Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

ஜோதிடம் - கேள்வி - பதில்கள் (1)

| Oct 31, 2010
ஜோதிடம் - கேள்வி - பதில்கள் (1)

கேள்வி : ஐயா, இத்துடன் நான் எனது மற்றும் என் மனைவியின் பிறந்த தேதியையும், மற்ற குறிப்புகளையும் இணைத்துள்ளேன். நான் உடல் நலகுறைவாலும், பொருளாதாரக் கஷ்டத்திலும் உள்ளேன். எங்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. எங்களுக்கு திருமணம் ஆகி இரண்டரை வருடம் ஆகிறது. இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை . தக்க வழி காட்டவும். ( சிவப்பிரகாசம் , கரூர்  )


பதில் : தங்கள் மனைவிக்கு புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி. மகர லக்கினம். தங்களுக்கு பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, மேஷ லக்கினம்.உங்கள் இருவர் ஜாதகத்தையும் ஆராய்ந்து பார்த்ததில் இருவருக்குமே முன்னோர்களின் ஆசி இன்றி, தங்கள் வாழ்வின் ஒவ்வொரு முயற்சிகளும் முற்றுப் பெறாத ஒரு நிலை அமைய வாய்ப்புகளே அதிகம். தாங்களுக்கு தாய் வழியிலும், தங்கள் மனைவிக்கு தந்தை வழியிலும் தோஷம் இருக்கிறது. சொல்வதற்கே சற்று சங்கடம் தான். உங்கள் இருவருக்கும் ஜாதக பொருத்தம் பார்க்காமலே திருமணம் நடந்து இருக்கக் கூடும். அது, காதல் கல்யாணமாகவோ அல்லது இருவரின் விருப்பம் இன்றி கட்டாய கல்யாணமாகவோ இருந்திருக்கக் கூடும். இறைவனின் சித்தம் அது.  இருவருமே தாங்கள் இதுவரை செய்த தவறுகளில் இருந்து தங்களை திருத்திக்கொண்டு செயல்படுதல் நலம். உங்களுக்கே நீங்கள் செல்லும் வழியும், அது தவறு என்றும் தெரியும். இருந்தும், வெளியில் இருந்து வேறு  வழியை தேடிக்கொண்டு இருக்கிறீர்கள்.  இருவருமே, தங்கள் ஆண் நண்பர்களின் பிடியிலிருந்து விலகிக் கொண்டு , உங்கள் வாழ்வைப் பற்றி அக்கறை கொள்வீர்களேயானலன்றி இதற்க்கு ஒரு தீர்வு கிடைப்பது அரிது. இருவரும் தங்கள் கோபத்தைக் குறைத்து, ஈகோ வை விட்டு , ஒற்றுமையுடன் வாழ வேண்டும். ராமேஸ்வரம் சென்று, ஒரு வியாழக் கிழமை திலா ஹோமம் செய்து, அன்று இரவு அங்கேயே தங்கி இறைவனை ஒருமித்த சிந்தனையுடன் வழிபட்டு வந்தால் , விரைவில் உங்களுக்கு, ஆண்டவன் அருளால் , ஆண் குழந்தை கிட்டும். தங்களால் முடிந்தவரை அன்னதானம் செய்யவும் . திருவண்ணாமலை கிரிவலம் உங்கள் வாழ்வில் மென்மேலும் முன்னேற்றங்கள் கொடுக்கும். திருநள்ளாறு சென்று மனதார இறைவனை வழிபட்டு வரவும். உங்கள் தின சாப்பாட்டிற்கு முன்,  காகத்திற்கு வைத்து, பின் சாப்பிடவும். உங்கள் குல தேவதை வழிபாடு மிகமிக முக்கியம்.  வாழ்த்துக்கள்.

கேள்வி : ஐயா, நான் 15 .11 .1970 இல் பிறந்துள்ளேன். ஒன்றரை வருடங்களுக்கு முன் , நான் செய்யும் வேலையை விட்டு விட்டேன். எனக்கு, எப்போது வேலை மீண்டும் கிடைக்கும்?  ( வாசு தேவன் - சென்னை)

பதில் : நீங்கள் ரிஷப ராசி, விருசிக லக்கினத்தில் பிறந்து இருக்கிறீர்கள். மனவலிமை அதிகம் , அதுவே உங்களை மற்றவருக்கு முன் திமிர் பிடித்தவராக காட்டுகிறது. இன்னும் இரண்டே மாதங்களில், உங்களுக்கு நல்ல வேலை கிட்டும். அதுவரை, வியாழக் கிழமைகளில்  விரதம் இருந்து குரு பகவானை வழிபட்டு வரவும். இடப்பெயர்ச்சி நன்மை தரும். இன்னும் இரண்டு வருடங்களுக்கு, நீங்கள் என்ன செய்தாலும் உங்களுக்கே திருப்தி இராது. மற்றவருக்கு எப்படி இருக்கும். உணர்ச்சி மிக்கவராய் இருப்பதால் , நெருங்கிய உறவினர் படும் கஷ்டம் பொறுக்காமல் , அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். வெள்ளிக்கிழமை தோறும், ராகு கால நேரத்தில், அருகில் இருக்கும் அம்மன் கோவிலில் அமர்ந்து , அம்மனை மனதார தொழுது வர, நல்ல நிலை அடைவீர்கள். மிக பெரிய செல்வந்தராக உயரும் வாய்ப்புக்கள் உங்களுக்கு உண்டு. ஆனால் , அது தவறான வழி களாகவும் இருக்கக் கூடும். தவிர்க்கப்பாருங்கள். அது உங்களை வீழ்த்திவிடும்.    நல்ல வழிகளில் சென்று நலமுடன் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

கேள்வி : ஐயா, என் முன்னோர்களின் சொத்து கிடைக்குமா, வழக்கு வியாஜ்யங்களில் அனுகூலம் உண்டா? என் ஜாதகப்படி மகன், மகளின் எதிர்காலம், திருமணம்  பற்றி அறிய வேண்டும். ( பரசுராம் - பாலகாட் ) 

பதில் : தங்களுக்கு, மிதுன ராசி , கன்னி லக்கினம். உங்கள் மகன் , மகள் எதிர்காலம் பற்றி அறிய அவர்கள் ஜாதகம் இருந்தால் நலம். தாங்கள் பிறக்கும்போதே இருந்த ஒரு தலை முறை பகை உங்களை பாடாய் படுத்திக்கொண்டு இருக்கிறது. உங்கள் முன்னோர்களின் பாவத்தை , தங்களும் கொஞ்சம் அனுபவித்துக்கொண்டு  இருக்கிறீர்கள். உங்களால் முடிந்தால் , ஒரு ஏழை பெண்ணின் திருமணத்திற்கு உதவி செய்யவும் அது உங்கள் மூதாதையரின் பாவத்தை கொஞ்சம் குறைக்க செய்யும். திருவிடைமருதூர் சென்று , பிரமஹத்தி தோஷ நிவாரணம் செய்ய , நீங்கள் நினைத்தது நடைவேறும். 
 இன்னும் சற்று ஆராய்ந்து உங்கள் ஜாதகத்தை பார்த்தால், உங்களுக்கு சரியான நேரத்தில் திருமணம் நடந்து , உங்களுக்கு குழந்தைகள் இருத்தலே, உங்கள் பூர்வ புண்ணியமாகத்தான் இருக்கும். இறை அருள் உங்களுக்கு எப்போதும்  கிடைத்திட வாழ்த்துக்கள்.

கேள்வி :   ஐயா, என் ஜாதகத்தை இத்துடன் இணைத்துள்ளேன். என் வாழ்வின் பிரச்சினைகளை தாங்க முடியவில்லை. தகுந்த வழி காட்டவும். ( கலா நிதி - சென்னை )

பதில் : உங்களுக்கு மகர ராசி. மிதுன லக்கினம். இனி வரும் நாட்கள் அனைத்தும் உங்களுக்கு வெற்றிப் பாதை தான். வாழ்வின் , மிக மோசமான கட்டத்தை நீங்கள் தாண்டி விட்டீர்கள் என்றே சொல்லுவேன். வாழ்வில் நீங்கள் நினைத்ததை சாதிக்க , உங்களால் முடிந்தவரை , வியாழக் கிழமைகளில் திருவண்ணாமலை கிரிவலம் சென்று வரவும். 21 முறை கிரிவலம் சென்று வர , வாழ்வில் மிக உன்னத நிலை அடைவீர்கள். அதற்கு முன், ஒரு சனிக்கிழமை ராமேஸ்வரம் சென்று ' திலா ஹோமம்' செய்து அன்று இரவு அங்கேயே தங்கி , அந்த சர்வேஸ்வரனை வழிபட்டு வரவும். தினமும் நினைத்த நேரத்தில் , சரியான வேளையில்  தூங்க செல்வதை வழக்கமாக்கி கொள்ளவும். என்றென்றும் எமது ஆசிகள்.

சிரிக்கலாம்........

| Oct 27, 2010
சென்னை மெரினா கடற்கரையில் வாக்கிங் போய் கொண்டிருந்தார் ஒரு தமிழர். அவர் பலருக்கு பல நன்மைகளை செய்திருந்ததால் கடவுள் அவர் முன் தோன்றி " நீ நல்ல காரியங்கள் பல செய்திருக்கிறாய். உனக்கு நான் ஒரு வரம் தரலாமென்றிருக்கிறேன். கேள்" என்றார்.

சற்று யோசித்த பின் அந்த தமிழர் கடவுளிடம் " இந்த வங்க கடலின் நடுவில் சென்னைக்கும் இலங்கைக்கும் ஒரு பெரிய பாலம் அமையுங்கள். நாங்கள் கடலைத் தாண்டி சென்று அங்கு தவிக்கும் எங்களது உறவுகளுக்கு உதவ வேண்டும். எங்களைத் தாக்க வரும் இலங்கை ராணுவத்தை தவிடு பொடியாக்க வேண்டும்".

இதைக் கேட்ட கடவுள் " இது ஒரு பெரிய வேலை. பல லட்சக் கணக்கான மூட்டைகள் சிமெண்ட் வேண்டியிருக்கும். நிறைய இரும்பும் தேவையாயிருக்கும். கொடிய இலங்கை ராணுவத்தையும் அதன் அரக்கர்களான மகிந்த ராஜபக்ஷேயையும் நான் விரைவில் கவனித்துக் கொள்ளவிருக்கிறேன். நான் பிரியப்பட்டு பிறப்பித்த ஆயிரக்கணக்கான சிசுக்களை மிருகத்தனமாக கொன்று என்னிடமே அனுப்பியிருக்கிறார்கள் அந்த கொடியவர்கள். பாலத்தை தவிர வேறுஏதாவது இருநதால் கேள்".

தமிழர் சொன்னார் " சரி. அப்ப நான் எனது மனைவியை புரிந்து கொள்ள வேண்டும். எனது மனைவி எனக்கு அடிபணிந்து நடக்க வேண்டும். நான் சென்ன படியெல்லாம் அவள் நடக்க வேண்டும்".

கடவுள் அவரை இடை மறித்து ' நீ கேட்டாயே பாலம் அது எவ்வளவு பெரிதாக வேண்டும்?"

_____________________________________________________________________________

 
உண்மை கண்டுபிடிக்கும் இயந்திரம் !உண்மை கண்டுபிடிக்கும் இயந்திரத்தை பயன்படுத்தி பார்க்க விரும்பிய விஞ்ஞானிகள் தமிழன்,பெங்காலி மற்றும் சர்தார்ஜி கொண்டு சோதிக்க முடிவு செய்தனர்.இந்த இயந்திரங்கள் உண்மை சொல்லும் போது எந்த சத்தத்தை எழுப்பாது.பொய் சொன்னால் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று சத்தம் எழுப்பும்.
ஒவ்வொருத்தரா கூப்பிட்டு தங்கள் எத்தனை சாப்பிட முடியும் என்று நினைப்பதை இயந்திரத்தின் முன்னால் சொல்ல சசொன்னார்கள்.

முதலில்

பெங்காலி : நான் நினைக்கிறென் 20 ரசகுல்லா சாப்பிட முடியும்
என்று
இயந்திரம் : கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
பெங்காலி : இல்லை இல்லை .நான் நினைக்கிறேன் 10 ரசகுல்லா
சாப்பிட்ட முடியும் என்று
இயந்திரம் : (சத்தம் இல்லை − அதனால் உண்மை)

அடுத்தது

தமிழன்: நான் நினைக்கிறென் 15 இட்லி சாப்பிட முடியும் என்று.
இயந்திரம்: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
தமிழன்: இல்லை.இல்லை.நான் நினைக்கிறேன் 10 இட்லி
சாப்பிட முடியும் என்று.
இயந்திரம்: (சத்தம் இல்லை.அதனால் இது உண்மை)

கடைசியாக

சர்தார்ஜி: நான் நினைக்கிறேன்...!
இயந்திரம்: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
சர்தார்ஜி: நான் நினைக்கிறேன்...
இயந்திரம்: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
சர்தார்ஜி: நான் நினைக்கிறேன்...!
இயந்திரம்: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
சர்தார்ஜி: நான் நினைக்கிறேன்...
இயந்திரம்: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

______________________________________________________________________________


பில்கேட்ஸ்க்கு சர்தார் எழுதிய கடிதம்

ஐயா,

சமிபத்தில் நான் வாங்கிய கம்ப்யூட்டர் மற்றும் விண்டொஸ் சாப்ட்வேரில் உள்ள குறைகளை உங்கள் டீலரிடம் கொண்டு சென்றென்.ஆனால் சரியாக தான் இருக்கிறது என்று கூறி விட்டார்.அதனால் இதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.


1.இண்டர்நெட் கனெக்ஷன் வாங்கிய பிறகு ஹாட்மெயிலில் அக்கவுண்ட் உருவாக்க எல்லா விவரங்களை கொடுத்த பிறகு பாஸ்வார்ட் பகுதியில் எதை கொடுத்தாலும் ****** என்றெ வருகிறது.வாங்கிய கடையில் கொடுத்த சோதித்தற்கு கீ போர்டில் எதும் குறையில்லை என்று சொல்லிவிட்டார்கள்.


2.விண்டொஸில் ஸ்டார்ட் பட்டன் உள்ளது.ஆனால் ஸ்டாப் பட்டன் இல்லை.அதையும் சேர்த்து விடுங்கள்


3.ரீசைக்கிள் பின் என்பதை ரீஸ்கூட்டர் என்று மாற்றுங்கள்.எனென்றால் என்னிடம் ஸ்கூட்டர் தான் உள்ளது.


4.பைண்டு பட்டன் வேலை செய்யவில்லை.நான் தொலைத்த கார் சாவியை பைண்டு மெனுவில் தேடினேன்.ஆனால் கண்டு பிடிக்க முடியாது என்று கூறிவிட்டது.இது ஒரு ஏரர்ராக இருக்கும்.


5.எம்.எஸ் வேர்ட் கற்ற பிறகு,கற்பதற்கு எம்.எஸ்.செண்டேண்ஸ் என்று எதும் உள்ளதா ?
தங்கள் இதற்கு உடனடியாக பதில் அளிப்பிர் என
நினைக்கிறென்


இப்படிக்கு
சர்தார்

____________________________________________________________________________________


என் மனைவி என் கூட கோபம்னா சமைக்கமாட்டா...

என் மனைவி என் கூட கோபம்னா சமைப்பா...
_________________________

மனைவி: என்னங்க தீபாவளிக்கு நான் செஞ்சு வச்ச சுவீட் எல்லாம் யாரோ திருடிங்க...

கணவன்: சத்தம் போடாம தூங்கு, சாப்பிட்டபிறகு எங்கயாவது செத்துக்கிடப்பான்...
___________________

கல்யாணத்துக்கு முன்னாலே போய்களை அடக்குவது எப்படின்னு புத்தகம் எழுதினீங்களே இப்போ என்ன புத்தகம் எழுதுறீங்க..

பேய்களுடன் வாழ்வது எப்படிங்கிற புத்தகம்...
_________________________

டேய் உங்க்ப்பா என்னடா பண்றார்.

ஹொம் ஒர்க் பண்றார் அங்கிள்

என்னடா உன்னோட ஹொம் ஒர்க்கொல்லாம் அவர்தான் பண்றாரா?

