றுப் பெறாத ஒரு நிலை அமைய வாய்ப்புகளே அதிகம். தாங்களுக்கு தாய் வழியிலும், தங்கள் மனைவிக்கு தந்தை வழியிலும் தோஷம் இருக்கிறது. சொல்வதற்கே சற்று சங்கடம் தான். உங்கள் இருவருக்கும் ஜாதக பொருத்தம் பார்க்காமலே திருமணம் நடந்து இருக்கக் கூடும். அது, காதல் கல்யாணமாகவோ அல்லது இருவரின் விருப்பம் இன்றி கட்டாய கல்யாணமாகவோ இருந்திருக்கக் கூடும். இறைவனின் சித்தம் அது.  இருவருமே தாங்கள் இதுவரை செய்த தவறுகளில் இருந்து தங்களை திருத்திக்கொண்டு செயல்படுதல் நலம். உங்களுக்கே நீங்கள் செல்லும் வழியும், அது தவறு என்றும் தெரியும். இருந்தும், வெளியில் இருந்து வேறு  வழியை தேடிக்கொண்டு இருக்கிறீர்கள்.  இருவருமே, தங்கள் ஆண் நண்பர்களின் பிடியிலிருந்து விலகிக் கொண்டு , உங்கள் வாழ்வைப் பற்றி அக்கறை கொள்வீர்களேயானலன்றி இதற்க்கு ஒரு தீர்வு கிடைப்பது அரிது. இருவரும் தங்கள் கோபத்தைக் குறைத்து, ஈகோ வை விட்டு , ஒற்றுமையுடன் வாழ வேண்டும். ராமேஸ்வரம் சென்று, ஒரு வியாழக் கிழமை திலா ஹோமம் செய்து, அன்று இரவு அங்கேயே தங்கி இறைவனை ஒருமித்த சிந்தனையுடன் வழிபட்டு வந்தால் , விரைவில் உங்களுக்கு, ஆண்டவன் அருளால் , ஆண் குழந்தை கிட்டும். தங்களால் முடிந்தவரை அன்னதானம் செய்யவும் . திருவண்ணாமலை கிரிவலம் உங்கள் வாழ்வில் மென்மேலும் முன்னேற்றங்கள் கொடுக்கும். திருநள்ளாறு சென்று மனதார இறைவனை வழிபட்டு வரவும். உங்கள் தின சாப்பாட்டிற்கு முன்,  காகத்திற்கு வைத்து, பின் சாப்பிடவும். உங்கள் குல தேவதை வழிபாடு மிகமிக முக்கியம்.  வாழ்த்துக்கள்.

கேள்வி : ஐயா, நான் 15 .11 .1970 இல் பிறந்துள்ளேன். ஒன்றரை வருடங்களுக்கு முன் , நான் செய்யும் வேலையை விட்டு விட்டேன். எனக்கு, எப்போது வேலை மீண்டும் கிடைக்கும்?  ( வாசு தேவன் - சென்னை)

பதில் : நீங்கள் ரிஷப ராசி, விருசிக லக்கினத்தில் பிறந்து இருக்கிறீர்கள். மனவலிமை அதிகம் , அதுவே உங்களை மற்றவருக்கு முன் திமிர் பிடித்தவராக காட்டுகிறது. இன்னும் இரண்டே மாதங்களில், உங்களுக்கு நல்ல வேலை கிட்டும். அதுவரை, வியாழக் கிழமைகளில்  விரதம் இருந்து குரு பகவானை வழிபட்டு வரவும். இடப்பெயர்ச்சி நன்மை தரும். இன்னும் இரண்டு வருடங்களுக்கு, நீங்கள் என்ன செய்தாலும் உங்களுக்கே திருப்தி இராது. மற்றவருக்கு எப்படி இருக்கும். உணர்ச்சி மிக்கவராய் இருப்பதால் , நெருங்கிய உறவினர் படும் கஷ்டம் பொறுக்காமல் , அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். வெள்ளிக்கிழமை தோறும், ராகு கால நேரத்தில், அருகில் இருக்கும் அம்மன் கோவிலில் அமர்ந்து , அம்மனை மனதார தொழுது வர, நல்ல நிலை அடைவீர்கள். மிக பெரிய செல்வந்தராக உயரும் வாய்ப்புக்கள் உங்களுக்கு உண்டு. ஆனால் , அது தவறான வழி களாகவும் இருக்கக் கூடும். தவிர்க்கப்பாருங்கள். அது உங்களை வீழ்த்திவிடும்.    நல்ல வழிகளில் சென்று நலமுடன் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

கேள்வி : ஐயா, என் முன்னோர்களின் சொத்து கிடைக்குமா, வழக்கு வியாஜ்யங்களில் அனுகூலம் உண்டா? என் ஜாதகப்படி மகன், மகளின் எதிர்காலம், திருமணம்  பற்றி அறிய வேண்டும். ( பரசுராம் - பாலகாட் ) 

