Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

A warm welcome to my blog!

| Sep 30, 2010
Hi Buddy !

எனது இந்த வலைப்பூவுக்கு வருகை தந்ததில் மிக்க மகிழ்ச்சி. இது மிக நிச்சயமாக ஒரு சுவாரசியம் மிக்க பயணமாக இருக்கும். என் வாழ்வில் நான் கற்றதும் , கேட்டதும், நினைப்பதும் பகிர்ந்துகொண்டு , உங்களுடன் கை கோர்த்துக் கொண்டு , வாழ்க்கையை அதன் போக்கில் சென்று கொண்டே, ஒரு நல்ல பாதையை தேடும் முயற்சியாக, ஒரு இனிய பயணமாக  இந்த வலைப்பூ  அமையவிருக்கும்.
தினமும் ஒரு பதிவாவது பதிய ஆசை. வாசகர் வட்டம் பெருகும்போது சக நண்பர்களின் பங்களிப்பு இன்னும் மெருகேற்றும் என்பதில் நம்பிக்கை இருக்கிறது.
எத்தனையோ வலைப்பூ இருக்கும்போது இன்னும் ஒன்று ஏனோ என்று நானும் நினைத்தேன். ஆனால் இருக்கும் அத்தனையிலும், ஏதோ ஒன்று வித்தியாசப்பட்டு உங்கள் அனைவரையும் மீண்டும் மீண்டும் கவர்ந்து இழுக்கும் என்கிற நம்பிக்கையில் இந்த வலைப்பூ சங்கமம் .

எந்த ஒரு பதிவரும் வலைப்பூ ஆரம்பிக்கும்போது அதைக் காலம் முழுவதும் தொடர்ந்து நடத்த ஆசைப்படுவர். ஜனவரி 1 ல் டைரி எழுதும்போது தோன்றுமே , அதைப்போல. ஆனால்  .... ஹாஹா ... சரி. இன்று செப்டம்பர் 30 , 2010 . இன்னும் ஆறு மாதம் கழித்து இது எப்படி இருக்கும் என்று  பார்க்கலாம்.

இங்கு கதை இருக்கும், கவிதை இருக்கும். சினிமா இருக்கும். இலக்கியம் இருக்கும். ஜோதிடம் இருக்கும். விளையாட்டு இருக்கும். அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகள் இருக்கும். ஆன்மிகம் இருக்கும். வாழ்க்கையின் ஒரு இனிய தேடல் இருக்கும். சமூகம் மேல ஒரு அக்கறை இருக்கும்.

யாரங்கே? ஆரம்பம் ஆகட்டும். பௌர்ணமி நிலவில் ஒரு வெள்ளை குதிரை , கடற்கரையில்  எதை தேடியோ ? 
CABALLO.jpg

 கை கோர்க்க ஆசைப்  படும் அனைவரும் Feed burner ல subscribe பண்ணுங்க.  Comment பண்ண நினைக்கிறவங்க comment post பண்ணுங்க.


நேசத்துடன் உங்கள் சகா ,


ரிஷி.

3 comments:

mathu.. said...

hi sir, your website is simply very very superb.and i have a doubt about how to raising kundalini and power of chakraas,pls explain it.
"god's grace with you and u'r family evry time".
'Thank you'.

umajana said...

i am watching your blog accidentally.but it is simply superb.
thank you for your valuable articles.

துளசி கோபால் said...

வணக்கம். இன்று வேறு எதையோ தேடும்போது இங்கே வந்திருந்தேன்! எல்லாம் 'அவன்' செயல்!

தொடர எண்ணம்.

நலம் உண்டாகட்டும்!

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com