இல்ல அங்கிள், அப்பா சமையல் பண்ணிக்கிட்டு இருக்கார்
_________________________________

என் பொண்டாட்டி திட்டும்போது, அவளை ஓங்கி
அறையலாமானு தோணும்.

ஒரு தடவை அறைஞ்சு பார்க்க வேண்டியதுதானே?

அப்புறம் நான் இல்லாமப் போயிட்டா, புள்ளைங்க
கஷ்டப்படுமேனு பார்க்கிறேன்!
_____________________________
டாக்டர்:
குழந்தை மணிக்கணக்கா அழுதிட்டிருந்திருக்கு..
இப்ப கொண்டு வந்திருக்கீங்களே?

அம்மா: அதுவும் என்னை மாதிரியே டி.வி. சீரியல் பார்த்து
அழுதிட்டிருக்காக்கும்னு இருந்துட்டேன்.. டாக்டர்!
_________________________

என் மாமியாரை எல்லா டாக்டர்கிட்டேயும் காட்டியாச்சு.
ஒரு பிரயோஜனமும் இல்லை

அப்படியா?

ஆமா, எப்படியாவது பிழைக்க வெச்சுடறாங்க!
_________________

சிரிப்புகள் இலவசம்எப்பாடு பட்டாவது டாக்டராகவோ அல்லது பைலட்டவோ ஆகணும். அதுதான் என் லட்சியம்.

எப்படியானாலும் ஜனங்களை மேலே கொண்டு் போகணும்னு முடிவோடதான் இருக்கே!

*****

கோடிக்கோடியா சம்பாதிக்க வழின்னு ஒரு புத்தகம் எழுதினீங்களே, அது என்னாச்சு?

அது என்னைத்தெருக்கோடிலே கொண்டு நிறுத்திடிச்சு.

*****

நான் அந்தக்காலத்தில எட்டு மைல் தூரம் நடந்தே போய் பள்ளிக்கூடத்திலே படிச்சேனாக்கும்!

அப்ப படிப்புக்கும் உங்களுக்கும் ரொம்ப தூரம்ன்னு சொல்லுங்க.

*****

நீதான் நல்லாப் படிப்பியே உனக்கு ஏன் டிவிலே வேலை கிடைக்கல்லே?

'ழ"வுக்குப் பதிலாக "ள" ன்னு படிச்சாத்தான் வேலை கொடுப்பாங்களாம்.

*****

"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற கொள்கையோட ஒரு கட்சி ஆரம்பிச்சீங்களே இப்பொ எப்படி இருக்கு?

அதில் ஒரே தலைவர் ஒரே உறுப்பினர்னு ஆயிடுச்சு.

*****

சும்மா லவ் பண்ணா பாஸ்மார்க்
சின்சியரா லவ் பண்ணா டாஸ்மார்க்

---------

போகிக்கும் பொங்கலுக்கும் ஒருநாள் தான் டிஃபரன்ஸ்.
ஆனா பொங்கலுக்கும் போகிக்கும் ஒரு வருஷம் டிஃபரன்ஸ்
என்ன உலகமடா இது!!!???

---------

என்னதான் டீ.வி. விடிய விடிய ஓடினாலும்
அதனால ஒரு இஞ்ச் கூட நகர முடியாது.
இதுதானய்யா வாழ்க்கை!!!

---------

என்னதான் திருவள்ளுவர் 1330 குறள் சொன்னாலும் அவரால்
ஒரு குரல்ல தான் பேசமுடியும்.

---------

டி.நகர்ல டீ வாங்கலாம். ஆனா,
விருதுநகர்ல விருது வாங்க முடியுமோ��?

------−−−
"என்ன இது! டி.வியில சீரியலைப் பார்த்துப் பெண்கள்தானே அழுவாங்க- நீங்க இப்படி அழறீங்களே?".

"அட, நீங்க ஒன்னு! இது என்னோட கல்யாண சி.டி.".

−−−−−−−−−−−
"ஏலக்கடைகாரர் வீடுதானே இது! நீங்க மூணு பேரும் யாரு?".

"நான் முதல் தாரம், இவர் இரண்டாம் தாரம், அவர் மூன்றாம் தாரம்...!".

****

"காதலியோட, ஹனிமூன் போனியே, திருப்தியா வந்தியா?".

'திருப்பதியா வந்தேன்!".

****

"என் பையன், ஃபர்ஸ்ட் க்ளாஸ்ல பாஸ் பண்ணிட்டான்!".

"அப்படியா! அப்புறம் என்ன பண்ணப் போறான்?".

"செகண்ட் க்ளாஸ் போகப் போறான்!".

___________________________________________________________________________________

பெண்ணொருத்தி தன் வாகனத்தை சாலையில் சற்று ஓரத்தில் நிறுத்திவிட்டு கீழே இறங்கிவந்தான்.காரின் முன்பக்கம் கொஞ்சம் நெளிந்திருந்தது. சாலையோ ஒற்றையடிப்பாதை. அந்திமறைந்து இரவு கவ்விக்கொண்டிருந்தது.ஒரு புறம் பயமும் அவளை ஆட்கொண்டிருந்தது!!!

சற்று நேரத்தில் எதிர் திசையில் ஒரு ஹீரோ ஹொண்டா மோட்டார் சைக்கிள் காற்றுவேகத்தில் வந்துகொண்டிருந்தது. அந்த நபரின் மோட்டாரிலோ விளக்கும் எரியவில்லை! அவன் தலையில் ஹெல்மட்டும் அணிந்திருக்க வில்லை!!.

சற்று யோசிக்காமல் அந்தப் பெண் அவனைப்பார்த்து "ஏய் பன்ன்ன்றிறிறி..... மெதுவா பார்த்துப்போடா" என்று அலறினாள்!! மோட்டார்சைக்கிள் ஓட்டிவந்தவனுக்கோ கோபம் தலைக்கேறியது! ஏண்டி நாயே? யாரைப்பாத்து பன்றின்னு சொன்னே? மூஞ்சி எகிறிவிடும்! ஜாக்கிரதை!!

சிறிது நேரத்தில் டமார் என்ற சத்தம் அங்கே அதிர்ந்தது!!. இந்தப்பெண்ணோ அந்த மோட்டார் சைக்கிள் சென்ற திசையை நோக்கி ஒடினாள்!. அங்கே அந்த நபர் புதருக்கே உள்ளே தூக்கி எறியப்பட்டு டிரம்மு போல உருண்டுகொண்டிருந்தான் .மோட்டார் சைக்கிளே நொறுங்கிக் கிடந்தது!!!

அந்தப்பெண்னோ மனதில் பேசிக்கொண்டாள்"நம் காரை மோதிவிட்டுச் சென்ற அதே பன்றியைத்தான் அவன் மோதியிருக்க வேண்டும்"!!!!

கதையின் நீதி: யாராவது உங்களைப்பார்த்து"ஏய் பன்றி, மெதுவா பார்த்து போடா"ன்னு சொன்னா .உங்களை திட்டுவதாக எண்ணாதீர்கள்.அங்கே பன்றி ஒன்று உருண்டுகொண்டிருக்கிறது என்பதை எச்சரிக்கை செய்வதாக கூட இருக்கலாம் இல்லையா?
என்ன பார்க்குறீங்க ! பேந்த பேந்த முழிக்காதீங்க!!

_____________________________________________________________________________________


தலைமுழுக்கு!

குமரேசனுக்கு அந்த நாயைக் கண்டாலே எரிச்சலாக இருந்தது. அது அவன் மனைவி வளர்க்கும் நாய்.

ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு பூங்காவில் விட்டுவிட்டு வந்தான் குமரேசன். ஆச்சர்யம்! அவனுக்கு முன்னால் வீட்டில் இருந்தது அந்த நாய்!

கடுப்பான குமரேசன், அடுத்த நாள் அந்த நாயைப் பத்து கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு மைதானத்தில் விட்டுவிட்டு, வேறு வேறு சாலைகள் வழியாக வீடு திரும்பினான். மறுபடியும் ஆச்சர்யம்... வீட்டில் நாய்!

மூன்றாம் நாள்... காரில் நாயுடன் ஒரு முடிவோடு புறப்பட்டவன், காரை எங்கெங்கோ செலுத்தினான். வழியில் குறுக்கிட்ட ஆற்றைக் கடந்தான். ஒரு பாலத்தின் மேல் ஏறி இறங்கினான். இடப் பக்கம் திரும்பினான். வலப் பக்கம் வளைந்தான். இப்படியாக ரொம்ப தூரம் போய் ஒரு தெருவில் அந்த நாயைப் பிடித்துத் தள்ளிவிட்டு, வேகமாக காரைக் கிளப்பிக்கொண்டு புறப்பட்டான். வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி, மனைவிக்கு போன் செய்து, ��உன் நாய், வீட்டில் இருக்கிறதா?�� என்று கேட்டான்.

��இருக்கிறதே! ஏன் கேட்கிறீர்கள்?�� என்றாள் அவள்.

��அந்த சனியன்கிட்டே போனைக் கொடு! வீட்டுக்கு வழி தெரியலே எனக்கு!��


_____________________________________________________________________________________

ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு பண்ணி அந்த எண்ணெய் இந்த கிரீம்னு தடவி முடியை கறுப்பாக்க முயற்சி பண்ணினா அது என்னவோ வெளுத்து பளீர்னு ரின் வெண்மையாய் இருக்கு...

அதேமாதிரி முகம் வெளுக்கணும்னு எக்கச்சக்கமா செலவு பண்ணி முகத்துக்கு கிரீம் பூசறாங்க.. முகம் என்னவோ கறுத்துகிட்டே போகுது...


தினம் தினம் விதம் விதமா கிரீம் பூசி ஷேவ் பண்ணி ஆஃபடர் ஷேவ் போட்டு வச்சாலும் தாடி வளர்து கிட்டே இருக்கு..என்னென்னவோ எண்ணெய் பூசி எததனை டெக்னிக் பண்ணினாலும் தலை வழுக்கையாகி கிட்டே இருக்கு..


ஆமாம் முகத்துக்கு செய்யறதை தலைக்கும் தலைக்கு செய்யறதை முகத்துக்கும் செஞ்சா என்னவாம்? முகம் வெளுப்பாகி, தாடி மெலிசாயி உதிர்ந்து ..ஷேவ் பண்ற நேரமும் மிச்சம்.

தாடிக்கு பதிலா தலை முடி வளருமே!

மக்கள் யோசிக்கவே மாட்டாங்களா???

________________________________________________________________________

சொர்கத்தில் கிரிகெட்


ஒரு நாள் சச்சினும் சௌரவ் கங்குலியும் சந்தித்து பொதுவாக பேசிக்கொண்டு இருந்தனர் அவர்கள் பேச்சின் இடையே சொர்கம் பற்றி பேச்சு வந்தது. சச்சின் கேட்டார் மச்சான் சௌரவ் சொர்கத்தில் கிரிகெட் இருக்குமா அங்கு கிரிகெட் இல்லாவிட்டால் ரொம்ப போர் அடிக்கும் இல்லையா ?

அதற்கு சௌரவ் ஆமாம் சச்சின் ரொம்பவே போர் அடிக்கும் என்றார். சொர்கத்தில் கிரிகெட் இருக்குமா இல்லையா என்று எப்படி தெரிந்து கொள்வது என்று இருவரும் யோசித்தனர் ஒரு முடிவுக்கு வந்தனர்.

அதன்படி முதலில் இறப்பவர் சொர்கத்தில் கிரிகெட் இருக்குமா இல்லையா என்று தெரிந்து சொல்ல வேண்டும். கொஞ்ச காலத்திற்கு பின் சௌரவ் இறந்து போனார் அன்று இரவு சச்சினுடன் பேச வந்தார்.


சச்சின் : ஹாய் சௌரவ் சொர்கம் எல்லாம் நன்றாக இருக்கின்றதா

சௌரவ் : சொர்கம் எல்லாம் நல்லா தான் இருக்குது உனக்கு 1 குட்
நீயுஸ் 1 பேட் நீயுஸ் சொல்ல போறேன் எதை முதலில்
சொல்ல

சச்சின் : முதலில் குட் நீயுஸை சொல்லு

சௌரவ் : சொர்கத்தில் கிரிகெட் இருக்கின்றது

சச்சின் : அப்போ பேட் நீயுஸ்

சௌரவ் : நாளை காலை சொர்கத்தில் நடக்க இருக்கிற மேட்ச்சுக்கு
நீதான் ஓப்பனிங் பேட்ஸ் மேன்

சச்சின் : ??????? ( சச்சின் மயங்கி விட்டார்)

_______________________________________________________________________________

இந்தியனின் மூளை


நியூயார்க் நகரில் இருக்கும் அந்த புகழ் பெற்ற வங்கிக்குள் நுழைந்த அந்த இந்தியர் அங்கிருந்த அதிகாரியிடம் தனக்கு 5000 டாலர்கள் கடன் வேண்டும் என்றும் தான் இந்தியாவிற்கு இரண்டு வாரப் பயணமாக செல்வதாகவும் திரும்பிவந்து கடன் பணத்தைக் கட்டிவிடுவதாகவும் சொன்னார்.

அதற்கு அந்த அதிகாரி, உங்களுக்கு கடன் கொடுக்கவேண்டுமெனில் நீங்கள் அதற்காக ஏதாவது உத்தரவாதம் கொடுக்கவேண்டும் என்றார். இதைக் கேட்ட அந்த இந்தியர் வங்கிக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த தனது புத்தம்புதிய ஃபெராரி கார் சாவியை அந்த அதிகாரியிடம் கொடுத்தார். கூடவே காரின் உரிமைப் பத்திரங்களையும் கொடுத்தார். வங்கி அதிகாரி திருப்தியுடன் அந்த இந்தியருக்கு அவர் கேட்ட கடனை கொடுத்தார்.

250,000 டாலர் மதிப்புள்ள ஃபெராரி காரை வெறும் 5000 டாலர் கடன் வாங்க பயன்படுத்திய அந்த இந்தியரை நினைத்து வங்கியின் தலைவரும் மற்ற அதிகாரிகளும் அனுபவித்து சிரித்தனர். பிறகு வங்கியின் ஊழியர் ஒருவர் அந்தக் காரை வங்கியின் கீழ்தளத்தில் உள்ள கார்கள் நிறுத்துமிடத்திற்கு கொண்டு சென்று நிறுத்தினார்.

இரண்டு வாரங்கள் கழித்து திரும்பி வந்த இந்தியர் அந்த வங்கிக்கு சென்று தான் வாங்கிய 5000 டாலரையும் அதற்கான வட்டியாக 5.41 டாலரயும் திருப்பிக்கொடுத்தார். அவருக்கு கடன் கொடுத்த அந்த வங்கி அதிகாரி, "சார், உங்களுடன் வியாபாரம் செய்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. நமது பரிவர்த்தனை மிக நல்ல முறையில் நடந்தது. ஆனா ஒரே ஒரு விசயம்தான் எங்களுக்கு இன்னும் புரியலெ, நீங்க போன பிறகு உங்களைப் பத்தி நாங்க விசாரிச்சோம். நீங்க ஒரு பெரிய கோடீஸ்வரர் என்று தெரிந்தது. இவ்வளவும் பெரிய பணக்காரர் கேவலம் 5000 டாலர் கடன் வாங்குகிறாரே என்று எங்களுக்கு ஒரே குழப்பம்" என்றார்.

அதற்கு அந்த இந்தியர், "எனக்கு நியூயார்க் நகரத்தில் கார் நிறுத்தும் வசதி இல்லை. பிறகு எங்கு கொண்டுப்போய் நான் எனது காரை இவ்வளவு குறைந்த 5.41 டாலர் கட்டணத்திற்கு அதுவும் நான் திரும்பி வரும் வரை யாரும் திருடிக்கொண்டுப் போகாமல் பாதுகாப்பாக நிறுத்த முடியும்" என்றார்.

சிரிக்கலாம் வாங்க......

|
ஆகாய விமானத்தில் முதல் தடவையாக பயணம் சென்றார் ஒரு சர்தார்ஜி. விமானத்தில் ஏறி ஜன்னல் அருகிலிருந்த சீட்டில் அமர்ந்த பின் வெளியே பார்த்து தலையை ஆட்டலானார்.