பதில் : தங்களுக்கு, மிதுன ராசி , கன்னி லக்கினம். உங்கள் மகன் , மகள் எதிர்காலம் பற்றி அறிய அவர்கள் ஜாதகம் இருந்தால் நலம். தாங்கள் பிறக்கும்போதே இருந்த ஒரு தலை முறை பகை உங்களை பாடாய் படுத்திக்கொண்டு இருக்கிறது. உங்கள் முன்னோர்களின் பாவத்தை , தங்களும் கொஞ்சம் அனுபவித்துக்கொண்டு  இருக்கிறீர்கள். உங்களால் முடிந்தால் , ஒரு ஏழை பெண்ணின் திருமணத்திற்கு உதவி செய்யவும் அது உங்கள் மூதாதையரின் பாவத்தை கொஞ்சம் குறைக்க செய்யும். திருவிடைமருதூர் சென்று , பிரமஹத்தி தோஷ நிவாரணம் செய்ய , நீங்கள் நினைத்தது நடைவேறும். 
 இன்னும் சற்று ஆராய்ந்து உங்கள் ஜாதகத்தை பார்த்தால், உங்களுக்கு சரியான நேரத்தில் திருமணம் நடந்து , உங்களுக்கு குழந்தைகள் இருத்தலே, உங்கள் பூர்வ புண்ணியமாகத்தான் இருக்கும். இறை அருள் உங்களுக்கு எப்போதும்  கிடைத்திட வாழ்த்துக்கள்.

கேள்வி :   ஐயா, என் ஜாதகத்தை இத்துடன் இணைத்துள்ளேன். என் வாழ்வின் பிரச்சினைகளை தாங்க முடியவில்லை. தகுந்த வழி காட்டவும். ( கலா நிதி - சென்னை )

பதில் : உங்களுக்கு மகர ராசி. மிதுன லக்கினம். இனி வரும் நாட்கள் அனைத்தும் உங்களுக்கு வெற்றிப் பாதை தான். வாழ்வின் , மிக மோசமான கட்டத்தை நீங்கள் தாண்டி விட்டீர்கள் என்றே சொல்லுவேன். வாழ்வில் நீங்கள் நினைத்ததை சாதிக்க , உங்களால் முடிந்தவரை , வியாழக் கிழமைகளில் திருவண்ணாமலை கிரிவலம் சென்று வரவும். 21 முறை கிரிவலம் சென்று வர , வாழ்வில் மிக உன்னத நிலை அடைவீர்கள். அதற்கு முன், ஒரு சனிக்கிழமை ராமேஸ்வரம் சென்று ' திலா ஹோமம்' செய்து அன்று இரவு அங்கேயே தங்கி , அந்த சர்வேஸ்வரனை வழிபட்டு வரவும். தினமும் நினைத்த நேரத்தில் , சரியான வேளையில்  தூங்க செல்வதை வழக்கமாக்கி கொள்ளவும். என்றென்றும் எமது ஆசிகள்.

4 comments:

hai said...

how to ask questions related astrology?

hai said...

how to ask questions?

Anonymous said...

Dear Sir,

I have a question. If Ketu is in 12th house, there is no rebirth ?

Singara Velan said...

* எனது பெயர் சிங்காரவேலன்.

பிறந்த நாள், நேரம், 09/01/1992-இரவு 7.50

இடம் - தர்மபுரி

· *எனது அம்மா-வின் பெயர் அமுதா.ஆ, பிறந்த நாள், நேரம் 13/03/1970- மாலை 5.30

இடம் – தர்மபுரி

· *எனது தம்பி பெயர் திருமலைவாசன்

பிறந்த நாள், நேரம், 17/04/1995-நடு இரவு 1.20

இடம் – தர்மபுரி

· *எனது அப்பா-வின் பெயர் ரவி.

பிறந்த நாள் 16/12/1959- நேரம் தெரியவில்லை

இடம் - தர்மபுரி

(**இறந்துவிட்டார் - இறந்த தேதி 09/02/2011 காலை 11.17 ம்ணி)

(**ராமேஸ்வரம் சென்று முன்னோர்களுக்கு பித்ருகடன் செய்ய சொன்னர் ஒருவர். அதையும் செய்து விட்டொம்)

இப்போது நாங்கள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் எனும் ஊரில் இருக்கிறோம். இங்கு குடியேறி 15 வருடங்கள் ஆகின்றன. 10/07/2003-ல் சொந்த வீடு கட்டி குடிவந்துள்ளோம். இப்போது சில மாதங்களாக எங்களது வீட்டில் சண்டைகள் சச்சரவுகள் நடக்கிறது, மேலும் எங்கள் வீட்டில் அமானுஷ்ய ப்ரச்சினை ஏற்படுவதை போல் உணர்கிறோம். எங்கள் வீட்டில் என்ன பிரச்சினை? ஏன்? அமானுஷ்ய உணர்வுகள் ஏற்பட காரணம் என்ன?

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com