அருகிலிருந்த சக பயணி அவரை விநோதமாக பார்க்க இவர் சொன்னார் " அவங்க சரியாத்தான் சொல்லியிருக்காங்க. விமானத்திலிருந்து கீழே பார்த்தால் மனிதர்கள் எறும்புகளாகவும் வீடுகள் பொம்மைகளாகவும் தெரியும்னு".

பக்கத்து சீட்டக்காரர் சொன்னார் "நீங்க பார்க்கறது நிஜமான எறும்புகளும் பொம்மைகளுமா இருக்கும். ஏன்னா விமானம் இன்னும் மேலே கிளம்பலை".

__________________________________________________

விமானத்தில் ஏறிய சர்தார்ஜி எகானமி வகுப்பு டிக்கட் வைத்திருந்தார். ஆனால் முதல் வகுப்பில் சீட்கள் காலியாயிருக்கவே அங்கு சென்று அமர்ந்தார். இதை கவனித்த ஏர் ஹோஸ்டஸ்

"சார் நீங்க முதல் வகுப்பில் உடகார முடியாது" என்றார். சர்தார்ஜியோ " நான் எங்க ஊர்ல பெரிய மனிஷன். நான் இங்கே தான் உட்காருவேன்" என்று அடம் பிடித்தார். மற்றய ஆகாய விமான பணியாட்களும் அவரிடம் அங்கே உடகார முடியாது என்று சொன்னாலும் கேட்காமல் அவர் அங்கேயே அமர்ந்திருந்தார்.

என்ன செய்வது என்று தெரியாமல் ஏர் ஹோஸ்டஸ் விமானத்தின் காப்டனிடம் சென்று நிலமையை விளக்கினார். காபடன் " ஓ சர்தார்ஜியா இப்ப பாருங்க நான எப்படி சமாளிக்கறேன்" என்று சொல்லி விட்டு சர்தார்ஜியிடம் சென்று பேசினார். என்ன ஆச்சரியம் சர்தார்ஜி பெட்டி பாம்மாக வந்து தனது எகானமி வகுப்பு இருக்கையில் அமர்ந்தார்.

அவர் சர்தார்ஜியிடம் சொன்னது " நீங்க தில்லிக்கு தானே போறீங்க இந்த முதல் வகுப்பு மாத்திரம் சென்னைக்கு போகிறது".

_______________________________________________________

ஆகாய விமானம் ஒன்று நடு வானில் பறந்து கொண்டிருந்த போது பழுதடைந்து விட்டது. விமானத்தை காப்பாற்ற பைலட் பயணிகளிடம் " எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதன் படி ஒவ்வொருவரும் தங்கள் நாட்டில் நிறைய கிடைக்கும் பொருள் ஒன்றை விமானத்தக்கு வெளியே வீசினால் விமானம் தப்பிக்கும்" என்றார்.

இதைக் கேட்ட ரஷ்ய நாட்டுக்காரர் தன் கையிலிருந்த வோட்கா பாட்டிலை வெளியே வீசினார் ரஷ்யாவில் வோட்கா நிறைய கிடைக்கும் என்பதால்.

ஜப்பான் நாட்டுக் காரர் தன்னிடம் இருந்த லாப் டாப்பை வெளியே எறிந்தார் ஜப்பானில் ராப் டாப் நிறைய கிடைக்கும் என்பதால்.

அமெரிக்க நாட்டுக்காரர் சற்று யோசித்த பின் பக்கத்திலிருந்த இந்திய கணிப்பொறியாளரை வெளியே தள்ளி விட்டார்.

_____________________________________________________

ஒரு விமானத்தில் பயணிகள் ஏறி அமர்ந்த பின் கதவை திறந்து இருவர் உள்ளே நுழைகின்றனர். இருவரும் கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தனர். ஒரத்தரை ஒரு நாய் அழைத்து சென்றது. மற்றவர் கையிலிருந்த கம்பால் தட்டிக் கொண்டே நடந்தார். இருவரும் காபினுக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டனர். பயணிகள் பதட்டமாயினர். இவர்களா விமானத்தை செலுத்த போகிறார்கள் என்று. விமானம் கிளம்பி ரன் வேயில் அதி வேகமாக ஓடியது. ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த பயணிகள் விமானம் அருகிலிரந்த தண்ணிரக்கள் விமானம் சென்று விடுமோ என்று பயந்து தண்ணீர் நெருங்கியவுடன் கூச்சலிட்டனர். ஆனால் விமானம் உயரே கிளம்பி அகாயத்தில் பறக்க தொடங்கியது. காபினிலிருந்த ஒரு பைலட் மற்றவரிடம் கூறினார் " ஒரு நாள் இவர்கள் கூவத்தவறினால் அன்று நாம் அனைவரும் இறந்து விடுவோம்".

______________________________________________________

ஒரு ரகசியமான ராணுவ விமான தளத்தில் ஒரு நாள் ஒரு பைலட் தன்னுடய விமானத்தை இறக்கி விட்டார். ராணுவ அதிகாரிகள் அவரிடம் நீ எப்படி இங்கு வந்தாய் என்றதற்கு அவர் தனது விமானத்தில் பெட்ரோல் திர்ந்து விடும் நிலையில் இருந்ததால் அங்கே இறங்கினார் என்றார். அனறு இரவு முழுவதும் அவரிடம் விசாரணை நடத்தி மறு நாள் காலையில் அவரது விமானத்தில் பெட்ரேலை நிரப்பி அந்த விமான தளத்தைப் பற்றி ஒருவரிடமும் சொல்லக்கூடாது அப்படி சொன்னால் அவர் தண்டிக்கப் படுவார் என்று சொல்லி அனுப்பினார்கள். சிறிது நேரம் கழித்து அந்த விமானமே மறுபடியும் அங்கு வந்திறங்கியது அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. விமானத்திலிருந்து இறங்கிய பைலட் சொன்னார் " நீங்கள் எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள். ஆனால் விமானத்திலிருக்கும் என் மனைவியிடம் நான் நேற்று இரவு எங்கிருந்தேன் என்பதை கூறுங்கள்" என்றார்.
__________________

சென்னை மெரினா கடற்கரையில் வாக்கிங் போய் கொண்டிருந்தார் ஒரு தமிழர். அவர் பலருக்கு பல நன்மைகளை செய்திருந்ததால் கடவுள் அவர் முன் தோன்றி " நீ நல்ல காரியங்கள் பல செய்திருக்கிறாய். உனக்கு நான் ஒரு வரம் தரலாமென்றிருக்கிறேன். கேள்" என்றார்.

சற்று யோசித்த பின் அந்த தமிழர் கடவுளிடம் " இந்த வங்க கடலின் நடுவில் சென்னைக்கும் இலங்கைக்கும் ஒரு பெரிய பாலம் அமையுங்கள். நாங்கள் கடலைத் தாண்டி சென்று அங்கு தவிக்கும் எங்களது உறவுகளுக்கு உதவ வேண்டும். எங்களைத் தாக்க வரும் இலங்கை ராணுவத்தை தவிடு பொடியாக்க வேண்டும்".

இதைக் கேட்ட கடவுள் " இது ஒரு பெரிய வேலை. பல லட்சக் கணக்கான மூட்டைகள் சிமெண்ட் வேண்டியிருக்கும். நிறைய இரும்பும் தேவையாயிருக்கும். கொடிய இலங்கை ராணுவத்தையும் அதன் அரக்கர்களான மகிந்த ராஜபக்ஷேயையும் நான் விரைவில் கவனித்துக் கொள்ளவிருக்கிறேன். நான் பிரியப்பட்டு பிறப்பித்த ஆயிரக்கணக்கான சிசுக்களை மிருகத்தனமாக கொன்று என்னிடமே அனுப்பியிருக்கிறார்கள் அந்த கொடியவர்கள். பாலத்தை தவிர வேறுஏதாவது இருநதால் கேள்".

தமிழர் சொன்னார் " சரி. அப்ப நான் எனது மனைவியை புரிந்து கொள்ள வேண்டும். எனது மனைவி எனக்கு அடிபணிந்து நடக்க வேண்டும். நான் சென்ன படியெல்லாம் அவள் நடக்க வேண்டும்".

கடவுள் அவரை இடை மறித்து ' நீ கேட்டாயே பாலம் அது எவ்வளவு பெரிதாக வேண்டும்?"பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல்
என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.

Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு
செருப்பு இல்லாம நாம நடக்கலாம்

ஆனா,

நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.


- தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள்
கிடையாது)

**************************************************************இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.

சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.

ஆனா,

கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?


- ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்

************************************************************


என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்,

ரயிலேறனும்னா,

ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை.

*********************************************************************பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்.

ஆனா,

ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா?

நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது!!!

************************************************************************என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,

ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது!!

அதேமாதிரி,

என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும்,

லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!!


************************************************************************


டிசம்பர் 31க்கும்,

ஜனவரி 1க்கும்

ஒரு நாள்தான் வித்தியாசம்.

ஆனால்,

ஜனவரி 1க்கும்,

டிசம்பர் 31க்கும்,

ஒரு வருசம் வித்தியாசம்.

இதுதான் உலகம்.

**************************************************************************

பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்.

ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்.

சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்.

ஆனா...

கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா??

யோசிக்கனும்...!!

*************************************************************************

தத்துவம் 1:
இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.
ஆனா
பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

தத்துவம் 2:
ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,
மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.

தத்துவம் 3:
தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்,
ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!

(என்ன கொடுமை சார் இது!?!)

தத்துவம் 4:
வாழை மரம் தார் போடும்,
ஆனா
அதை வச்சு ரோடு போட முடியாது!

தத்துவம் 5:
பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,
ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?

தத்துவம் 6:
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்...
சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,
அதுக்காக,
மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?
**************************************************************************


கொலுசு போட்டா சத்தம் வரும்.

ஆனா,

சத்தம் போட்டா கொலுசு வருமா?

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,

ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.

இதுதான் உலகம்

T Nagar போனா டீ வாங்கலாம்.
ஆனால்
விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?

என்னதான் பெரிய வீரனா இருந்தாலும்,
வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது.
**************************************************************************

இளநீர்லயும் தண்ணி இருக்கு,
பூமிலயும் தண்ணி இருக்கு.
அதுக்காக,
இளநீர்ல போர் போடவும் முடியாது,

பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.
**********************************************************************

உங்கள் உடம்பில்
கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,
ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.

ஓடுற எலி வாலை புடிச்சா நீ 'கிங்'கு
ஆனா...
தூங்குற புலி வாலை மிதிச்சா உனக்கு சங்கு.

***********************************************************************
நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்
ஆனா

ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.

**************************************************************************

இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.

சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல
பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?

என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்

மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும்,

Rewindலாம் பண்ண முடியாது.


"Tea"க்கும் "Cofee"க்கும் என்ன வித்தியாசம்?

"Tea"ல ஒரு "e" இருக்கும். "Coffee"ல 2 "e" இருக்கும்.

விண்வெளிப் பயணத்தில் வீர்சிங்..

ஒரு சின்ன ஆய்வுக்காக வீர்சிங்கும்,பாண்டாசிங்கும் ஒரு ராக்கெட்டில் விண்வெளி கழகத்தால் அனுப்பப்பட்டனர். ராக்கெட் பயணம் தொடங்கி கொஞ்ச நேரத்தில் ஏதோ
கோளாறில் பூமிக்கு திரும்ப வேண்டியதாகி விட்டது.உடனே பாண்டாசிங்கும்,வீர்சிங்கும்
யோசித்து பிறகு ராக்கெட்டை கீழிறக்கும் போது வழி தெரியாமல் ஒரு காட்டில்
ராக்கெட்டை இறக்கி விட்டான் வீர்சிங்.இருவரும் காலை விடிந்த பிறகு அடுத்ததை
யோசிக்கலாம் என முடிவு செய்து அங்கேயே படுத்து விட்டனர். நள்ளிரவில் இருவருக்கும்
தண்ணீர் தாகம் எடுக்க தண்ணீர் கிடைக்காமல் ராக்கெட்டுக்கு எக்ஸ்ட்ராவாக உள்ள எரிபொருளை எடுத்து குடித்துவிட்டு படுத்துவிட்டனர்.விடிகாலையில் பாண்டாசிங்கின்
செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது..வீர்சிங்தான் பேசினான்." பாண்டாசிங்... இன்னும் நீ
காலைகடன்கள் முடிக்கவில்லையே..." பாண்டாசிங் குழப்பாமாக 'இல்லையே ஏன்...?'
என்றான்.வீர்சிங்அவசரமாக சொன்னான் 'போய்விடாதே நான் ஜப்பானில் இருக்கிறேன்'</span>

-------------
இது ஏற்கனவே வந்திருக்கறதா என தெரியவில்லை.வந்தால் எடுத்து விடவும்

<span style='color:#2400ff'>மற்றொரு முறை ஒரு ஆராய்ச்சியாளரிடம் வீர்சிங் உதவியாளராக இருந்தான். ஒரு தவளை
குறித்த ஆய்வொன்றை பேராசிரியர் அவனிடம் தந்தார். வீர்சிங் ஆர்வமாக ஒரு தவளையை
எடுத்து அதன் ஒரு காலை வெட்டிவிட்டு ஜம்ப் என்றான்.தவளை கஷ்டப்பட்டு மூன்று
கால்களை ஊன்றி ஜம்ப் செய்தது.இப்போது இரண்டாம் காலையும் வெட்டிவிட்டு ஜம்ப்
என்றான்.தவளை மிக கஷ்டப்பட்டு இரண்டு கால்களை ஊன்றி ஜம்ப் செய்தது..வீர்சிங்குக்கு
சந்தோஷத்தில் தலை கால் புரிய வில்லை. மூன்றாவது காலையும் வெட்டி விட்டு ஜம்ப்
என்றான். தவளையால் முடியவில்லை.பேசாமல் கிடந்தது.மறுபடி ஜம்ப் என்றான்..எந்த அசைவும் இல்லை.வீர்சிங் தன்னுடைய ஆய்வு நோட்டில் இப்படி எழுதினான்.

"தவளையின் மூன்று கால்களை வெட்டி விட்டால் அதற்கு காது கேட்காது"

நீங்களும் பில்கேட்ஸ் ஆக சில சீரிய(??!) யோசனைகநம் வீர்சிங்கும்,பாண்டா சிங்கும் கொஞ்ச நாள் பில்கேட்ஸின் மைக்ரோசா�ப்ட்
நிறுவனத்தில் அவருடன் பணி புரிந்து விட்டு வந்தார்கள் அல்லவா...அவர்கள் இங்கு
பில்கேட்ஸைப் பற்றி தரும் டிப்ஸ்கள் தான் இவை.

1. உங்களுக்கு ஒரு கான்செப்டை பற்றி சிறிதளவு தெரிந்தாலும் கூட அதுபற்றி
முழுமையாக தெரிந்தது போல் நிறைய அலட்டி கொள்ளுங்கள்.கூடுமானவரை உங்களை
விட கொஞ்சம் விஷயம் தெரிந்தவரை பக்கத்தில் வைத்து கொள்ளாதீர்கள்.அது நிறைய
இடைஞ்சலை தந்து விடும்.

2. நீங்கள் தப்பி தவறி ஏதேனும் ஒரு சா�ப்ட்வேரில் பிரில்லியண்ட் ஆக இருந்தால்
அந்த இரகசியத்தை மற்றவர்களுக்கு புரியாதபடி வெளியிடுங்கள்.

3. உங்கள் பெயருடன் Bill ,Voucher, Reciept, Balance என்று எதையாவது இணைத்து
கொள்ளுங்கள். இது விரைவில் நீங்கள் பிரபலமாக பலனளிக்கும்.

4. மிகவும் லூசான பனியன் மற்றும் பர்முடாஸையே அணியுங்கள்.ஜாக்கிரதையாய் மற்றவர்
தவறு கண்டுபிடித்துவிட முடியாதபடி english ல் ஏதாவது உளறிக்கொண்டேயிருங்கள்.

5. முடிந்தவரை எப்போதும் தலையை கலைத்து விட்டு கொள்ளுங்கள்.எப்போதும் சிந்தித்து
கொண்டிருப்பது போல் முகத்தை வைத்து கொள்ளுங்கள்.கண்ணாடி போட்டு கொள்ளுதல்
அவசியம்.

6. ஏதேனும் உங்களுக்கு தெரியாத ஒன்றை பற்றி கேள்வி கேட்கப்பட்டால் கேட்டவரை
அலட்சியமாக பாருங்கள்.'இது கூட தெரியாதா..?' என்ற தொனி அதில் இருக்கட்டும்...
(உங்களுக்கு தெரியாது என்பது வேறு விஷயம்)

7. உங்களை விட அறிவில் குறைந்தவரை எப்போதும் பக்கத்தில் வைத்துகொள்ளுங்கள்.
(ஏனென்றால் எப்போதும் பில்கேட்ஸ் எங்கள் பக்கத்திலேயே இருப்பார்.அதை வைத்து
சொல்கிறோம்).புதிது புதிதாய் ஏதேனும் சொல்லிக்கொண்டேயிருங்கள்.இது எல்லாவற்றையும் விட விரைவில் பயனளிக்கும்.

எனது அனுபவங்கள் : அருணாச்சலம் - கிரிவலம் - திருவண்ணாமலை

| Oct 26, 2010
தமிழ் நாட்டில் இருக்கிற எந்த ஒரு ஆன்மிகதேடல் இருப்பவரும், திருவண்ணாமலையை  அறியாமலோ, கேள்விபடாமலோ இருக்க முடியாது.ஒரு மலை - அது காந்த மலை என்று தான் சொல்ல வேண்டும். ஒருமுறை வந்தவர்களை , திரும்ப திரும்ப வர வைக்கும் ஆகர்ஷன சக்தி கொண்ட மலை. எத்தனையோ வலை பதிவுகள் , வலை பூக்களில் இதை பற்றிய செய்திகள் அதிகம். நான் அறிந்ததும் , அனுபவித்ததும் இந்த பதிவில் :

ஒரு பன்னிரண்டு வருடங்கள் இருக்கும், நான் முதன் முதலாக , அருணாச்சலேஸ்வரர் கோவில் சென்று இருந்தேன். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை.  மனதுக்கு கொஞ்சம் சந்தோசமாக இருந்தது. ஏனென்றால், சற்று கூட்டம் அதிகம். அந்த காலத்தில், சிவ ஆலயங்களில், அவ்வளவாக கூட்டம் இருப்பதில்லை. ஒரு மணி நேரத்தில், சாமி தரிசனம் முடித்துவிட்டு, அருகில் இருக்கும், சாத்தனூர் அணைக்கட்டு சென்று விட்டோம். பிரதோஷம், கிரிவலம் எல்லாம் அவ்வளவாக மக்களால் அறியப்படவில்லை. அதன் பிறகு, ஒரு ஐந்து வருடங்கள் கழித்து, ஒரு குளிர் கால பௌர்ணமி தினத்தில்,  கிரிவலம் சென்று இருந்தேன். யோகி ராம் சுரத் குமாரும், மற்றும் பல ஞானிகளும், இளையராஜாவும், ரஜினிகாந்தும், பாலகுமாரனும்,  எந்த அளவுக்கு மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்று உணர முடிந்தது. அது வரை எனக்கு தெரிந்து கார்த்திகை தீபம் மட்டுமே, லட்சக் கணக்கில் மக்கள் கூடுவார்கள் என்று நினைத்து இருந்தேன். எனது, அத்தனை எண்ணங்களும், அடித்து த்வம்சம் செய்து விட்டது, அங்கு கூடி இருந்த மக்கள் அலை.
சமீப காலமாகவே, சிவ வழிபாடு அதிகம் ஆகி இருந்ததை நானும் அறிவேன். பிரதோஷ வழிபாடு, மக்களிடையே  நன்றாக பிரபலமாகி இருந்தது.
அதன் பிறகு, இது வரை, எத்தனையோ தடவை கிரிவலம் சென்று வந்து உள்ளேன், அந்த அருணாச்சலத்தின் ஆசியினால். கணக்கில் வைத்துக் கொள்ளவில்லை. ஒவ்வொரு தடவையும், அருணாச்சலம் என்னை, மெல்ல மெல்ல உள்ளே இழுத்துக் கொண்டது.
இது நிச்சயமாக , அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயம் தான். .


http://www.livechennai.com/images/Thiruvannamalai.jpg

ஆனால், கிரிவலம் செல்லும் பொது, மக்கள் ஆரம்பிக்கும் கொஞ்ச நேரத்தில் , மெல்ல மெல்ல , ஊர் கதை பேசிக் கொண்டும், குடும்ப கதைகள் பேசிக்கொண்டும், மொபைல் போனில் சினிமா பாட்டு போட்டு கொண்டும் , அடிக்கும் லூட்டி , கொஞ்ச நஞ்சம் அல்ல. மலை சுற்றும் முக்கியத்துவம் கொஞ்சம் கூட உணர்வதில்லை. மொபைல் போனில், சிவ மந்திரங்களோ, காயத்ரி மந்திரமோ, SPB யின் கணீர் நமசிவாய மந்திரம் கூட, மலை சுற்றும் நேரத்தில் சொல்ல வொண்ணா எரிச்சலும், ஆத்திரமும் வர வைப்பவைதான் . மனதில், அடி மனதில், ஓம் நமசிவாய மந்திரம் சொல்லிக் கொண்டு வரும், எத்தனையோ பேருக்கு, அது எவ்வளவு இடையூறாக இருக்கும் என்பதை, உணரக் கூட முடியாதவர்கள்.
நாம் வெறுமனே மலை சுற்றுகிறோம் என்று நினைத்து விட்ட பேதைகளின் கூட்டம்.
 மலையே, சிவம் என்று உணர்ந்து விட்டால் , நிச்சயமாக , நாம் வெட்டி பேச்சு பேசிக் கொண்டு செல்ல மாட்டோம். ஒரு சாதாரண சனி, ஞாயிற்று கிழமை சென்று வாருங்கள், நான் சொல்வது புரியும்.


http://www.thiruvannamalai.in/tiruvannamalai-temple/images/tiruvannamalai_karthigai_deepam1.jpg

நான் முதல் தடவை சென்ற போதே, எனக்கு ஏற்பட்ட , மயிர் கூச்செறியும் சம்பவமும், என்னை அப்படியே தூக்கி வாரிப்போட்டது. ஈசான்ய லிங்கம் தாண்டி , ராஜ கோபுரம் செல்வதற்காக, பஸ் ஸ்டாண்ட் ஐ நெருங்கி வந்து கொண்டிருந்த வேளை. இரண்டு பேர் , அங்க பிரதஷணம், செய்து கொண்டு வந்து கொண்டு இருந்தனர். அவர்களுக்கு முன்னே, இரண்டு , மூன்று பேர், விளக்குமாறு கொண்டு , ரோடை சுத்தம் செய்து கொண்டும் , அவர்களுக்கு, மண் சிறு சிறு கற்களை சுத்தம் செய்து கொண்டும், அவர்களுக்கு உதவி செய்து கொண்டு இருந்தனர். நடு மண்டையில் நச் என்று யாரோ சம்மட்டியால் அடித்தது போலிருந்தது. எனது சப்த நாடிகளும் ஒடுங்கி விட்டன. நினைத்தே பார்க்க முடியவில்லை. 15 கிலோ மீட்டர் , நடபதற்கே சிரமம். இவர்கள் எப்படி என்று ? குறைந்த  பட்சம், குபேர லிங்கத்திலிருந்து வரவே, அசாத்திய துணிச்சல் வேண்டும். கண்டிப்பாக , இது மனிதர்கள் போலேவே தோன்ற வில்லை. எதோ ஒரு, சித்த புருஷர், தான் செய்த தவறுக்கு, பிராய சித்தம் செய்வது போல தோன்றியது. அந்த நொடியிலிருந்து, என் மனதின் பார்வை மலையை, அந்த மகேசனாகவே பார்க்கத் தொடங்கியது. அதன் பிறகு, இன்று வரை, கிரிவலதின்போது, என் மனதில் கூட சிறு சலனம் ஏற்படவில்லை. எத்தனையோ தேவ புருஷர்கள், சித்தர்கள், நம் கூட நாம் உணர முடியா வண்ணம் , வலம் வரலாம்.  நமது மன எண்ணங்கள் , எவ்வளவு அற்பமாக இருக்கும்.  என் மன மாற்றம், அடுத்த முறையிலிருந்து , அந்த சிவத்தை மெல்ல மெல்ல அருகில் நெருங்கியது. அந்த சிவமும், என்னை ஆக்கிரமிக்க தொடங்கியது. எல்லாம், என் பூர்வ புண்ணிய பலனாக இருக்க வேண்டும். நீங்களும், ஒரு முறை ஆத்மார்த்தமாக சுற்றி பாருங்கள். உணர்வீர்கள். அதன் பிறகு, நான் தேடி தேடி , அண்ணாமலை பற்றிய செய்திகளை சேகரிக்க தொடங்கினேன்.
அஷ்ட லிங்கம் என்பது, அஷ்ட திக் பாலகர்களால் நிறுவப்பட்ட லிங்கங்கள். இந்தவுலகில் நாம் செய்யும் பாவ , புண்ணியங்களை , எட்டு திசைகளில் இருந்து , பதிவு செய்து கொண்டு இருப்பவர்கள். நம் வீட்டின் எட்டு மூலைகளும், அவர்கள் ஆட்சி புரிகின்றனர். சிவம் பரமாத்வாக இருந்து கொண்டு, உங்களுக்கு தேவையானவை மட்டும் , தகுதியானவை மட்டும், தந்து கொண்டு இருக்கிறது.
நாம் ஒவ்வொரு முறை, கிரி வலம் சுற்றும்போதும் , நமது முந்தைய தலை முறை கர்மங்கள் நம்முடன் சுற்றி வருகின்றன.  வெறுமே சுற்றி வந்தால், எப்படி நம் பாவங்கள் கழியும் என்ற குதர்க்கத்தனமான எண்ணங்களை மூட்டை கட்டி விட்டு , அனுபவித்துப் பாருங்கள். அருணகிரி நாதர் முதல் சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி வரை பலப்பல  மகான்கள் வாழ்ந்த ஸ்தலம்.
கிரி வலம் செல்லும் பாதையில்,உங்களால் முடிந்தவரை அன்ன தானம் செய்யலாம். பசுவிற்கு அகத்தி கீரை, வாழைப்பழம், கொடுக்கலாம். நிறைய துறவிகள், அன்னதானம் பெற்றுக் கொள்வதில்லை. ஆகவே, நாங்கள் செல்லும்போது, ராஜகோபுரம் அருகிலேயே ஒரு 200 ரூபாய்க்கு,  பழங்கள் வாங்கி கொள்வோம்.  நிறைய towels ( துண்டுகள்) வாங்கிக்கொள்வோம் . கண்ணில் தென்படும் துறவிகளுக்கும், பசுக்களுக்கும் பழங்கள் கொடுப்பது வழக்கம். சற்று வயதான துறவிகளுக்கு துண்டு கொடுப்போம். நம் ஜாதகத்தில் உள்ள கடுமையான தோஷங்களுக்கு , நாம் செய்யும் அன்ன தானமும் ,   வஸ்திர தானமும், நல்ல பரிகாரங்கள் ஆகும். பாத்திரம் அறிந்து போட வேண்டும். அது முக்கியம்.   பசிக்கும் உள்ளங்களுக்கு, வசதி இல்லாத முதியவர்களுக்கு, துறவிகளுக்கு தானம் செய்தாலே அது நல்லது.
இனி, அஷ்ட லிங்கங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ராஜகோபுரம் தரிசித்து, வெளியே வந்ததும், முதலாக வருபவர்  இந்திர லிங்கம். தேவர்களின் தலைவன் இந்திரனால் நிறுவப்பட்ட லிங்கம். நவ கிரகங்களில், சூரியனுக்கும், சுக்கிரனுக்கும் உரிய லிங்கம். நீண்ட ஆயுள், கீர்த்தி வழங்குபவர். கிழக்கு திசைக்கு அதிபதி.இரண்டாவதாக வருபவர், அக்னி லிங்கம். அக்னி பகவானால், நிறுவப்பட்ட லிங்கம். பக்தர்களுக்கு, நோய் நொடிகளையும், பயத்தையும் போக்குபவர். சந்திரனுக்குரிய லிங்கம். அக்னிலிங்கத்துக்கு முன் வரும் அக்னி குளத்தில் நீரில் கால்கள் நனைய, எதிரில் இருக்கும் மலையை ஒரு பௌர்ணமி இரவில் பாருங்கள். வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு still ஆக இருக்கும். அனுபவித்து பாருங்கள். தென்கிழக்கு திசைக்கு அதிபதி.மூன்றாவதாக  எம லிங்கம். எமதர்மரால், நிறுவப்பட்ட லிங்கம். நவ கிரகங்களில், செவ்வாய்க்குரிய லிங்கம். தேடி வரும் பக்தர்களுக்கு, நீண்ட ஆயுள் வழங்குபவர். தெற்கு திசைக்கு அதிபதி.அடுத்து வருபவர் நிருதி லிங்கம். தென்மேற்கு திசைக்கு அதிபதி. கருவறை அருகில், நல்லதொரு ஆன்மிக அதிர்வை உணர முடியும். மற்ற தேவர்களை எல்லாம் நாம் இதற்கு முன்பு கேள்விப் பட்டிருந்தாலும், நிருதி இதற்கு முன் நான் கேள்விப்படாதவர். சீரிய தவத்தினாலே, அவருக்கு இந்த பதவி. உலகில் உள்ள, அத்தனை பூதங்களுக்கும், தலைவர் நிருதி. நவ கிரகங்களில், ராகுவுக்கு உரிய லிங்கம். அண்டி வரும் பக்தர்களுக்கு, ஆரோக்கியம், புகழ், சொத்துக்களை அள்ளி வழங்குபவர். குழந்தை பேறு வேண்டுபவர்கள், இங்கே மனமுருகி வேண்ட, அவர்கள் பலன் அடைவது திண்ணம். அடுத்து வருபவர், வருண லிங்கம். வருண பகவானால், நிறுவப்பட்டு வழிபடும் லிங்கம். நீதிதேவனான சனி பகவானுக்கு உரிய லிங்கம்.இந்த உண்மை தெரிய வந்தால், பக்தர்கள் கூட்டம் இங்கேதான் அலைமோதும். . ஆனால், நடந்து செல்லும் பக்தர்களின் ஒரு அவசர கதி 'சல்யூட்' ஐ ஏற்றுக்கொண்டு  அமைதியாக அருள் பாலிக்கிறார். வேண்டி வரும் பக்தர்களை நோய் களிலிருந்து விடுவிக்கிறார். குறிப்பாக நீரினால் ஏற்படும், அனைத்து வியாதிகளும் சொஸ்தமாகிவிடும்.  மேற்கு திசைக்கு அதிபதியாக இருக்கிறார். ஆறாவதாக , வடமேற்கு திசைக்கு அதிபதியாக அருள்பாலிப்பவர் வாயு பகவானால் நிறுவப்பட்ட வாயு லிங்கம். நவ கிரகங்களில் 'கேது' வுக்குரிய லிங்கம். ஆத்மார்த்தமான வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு இதயம், நுரையீரல், வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளை நீக்குகிறார்.


  அடுத்து வருபவர், வடக்கு திசைக்கு அதிபதியாக வரும் குபேரனால், நிறுவப்பட்டு வழிபட்டு வரும் குபேர லிங்கம். நவக் கிரகங்களில் 'குரு' பகவானுக்குரிய லிங்கம். தன்னை வழிபடும் பக்தர்களுக்கு , வாழ்வில் முன்னேற்றங்களைத் தந்து , பொருளாதார நிறைவை ஏற்படுத்தித் தருபவர்.   கிரி வலப் பாதையில், கடைசியாக வருபவர் ஈசான்ய லிங்கம். வட கிழக்கு திசைக்கு அதிபதியான ஈசன்யானால் நிறுவப்பட்ட லிங்கம். நவக் கிரகங்களில் புதனுக்குரிய லிங்கம். நாடி வரும் பக்தர்களுக்கு மன அமைதியை வழங்குபவர்.
   மேற்கூறிய அஷ்ட லிங்கங்கள் தவிர மலை சுற்றும் பாதையில் ஏராளமான இறை சந்நிதிகள் உள்ளன. வலம் வரும்போது அடி அண்ணாமலையில், புதிதாக நிறுவப்பட்டுள்ள  அம்மனின் அழகு முகத்தை அருகில் இருந்து தரிசித்துப் பாருங்கள். ஆதி அண்ணாமலை கோவிலுள் சென்று தரிசித்து வர நீங்கள் பாக்கியம் செய்து இருக்க வேண்டும். உள்ளே இருக்கும்போது நீங்கள் நிச்சயமாக ஒரு அதிர்வை உணர முடியும்.

  அஷ்ட லிங்கங்களை நிறுவிய தேவர்கள் பலமுறை நேரில் வந்து சூட்சமமாக வழிபாடு செய்துவிட்டு செல்கிறார்கள்.
  கலி முற்றி வரும் இந்த காலத்தில், ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது எதோ ஒரு தேவை இல்லாத செயல் போல தோன்றுகிறது நிறைய மக்களுக்கு. ஆனால், வாழ்வில் ஏற்படும் துன்பங்களுக்கு உள்ளேயே உழன்று கொண்டு , எதை தின்றால் பித்தம் தெளியும் என்று தேடும் அன்பர்களுக்கு , அண்ணாமலை ஒரு நிரந்தர தீர்வாக அமையும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
  ஒரு முறை கார்த்திகை தீப தரிசனம், உங்கள் தலை முறைக்கே வழி காட்டும். சென்ற கார்த்திகை தீபத்திற்கு, கிட்டத் தட்ட 45 லட்சம் பக்தர்கள் கூடினர். தமிழ் நாட்டில் இது ஒரு அபூர்வ  நிகழ்வு.
  வாஸ்து சாஸ்திரப்படி , அற்புதமாக அமைந்த இரண்டு ஸ்தலங்கள் : திருவண்ணாமலையும்  , திருப்பதியும் ஆகும். உங்கள் வாழ்வில் நீங்கள் மென்மேலும் உயர , உங்களால் முடிந்தவரை இந்த ஸ்தலங்களுக்கு சென்று இறை வழிபாடு மேற்கொள்ளுங்கள். இயலாதவர்களுக்கு  உதவி செய்யுங்கள். பரம்பொருளின் துணை உங்களுக்கு தேவையான நேரத்தில் கச்சிதமாக கிடைப்பது உறுதி.

  அண்ணாமலையாருக்கு அரோகரா!

  Tamil Jokes

  | Oct 25, 2010
  தமிழ் ஜோக்ஸ், 
  ஆபீஸ் பியூன் கிட்டே சண்டை போட்டது தப்பாப் போச்சு..?

  ஏன் .. என்னாச்சு..?

  சம்பள உயர்வு வந்ததை வீட்டுல போட்டுக் கொடுத்துட்டான் பரதேசி..!
  _________________

  நடிகை ஜிகினாஸ்ரீ இன்னிக்கு விழாவுக்கு வராங்கன்னு போனியே.. என்னாச்சு..?

  கனவுக்கன்னியை கனவுல பார்த்துக்கோங்கன்னு எல்லாருக்கும் தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வச்சுட்டாங்கடா..!
  _________________

  ஏன் நடிகை கொய்யாஸ்ரீ திருமணத்தை பத்திரிக்கைக்காரங்க புறக்கணிச்சுட்டாங்க..?

  பின்ன என்ன.. அப்பா அம்மா பார்த்த மாப்பிள்ளையை முறைப்படி திருமணம் செஞ்சுகிட்டா கோபம் வராதா..?
  _________________

  காதலிதான் உனக்கு மோதிரம் கொடுத்திருக்காளே.. அப்புறம் ஏன் வருத்தமா இருக்கே..?

  நாலு பேர் கைமாறி வந்த அதிர்ஷ்ட மோதிரம் இதுன்னு சொல்லிட்டுப் போறாடா..!
  _________________

  எங்க டாக்டர் எந்த வாய்ப்பையும் தவற விடமாட்டார்..

  அதுக்காக நாக்கை நீட்டச் சொல்லிட்டு அதில ஸ்டாம்பை ஒத்தி ஒட்டுறது நல்லாவா இருக்கு..?
  _________________

  கல்யாண நிகழ்ச்சியை ஒண்ணுவிடாம வீடியோ எடுக்கணும்ன்னு நாங்க சொன்னதை உங்கப்பன் தப்பா புரிஞ்சிகிட்டார்ன்னு நெனைக்கிறேன்..

  ஏங்க..? எதுவும் தப்பாயிட்டுதா..?

  முதலிரவு அறைக்குள்ள 3 கேமிரா இருக்கு பாரு..!
  _________________


  சேவகன்1:-"நமது மன்னருக்கு மகாராணி மீது எப்படிச் சந்தேகம்
  வந்தது?"

  சேவகன்2:-"குட்டி இளவரசரிடம் 'நீ (good)'குட்'பாயா.. (Bad)'பேட்'பாயா?'னு
  மன்னர் கேட்டதுக்கு 'சிப்பாய்'னு பதில் சொன்னாராம்!"
  _________________

  மன்னன்: எதிரி நாட்டு மன்னனின் அறைகூவலை இனிமேலும்
  நம்மால் பொறுத்துக்கொள்ள இயலாது மந்திரியாரே!

  மந்திரி: போருக்குத் தயாரென ஓலை அனுப்பட்டுமா மன்னா?

  மன்னன்: வேண்டாம் அறைகூவல் கேட்காவண்ணம் சவுண்ட்
  புரூஃவ் சிஸ்டம் அமைக்க ஏற்பாடு செய்யுங்கள்.

  _________________

  பெண்:- முப்பத்தேழுக்கு மேல குழந்தை பெத்துக்கவாய்ப்பு
  இருக்கா, டாக்டர்?

  டாக்டர்:- ஆமாம்! அதுசரி அத்தனை குழந்தைகளைப்
  பெத்துக்கிட்டு கின்னஸ் சாதனையா பண்ணப்போறே?

  _________________

  நீங்க 100 வயது வரை வாழக் காரணம்?

  1905 லே பிறந்ததுதான்
  _________________

  ஒருவர் ஒரு சின்ன தீவில் வசித்து வந்தார். அவர் வேலை
  பார்க்கும் அலுவலகத்திற்கு படகு மூலம் தான் பயணிக்க வேண்டும்.
  ஒரு மணி நேரத்துக்கு ஒரு படகு தான். படகை விட்டு விட்டால்
  அடுத்த படகுக்காக காத்திருப்பதிலேயே ஒரு மணி நேரம் வீணாகி
  விடும். ஒரு நாள் மாலை வேலை முடிந்து வீடு திரும்ப படகுத்
  துறைக்கு வந்து கொண்டிருந்தார் அந்த நபர். அப்போ துறையில்
  இருந்து ஒரு 15 அடி தூரத்தில் படகினை பார்த்தார். அடடா.
  இந்த படக விட்டுட்டா இன்னும் ஒரு மணி நேரம் வீணா
  காத்திருக்கனுமே என்று அவசர அவசரமாக ஓடி சென்று
  படகுத்துறையின் விளிம்பு வரை போய் கஷ்டப்பட்டு தாவி
  குதித்தார் படகில். குதித்த வேகத்தில் கைகளை கீழே
  ஊன்றி முழங்காலிட்டு சின்ன சின்ன சிரராய்ப்புகளோடு
  எப்படியோ சமாளித்து படகில் இருந்தார் அவர். இப்போ மெல்ல
  எழுந்து திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்த படகில்
  இருந்த மக்களைப் பார்த்து பெருமையாக "அப்பாடி. ஒரு வழியா
  படக பிடிச்சுட்டேன். இல்லேன்னா இன்னும் ஒரு மணி நேரமுல்ல
  வீணா காத்திருக்கணும்?" என்றார்.

  படகில் இருந்த ஒருவர் சொன்னார். "அட. ஒரு நிமிசம் காத்திருந்தீங்கன்னா
  படகு தான் கரைக்கு வந்திருக்குமே? நாங்கள்லாம் இறங்கினப்பறம்
  நீங்க பாதுகாப்பா படகுல ஏறி இருக்கலாமே?" :!:

  _________________


  பரம்ஸ் அரபு நாட்டிலிருந்து மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்து இறங்கி இரண்டு பெரிய சூட்கேசுகளுடன் நடக்க முடியாமல் நடந்து வந்து கொண்டிருந்தார்,. அப்போது அங்கே வந்த மாசி கேட்டார்.. " மணி என்ன ஐயா?"

  பரம்ஸ் இரண்டு சூட்கேசுகளையும் கீழே வைத்து விட்டு தன் மணிக்கட்டைத் திருப்பி பார்த்து விட்டு..

  "ஆறாக 10 நிமிடம் இருக்கு".

  "வாவ். உங்க கடிகாரம் நல்லா இருக்கு . எங்க வாங்கினீங்க்?"

  "நன்றி. இது நானே டிசைன் பண்ணின கடிகாரம்... இங்க பாருங்க" என்று தன் வாட்சைக் காட்டினார் பரம்ஸ். ஒரு பொத்தானை அமுக்க அமுக்க உலகின் உள்ள எல்லா நேரங்களையும் நொடி மாறாமல் காட்டுவதுடன், உலகில் உள்ள 86 மெட்ரோ நகரங்களில் நேரம் மற்றும் தட்ப வெப்பம் காண்பித்தது அந்த வாட்ச். அதே பொத்தானை மீண்டும் அமுக்க அமுக்க உலகின் பல்வேறு மொழிகளிலும் பலவிதமான அழகிய குரல்களில் அந்த கடிகாரம் நேரம் சொன்னது. இதை பார்த்த மாசிக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம். "அட இது மட்டுமில்ல. இதுல இந்த புள்ளி வந்து GPS சாட்டிலைட் மூலமா நான் எங்க இருக்கிறேன் என்று டிராக் பண்ணிக்கொண்டே இருக்கும்". அதோட பல நகரங்களின் தெளிவான வரைபடம்(map), இரவு விளக்கு, மேப்பை பக்கத்தில் இருக்கும் சுவற்றில் பெரிதாக்கி தெரிய வைக்கும் புரொஜெக்டர் திறன், அதில் இருந்த லேசர் பாயிண்டர் இன்னும் என்னென்னமோ காட்டினார். பார்த்த மாசி அசந்து போய் விட்டார்.

  "நீங்களே டிசைன் பண்னினது என்று சொன்னீங்களே? இத எனக்கு விலைக்குத் தருவீங்களா???"

  "இல்ல . இன்னும் இது மார்க்கட்டுக்காக ரெடி ஆகவில்லை. இன்னும் கொஞ்சம் சின்ன சின்ன விசயங்கள் எல்லாம் சரி செய்ய வேண்டி இருக்கு"

  "நீங்க வேற தயார் பண்ணிக்கோங்க.. . இந்த கடிகாரத்தை எனக்கு விலைக்கு தாங்க"

  "இல்லை ஐயா"

  "ரூ. 10 ஆயிரம் தர்றேன் சார்"

  "அட இது இன்னும் விற்பனைக்கு ரெடி ஆகவில்லை"

  "சரி. ஒரே விலை 15000'

  "சொன்னா கேளுங்க.."

  "ம்ஹீம். 25000 ரூபாய்.. இப்பவே தாங்க"

  "இல்ல...."

  "ம் . ஒண்ணும் பேசாதீங்க. 40000. இப்ப என்ன சொல்றீங்க?"

  "அட உண்மையாவே இது இன்னும் முழுசா....."

  "ரெடி ஆகலேன்னு தானே சொல்ல வர்றீங்க்? ஒண்ணும் பேசாதீங்க. கடைசி விலை 50,000. எனக்கு நீங்க இத கொடுத்தே தான் ஆகணும். இவ்வளாவு விரும்பி கேட்கிறேன்"

  பரம்ஸ் யோசித்து பார்த்தார். இது வரை இவர் இந்த வாட்ச்சுக்கு செலவழித்தது ரூ.10000 மற்றும் 2 வருட உழைப்பு. இவர் தரும் பணமோ 50000. இதற்கு மேல் மறுக்க வழி இல்லாமல் பரம்ஸ் அவரிடம் இருந்து 50000 வாங்கிக் கொண்டு கடிகாரத்தைக் கழட்டிக் கொடுத்தார். வாங்கிய மாசி ஆனந்தமாய் கையில் கட்டிக் கொண்டு நன்றி செலுத்தி விட்டு வேகமாய் கிளம்பினார்.

  "ஹலோ ஒரு நிமிசம்" என்று பரம்ஸ் கூப்பிட்டார் .

  கடிகாரத்தை வாங்கிய மாசி, "அடடா அதுக்குள்ள இவர் தன் மனச மாத்திகிட்டாரோ என பயந்த படி திரும்ப பரம்ஸ் அவரிடம் அந்த இரண்டு பெரிய சூட்கேஸ்களை காட்டி சொன்னார்....

  "அந்த வாட்ச்சோட பேட்டரிகளை மறந்துட்டுப் போறீங்களே?"
  _________________


  1) ஜப்பானியர்கள் ரொம்ப குறைவாய் கொழுப்பு நிறைந்த உணவு சாப்பிடுகிறார்கள். அதனால் அமெரிக்கர் மற்றும் பிரிட்டிஷ்காரர்களை விட குறைந்த அளவே அவர்களுக்கு இதய நோய்வருகிறது.

  2) ஆனால் அதே நேரம், பிராஞ்சுக்காரர்கள் மிக அதிக கொழுப்பு உணவு உட்கொள்கிறார்கள். ஆனாலும் அமெரிக்கர் மற்றும் பிரிட்டிஷ்காரர்களை விட குறைந்த அளவே அவர்களுக்கு இதய நோய் வருகிறது.

  3) ஜப்பானியர்கள் ரொம்ப குறைவாய் சிவப்பு வைன் அருந்துகிறார்கள். அதனால் அமெரிக்கர் மற்றும் பிரிட்டிஷ்காரர்களை விட குறைந்த அளவே அவர்களுக்கு இதய நோய் வருகிறது.

  4) ஆனால் அதே நேரம், இத்தாலியர்கள் மிக அதிகமாக சிவப்பு வைன் அருந்துகிறார்கள்.ஆனாலும் அமெரிக்கர் மற்றும் பிரிட்டிஷ்காரர்களை விட குறைந்த அளவே அவர்களுக்கு இதய நோய் வருகிறது.

  இந்த ஆராய்ச்சியின் முடிவு???

  உணவோ அல்லது குடிப்பழக்கமோ அல்ல பிரச்சனை. ஆங்கிலம் பேசுவது தான்....

  _____________________________________________-


  ஒரு விமானம் விபத்துககுள்ளாயிற்று. ஒரு குரங்கைத் தவிர வேறு யாருமே உயிர் பிழைக்கவில்லை.. துப்பு துலக்க வசதியாக, அந்தக் குரங்குக்கு தட்டச்சு தெரிந்து இருந்தது..

  அதிகாரிகளுக்கும் குரங்குக்கும் நடந்த உரையாடல் இது..

  அதிகாரி ; விமானம் கிளம்பும் போது என்ன நடந்தது..? பயணிகள் என்ன செய்தார்கள்..?

  குரங்கு ; சீட் பெல்ட் போட்டார்கள்..

  அதி ; பணிப் பெண்கள்..?

  குர ; பெல்ட் போட உதவினார்கள்..

  அதி ; விமானிகள்.. ?

  குர ; விமானத்தை கிளப்பினார்கள்..

  அதி ; நீ என்ன செய்தாய்..?

  குர ; வேடிக்கை பார்த்தேன்..

  அதி ; 15 நிமிடம் கழித்து என்ன நடந்தது..?

  குர ; பயணிகள் பேசிக்கொண்டிருந்தார்கள்.. பணிப்பெண்கள் பவுடர் பூசிக்கொண்டார்கள்.. விமானிகள் விமானத்தைக் கையாண்டூ கொண்டிருந்தார்கள்..

  அதி ; நீ என்ன செய்தாய்..?

  குர ; நான் விமானத்தை சுற்றிப் பார்த்து கொண்டிருந்தேன்..!

  அதி ; விபத்து நடக்கும் போது என்ன நடந்தது..?

  குர ; பயணிகள் தூங்கினார்கள்.. பணிப்பெண்கள் ஓய்வறைக்குப் போய்விட்டார்கள்.. விமானிகள் பணிப்பெண்களுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்..

  அதி ; நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?

  குர ; நான் விமானத்தை ஓட்டிக் கொண்டு இருந்தேன்..!
  _________________


  உங்க கடைய இன்னும் எப்படி ஆக்ரமிப்புல இடிச்சு காலி பண்ணாம இருக்காங்க??

  என்னய்யா சொல்றே??

  ஆமாங்க.. நீங்கதானே சொன்னீங்க.. திருச்சி மெயின்ரோடுல கடை வச்சிருக்கேன்னு...
  _________________

  அந்த வீட்டில இவ்வளவு சீக்கிரம் மாமியார்-மருமகள் சண்டை வரும்னு யாரும் எதிர்பார்க்கல...

  அப்படியா, என்ன ஆச்சு?

  வலது காலை எடுத்து வச்சி உள்ளே வாம்மான்னு சொன்ன கையோட இடது காலை எடுத்து வச்சா வெட்டிடுவேன் சொல்றாங்க அந்த மாமியார்க்காரி....
  _________________

  என் பையன் பெரிய ஆளாகணும்.. அதுக்கு என்ன செய்யலாம் டாக்டர்??

  ஒரு இருபது வருஷம் வெயிட் பண்ணுங்க...
  _________________

  அந்த டாக்டர் ஒரு பெரிய தாதாவுக்கு ஆபரேஷன் பண்றதா இருந்திச்சி.. ஆனா டாக்டர் முடியாதுன்னுட்டார்...

  ஏன்?

  எல்லோரும் என்கவுண்ட்டர்னு கிண்டல் பண்ணாங்களாம்...
  _________________

  அந்த டாக்டர் ரொம்ப நல்லவர்போல...

  எதை வச்சு சொல்றீங்க??

  ஆபரேஷனுக்கு முன்னாடி நோயாளிகிட்ட உயிர் மேல ஆசை இருந்தா ஓடிப்போயிடுன்னு கடைசி வாய்ப்பு தர்றாரே....
  _________________

  இவர்தான் எங்க சுனாமி மாமா!''

  ""சுனாமி மாமாவா?''

  ""இவர் எப்போ வருவார்... எப்படி வருவாருன்னு தெரியாது!''

  _________________


  வளர்ப்புப் பறவைகள் விற்கும் கடையில்...

  அட..இந்தக் கிளி அழகா இருக்கே.. என்ன விலை..?

  அது வேணாம்மா.. அதுக்கு வாய் ஜாஸ்தி..

  நீ ஏம்பா கவலைப் படறே.. நான் சமாளிச்சுக்கறேன்..

  இல்லம்மா.. அது வளர்ப்பு சரியில்லே.. குடும்பத்திலே குழப்பம் ஏற்படுத்திடும்..! டிவோர்ஸ் வரைக்கும் கூட கொண்டு போய் விட்டுடும்..!

  பாவம்பா அது.. எல்லாரும் அதை வெறுத்தா அது என்ன பண்ணும்.? சரி .. விலையைச் சொல்லு..!

  சொன்ன கேளுங்க்.. இதுக்கு முந்தி நிறைய வீட்டுக்கு போயிட்டு உடனே திருப்பி கொண்டாந்து விட்டுட்டாங்க..ரிஸ்க் எடுக்கறீங்க.. சரி.. இந்த சனியனைக் கொண்டு போங்க..விலையப் பத்தி பிற்பாடு பேசிக்கலாம்..!

  வீட்டுக்கு வந்த பிறகு.. வீட்டைப் பார்த்த கிளி..

  புது வீடு.. புது எஜமானியம்மா.. ப்ரமாதம்..!

  எஜமானிக்கு ஆச்சர்யம்..! பள்ளி விட்டுப் பிள்ளைகள் வந்தனர்..

  கிளி. மீண்டும் சொல்லிற்று...

  ." புது வீடு.. புது எஜமானியம்மா.. புது குழந்தைங்க.. ப்ரமாதம்..

  எஜமானிக்கு இப்போது ஒரு சந்தேகம் வந்தது..

  இவ்வளவு அருமையான கிளியைப் பற்றி அவதூறு சொன்னானே கடைக்கார கடன்காரன்..கட்டையில போக..

  சற்று நேரம் கழித்து கார் வரும் ஓசை கேட்கவே, எட்டிப்பார்த்த கிளி சொன்னது...

  புது வீடு..புது எஜமானியம்மா..புது குழந்தைங்க..புது காரு...
  அடடே.. வாங்க பார்த்த சாரதி.. நீங்கதான் இங்கேயும் புருஷனா..???
  _________________


  ஒருவன் இறைவனை வேண்டி தவமிருந்தான்..

  இறைவன் தோன்றி " என்ன வரம் வேண்டும் பக்தா ? " என்று நேரடியாக நிகழ்ச்சியை ஆரம்பித்தார்..

  ஆண்டவா.. அமெரிக்காவில் என் மகன் இருக்கிறான். அவனைப் பார்க்க வான் வழிப் பாலம் ஒன்று அமைத்துக் கொடு.. நான் விரும்பிய சமயத்தில் காரில் சென்று திரும்ப வசதியாக இருக்கும்..என்றான்.

  இறைவனோ.." பக்தா.. இது என்னால் முடியும் என்றாலும், எவ்வளவு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் தெரியுமா..? பெரிய தூண்கள் அமைத்து அதன் மேல் பாலம் உருவாக்க வேண்டும்..இது உன் ஒருவன் சம்பந்தப்பட்ட விஷயம்..
  உனக்காக மட்டும் இவ்வளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமா..?
  நீ கேட்கும் வரம் உனக்கும், உலகத்துக்கும் நன்மை பயக்க வேண்டும்.. உனக்கு புகழையும் எனக்கு மரியாதையும் தரும் படியாக ஒரு வரத்தைக் கேள்.. நன்றாக யோசி.. நாளை வருகிறேன்...

  மறுநாள்.... நம்ம ஆள் கேட்டான்.. " இறைவா..எல்லாம் அறிந்தவனே..! நான் பெண்கள் மனதை புரிந்து கொள்ளும் வரம் தா..!"

  அதிர்ச்சியடைந்த இறைவன் சொன்னார்.." உனக்கு பாலம் மட்டும் போதுமா..இல்லே முழுக்க சோடியம் வேப்பர் விளக்கும் வேணுமா..???
  _________________


  ஒரு இந்திய அரசியல்வாதி ( எம்.பி.) அமெரிக்கா சென்ற போது அங்குள்ள அரசியல்வாதியின் (செனட்டர்) வீட்டுக்கு விருந்துக்கு சென்றார்..செனட்டரின் மாளிகையில் ஒவ்வொரு இடத்திலும் பொருட்செலவு மிக்க ஆடம்பரப் பொருட்கள் அணிவகுத்திருப்பதைக்க் கண்டார்.. ஆச்சர்ய மிகுதியில் செனட்டரைக் கேட்டார்..

  "எப்படி இவ்வளவு பணம் சேர்த்தீர்கள்..?

  செனட்டர், எம்.பி.யை அழைத்து ஜன்னலுக்கு வெளியே ஒன்றைக் காட்டினார்..

  அது ஒரு பிரம்மாண்டமான தொங்கு பாலம்.. செனட்டர் சொன்னார்..

  " 10 சதவீதம்...!"

  எம்.பி. புரிந்துகொண்டார்.

  பின்னர் ஒரு ஆண்டு கழித்து அதே செனட்டர் இந்தியா வந்தார்.. எம்.பி. விருந்துக்கழைக்க அவரது அரண்மனைக்கும் வந்தார்.. ஏராளமான நகைகள்.. வாகனங்கள்.. செருப்புகள்.. பிரமித்துப் போன செனட்டர் கேட்டார்..

  "எப்படி இவ்வளவு பணம் செர்த்தீர்கள்..?"

  எம்.பி. அவரை ஜன்னலுக்கு வெளியில் உள்ள பாலத்தைப் பார்க்க சொன்னார்..

  " ஆனால்... அங்கு பாலம் எதுவும் இல்லையே..?"

  எம்.பி. பெருமையுடன் சொன்னார்..

  "100 சதவீதம்...!".

  பின்னர் செனட்டருக்கு முதலுதவி செய்து மயக்கத்தை தெளிய வைக்க வேண்டியதாயிற்று...!
  _________________


  ஒரு மருந்துக் கடையில் பெண்ணும் கடைக்காரரும்..

  அய்யா சயனைட் இருக்கா..?

  என்ன..? சயனைடா.. எதுக்கு..?

  என் கணவனை கொல்லுவதற்கு..

  அதெல்லாம் நாங்கள் தரக்கூடாது..அப்புறம் ரெண்டு பேரும் சிறைக்கு போகணும்..

  இதைப் பாருங்க.. அப்புறம் சொல்லுங்க..( ஒரு புகைப்படத்தை காட்டுகிறாள்.. அதில் அவள் கணவனும் மருந்து கடைக்காரர் மனைவியும் ஒன்றாக உணவகத்தில் இருக்கிறார்கள்)

  ஏம்மா.. மருந்து சீட்டு (prescription) இருக்குன்னு முன்னமே சொல்லக்கூடாதா..? இந்தா வாங்கிட்டு போ..!
  _________________


  மாசியும் சுசியும் வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் ஆட்கள்..
  ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு சிலிண்டர் போட போனாங்க.. 4 வது மாடியில் ஒரு வீட்டுல நின்னுட்டு இருக்கும்போது மாசி கேட்டார்..

  சுசி .. பில் புத்தகம் கொடு..

  என்கிட்ட எங்கே இருக்கு..நீதானே வச்சிருந்தே..?

  இல்லே சுசி.. கேஷ் பேக்கில வச்சிருப்பே பாரு..

  ஐயோ கேஷ் பேக்கா..? கீழே ட்ரை சைக்கிள்ல மாட்டியிருக்கேனே..

  அடப்பாவி.. எவனாவது திருடிட்டா என்ன பண்றது..?

  இருவரும் புயல் வேகத்தில் படியில் இறங்கி கீழே ஓடினர்.. அப்போது அவர்கள் பின்னால் ஒரு ஆள் வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்தார்.. கீழே பேக் இருக்கவே நிம்மதி அடைந்த மாசி யார் பின்னால் ஓடி வந்ததெனப் பார்க்க... அவர் மிஸ்டர் மொக்கை..!

  நீங்க ஏன் சார் இப்படி அலறியடிச்சுகிட்டு ஓடி வந்தீங்க..?

  மொக்கை சொன்னார்..

  ஏம்பா.. சிலிண்டரைக் கொண்டாந்து வச்சிட்டு ஒரே ஓட்டமா ஓடினா நான் என்னத்தை நினைக்கிறது..? சிலிண்டர் வெடிக்கப் போகுதுன்னு ஓடறீங்க போல இருக்குன்னு நானும் ஓடியாந்தேன்..!
  _________________


  ஒரு டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்..

  ஒரு மனிதர் ஒரு குறும்புக்காரச் சிறுவனை அங்கு அழைத்து வந்திருந்தார்..சிறுவனோ அங்கிருக்கும் பொருள்களைத் தள்ளுவதும், தூக்கி எறிவதுமாக இருந்தான்..

  அந்த மனிதர் அடிக்குரலில் உறுமினார்..

  மொக்கை.. கம்முன்னு வா.. அசிங்கமா நடந்துக்காதே..

  மீண்டும் மீண்டும் சிறுவன் அட்டூழியம் செய்துகொண்டே இருக்க, தந்தையும் வேண்டாம் மொக்கை.. கூடாது மொக்கை.. அப்புறம் அடி விழும்..அசிங்கமாயிடும் மொக்கை.. என்று கூறியவாறே இருந்தார்.. இவ்வளவையும் ஒரு பெண்மணி அருகிலிருந்து கவனித்துக் கொண்டே இருந்தாள்.. கடைசியாக சொன்னாள்..

  ஆனாலும் நீங்க ரொம்ப டீசண்ட்.. பொது இடத்துல அடிக்கக் கூடாதுன்னு எவ்வளவு பொறுமையா இருந்தீங்க.. [பையனைப் பார்த்து..] ஏம்பா மொக்கை.. நீ இவர் பையனா..?

  பையன் சொன்னான்..

  நான் அவர் பையந்தான்.. ஆனா மொக்கைங்கறது என் பேர் இல்லே.. எங்க அப்பா பேரு..!
  _________________


  மிஸ்டர் மொக்கை பூச்செடிகள் விற்கும் கடைக்கு வந்தார்..

  மஞ்சள் ரோஜாச் செடி இருக்கா..?

  இல்லையே சார்.. கருப்பு ரோஜா செடி இருக்கு .. பார்க்கறீங்களா..?

  இல்லப்பா.. மஞ்சள் ரோஜாதான் வேணூம்..

  காஷ்மீர் ரோஜா செடி இருக்கு பாருங்க சார்.. பளபளன்னு இருக்கும்..மஞ்சள் ரோஜா சோகை புடிச்ச மாதிரி இருக்கும் சார்..!

  எனக்கு தெரியும்பா.. ஆனா .. " நான் ஊர்லேருந்து திரும்பற வரைக்கும் ஒழுங்கா இந்த மஞ்சள் ரோஜாவுக்கு தண்ணி ஊத்துங்க.. ஏதாச்சும் ஆச்சுது.. நான் மனுஷியா இருக்க மாட்டேன்"னு சொல்லிட்டுப் போன என் மனைவிக்கு அது தெரியமாட்டுதே....!
  _________________


  மொக்கை ; அவன் ஏன் நீலநிறச் சட்டை போட்டுக்கிட்டு ஆஃபீஸ் வந்திருக்கான் தெரியுமா?

  நண்பன் ; தெரியலையே!

  மொக்கை ; வெறும் பனியனை மட்டும் போட்டுக் கொண்டு ஆபீசுக்கு வரக்கூடாது என்று தான்.  மொக்கை ; ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நான் காசி போயிருந்தப்போ என்னோட வாட்ச் கங்கையிலே விழுந்துடுச்சு. ஆனா இன்னும் ஓடிக் கிட்டிருக்கு!

  நண்பர் ; பரவாயில்லியே.. அதே வாட்சா..?

  மொக்கை ; வாட்ச் இல்லே.. கங்கைதான் இன்னும் ஓடிக்கிட்டு இருக்கு..!  மொக்கை ; நம்ப டைப்பிஸ்டை நிமிர்ந்து பார்க்காதவன் புதுசா வந்த கிளார்க்தான்!

  நண்பர் ; அதிசயமாயிருக்கே!

  மொக்கை ; காரணம். அவன்தான் அவ புருஷன்...!  மொக்கை ; எனக்கு லேட் மேரேஜ்!

  நண்பர் ; காலங்கடந்த வயசிலே கல்யாணமா?

  மொக்கை ; அப்படியில்ல, பத்து மணிக்கு நடக்கவேண்டிய மேரேஜ் பத்தரை மணிக்கு நடந்துச்சு!  காதலி : இனிமையாக ஏதாவது சொல்லுங்களேன் !

  மொக்கை : லட்டு, ஜிலேபி.  நண்பர் : வாங்க, வாங்க!

  மொக்கை : உங்கள் வீட்டில் ஒரு போர்ஷன் காலியாக இருக்கிறதாமே!

  நண்பர் : இந்தச் சாக்கிலாவது என்னைப் பார்க்க வந்தீர்களே!

  மொக்கை : சாக்கில் வரவில்லை! ஆட்டோவில் தான் வந்தேன்!
  மொக்கை ; சீப்புக்கும் வாழைப்பழத்து தோலுக்கும் ஓர் ஒற்றுமை. அது என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்!

  நண்பர் ; தெரியாது!

  மொக்கை ; சீப்பு தலை வாரும்; வாழைப்பழத் தோல் காலை வாரும்.  நண்பர் ; என் தாத்தா ஐம்பத்தைந்து வயதில் மரணமடைந்தார். எனக்கு அறுபத்தைந்து வயது...இன்னும் உயிருடன் இருக்கிறேன்.

  மொக்கை ; இரண்டுமே வருத்தப்பட வேண்டிய விஷயந்தான்.


  நண்பர் ; பால் வியாபாரம் செய்கிறீர்களே! கட்டுபடியாகிறதா?

  மொக்கை ; மாட்டின் சொந்தக்காரர்கள் கண்களில் அகப்பட்டுக் கொள்ளாதவரை பரவாயில்லை...!


  முதலாளி ;பக்கத்து தியேட்டரிலே ஆட்டுக்கார அலமேலு படத்தை ஏன் எடுத்துட்டாங்க?

  மொக்கை ; நம்ம தியேட்டரிலே பாயும் புலி ஓடுதுல்லே..!  .மொக்கை ; எல்லா மொழிகளையும் பேசக்கூடியது எது தெரியுமா ?

  நண்பர் ; தெரியாதே.. எது..?

  மொக்கை ; எதிரொலி...!  நண்பர் ; நீங்கள் எப்பொழுதுமே இப்படித் தான் திக்குவீர்களா?

  மொக்கை ; எப்பொழுதும் இல்லை. டாக்டர் பே.... பே..சு..ம் பொழுது ம.... மட்..டு...ந்தான்.
  நண்பர் ; உங்கள் மகனை ஏன் மண்ணெண்ணெய் ஊற்றிக் குளிக்க வைக்கிறீர்கள்?

  மொக்கை ; அவன் மிகவும் துரு துரு வென்று இருக்கான்...!  பஸ் பயணி ; சார் கொஞ்சம் காலை மடக்கி வச்சுக்கங்க...உங்களிடம் உதை வாங்குவதற்காக நான் இங்கே வரவில்லை.

  மொக்கை ; அப்படியானால் நீங்கள் வழக்கமாக எங்கே போவீர்கள்?

  __________________________________________


  மொக்கையும் நண்பர்களும் தங்கள் இன்னொரு நண்பனின் திருமணத்துக்காக முன்பின் அறியாத ஒரு ஊருக்கு காரில் பயணமானார்கள்..வழி தெரியாமல் பல இடங்கள் சுற்றி அலைய பெட்ரோல் தீரும் நிலைக்கு வந்து விட்டது. சரியாக வழி விசாரிக்கத் தெரியவில்லை என்று மொக்கை தன் நண்பர்களை கடிந்து கொண்டார். எனவே வழி விசாரிக்கும் பொறுப்பை மொக்கையிடம் ஒப்படைத்து விட்டார்கள்..வழியில் ஒரு கிராமவாசியைப் பார்த்த மொக்கை தன் நண்பர்களை ஒரு லுக் விட்டபடியே விசாரித்தார்..

  ஏம்பா.. கொஞ்சம் நில்லு.. வெட்டுவாங்கேணிக்கு சீக்கிரமா போற வழி எது..? சட்டுன்னு சொல்லு..

  வெட்டுவாங்கேணியா..? எப்படிப் போகப் போறீங்க.. நடந்தா.. கார்லயா..?

  கார்லதாம்பா..

  கார்லயா.. அப்ப அதுலேயே போயிருங்க.. சீக்கிரமாப் போயிரலாம்..!
  _________________

  மொக்கையின் மகள் கல்லூரி மாணவி.. ஒருநாள் அவள் தன் தந்தையிடம் சொன்னாள்..

  அப்பா.. இன்னிக்கு சுட்டி எனக்கு முத்தம் கொடுத்துட்டாம்பா..

  கண்கள் சிவந்த மொக்கை கேட்டார்..

  என்ன சொல்கிறாய்.. எப்படி இது நடந்தது..? உனக்குதான் கராத்தே தெரியுமே.. அவ்வளவு சுலபமாகவா அந்த சம்பவம் நடந்தது..?

  மகள் சொன்னாள்..

  இல்ல்லை அப்பா.. அவ்வளவு சுலபத்தில் அது நடக்கவில்லை.. அது நடந்தபோது என் தோழிகள் 3 பேர் சுட்டியை அசையாமல் அமுக்கிப் பிடிக்கவேண்டி இருந்தது..!
  _________________

  சிவாஜி ; பன்னிதான் கூட்டமா வரும்.. சிங்கம் ஒத்தையிலதாண்டா வரும்..

  மொக்கை ; ஏன்.. அதுக்கு டபுள்ஸ் வைச்சு ஓட்டத் தெரியாதா..?
  _________________

  சிவாஜி ; சும்மா அதிருதில்ல...?

  மொக்கை ; சும்மா அதிரல.. நீ பயந்து நடுங்கிகிட்டு நாற்காலியை ஆட்டிகிட்டு இருக்கே... அதில அதிருது..!
  _________________


  மொக்கைக்கு தூக்குத் தண்டனை.. கழுத்தில் சுருக்கை மாட்டும்போது சரமாரியாக விக்கல் வந்துவிட்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் விக்கல் நிற்கவில்லை.. அங்கு நின்ற மருத்துவரும் என்னென்னவோ செய்து பார்த்தும் பலனில்லை.வேறு வழியில்லாமல் மொக்கையிடமே கேட்டார்கள்..

  என்ன செய்தால் உன் விக்கல் நிற்கும்..?

  கழுத்தில் தூக்குக்கயிற்றை மாட்டுவதற்காகக் காத்திருந்த ஊழியரைப் பார்த்து மொக்கை சொன்னார்..

  சட்டுன்னு..க்..க்... யாராவது..க்க்...எதையாவது க்...க்..க்.. செஞ்சு..க் எனக்கு .க்க்.. பயம் காட்டுங்க..!
  _________________


  அமர் ஒருநாள் மலேசியாவில் வேகமாக கார் ஓட்டிக் கொண்டு போனார்.. போலீஸ் பிடித்து நிறுத்திவிட்டது..

  ஏன் வேகமாகப் போனாய்..? எங்கே உன் உரிமம்..?

  உரிமமா..? அப்படின்னா..?

  உரிமம் தெரியாதா..? கார் ஆவணங்களை எடு..

  ஆவணமா..? இது திருட்டுக் கார்.. என்னிடம் ஏது ஆவணம்..?

  ஓ.. திருட்டுக் காரா..? திருடனா நீ..?

  இல்லே.. அதுக்கும் மேலே.. கார் டிக்கியில் ஒரு பிணம் இருக்கு.. நான் போட்டுத் தள்ளியது..!

  காரியம் கை மீறிப் போவதை உணர்ந்த போலீஸ் அதிகாரி மேலிடத்துக்கு தகவல் சொல்லி மேலதிகாரியை வரவழைத்தார்.. அவர் வந்து டிக்கியைத் திறக்க.. அங்கே பிணம் இல்லை.
  கார் ஆவணத்தைக் கேட்க, டேஷ் போர்டிலிருந்து செல்லுபடியாகும் ஆவணங்களை அமர் எடுத்துக் காட்டினார்.. உரிமம் கேட்க, சட்டைப் பையில் இருந்து எடுத்து நீட்டினார்..

  திகைத்துப் போன மேலதிகாரி, அமரை பிடித்து நிறுத்திய போலீசை கடிந்து கொண்டார்.. அப்போது அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு அமர் சொன்னார்..

  வேண்டாம் விட்டுடுங்க சார்.. அவருக்கு வீட்டுல என்ன டார்ச்சரோ.. ரொம்ப கொடைஞ்சீங்கன்னா, அப்புறம் நான் ஓவர் வேகம் போனேன்னு அபாண்டமா என் மேல் பழி சொல்லுவார்.. அதை என்னால் இல்லேன்னு நிரூபிக்க முடியாது..

  வாங்க பழகலாம்... தமிழ் ஜோக்ஸ்

  | Oct 23, 2010
  ஜோக்ஸ்
  நான் எழுதின நாவல்களையெல்லாம் படிச்சிருக்கீங்களா?

  ஓயெஸ்...

  நீங்க எழுதறதுக்கு முன்னாடியே படிச்சிருக்கேன்!  "செத்தவன் பாடியையும் காணோம். கொலைகாரனும் தலைமறைவாகிட்டான். கேஸை என்னய்யா பண்றது?"

  "ரெண்டு பேரும் சமாதானமாப் போய்ட்டாங்கன்னு �பைலைக் குளோஸ் பண்ணிடுவமா சார்!"  "என் கணவர் யாருமே இல்லாதப்போ தானாவே சிரிச்சுக்கிட்டிருக்கிறார் டாக்டர்...!"

  "போகுது விடும்மா! நீ இல்லாத போதாவது தைரியமா சிரிச்சுட்டு போவட்டும்!"  "இதென்ன... டாக்டரை வரச்சொல்லி போன் செய்தீங்க... ஒரு குடும்பமே வந்து நிக்குதே?"

  "அதான் சொன்னேனே.. இவர் குடும்ப டாக்டர்ன்னு...!
  ஜாதகம் ரொம்பப் பொருத்தமா இருக்கு..."

  "அப்புறம்?"

  "பெயர் ராசியும் பிரமாதம்..."

  "பலே!"

  "எதிர்காலத்துல பிள்ளைச் செல்வத்துக்கும் பொருள் செல்வத்துக்கும் பஞ்சமேயில்லே. ஜோஸ்யர் சொல்லிட்டார்."

  "பிறகென்ன... இன்னைக்கு ராத்திரியே ஓடிப் போய்டுவோம்!"  "அடேங்கப்பா...! ஒரு கிலோ தக்காளி முப்பது ரூபாயா...! கிலோவுக்கு எத்தனை பழம்பா வரும்...!"

  "அது எப்படியும் சுமாரா முக்கா கிலோப் பழம் தேறிடும் சார்!"
  "பாய் வியாபாரத்தில் கூட்டு வேணான்னு சொன்னேனே கேட்டியா?"

  "என்னாச்சு?"

  "பார்ட்னர் எல்லாத்தையும் சுருட்டிட்டு ஓடிட்டான்."

  பேச்சாளர்: நமது தலைவருக்கு "எய்ட்ஸ்" நோய் என்று எதிர்க்கட்சி காரர்கள், கிளப்பி விட்ட புரளியை யாரும் நம்ம வேண்டாம். இதோ டாக்டரே சர்டி�பிக்கேட் கொடுத்திருக்கிறார். கட்சியை விட்டுச் சென்ற, செயலாளர்கள், பொருளாளர், முக்கியமா மகளிர் அணி அமைப்பாளர்களனைவரும் உடனே தாய்க் கட்சிக்குத் திரும்ப வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.  "சார், மணி பன்னிரண்டு ஆவது... கடையைச் சாத்தலாமா?"

  "சரி, சரி... எதுக்கும் குவிஞ்சு கிடக்கிற அந்தப் புடைவைக் குவியலுக்குள்ளே லேடீஸ் யாராவது மாட்டிக்கிட்டிருக்காங்களான்னு ஒருதரம் நல்லாப் பார்த்துடு!"
  __________________
   
   
  "பர்ஸ் தொலஞ்சு போச்சு. டிபன் சாப்பிட முடியல."

  "உனக்கேது பர்ஸ்?"

  "எனக்கு டிபன் வாங்கித் தரேன்னு சொன்னவர் பர்சு தொலஞ்சு போச்சுன்னு சொல்றேன்..."
  "பக்கத்து தெரு பொண்ணுக்கு 'லவ் லெட்டர்' கொடுத்த ஆளை உங்க அம்மா செமத்தியா அடிச்சாங்கண்ணு சொல்றியே... உங்க அம்மாவுக்கு என்ன அவ்வளவு அக்கறை?"

  "லவ் லெட்டர் கொடுத்தவர் எங்க அப்பாதானே..."
  "தலைவர் ரெண்டே வார்த்தை சொல்லி தொண்டர்கள் அத்தனை பேரையும் மகிழ வச்சிட்டாரு..."

  "அப்படி என்ன சொன்னாரு..?"

  "ராஜினாமா பண்றேன்'னாரு..."

  "எங்க வீட்டு நாய் நேற்று செத்துப் போச்சு. எங்க அம்மாவால் இதை ஜீரணிக்கவே முடியல."

  "உங்க அம்மா ஏங்க நாயைப் போய்ச் சாப்பிடுறாங்க?"


  ஒரு வாசகர் கடிதம் :

  ஆசிரியர் அவர்களுக்கு,

  இந்த வாரத் தலையங்கம் டாப் டக்கர். அசத்திவிட்டீர்கள் அசத்தி!

  பின்குறிப்பு : ஒருவேளை தலையங்கம் எழுதாவிட்டால் 'கார்ட்டூன்' என்று மாற்றிக் கொள்ளவும்.
  அவர் : இன்ஸ்பெக்டர் சார், இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள எப்படியாவது என் பையனைக் கண்டுபிடிச்சுக் குடுத்துடுங்க.

  இன்ஸ்பெக்டர் : ஏங்க இப்படி அவசரப்படறீங்க?

  அவர் : இல்லேன்னா எடுத்துக்கிட்டுப் போன இரு நூறு ரூபாயையும் செலவழிச்சுடுவான்.
  __________________
  கங்குலியின் கைத்தடி ஒருவன் வந்து " அண்ணே!!! அக்தர் நம்ம ஆளுங்கள அவுட்
  ஆக்கிட்டான்..."

  கங்குலி: "அக்தருக்கு நேரம் சரியில்லன்னு நினைக்குறேன்.. எட்ரா பேட்ட"

  கங்குலி: "எவன்டா என் டீம் ஆளுங்கள அவுட் ஆக்கினது???"

  அக்தர்: "என்னது .. கொஞ்சம் சத்தமா சொல்லு ...காது கேக்கல"

  கங்குலி: "நான் பெவேலியனை தாண்டி வரமாட்டேன்.. டென்டுல்கர்ரை அனுப்பி
  வைக்கிறேன் முடின்சா அவனை அவுட் ஆக்கி பாரு.."

  அந்த நேரத்தில் டென்டுல்கர் அக்தர் பந்தில் கிளின் போல்ட் ஆக....

  கங்குலி: "ஒத்துகிறேன் உன் பவுலிங் நல்ல இருக்குன்னு ஒத்துகிறேன்..
  அடுத்த மேட்சில மீட் பன்னுறேன்.."

  அமைதிய நழுவுகிறான்... அக்தர் நாலைந்து பந்துகளை கக்குலி விலாவில்
  எறிய... சரியாக வங்கி கட்டிகொன்டு.. சமாளித்து கொன்டு

  "உங்களையெல்லாம் பார்த்த எனக்கு பாவமா இருக்கு"

  கக்குலி: "என்னை யாரும் அவுட் ஆக்கினது இல்லை.."

  அக்தர்: "போன மேட்சிலதானே நடு ஸ்டம்பு ஏகிறிடிச்சு...??"

  கக்குலி: "ஆது போன மேட்ச்சு... நான் சொல்லுறது இந்த மேட்ச்சு.."

  அந்த நேரத்தில் அக்தர் ஒரு யார்க்கர் பந்து வீச...

  கங்குலி: "வேண்டாம்.. இதோட நிறுத்திக்க.."

  அக்டர்: " டேய் ...நான் என்னும் உன்னை அவுட் ஆக்கலை டா.."

  கங்குலி: "அவுட் அக்கிறதுக்கு முன்னாடிதானே நிறுத்த முடியும்..

  அக்தர்: மவனே எவ்வளவு பட்டாலும் ஏன்டா திருந்தவே மாட்டேங்குறா???

  கக்குலி: " வேண்டாம்... நான் ரன்ஸ் அடிக்க மாட்டேன்.."

  அக்தர்: அடிச்சா...

  கங்குலி: அதுதான் அடிக்க மாட்டேன்னு சொல்லுறேன்மில்ல..

  அக்தர் ஒரு பவுன்சர் அனுப்ப...

  கங்குலி: வேண்டாம்...

  அக்தர் மீண்டும் ஒரு யர்க்கர் அனுப்ப...

  கங்குலி: வேணாம்.. வலிக்குது.. அழுதுருவேன்...அழுதுருவேன்...

  அலுத்து போன அக்தர் அடுத்த பந்தில் கங்குலி விக்கெட்டை எடுத்து பவெலியன்
  அனுப்புகிறார்... வழக்கம் போல் கங்குலி டிரஸ்சிங் ரூம் சென்று அமைதியாக
  இருக்கிறார், அந்த வழியாக போகும் இருவர்

  "எலா.. சிக்செர் அடிச்ச கக்குலியே இந்த கவலையா இருக்காருனா, பந்து
  போட்டவன் நிலமைய யோசிச்சு பாருல"

  கக்குலி இதி கெட்டு விட்டு "ஐயா.. இப்படி பெங்கால் டைகர்ன்னு
  சொல்லியே..என் கெரியரை நாசமாக்கி போட்டியளேட..." என்று
  முனுமுனுக்கிறார்..
  __________________
   
  பெண் பாடகி ஏன் உணர்ச்சி இல்லாமப் பாடறhங்க ?

  பெண் பாவம் பொல்லாததாம் ..!

  *********

  அலைகடலென திரண்டிருக்கும் உங்களைப் பார்க்கும் பொழுது...

  நீ உப்பு வித்தது ஞாபகம் வந்திடுச்சா ?

  *********

  பஸ்ஸில் உனக்குப் பட வாய்ப்பு கிடைச்சதா ? என்ன சொல்றே ?

  ஒரு பெண்ணின் மீது *

  *********

  ஆபீஸை மையமா வெச்சு ஒரு படமா ? என்ன தலைப்பு ?

  போர்வை ஒன்றே போதுமே *

  *********

  அந்த நடிகையின் ரெக்கார்டு 10-10-15-2.

  அப்படியா ?

  ஆமா * 10 முறை கல்யாணம், 10 முறை டைவர்ஸ், 15 குழந்தைகள், 2 முறை இரட்டைக் குழந்தைகளாம் *

  **********

  என்னய்யா இது... ஊது பத்தி புகை-யைப் படம் எடுத்து இணைத்திருக்கிறhய் ?

  அப்ளிகேஷன்ல புகைப்படம் இணைக்கவும்னு போட்டிருந்ததே சார்... அதான். ..*

  **********

  தினமும் பீச்சுக்கு வந்ததும் என்னை நிக்கச் சொல்லி சுத்தி வர்றீங்களே... ஏன் டார்லிங் ?

  எனக்கு ஜhதகத்துல தோஷம் இருக்கறதால தினமும் சனீஸ்வரனை சுத்திவரணும்னு nஜhஸியர் சொல்லி யிருக்காரே *

  **********

  தலைவர் வீட்ல ஆயிரக்கணக்குல செருப்புகள் இருந்ததுக்கு, அதிகாரிகள் கணக்கு கேட்டாங்களாமே... தலைவர் என்ன சொன்னார் ?

  வாங்கினா கணக்கு காட்டலாம். மேடைல வந்து விழுந்ததுக்கெல்லாம் எப்படி கணக்கு காட்டறதுன்னாராம்.. *

  **********

  உன் மூணாவது பையனுக்குப் பெண் பார்க்கறீயாமே, மருமகள் எப்படி இருக்கணும் ?

  என்னோட கூட்டணி அமைச்சு, என் மூத்த மருமகள்களை ஓரங்கட்டணும். ..*

  **********

  பையன் உங்க குடும்ப நன்மையை உத்தேசித்து இந்தக் கேள்வி, எப்ப நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க ?

  பெண் செருப்பாலடிப்பேன், அதைக் கேட்க நீ யாரு ?

  பையன் உங்க தங்கையோட லவ்வர் தான்.

  ***********

  காதலன் கண்ணே உனக்காக இமயமலையையும் தாண்டுவேன் ,,,,,,

  காதலி அதுக்காக ஏன் ஒரு காலை நொண்டறீங்க ?

  காதலன் உங்க வீட்டு கேட்டை தாண்டும் போது தடுக்கி விழுந்துட்டேன்.

  ************

  நண்பர் கவர்னர் பதவிக்கு உங்க பெயர் அடிபடுது ,,,,, நீங்க

  என்னடான்னா கவலையா காட்சி தர்றீங்களே ?

  அரசியல்வாதி இந்த தடவையாவது எப்படியும் ஜெயிச்சிடணுங்கற

  கவலைதான்.

  *************
  __________________
   
  படம் சக்கைப்போடு போடுறமாதிரி ஒரு தலைப்பு சொல்லுங்க"

  "கரும்பு"
  ________________________________________

  என்ன உங்க மனைவி உங்களை மதிக்கவே மாட்டேங்கிறh .. .. ?

  பத்தாயிரம் ரூபாய் சம்பாளம் வாங்கற திமிரு .. ..

  ஓ...வேலைக்குப் போறhங்களா .. .. ?

  நீங்க வேற .. .. அவ வாங்கறது என்னோட சம்பளத்தை .. ..
  ________________________________________

  என் பெண்ணோட பயோ - டே;டடாவைப் பார்த்துட்டு
  மாப்பிள்ளை பையன் என்ன சொன்னான் ?

  அந்தப் பய டாட்டா காட்டிட்டுப் போயிட்டான் *
  ________________________________________

  வேலை செய்யற இடத்துலே வேலையை நல்லா கத்துக்கிட்டு
  சொந்தமா தொழில் ஆரம்பிக்கிறது தப்பா * அதுக்கு போயி
  என் மகனை உள்ளே தள்ளிட்டாங்க *

  உங்க பையன் எங்கே வேலை செய்தான் ?

  ரூபா நோட்டு அச்சடிக்கிற நாசிக் பிரஸ்ல *.
  ________________________________________

  அவன் ; போன மாசம்தான் என்னை ஈவ் டீஸிங்னு போலீஸ்ல
  பிடிச்சுக் கொடுத்தே. ஆதுக்குள்ளே இப்ப என்ன லவ் லெட்டர் ?

  அவள் ; போலீஸ்ல நீங்க அறை வாங்கினதைப் பார்த்ததும்,
  மனசு இளகி காதலாயிடுச்சுங்க.
  ________________________________________

  நான் இப்ப தலைநிமிர்ந்து பேசறதுக்கு நீங்கதான் காரணம்.

  அப்படி நான் என்ன பெரிசா செஞ்சிட்டேன் ?

  என்னைவிட ரொம்ப உயரமா இருக்கீங்களே *
  __________________
   
  ஒரு வக்கீல் மறுநாள் நடக்கவிருந்த ஒரு வழக்கிற்கு தனது பொய்ச்சாட்சியை தயார்ப்படுத்தினார். அவனிடம் சொன்னார், "எதிர்த்தரப்பு வக்கீல் கேள்வி கேட்கும்போது மிகவும் குறிப்பாக தகவல்களைக் கொடுத்து மாட்டிக் கொள்ளாதே. அவர் எத்தனை மணிக்கு கொலை நடந்தது என்று கேட்டால் சரியாக 8 மணிக்கு என்று சொல்லாமல், சுமார் எட்டு மணிக்கு என்று சொல். எவ்வளவு தூரத்தில் இருந்து கொலையைப் பார்த்தாய் என்று கேட்டால், சரியாக 30 அடி தூரத்தில் இருந்து என்று சொல்லாமல் சுமாராக 30 அடி என்று சொல்". அதற்கு அவன், "அட, இவ்வளவுதானா. எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன், கவலைப்படாதீங்க" என்று சொன்னான்.

  மறுநாள் வழக்கில் எதிர்த்தரப்பு வக்கீல் அந்த சாட்சியை குறுக்கு விசாரணைக்கு அழைத்தார். "உனது பெயர் என்ன?" என்று கேட்டார். அதற்கு அவன் கொஞ்சமும் தாமதிக்காமல் "சுமாராக கந்தசாமி" என்றான்.
  __________________________________________
   
   
  ஒரு ஆசிரியர் வகுப்பில் ஒரு தேர்வு வைத்து, முடிவைக் கொடுத்தார். ஒருவனுக்கு 12 புள்ளிகள் கிடைத்தது. ஆனால் அந்த மாணவ்ன் சிரித்துக் கொண்டிருந்தான். ஆசிரியர் அவனிடன், 12 புள்ளிகளை எடுத்து விட்டு சிரித்துக் கொண்டிருக்கிறாயே ஏன் என்று கேட்டார். அதற்கு அந்த மாணவன், நான் எந்த கேள்விக்கும் சரியான பதில் எழுதி இருக்கவில்லை. அப்படி இருந்தும் 12 புள்ளிகளைப் போட்ட மடையன் யாரென்று நினைத்து சிரிக்கிறேன் என்றான்.
  __________________
   
  ஒரு ஆசிரியர் கம்பராமாயணம் பாடம் நடத்தினார். அதில் சில வரிகளைச் சொல்லிக் கொடுத்து விட்டு, அதை திருப்பி சொல்லும்படி ஒரு மாணவனிடம் கேட்டார். அவனுக்கு சொல்லத் தெரியவில்லை. மீண்டும் சொல்லிக் கொடுத்து விட்டு கேட்டார். அப்போதும் அவனுக்குத் தெரியவில்லை. அப்படி சில தடவைகள் சொல்லியும் அவனால் திருப்பி சொல்ல முடியவில்லை. ஆசிரியர் சொன்னார் "என்ன நீ இப்படி இருக்கிறாய். நானென்றால் அந்தக் காலத்தில் எனது ஆசிரியர் சொல்லித் தருவதை அப்படியே திருப்பி சொல்லி விடுவேன்" என்று. அதற்கு அந்த மாணவ்ன் சொன்னான், "என்ன செய்வது, உங்களுக்கு கிடைத்ததுபோல் சிறந்த ஆசிரியர் கிடைக்க நான் கொடுத்து வைக்கவில்லை".
  __________________
   
  கஷ்டத்தில் கூட ஒருத்தருக்கு வந்த நகைச்சுவையைப் பாருங்களேன். ஒருத்தர் பனியான நகரத்தில் நாயால் துரத்தப்பட்டு கீழே விழுந்தாராம் நாயை அடிக்கக் கல்லைத்தேட அது பனியால் தரையோடு ஒட்டிக்கொண்டு வரவில்லையாம்.
  "என்னடா ஊரு இது தலைகீழா இருக்குது. கட்டிவைக்கவேண்டிய நாயை அவிழ்த்துவிட்டு கல்லைக் கட்டி வைத்திருக்கிறார்களே." என்றாராம்.

  வாழ்க்கை எவ்விதம் தீர்மானிக்கப்படுகிறது?

  | Oct 14, 2010
  மதிப்பிற்குரிய ஐயா டாக்டர். பி.எஸ். பி. அவர்கள், தனது ஒரு புத்தகத்தில் எழுதி இருக்கிறார் :

  ஒரு மனிதனின் நடப்பு வாழ்க்கையை, மூன்று பாகமாக பிரித்து பார்ப்போமேயானால், முதல் பாகம் அவரது ஜாதக அடிப்படையில் அமையும். இரண்டாவது பாகம் அவரது வாழும் வீட்டை பொறுத்த அடிப்படையில் அமையும். மூன்றாம் பாகம் அவரது சுய எண்ணங்கள், செயல்கள் பொறுத்து அமையும்.

  இதை இன்னும் விரிவாக ஆராய்ந்து பார்த்தால், நமது ஜாதகம் நாம் பிறக்கும்போதே எழுதப்பட்ட ஒன்று. நாம் சென்ற பிறவியில், செய்த , பாவ, புண்ணியங்கள் இந்த பிறவியில், பன்னிரண்டு வீடுகளாகவும், ஒன்பது கிரகங்களாகவும்  , அமையும். நல்ல ஒரு ஜோதிடர் உங்கள் ஜாதகத்தை பார்த்து, ஆராய்ந்தால் , உங்கள் வாழ்வில், நடந்த, நடக்க விருக்கிற விஷயங்களை, தெள்ள தெளிவாக கூறி விட இயலும். சரி, நாம் சென்ற பிறவியில் சரியில்லை என்று, வைத்துக் கொள்வோம். நம் ஜாதகம் சரியாக அமையாது. லக்கினத்தில் இருந்து, ஐந்தாம் வீட்டை வைத்து, இதை தெரிந்து கொள்ளலாம். ஐந்தாம் வீடும், ஐந்துக்கு உரிய கிரகமும் பலம் கெட்டுப்போகாமல் , இருந்தாலே அவர் சென்ற பிறவியில் நல்ல செயல்கள் செய்து இருப்பவராகவே இருந்து இருப்பார். ஐந்தாம் வீட்டுக்கு உரிய கிரகம் ஆட்சி, உச்சம் பெற்று இருந்தால் , அவர் நிறைய புண்ணியங்கள் செய்து இருக்க வேண்டும்.
  நாம் இந்த பிறவியில் செய்யும், நல்ல காரியங்கள் , புண்ணியங்கள் அனைத்தும் , நமது அடுத்த பிறவியின் ஐந்தாம் வீட்டை தீர்மானிக்கும்.

  சரி, ஜாதகம் சுமார் தான். மீதி இருக்கும் இரண்டு விஷயங்கள் நல்ல விதமாக அமைந்தாலே, அவர் வாழ்க்கையில், மிக உயர்ந்த நிலையை அடைய இயலும். வாஸ்து சாஸ்திரப்படி , சரியாய் அமைந்த வீடு, ஒரு மனிதனின் எண்ணங்களையும், செயல்களையும் மிக நல்ல வழிக்கு கொண்டு சென்று, அவரை வெற்றி வீரனாக அடையாளம் காட்டும்.

  எத்தனை இன்னல்கள் , துயரங்கள் வந்தாலும், அநியாய , அதர்ம வழிகளில், செல்லாமல், நல்ல எண்ணங்களும் , செயல்களும், செய்பவர்களும் , வாழ்க்கையில், நல்ல நிலைகளை அடைவர்.

  மூன்றில், இரண்டு சரியாக அமைந்தாலே, அவர் ஜெயிப்பது சர்வ நிச்சயம். மூன்றுமே அமைந்தால், உலகமே அவரை போற்றி புகழும்.
  இப்போது, சொல்லுங்கள். நம் வாழ்க்கை நம் கையில் தானே. நல்ல வீடும், நல்ல எண்ணங்களும், நாம் நினைத்தால் நம் விருப்பப்படி மாற்றி கொள்ளலாமே.

  சரி. முதல் ஒரு பாகமான, ஜாதகம் - இதை என்ன செய்வது? நமது, ஜாதகத்தை நன்றாக அலசி, ஆராய்ந்து தக்க பரிகாரங்கள் செய்து , அந்த பாதிப்பையும் ஓரளவுக்கு குறைத்து கொள்ளலாம். ஒரு நல்ல ஜோதிடர் அவ்வளவு எளிதில் பரிகாரங்கள் சொல்ல மாட்டார். ஏன் எனில், அதனால் அவருக்கும் ஓரளவுக்கு அதனால் பாதிப்பு ஏற்படும்.

  இதை பற்றி, வர விருக்கும் நமது பதிவுகளில், இன்னும் விரிவாக பார்ப்போம்.

  நேசமுடன்,


  ரிஷி.

  ஒரு ஆன்ம விசாரணை

  | Oct 9, 2010
  உண்மையில் இந்த வாழ்க்கை என்பது எத்தனை அதிசயங்களை கொண்டு இருக்கிறது?
  உயிர் என்பது என்ன? அது நம் உடலில் எங்கே?
  மனசு என்பது என்ன? அது எங்கே மறைந்து இருக்கிறது?
  ஒரு மனிதனின் பிறப்பை எது தீர்மானிக்கிறது? இந்த வீட்டில்.. இந்த பெற்றோர்களுக்கு குழந்தை என்பது?
  சற்று கூர்ந்து நம் வாழ்வை ஆராய்ந்து பார்த்தால், இந்த பிரபஞ்சத்தில், நம் வாழ்வில், நிறைய விஷயங்கள் முன் கூட்டியே தீர்மானிக்கபட்டவை போல.... அதை எப்படி அறிவது?
  ஜோதிடம் , ஜாதகம் , கடவுள் , ஆவி , பித்ருக்கள் , மறுபிறவி, பூர்வ ஜென்மம் , இதெல்லாம் உண்மையா?
  உங்கள் வாழ்வில் எதாவது, அமானுஷ்ய மான அனுபவங்கள் ஏதும் உண்டா?
  மற்ற வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ளலாமே?     
  மேலும் பல உங்கள் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும், தகுந்த ஆதாரங்களுடன் பதில் அளிக்கப்படும். இந்த வலைப்பூவில்.
  உங்கள் வாழ்வின் பல நுணுக்கமான ரகசியங்களை, அறிந்துகொள்ள - மின்னஞ்சல் தொடபு கொள்ளவும். editor@livingextra.com

  கூடியவரை , உங்கள் பிறந்த தேதி, நேரம், பிறந்த ஊர் தெரிய படுத்தவும். ஜாதக நகல் இருந்தாலும் அனுப்பலாம்.
   மிக நிச்சயமாக, உங்கள் வாழ்வில், திருப்பு முனை ஏற்பட, உறுதி அளிக்கிறோம்.

  நேசமுடன்,

  ரிஷி.
  .

  ShareThis

  Do Join hands to make a bright and better world

  Your comments and queries can be addressed to editor@livingextra.com

  Disclaimer & Privacy Policy

  Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com